The history of Korakovil.

A brother recalls the main incidents happened in the village of Korakkovil.


කෝරක්කෝයිල්වල ඓතිහාසික සටහන්

කෝරාකොවිල් ගම්මානයේ සිදු වූ ප්රධාන සිදුවීම් ගැන සොහොයුරු සිහිපත් කරයි


கோரக்கோயிலின் வரலாற்றுப் பதிப்பு

கோரக்கோவில் கிராமத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளை சகோதரரொருவர் நினைவுகூருகின்றார்.



CMP/AMP/SAM/MTY/06-1
M.Kandasamy
Korakovil
Sammandhurai
2016.05.09
The history of Korakovil.
The name of Sammandhurai was Semmandhurai as there were harbors here Semmandhurai became Sammandhurai. This village was filled with bushes and canals people didn’t live in this village. They came to this village as pilgrims the sage of Korakka came from India and stayed in the Korakka temple.

The village was named after his memory. Korakka Pillayar temple was built here.
People began to live here 10-15 families lived there. People travelled in Bullock carts with lamps the paddy fields were green and it was a sight to behold “Ahora Amman” statue was found here after the war it was called “Ahora Mariamman”. Earlier this temple was in cadjun house.

People forgetting there race and casts came to this temple. Muslim with sickness came to this temple during the festival and got cured.

“Amman” who was in the cadjun house now stayed in a very well built temple. Fire walking is also held in this temple. “Amman” was put in a golden swing during the festivals. Another temple was built in the name of the sage Korakka.

During festivals both “Korakka Marriamman” and Korakka the sage gave their blessing .There’s another popular temple in Sammanthurai. The Sammanthurai Badra Kaali Amman Kovil.

Korakovil had a school from Grade 1 to 5 in one building. The children who wanted continue their education went to the Muslim Central School. After the war this school has up to Grade 11.

This school was upgraded to Child friendly school in 2000, there were classes up to A/L.. This school was upgraded to Tamil Maha vidylaya.

The students of this school are intelligent. A short film was made in this school titled “ Ilasugal (youngsters). It received acclaims. Three students went to the university from this school. Every year at least one child passed the scholarship.

In the village of Korakovil, there are 7 graduates. People work as gardeners, cultivators, hair dressers and teachers. They work in Pradeshiya saba too. The village has developed a lot . The villages were affected by the war in 1989 and went to Karaitivu as refugees. They settled back at the village in 1993

Now all the ethnic group live here, tamils, muslims and burghers. There are 378 families here now.

Muslim - 194 families - 51%
Tamils - 163 families - 43%
Burghers - 21 families – 06%

Religion wise

Muslim - 515 Males – 259
Females- 256

Tamils - 324 Male – 177
Female – 207

Burghers - 51 Male – 23
Female - 28

Widows - 46

The villagers have access to post office, Divisional Secretariat, Telecom, banks near by.



CMP/AMP/SAM/MTY/06-1

M. කන්දසාමි,
කෝරක්කෝයිල්,
සම්මන්තුරේ.

කෝරක්කෝයිල්වල ඓතිහාසික සටහන්.

සම්මන්තුරේට මුලින් තිබූ නම සෙම්මන්තුරේ. මෙහි වරායවල් තිබුණු නිසා සෙම්මන්තුරේ පසුව සම්මන්තුරේ ලෙසට පරිවර්තනය වුණා.

මෙම ගම්මානය එක්තරා කාලයක ළඳු කැලෑ සහ ඇළවල්වලින් සමන්විත ගම්මානයක් ලෙස දක්නට තිබුණා. මෙම ගම්මානයේ මිනිස්සු ජීවත් වුණේ නැහැ. මෙය වන්දනාකරුවන් නවාතැන් ගන්නා ස්ථානයක්ව තිබුණා. මෙහි ඉන්දියාවෙන් පැමිණි ‘‘කෝරක්කර්” ඍෂිවරයා කෝරක්කෝයිල් ගමේ පදිංචිව ඉඳලා පරලොව සැපැත් වුණා.

එය සිහිපත් කිරීමක් වශයෙන් මෙම ගම්මානය කෝරක්කර් යන නමින් හැඳින්වී කෝරක්කර් පුල්ලෙයාරු දේවාලය ස්ථාපිත වී තිබෙනවා.

