I faced a lot of difficulties in my life

The woman says her past bitter experiences and future wishes.


මම කටුක අද්දැකීම් අත්දුටුවා

ඇගේ අතීත කටුක අත්දැකීම් සහ අනාගත අපේක්ෂාවන් ගැන කාන්තාව කියයි.


கசப்பான அனுபவங்களை அனுபவித்தேன்

பெண்ணொருவர் தனது கடந்த கால கசப்பான அனுபவங்களையும் எதிர்கால ஆசைகளையும் கூறுகின்றார்.



CMP-MN-MW-PUK-03

My life history is sad. I have two brothers. My father died 17 days after I was born. I don’t know what I have sinned. I have not seen my father’s face nor have I spoken to him. When I saw his face in the photo mounted on the wall only I realized that I had lost my father. Since I did not have a father I faced a lot of difficulties in my life.

My mother went through a tough time in bringing us up. When I think of the difficulties our mother went through I feel very sad. One week after our father’s death no one took care of us. My mother was very worried as to how to bring us up. She used to walk to a village 5 miles away carrying me and vegetables and sell them for our living. Even if she did not have enough food for her she would feed us well. When she did not have vegetables to sell she would go to paddy field to collect left over to make us food. My mother wanted us to lead a good life and she got us married in good places.
My mother sent me to my husband’s house. I lived a happy life with my husband and gave birth to 4 children. My mother in law and father in law took very good care of me.
When I had heart breaks I would not tell my mother because it could disturb my peace. I adjusted and lived happily.

We were displaced when the war erupted in 2008. We moved to different place in the midst of war. Though there was food scarcity we did not let our children suffer from it. Finally we reached Vattuvakal. I was wounded in my leg when I stepped on a landmine. There was no hospital available in that area. My husband and son took me to a different place for dressing the wound. Then next we came to the army controlled area.

The army confined all the people in a fenced area. I suffered there with my kids they didn’t even have any water to drink. My husband went missing in the crowd. I did not know where to look for him. Somehow we came out of the fenced area.

We were investigated after coming out. They took us in a bus to a different place where my husband was waiting for us. My kids hugged my husband and started crying upon seeing him. Then the army took us in a bus to a camp. We were asked to select a house. They used to cook and give us food. We spent one year there.

There was a Chicken pox outbreak in the camp. Our kids suffered from chicken pox. We came back to our village in October, 2009. Again my happy life resumed. I was determined to give my kids a happy life even though I went through a lot of hardships.
I lead a happy life. But due to circumstance it changed. It has been 3 years since my husband died. I am bringing up my kids without any shortcomings.

I am rearing my kids single handedly without anybody’s help. I do not have anyone in a state to help. I have my own land in which I do farming for a living.

Now I have a life with sufficient facilities. I share my happiness and sorrow with my children. My 2 kids have completed Advanced Level and the other two are still in school. As per my wish my first two kids have done well and obtained good results. I expect the same from my other two kids as well.

I will not expect help from others at any circumstances. I expect help only from my kids. Sometimes my mother helps me out in small ways but since she is not well she is not in a position to help now. I only take care of her. I take care of my kids and my mother. This is how my life will carry on.
My only hope is that my kids should do well in their studies and get good governments jobs. I could not study during my younger age and spent my time in working in farms. But my kids should not be like that.

I want to get them married into good families. I like to see them live a happy life.
I think they will listen to me and fulfill my expectations in the future.
















මගේ පුද්ගලික ජීවිත කතාව ඉතා දුක්බර කතාවක්. මට සහෝදරවරු දෙදෙනෙක් සිටිනවා. මා ඉපදී දින 17කින් මගේ පියා නැති වුණා. මම පව්කාර පුද්ගලයෙක්. එම නිසා මගේ පියාගේ මුහුණ වුණත් බලා ගැනීමට මට හැකියාවක් ලැබුණේ නැහැ. ඔහු සමඟ කතා කිරීමට අවස්ථාවක් ලැබුණේ නැහැ. පියාගේ මුහුණ බිත්තියේ එල්ලා තිබූ ඡායා රූපයෙන් තමයි මම දැක බලා ගත්තේ. එවිට තමයි මට හැඟුණේ මම පියා අහිමි ගැහැණු දරුවෙක් කියලා. කුඩා කලම පියා අහිමිවීමෙන් විවිධ දුක් ගැහැටවලට හා අමිහිරි අත්දැකීම්වලට මුහුණ දීමට මට සිදුවුණා.

