A village called Veeracholai

The villager speaks about the history of the Veeracholai of the and the later significant events.


වෙරචොලයි නම් ගම්මානයකි

වෙරළේයොලේ ඉතිහාසයේ සහ පසුව සැලකිය යුතු සිදුවීම් ගැන කතා කරයි.


வீரச்சோலை எனும் கிராமம்

வீரச்சோலை எனும் கிராமதின் உருவாக்கமும் அதன் பின்னரான முக்கிய நிகழ்வுகளும் பற்றி கிராமவாசி ஒருவர் பேசுகிறார்.



S.Tharmalingam (65)
Veeracholai
Naveethanveli

The village of Veeracholai was developed under the Gal-oya project in 1960. This village was a dangerous jungle before. There were only 90 houses in 1960. As there was a lot of people in , Malwathai and Karaitivu, a few families were settled in Veeracholai. Ours is one of them.

There are 12 in my family including my parents (06 males, 04 females). My father worked in the irrigation department. I was 12 then. There were no facilities in Veeracholai. No transport, No school, No shops. There was not even a hospital and water facilities tool. We have to walk 6 km to school and there was no transport facilities.

Later 1965, They started to teach in a house with few children. There was a cadjan hut built by the Zonal Education Office and there were 15 children with one teacher in 1966. There was also a Grama Sevaka appointed by the GA office. They dug two wells and there was rain too. People started cultivating. As there were no transport children also started working.

In 2000, the village was attached with Navithanveli. According to the circular , if there were twenty G.S division, a DS office could be started. There were 19 G.S division in Naveethanveli including Veeracholai there were 20. So in the hope of making a division, it was attached to Naveethanveli.

I was married to V.Karunaiamma in 1973. There was a lot of hardship and poverty. So we went to Malwatha and lived there for 30 years. We had two children (one boy and a girl). There was a big storm in 1978 and it destroyed most of the crops and houses. The whole district of Ampara was affected. There was discrimination in distribution of relief for Veeracholai people. They were pushed into poverty even more. Only little provisions like dhal, flour and sugar were given. There was no electricity and houses were already destroyed. Veeracholai was a dangerous place to live.

After much difficulties we planted crops and there was a shop in our village. Gradually small huts were built and repaired. A little progress was there. There was fighting in other places in 1988. Army rounded the Veeracholai village ( A tamil village) and took the males and beat them up and one or two would be taken away. The problem started in all the places . On 12.06.1990 there was big problem and all the people moved to Veeramunai with only the clothes they had. They took refuge in Temples, school and relative houses. We were at the temple in Veeramunai. One day the camp was rounded up and the army with the muslims shot 40 women children and men in the temple itself. There was screaming and shouting.

The District Secretariat and the elders decided that there was no safety and decided to send the people somewhere else. We were sent to Thirukovil and Karaitivu. We stayed in Thirukovil school (Thambiluvai Madya vidyalayam). There was no facility and they built huts for us. With the assistance of District Secretary other schools were arranged. (Saraswathy and Kalaimahal school)

We came to our village in 1993- 1994. Our house (in Malwatha) was broken in and burgled. There was nothing in the house. The GS gave us things and 3000- 10000. We didn’t know what to do with it, whether to start business or buy things or to buy food. We cleaned our land and cleared the forest. There were often round ups and arrests of people. Time went by and we came to our house in Veeracholai. I worked as a mason and looked after my family. There was no facility in our village.


There was a big tsunami in 2004. A lot of organization started to help the people. We also benefited (WDF, EGAT, World Vision). EGAT built 100 houses, schools and roads. There were many like children’s park, Hospital, Water facilities, vocational training for youths, public buildings, School equipment. Poor people were given relief.

The people of the village, temple administration and RDS collectively tried and got the water and electricity to the village. Our family is alright. I sent my son outside to study because of the problems. My son’s friend married my daughter and my son also married. We both stay with my daughter. She has a child. I also go for mason work. Now I am 65 and my wife is 62 . Life goes on……



සෝ. ධර්මලිංගම් (65)
වීරච්චෝලයි"
නාවින්දන්වේලි.


වීරච්චෝලයි ගම සම්පූර්ණයෙන්ම පටන් ගැණුනේ 1960 වර්ෂයේ ගල්ඔය ව්‍යාපෘතියකිනි. මේ ගම අවට විශාල වනාන්තරයක්. හරිම බියකරුයි. 1960 § මෙහි නිවෙස් 90 ක් තනා වීරමුනේ" මල්වත්ත" කාෙරෙතීිවු වැනි ගම්මානවල තිබූ කලබලකාරී තත්ත්වය නිසා එහි ජනතාවගෙන් සු¿ පිරිසක් වීරච්චෝලයිහි පÈංචි කරවන ලÈී. එහි එක් පවුලක් අපේ පවුල.

