We started to live with fear

A woman tells about how the happy life has become a sad due to the ethnic disharmony.


අපි බිය සමග ජීවත් වන ලෙස ආරම්භ

ජනවාර්ගික අසහනය නිසා ප්රීතිමත් ජීවිතයක් කණගාටුවට පත් වූ ආකාරය ගැන කාන්තාවක් පවසනවා.


பயந்து வாழத் தொடங்கினோம்

சந்தோஷமான வாழ்க்கை இனக்குழப்பதால் சோகமாக மாறியது பற்றி பெண்ணொருவர் கூறுகின்றார்.



CMP/AMP/SAM/MTY/03
S.Rajeswary
Sammanthurai
2016.03.23
Dear friend
I am well, I am the eldest in my family. My sister, father, mother lived happily. I played building houses, playing ball, climbing tree with my friends. It was during the 87, 88 period, when we came from school, we saw what’s on show in the theatre and asked money from mother, she never gave the money.

My friend and I sneaked into the cinema and saw the film, the theatre owner used to chases us. When he went, we came back to see it. It was joyful times. What I remember most was, It was pongal the next day, I left my sister at home and wanted to go to town, She said that she would come also, I left her and ran to the town. She followed me, she was hit by a bicycle which was coming in front. Blood was coming from her fore head I was frightened. I surely thought that my father would beat me but my father took my sister to the hospital and there they stitched her up, my father beat the cyclist. This was unforgettable to me.

We were affected by the war in 1990, I was living in Pethalai a small village in Valaichenai. There was a police post a 15km from my house. I heard the sound of gunshots when the LTTE attacked the camp. We lived in fear,gunshots, explosions, bombs, we heard it and feared for our lives. After the gunshots, we heard the vehicles of the army going here and there.

Next morning the army came and rounded us up, they beat the males and showed them to the masked man. They took my father, my mother and sister and I cried and followed them. This used to be a regular happening. One day we heard that Muslim people were cutting people the villages and my sister and myself ran away with the people. My parents came searching for us when they found us they breathed a sigh of relief after that we took refuge in a big bungalow near the river.

We slept in a bunger. When we went outside the planes bombed us we ran to the bungers even when we cooked rice we couldn’t eat it we use to put it all in a bag and ran.
One day at noon the army came the plane circled above we ran from the area through the jungle when we were running the army shelled us shot us bombed us from the plane some died my mother escaped being shot when somebody told her to lie down quickly.
One day at night we crossed the river with my aunty and family the soldiers from the harbor. We saw the flashes of gun in this way we came to Naasivan theevu when we were there we heard the Muslims were coming to cut us we ran again to Vataval we ran through the jungle the thorns but we escaped and came to that place it was a beautiful place with mountains and lakes it was called Vaganeri my aunty was there. There were lot of cows my mother cooked fish from the lake we stayed there for three days. One night when we were going to eat people shouted the Muslims were coming and the army was coming we again began to run to Vattavanai. My uncle was there in Vattavanai we took refuge there we stayed there for a week again there were problems and we finally thought we couldn’t run anymore we wanted to stay in our place even if we done so we came to our home in a boat but there were nobody in Petthalai all went to Vallaichenai Hindu college as refugees. We also went there and slept in the Pillayar Kovil hall. Even there the army came and ordered us to stay in line and showed us to the masked men we later went to our homes. We didn’t have any peace there too. The Indian army came and molested the women I saw many things. The Indian army rounded us in Pethalai Vibulanadha school they put us in the burning sun we shouted in hunger. The Indian
army gave us chappathi and sugar we couldn’t eat that it smelled.

In 1991 my mother went to Qwait before that my father use to drink and beat my mother. My sister, mother and I use to hind in the house. At this time my mother went abroad my sister and I went to school. My father went fishing to the sea. I use to cook after coming from school if my father didn’t drink he use to cook I studied well at school I use to come 1st or 2nd in the class. There was no one like mother. Event with the all the difficulties I never left studying.

I attained puberty my mother did the ceremony well and she went back abroad. Our father brought us up I loved and respected my father. We didn’t have any bad names my father looked after us very well I was so proud of my father. My relatives also looked after us very well. My uncle and aunty were shot by LTTE it was a big lose for me. She use to look after me very well. One day evening at 6 we heard that tigers took a policemen in the motor bicycle that night father went fishing my sister and I slept near our aunty the dogs barked we were so afraid next day on the road near our house there was a body all the people went to see it I also went. A body was there with cut wounds I screamed and went to my aunt’s place the police came inquired my sister and me I told them that I didn’t know anything. My aunty told the police that my mother was abroad and they were staying in aunt’s place.

My father went to work one night, we stayed at our aunty’s place, we heard the sound of shell falling at night. My uncle told me in the morning that a shell had fallen near our house, it fell on our well. If father was there, he would have died.
I turned 16 and my parents were looking for a bridegroom for me. They found one in the village, he was a teetotaler. My mother came from abroad and saw the him, she liked him. She told that I should be happy, she suffered a lot by marrying a drunkard. My grandmother only looked for this match, but my father’s sister didn’t like it). My father didn’t like to marry me off to the distance but my mother didn’t listen to anybody and registered me with him in Sammanthurai. I stayed in my brother’s house did my OL. I married after finishing my exam. My husband looked after me well, but my in laws found fault with everything, I couldn’t tell anybody, I kept silent. I got pregnant. My husband’s sister lived in Santhaivelli. She told him to marry her daughter, but he refused, She was angry with me for that.

One day she came home, we lived in combined family and all the in - laws were talking about me , I was crying . I didn’t want to eat. I was 3 months pregnant, I didn’t have peace. My husband was good, he looked after me well but on the 7th month I came to my father’s place. My eldest was born in Valaichenai. After 30 days my husband brought me home. When my son was 3 months old, There was a fight and my father in law told me get out of the house. I went to my brother’s place . I told my husband that I was going to my mother. He didn’t leave me to go there. Later they gave 5 perches land and I lived in a cottage. The EPDP started a pre school and I taught in that school. After one year, the school was closed. In 2000 the W.D.F. started to work in Udayapuram. I was the secretary. I worked in their preschool without any salary.

My house was built of mud, when the rain came it fell apart. His folks didn’t help a bit. We came stayed in a Muslim person’s house in Korakovil, I was pregnant with my second child, but because of my sufferings, I aborted. I married off my husband’s sisters . I looked after them, but they didn’t care for me.

I got my courage after attending the W.D.F training program. My father’s sister worked abroad. She bought 20 perches land for me and my uncle’s daughter. She gave me 10 perches. I laid foundation for house in the land. We moved from house to house. I borrowed money for interest and built a room. Somehow I roofed the house and came to live there. My father gave me 25000 to build the other room, with my aunty’s help I built two rooms and roofed the house brought electricity and water to the house. In 2004 I gave birth to twins. I was happy but there was hardship, at that time, the W.D.F paid a salary for my pre school work. I completed the house in 2011. but I didn’t have the money to put the roof. I pawned my Thaali and had that done. I concreted the house and came to live there. My last son was born in 2011.

When my son was 11/2 years old , I was diagnosed with thyroxin deficiency , I was operated and the report came negative. The doctor told me to get a surgery, but because of the thyroxin, it was not possible to operate. They gave me pills for a month to reduce the thyroxin. After that the second operation, the report was normal. The doctor told me to go to the government hospital. When I went there , the doctor told me that I was lucky and told me to come to the Batticaloa hospital. When I went there, the doctor told me to get iodine treatment. He told me that it would cost me 150000/=. I didn’t have any money, when I told my aunty she sent me 130000/= , I pawned my thaali and took the rest of the money but I didn’t go to Colombo. When I went to the clinic in Batticaloa hospital the nurse scolded me for not realizing the weight of the problem. I went to Colombo for treatment. It cost me almost 400000/= After the treatment I came and stayed in a room.

One day my elder son was asleep, my other son had wheezing and he was crying for milk. I couldn’t go out of the room for 15 days. I couldn’t bear to see him cry, I opened the window and called my neighbor to make the milk and give for my son. I cried a lot that day. I prayed to god not let this situation shouldn’t happen to anybody. I getting well after a while. I went to the Clinic at Batticaloa hospital. I completed my house in 2015.
My daughter attained puberty, I invited her sister, she came to pour the first water, but the she didn’t come for the second time, my relatives were at Valaichenai, and they didn’t come at the last minute. I cried a lot and poured water for my daughter. I couldn’t forget that day.

I was concerned that not one of my relatives were close by. Now I am a field officer for the W.D.F, I live well.

I have to mention my husband here. He is a good man. He struggled hard since young . He looked after his family. He married me and looked after me well. After my operation he looked after me. He didn’t have any bad habits. Even my parents wouldn’t have treated me like that. He did everything, he was very supportive. He did everything for his sister and married them off but they forgot him. Whatever the good you do, nothing good will come to you. He was like a mother to his sisters and brothers, but they completely forgot him.

If there is a brother like him, I would have worshipped him. Whatever it is, we live happily with our family.






CMP/AMP/SAM/MTY/03-1

S. නාගේෂ්වරි,
සම්මන්තුරේ.
2016.03.23

ආදරණීය මිතුරා වෙත,

මම සනීපෙන් ඉන්නවා. මම පවුලේ වැඩිමහල් දරුවා. මගේ පවුලේ අම්මා, තාත්තා, නංගී ඉතා මත් සතුටින් ජීවත් වුණා, එක්තරා කාලයක. මගේ යහළුවන් සමග ගෙවල් හදලා සෙල්ලම් කිරීමත්, යක් පන්දු සෙල්ලම් කිරීමත්, ගස්වලට නැගලා සෙල්ලම් කිරීමත්, තව මත් මගේ හිතේ මැවි මැවී පෙනෙනවා. ඒ කාලයේ මම හිතන්නෙ 87, 88 වර්ෂවල වෙන්න පුළුවනි. ඉස්කෝලෙ ගිහිල්ලා එන විට සිනමා හල් තිබෙනවා. එන කොට ම බලා ගෙන එනවා අද දාලා තියෙන චිත‍්‍රපටිය මොකක් ද කියලා. ගෙදරට ඇවිල්ලා සල්ලි ඉල්ලුවොත් අම්මා දෙන්නෙ නැහැ.