ඉන් පසුව තමයි මෙහි මිනිස්සු පදිංචි කිරීම සිදුව තිබෙන්නෙ. පවුල් 10-15ක් පමණ තමයි මෙහි ජීවත් වෙලා තිබෙන්නෙ. ඇහැට පෙනෙන තෙක් මානයක තමයි ගෙයක් තිබුණෙ. මිනිස්සු ගොන් කරත්තවල ලාම්පු පත්තු කර ගෙන තමයි ගමන් බිමන් යන්නෙ. කලක් යත් ම ජනතාව පදිංචි වෙන්න පටන් ගත්තා.

මෙහි තිබෙන විශේෂත්වය තමයි වෙල් යායවල් තනිකර කොළ පාටින් බැබළෙනවා. බලන්න හරි ලස්සන යි. ඊට වඩා විශේෂත්වයක් තමයි පොළොවෙන් ඉබේ ම බිහි වූ ‘‘අහෝර මාරි අම්මන්” පිළිමය මෙම ගමේ කැණීම් කරලා අර ගෙන තිබෙනවා. යුද්ධයෙන් පසුව තමයි මෙම සිද්ධිය වුණේ. ‘‘අහෝර මාරි අම්මන්” යන නමින් හැඳින්වෙනවා.

06 -2

මෙම කෝවිලේ ඉතිහාසය, මෙම මෑණියන් බිහි වී පොල් අතු මඩුවක වැඩ සිට ජනතාවට ආශීර්වාද කළ නිසා බැතිමතුන්ගේ ප‍්‍රාර්ථනාවලට මෑණියන්ගේ පිහිට ලැබෙනවා.

මෙම කෝවිලේ විශේෂත්වය තමයි ආරූඪ වෙලා සාස්තර කියලා ජනතාවගේ අඩුපාඩු නිරාකරණය කර දෙන මෑණියන් ලෙස ප‍්‍රසිද්ධ වෙලා තිබෙනවා. ජාති ආගම් කුල භේදයකින් තොරව මෙම කෝවිලට හැම දෙනා ම එනවා. මුස්ලිම් ජනතාව කොඩිවිනවලට හසු වූ අය අහෝර මාරි අම්මන්ව හොයා ගෙන ඇවිල්ලා සනීප කර ගෙන යනවා. උත්සව කාලයේ දී මේවා සිදු වෙනවා.

පොල් අතු මඩුවක වැඩ සිටි මෑණියන්ට දැන් කෝවිල් ගොඩනැගිල්ලක් හදලා තිබෙනවා. ඉතා ශක්තිමත්ව වැඩ සිට බැතිමතුන්ට ආශීර්වාද කරනවා. මෙම කෝවිලේ ගිනි පාගන උත්සවය උත්කර්ෂවත් ලෙස පැවැත්වෙනවා.

මෙහි උත්සව කාලයේ දී මෑණියන්ව ඔන්චිල්ලාවේ තබා පද්දනවා. එය ඉතා මත් උත්කර්ෂවත් අවස්ථාවක්. දැනට කුම්භාබිසේගම් කරන ලද කෝවිලක් ලෙස දැක්වෙනවා. තවත් විශේෂත්වයක් තමයි ඍෂිවරයාව සිහිපත් කිරීමක් වශයෙන් කෝරක්කර් ඍෂිවරයාගේ නමින් කෝවිලක් සාදා තිබෙනවා.

ඉන්දියාවට ගොස් පැමිණි ඍෂිවරයෙකු විසින් උත්සව කාලයේ දී මෙම ඍෂිවරයාට සෙත් ශාන්ති කරලා විශේෂ උත්සව පවත්වනවා. එය ඉතා විශිෂ්ට යි. එක ම ප‍්‍රදේශයක අහෝර මාරි අම්මන්, කෝරක්කර් පුල්ලෙයාරු කෝවිල, ඍෂිවරයා, නාග මෑණියන් වැඩ සිටිමින් බැතිමතුන්ට ආශීර්වාද කරනවා.

06 -3

සම්මන්තුරේවල තවත් ප‍්‍රසිද්ධ කෝවිලක්. එය ප‍්‍රසිද්ධ භද්‍රකාලි අම්මන් කෝවිල. එය ලොව ප‍්‍රකට දේවස්ථානයක් ලෙස බැතිමතුන්ට ආශීර්වාද කරනවා.