අප හදා වඩා ගැනීමට අපගේ මවට නොයෙකුත් දුක් කරදරවලට මුහුණදීමට සිදුවුණා. ඇය අපව රැක බලා ගත් ආකාරය දැන් ආපසු හැරී බලන විට මට ලොකු වේදනාවක් දැනෙනවා. මගේ පියා මියගොස් සතියක් යනකම් කිසිම කෙනෙක් අප දෙස බැලුවේ නැහැ. නමුත්, අපගේ මව සිය සැමියා අහිමිවීමේ වේදනාව සහිතව අපව හදා වඩා ගන්නේ කෙසේ දැයි කල්පනා කරමින් දුක් වුණා. ඇය මාවත් ඔසවා ගෙන සැතැපුම් 5ක් දුර ගෙවා ඊළඟ ගම්මානයට ගොස් එළවළු වෙළදාමේ යෙදුණා. එළවළු විකිණීමෙන් ලැබෙන ආදායමෙන් අපට ආහාර ලබා දුන්නා. ඇය කුසගින්නේ සිටියත් අපගේ කුසගින්න නැති කිරීමට උත්සාහ කළා. දෛනකිව ඇය එළවළු විකිණීම සඳහා මෙසේ ගියා. එසේ නොයන අවස්ථාවල ඇය අන් අයගේ කුඹුරුවල වැඩ කළා. අපිට කෑම පිළියෙල කර දුන්නා. මෙසේ විවිධ දුක් කරදරවලට මුහුණදීමට මගේ මවට සිදුවුණා. අපට එම දුක් කරදර සිදු නොවිය යුතුයි සිතා ඇය අපව හොඳ පවුල්වලට විවාහ කර දුන්නා.
මා විවාහවීමෙන් පසු මගේ සැමියාගේ නිවසට ගියා. සැමියා සමඟ මා සතුටින් ජීවත්වූ අතර, අපට දරුවන් 4දෙනෙක් ලැබුණා. මගේ නැන්දම්මා හා මාමා මට කිසිම දුක් කරදරයක් නොදී මගේම නිවසේ ජීවත්වන ආකාරයට මට සැලකුවා.

පවුල තුළ යම් යම් විරසකයන් ඇතිවෙන කොට මම ඒවා වැඩි වශයෙන් සැලකිල්ලට ගන්නේ නෑ. හේතුව එවැනි දේවල් මවට පැවසුවහොත් ඇයගේ සිත රිදීමට ඉඩ තිබෙනවා. එම නිසා මම සියලුම දේවල් මනා ලෙස පාලනය කර ගනමින් සතුටින් ජීවත් වුණා.

2008 වසරේ යුද්ධය ඇති වුණා. මෙම ගමෙන් ඉවත්වී අපට අවතැන් වීමට සිදුවුණා. සටන් බිම තුළ විවිධ ස්ථානවලට මෙසේ අවතැන්වී අපි ගියා. අපේ දරුවන්ට කිසිම අඩුපාඩුවක් නොවෙන ආකාරයෙන් මා ඔවුන්ව රැක බලා ගත්තා. අවසානයේදී අප වට්ටුවගල් ප‍්‍රදේශයට ගියා. එහි මගේ පයට වෙඩි බෙහෙතක් වැදීමෙන් විශාල තුවාලයක් ඇති වුණා. බෙහෙත් ලබා ගැනීමට එහි රෝහලක් තිබුණේ නැහැ. මගේ සැමියා හා පියා මාව ළඟ ස්ථානයට රැගෙන ගොස් කකුලට බෙහෙත් බැඳ ගැනීමට උදව් කළා. ඊළඟ දවසේ එම ස්ථානයේ සිට හමුදා පාලන ප‍්‍රදේශයට පැමිණියා.