සල්ලි නො දුන්නොත් කෑ ගහනවා. මගේ යහළුවෝ හැමෝ ම එකතු වෙලා හැංගි හැංගි චිත‍්‍රපටි බලනවා. චිත‍්‍රපටිය දාන පුද්ගලයා අපිව එළවා ගෙන එනවා. අපි දුවනවා. ඔහු ගියාට පස්සෙ ආයෙත් ඇවිල්ලා අපි චිත‍්‍රපටි බලනවා. ඒක හරි සන්තෝස යි. මේවා අදටත් මට හොඳට මතක යි. මගේ නංගිව දාලා මම කඬේට ගියා. ඇය මමත් එනවා කිව්වා. පසු දින තෛපොංගල්. මම ඇයව දාලා කඬේට දුවලා ගියා. ඇය මගේ පිටුපස දුව ගෙන ආවා. ඉදිරිපසින් ආපු බයිසිකලයක් ඇයව හැප්පුවා. මම බය වෙලා දුවලා ගියා. නළල පුපුරලා ලේ ගලනවා. තාත්තා ගහයි කියලා බයෙන් බයෙන් ගෙදර ගියා.

තාත්තා නංගිව ඉස්පිරිතාලෙට අරන් ගියා. ඇයට මැහුම් දැම්මා. තාත්තා බයිසිකල්කාරයට ගහන්න ගියා. ඒක මගේ ජීවිතේ සිදු වූ අත්දැකීමක්.

මේ තත්වෙ මත 90 වර්ෂයේ ඇති වූ යුද්ධය නිසා අපි පීඩාවට පත් වුණා. මම ඒ කාලෙ වන විට වාලෙච්චේනෙයි පේත්තාලෙයි කියන ගම්මානයේ පදිංචි වෙලා හිටියා. දවසක් එක පාරට වෙඩි සද්දයක් ඇහුණා. මගේ ගෙදරට කි.මී. 15 පමණ ඈතින් පොලිස් කෑම්ප් එක තිබුණා. L.T.T.E. එක කෑම්ප් එකට ගහන සද්දෙ ඇහෙනවා. සතුටින් ජීවත් වූ අපි බයෙන් බයෙන් ජීවත් වෙන්න පටන් ගත්තා. වෙඩි සද්ද, ෂෙල් ප‍්‍රහාර, බෝම්බ ගැසීම්, ඒවා දැකලා බයෙන් වෙව්ලනවා. වෙඩි සද්ද නැවතුණාට පස්සෙ ආමි එකේ වාහන, ට‍්‍රක් යනවා. මැරිච්ච අයව ඒකට දා ගෙන යනවා.

පසු දින ආමි එකෙන් ඇවිල්ලා වැටලීම් කරනවා. පිරිමින්ට ගහනවා. ඔලුබක්කන්ට පෙන්වන්න අරන් යනවා. අපේ ගෙදර තාත්තා විතර යි පිරිමියෙකුට හිටියෙ. අපි තාත්තාව අල්ලා ගෙන ගියොත් අම්මයි, නංගියි, මමයි අඬා ගෙන පිටිපස්සෙන් යනවා. මේ තත්ත්වෙ දිගට ම සිදු වෙනවා. දවසක් මුස්ලිම් මිනිස්සු කපා ගෙන එනවා කියලා මිනිස්සු කතා වුණා ම හැමෝ ම දුවලා ගියා. අම්මයි තාත්තයි ගෙදර හිටියෙ නැහැ. මමයි නංගියි මිනිස්සු දුවන දිසාවට දුවලා ගියා. අම්මයි තාත්තයි කලබල වෙලා අපිව හොයා ගෙන දුව ගෙන ආවා. අපිව දැක්කට පස්සෙ තමයි ඒ ගොල්ලො නිදහසේ හුස්ම හෙළුවෙ. ඊට පස්සෙ වත්තක් ගඟ අයිනෙ

තිබුණා. ඒක ලොකු බංගලාවක්. ඒකෙ හිටියොත් ආරක්ෂාව ලැබෙයි කියලා ඒකෙ තමයි අවසානයේ හිටියේ.

එහි දී වළවල් හාරලා, බංගර් කියලා කියනවා, ඒක ඇතුළෙ තමයි අපි නිදා ගන්නෙ. එළියෙ මිනිස්සු ඉන්නවා දැක්කොත් බම්මර් එකෙන් ඇවිල්ලා බෝම්බ ගහනවා. බම්මර්කාරයො එනවා දැක්කොත් අපි කඩා ගෙන බිඳ ගෙන බංකර් එක ඇතුළට යනවා. බත් ටික උයා ගත්තොත් කන්න වත් බැරි තත්ත්වය. බත් මාළු ඔක්කෝම හැළි වළං පිටින් ම උස්සලා මල්ලට දා ගෙන දුවනවා.

දවසක් මධ්‍යාහ්න පමණ ඇති අපි හිටපු වත්තට හමුදාව රිංගුවා. උඩින් අහසේ බම්මර් එක කැරකෙනවා. වත්ත ඉඳලා කැලෑ පාරකින් දිව්වා. දුවන කොට ෂෙල් ගැහුවා. වෙඩි තිබ්බා. බම්මර් එකෙන් බෝම්බ ගැහුවා. වැදුණු අය මැරී ගියා. දුව ගෙන යන විට මගේ අම්මට වෙඩි වැදෙන්න ගියා. ඇසි පිය හෙළන වේගයකින් වෙඩි වැදෙන විට පිටිපස්සෙන් ආපු එක් කෙනා අම්මාව මුණින් අතට බිමට ඇල වෙන්න කියලා කෑ ගැහුවා. අම්මා මුණින් අතට බිමට ඇල වුණේ නැත් නමි පණ යනවා. තත්පරයකින් පණ බේරුණා. එහෙම ඉන්න කොට දවසක් මහ රෑ හොඳටෝ ම කළුවර යි. ගෙඟන් එගොඩ වෙලා එහා ඉවුරට ගියා. එහේ අපේ ලොකු අම්මාගෙ පවුල. ඔවුන් ළඟට යන්න ඔරුවෙන් ගියා. හාබර් එකේ හිටි හමුදාව වෙඩි තිබ්බා. රාති‍්‍ර කාලය නිසා ක්ලික් ක්ලික් ගාලා වෙඩි පහරවල් ඇවිල්ල ගඟ තුළට වැටෙනවා. පණ අතින් අල්ලා ගෙන නාසිවන් තීවුවලට ගියා. එහෙ ඉන්න විට මුස්ලිම් මිනිස්සු කපා ගෙන එනවා කියලා ආරංචියක් ආවා. ආයෙත් දුවන්න පටන් ගත්තා. වට්ටවාන්

කියන ප‍්‍රදේශය කරා දිව්වා. එහේ ඉඳලා කැලෑ පාරෙන් දුව ගෙන යන විට එරමිණියා පඳුරු හැම දෙනාගේ ම ඇඳුම් ඉරෙනවා. මොනවා වුණත් කමක් නැහැ පණ බේරුණොත් ඇති කියලා හිතා ගෙන නියමිත ස්ථානය කරා ගියා.

එය කඳු සහිත ප‍්‍රදේශයක්. එම ස්ථානයේ නම වාගනාරි. එහි මගේ නැන්දම්මා සිටියා. හරක් ගාල් ගණන් ඉන්නවා. මුදවපු කිරි තිබෙනවා. වැවෙන් මාළු අල්ලලා අම්මා උයනවා. බය නැතුව දවස් 3ක් ගත කළා. දවසක් කෑම කන්න ගිහිල්ලා කෑමට අත තියන කොට ම, එය රාති‍්‍ර කාලය, කෑ ගහන සද්දයක් ඇහෙනවා. මුස්ලිම් අය කපා ගෙන එනවා, ආමි කැලයට බැහැලා කියා කෑ ගහන ශබ්දය. ආයෙත් හැමෝ ම දුවන්න පටන් ගත්තා. එරමිණියා පඳුරුවලට ඇඟ පුරා ම හීරිලා ගියා. වට්ටවාන් දෙසට නැවතත් දුවනවා. වට්ටවාන්වල මාමා ඉන්නවා. ඒ ගොල්ලො ළඟට ගියා. සතියක් ගත වුණා. එහෙත් කලබල. මීට වැඩියෙ කොහේ වත් දුවන්න බැහැ. මැරෙනවා නම් මැරෙමු. අපේ ගමේ අපේ ගෙදර මැරෙමු කියා අම්මයි තාත්තයි කීවා. හරි යි කියලා ගෙදරට ඔරුවෙන් ගියා. ආයෙත් කලබල. පේත්තාලෙයිවල කිසි ම කෙනෙක් හිටියෙ නැහැ. හැමෝ ම වාලෙයිචේනෙයි හින්දු විදුහලේ සරණාගතයන් ලෙස කඳවුරුගතව සිටියා. අපිත් එහෙ ගිහිල්ලා කඳවුරුවල සිටියා. ඒ අසල පුල්ලෙයාරු කෝවිලක් තිබුණා. ඒ කෝවිලේ ශාලාවෙ තමයි අපි නිදා ගන්නෙ. එහෙත් ආමි එකෙන් ඇවිල්ලා රවුන්ඩප් කරනවා. හැමෝට ම පේළියට එන්න කියනවා. ඔලුබක්කට පෙන්වනවා.