අපේ පවුලේ අම්මා තාත්තා ඇතුලූව සාමාðකයින් 12 දෙනෙක් සිටිමු. (පිරිමි 6 යි ගැහැණු 04- අපේ තාත්තා ජලා ප්‍රවාහන මණ්ඩලයේ සේවය කරා. එවිට මට අවුරුදු 12 යි. වීරච්චෝලෙයිවල කිසි පහසුකමක් නැත. ගමනාගමන පහසුකම් නැහැ. කඩවල් නැහැ. පාසලක්" රොහ්ලක්" ජල පහසුකම් මේ කිසිදූ පහසුකමක් නැත. පාසලට යාමටත් කි.මී. 6 ක් පයින් යන්න සිද්ධ වේ. පාසලටද යාමටද කිසිදූ පහසුකමක් නැත.

ඉන්පසුව 1965 § එක ගෙදරක ළමුන් කිහිප දෙනෙකුට ඉගැන්වීමට පටන් ගන්නා ලÈී. ඉන්පසුව 1966 § කලාප අධ්‍යාපනයෙන් පොල් අතු කූඩාරමක් තනා ළමුන් 15 කට ගුරුවරයෙක් ඉගැන්වූවා. සම්මාන්තුෙරෙයි ෘී කාර්යාලයෙන් ග්‍රාම නිලධාරී කෙනෙකුද ඒ ගමට පත්කර එවන ල§. ලිං එකක් දෙකක් පමණ ඉÈකරන ල§. ඒත් සමඟම වර්ෂාවක් ලැබුණ නිසා ජනතාවට ගොවිතැන් කිරීමට හැකිවිය. ගමනාගමන පහසුකම් නොතිබුණ නිසා ළමුන් පාසලට නොයා ගොවිතැන් වැඩවල යෙදෙන ල§.

මේ ලෙස නොයෙකුත් අමාරකම් මැද ජීවිතව ගෙවන අවස්ථාවේ 2000 වර්ෂයේ§ නාවිදන්වේලී ප්‍රදේශයත් සමඟ අපේ ප්‍රදේශයද එකතු කරන ල§. හේතුව 2095 වසම් තිබේ නම් එක ෘී කාර්යාලයක් බවට පත් කළ හැකියි යන (සර්කියුලර්- වාර්තාවට අනුව නාවිදන්වේලිහි 1995 ක් වසම් ඇත. වීරච්චෝලෙයි ප්‍රදේශය එකතු කලහොත් 20 ක් ලෙසත් නාවිදන්වේලි ප්‍රදේශය තනි ප්‍රාදේශීය කාර්යාලයක් බවට පත්කළ හැකියි යන මතයෙන් මෙලෙස බෙදා ප්‍රදේශයක් බවට පත් කරන ල§.

මම 1973 § මේ ප්‍රදේශයේම පÈංචි වේ. කරුනයියම්මාව විවාහ කර ගත්තෙමි. මේ ප්‍රදේශයේ රැකියාවක් කිරීම අමාරුයි. ඒ නිසා දූප්පත්කම වැඩියි. හැම අතින්ම අමාරුයි. ඒ නිසා අපි මල්වත්ත ප්‍රදේශයට ගොස් අවුරුදූ 30 ක් එහි සිටියෙමු. අපට දරුවන් දෙදෙනෙක් සිටියි. (පිරිමි 1. ගැහැනු 1- 1978 § සුළි සුළඟක් ඇතිවීම නිසා වැඩි හරියක් ප්‍රදේශවලට ගෙවල්" දොරවල්" රැකියාවන් සියලූ දේම අහිමි විය. අම්පාර Èස්ත්‍රික්කය සම්පූර්ණයෙන්ම සුළි සුළඟට ගොදූරු විය. සහනාධාර ලබා§මත් අපේ ප්‍රදේශයේ නොසලකා හැරීම වෙනස් කොට සැලකීමට අපේ ජනතාවට මුහුණ දෙන්නට සිදූවිය. (වීරච්චෝලෙයි ජනතාව- මේ වෙනස්කම නිසා බොහෝ ජනයා අන්ත දූගී බවට පත්විය. පැල්පත් ප්‍රතිසංස්කරණය කිරීම පැල්පත් ජනතාවට උදව් කිරීම ලෙස පරිප්පු "තිරිගු"පිටි සීනි පමණක්
යම්කිසි ප්‍රමාණයක් ලබා දූන්නා. විශාල වනාන්තරයක් මැද විදූලිය නොමැතිව වීරච්චෝලෙයි ප්‍රදේශය මු¿මනින්ම අඳූරට පත්වී තිබුනි.