එහිදී හමුදාව සියලුදෙනාම කම්බි වැටක් සහිත ප‍්‍රදේශයක් තුළ කොටු වී සිටින ලෙස කිව්වා. දින 3ක් මගේ දරුවන් සමඟ බීමට වතුර පවා නොලැබී දුක් වින්දා. ඒ සෙනඟ අතරේ මගේ සැමියා කොහේ සිටිනවා දැයි අප දැන සිටියේ නැහැ. සෙවීමටත් ස්ථානයක් තිබුණේ නැහැ. අවසානයේදී අපි එම වැටෙන් කොටු වු ස්ථානයෙන් පිටවී එළියට පැමිණියා.
එසේ එළියට පැමිණීමෙන් පසු අපගෙන් ප‍්‍රශ්න කර බස් රථයක නංවා ගෙන රැගෙන ගියා. එහි මගේ සැමියාව මා දැක්කා. ඔහු දැකීමෙන් පසු මගේ දරුවන් ඔහු බදාගෙන හැඬුවා. පසුව අප කඳවුරකට රැගෙන ගියා. එක් ස්ථානයක අපව බසස්වා අපගේ ස්ථාන තෝරා ගන්නා ලෙස හමුදා අය අපට කිව්වා. අපි නිවසක් තෝරා ගත්තා. එහි අපට පිසු ආහාර ලබා දුන්නා. එම ස්ථානයේ අප වසරක් ගත කළා.
එම කඳවුරේ පැපොල රෝගය පැතිරුණා. එම රෝගය මගේ දරුවන්ටත් වැළදුණා. මෙසේ අපි විවිධ දුක් වේදනාවලට ලක් වුණා. නැවත 2009 ඔක්තෝබර් මාසයේ ගමට පැමිණියා. ජීවිතය නැවතත් සතුටින් ආරම්භ වුණා. මෙසේ මට විවිධ දුක් කරදරවලට මුහුණපෑමට සිදු වූ නිසා මගේ දරුවන්ට එවැනි තත්ත්වයක් ඇති නොවිය යුතුය යන්න මගේ සිත තුළ තිබෙන ගැඹුරු අභිලාෂයයි.

මෙසේ මා සතුටින් ජීවත් වුණා. සමහර සිදුවීම් හේතුවෙන් අපේ ජීවිතය වෙනත් අතකට හැරුණා. සැමියා මියගොස් දැන් වසර තුනක් වෙනවා. එහෙත් කිසිම අඩුපාඩුවකින් තොරව මා මාගේ දරුවන් රැකබලා ගත්තා. දැනට සැමියා නැතිව තනියෙන්ම මගේ දරුවන් රැක බලාගෙන ජීවත්වනවා. කිසිම විටක මම තව කෙනෙකුට අතපාන්නේ නැහැ. මගේ තනිඋත්සාහයෙන් දරුවන් හදා ගන්නවා. මට කිසි කෙනෙක් උදව් කරන්නේ නැහැ. මට අයිති ඉඩමක් තිබෙනවා. එම ඉඩමේ ගොවිතැන් කටයුතුවල යෙදෙන අතර ගෙවතු වගා කටයුතුවලද යෙදෙනවා. මගේ ආදායමෙන් එදිනෙදා වියදම් පිරිමහ ගන්නවා.

දැනට මගේ ස්වෝත්සාහයෙන් කිසිම අඩුපාඩුවකින් තොරව ප‍්‍රමාණවත් ආදායමක් ලබාගෙන ජීවත් වනවා. ඒ ආකාරයටම මගේ දරුවන්ද හදාවඩා ගන්නවා. මගේ ජීවිතයේ මුහුණපෑමට සිදුවන දුක් කරදරවලදී, වේදනාවලදී මගේ දරුවන්ද එය මා සමඟ බෙදා හදා ගන්නවා. මගේ දරුවන් දෙදෙනෙක් අ.පො.ස. (උසස් පෙළ) අවසන් කර සිටිනවා. අනෙක් දෙදෙනා පාසල් යනවා. මාගේ කැමැත්ත අනුව දරුවන් දෙදෙනා උසස් අධ්‍යාපනය සාර්ථකව නිමා කර තිබෙනවා. ඒවාගේම අනෙක් දෙදෙනාත් හොඳ ප්‍රතිඵල ලබා ගනීවි යන විශ්වාසය මට තිබෙනවා.

