I ran until the last minute

The story of a woman who struggled to survive after the loss of her husband in battle.


මම අන්තිම මොහොත දක්වා දිව ගියේය

තම සැමියා අහිමි වූ ගැහැණු ළමයෙකුගේ කථාව.


இறுதி நிமிடம்வரை ஒவ்வொரு இடமாக ஓடினேன்

யுத்தத்தில் கணவனை இழந்து தப்பிப்பிழைத்த பெண்ணின் கதை.



CMP/MN/MW/PPK/09


My life History
My name is S.Mettalin Pama. I was in 1974 at Parappankandal village. I have three sisters. I am the second child. My father is a farmer. I studied up to Grade 8. When I was born, we had a brick house. So, we had no housing problem. Until such time, the situation in our area was calm.

On 4th December, 1984 following the attack on the army made by the movement, the army was on the street and shot all the passersby unintentionally. After this incident, the army often entered into our area. At this juncture, due to another incident, the army took all the boys and husbands of our village to a school and shot all of them to death.

Following this incident, many women have become widows and many children have become orphans in our village and such worst situation prevails in our village.

Likewise in 1990, 1992 and 2000, we often displaced and sought asylum in jungles for several months and our life went on this way.

In 1992, I got married and my husband too was a farmer. I got a boy in 1992. Due to the riots, my husband died in 1992. Then I was with my mother and father. My mother too expired in 1997 and father died in 2002. I did small business with agriculture and managed my and my son’s life. When the war intensified in 2007, we displaced from here and went to Iluppaikadavai and stayed for 9 months.

We suffered a lot in the displaced area. We had no food and no proper sleep. Then for ten days, we displaced to Nagapuram, Mulangkaavil, Konavil, Kalmadu, Visuwamadu, Suthanthirapuram, Iranappalai, Valaignarmadam and Mullivaikkal; one place per day and ran from one place to another till the end.

Amidst shell attack and rocket launchers, we did not get any big injury because of the grace of god. I went with my brother and children. He got small injuries.

There are many unforgettable incidents. Fighting took place all over Visuwamadu and Suthanthirapuram. There was fighting and smoke everywhere. My younger sister’s husband died of shell attack at Suthanthirapuram. Here we have no coconut and salt and we boiled only dhal in water and ate if for many days. All most all members of the families stayed with us gradually lost their lives one by one. The husband of the family which came until the end, died at Iranaippalai. On another day at Vadduwahal just 5 minutes after we departed them, the mother and two children were blasted into pieces in the shell attack.

Only one child escaped death. He was with us till May 17th and we brought him with us. After the ceasing of the war, when we came to Vadduwahal, a soldier cut me with his knife, I somehow managed to escape.
On May 18th night, we were taken to Zone 4 Camp in Vavuniya. From there, we resettled in our own place on 22nd October. When we arrived our home, there were bushes all over the place. Landmines had been removed in certain areas only. We were given a temporary shed. We handed over the child we brought with us to our mother.

Since we came here, the war atmosphere is no more. However, the aftermath of the war is still continuing. The female relatives of our families have not been provided with proper housing facilities so far and we are discriminated and we face challenges. Our grief, still continues in 2016 also. My daughter after studying Advanced Level has acquired some additional educational qualifications and is awaiting employment. We expect to come up in life in future with the help of her. Hereafter, this type of agony should not continue.

I get 1000/= rupees per month as ‘Smurdhi’ assistance and 300/= rupees per month as PMI assistance. We cannot meet a day’s expenses with this money. We are physically unfit to do any job on our own. I should be provided any permanent pension scheme. The war is the main reason that I became a widow and have to depend on the government. Otherwise, we could have lived on our own.

We were provided a housing scheme for 325,000/- rupees and we can build a partial house within that amount. Now, I have obtained a loan and have been building the house. As I have to repay the loan installment often, I am unable to take meals for three times a day.

In this year also our agony continues. Whom can we go? Who can I ask for? Not everybody will understand. Many people come and see us and hear our story but nothing is done.
Our sufferings are on the rise.
Is it our fate?
Whether it is the fate of our children too?

Thanks.