එසේ සිටිය දී, එහෙත් කලබල නිසා අපි අපේ ගෙවල්වලට ගියා. එහෙට ඇවිල්ලත් සැනසීමක් නැහැ. හිටි ගමන් ඉන්දියානු හමුදාව ගෙවල්වලට ඇවිල්ලා කාන්තාවන් ප‍්‍රචණ්ඩත්වයට ලක් කිරීමත්, කාන්තාවන්ට කියනවා වතුර ගේන්න කියලා. කාන්තාවන් වතුර ගේන්න ගේ ඇතුළට ගියාට පස්සේ කාන්තාවන්ට බලාත්කරකම් කිරීමට ඔවුනුත් ගේ ඇතුළට රිංගනවා. කාන්තාවන් කෑ ගහ ගෙන එළියට දුව ගෙන එනවා. මගේ ඇස් දෙකට දැකපු දේවල්.

ඉන්දියානු හමුදාව ඇවිල්ලා රවුන්ඩප් කරනවා. පේතාලෙයි විපුලානන්දා විද්‍යාලය රවුන්ඩප් කරලා අපිව අර ගෙන ගිහිල්ලා අව්වෙ වාඩි කරනවා. අපි බඩගිනි වෙලා කෑ ගහනවා. ඉන්දියානු හමුදාව ඇවිල්ලා තේ කොළයි, සීනියි, සප්පාත්තියි (රොටි) දෙනවා. ඒවා කන්න බැහැ, ගඳ ගහනවා. මේ විදියට කලබල තරමක් දුරට ඉවර වුණා.

1991 වර්ෂයේ මගේ මව රට ගියා. තාත්තා බොනවා. තත්ත්වෙ බරපතළ නිසා අම්මට රට යන්න සිද්ධ වුණා. තාත්තා අරක්කු බී ගෙන ඇවිල්ලා අම්මට ගහනවා. මමයි, අම්මයි, නංගියි මිනිස්සුන්ගෙ ගෙවල්වලට ගිහිල්ලා හැංගිලා ඉන්නවා. තාත්තා අපිව හොයනවා. අපි පොඩි කාලෙ නිසා කිසිවක් කථා කරන්නෙ නැහැ. මේ විදියට ඉන්න විට අම්මා පිටරට ගියා. මමයි, නංගියි ඉස්කෝලෙ යනවා. තාත්තා මුහුදු යනවා. මම ඉස්කෝලෙ ගිහින් ඇවිල්ලා උයා ගෙන තමයි කන්නෙ. තාත්තා බීලා හිටියෙ නැත් නම් උයලා තියනවා. බීවොත් උයන්නෙ නැහැ. මම ඉස්කෝලෙ දි හොඳට ඉගෙන ගන්නවා. පන්තියෙ 3 වෙනියට තමයි එන්නෙ.

කොපමණ ඥාතීන් හිටියත් අම්මා කෙනෙකු ඉන්නවා වාගේ වෙන්නෙ නැහැ. මගේ අම්මා ගොඩාක් කුඩා කර්මාන්ත කරලා හරියට දුක් විඳලා තිබෙනවා. සියලු නෑකම්වලට වඩා උසස් ම නෑකම අම්මා තමයි. මෙපමණ දුක් විඳලාත් මම ඉගෙනුම අත හැරියෙ නැහැ.

මේ විදියට ඉන්න විට මම වැඩිවියට පත් වුණා. මගේ කොටහළු මංගල්‍යය අම්මා හොඳට කළා. ඊට පස්සෙ අම්මා රට ගියා. අපේ තාත්තා අපිව නම්බුකාර විදියට හැදුවා. මට මගේ තාත්තා කෙරෙහි මහත් ආදරයක් සහ භක්තියක් තිබුණා. අපේ වත්ත ඇතුළට පිරිමි කිසි ම කෙනෙකු ගෙන්න ගන්නෙ නැහැ. අපිට කියනවා කාව හරි Love කළොත් කපලා මරලා දානවා කියලා. අපිත් කිසි ම නරක නාමයක් ගන්නෙ නැතිව ජීවත් වුණා. ගෑණි රට ගියාට පස්සෙ වෙන වෙන ගෑණු හොයා ගෙන යන මේ කාලෙ මගේ තාත්තා ඒ වාගේ තත්ත්වයකට ගියේ නැහැ. මේ වාගේ තාත්තා කෙනෙකුට දුවෙක් වෙලා ඉපදුණු එක මාගේ භාග්‍යයක්. මේ වචනය ලියන විට මා නොදැනුවත්ව ම මගේ ඇස් දෙකෙන් කඳුළු බිංදු ගලනවා. ඒ විදියට අපිව තාත්තා හැදුවා. අපේ දුර නෑකමක් වන ආච්චියි ඇන්ටියි මාව ආදරයෙන් බලා ගත්තා. මටත් ඒ අය ගැන ලොකු ආදරයක් තිබුණා. ඇන්ටි දැන් ජීවතුන් අතර නැහැ. බාප්පා පොලිස්, L.T.T.E. අය වෙඩි තියලා මරා දැම්මා. ඇන්ටිව මැරුවෙත් කොටි කල්ලිය තමයි. මට ඇන්ටි දකුණු අත වගෙයි. ඇයගේ මරණය

මට විශාල පාඩුවක්. මට ඇන්ටිව අමතක කරන්න බැහැ. අම්මගේ නෑයොත් අපිව බැලූවෙ නැහැ. තාත්තගේ නෑයොත් අපිව බැලූවෙ නැහැ. මේ ඇන්ටි තමයි මගේ ආරක්ෂාවට හිටියෙ. මගේ පොඩි කාලෙ තාත්තගෙ නංගි නැන්දම්මා මාව හොඳින් බලා ගත්තා. මම කියලා කිව්වොත් ඇයට පණ වගෙයි. දැනුත් ඇය මාව බලා ගන්නවා.

එසේ සිටිය දී, දවසක් රෑ සවස 6.00ට විතර ඇති, කොටින් පොලිස්කාරයෙකුව මෝටර් බයික් එකෙන් අර ගෙන යනවා කියලා මිනිස්සු කථා වෙනවා. රාති‍්‍ර කාලය. තාත්තා මුහුදට ගියා. මමයි නංගියි අල්ලපු ගෙදර. එහේ තමයි නිදා ගන්න යන්නෙ. එදා රෑ එහේ තමයි නිදා ගත්තෙ. බල්ලො බුරනවා. අපි බයෙන් බයෙන් නිදා ගත්තා. මගේ ගෙදර ඉස්සරහ පාර අයිනෙ මළමිනියක් තිබුණා. මම ගෙදර ඇවිල්ලා මිදුල අතු ගානවා. මිනිස්සු ගිහිල්ලා ඒ දිහා බලා ඉන්නවා. මමත් ගිහිල්ලා බැලුවා. ජට්ටි එක (යට කලිසම) පිටින් මිනිහෙකුව කපලා. ඔහුගේ ඇඟ පුරා ම කැපිච්ච තුවාල. මරා දාමා තිබුණා. ඒ තමයි අර පොලිස්කරයා. මම කෑ ගහ ගෙන ගිහිල්ලා ඇන්ටිට කීවා. පොලීසියට ආරංචි වෙලා ඇවිල්ලා බැලුවා. මගෙනුයි නංගිගෙනුයි ඇහුවා. මම කිසිවක් දන්නෙ නැහැ, මම ගෙදර හිටියෙ නැහැ කියලා ඇඬුවා. තාත්තා මුහුදට ගිහිල්ලා ආවෙ නැහැ. ඇන්ටි පොලීසියට කිව්වා. අම්මා රට ගියා. මේ දෙන්නා අපේ ගෙදර තමයි ඉන්නෙ කියලා. ඊට පස්සෙ වෙන මිනිස්සුන්ගෙනුත්

විමසුවා. මමයි නංගියි ඇන්ටිලාගේ ගෙදර නිදි. ෂෙල් එක විදින ශබ්දයක් ඇහුණා. ෂෙල් එක මගේ ළිඳ ළඟට වැටිලා දෙළුම් ගහක් මුලුත් එක්ක ම ගැලවිලා තිබුණා. මම උදේ එන විට මාමා කීවා ඔය ගොල්ලන්ගෙ ගෙදරට තමයි ෂෙල් එක වැටිලා තිබෙන්නෙ කියා. තාත්තා හිටියොත් තාත්තයි නංගියි ගෙදර තමයි නිදා ගන්නෙ. එදා නිදා ගෙන හිටිය නම් මැරෙනවා. දෙයියො තමයි බේරලා තියෙන්නෙ.

ඊට පස්සෙ මට වයස අවුරුදු 16 යි. මට මනමාලයෙක් බැලුවා. ඔහු සම්මන්තුරේ කෙනෙක්. ඔහුට මත්පැන් දුම්පානය කිරීම් වැනි නරක පුරුදු කිසිවක් නැහැ. අම්මා පිටරටින් ඇවිල්ලා මනමාලයාව ගමට ඇවිල්ලා බැලුවා. අම්මට හිතට ඇල්ලුවා. අම්මා කිව්වා මමත් බේබද්දෙක් බැඳ ගෙන දහදුක් වින්දා, උඹ හරි හොඳින් ජීවත් වෙන්න ඕන කියාලා, කිසිවක් බලන්නෙ නැතිව කැමැත්ත දුන්නා. තාත්තා කැමති නැහැ මාව දුර ප‍්‍රදේශයකට බන්දලා දෙන්න. මගේ දරුවට මොනවා හරි වුණොත් උඹවයි, අල්ලපු ගෙදර ආච්චියි පණපිටින් තියන්නෙ නැහැ කියා කීවා. ආච්චි තමයි මේක කථා කළේ. අපේ නැන්දම්මට කොහෙත් ම කැමැත්තක් තිබුණෙ නැහැ. නැන්දම්ම කියන්නෙ තාත්තගේ නංගි. අම්මා කාගෙ වත් කථාවකට ඇහුම්කන් දුන්නෙ නැහැ. තාත්තා කියපු කථාවට හරි කියලා ඔළුව වනලා රෙජිස්ටර් කරන්න තීරණය කරලා ඉවර යි. මම කිසිවක් කථා කළේ නැහැ. මම බය යි. එකට එක කථා කරන්නෙ නැහැ.