කිසිම අවස්ථාවක මම තව කෙනෙකුගෙන් යැපීමට බලාපොරොත්තු වන්නේ නැහැ. මගේ වැඩ කටයුතුවලදී මගේ දරුවන් 4දෙනා මට උදව් කරනවා. සමහර අවස්ථාවල මගේ මවද යම් යම් අත් උදව් ලබා දෙනවා. නමුත්, දැනට ඇය අසනීප තත්ත්වයෙන් පසුවෙනවා. ඇයව රැක බලා ගැනීමත් මගේ යුතුකමක්. සියලුදෙනාම රැක බලාගෙන මගේ දරුවන්ද රැක බලා ගනිමි. මගේ ජීවිතය ගෙවී යාවි කියා මා බලාපොරොත්තු වෙනවා.

මගේ අනාගත බලාපොරොත්තුව මගේ දරුවන් 4දෙනා හොඳ අධ්‍යාපනයක් ලබා ඔවුන් රජයේ රැකියාවන් ලබා ගත යුතුය යන්න ය. අපේ කාලයේ අපට මෙසේ අධ්‍යාපනයක් ලබා ගැනීමට අවස්ථාවක් ලැබුණේ නැහැ. ගොවිතැන් කටයුතුවලත්, ගෙවතු වැඩවලත් අපේ කාලය ගෙවී ගියා. අපේ දරුවන් අධ්‍යාපනයක් ලබා ජීවිතයේ හොඳ තත්ත්වයකට පැමිණිය යුතුයි. මගේ අභිලාෂය එයයි.
කිසිම අඩුපාඩුවකින් තොරව ඔවුන් හොඳ පවුල්වලට විවාහ කර දිය යුතුයි. ඔවුන් සතුටින් ජීවත්වීම බලා සිටීම මගේ එකම කැමැත්ත වේ. ඒ දරුවන් හැමවිටම මගේ වචනවලට ගරු කර, හැසිරෙණු ඇතැයි මා බලාපොරොත්තු වෙමි.



CMP/MN/MW/PUK/03

எனது தனிப்பட்ட சரித்திரம் ஒரு வேதனை அளிக்கக் கூடிய ஒரு வரலாறு. எனது சகோதரர் இருவர். நான் பிறந்து 17 நாட்களிலேயே எனது தந்தை இறந்து விட்டார். நான் என்ன பாவம் செய்தேனோ எனது தந்தையின் முகம் கூட பார்க்கவில்லை. அவருடன் பேசி படிக்கக் கூட இல்லை. தந்தையின் முகத்தை சுவரில் மாட்டி வைத்த படத்திலேயே பார்த்தேன். அப்போதுதான் அறிந்தேன் தந்தையை இழந்த ஒரு பெண் என்று. எனது சிறுபராயத்திலேயே தந்தையை இழந்ததால் பல கஸ்டமான கசப்பான அனுபவங்களை அனுபவித்தேன்.

அதாவது எனது தாய் எங்களை வளர்ப்பதற்கு மிகவும் கஸ்டமான வேதனைகளையும் அனுபவித்தார். எவ்வாறு எங்களை வளர்த்தார் என்று இப்போது நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது. எனது தந்தை இறந்து ஒரு வாரம் ஆகியது. யாருமே எங்களை கவனிக்கவில்லை. ஆனால் எங்களது தாய் தனது கணவர் இறந்த வேதனையோடு எங்களை வளர்க்க என்ன செய்வது என்று வேதனைப்பட்டார். என்னை இடுப்பில் சுமந்து கொண்டுதலையில் மரக்கறியை சுமந்து கொண்டும் 5 மைல் தொலைவிலுள்ள கிராமத்திற்கு சென்று அவற்றை விற்று வந்தே எங்களது வயிற்றை நிரப்புவார். தனது வயிறு நிரம்பாவிட்டாலும் எங்களது வயிற்றை முற்றாக நிரப்புவார். தினமும் இவ்வாறு மரக்கறி விற்பார். அவை இல்லாத வேளையில் வயலில் கதிர்கள் புரக்கி அவற்றை கையால் குத்தி எடுத்து உணவு சமைப்பார். இவ்வாறு பல கஸ்ரங்களை எனது தாய் அனுபவித்தார். இவ்வாறு நாங்களும் கஸ்ரங்களை அனுபவிக்கக் கூடாது என்று எங்கள் மூன்று பேரையும் நல்ல இடத்தில் திருமணம் முடித்து கொடுத்தார்.

