My life

The story from a mother who lost her family members in the conflict.


මගේ ජීවිතය

ගැටුමේ දී පවුලේ සාමාජිකයන් අහිමි වූ මවකගේ කතාව.


என்னுடைய வாழ்க்கை

கடந்த கால குழப்பங்களில் குடும்ப உறவினர்களை இழந்த தாயின் கதை.CMP/MN/MW/NEK/01

My life History

My name is A.Sebamalai Muthu. I live in Nedungkandal. I was born in Nedungkandal on 24th March, 1994. My father was a tractor driver and also did agriculture. My mother did domestic work. She did not study. I had another sister an elder brother. We put up a cottage close to a brown colored house. Those days we lived happily.

In 1957, ‘Kaddukarai’ Tank was broken and a heavy floods affected our area and our house too was completely affected. We all displaced to Mannar and stayed with our father.

A few months after this incident, we returned and put up a temporary Verandah and stayed temporarily. As I had a considerable amount of paddy lands, I gave most of them for lease and did cultivation in a few fields.

I studied up to Grade 5. My elder brother studied only Grade 2. My elder sister did not study at all and looks after us since I was one year old. In 1946, my father fell down from a tree and was unconscious and was in Jaffna Hospital for two years. My father firstly got married and lived in Ilavalai. His daughter from that marriage looked after him. Our mother left us in 1948 and remarried. I had all these experiences in my small age. My father, sister and brother all suffered a lot in life. Then in 1959, my father remarried. She also was from Nedungkandal. After that I got married in 1959 and lived separately. But my younger brother looked after my elder sister. I got a female child in 1961. Again in 1964, our house blew down in the gale in 1964. We were given rice, flour and sugar as relief ration. We stayed in another house and put up a small hut and lived in it. After that I got six children. In 1973, my husband died of snake bite.

In those days, there were no hospitals in this area. One of my daughter born in 1969, is dumb. I managed my life with the three acres of paddy land my father gave me. I went to Mannar and got dresses and things for my children from a Child Protection Officer. After some time, I could not go to any work as I had chest pain. My family too was affected by this.

My elder daughter took care of the house and family and therefore she did not study. My second daughter lived with my uncle and joined the movement in 1987 and she died in Pandivirichchan. Even her body was not given to us. They kept her body in a library and buried it in Thadchanamadu. I went there after four months and saw the grave.

In 1986, while my younger sister’s children were working in the field cultivating groundnut, the army caught three of them and shot them dead. My sister’s son having two children was taken and was shot dead in front of our eyes. Later, they arrested ladies and killed 59 of them. Our lorry and all our properties were burnt. The army killed many of us.
As this situation continued problematic, people were afraid of the army. I, my four children and elder daughter’s husband went to India via Pesalai in 1990.

We were 13 people in the ship. We went to Viruthungar district and stayed at ‘Yesar’ Hall and then went to Aripoorpattai and finally stayed at Rayapaalayam. As the war in Sri Lanka ceased in 2002, one of my daughters, a grandchild and I returned to Sri Lanka in 2003 by ship.

My daughter has mental disorder and she could not stay there and we brought her here. Then again in 2007, war commenced and I with the Church people prayed god and moved to Madu, Mulangkaavil, Kilinochchi, Tharmapuram, Suthanthirapuram and stayed there with difficulties. We had nothing to eat or wear. There was no water to drink. I missed my daughter at Suthanthirapuram. On 20th February, 2009, army brought us to Poonthoddam Camp. My daughter was injured in her leg and went up to Mullivaikkaal. She returned home in October, 2009. We stayed in a temporary house and unexpectedly met my daughter.

I have got an Indian Housing Scheme. I tried my best to get that. My granddaughter is a nun and as she has no mother, she stays with me.

All other children and grandchildren are in India. One of my daughter’s husband lost his eye sight completely in a cylinder blast when he went out to find a bridegroom to his children.

I have experienced untold hardships from my birth till today and I am unable to be in restful. The tears also have dried in my eyes. I pray god that the calamites I faced in my life should not occur to any other person.

When my husband died, my last child was one and a half years old and the other child was ten or eleven years. Now, see my situation till this stage.

My last child who is employed at ‘Sofa’ Foundation, helps lot of people. I am happy about that. She helped me to build my house given in the housing scheme.