නොයෙකුත් අමාරුකම් විඳ දරා ගොවිතැන් කර ඉන්පසුව ක්‍රමයෙන් ගම තුළ කඩයක්ද දමන ල§. ඒවාගේම ක්‍රමක් ක්‍රමයෙන් උන් හිටි තැන්ද හදා ගත්තෙමු. ඒ අතර 1988 § යම් යම් ප්‍රදේශවල කලකෝලාහල ගැටුම් ඇතිවන්නට පටන් ගත්තේය. මේ නිසා වීරච්චෝලෙයි ගමේ අත්අඩංගු කිරීම් පිරිමි අයව ගෙන ගොස් වදහිංසා කිරීම් නැවත මුදා හැරීම් වැනි සහ ඒ අයව දෙදෙනෙක් ගොස් මුදාහැරීමට කටයුතු කිරීම වැනි සිද්ධි ඇති විය. සු¿ සු¿ වශයෙන් හැම ප්‍රදේශයේම ගැටුම් වර්ධනය විය. 1990-6-12 වැනි Èනයේ විශාල ගැටුමක් ඇතිවී දෙමළ ගම්මාන සියල්ලම වගේ ගැටුමට මූණ දූන්නේය. ඒ නිසා අපි ඇඳ සිටි ඈඳූමෙන්ම වීරමුනෛ ප්‍රදේශයට පÈංච්ය අතහැර ගොස් සරණාගතයින් බවට පත්වී වීරමුනෛ දේවාලයට"පාසලට නෑදෑ ගෙවල්වලට ගොස් සිටියෙමු. අපේ පවුලේ හැමෝම වීරමුනෛ දේවාලයේ සිටියෙමු. අපේ කඳවුරත් හමුදාවෙන් වටකර හමුදාවත් එක්ක මුස්ලිම් අයත් එකතුවී වෙඩි තිබ්බා. මේ වෙඩිවලට හසුවී කාන්තාවන්" ළමුන්" කුඩා දරුවන්" පිරිමි අය හැමෝම 40 දෙනෙක් ජීවිතCෂයට පත්විය. (දේවාලයේ ඇතුළේම හැමෝම මිය ගියා- මිනිසුන් හැමෝම කෑගසන්නට පටන් ගත්තේය.

ෘී කාර්යාලය ජනතාව ගමේ වැඩිහිටි පිරිස හැමෝම එකතුවී මෙහෙ ජනතාවට ආරCෂාවක් නැහැ. වෙන තැනකට යැවිය යුතුයි කියා තීරණය කළහ. ඉන්පසුව තිරුක්කෝවිල්" කාෙරෙතිවු වැනි ගම්මානවලට යවා අපිත් එහි කඳවුරුවල පවුල් පිටින්ම 1990-08-12 තිරුක්කෝවිල් පාසලේ (දම්බු¿විල මධ්‍ය මහා විද්‍යාලය- නැවතී සිටියෙමු. එහෙත් ඉඩ පහසුකම් මÈවී කූඩාරම් තනා ෘී කාර්යාලයේ සහයෝගයත් සමඟ වෙනත් පාසල්වලත් නැවතීමට පිළියෙල කර දෙන ලÈී. (සරස්ව§"කෙලොගල් විද්‍යාලය- 1993-94 වර්ෂවල නැවත අපේ ගම්මානවලට පැමිණීමට අවස්ථාවක් ලැබුනි. (මල්වත්ත ගෙදර- එසේ ඇවිත් බලන කල ගෙදර බඩු මුට්ටු සේරම කොල්ලකා තිබුනි. කිසි දෙයක් නැත. නොදන්නා පිරිසක් මෙසේ කළ බවට අසන්නට ලැබුනි. ඉන්පසුව හැලිවළං (බඩු මුට්ටු- සල්ලි යැයි ෘීධ විසින් රු. 3000- 10000 මුදලක් ලැබුනි. මෙම මුදල රැකියාවකට හෝ ගේ දොර හදන්න" බඩු මුට්ටු ගැනීමටද" හැලිවළං ගැනීමටද ප්‍රමාණවත් නැත. අපි හැමෝම අපේ වලව්ව සුද්ධ කර කැලෑ කපා පිරිසිදූ කළෙමු. ඒ අතර හමුදා වට කිරීමෙන් මිනිසුන් අත්අඩංගු කිරීම වැනි සිද්ධි නිතර සිද්ධ විය. එලෙසම කාලයක් ගෙවී ගියේය. අපිත් ආපහු අපේ වීරච්චෝලෙයි නිවසට ඇවිත් ආපහු පÈංචි වුයෙමු. නොයෙකුත් අමාරුකම් මැද මේසන් රැකියාවට ගොස් පවුල රැක බලා ගත්තෙමි. ගමේ කිසිදූ පහසුකමක් නැතිවී තිබුනටත් වැඩිය ඉතා නරක තත්ත්වයට හැරී තිබුනි.

