We passed dead bodies as we fled

A father tells the terrible things that he saw during the war.


අපි මිනී වළ පසු කර ගියෙමු

යුද්ධයේ දී ඔහු දැක ඇති භයානක සිද්ධීන්ගෙන් එක් පියෙක් කියනවා.


பிணங்களை கடந்தபடி சென்றோம்

போர் காலத்தில் தான் கண்ணுற்ற கொடூரமான நிகழ்வுகளை தந்தையொருவர் கூறுகிறார்.



CMP/MN/MW/PPK/10

Memories
My name is S.Siththathurai. I live at Palaiperumalkaddu. I was in Parapankandal village in 1962. My father was a coolly worker. My too was a coolly worker as well as did domestic work. I had a sister. My village got its name behind a big tank.

We lived peacefully and happily in our village. Owing to domestic problem, I did not study after grade two. I started going to coolly work at small age. When I was young, my mother died of epilepsy. My sister also studied till Grade five.

She managed the house hold work as my mother expired early. Our father looked after us from his coolly income. Since our mother had passed away and faced difficulties, our childhood passed amidst hardships.

The plot of land we lived was 04 acres in extent. We lived in a hut made of coconut leaves. We had no land for agriculture. War took place in 1984 – 1985 period. That time we displaced towards temples and lakes. We suffered much for food. When displaced, we put up temporary sheds using small sticks. I got married in 1989. He was from Palaiperumalkaddu and then we came to live in his village. My family remained there.

When I got married, my husband had a brick house and paddy fields. He looked after me well. After one year of my marriage, my father and sister came to Palaiperumalkaddu. When the army came to our area in 1990, we displaced to Thadchanamdu.

Bombs were dropped there from airplanes and helicopter. We ran away leaving all our things and property. From Thadchanamdu we came to Madu. I got a daughter in 1992 when I was in Madu. We came here in 1994. Severe war started again in 2000, my daughter was born in Kalmadu. Again in 2002, we were happy. In 2007 due to heavy war, we went to Iranai Iluppaikulam. Likewise, we moved from one place to another.

My husband came to Mannar due to pass procedure. Again owing to intense war, I and my children were trapped there. We had nothing with us. We faced many problems while displacing.

We had no food and no clothing other than we were wearing and displaced with untold misery. Finally from Iruddumadu, we moved during nights with fear and after 3 days we reached Vavuniya. That time, there were many fights. We escaped without my husband. But had no food or water to drink. We cannot explain our difficulties.

We stayed at Amaithipuram Camp at Vavuniya Maha Vidyalayam. Later, in October 2010, with the help of Grama Niladhari we stayed at Temples. We had no houses to stay. We put up houses. In December 2009, when my husband went to the paddy field to fill water, he died. Due to chest pain, he fell down in the paddy field and one boy brought this message and immediately we took him to Mannar hospital and then he was taken to Vavuniya hospital but on the way to Anuradhapura hospital, he passed away. After his death, I maintained my family by doing coolly work. Now, I have heart disease and I cannot do any heavy work. Now, I do poultry farming and coolly work and also get little income from the lease of paddy land.

These income is not sufficient to meet the educational expenses of my children and for food. My daughter is studying in Grade 11 now. Hereafter, I have to work hard to educate her. My younger sister is also living in destitute. She has 4 children and earn from fresh water fishing and coolly work. She also has an unpleasant life.

Hereafter, all children should be provided all facilities without clashes of this nature. Hereafter, we should live without any loan and having prosperous life. Problems of people like me living in villages should be eradicated completely.

Thanks.




CMP/MN/MW/PPK/10
නම; ස.සින්දත්තු‍රෙයි. ලිපිනය; පාලෙයිපෙරුමාන්කට්ටු
වට්ටක්කන්ඩල්
මන්නාරම.