Our family did not study however, my children and grandchildren are studying well. One my grandson is studying Medicine. Another grandson has got through scholarship exam. Our community should live in peace. Our situation should not come to any other person.


CMP|MN|MW|NEK/01

නම : අ. සෙබමාලෙයි මුත්තු
ලිපිනය : නෙඩුංකංඩල් අඩම්පල් මන්නාරම

මම 1944 දී 3වන මස 24 වන දින නෙඩුංකන්ඩල් ගමේ උපත ලැබුවා. මගේ තාත්තා ටැක්ටර් පදවන අතර ගොවිතැන් කළා. අම්මා ගෙදර වැඩ කරගෙන ඉන්නවා. අම්මා ඉගෙනගත්තේ නැහැ. මට අක්කෙක් සහ අයියා කෙනෙක් ඉන්නවා.අපි මැටි බිත්ති තියෙන ගෙදරක පැල්පතක ජිවත්වුණා. ඒ කාලයේ සතුටින් හිටියා.
1957දි කට්ටුක්කරෙයි කුලම කැඩිලා විශාල ගංවතුරෙන් අනතුර වු නිසා අපේ ගෙදර සම්පූර්ණයෙන්ම විනාශ වුණා. අපි හැමෝමලා අවතැන් වෙලා මන්නාරමට ගියා. තාත්තා අපිව එහෙ තියාගෙන හිටියා.

එයට මාස කිහිපයපට පසු නැවතත් ඇවිත් තාවකාලික තැනක් හදාගෙන එහෙ තාවකාලිකව ජිවත් වුණා. අප ළග ටිකක් වැඩියෙන් කුඹුරු ඉඩම් තිබුණු නිසා අදේට දීලා සමහරක් ඒවායින් පමණක් ගොවිතැන් කළා. මම 5ස් වෙනි ශ්‍රේණිය දක්වා ඉගෙන ගත්තා. මගේ අයියා 2වන ශ්‍රේණිය දක්වා පමණයි ඉගෙන ගත්තේ. මගේ අක්කා ඉගෙන ගත්තේම නැහැ. වයස අවුරුදු එකේ ඉදලාම අපිව බලා ගත්තා.

තාත්තා 1946 දි ගහෙන් වැටිලා සිහිය නැතුව ඉදලා යාපනේ රෝහලක අවුරුදු 02ක් හිටියා. මගේ තාත්තා පළමු විවාහය කළේ යාපනයේදි. තරුණ කාලේ ඉදලාම එයාගේ පළමු දුව එහෙදි එයාව බලාගත්තා.

අපේ අම්මා 1948දී අපව අත්හැරලා ගිහින් වෙන කසාදයක් කරගත්තා. පුංචි කාලේම මම මේ හැමදේම අත් දැක්කා. තාත්තා,අයියා,අක්කාඅපි කට්ටිය තමයි ගොඩාක් දුක්විදලා හැදුනේ. මම 1959 දි විවාහ වුනා. එයාගේ නෙඩුංකනඩල් තමයි. ඊට පසු වෙනම ගිහින් ජිවත් වුනා.නුමුත් අපිව තාත්තා ඇවිල්ලා බලනවා.

මට 1961දි ගැහැණු දරුවෙක් ඉපදුණා. 1964දි නැවතත් විශාල කුණාටුවක් ඇවිත් සුළිසුළං වලින් අපේ ගෙවල් කැඩිලා ගියා.

ආයතනවලින් අපට හාල් පිටි, සිනි වැනි දේවල් ලබා දුන්නා. එක ගෙදර ගිහිං ඉදලා අපි පොඩි පැල්පතක් හදාගෙන එහෙ ගිහිං ජිවත් වුණා.


ඊට පසු මට ළමයි 6දෙනෙක් ලැබුණා. මගේ සැමියා 1973 දී සර්පයෙක් කළා මිය ගියා. ඒ කාලේ මෙහෙ රෝහල් තිබුණේ නැහැ. 1969දි ඉපදුණු පුතෙකුට කථා නරන්න බැහැ. ඔහු ගොළුයි.

මට මගේ තාත්තා දුන්න අක්කර තුනක ඉඩමක් තියෙනවා. ඒක තියාගෙන තමයි මගේ ජිවිකාව ගෙවෙන්නේ. ඒ සමග මන්නාරමට ගිහින් ළමා ආරක්ෂක පියතුමෙක් ළගට එහෙදි ළමයින්ට බඩු ටිකක් ලැබුණා.