මෙසේ කාලය ගෙවමින් තිබිය§ 2004 § සුනාමියට මූණ§මට සිදූවිය. සුනාමියෙන් පසු නොයෙකුත් ආයතනවලින් උදව් කරන්නට වැඩ කරන්නට පටන් ගත්තේය. මේ තත්ත්වය අපට යහපතක් විය. මේ නිසා අපේ ගමටත් වැඩ කරන්නට පටන් ගත්තේය. (උෘෑ"එකෙට්"වර්ල්ඩ් විෂන්-එකෙට් ආයතනයෙන් ගෙවල් 100 ක් නිමකර දූන්නේය.පාරවල් හදා" පාසල් හදා" රැකියා පුහුණු"පොදූ ශාලා" පාසල් උපකරණ" යුද්ධය නිසා ඇතිවූ මානසික පීඩන දූප්පත් ජනතාව ලෙසට මේ සියලූ සහන (උෘෑ- උදව් අපට ලබා දෙන ල§.

ඉන්පසුව ප්‍රදේශවාසීන්" දේවාල පරිපාලන කමිටුව" ෘී හැමෝම එකතුවී විදූලිය ලබා ගැනීමට උත්සහ කර පානීය ජලයත් ලබාගෙන ඇත්තෙමු. අපේ පවුලේ තත්ත්වය සාමාන්‍යයෙන් හොඳ තත්ත්වයකට හැරී ඇත. ප්‍රශ්න නිසා පුතාවත් පිරටට යැව්වෙමු. පුතාගේ යාලූවෙක් මගේ දූව විවාහ කර ගත්තා. අපි දෙන්නම දැනට දූවත් එක්ක එකට වාසය කරන්නෙමු. දූවට දැන් දරුවෙක් සිටියි. මම මේසන් වැඩට යන්නෙමි. දැන් මගේ වයස අවුරුදූ 65 යි. මගේ බිරිඳගේ වයස 62 යි. දැන් අපේ ජීවිතය මේ ලෙස ගත වේ.





சோ. தர்மலிங்கம் (65)
வீரச்சோலை
நாவிதன்வெளி

வீரச்சோலைக் கிராமம் 1960ம் ஆண்டு கல்லோயா திட்டத்தின் மூலம் உருவாகியது. இக்கிராமம் பெரிய காடு சரியான பயங்கரம். 60ம் ஆண்டு 90 வீடுகள் கட்டப்பட்டு வீரமுனை மல்வத்தை காரைதீவு ஆகிய ஊர்கள் நெருக்கடி என்று அங்க உள்ள கொஞ்ச குடும்பத்தை எடுத்து வீரச்சோலையில குடியேற்றினாங்கள். அதில் நாங்களும் ஒரு குடும்பம்.


எங்கட குடும்பத்தில அம்மா, அப்பா உட்பட மொத்தம் 12 பேர் (ஆண் 6,பெண் 4) எங்கட அப்பா நீர்ப்பாசன திணைக்களத்தில வேலை செய்ற எனக்கு அன்னேரம் 12 வயது. வீரச்சோலையில ஒரு வசதியும் இல்ல. போக்குவரத்தில்லை கடையில்லை பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, தண்ணி என்டும் இல்ல. பள்ளிக்குபோற என்டால் 6 கி.மீ நடந்து வீரமுனைக்குபோக வேணும். பள்ளிக்குபோற வசதி ஒன்டும் இல்ல.