මා 1962 දී පරප්පංකන්ඩල් ගමේ ඉපදුනේ.මගේ තාත්තා කුලිවැඩකරන කම්කරු‍වෙක්. අම්මාත් කුලිවැඩකරන ගමන් ගෙදර වැඩත් කරනවා. මට තව ස‍හොදරියෙක් ඉන්නවා.

අපේ ගමේ විශාල වැවක් තිබුණා.එම වැව මුලික කරගෙන ගමේ නම හැදිලා තියනබව සදහන් කරනවා. අපේ ගමේ අපි සතුටින් සාමයෙන් ජිවත්වුනා. ගෙදර තිබුණු දුප්පත්කම් නිසා මම 2 නි ශ්‍රේණියෙන් පසු ඉගෙන ගත්තෙ නැහැ. මම කුඩාකාලයේ සිටම කුලිවැඩ කරනවා. මගේ අම්මා මිමැස්මොර ලෙඩේ හැදිලා මිය ගියා.මගේ නංගිත් 5 වන ශ්‍රේණිය දක්වා පමණයි ඉගෙන ගත්තේ.

මගේ මව කුඩාකාලයේදිම මිය ගිය නිසා මම තමයි අපේ ගෙවල්වල වැඩකටයුතුටික බලාගත්තා.අපේ තාත්තා කුලිවැඩකරලා තමයි අපිව හදාවඩාගත්තේ. ගෙදර අම්මත් නැහැ, ගෙදරත් අඩුපාඩු අමාරුකම් නිසා, ගොඩක් කරදර මැද තමයි අපේ ජිවිතේ ගෙවිලා ගියේ.

අපි ජිවත් වුන පොඩි ඉඩං කෑල්ලවිතරයි අපට තිබුණේ. ඒකේ‍ පොල්අතුවලින් හදාගත් පැල්පත්වල ජිවත්වුනා.ගොවිතැන් කරන්න කුඹුරු තිබුනේ නැහැ.

1984-1985 අවුරුදු ගණන්වල යුද්ධය පටන්ගත්තා.ඒ කාලේ කොවිල් කුලම යන තැන්තැන්වල අවතැන්වෙලා ගියා කෑමට ගොඩාක් දුක්වින්දා. අවතැන් වුන කාලවල්වලදී පොඩි පොඩි ලී කපලා තාවකාලික පැල්පත් හදාගෙන ජිවත් වුනා.

1989 දී මම විවාහ වුනා. ඔහුගේ ගම පාලෙයිපෙරුමාන්කට්ටු.ඊටපසු ඔහුගේම තැනට ගියා.නුමුත් මගේ පවුලේ අය මෙහෙම හිටියා.මම ඔහුව විවාහවනවිට ඔහුට ගඩොල්වලින් හදපුගෙයක් සහ කුඹුරු ඉඩං තිබුනා. මාව ඔහු සතුටින් තියාගත්තා. විවාහවෙලා අවුරුද්දකට පසු තාත්තා සහ නංගි යන දෙදෙනාම අපි සමග පාලෙයිපෙරුමාන්කට්ටු ආවා.


1990 දි හමුදාව අපේ තැන්වලට පැමිණි විට අපි තට්සනමඩුහි අවතැන්වෙලා හිටියා. ඒ අවස්ථාවෙදි ගුවන්යානාවලින් බෝම්බ දමා ඇත . අපි අපේ දෙ‍්පල දාලා දිව්වා. තටිසනමඩු සිට නැවත මඩුවලට ආවා.
1992 දි මඩුවල ඉන්නවිට දරුවෙක් ඉපදුනා.1994 මෙහෙ ආවා. 2000 දී නැවත ප්‍රශ්න වැඩිවුනා. ඒ අවස්ථාවෙදි තමයි මඩුවලදි දුව ලැබුනේ. නැවත 2002 දි සැනසිල්ලෙන් හිටියා. 2007 දි දරුණු ලෙස යුද්ධය තිබුණු නිසා ඉරනෛයි ඉලුප්පංකුලම ගියා. තැන්තැන්වල ඇවිද්දා. පාස් ක්‍රියාත්මක වුනනිසා.