CMP/MN/MW/PPK/09
නම :- සෙ . මැච්ලින් පාමා
පිලිනය :- පලෙයිප් පෙරුමාල් කට්ටු , වට්ටක් කන්ඩල් , මන්නාරම

1974 පරප්පං කන්ඩල් ගමේ උපත ලබා ජිවත් වෙනවා. මට සහොදරයන් තිදෙනෙක් මම දෙවනියා. මගේ තාත්තා ගොවියෙක්. අපි ඉපදෙන විටම අපට ගල් වලින් හදපු ගෙයක් තිබුනා. මේ නිසා පදිංචි කිරිමේ පශ්ණ වලට මුහුණ දුන්නේ නෑ. ඒ වෙනකම් අපට සාමකාමි ජිවිතයක් තිබුනා. 1984 දි දෙසම්බර් මස 4 වන දින හමුදාව කෙරෙහි කොටි සංවිධානය විසින් එල්ල කළාවු ප්‍රහාර නිසා හමුදාව පරේ සිටියාවු හැම කෙනෙක්ම අවට ගියාට වෙඩි තිබ්බා. ඉන් පසු අපේ ප්‍රෙද්ශයේ හමුදාව විඩෙන් විඩෙන් ඉන්නවා. ඊට පසුව 1986 යෙදි තවත් මෙවැනි ප්‍රචන්ඩ ක්‍රියාවන් නිසා අපේ ගමේ සිටියාවු පිරිම ළමයි , ස්වාමිපුරුෂයන් සියල්ලෝම පාසලකට දාලා වෙඩි තියලා මරලා දැම්මා. මේ සිදු විම නිසා අපේ ගමේ ගොඩාක් වැද්දඹුවන් , අනාථ පවුල් ඇතිවෙලා අද කියා ගන්න බැරි දුක් වෙදනාවිල්න පිරුණු තත්වයක් ඇති බෙලා තියෙන්නේ. මේ වගේ 1990 , 1992 , 200 යන වර්ශ වල අපි නිතර නිතර පිඩාවට පත් වි අවතැන් වි කැලැවල් වල සරණය වි අපේ ජිවිත ගමන ගෙවි ගියා. 1991 දි මම විවාහා වුනා. මගේ සැමියා ගොවියෙක්. 1992 දරුවෙක් ලබුනා. මගේ සැමියා ප්‍රචන්ඩ ක්‍රියාවන් නිසා 1992 මියා ගියා. මම මගේ අම්මා තාත්තා සමග තමයි සිටියේ මගේ අම්මා1992 , තාත්තා 2002 මිය ගියා. ව්‍යාපාර වැනි කුඩා රැකියාවක් සමග ගොවිතැන් කරලා මාව සහ මගේ දරුවන් රැක බලා ගත්තා. 2007 යුද්ධය දරුණුවට පැවතුණ නිසා අපි මෙහෙ ඉදලා අවතැන් වෙලා ඉලුප්පාක් කඩවෙයි ගිහිල්ලා මාස 9 එහි නැවතිලා සිටියා. අවතැන් වි ගිය සෑම තැනකදිම අපි ගොඩාක් දුක් වින්දා.කන්න කෑම නෑ, සැනසිල්ලේ නිදයන්න නෑ. මිට පස්සේ නාග පුරම මුලංකොවිල් කොවිලේ කල් මඩු නගර් , විසුවාමඩු , සුදන්දර පුරම, ඉරානෛයිලෙය , ලිවායික්කාල් , දින 10 , 11 තියලා අන්තිම දක්වා තැන් තැන් වලට දව්වා.
සෙල් වෙඩි සහ බොම්බ ප්‍රහාර සිද්ධ වුනාත් දෙවියන්ගේ බැල්ම නිසා වෙන්න ඇති ලොක් තුවාල නොවි බෙරුනා. මම මගේ සහෝදරයන් සහ දරුවන් සමග ගියේ ඔවුන්ට සුළු සුළු තුවාල ඇති වුනා. මට අමතක නොවන සිදුවිම් ගොඩයි. විසුව මඩු , සුදන්දිර පුරම , යන හැම තැනකම ප්‍රශ්ණ. කොහෙ බැලුවත් විනාශය දෙගොල්ලොම ගහාගන්නවා. දුමි විලක් , මගේ නංගිගේ සැමියා සදන්දින පුරමේ සෙල් වැදිලා මැරුණා. මම පොල් නෑ , ලුණු නෑ වතුරයි පරිප්පුයි තම්බලා කාපු දවස් ගොඩක් තිබුනා. අපි එක්ක හිටියාවු ගොඩාක් පවුල් වල අය එක එක්කෙනා මැරිලා ගියා. අන්තිම දක්වා අපි එක්ක හිටපු පවුලක සැමියා ඉරනෙයිප්පාලෙයිවල මැරුණා. අවාසනයෙදි ගෙවල්වලට ඇවිත් එක්තාරා පාරක හිටිය අවස්ථාවෙදි අපි එහෙ ඉදලා ගෙට වෙලා ගිහින් විනාඩි 5 වත් නෑ එම ස්ථානයෙම මව සහ දරුවන් සෙල් වැදිලා පිපිරිලා මැරුණාය. එක් දරුවෙක් විතරක් මැරුණා.