என்ன திருமணம் முடித்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் எனது தாயார். எனது கணவருடன் சந்தோசமாக வாழ்ந்தேன். நான்கு செல்வங்களை பெற்றேன். எனது மாமி, மாமா என்னை தாய் வீட்டில் எவ்வாறு வாழ்ந்தேனோ அவ்வாறே என்னை எந்த கஸ்ரங்களும் நேராதவாறு என்னை கவனித்தார்.

சில மனக் கசப்புக்கள் குடும்பத்தில் ஏற்படும் போது அவற்றை பெரிதுபடுத்த மாட்டேன். ஏன் என்றால் தாய் வீட்டில் அவற்றை சொன்னால் தாயின் நிம்மதி கெட்டுவிடும் என்று அவற்றை சமாளித்துக் கொண்டு சந்தோசமாக விட்டுக் கொடுத்து வாழ்ந்தேன்.

2008ஆம் ஆண்டு போர் ஏற்பட்டது. இருந்த ஊரை விட்டு இடம்பெயர்ந்து சென்றோம். இவ்வாறு பல இடங்களுக்கு போர்க்களத்தின் மத்தியிலும் உணவுத் தட்டுப்பாட்டில் மத்தியிலும் எனது பிள்ளைகளுக்கு எந்த குறையும் ஏற்படாதவாறு பாதுகாத்தோம். கடைசியில் வட்டுவாகல் இடத்திற்குச் சென்றோம். அங்கு எனது காலில் வெடிபொருள் ஒன்றுபட்டு காலில் பெரிய காயத்தை ஏற்படுத்தியது. மருந்து கட்டுவதற்கு மருத்துவமனை அங்கு இல்லை. எனது கணவரும் எனது மகனும் என்னை பக்கத்தில் உள்ள ஓர்இடத்திற்கு அழைத்துச் சென்று மருந்து கட்டி கூட்டிக் கொண்டு வந்தனர். அடுத்த நாள் அந்த இடத்தில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து சேர்ந்தோம்.

அங்கு இராணுவம் அனைத்து மக்களையும் ஒர் வேலி கம்பியினுள் அடைத்தனர். மூன்று நாள் எனது குழந்தைகளை வைத்துக் கொண்டு அருந்த நீர் இல்லாமல் அவஸ்தைப்பட்டேன். அந்த சனத்தின் கூட்டத்தில் எனது கணவரை காணவில்லை. எங்கு தேடுவது என்று தெரியவில்லை. கடைசியில் ஓர் வழியாக கம்பிக் கூட்டில் இருந்து வௌியே வந்தோம்.

வௌியில் வந்ததும் எங்களை விசாரணை செய்து விட்டு ஒரு பஸ்சில் ஏற்றி கூட்டிச் சென்றார்கள். அங்கு எனது கணவர் எங்களை பார்த்த வண்ணம் இருந்தார். அவரை கண்டதும் எனது குழந்தைகள் அவரை கட்டிப்பிடித்து அழுதனர். பின்னர் ஒரு பஸ்சில் ஏற்றி முகாமுக்கு கொண்டு சென்றனர். ஓர் இடத்தில் இறக்கி விட்டு எங்களுக்கான இடங்களை தெரிவு செய்யுமாறு இராணுவத்தினர் கூறினர். நாங்கள் ஓர் வீட்டை தெரிவு செய்து இருந்தோம். அங்கு சமையல் செய்து தருவார்கள். இவ்வாறு ஒரு வருடம் கழிந்தது.