රෙජිස්ටර් කරලා සම්මන්තුරේට එක්ක ගෙන ආවා. මම මගේ අයියා කෙනෙක්ගෙ ගෙදර ඉඳලා ඉස්කෝලෙ ගියා. O/L මොනවා කළත් නෑනලයි නැන්දම්මයි දොස් කියනවා. මේවා කාට ද කියන්නෙ. මට දැන් තිබෙන ධෛර්යය ඒ කාලෙ තිබුණෙ නැහැ. මොනවා වුණත් කාට වත් කියන්නෙ නැහැ. මගේ හිතේ ම හිතේ තියා ගෙන වසන් කර ගෙන ඉන්නවා. මුල දී හොඳින් තමයි බලා ගත්තෙ. කල් යන්න යන්න තමයි වධහිංසාව ආරම්භ වුණේ. ගෙදර යමු කියලත් හිතුණා. මට තාත්තා කියපු දේ මතක් වුණා. ඒ නිසා මොනවා වුණත් කාට වත් කියන්නෙ නැහැ. මෙසේ සිටින විට මා ගැබ් ගත්තා. මෙයාගේ අක්කා සන්දිවෙලි ප‍්‍රදේශයේ ඉන්නවා. ඇය ආවොත් ගෙදර රණ්ඩු තමයි. ඇයට දුවක් ඉන්නවා. ඒ දුව මෙයාට බඳින්න කියලා තියෙනවා. මෙයා කියලා තියෙනවා මම කොහොම ද අක්කගේ දුව බඳින්නෙ කියලා. මට බඳින්න බැහැ කියලා. ඉන්දියාවෙ සම්ප‍්‍රදායට බඳිනවලු. ඒ නිසා ඇය මා සමග තරහ යි.

දවසක් ඇය ගෙදර ආවා. අපි විස්තෘත පවුලක් හැටියට තමයි ජීවත් වුණේ. මෙයා, නැන්දම්මා, නෑනලා, අයියා, අයියා බැඳපු අක්කා ඔක්කෝම එකතු වෙලා මා ගැන කථා කර කර හිටියා. මට ඇඬුණා. කාට ද කියන්නෙ. මම මට කෑම එපා කීවා. මෙයා මගෙන් පිංසෙණ්ඩු වෙනවා කෑම කන්න එන්න කියලා. මම තදින් ම කියා සිටියා කෑම එපා කියලා. ඒ වන විට මා මාස තුනක ගැබිණි මවක්. මෙයා මගේ අතින් අල්ලලා ඇද්දා. මම එහෙම ම ඇද ගෙන වැටුණා. එයා මොනවා කරන්න ද. කා සමග තරහ වෙන්න ද. මම සැනසුමක් නැතිව ජීවිතය ගත කළා. මගේ ස්වාමි පුරුෂයා බොහොම හොඳ යි. මාව හොඳට තමයි බලා ගත්තෙ.

මා දරු ප‍්‍රසූතිය සඳහා මාස 7න් තාත්තා ළඟට ගියා. මගේ වැඩිමල් දරුවා වාලෙච්චේනෙයි ප‍්‍රදේශයේ තමයි ඉපදුණේ. දරුවා ඉපදිලා දවස් 30ක් පසු වුණාට පස්සෙ මෙයා මාව ගෙදර එක්ක ගෙන ගියා. මාමා රණ්ඩු වුණා. ගෙදරින් දොට්ට බහින්න කියලා කිව්වා. මම මගේ අතදරුවත් අර ගෙන අඬ අඬා අයියලාගේ ගෙදර ගියා. මම අම්මා ළඟට යනවා කිව්වා. මෙයා මට යන්න දුන්නෙ නැහැ. ඉන් පසු GS වෙතට ගිහිල්ලා මට පර්චස් 5ක ඉඩමක් දුන්නා. ඒකෙ පැල්පතක් හදා ගෙන ජීවත් වුණා. ඒ වෙලාවෙ E.P.D.P. එකෙන් පෙර පාසලක් පටන් අර ගෙන ඒකට මාව පාලිකාව ලෙස පත් කළා. මමත් ගිහිල්ලා ඉගැන්නුවා. අවුරුද්දකට පස්සෙ ඒක නැවතුණා. 2000 වර්ෂයේ W.D.F. සංවිධානය උදයපුරම් ගම්මානයේ වැඩ කරන්න පටන් ගත්තා. මම ඒකේ ලේකම් වශයෙන් වැඩ කළා. ඒ ගොල්ලො පටන් ගත්තු පෙර පාසලේ කිසිදු දීමනාවකින් තොරව මම පාලිකාව ලෙසට වැඩ කළා.

මෙසේ සිටිය දී මගේ නිවස කටුමැටිවලින් තමයි හදලා තිබුණේ. වැස්සට බිත්ති කඩා වැටුණා. එයාගේ කට්ටිය කවුරු වත් අපට කථා කළේ නැහැ. කෝරක්කල් ප‍්‍රදේශයේ මුස්ලිම් අයෙකුගේ ගෙදරකට ගිහින් පදිංවි වුණා. ඒ වෙලාවේ මගේ දෙවැනි දරුවා. මාසයක ගැබක්. මාසයක් තිස්සේ මා විඳපු දුක නිසා දෙවැනි දරුවා ගබ්සා වුණා. මෙවැනි තත්ත්වයක ඉඳ ගෙන එයාගෙ නංගිලා දෙන්නට ම මම හොඳ හැටි විවාහ කර දුන්නා. මම එයාගෙ පවුලට කිසි ම අඩුවක් නැතිව මට පුළුවන් හැටියට හොඳින් සැලකුවා. එහෙම බැලූ අය පවා මාව බලන්න ආවෙ නැහැ.

W.D.F. සංවිධානය පැවැත්වූ පුහුණු පාඨමාලාවලට සහභාගි වුණාට පස්සෙ තමයි මට ධෛර්යයක් ආවේ. ඉන් පසු මගේ

තාත්තගේ නංගි රට හිටියා. ඇය මටයි නැන්දගෙ දුවටයි පර්චස් 20ක ඉඩමක් අර ගෙන ඒකෙන් පර්චස් 10ක ඉඩමක් මට දුන්නා. මම ඒකෙ අත්තිවාරම් දැම්මා. මම ඉඳපු ගෙදර ඉඳලා ගෙවල් දෙකකට මාරු වුණා. දවසක් මම විඳපු දුක කියන්න බැහැ. මම එක කාමරයක්, පොලියට සල්ලි අර ගෙන එක කාමරයක් හදලා අවසන් කළා. වහලට පොල් අතු සෙවිලි කරලා ඒ ගෙදර පදිංචි වුණා. මගේ තාත්තා මට රු: 25,000/=ක් සල්ලි දුන්නා. අනිත් කාමරේ හදා ගන්න කීවා. නැන්දම්මාගේ උදව් ඇතිව කාමර හදලා වහලට ෂීට් අර ගෙන දැම්මා. විදුලිය අර ගෙන, වතුර අර ගෙන තරමක් දුරට හොඳට ජීවත් වුණා. 2004 වර්ෂයේ මට නිවුන් දරුවන් දෙදෙනෙකු ලැබුණා. සතුටක් ඇති වුණත්, අගහිඟකම් තිබුණා. W.D.F. සංවිධානයේ පෙර පාසලෙන් මට පඩියක් ලැබුණා. තරමක් දුරට ජීවිතය ගැට ගසා ගෙන ගියා. 2011 මගේ ස්වාමි පුරුෂයා ණය මුදලක් අර ගෙන ගෙදර වැඩ ටික සම්පූර්ණ කළා. වහල හදන්න සල්ලි තිබුණෙ නැහැ. මගේ තැල්ල දමා තිබූ චේන් පොට උගස් කරලා වහල හදලා උළු සෙවිලි කළා. උළුවහු එකක් වත් තැබුවෙ නැහැ. පොළවට කොන්කී‍්‍රට් දාලා ඒකෙ පදිංචියට ආවා. මගේ බාල පුතා 2011 තමා ඉපදුණේ.

පුතා ඉපදිලා අවුරුදු 1 Xන් මම ලෙඩ වුණා. බෙල්ලෙ තයිරොක්සින්. ඒක කපලා බලන විට රිපෝට් එක වැරදි යි කියලා ආවා. නැවතත් අනෙකත් කපලා බලමු කියා ඩොක්ටර් කීවා. මට ශල්‍ය කර්මය කරන්න බැරි තත්ත්වයක්. තයිරොක්සින් වැඩි වෙලා ලේවල. මාසයක් බෙහෙත් පෙති අර ගෙන අඩු වුණාට පස්සෙ වහා ම අනෙක් ඔපරේෂන් එක කළා. ඒ රිපෝට් එක නෝමල් කියලා ආවා. ඉන් පසු GV රෝහලට යන්න කීවා.

එහේ ගිහිල්ලා ඩොක්ටර් සාමා හමු වී මගේ සියලු ම වෛද්‍ය වාර්තා එතුමා වෙත දුන්නා. එතුමා කිව්වා ඔයා ලකී කියලා. ඇයි මෙච්චර සල්ලි වියදම් කළේ. මඩකලපු රෝහලට එන්න කියා කීවා. මේ අතරතුර හිතට නිදහසක් නැතිව අපි බයෙන් බයෙන් හිටියා. මඩකලපු රෝහලට ගියා. එහි දී ඩොක්ටර් කීව අයඩින් ප‍්‍රතිකාර කරන්න ඕන. ඒකට 150,000/= (ලක්ෂ එකහමාරක්) වියදම් වෙනවා කියලා. මා ළඟ කිසිවක් තිබුණෙ නැහැ. නැන්දට කිව්වා. එයා 130,000/=ක් දුන්නා. ඉතිරි සල්ලි හොයා ගන්න බැරිව මගේ තැල්ල උගස් කරලා ඉතිරි සල්ලි ගෙව්වා. මම කොළඹට ගියේ නැහැ. ක්ලිනික් එකට ගියා නර්ස් කෙනෙකු මට බැන්නා. මේ ලෙඬේ බැරෑරුම්කම දන්නෙ නැතිව ඉන්නවා කියලා. ඉන් පසු ලෝන් එකක් අර ගෙන කොළඹට ගිහිල්ලා ප‍්‍රතිකාර කළා. සාමාන්‍යයෙන් ලක්ෂ 400000/=ක් වියදම් වුණා. ප‍්‍රතිකාර අවසන් වෙලා ආපු දවසෙ විඳපු දුක දරා ගන්න බැරි වුණා. තනි කාමරය තුළ තිබුණු වේදනාව. දරුවා බලා ගන්න වත් කෙනෙකු හිටියෙ නැහැ.