මට ඒ කාලයේ ඉදලම වැඩවලට කොහේවත් යන්න බැහැ.පපුවේ කැක්කුමක් තිබුණා. මගේ තත්වයම මගේ පවුලටත් සිද්ද වුනා. වැඩිමහල් දුව ගෙදර පවුල බලාගත්තා. ඒ නිසා ඇය ඉගෙනගත්තේ නැහැ.

මගේ දෙවැනි දුව මගේ ඇවැස්ස මාමා ළග ඉදලා 1987දි කොටි සංවිධානයට සම්බන්ධ වු නිසා ප්‍රහාරයකින් මියගියා. මළ සිරුරවත් ලබාදුන්නේ නැහැ. පුස්තකාලයක තබාගෙන ඉදලා කච්චනමඩුවේ දාලා තිබුණා. මාස 4කට පසු මම ගිහිං වළ විතරයි බලලා ආවේ.

1986දි මගේ නංගිගේ දරුවන් වෙලේ සෙල්ලම් කරගෙන හිටියා. තුන්‍ දෙනෙක්ව අල්ලගෙන ගිහිං හමුදාවෙන් පුච්‍චලා දැම්මා. මගේ නංගිගේ දරුවාගේ මල්ලිව දරුවන් දෙදෙනෙක් ඉන්න කොට පැහැරගෙන ගිහින් ඇස් මනා පිටම පුච්චලා මරලා දැම්මා. ඒ වේලාවේම ගැහැණු ළමයි 59දෙනෙක්ව දුෂණය කරලා වෙඩි තියලා මරලා දැම්මා.

ගෙවල්, දොරවල්, ලොරි අපේ දේපල කිසිදෙයක් ගැන අපි දන්නේ නෑ. හමුදාවෙන් අපරාධ කරලා අපිව විනාශ කරලා දැම්මා. දිගටම ප්‍රශ්න තිබුණු නිසා අපි හමුදාවට බයයි. මමත් මගේ දරුවන් 4දෙනාත‍් වැඩිමහල් දරුවාගේ සැමියාත් දරුවන් සමග 1990දි පෙසාලෙයි හරහා ඉන්දියාවට ගියා. ඉන්දියාවේ අවුරුදු 13නක් ජිවත් වුනා. එහි විරුසනගර් දිස්ත්‍රික්කය, ලෙසර් මණ්ඩප කදවුර, අරිප්පුක්කෝට්ටේ, සෙබකර් අවසානයේදී රාජමානෙයි යන ස්ථානවල හිටියා.

2002දි ශ්‍රි ලංකාවේ යුද්ධය ඉවරයි කියලා 2003දි මමයි පුතෙකුයි මුනුබුරන් ටිකයි නැව් හරහා පේසාලෙයි ඇවිත් මෙහෙට ආවා. මගේ පුතාට අසනීපයක් තිබුන නිසා එහෙ තියා ගන්න බැරිව අපි මෙහෙ එක්ක ආවා.
නැවතත් 2007දි ප්‍රශ්න පටන් ගත්ත නිසා අපි දේවස්ථාන අය එක්ක යාච්ඥා කර කර මඩු මුලංකාවිල් හරහා කිලිනොච්චිය, දර්ම පූරම, සුදන්දිර පුරම, ඉරනෙයි මඩු කියලා හැමතැන්වලම පුදුම දුක් වේදනා වින්දේ. කන්න කෑම නැහැ, අදින්න ඇදුම් නැහැ, බොන්න වතුර නැහැ.

මම මගේ දුවව සුදන්දිරම් පුරමේ දී අහිමි කර ගත්තා. මමයි මිණිබිරියි 2009යේ පෙබරවාරි 12වන දින හමුදාවේ කුලී වැඩ කියලා අපිව පූන්දෝට්ටම් කදවුරේ ගිහිං දැම්මා. මගේ පුතාගේ කකුල තුවාල වෙලා මුල්ලිවායික්කාල් දක්වා ගිහිං දැම්මා.

2009දි නැවතත් මගේ පුතා ගමට ආවා. ඔහු එහෙ තාවකාලික ගෙයක් හාදාගෙන යිටියා. ඉන්පසුව අපි මෙහෙ ඇවිත් බලාපොරොත්තු නොවු විදියට පුතාව හමුවුණා.