அதுக்குப் பிறகு ஒரு வீட்டில் 65ம் ஆண்டு கொஞ்சப் பிள்ளைகளை வைச்சி படிப்பிக்க தொடங்கினார்கள். அதன் பின்னர் 1966ம் ஆண்டு வலயக் கல்வியினால் ஒரு ஓலைக்கொட்டில் ஒன்று அமைச்சி 15 பிள்ளைகளும் ஒரு ஆசிரியரும் படிப்பித்தார். சம்மாந்துறை டி.எஸ் ஒப்பிசால ஒரு ஜி.எஸ்.ம் போட்டார்கள். கிணறு 1, இரண்டு கிணறு போட்டாங்கள். அதோட மழையும் பெய்தது. இதால கொஞ்சம் பரவாயில்லை. சனங்கள் பயிர்போட்டனர். போக்குவரத்துப் பிரச்சினையால பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்லாது தொழிலில் ஈடுபட்டார்கள்.

இவ்வாறு பல கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வரும் போது 2000ம் ஆண்டு நாவிதன்வெளி பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. காரணம் 20 ஜி.எஸ் பிரிவு இருக்கும் என்டால் ஒரு டி.எஸ் அலுவலகமாக மாற்றம் என்ற சுற்றறிக்கையின் பிரகாரம் நாவிதன்வெளியில் 1995 பிரிவு இருக்கிறது. வீரச்சோலையைப் சேர்ந்தவர்கள் 30 எனவும் நாவிதன்வெளியை தனிய பிரதேச செயலாகமாக மாற்றலாம் என்றும் பிரித்து பிரதேசம் ஆக்கப்பட்டது.

நான் 1973ம் ஆண்டு இதே கிராமத்தைச் சேர்ந்த வே.கருணையம்மா என்பவரை திருமணம் முடிச்சன். இஞ்ச தொழில் கஷ்டம் சரியான வறுமை. எல்லா வகையாலயும் கரைச்சல்தான் அதால நாங்கள் மல்வத்தையில போய் 30 வருசம் அங்க இருந்தம். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளது (ஆண் 1, பெண் 1) 1978ம் ஆண்டு பெரும்பாலான எல்லாப் பகுதிகளிலும் சூறாவளி ஏற்பட்டு வீடுகள் தொழில்கள் எல்லாம் முற்றாக பாதிக்கப்பட்டது. பெரும்பாலும் அம்பாறை மாவட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டது. நிவாரணங்கள் வழங்குவதில் பாரபட்சமும் புறக்கணிப்பும் (வீரச்சோலை மக்கள்) செய்யப்பட்டது. இதால மக்கள் மேலும் வறுமைக்கு உட்பட்டனர். குடிசை திருத்தம் ஒன்றும் இல்லாமல் வெறும் பருப்பு, கோதுமை மா சீனி மட்டும் குறிப்பிட்ட அளவு மட்டும் தந்தார்கள். காடு வீடு இல்லாமல்,கரண்ட் இல்லை. இருள்மயமாகவும் பயங்கராமாவும் வீரச்சோலை இருந்தது.

பல கஷ்டப்பட்டு பயிர்களைப் போட்டு அதோட ஊருக்குள்ள கடை ஒன்றும் வந்தது. மெல்ல மெல்ல எல்லாரும் குடில்கள் வைக்கவும் சின்ன சின்ன திருத்தங்களையும் செய்தோம். அதுக்குப் புறகு கஷ்டப்பட்டு ஒரு அளவு முன்னேறிக் கொண்டு இருக்கும் போது 1988ம் ஆண்டு வேற வேற இடத்தில பிரச்சினைகள் மோதல்கள் ஏற்பட்டன. இதால வீரச்சோலை சுற்றி வளைப்பும் ஆம்புளயல கொண்டு போறதும் அடிக்கிறதும் விடுறதும் என்று ரெண்டு பேர எடுப்பதுமாக இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக எல்லா இடமும் பிரச்சினை தொடங்கியது. 1990.06.12ம் திகதி பெரிய பிரச்சினை ஏற்பட்டு தமிழ் கிராமம் எல்லாம் பாதிக்கப்பட்ட நிலையில் உடுத்த உடுப்போட வீரமுனைக்கு இடம்பெயர்ந்து அகதியாக போனோம். அங்க கோயில் பள்ளிக்கூடம் உறிவனர் வீடு அங்க எல்லாம் போய் இருந்தார்கள். நாங்கள் வீரமுனைக் கோயிலில் இருந்தோம். முகாமும் சுற்றி வளைக்கப்பட்டு இராணுவத்துடன் முஸ்லிம் ஆக்களும் சேர்ந்து சுட்டார்கள். இதில் பெண்கள் பிள்ளைகள் குழந்தைகள் ஆண்கள் உட்பட 40 பேர் சுடப்பட்டார்கள் (கோயிலுக்குள் இறந்து போனார்கள்) சனங்கள் கத்தத் தொடங்கினர்.