දවසක් මගේ වැඩිමල් දියණිය නිදි. දෙවැනි පුතාට ඇදුම. මෙයා වැඩට ගියා. මගේ දරුවා කිරි ඉල්ලලා අඬනවා. දවස් 15කට පසුව තමයි එළියට එන්න ඕන. කෝවිලට ගිහින් ඇවිල්ලා නිදා ගත්ත නිසා ඔහුට නැගිට ගන්න බැහැ. අවුරුදු 1 Xක දරුවා විඳින දුක ගැන මට බලා ඉන්න බැහැ. ජනේලෙ ඇරලා අල්ලපු ගෙදර ළමයට කථා කළා. එයා ඇවිල්ලා පුතාව නැගිට්ටවලා කිරි හදලා දුන්නා. මම අඬලා අඬලා හෙම්බත් වුණා. දෙවියනේ වෙන කිසි ම කෙනෙකුට මේ වැනි තත්ත්වයක් ඇති වෙන්න එපා කියලා මම දෙවියන් වහන්සේගෙන් ඉල්ලා සිටියා. ඉන් පසු මම සාමාන්‍ය තත්ත්වෙට පත් වුණාට පස්සෙ මාස් පතා

මඩකලපුවට ක්ලිනික් එකට යනවා. 2015 වර්ෂයේ මගේ ගෙදර වැඩ අවසන් කළා. මගේ දුව වැඩිවියට පත් වුණා. එයාගෙ නංගිට කීවා. මුල් දින වතුර වක් කරන්න ආපු අය, දෙවැනි වරට වතුර වක් කරන්න ආවේ නැහැ. මම හොඳට කරන්න සිටි නිසා කාට වත් කීවෙ නැහැ. මගේ නෑදෑයොත් ඔක්කොම හිටියෙ වාලෙච්චේනෙයිවල. කවුරු වත් ආවෙ නැහැ. අන්තිම මොහෙතේ එන්නෙ නැති නිසා මගේ දරුවට මම අඬ අඬා වතුර වක් කළා. මට ඉන්නෙ එක ම දුව යි. මේ සිද්ධිය මට අමතක කරන්න බැහැ.

ඉන් පසු මට මගේ නෑයෝ ළඟ නැති එක මහත් දුකක්. දැන් මම W.D.F. සංවිධානයේ ක්ෂේත‍්‍ර නිලධාරි ලෙස වැඩ කරනවා. හොඳින් ජීවත් වෙනවා.

මෙහි දී මම මගේ ස්වාමි පුරුෂයා ගැන විශේෂයෙන් කියන්න ඕන. මගේ ස්වාමි පුරුෂයා ගොඩාක් හොඳ යි. ඔහු පොඩි කාලයේ හරියට දුක් විඳලා තමයි හැදිලා තියෙන්නෙ. මගේ පවුලත් මෙයා ම බලා ගත්තා. ඔහු මාව විවාහ කර ගෙන ඔහුගේ ගමට කැඳවා ගෙන ආවා. මාව හොඳින් තියා ගෙන ඉන්නවා. මම ඔහුගේ ගමේ තනිව ම සිටි නිසා (මගේ ඥාතීන් නැතිව) මාව ආදරයෙන් බලා ගත්තා. දරුවො ඉපදුණු අවස්ථාවලත් ඔහු තමා මාව බලා ගත්තෙ. මට ශල්‍ය කර්මය කළාට පසුව ඔහු මට ඉතා හොඳින් සලකනවා. ස්වාමි පුරුෂයා තුළ නරක පුරුදු කිසිවක් නැහැ. ඔහු විවාහ කර ගැනීමට ලැබීම මගේ භාග්‍යයක්. මගේ දෙමව්පියන් පවා මාව ඒ විදියට බලා ගත්තෙ නැතුව ඇති.

වෙන කිසි ම ස්වාමි පුරුෂයකු ගෙවල්වල නොකරන වැඩ එයා මට කරලා දෙනවා. මට හැම දේකට ම අතහිත දෙනවා. එයාගේ නංගිලාටත් එයා තමයි විවාහ කර දුන්නෙ. නමුත් ඒ ගොල්ලන් මෙයාව අමතක කළා. පව්. කොච්චර හොඳ වැඩ කළත් හොඳක් නැහැ.

අම්මා කෙනෙකුගේ ස්ථානයේ සිට නංගිලා මල්ලිලාව බලා ගත්තා. ඒ ගොල්ලන්ට මෙයාව අමතක වෙලා. මට මහත් දුකක් මගේ ස්වාමි පුරුෂයා අමතක කරපු එක. මට මේ වාගේ අයියා කෙනෙකු ලැබුණා නම් මල් පහන් තියලා පූජා කරනවා. ඔහුගේ ජීවිත කථාව ඉතිහාසගත වෙනවා. කොයි දේ කෙසේ වෙතත් අපි අපේ පවුල් සමග සතුටින් ජීවත් වෙනවා.

මෙයට,
අත්සන ...

CMP/AMP/SAM/MTY/03-1

எஸ். ராஜேஸ்வரி
சம்மாந்துறை
2016-03-23

அன்புள்ள நண்பனுக்கு,
நான் நலம். நான் எனது குடும்பத்தில் முதலாவது பிள்ளை எனது குடும்பத்தில் அம்மா,அப்பா,தங்கை, மிகவும் சிறிய குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். அது ஒரு காலகட்டம். எனது நண்பர்களோடு சிறிய வீடு கட்டி விளையாடுவதும், பேய்ப் பந்து விளையாடுவதும், மரங்களில் ஏறி விளையாடுவதும் இன்னும் எனது மனக்கண்ணில் ஊஞ்சலாடுகின்றன. அந்த காலம் நான் நினைக்கின்றேன். 87.88ஆம் ஆண்டு காலப்பகுதியாக இருக்கும் பாடசாலை விட்டு வரும் வழியில் படக்கொட்டில் இருக்கும். வரும் போதே என்ன படம் போட்டிருக்கிறாங்க என்று பார்த்து வருவோம். வீட்ட வந்து காசி கேட்டால் அம்மா தரமாட்டார்.

காசி தராட்டி கத்துவேன். எனது நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஓட்டுப்படம் பார்ப்போம். படம் போடுறவர் எங்களை திரத்துவார். நாங்கள் ஓடுவோம். அவர் போனதும் மறுபடியும் வந்து பார்ப்போம். இது மிகவும் சந்தோசமாக இருக்கும். இந்நிலையில் மிகவும் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. எனது தங்கையை நான் விட்டு கடைக்குப் போனேன். அவள் நானும் வாறேன் என்று அடுத்த நாள் தைப்பொங்கல் நான் அவளை விட்டுட்டு கடைக்கு ஓடிப்போனேன். அவள் எனக்கு பின்னால் ஓடி வந்து முன்னால் வந்த சைக்கிள் அவள அடித்து விட்டது. நான் பயந்து ஓடிப்போனேன். நெற்றி வெடித்து இரத்தம் வந்தது. அப்பா அடிப்பாரு என்று பயந்து வீட்ட போனேன். அப்பா தங்கச்சியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றார். அவளுக்கு தையல் போட்டார். அப்பா சைக்கிள்காரனுக்கு அடிக்கச் சென்றார். எனது வாழ்க்கையில் நடந்த அனுபவம்.

இந்த நிலையில் 90ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக நாங்கள் பாதிக்கப்பட்டோம். நான் அந்த நேரம் வாழைச்சேனை பேத்தாழை என்ற கிராமத்தில் வசித்து வந்தேன். ஒரு நாள் திடீர் என்று வெடிச்சத்தம் எனது வீட்டுக்கு15 கி.மீ அளவில் பொலிஸ் கேம் இருந்தது. எல்.ரி.ரி.ஈயினர் கேம்புகளை அடிக்கும் சத்தம் கேட்கும். சந்தோசமாக வாழ்ந்த நாங்கள் பயந்து வாழத் தொடங்கினோம். வெடிச்சத்தம் செல் போடுதல், குண்டு போடுதல் இதையெல்லாம் பார்த்து பயந்து நடுங்கிப் போய் இருப்பேன். வெடிச்சத்தம் முடித்த பிறகு ஆமி ஆக்களின் வாகன றக் போகும். அதில் செத்தவர்களை ஏற்றிக் கொண்டு போவார்கள்.

அடுத்த நாள் காலையில் ஆமி வந்து றவுண்டப் பண்ணுவார்கள். ஆம்பிளையலை அடிப்பார்கள். முண்டத்திடம் காட்ட கொண்டு செல்வார்கள். எங்கள் வீட்டில் அப்பா மட்டும்தான் ஆம்பிளை நாங்கள் அப்பாவை பிடித்துக் கொண்டு போனால் அம்மாவும், தங்கச்சியும் நானும் கத்திக் கொண்டு போவோம். இந்நிலை தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருநாள் முஸ்லிம் ஆக்கள் வெட்டி வாறானுகள் என்று ஆக்கள் கதைக்கவும் ஆக்கள் எல்லாம் ஓடிப் போறார்கள். அம்மாவும், அப்பாவும் வீட்ட இல்லை. நானும் தங்கச்சியும் ஆக்களோடு ஆக்களாக சேர்ந்து ஓடினோம். அம்மாவும், அப்பாவும் பதறி அடித்துக் கொண்டு எங்களைத் தேடி ஓடி வந்தார்கள். எங்களைக் கண்டதும் பெரும் மூச்சி ஒன்று இட்டார்கள். அதன் பிறகு தோட்ட ஒன்று ஆற்றங்கரையோரத்தில் இருந்தது. அது பெரிய வங்களா எல்லோரும் அங்கு பாதுகாப்பாக இருக்கும். என்று எண்ணி அங்குதான் தஞ்சம் அடைந்தார்கள்.