මැයි මස 17 දින් දක්වා අපි සමගම තියා ගත්තා. අන්තිම දක්වා එක්ක අවා. ගෙවල්වලට අපි යුද්ධය ඉවර වෙලා එන විට එහි සිටගෙන සිටිය හමුදාවේ කෙනෙක් මාව පිහියෙන් කපපු වෛලාවෙදිත් මම අහම්බෙන් වගේ නොවැදි ජිවිතේ බෙරුණා. අපිව මැයි මස 18 වන දින රෑ හොරෙන් වව්නියා 20ne4 කදවුරට ගෙනිහින් දැමිමා. එහෙ ඉදලා ඔක්තෝමිබර් මස 22 දෙවිනෙදා අපේ තැන් වල නැවත පිදිංචි වුනා. අප නැවත එන විට අපේ ගෙවල් දොරවල් කැලැවෙලා තිබුනා. සමහර ප්‍රෙද්ශ වල පමණයි බිම්බොම්බ ඉවත් කර තිබුනේ. මෙහේ අපට පැල්පත් වාගේ ගෙවල් හදලා දුන්නා. අපි අප එක්ක අක්ක අපා අම්මා කෙනෙකුයි පුතෙකුයි එයාගේ අච්චි අම්මාට එන්න කියාල භාර දුන්නා. මෙහෙ අව දවසේ ඉදලා මගෙ තත්වය මතක නෑනමුත් ඉන් පසුව යුද්ධයෙන් පිඩාවට පත් වුන තුවාල තාම පවතිනවා. අපේ පවුල් වල සමහර අයට නිවාස සැලසුම් මගින් අදටත් නිවාස නොදි විවිධ පලිගැනිම් වලට සහ අභියොග වලට ලක්වෙමින් ජිවත් වන්නෙමුව. අපගේ වෙදනාව මේ 2016 දිත් පවතිනවා.
මගේ දරුවෙක් උසස්පෙළ ඉගෙන ගෙන අමතරව සමහර සුදුකම් ඇතුව රැකියාවක් සොයමින් ඉන්නවා. එයා මගින් තමයි අපට ටිකක් හරි හිස ඔසවන්න වෙන්නේ. මින් මතු කාළයෙදි මෙවන් දුක් වෙදනාවන් ඇති නොවෙන්න මට සමෘධිය මගින් රු100 සහ පිං පඩි මගින් මසකට රු 300 ලැබෙනවා. මෙයින් අපේ ජිවිතයේ දවසක් ගෙවන්නවත් බෑ. ( මදි - අමාරුයි) ඒ සමගම අපට රැකියාවක් කිරිමට බැරි තරම් ශාරිරික පුළුවන් කමක්වත් නැති තත්වයක අපි ඉන්නෙ. අප හට විශ්‍රම වැටුප් පිලිබදව වැඩ සැලසුමක් ලැබිය යුතුයි. මම අද වැන්දඹුවක් වෙන්ටත් , මේ තත්වය ඇතිවිමටත් හෙතු මේ යුද්ධය තමයි. එහෙම නොවේ නම් අපි සහ අපේ ප්‍රදේශය රජයෙන් බැගැපත්වෙන්න තරමි තත්වයක් ඇතිවෙන්නේනෑ. නිවාස සැලසුම් තුලින් මට ලක්ෂ 1 3/1 දිලා ගෙයක් හදන්න කිවොත් එයින් භාගයකින් තමයි මට ගෙවල් හදන්න වෙන්නේ. දැන් මම ලෝන අරගෙන මගේ ගෙදර වැඩ කරගේන යනවා. ලොන් වලට මුදල් ගෙවන්න තියෙන නිසා දැන් හරියට වෙලාවට කන්න ලබා ගන්න බැරි දවස් අධිකයි. අපේ දුක් මේ වසර තුලිත් පවතිනවා. අපි කා වෙත් යන්නද ? කාලග ඉල්ලන්නද ? අපි සැවොම ගොවිතැන් ටිකක් කරගේන යනවා. අපිවත් අපේ කථාවත් අහාගේන යනවා ඇර අපි වෙනුවෙන් උදාවෙන දවසක් නෑ. අපේ දුක් වැඩි වෙමින් පවතිනවා. අපේ කරුමය මෙය නම් අපේ දරුවන්ගේ කරුමයත් මෙයද ? ස්තුතියි.