මට ඉන්දියානු නිවාස ව්‍යාපෘතියක් ලැබී තිබෙනවා. එක ලබාගැනීමට පුදුම දුකක් වින්දේ. මගේ මණිබිරිය චර්ච් එකේ සිස්ටර් කෙනෙක්. එයාට අම්මා නැහැ. මා එක්ක තමයි ඉන්න
අනිත් ළමයින් සහ මුණුබුරන් මිණිබිරියන් ඉන්දියාවේ ඉන්නවා. ඒකේ එක දරු‍වෙකුගේ සැමියෙක් ළමුන්ට බැලුම් බෝල ගෙන්න ගිය වේලාවේ සිලින්ඩරයක් පිපිරිලා ඇස් දෙකම පෙන් නැතිව ගියා.
මගේ ජිවිතේ කොච්චරදෝ දුක් වේදනාවන් මම ඉපදුණු දින සිට අද දක්වා සැනසිල්ලක් නැහැ. ලොකු සුසුමක් හෙලන්න විදියක් නැහැ. අඩලා අඩලා අඩන්න කදුළු නැහැ.දැන් අඩන්න. ජිවිතේ මට වෙච්ච වේදනාවන්, කම්කටුළු වෙන කිසිකෙනෙකුට වෙන්න එපා කියලයි මම දෙවියන්ගේ ප්‍රර්ථනා කරන්නේ.

මගේ සැමියා මිය යනවිට මගේ දරුවාට වයස අවුරුදු 1 ½ යි. අනිත් ළමයි වයස 11 දක්වා හිටියා. අද මේ තත්වය ගැන හිතලා බලන්න. මගේ අන්තිම 7වෙනි දුව සෝබා ආයතනයක වැඩ කරනවා. ගොඩාක් අයට උදව් කරනවා. මට ඒ ගැන සතුටුයි. මගේ ව්‍යාපෘතියෙන් ලැබුණු ගේ සාදාගන්න උදව් කරන්නේ එයා තමයි.
අපේ පවුලේ අය ඉගෙන ගත්තේ නැතිවුණාට මගේ දරුවන් මුණුබුරන් මිණිබිරියන් හොදින් ඉගෙන ගන්නවා. එක මුණුබුරෙක් වෛද්‍යවරයෙකුට ඉගෙන ගන්නාවා. තව මුණුබුරෙක් ශිෂ්‍යත්වය සමත්වෙලා ඉන්නවා.

අපේ දරුවෝ සැනසිල්ලේන් ඉන්න ඕනේ. අපට වෙච්ච කාටවත් නම් වෙන්න හොද නැහැ.


CMP/MN/MW/NEK/01

என்னுடைய வாழ்க்கை வரலாறு

எனது பெயர் அ செபமாலை முத்து. நான் நெடுங்கண்டலில் வசிக்கின்றேன். நான் 1944ம் ஆண்டு 3ம் மாதம் 24ம் திகதி நெடுங்கண்டலில் பிறந்தேன். எனது ஐயா டெக்டர் ஓடியதுடன் விவசாயமும் செய்வார். அம்மா வீட்டு வேலை செய்வார். அம்மா படிக்கவே இல்லை. எனக்கு ஒரு அக்காவும் ஒரு அண்ணாவும் இருந்தனர். நாங்கள் மண்களர் உள்ள வீட்டில் ஒரு குடிசை அமைத்து இருந்தோம். அந்த காலத்தில் சந்தோசமாக வாழ்ந்தோம்.

1957ம் ஆண்டு கட்டுக்கரை குளம் உடைத்து பாரிய வௌ்ள அனர்த்தம் இடம்பெற்றது. இதன் போதுஎங்களின் வீடு முற்றாக சேதம் அடைந்தது. நாங்கள் எல்லாம் இடம்பெயர்ந்து மன்னாருக்கு ஓடி எங்களை அப்பா கொண்டு போய் அங்கு வைத்திருந்தார்.

அதற்கு ஒரு சில மாதங்களில் மீண்டும் வந்துஒரு சாய்ப்புபாதிரி போட்டுதான் தற்காலிகமாக இருந்தோம். என்னிடம் கொஞ்சம் அதிகமான வயல்காணி காணப்பட்டதனால் எல்லாம் குத்தகைகளுக்கு கொடுத்து விட்டுசில தரைகளில் மாத்திரம் விவசாயம் செய்தோம்.