அங்கு மடு தோண்டி அதை வங்கர் என்று சொல்வார்கள். அதுக்குள் தான் நாங்கள் நித்திரை கொள்வோம். வெளியில் நடமாடுவதைக் கண்டால் வம்பர் வந்து குண்டு போடுவானுகள். வம்பர்காரனைக் கண்டால் பதறி அடித்துக் கொண்டு வங்கருக்குள் புகுந்து விடுவோம். சோறு ஆக்கினால் சாப்பிடக் கூட முடியாத நிலை. சோறு கறி எல்லாத்தையும் பானையை தூக்கி பேக்கில் போட்டு ஓடுவோம்.

ஒரு நாள் நடுமத்தியானம் இருக்கும். தோட்டத்திற்குள் ஆமி புகுந்து விட்டான். வம்பர் மேலே வானத்தில் சுற்றுகின்ற தோட்டத்தை விட்டு காட்டு வழியாக ஆடினோம். ஓடும் போது செல் குற்றினார்கள். சுட்டார்கள். வம்பர் குண்டு போட்டான். பட்டவர்கள் செத்தார்கள். ஓடிக் கொண்டிருக்கும் போது என்னுடைய அம்மா மீது வெடி படப்பார்த்தது. கண் மூடி மணலையும் வேகத்தில் ஓடி பின்னால் வந்தவர் அம்மாவை குப்பறப் படுக்கச் சொல்லி கத்தினார். அம்மா குப்பற படுக்காவிட்டால் உயிர் போயிருக்கும். ஒரு மயிரிழையில் உயிர் தப்பினார். அவ்வாறு இருக்கையில் ஒருநாள் இரவு நல்ல இருட்டு ஆற்றைக் கடந்து அக்கறைக்குச் சென்றோம். அங்கு எங்களுடைய பெரியம்மா குடும்பம் அவர்களிடம் செல்வதற்கு தோணியில் போனோம். காபரில் இருந்த ஆமி சுட்டானுகள். இரவு வேளையாக இருந்தால் பளிச் பளிச் என்று வெடி வந்து ஆற்றுக்குள் விழுகின்றது. உயிரைக் கையில் பிடித்தபடி நாசிவன்தீவை அடைந்தோம். அங்கு இருக்கும் போது சோனிகல் வெட்டி வாறனுகள் என்டதும் திரும்பவும் ஓட ஆரம்பித்தோம். வட்டவான் என்ற இடத்தை நோக்கி ஓடினோம். அங்கிருந்து காட்டு வழியாக ஓடும் போது சூரப் பத்தைகள் எல்லோருடைய உடலையும் கிழிக்கும். என்ன நடந்தாலும் சரி உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்துடன் உரிய இடத்தை அடைந்தோம்.

அது மலைகள் படர்ந்த இடம். பக்கத்தில் குளம் மிகவும் அழகான இடம் அந்த இடத்தின் பெயர் வாகனேரி. அங்கு எனது மாமி இருந்தார். மாடுகள் பட்டிக்கணக்கில் இருக்கும். தயிர் இருக்கும். குளத்தில் மீன் பிடித்து சமைப்பார்அம்மா. பயம் இல்லாமல் 3 நாட்கள் ஓடினால் ஒருசாப்பிட சாப்பாட்டில் கை வைக்கும் போது அது இரவு வேளை கத்தும் சத்தம் கேட்கிறது. சோனி வெட்டி வாறான். ஆமி நாட்டில் இறங்கித்தான் என்று கத்தும். சத்தம் எல்லோரும் திரும்பவும் ஓடத் தொடங்கினோம். சூரப் பத்தைகள் உடம்புகளை கிழத்தன. வட்டவானை நோக்கி மீண்டும் ஓடினோம். வட்டவானில் மாமா இருக்கிறார். அவர்களிடம் வந்த தஞ்சம் அடைந்தோம். ஒருகிழமை ஆகி விட்டது. திரும்பவும் அங்கும் பிரச்சினை இனி ஒரு இடமும் ஓட ஏழாது. செத்தா சாகுவோம். என்று அம்மாவும் அப்பாவும் கூறினார்கள். சரி என்று வீட்டுக்கு தோணி வழியாக வந்து சேர்ந்தேன். மீண்டும் பிரச்சினை பேத்தாழையில் ஒருவரும் இல்லை எல்லாரும் வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் அகதிகளாக முகாம்களில் இருந்தார்கள். நாங்களும் அங்கு சென்று முகாம்களில் இருந்த பக்கத்தில் பிள்ளையார் கோயில் அந்தக் கோயில் மண்டபத்தில். நித்திரை செய்வோம். அங்கும் ஆமி வந்த றவுண்டப் பண்ணுவான். எல்லோரையும் வரிசையாக வரும்படி கூறுவான். முண்டத்திடம் காட்டுவான். இவ்வாறு இருக்கையில் அங்கும் கஸ்டமாக இருந்தது. நாங்கள் எங்களது வீடுகளுக்குச் சென்றோம் அங்கு வந்தும் நிம்மதி இல்லை. திடீர் என்று இந்திய இராணுவம் வீடுகளுக்கு வந்து பெண்களை வன்முறைகளுக்கு உட்படுத்துவதும் பெண்களை தண்ணீர் கொண்டு வரும்படி கூறுவானுகள். பெண்கள் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் போனதும் பெண்களை கெடுக்க வீட்டிற்குள் போவானுகள். பெண்கள் கத்தி வெளியில் ஓடி வருவார்கள். எனது கண்ணால் கண்ட விசயங்கள்.

இந்திய இராணுவம் வந்து றவுண்டப் பண்ணுவார்கள். பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் றவுண்டப் பண்ணி எங்களையெல்லாம் கொண்டு வெயிலில் இருத்துவார்கள். நாங்கள் பசியால் கத்துவோம். இந்திய இராணுவம் வந்து தேயிலையுடன் சீனியும் சப்பாத்தியும் தருவானுகள். அதை சாப்பிட முடியாது. நாத்தம் அடிக்கும். ஒரு மாதிரியாக பிரச்சினை ஓரளவுக்கு முடிந்தது.

1991ஆம் ஆண்டு எனது தாயார் வெளிநாடு சென்றார். அப்பா குடிப்பார். வீட்டு நிலைமை மோசமாக இருந்ததால் அம்மா வெளிநாட்டிற்கு காலடி எடுத்து வைத்தார். அப்பா சாராயம் குடித்து விட்டு வந்து அம்மாவுக்கு அடிப்பார். நானும், அம்மாவும், தங்கச்சியும் ஆக்கள் வீட்டில் ஒழிந்து இருப்போம். அப்பா எங்களைத் தேடுவார். நாங்கள் சிறு வயது என்பதால் ஒன்டும் பேச மாட்டோம். இந்த நிலையில் அம்மா வெளிநாடு, நானும் தங்கச்சியும் பாடசாலைக்குச் சென்று வருவோம். அப்பா கடலுக்குப் போவார். நான் பாடசாலை விட்டு வந்து சமைத்துதான் சாப்பிடுவேன். அப்பா குடிக்காட்டி சமைத்து வைத்திருப்பார்.குடித்தால் சமைக்க மாட்டார். நான் பாடசாலையில் நன்றாக படிப்பேன். 1,2,3ஆம் பிள்ளையாகத் தான் வருவேன். எத்தின உறவுகள் இருந்தாலும் ஒரு தாய் இருப்பது போல் இல்லை என்ட அம்மா நிறைய கைத்தொழில் செய்து நல்லா கஸ்டப்பட்டிருக்கிறார். எல்லா உறவையும் விட சிறந்த உறவு தாய்தான். இவ்வளவு கஸ்டத்திற்கு மத்தியில் நான் எனது படிப்பை விடவில்லை.