CMP/MN/MW/PPK/09

எனது வாழ்க்கை வரலாறு

எனது பெயர் செ. மெட்டலின் பாமா. நான் 1974ம் ஆண்டு பறப்பான் கண்டல் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். எனக்கு மூன்று பெண் சகோதரர்கள். நான் இரண்டாவது பிள்ளை. எனது அப்பா ஓர் விவசாயி. நான் 8ம் ஆண்டுவரை கல்வி கற்றேன். நான் பிறக்கும் போது எங்களுக்கு கல்வீடு ஒன்று இருந்தது. இதனால் குடியிருப்பு தொடர்பான பிரச்சினையினை எதிர்பார்க்க இருக்கவில்லை. அது வரை காலமும் எமக்கு ஓர் அமைதியான சூழல் காணப்பட்டது.

1984ம் ஆண்டு மார்கழி மாதம் 4ம் திகதி இராணுவத்தின் மீது இயக்கம் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இராணுவம் வீதியில் நின்ற வேளை போனவர்கள் அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டது. இதனைத் தொடர்ந்து எமது பிரதேசம் அடிக்கடி ஆமியின் பிரவேசம் காணப்பட்டது. இந்த நிலையிலும் 1986ம் ஆண்டு இன்னுமொரு வன்செயல் காரணமாக எமது கிராமத்தில் காணப்பட்ட ஆண் பிள்ளைகள் கணவன்மார் என அனைவரையும் ஓர்பள்ளிக் கூடத்திற்குள் கொண்டு சென்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனை அடுத்து எமது கிராமத்தில் அதிகமான விதவைகளும் அனாதை குடும்பங்களும் உருவாகி இன்று இவ்வாறான ஒர்துப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது போன்று1990,1992,2000ம் ஆண்டுகுளில் நாம் அடிக்கடி இடப்பெயர்வுகளுக்கு உட்பட்டு காடுகளில் தஞ்சம் புகுந்து பல மாதங்கள் என எங்களது சீவியங்கள் போயிருந்தன.

1992இல் பின் திருமணம் செய்தேன். எனது கணவரும் ஒரு விவசாயி. 1992இல் ஒர் மகன் கிடைத்தார். எனது கணவன் வன்செயல் காரணமாக 1992ல் இறந்துவிட்டான். பின்புநான் எனது அம்மா அப்பாவுடன் தான் இருந்தேன். வேறு தாயும் 1997இல் இறந்துவிட்டார். தகப்பன் 2002இல் இறந்துவிட்டார். நான் வியாபாரம் என்ற சிறு தொழிலுடன் விவசாயம் செய்தே என்னையும் எனது பிள்ளையையும் காப்பாத்தி வந்தேன். 2007ல் சண்டை உக்கிரமடைந்ததன் காரணமாக நாங்கள் இங்கிருந்து இடம்பெயர்ந்து இலுப்பைக்கடவை சென்று 9 மாதங்கள் வரை தங்கியிருந்தேன்.

இடம்பெயர்ந்து சென்ற இடங்களில் நாங்கள் மிகவும் துன்பப்பட்டிருந்தோம். உண்ண உணவு இல்லை. நிம்மதியாக படுக்கை இல்லை.

இதன் பிறகு நாகபுரம், முழங்காவில், கோணாவில், கல்மடு, விசுவமடு, சுதந்திரபுரம், இரணப்பாலை, வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால், என 10 நாட்கள் 1 நாள் என்றும் ஒவ்வொரு இடம் இடமாக இறுதி வரை ஓடினேன்.

செல் தாக்குதல்களும் எறிகணை வீச்சுக்களும் இருப்பாகமும், கடவுளின் பார்வையு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. நான் எனது சகோதரர்களுடனும் பிள்ளைகளுடனும் சென்றோம். அவருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன.

என்னால் மறக்க முடியாத சம்பவம் பல உண்டு. விசுவமடு சுதந்திரபுரம் எல்லாம் ஒரே சண்டை எங்கு பார்த்தாலும் கெடுபிடி ஒரே சண்டை புகை மண்டலமும் எனது தங்கச்சியின் கணவன் சுதந்திரபுரத்தில் இறந்து விட்டார் அதுவும் செல் அடிபட்டு. இங்கு தேங்காய் இல்லை. உப்பில்லை. பருப்பை மட்டும் தண்ணீரில் அவிச்சு சாப்பிட்ட நாட்களே அதிகம். எங்களுடன் இருந்த குடும்பங்கள பல ஒவ்வொருவராக இறந்தவர்கள். இறுதி வரை எங்களுடன் இணைந்து வந்த குடும்பம் ஒன்றின் கணவன் இரணப்பாலையில் இறந்தார். அவர்கள் இறுதியாக வீட்டுசாலில் வேறு ஒரு நாளில் இருந்த போது நாங்கள் அங்கிருந்து பிரிந்து சென்று ஓர் 5 நிமிடம் கூட இல்லை. அந்த இடத்தில் தாய் 2 பிள்ளைகளும் செல் வீச்சில் உடல் சிதறி உயிர் இழந்தனர்.