பின் ஐந்தாம் ஆண்டுமட்டும் படித்தேன். எனது அண்ணா 2ம் ஆண்டுமட்டும் படித்தான். எனதுஅக்கா படிக்கவே இல்லை. ஒரு வயதில் இருந்து எங்களை பார்த்து வருகிறார். அப்பா 1946ம் ஆண்டு மரத்தில் இருந்து விழுந்து சுயநினைவின்றி இருந்தேன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் 2 வருடம் இருந்தார். எனது அப்பா முதல் திருமணம் செய்து யாழ்ப்பாணம் இளவாழையில் இருப்பு. அவவின் முதல்தர மகள் அங்குபார்த்தார். எங்களுடைய அம்மா 1948ம் ஆண்டு எங்களை விட்டுப் போய் வேறு திருமணம் செய்துவிட்டார். சிறு வயதில் இவை எல்லாவற்றையும் நான் அனுபவித்தேன். அப்பா அக்கா அண்ணா ஆட்கள் மிகவும் கஸ்ப்பட்டு வளர்ந்தோம். பின் 1959ம் ஆண்டு திருமணம் செய்தார். அவவின் ஊரும் நெடுங்கண்டல்தான். அதற்கு பிறகு வேறு குடும்பமாக போய்விட்டேன்.

ஆனால் தம்பி ஆக்களை பார்ப்பாள். எனக்கு1961ம் ஆண்டு ஒர்பெண் குழந்தை கிடைத்தது. 1964ம் ஆண்டு மீண்டும் பாரிய ஒரு ஆவேச காற்றுவந்து வீடு எல்லாம் உடைந்தது. வௌ்ள நிவாரணமாக அரிசி,மா சீனி தந்தாங்க. ஒருவீட்டில போய் இருந்திட்டு சின்னனா ஒரு கொட்டில் போட்டு இருந்தம். அதற்குப் பிறகு எனக்கு ஆறு பிள்ளைகள் எனது புருசன் 1973ம் ஆண்டு பாம்பு கடித்து இறந்து விட்டார்.

அந்த காலத்தில் வைத்தியசாலை ஒன்றும் இங்கு இல்லை. 1969ம் ஆண்டு பிறந்த மகள் ஒருவர் வாய் பேசமாட்டார். எனக்கு அப்பா தந்த 3 ஏக்கர் காணியை வச்சு பின் எங்கட சீவியம் போச்சுது. பிறகு மன்னாருக்கு போய் சிறுவர் பாதுகாப்பு பராமரிப்பு நபர் ஒருவரிடம் உடுப்புக்கள் பிள்ளைகளுக்கு சாமான்கள் என்றுவாங்கினேன். பின் அப்படியே வேலைகளுக்கு போய் கொள்ள முடியாம ஒரே நெஞ்சு வருத்தம் தலை காலெல்லாம் இருந்தும். என் நிலையே என் குடும்பத்துக்கும் ஏற்பட்டது.

மூத்த மகள் வீட்டையும் குடும்பத்தையும் கவனித்துவந்தார். இதனால் அவள் படிக்கவில்லை. எனது இரண்டாவது மகள் என் தாய்மாமாவுடன் இருந்து1987இல் இயக்கத்தில் இருந்து பன்றிவிரிச்சானில் இறந்து விட்டார். பொடி கூட தரவில்லை.

ஒருநூல் நிலையத்தில் வச்சிருந்து தட்சினாமடுவில தாட்டிருந்தாங்க. நாலு மாதத்திற்கு பிறகு போய் வெறுங்கிடங்கை பார்த்தேன். 1986ம் ஆண்டு எனது தங்கச்சியின் பிள்ளைகள் எல்லாம் வயலில் கடலை செய்து கொண்டுநின்றாங்க. வேலை செய்து கொண்டுநின்றவர்களில் மூன்று பேரை பிடிச்சுக் கொண்டு போய் ஆமி சுட்டு கொன்றார்கள். எனது தங்கச்சியின் பிள்ளையின் தம்பியை எல்லாம் இரண்டுபிள்ளைகள் இருக்க பறித்துகொண்டுபோய் கண் முன்னுக்க சுட்டுக் கொன்றார்கள்.

மறுபடியும் பெண்களை தொகுத்து 59 பேரை சுட்டுக் கொன்றனர். வீடுகள் லொலி எங்கட சொத்துக்கள் எல்லாம் எரியுது. ஆமி ஆக்களிடம் சென்று எங்களை கொன்றுஅழித்தான்.