இந்த நிலையில் நான் சாமத்தியம் ஆனேன். எனது அம்மா சாமத்தியம் சிறப்பாக செய்தார். அதன் பிறகு வெளிநாடு சென்றுவிட்டார். என்னுடைய அப்பா எங்களை கௌரவத்துடன் வளர்த்தார். எனக்கு என்னுடைய அப்பா மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் உள்ளது. எங்களுடைய வளவுக்குள்ள ஒரு ஆம்பிளையும் எடுக்க மாட்டார். எங்களிடம் கூறுவார் யாரையாவது லவ் பண்ணினா வெட்டிக் கொள்ளுவன் என்று கூறுவார். நாங்களும் ஒருசின்ன கெட்ட பெயர் வாங்காமல் வாழ்ந்து வந்தோம். பொஞ்சாதி வெளிநாடு சென்றால் வேற பொம்பிளையலைத் தேடிப் போற காலத்தில் என்னுடைய அப்பா அப்படியான ஒரு நிலைக்குப் போகவில்லை. இப்படியான அப்பாவுக்கு மகளாகப் பிறந்தது நான் செய்த பாக்கியம். இந்த வசனம் எழுதும் போது எனது கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் துளிகள் வடிந்து ஓடின. அந்தளவு எங்களை அப்பா வளர்த்தார். எனது தூரத்துச் சொந்தமான அம்மம்மாவும் அன்ரியும் என்னை பாசத்தோடு பார்த்து வந்தார்கள். நானும் அவர்களிடத்தில் நிறைய அன்பு வைத்துள்ளேன். எனது அன்ரி இப்போது உயிருடன் இல்லை. சித்தப்பா பொலிஸ். எல்.ரி.ரி.ஈயினர் சுட்டுக் கொன்றனர். அன்ரியையும் புலிகள்தான் சுட்டுக் கொன்றனர். எனக்கு அன்ரி வலது கை மாதிரி. அவள் இறந்தது எனக்கு பேரிழப்பு. என்னால் அன்ரியை மறக்க முடியாது. அம்மாட உறவுகளும் எங்களைப் பார்க்கவில்லை. அப்பாட உறவுகளும் எங்களைப் பார்க்கவில்லை. இந்த அன்ரிதான் எனக்குப் பாதுகாப்பாக இருந்தார். என்னை சிறுவயதில் அப்பாவின் தங்கை எனது மாமி என்னை நல்லா பார்ப்பார். நான் என்றால் அவருக்கு உயிர். இப்போதும் என்னை அவர் பார்க்கிறார்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் இரவு மாலை 6 மணி இருக்கும். புலிகள் ஒரு பொலிஸ்காரனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு செல்வதற்கு ஆக்கள் கதைத்தனர். இரவு வேளை அப்பா கடலுக்குச் சென்றுவிட்டார். நானும், தங்கச்சியும் அன்ரிக்கு பக்கத்து வீடு. அங்குதான் படுக்கச் செல்வோம். அன்றிரவும் அங்குதான் படுத்தோம். நாய் குலைக்கிது. நாங்கள் பயந்து பயந்து கடுத்தோம். என்னுடைய வீட்டிற்குஎன் றோட்டில் சைட்டில் சவம் ஒன்று கிடந்தது. நான் வீட்ட வந்து வாசல் கூட்டுறன். ஆக்கள் எல்லாம் போய் பார்க்கின்றார்கள். நானும் போய்ப் பார்த்தேன். ஜட்டியுடன் ஓராளை வெட்டி அவரின் உடம்பு புல்லா வெட்டுக் காயத்துடன் சாக வச்சி போட்டிருந்தார்கள். அதுதான் அந்த பொலிஸ்காரர்கள் நான் கத்திக் கொண்டு அன்ரிடப் போய்ச் சொன்னேன். பொலிஸார் தகவல் கேள்விப்பட்டு வந்து பார்த்தனர். என்னையையும் தங்கச்சியையும் விசாரித்தனர். எனக்கு ஒன்டும் தெரியாது. நான் வீட்ட இருக்கிற இல்லை என்று அழுதேன். அப்பா கடலுக்கு வரவில்லை. அன்ரி சொன்னால் பொலிஸாரிடம் அப்பா வெளிநாடு இதுகள் இரண்டும் வீட்டதான் இருக்கிற என்று அதன் பிறகுவேற ஆக்களை விசாரித்தனர். ஒரு நாள் இரவு அப்பா கடலுக்கு போய் விட்டார். நானும் தங்கச்சியும் அன்ரி வீட்ட நித்திரை செல் குற்றும் சத்தம் செல் வந்து என்னுடைய கிணற்றில் பட்டு ஒரு மாதுளை மரம் அடியோடு பிடுங்கப்பட்டு இருந்தது. நான் காலையில் வாறன். மாமா சொன்னார். உங்கட வீட்டதான் செல் விழுந்திருக்கு. என்று அப்பா இருந்திருந்தால் அப்பாவும் தங்கச்சியும் வீட்டில் தான் தூங்குவது அன்று படுத்திருந்தால் செத்துப் போய் இருப்பார்கள். கடவுள்தான் காப்பாற்றியது.

அதன் பிறகு எனக்கு 16 வயது எனக்கு ஒருமாப்பிளை பேசினார்கள். அவர்சம்மாந்துறை அவரிடம் குடிப்பதோ புகைத்தல் பாவிப்பதோ எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லை. அம்மா வெளிநாடு இருந்து வந்து மாப்பிள்ளைட ஊருக்கு வந்து பார்த்தார். அம்மாவுக்கு பிடித்து விட்டது. அம்மா சொன்னார் நானும் குடிகாரனக் கட்டிட்டு படாத பாடுபட்டேன். என்ட பிள்ளையாவது நல்ல வாழனும் என்று எதையும் பார்க்காமல் என்னைக் கட்டிக் கொடுக்க விருப்பம் இல்லை எனது பிள்ளைக்கு எதுவும் நடந்தால் உன்னை பக்கத்து வீட்டு அம்மம்மா உயிருடன் வைக்க மாட்டேன் என்றார். அம்மம்மா தான் இதை பேசினவர். எனது மாமிக்கும் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை (மாமி என்டால் அப்பாட தங்கை) அம்மா யாரிட கதையையும் கேட்கவில்லை. அம்மா சொன்னதற்கு ஓம் என்று தலை ஆட்டி விட்டு றெஜிஸ்டர் வைக்க முடிவு எடுத்துவிட்டார்கள். நான் எதுவும் பேசவில்லை. எனக்குப் பயம் எதித்து எதுவும் கதைக்க மாட்டேன். றெஜிஸ்டர் வைத்து சம்மாந்துறைக்குகூட்டிக் கொண்டுவந்தார்கள். நான் எனது ஒன்ட உட்ட அண்ணன்,வீட்டில் தங்கிப் படித்தேன். சாதாரண தரம் எழுதிய பிறகு திருமணம் முடிந்தது. என்னை அவர் நன்றாகப் பார்த்தார். ஆனால் மச்சாள்மார் கொடுமை என்ன செய்தாலும் மாமி, மச்சாள் குற்றம் சொல்வார்கள். எனக்கு இதையெல்லாம் யாரிடம் சொல்லுவது எனக்கு இப்போது இருக்கும் தைரியம் அப்போது இல்லை. என்ன நடந்தாலும் யாரிடமும் சொல்ல மாட்டேன். எனக்கு உள்ளே போட்டுப் பூட்டிக் கொள்வேன். ஆரம்பத்தில் நல்லாதான் பார்த்தார்கள். போகப் போகத்தான் கொடுமை ஆரம்பமானது. வீட்டுத்துப் போவோமா என்றுகூட நினைத்தேன். எனக்கு அப்பா சொன்ன வார்த்தை ஞாபகம் வந்தது. அதனையே என்ன நடந்தாலும் யாரிடமும் சொல்ல மாட்டேன். இருப்படி இருக்கையில் நான் கர்ப்பம் ஆனேன். இவருடைய அக்கா சந்திவெளியில் இருக்கிறார். அவ வந்தாலே வீட்ட சண்டை தான். அவக்கு ஒருமகள் இருந்தா இவரை அவட மகளை கலியாணம் கட்டச் சொன்னதால் இவர் அக்காட மகள நான் எப்படிக் கட்டுவது எனக்குவேணாம் என்றதாம். இந்திய முறைக்குகட்டச் சொன்னதாம். அது அவக்குஎன்னோட கோபம்.

ஒருநாள் அவர் வீட்டிற்கு வந்தார். நாங்கள் கூட்டு குடும்பமாகத்தான் வாழ்ந்தோம். கூட்டுக் குடும்பம் என்றால் பிரச்சினை தானே. அவ மாமி, மச்சாள், அண்ணன், அண்ணி எல்லோரும் சேர்ந்து என்னைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அழுகை. யாரிடம் சொல்வது. நான் எனக்கு சாப்பாடு வேணாம் என்றேன். அப்போது நான் 3 மாத கர்ப்பணி என்னைப் பிடித்து இழுத்தார். நான் அப்படியே கொண்டு விழுந்துவிட்டேன். அவர் என்ன செய்றது யாரைக் கோபிக்கிறது எனக்கு நிம்மதி இல்லாமல் வாழ்க்கையை ஓட்டினேன். எனதுகணவர் மிகவும் நல்லவர். என்னை நன்றாகத்தான் பார்த்தார். பிள்ளை பெற்றெடுப்பதற்காக 7 மாதத்தில் அம்மாவிடம் சென்றுவிட்டேன். எனது மூத்த மகன் வாழைச்சேனையில் பிறந்தார். பிறந்து 30 கழிய என்னை அவருடைய வீட்டுக்குகூட்டி வந்தார். பிள்ளைக்கு3 மாதம். மாமனார்சண்டை வீட்ட விட்டு வெளியக் கிளம்புஎன்றார். நான் எனது கைப்பிள்ளையுடன் அழுது கொண்டு எனது அண்ணன் வீட்டுக்குச் சென்றேன். நான் அம்மாவிடம் போகப் போறேன் என்றேன். இவர் என்னை விடவில்லை. அதன் பிறகு கி.சே இடம் சென்று 5 பேர்ச்சஸ் வளவு எனக்குதந்தார்கள். அதில் குடிலை வைத்துக் கொண்டுவாழ்ந்தேன். அப்போது ஈபிடிபியினர் முன்பள்ளி ஒன்றை ஆரம்பித்து அதற்கு என்னை ஆசிரியராகப் போட்டனர். நானும் போய் படிப்பித்தேன். 1 வருடத்திற்குப் பிறகு நின்றுவிட்டது. மீண்டும் 200ம் ஆண்டு டபிள்யு டீ எப் இனர் உதயபுரம் கிராமத்தில் வேலை செய்ய ஆரம்பித்தனர். நான் அதில் செயலாளராக இருந்தேன். அவர்கள் ஆரம்பித்த முன்பள்ளியில் எந்தவிதமான கொடுப்பனவும் இன்றி ஆசிரியராக இருந்தேன்.