ஓர்பிள்ளை மட்டும் தப்பிதான் மே மாதம் 17ம் திகதி வரை எங்களுடன் இருந்தினும் இறுதி வரை கூட்டி வந்து வட்டுவாகலில் நாங்கள் போர் முடிந்து வரும் போது அதில் நின்ற இராணுவ வீரர் ஒருவர் என்னை கத்தியால் வெட்டிய போதும் நான் தற்செயலாக படாமல் உயிர் தப்பினேன்.

எங்களை மே 18ம் திகதி இரவு வேளையில் ஏற்றி சென்று வவுனியா சோன் 4 முகாமில் விட்டார்கள். அங்கிருந்து ஐப்பசி மாதம் 22ம் திகதி எமது இடங்களுக்கு மீள்குடியேறினோம். நாங்கள் வரும் போது எமது வீடு வாசல் எல்லாம் ஒரே பற்றைக்காடாக இருந்தன. சில குறிப்பிட்ட பகுதிகளில் மாத்திரமே கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டிருந்தன. இங்கு தற்காலிக கொட்டில் ஒன்றை அமைத்து தந்தார்கள். நாங்கள் எங்களுடன் கூட்டி வந்த ஓர் தாயின் மகளை எங்களின் அம்மாவை அழைத்து ஒப்படைத்தோம்.

இங்குவந்த காலத்திலிருநு்து போர்சூழல் நிலையில்லை ஆனாலும் அதன் பிற்பாடுபோரினால் பாதிக்கப்பட்ட பல வடுக்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

எங்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு இன்னும் ஒழுங்கான வீட்டுத்திட்டம் கிடைக்காமல் பல பழிவாங்கல்களுக்கும் சவால்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றோம். எங்களின் துரயங்கள் இந்த 2016ம் ஆண்டிலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. எனது மகள் உயர்தரம் படித்து மேலதிக சில கல்வித் தகைமைகள் பூர்த்தி செய்துவேலைக்காக காத்த வண்ணம் உள்ளார். அவளின் மூலமே நாங்கள் கொஞ்சமானாலும் தலை நிமிர முடியும். இனி வரும் காலங்களில் இப்படியொரு துன்பங்கள் தொடராமல் இருக்க வேண்டும்.

எனக்கு சமூர்த்தி மூலம் ரூ 1000 மாதம் பிச்சை சம்பளமும் 300 தான் கிடைக்கிறது. இது எங்களின் ஒருநாள் சீவியத்தினைக் கூட கொண்டு செல்ல முடியாது. தனியாக எங்களினால் ஓர்தொழில் செய்யும் உயடற்தகுதி கூட இல்லாத நிலையில் உள்ளோம். என்னை நிரந்தர ஓய்வுத்திட்டங்கள் ஓதாவது கிடைக்கப் பெறவேண்டும். நான் ஓர்விதவையாக வாழும் இந்த நிலை ஏற்படுகின்ற போதுதான் காரணம் இல்லையேல் நாங்கள் எங்களது பிரதேசத்திலும் அரசாங்கதிடம் கையளிக்க வேண்டிய நிலை உள்ளது.

வீட்டுத் திட்டம் என்று மூன்றே கால் இலட்சத்துக்கு தந்த வீடு கட்டுவதென்றால் அதில் அரைகுறை வீடுகள் கட்ட முடியும். இப்போது போன் எடுத்து வீட்டு வேலையை செய்கின்றார்கள். லோன் காசுகட்டுவதாய் சரியான மூன்று வேளை உணவினைக் கூட பெற்றுக் கொள்ள முடீயாத நாட்களும் அதிகம்.

எங்களின் துன்பங்கள் இந்த ஆண்டிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நாம் யாரிடம் போவது. யாரை கேட்பது? எல்லோரும் விளங்கிக் கொள்ளவா போயினம். எம்மையும் எமது கதைகளையும் கேட்டுக் செல்கின்றார்கள். தவிர எமக்காக விடுதலை காலமும் இல்லை.

எங்களின் துயரங்கள் இன்னமும் கூடிய வண்ணமே உள்ளது.

எமது தலைவிதிதான் இது வென்ன? எங்களின் பிள்ளைகளின் தலைவிதியும் இதுவா?

நன்றி






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License