කෝරක්කර් පාසලේ මුල් කාලයේ දී 1-5 දක්වා පන්ති කාමර තිබුණා. එය එක ම ගොඩනැගිල්ලක තමයි කි‍්‍රයාත්මක වුණේ. මෙහි අධ්‍යාපනය ලබන ළමුන් මුස්ලිම් පාසල්වල හා මධ්‍ය මහා විද්‍යාලයෙන් වැඩි දුර අධ්‍යාපනය ලබා ගන්නවා. යුද්ධයෙන් පසු සාමාන්‍ය පෙළ (O/L) දක්වා පන්ති කාමර තිබෙනවා.

2000න් පසු මෙම පාසල ළමා මිතුරු පාසලක් ලෙස වැඩි දියුණු කර තිබෙනවා. දැනට උසස් පෙළ (A/L) දක්වා පන්ති කාමර තිබෙනවා. මුල් කාලයේ කෝරක්කර් පාසල ලෙස හැඳින්වූ මෙම පාසල දැනට වැඩි දියුණු කරනු ලැබ දෙමළ මහා විද්‍යාලය නමින් පරිවර්තනය වී තිබෙනවා.

මෙම පාසලේ ළමුන් හරි දක්ෂ යි. මෙම පාසලේ කෙටි චිත‍්‍රපටියකුත් නිෂ්පාදනය කර තිබෙනවා. එම චිත‍්‍රපටියේ නම ‘‘ඉලසුගල්” (පොඩිවුන්). ලස්සන කථාවක්. දෙබස් සමග නිෂ්පාදනය කරලා ප‍්‍රශංසා ලබා තිබෙනවා. මෙම පාසලේ ඉගෙනුම ලැබූ සිසුන් 03 දෙනෙකු විශ්වවිද්‍යාලයේ අධ්‍යාපනය ලබනවා. සෑම වර්ෂයක් පාසා ම එක් ළමයෙකු හෝ 5 වසර ශිෂ්‍යත්වය සමත් වෙනවා.

කෝරක්කෝයිල් ගම්මානයේ උපාධිධාරීන් 07 දෙනෙකු සිටිනවා. මෙහි ජීවත් වන ජනතාවගේ රැකියාව ගොවිතැන් කිරීම, ගෙවතු වගාව, කොණ්ඩ කැපීම (සැලූන්), රෝහල්වල සේවය කරන අය, ගුරුවරු හා ප‍්‍රාදේශීය සභාවල වැඩ කිරීම. පෙරට වඩා දැනට මෙම ගම්මානය හොඳින් දියුණු වෙලා තිබෙනවා. වඩු කාර්මිකයනුත් ඉන්නවා.

06 -4

මෙම ගම්මානයේ ජනතාව 1989 දී ඇති වූ යුද්ධයේ භීෂණයට හසු වී කාරෙයිතීවු අනාථ කඳවුරේ ඉඳලා දුක් විඳලා ඉන් පසුව 1993 දී නැවතත් කෝරක්කෝයිල් ගම්මානයේ පදිංචි වුණා.

දැනට මෙම ගම්මානයේ ජාතීන් තුනට ම අයත් ජනතාව පදිංචි වෙලා ඉන්නවා. දෙමළ, මුස්ලිම්, බර්ගර් ජාතිකයන් සමගියෙන් ජීවත් වෙන ස්ථානයක් බවට පත්ව තිබෙනවා. දැනට මෙම ගම්මානයේ පවුල් 378ක් පදිංචි වෙලා ඉන්නවා.

මුස්ලිම් පවුල් 194 51%
දෙමළ පවුල් 163 43%
බර්ගර් පවුල් 21 6%
ආගම් අනුව,

මුස්ලිම් 515 දෙනෙක් පිරිමි 259 ගැහැණු 256
දෙමළ 384 දෙනෙක් පිරිමි 177 ගැහැණු 207
බර්ගර් 51 දෙනෙක් පිරිමි 23 ගැහැණු 28
ස්වාමි පුරුෂයන් අහිමි වූ 46 දෙනෙකු සිටිනවා.

ප‍්‍රසිද්ධ ගම්මානයක් ලෙස දැක්වෙනවා. මෙම ගම්මානයේ පදිංචිව සිටින ජනතාවට රෝහල, පොලිස් ස්ථානය, තැපැල් කන්තෝරුව, ප‍්‍රාදේශීය ලේකම් කාර්යාලය, ටෙලිකොම්, බැංකු වැනි ආයතන ආසන්නයේ ම පිහිටා තිබීම තවත් විශිෂ්ටත්වයකි.