මගේ සැමියා මන්නාරම ආවා. නැවත දරුණු යුද්ධය නිසා මමත් දරුවොත් එහි හිරවුනා. ලෙඩක් හැදුනත් අපි ළග බෙහෙත් වත් නැහැ.

අවතැන් වුණු කාලවල්වලදි අපි ගොඩාක් දුක් වින්දා. කෑමට පවා සෙනග ගොඩේ කිසිම පිහිටක් නැතිව කියාගන්න බැරි වේදනා මැද ජිවත් වුනා. අවසානයේ ඉරුට්ටුමඩුවල ඉදලා රෑට රෑ වෙලා බය වෙවි දින තුනක් ගත වී වවුනියාවට ආවා. එහි බොහෝ වේදනාවන්වලට මුහුණ දුන්නා.කොහොම හරි තුවාල නැතිව බේරුණා. නුමුත් කෑම නැහැ.අපේ දුක් පවසන්න බැහැ.

වවුනියා ඇවිත්, සුමදිපුරම කදවුරේ හිටියා. අන්තිමට 2004 10 වෙනි මස ග්‍රමනිලධාරිතුමා හරහා කොවිල්වල ඇවිත් හිටියා.තමන්ට කියලා ඉන්න ගෙයක් නැහැ. තාවලිකාලික ගෙවල් ‍සාදාගෙන හිටියා.2009 දෙසම්බර් මස මගේ සැමියා කුඹුරේ වතුර දාන්න ගිය වෙලාවේදි මිය ගියා. පපුවේ කැක්කුමක් හැදිලා කුඹු‍රේ වැටිලා හිටියා. එවිට පිරිමි ළමයෙක් එක්කගෙන ඉක්මනින්ම මන්නාරම රොහලට ගෙනිහිං ඉන්පසු වවුනියාවට ගෙනිහිල්ලා එහි සිට අනුරාධපුරයට ගෙනියන වෙලාවේදි මිය ගියා.
කලින් සැමියා හිටියත් කුලිවැඩ කරගෙන මගේ පවුල බලාගත්තා. දැන් මට හදවත් ගයක් තිබෙනවා. මේ නිසා ලොකු(බර) වැඩ කිසිවක් මට කරන්න බැහැ.දැන් කුකුළන් ඇති කීරීම කුඹුරැ ඉඩම් අදේට දීම.යන දේවල් වලින් අපට පුංචි ආදායමයක් ලැබෙනවා. ඒ දෙවල් දරුවන්ගේ අධ්‍යපනයට හො නැතිනම් ආහාරවලට ප්‍රමාණවත් නැහැ.
මගේ දුව දැනුදු 11 වන ශ්‍රේණියේ ඉගනුම ලබනවා. මින්පසු තමයි මහන්සිවෙලා උගන්වන්න වෙනවා. මගේ නංගිත් ගොඩාක් දුක් විදිනවා.ළමයි 4 දෙ‍නෙක්. මාලු අල්ලනවා. කුලිවැඩකරනවා. මෙ නිසා එයාගේ පවුලත් ඉතා දුක්කිතතත්වයක තමයි තිබෙන්නේ.

මින් පසු මෙවැනි ප්‍රශ්න නොවියයුතුයි.අපටත් දරුවන්ටත් වියදමිවලට හරි විසදුමිලැබියයුතුයි.මින්පසුවත් ණය නොවි ස්ථිර සංවර්ධනයක් සමග සියලුදෙනාම සතුටින් ජිවත්වියයුතුයි.අපිවගේ ගම්වල ජිවත්වන මිනිසුන්ගේ ප්‍රශ්න අඩුපාඩු වලට විසදුම් ලැබිය යුතුයි.

ස.සින්දත්තුරෙයි.