தொடர்ச்சியான பிரச்சினை இருப்பதனால் ஆமிக்கு பயம். நானும் என்ற 4 பிள்ளைகளும் மூத்த பிள்ளையின் கணவன் பிள்ளைகளுடன் 1990ம் ஆண்டு பேசாலை ஊடாக இந்தியா சென்றுவிட்டோம்.

இக்கப்பலில் 13 பேர் இருந்தோம். அங்குவிருதுநகர் மாவட்டம் யேசர் மண்டப மூலம் அரிப்பூர் பாட்டை செபகர் கடைசியாக இராயபாளையத்தில் இருந்தோம். 2002ம் ஆண்டு இலங்கையில் சண்டை முடிஞ்சிற்று என்று 2003ம் ஆண்டு நானும் ஒரு மகளும் பேரம் பிள்ளையும் கப்பல் மூலம் இலங்கைக்கு வந்தோம்.

எனது மகளுக்கு புத்தி சுகவீன குறைபாடு வைத்திருக்க முடியாது. இங்கு கொண்டு வந்தோம். மீண்டும் 2007ம் ஆண்டு சண்டை தொடங்க நான் சேச் ஆக்களுடன் ஜெபம் பண்ணி மடு முழங்காவில் கிளிநொச்சி, தர்மபுரம்,சுதந்திரபுரம் இது மட்டும் அன்றுஇல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. நான் எனது மகளை சுதந்திரபுரத்தில் தவறவிட்டு விட்டேன். 2009 மாசி மாதம் 20ம் திகதி ஆமி கூடி வந்துஎங்களை பூந்தோட்ட முகாமிற்குள் விட்டனர். எனது மகள் காலில் காயப்பட்டு இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்தார். 2009ம் ஆண்டு ஐப்பசி மாதம் எனதுமகள் ஊருக்கு வந்துவிட்டாள். அங்கு தற்காலிக வீடு என்று இருந்த அதன் படியாக நாங்கள் இங்கு எதிர்பாராத விதமாக மகளை சந்தித்தேன்.

எனக்குஇந்திய வீட்டுத் திட்டம் ஒன்று கிடைத்துள்ளது. அதை எடுப்பதற்கு படாத பாடுபட்டேன். எனது பேத்தி இச்சபையில் சிஸ்ரராக இருக்கின்றார். தாய் இல்லாத நிலையில் என்னுடன் இருக்கின்றார்.

மற்றைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இந்தியால் இருக்கிறார்கள். அதில் ஒரு மகளின் கணவன் பிள்ளைகளுக்கு ஆள் பார்க்க சென்ற போது சிலிண்டர் வெடித்து ஒரு கண்பார்வையும் இழந்திட்டார்.

என் வாழ்க்கையில் எத்தனை சோகங்கள் பிறந்ததில் இருந்து இன்று வரை ஒரு நிம்மதி பெருமூச்சு விட முடியவில்லை. அழுது அழுது கண்ணீர் கூட இல்லை அழுவதற்கு. எனக்குநடந்த வாழ்க்கை சோகம் யாருக்கும் நடக்கக் கூடாது என்று நான் கடவுளை வேண்டுகிறேன்.

எனது கணவன் இறக்கும் போது கடைசி பிள்ளைக்கு ஒன்றரை வயது. மற்றை பிள்ளைகளுக்கு பத்து பதினொன்று. இப்ப இந்த நிலை வரைக்கும் என்ர நிலையை பாருங்கள்.

எனது கடைசி ஏழாவது மகள் சோபா நிறுவனத்தில் வேலை செய்கிறாள். நிறைய ஆக்களுக்கு உதவி செய்கின்றர். அதில் எனக்கு சந்தோசம் என்றாலும் திட்ட வீடு கட்டுவதற்குஉதவி செய்தாள்.

எங்களுடைய குடும்பம் படிக்கவில்லை என்றாலும் எனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள். ஒருபேரன் வைத்தியருக்கு படிக்கிறான். இன்னொரு பேரன் புலமைப்பரீட்சை சித்தி பெற்றுள்ளான். எங்கட சனங்கள் நிம்மதியா இருக்க வேண்டும். எங்கட நில யாருக்கும் வரக்கூடாது.


A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License