CMP/AMP/SAM/MTY/06

எம் கந்தசாமி
கோரக்கோயில், சம்மாந்துறை
2016.05.09

யுத்தப் பாதிப்பு
இடம்பெயர்வு

கோரக்கோயிலின் வரலாற்றுப் பதிப்பு

சம்மாந்துறையின் ஆரம்பப் பெயர் செம்மண் துறை இங்கு துறைமுகங்கள் காணப்பட்டதால் செம்மண்துறை சம்மாந்துறையாக மாற்றம் பெற்றது

இந்த ஊர் பற்றைக்காடாகவும் வாய்க்கால்களைக் கொண்ட கிராமமாக காணப்பட்டது. மக்கள் இந்த கிராமத்தில் வசிக்கவில்லை. இக்கிராமத்திற்கு யாத்திரிகராக வருபவர்கள் தங்கிச் செல்லும் ஓர்இடமாகவும் காணப்பட்டது. இங்கு இந்தியாவில் இருந்து வருகை தந்த கோரக்கா மாமுனிவர் கோரக்கோயில் கிராமத்தில் தங்கியிருந்த இறைவனடி சேர்ந்தார்.

இதன் ஞாபகமாகவே இக்கிராமத்திற்குகோரக்கர் என்ற பெயர் பெற்று இக்கிராமத்தில் கோரக்கப் பிள்ளையார் ஆலயம் தோன்றியது.

அதன் பின்னர் நான் இங்கு மக்கள் குடியேற்றம் தோன்றியது. 10-15 குடும்பங்களே இங்கு வசித்து வந்தார்கள். எட்டிய தூரத்தில் வீடுகள் காணப்பட்டது. மக்கள் மாட்டு வண்டியில் விளக்கு வைத்து தான் பயணம் செய்தார்கள். காலப்போக்கில் மக்கள் குடியேற்றம் ஏற்பட்டது.

இங்குஉள்ள சிறப்பு வயல் வெளிகள் பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கும் அது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். முக்கிய சிறப்புநிலத்தில் இருந்து தானாக தோன்றிய அகோர அம்மன் சிலை. இக்கிராமத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. இதுயுத்தத்தின் பின்னர்தான் இடம்பெற்றது. “அகோர மாரியம்மன்” என்ற பெயர்பெற்றது.

இக்கோயிலின் வரலாறு இந்த அம்மன் தோன்றி ஓலைக் குடிசையில் இருந்து மக்களுக்கு அருள்பாலிப்பவர்களாக காட்சி அளித்தார்.

இக்கோயிலில் விசேட தெய்வம் ஆடி கட்டுச் சொல்லி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்தவளாக காணப்பட்டார். சாதி மத இன பேதமின்றி இக்கோயிலுக்கு எல்லோரும் வருவார்கள். முஸ்லிம் மக்கள் செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள் அகோர மாரியம்மனைத் தேடி வந்துகுணம் அடைந்து போவார்கள். உத்சவ காலங்களில் இக்காட்சி நடைபெறும்.

குடிசைகள் குடிகொண்டிருந்த அம்மன் இப்போது கட்டட கோயில் அமர்ந்திருக்கின்றாள். சீரும் சிறப்புடனும் குடியிருந்துஅருள் பாலித்துக் கொண்டு இருக்கிறாள். இந்தக் கோயிலில் தீ மிதிப்பு வைபவமும் இடம்பெறும். விசேட சிறப்புஒன்று.

இங்கு உற்சவ காலத்தில் அம்மனை பொன்னூஞ்சல் ஆட்டுவார்கள். அதுகண்கொள்ளா காட்சியாக இருக்கும். இப்போது கும்பாபிஷேகம் பண்ணப்பட்ட கோயிலாக காட்சி அளித்துக் கொண்டுஇருக்கிறது. இன்னுமொரு சிறப்பு மாமுனிவரின் ஞாபகமாக கோரக்க மாமுனிவர்என்ற பெயருடன் மாமுனிவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குச் சென்றுவந்த முனிவர் ஓருவரால் உத்தசவ காலங்களில் இந்த மாமுனிவருக்குஓமம் வளர்த்து பூஜை செய்யப்படும். இது ஒரு சிறப்பாக இருக்கும். ஒரே எல்லைக்குள் அகோர மாரியம்மன், கோரக்கப் பிள்ளையார், மாமுனிவர், நாகம்மா, இவர்கள் குடியகொண்டிருந்து மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

சம்மாந்துறையில் இன்னுமொரு கோயில். அது பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோயில். அதுஉலக பிரசித்தி பெற்றகோயிலாக மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்கின்றாள்.