CMP/MN/MW/PPK/10

நினைவலைகள் (சுய வரலாறு)

எனது பெயர் ச சித்தத்துரை. நான் பாலைப்பெருமாள்கட்டில் வசிக்கின்றேன். நான் 1962ம் ஆண்டு பறப்பாங்கண்டல் கிராமத்தில் பிறந்தேன். எனது அப்பா ஓர் கூலித்தொழிலாளி. அம்மாவும் கூலி வேலையும் செய்து வீட்டு வேலையும் பார்ப்பார். எனக்கு என்னை விட ஒருபெண் சகோதரர் இருந்தார். எனது கிராமத்துக்கு பெரிய குளம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு அப்பெயர் வந்ததாக கூறப்படுகின்றது.

எங்களுடைய ஊரில் நாம் அமைதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தோம். வீட்டுக்கு கஸ்ரம் காரணமாக இரண்டாம் ஆண்டுக்கு பிற்பாடு படிக்கவில்லை. நான் சிறுவயதிலேயே கூலி வேலைக்கு செல்வேன். சிறு வயதிலேயு எனதுஅம்மா வலிப்பு வந்து இறந்து விட்டார். எனது தங்கையும் 5ம் தரம் வரை தான் கல்வி கற்றார்.

எனக்குத் தாய் சிறு வயதிலேயே இறந்த காரணமாக பின்னர் எங்களுடைய வீட்டு வேலைகளைப் பார்த்து வந்தாள். எங்களின் ஐயா எங்களை கூலி வேலை செய்துதான் பார்த்துவந்தார். வீட்டில் தாயும் இல்லை. கஷ்டம் என்பதால் மிகவும் சிரமத்தின் மத்தியில் தான் எங்களுடைய சிறுபராயம் போனது.

நாங்கள் குடியிருந்த சிறிய காணி மட்டும் 4 ஏக்கருக்கு இருந்தது. அதில் கிடுகுகளில் ஓர் குடிசை அமைத்திருந்தோம். விவசாயம் செய்வதற்கு வயல் இருக்கவில்லை. 1984-1985ம் ஆண்டுகளில் யுத்தம் நடைபெற்றது. அந்தக் காலங்களில் கோயில் சார்ந்த பகுதிகளுக்கு இடம்பெயர்நு்து சென்றோம்.

உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டோம். இடம்பெயர்ந்த காலங்களில் சிறு சிறு கம்புகள் வெட்டி தற்காலிக குடிசைகள் கட்டி இருந்தோம். 1989ம் ஆண்டு நான் திருமணம் செய்துகொண்டேன். அவர்பாலைப் பெருமாள் கட்டு அதன் பிறகு அவரின் இடத்திற்கே வந்துவிட்டோம். இருப்பதற்கு ஆனால் எனது குடும்பம் அங்கேயே இருந்தார்கள்.

நான் திருமணம் செய்யும் போது அவருக்கு கல் வீடும் வயல் காணியும் இருந்தது. என்னை அவர் சந்தோசமாக பார்த்துக் கொண்டார். திருமணம் செய்து 1 வருடத்தின் பின் எனது தகப்பன் மற்றும் தங்கை இருவரும் பாலைப்பெருமாள் கட்டிற்கு வந்துவிட்டார்கள். 1990ம் ஆண்டில் ஆமிப்படை எங்கட இடத்திற்கு வந்த போது தட்சனாமடுவில் இடம்பெயர்ந்து சென்றோம்.

அங்கு பிலேன், ரெலி என்பவற்றால் குண்டுகள் போட்டார்கள். நாங்கள் பொருட்கள் சொத்துக்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடினோம். தட்சனாமடுவில் இருந்து மீண்டும் மடுவுக்குவந்தோம். 1992ம் ஆண்டு மகள் ஒருவர் எனக்கு மடுவில் பிறந்தார். 1994ம் ஆண்டுஇங்கு வந்தோம். 2000ம் ஆண்டுமீண்டும் சரியான பிரச்சினை. அவ்வேளையில் கல்மடுவில் மகள் பிறந்தார். மீண்டும் 2002ம் ஆண்டு நிம்மதியாக இருந்தோம். 2007ம் ஆண்டு கடும்பிரச்சினை காரணமாக இரனை இலுப்பைக்குளம் சென்றோம். இவ்வாறு ஒவ்வொரு இடம் இடமாக மாறினோம்.