அந்த முகாமில் அம்மை நோய் பரவியது. அந்த நோய் எனது பிள்ளைகளையும் வாட்டியது. இவ்வாறு பல துன்பங்களை அனுபவித்தேன். மீண்டும் எனது ஊரிற்கு 2009ஆம் ஆண்டு 10ஆம் மாதம் வந்து சேர்ந்தோம். மீண்டும் எனது சந்தோசமாக வாழ்க்கை ஆரம்பமாகியது. இவ்வாறு பல கஸ்ரங்களை அனுபவித்ததால் எனது பிள்ளைகளும் இவ்வாறான நிலை ஏற்படக் கூடாது என எனது மனதில் ஒர் இலட்சியத்தை எண்ணி வாழ்ந்தேன்.

இவ்வாறு எனது வாழ்க்கை சந்தோசமாக இருந்தேன். சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் எனது வாழ்க்கையை திசை திருப்பியது. எனது கணவர் இறந்து 3 வருடங்கள் ஆகின்றன. அவரை இழந்தாலும் எனது பிள்ளைகளை எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன்.

இப்போது எனது கணவரை இழந்து தனிமையில் எனது குழந்தைகளை வளர்த்து வருகிறேன். எந்த சூழ்நிலையிலும் யாருடைய கையையும் எதிர்பார்க்க மாட்டேன். எனது தனி முயற்சியினால் எனது பிள்ளைகளை வளர்க்கிறேன். எனக்கு உதவி செய்யும் நிலையில் யாரும் இல்லை. எனக்கு சொந்தமான காணி உண்டு. அதில் விவசாயம் செய்து தோட்டங்கள் செய்தும் எனது வருமான வாழ்க்கைச் செலவுகளை பூர்த்தி செய்கிறேன்.

தற்போது எனது முயற்சியினால் எந்த குறைகளும் இல்லாமல் இடைநிலையில் எனது வாழ்க்கைக்குத் தேவையான வசதியில் உள்ளேன். அதற்கு ஏற்ற வகையில் எனது பிள்ளைகளையும் வளர்த்து வருகிறேன். எனதுவாழ்க்கையில் இன்ப துன்பம் கஸ்ர நஸ்ரங்களில் எனது பிள்ளைகளும் பங்கெடுப்பார்கள். எனது இரு பிள்ளைகள் உயர் தரத்தை முடித்துள்ளனர். மற்றைய இருவரும் பாடசாலையில் கல்வி கற்கின்றனர். எனது விருப்பப்படி இருவரும் உயர்தர கல்வியை நல்லபடி முடித்துள்ளனர். அதே போன்று மற்றைய இருவரும் நல்ல பெறுபேற்றை பெறுவார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் எதற்காகவும் யாருடைய எதிர்பார்ப்பையும் எண்ணி வாழ மாட்டேன். எனது உழைப்பிற்கு துணையாக இருப்பவர்கள் எனது நான்கு பிள்ளைகளுமே. எனது தாயும் எனக்கு சில வேளைகளில் கையுதவிகள் செய்து தருவார். ஆனால் இப்போது அவர் உடல்நிலை சுகயீனம் காரணமாக வீட்டில் உள்ளார். அவரை கவனிப்பதும் எனது கடமை. அவரையும் கவனித்துக் கொண்டு எனது பிள்ளைகளையும் கவனித்து வருகிறேன். எனது வாழ்க்கை இவ்வாறே தொடரும் என்று எண்ணுகிறேன்.

எனது எதிர்கால எதிர்பார்ப்பு எனது நான்கு பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்து அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் ஈடுபட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பும் ஆசையும் ஆகும். எங்களது காலத்தில் நாங்கள்தான் அவ்வாறு படிக்கவில்லை. வீட்டு வேலையிலும் தோட்ட வேலையிலும் எங்களது காலத்தை கழித்து விட்டோம். எங்களது பிள்ளைகளை படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது எனது இலட்சியமாகும்.

அவர்களை நல்ல இடத்தில் எந்த குறையும் இல்லாமல் திருமணம் முடித்து கொடுக்க வேண்டும். அவர்கள் சந்தோசமாக வாழ்வதை பார்க்க வேண்டும் என்பதே என்று ஆசைப்படுகிறேன்.

எப்போதும் எனது சொல் கேட்டு நடப்பார்கள் என்றும் எனது விருப்பங்களை என் பிள்ளைகள் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்கால எதிர்பார்ப்பை எண்ணுகிறேன்.








A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License