கோரக் கோயில் ஆரம்ப காலத்தில் பாடசாலை 1-5 வரைக்குமான வகுப்பறைகள் காணப்பட்டது. அது ஒரேயொரு கட்டடத்தில் மட்டும்தான் இயங்கி வந்தது. அங்கு மகா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்ந்தனர். யுத்தத்திற்குப் பிறகுசாதாரண தரம் வரைக்கும் வகுப்பறைகள் உள்ளன.

2000ம் ஆண்டிற்குப் பின்னர் இது ஒருபிள்ளை நேயப் பாடசாலையாக உயர்த்தப்பட்டது. இப்போது உயர்தரம் வரைக்கும் வகுப்பறைகள் உள்ளன. முதல் கோரக்கர்வித்தியாலயமாக இருந்த பாடசாலை இப்போது தரம் உயர்த்தப்பட்டு தமிழ் மகா வித்தியாலயமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பாடசாலையில் மாணவர்கள் கெட்டிக்காரப் பிள்ளைகளாக இருக்கின்றனர். இப்பாடசாலையில் ஒரு குறுந்திரைப்படம் இயற்றப்பட்டது. இந்தப் படத்தின் பெயர் “இளசுகள்” அருமையான கதை வசனங்களோடு இயற்ப்பட்டு பாராட்டும் பெற்றது. இப்பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் 3 பேர்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒரு பிள்ளையாவது 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றுவருகின்றனர்.

கோரக் கோயில் கிராமத்தில் 7 பட்டதாரிகளும் இருக்கின்றனர். இங்குஇருக்கும் மக்களின் தொழில்கள் விவசாயம்,வீட்டுத் தோட்டம் சலவைத் தொழிலாளர்கள் சிகைத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் பணிபுரிகின்றவர்கள், ஆசிரியர்கள் பிரதேச சபையில் பணிபுரிபவர்கள:, போன்றவற்றில் தொழில் செய்பவர்களாக காணப்படுகின்றார்கள். முன்னைய காலத்தை விட இப்போதுஇக்கிராமம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. தச்சுத் தொழிலாளர்களும் உள்ளனர்.

இக்கிராம மக்கள் 1989இல் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு காரைத்தீவு அகதி முகாம் இருந்து கஸ்டப்பட்டு அதன் பின்னர்1993ம் ஆண்டுமீண்டும் கோரக் கோயில் மண்ணில் வந்துகுடியேறினர்.

இப்போது இக்கிராமத்தில் மூவினத்தவர்களும் வாழ்கின்றனர். தமிழர் முஸ்லிம் பறங்கியர் ஒற்றுமையாக வாழும் இடமாக காணப்பட்டது. இப்போது இக்கிராமத்தில் மொத்தக் குடும்பம் 378 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

முஸ்லிம் - 194 குடும்பங்கள் - 51 வீதம்
தமிழர் - 163 குடும்பங்கள் - 43 வீதம்
பறங்கியர் - 21 குடும்பங்கள் - 6 வீதம்

மத அடிப்படையில்
முஸ்லிம் - 515 பேர் - ஆண் 259 பேர் பெண் 256 பேர்
தமிழர் - 384 பேர் - ஆண் 177 பேர் பெண் 207 பேர்
பறங்கியர் - 51 பேர் - ஆண் 23 பேர் - பெண் 28 பேர்
கணவனை இழந்தோர் - 46 பேர் உள்ளனர்.

ஒரு சிறப்புபெற்ற கிராமமாக திகழ்ந்து வருகின்றது. இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்குவைத்தியசாலை பொலிஸ் நிலையம் தபாற்கந்தோர் பிரதேச செயலகம் ரெலிகொம் வங்கி போன்றன பக்கத்திலேயே அமைந்துள்ளன. மற்றுமொரு சிறப்பாகும்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License