பாஸ் நடைமுறைகளின் காரணமாக எனது கணவர் மன்னாருக்கு வந்து விட்டார். மீண்டும் கடும் யுத்தம் காரணமாக நானும் எனது பிள்ளைகளும் அங்குஅடைபட்டு விட்டோம். ஓர் பொருட்கள் கூட எங்களிடம் இல்லை. இடம்பெயர்ந்து சென்ற பாதையில் மிகவும் கஸ்டப்பட்டோம்.

உணவிற்கெல்லாம் ஆட்களுடன் கட்டின துணயின்றி சொல்ல முடியாத துன்பத்தில் வந்துசேர்ந்தோம். இறுதியாக இருட்டு மடுவில் இருந்து இரவிரவாக பயந்து பயந்து 3 நாட்கள் சென்ற பின்பு வவுனியாவிற்கு வந்தோம். அதில் சண்டைகள் இடம்பெற்றன. எனது கணவர் இன்றி தப்பித்து விட்டோம். ஆனால் சாப்பாடு இல்லை. உண்ணுவதற்கு குடிப்பதற்குகூட ஒன்றுமில்லை. எங்களின் துன்பங்களினை சொல்ல முடியவில்லை.

வவுனியாவில் மத்திய மகா வித்தியாலத்தில் அமதிபுரம் முகாமில் இருந்தோம். இறுதியில் 2009ம் ஆண்டு 10ம் மாதம் கிராம உத்தியோகத்தர் மூலம் கோயில்களில் வந்து இருந்தோம். இருப்பதற்கு ஒரு வீடும் இல்லை. நாங்கள் வீடுகள் அமைத்து இருந்தோம். 2009 மார்கழி மாதம் எனது கணவர் வயலுக்கு தண்ணீர் காட்டச் சென்ற போது இறந்துவிட்டார். நெஞ்சு வலியில் வயலில் விழுந்த கிடந்ததும் அப்பொழுது ஒருபையன் வந்து சொன்னான். உடனே மன்னார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற பின்பு வவுனியா கொண்டு போனார்கள். அப்போது அநுராதபுரம் கொண்டு செல்லும் போதுஇறந்து விட்டார். முதலில் கணவன் இறந்ததால கூலி வேலை செய்து எனது குடும்பத்தை பார்த்து வந்தேன். இப்போதுஎனக்கு இருதய நோய் உண்டு. இதனால் பாரிய வேலை ஒன்றும் செய்து கொள்ள முடியாது. தற்போது கோழி வளர்ப்பு கூலி வேலை வயல்காணியை குத்தகைக்கு கொடுத்து சிறியளவில் வருமானம் கிடைத்தது.

அது பிள்ளைகளின் கல்விச் செலவிற்கும் உணவிற்கும் போதுமானதாக இருக்கவில்லை. எனதுமகன் தற்போது தரம் 11ல் படிக்கிறான். இனிமேல் நான் கஸ்டப்பட்டு படிப்பிக்க வேண்டிய உள்ளது. 4 பிள்ளைகள் நன்னீர் மீன்பிடி கூலி வேலை இதனால் அவளின் குடும்பம் மிகவும் கஸ்ரமான நிலை.

இனிமேல் இப்படியான சண்டைகள் எதுவும் இல்லாமல் எல்லாம் பிள்ளைகளுக்கான சன்மானங்கள் கிடைக்க பெற வேண்டும் இனிமேல் கடனில்லாமல் நலமான அபிவிருத்தியுடன் எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும். என்னைப் போன்ற கிராமப்புறங்களில் இருக்கும் மக்களின் பிரச்சினைகள் முற்றாக தீர்க்கப்படல் வேண்டும்.

நன்றி







A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License