அவ்வாறு இருக்கையில் எனது வீடு களமொன்றினால் கட்டப்பட்டது. மழை காரணமாக அவர்கள் எல்லாம் வீழுந்து விட்டன. அவருடைய ஆக்கள் ஒருத்தரும் எங்களைக் கூப்பிடவில்லை. கோரக்கோயலில் ஒரு முஸ்லிம் ஆளின் வீட்டில் வந்துதங்கினோம். அந்த நேரம் நான் இரண்டாவதுபிள்ளையை சுமந்து ஒரு மாதம் நான் பட்டபாட்டில் அதுகருச்சிதைவடைந்து விட்டது. இவ்வாறான நிலையில் அவருடைய இரண்டு தங்கைக்கும் நான் நல்லபடியாக திருமணம் முடித்து வைத்தேன். நான் அவருடைய குடும்பத்தை ஒரு குறையும் இல்லாதவாறு என்னால ஏன்டளவு பார்த்தேன். அப்படிப் பார்த்தவர்கள் கூட என்னைப் பார்க்கவில்லை.

டபிள்யு டீ எப் ஊடாக நடைபெற்ற பயிற்சிகளில் கலந்துகொண்டுதான் எனக்கு தைரியம் வந்தது. அதன் பிறகு எனது அப்பாவின் தங்கை வெளிநாட்டில் இருந்தார். அவர் எனக்கும் மாமிட மகளுக்கும் சேர்த்து 20 பேர்ச்சஸ் வளவு வாங்கி எனக்கு10 பேர்ச்சஸ் வளவுதந்தார். நான் அதில் அத்திவாரம் போட்டு வைத்தேன். நான் இந்த வீட்டை விட்டு இரண்டு வீடு மாறினேன். நான் பட்டபாட்டை கூற முடியாது. நான் ஒரு அறையில் வட்டிக்கு காசி வாங்கி ஒருஅறையைக் கட்டி முடித்தேன். கூரை ஆலையில் மேந்துஅந்த வீட்டில் குடியேறினன். எனதுஅப்பா 25,000 ரூபா தந்தார். மற்ற அறையைக் காட்டுமாறுச் சொன்னார். மாமியின் உதவியுடன் இரண்டு அறை கட்டி சீற் வாங்கிப் போட்டேன். கரன்ட் எடுத்து தண்ணீர் எடுத்து ஓரளவுக்கு நல்லா வாழ்ந்தன். 2004ம் ஆண்டு எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். சந்தோசம் இருந்தாலும் கஸ்டமும் நிலை கொண்டிருந்தது. அந்த நேரம் டபிள்யு.டி.எப் இன் திட்டத்தில் எனக்கு முன்பள்ளியில் சம்பளம் கிடைத்தது. ஒருமாதிரியாக காலம் ஓடியது. 2011ஆம் ஆண்டு எனது கணவர் லோன் எடுத்து வீட்டை முழுமையாகக் கட்டி முடித்தாலும் கூரை போட காசி இல்லை. தாலிக்கொடியை ஈடுவைத்து கொப்பிலும் அடித்து ஒருபோட்டேன். நிலை ஒன்றும் வைக்கவில்லை. நிலத்திற்குmகொங்றீற் கொட்டி அதற்குள் குடிவந்தோம். எனதுகடைசி மகன் பிறந்தது 2011இல் தான்.

மகன் பிறந்து ஒன்றரை வயதில் எனக்கு வருத்தம் வந்தது. கழுத்தில் தைரொட்சின் அதை வெட்டி பார்த்த போது றிப்போட் பிழை என்று வந்தது. மறுபடியும் மற்றதை வெட்டிப் பார்ப்போம். என்றார் வைத்தியர் எனக்கு சத்திர சிகிச்சை செய்ய முடியாத நிலை தைரொட்சின் கூடி விட்டது. இரத்தத்தில் ஒருமாதத்தால குளிசை போட்டு குறைந்த பிறகு உடனே மற்ற ஒப்பரேசன் நடைபெற்றது. அந்த றிப்போட் நோமல் என்று வந்தது. அதன் பிறகு பொதுவைத்தியசாலைக்கு போகச் சொன்னார்.

அங்கு போய் டொக்டர் ச.மா அவர்களைப் பார்த்தேன். எனது றிப்போட் முழுவதையும் கொடுத்தோம். அவர் கூறினார், நீங்கள் லக்கி என்றார். ஏன் இவளவு காசி செய்திருக்கீங்க. மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு வரும்படி கூறினார். அதற்கு இடையில் நிம்மதி இல்லாமல் பயந்து பயந்து இருந்தோம். மட்டக்களப்பு வைத்தியசாலைக்குபோனோம். அங்கு டொக்டர் சொன்னார். அயடின் சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு150000, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகும் என்றார். என்னிடம் ஒன்றும் இல்லை. எனதுமாமியிடம் சொன்னேன். அவர் 130,000 எனக்கு தந்தார். மீதிப் பணம் இல்லாமல் எனது தாலிக் கொடியை அடகுவைத்து மீதிப்பணத்தை கொண்டு கட்டினேன். நான் கொழும்புக்குப் போகவில்லை. கிளினிக் போக நேஸ் எனக்கு ஏசினா. இந்த வருத்தத்தில் பார தூரம் தெரியாமல் இருக்கீங்க என்று. அதன் பிறகு போன் எல்லாம் எடுத்து கொழும்புக்போய் சிகிச்சை செய்தேன். கிட்டத்தட்ட 400000 முடிந்தது. றீற்மன்ட் செய்துவந்து நான்பட்ட பாடு இருக்கிறதே என்னால தாங்க முடியாது. தனி அறையில் இருந்த வேதனை பிள்ளையப் பார்க்கக் கூட ஆல் இல்லாத நிலைமை.

ஒரு நாள் எனது மூத்த மகள் நித்திரை. சின்ன மகளுக்கு வீசிங். அவர் வேலைக்குப் போய்விட்டார். எனதுபிள்ளை பால் கேட்டுக் கத்துறான். 15 நாளுக்குப் பிறகுதான் வெளியில் வரவேண்டும். கோயிலுக்குப் போய் வந்து படுத்தால் அவனால் எழும்ப முடியவில்லை. ஒன்றரை வயதுப் பிள்ளை பதறுவதைப் பார்க்க என்னால முடியவில்லை. ஜன்னலைத் திறந்துபக்கத்துவீட்டுப் பிள்ளையை கூப்பிட்டேன். அவர்வந்துஎனதுமகனை எழுப்பிவிட்டு பால் அடித்துக் கொடுத்தார். நான் அழுது அழுது துடித்துப் போனேன். கடவுளிடம் கேட்டேன். இந்த நிலைமை வேற ஒருத்தருக்கும் வரக்கூடாது. என்று கடவுளை பிரார்த்தனை செய்தேன். அதன் பிறகு நான் நல்ல நிலைமைக்குவந்து விட்டேன். ஒவ்வொரு மாதமும் மட்டக்களப்பிற்கு கிளினிக் செல்லுவேன். 2015ம் ஆண்டுஎனதுவீட்டை முடித்தேன். எனது மகள் சாமத்தியம் ஆனது அவரின் தங்கைக்குச் சொன்னேன். முதல் தண்ணி ஊத்த வந்தவங்க. இரண்டாம் தண்ணிக்குவரவில்லை நான் சிறப்பாக செய்ய இருந்ததால் யாரிடமும் சொல்லவில்லை. எனது உறவுகளும் முழுதும் வாழைச்சேனையில் கடைசி நேரத்தில் வரமாட்டார் என்றதால் நானே எனதுபிள்ளைக்குஅழுது அழுது தண்ணீர்ஊற்றினேன். எனக்கு ஒரு மகள்தான். என்னால இந்த சம்பவத்தை மறக்க முடியாது.

அதன் பிறகு எனக்கு எனது உறவுகள் பக்கத்தில் இல்லாதது கடும் கவலை. இப்போது நான் டபிள்யு டி எப் நிறுவனத்தில் கள உத்தியோகத்தரா வேலை செய்கின்றேன். நல்லபடியாக வாழ்கின்றேன்.

இதில் எனது கணவரை நான் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டும். எனது கணவர் மிகவும் நல்லவர். அவர்சிறு வயதில் மிகவும் கஸ்டப்பட்டு வாழ்ந்துவந்தவர். தனதுகுடும்பத்தை இவரே கவனித்து வந்தார். இவர்என்னைத் திருமணம் முடித்து அவருடைய ஊருக்கு கூட்டிக் கொண்டுவந்தார். நல்லபடியாக வைத்திருக்கின்றார். நான் அவருடைய ஊரில் தனிய இருந்ததால் (எனது உறவுகள்) என்னை மிகவும் அன்பாகப் பார்த்துக் கொண்டாள். எனதுபிள்ளைகள் பறிந்து அவர்தான் என்னைப் பார்த்தார். எனக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டதன் பின்னர் அவர் என்னை நல்லபடியாக கவனித்தார். எனது கணவர்ஒருகெட்ட பழக்கமும் இல்லாதவர். இவரை நான் திருமணம் முடித்தது. நான் செய்த பாக்கியம். என்னைப் பெற்றவர்கள் கூட என்னை இப்படி பாத்திருக்க மாட்டார்கள்.

ஒரு கணவரும் வீட்டில் செய்யாத வேலைகள் எல்லாம் செய்துதருவார். எனக்கு எல்லா விடயங்களிலும் பக்க பலமாகத்தான் இருப்பார். இவருடைய தங்கைமாருக்கு இவ திருமணம்முடித்துக் கொடுத்தார். ஆனால் இவரை அவர்கள் மறந்துவிட்டார்கள். பாவம் எவ்வளவு நல்லது செய்தாலும் நன்மை இல்லை.

ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து தங்கை, தம்பி மாதிரி பார்த்தார். அவர்கள் மறந்துவிட்டனர்.

எனக்குகடும் கவலை எனது கணவரை மறந்தது. எனக்கு இப்படியான அண்ணன் கிடைத்திருந்தால் பூவும், தண்ணியும் போட்டு பூசை செய்திருப்பேன். அவருடைய வாழ்க்கை கதையே ஒரு வரலாறாக வரும்.

எது எப்படி இருந்தாலும் நாங்கள் எங்களது குடும்பங்களுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றேன்.

நன்றி






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License