பிரதேச செயலகம் சனங்கள் ஊர்பெரியாக்கள் எல்லாரும் சேர்ந்து இஞ்ச பாதுகாப்பில்ல வேற இடத்திற்கு சனங்களை அனுப்ப வேண்டும் என முடிவடுத்தார்கள். அதுக்குப் புிறகு திருக்கோயில் காரைதீவு போன்ற ஊர்களுக்கு அனுப்பி அங்க முகாமில நாங்கள் குடும்பத்தோட 1990.08.12ம் திகதி திருகோயிலில் பாடசாலையில் தங்கினோம் அங்கயும் இடம் காணாது கொட்டிகள் அடிச்சார்கள். டி.எஸ்.இன் உதவியுடன் வேற பள்ளியிலையும் தங்க வைத்தார்கள்.

1993-94ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஊர் வந்து சேர்ந்தோம். (மல்வத்தை வீடு) இஞ்ச வந்து பார்த்தால் வீட்ட உடச்சி கொள்ளை அடிச்சு ஒன்டுமே இல்ல. இடையிலே போய்ப்பார்த்தா நாங்கள் இனம் தெரியாதவர்கள் தான் செய்தார்கள். அதுக்குப் புறகு சட்டிப் பானைக் காசி என்டு விதானையாரின் உதவியோட 3000- 10000 தந்தாங்கள். அத என்ன செய்ற தொழில் செய்தோ வீட்டை திருத்துவதற்கோ சட்டி பானை வாங்கிறதா சாப்பாட்டுக்கு செலவழிக்கிறதா என்டும் தெரியாது. வளவுகள் துப்பரவு செய்து காடு வெட்டி இருந்தோம். இடையிடையே சுற்றி வளைப்பு ஆக்கள பிடிக்கிறது இப்டியே காலம் போயிற்று. நாங்களும் எங்கட வீரச்சோலை வீட்டுக்கு வந்து குடியேறினோம். பல கஷ்டத்திற்கு மத்தியில் மேசன் வேலைக்குச் சென்று குடும்பத்தை பராமரிச்சி வந்தேன். கிராமத்தில எந்த வசதியும் இல்ல. இருந்தத விட மிகவும் மோசமாக இருந்தது.

இப்படி இருக்கிற நேரத்தில 2004ம் ஆண்டு சுனாமி வந்தது. அதுக்குப் பின்னர் நிறுவனங்கள் சுனாமி வேலை செய்யத் தொடங்கியது. இதால எங்களுக்கும் நல்லதாப் போயிற்று. எங்கட ஊருக்கும் வந்து நிறைய வேலைகள் செய்தாங்கள். அதோட எகட் நிறுவனம் சரிரத்தினூடாக 100 வீடுகளை கட்டித் தந்தார்கள். றோட்டு போட்டார்கள். பாடசாலை கட்டடம் கட்டியமை, சிறுவர் பூங்கா வைத்திய வசதி, தண்ணீர்வசதி இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சிகள் பொதுக் கட்டடம் பாடசாலை உபகரணங்கள் யுத்த பாதிப்பு வறுமையான மக்கள் என்ற நிலையில் நிவாரணம் உதவிகளும் வழங்கப்பட்டன.

அதுக்குப் பின்னர் ஊர்ச்சனம் கோயில் நிர்வாகம் ஆர்.டி.ஸ் எல்லாரும் சேர்ந்து கரண்டும் (முயற்சியினால்) எடுத்து தண்ணியும் எடுத்திருக்கிறம். எங்கட குடும்பமும் ஓரளவு பரவாயில்லை. பிரச்சினை காரணமாக மகனையும் வெளியில பிடிச்சி அனுப்பினன். மகன்ட கூட்டாளிப் பொடியன் என்டு அவனும் மகள கலியாணம் பண்ணிற்றான். மகனும் கலியாணம் முடிச்சிற்றான். நாங்கள் ரெண்டு பேரும் மகளோட இருக்கிறம். அவக்கு1 பிள்ளை இருக்கு. நான் மேசன் வேலைக்கு போறன். எனக்கு இப்ப 65 வயதாகப் போயிற்று. மனிசிக்கும் 62 வயதாப் போயிற்று. வாழ்க்கை இப்படிப் போய்க் கொண்டு இருக்கு.







































A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License