History of Sammanthurai

An Eighty year old man tells us the significant matters happened in the past.


සම්මන්තුරේ ඉතිහාසය

වයස අවුරුදු අසූවක් මිනිසා අපට පවසනවා සැලකිය යුතු කරුණු අතීතයේ දී සිදු විය.


சம்மாந்துறை வரலாறு

எண்பது வயது முதியவர் கடந்த காலத்தில் நடந்த முக்கியமான விஷயங்களை நமக்கு சொல்கிறார்.



CMP/AMP/SAM/UDA/5
History of Samanthruai
In the beginning Samanthurai was called Matakalapu taravai 1900 this name was changed to Samanthurai.

The present Batticalo was called Pulayanthivu. before 1950 our people called it Puliyanthivu, Puliyanthivu kodu, Puliyanthivu kacheri.

The ancient history shows in 1200 for the wedding of the famous Aliyar lebbai Thisawai people from our place visited. This was mentioned “In Kaliyana seppu” and also in the poem the old name of Samathurai was mentioned as Mattakalapu Tharravai.
History shows that during vikkrama bagu the second raingn {dc 116 – 1137} Muhaidheen came to Kallmunai mosque.

further the king of Kandy Rajasighgan travelled throw the jungle from alluthnuwara along Kottapova, Kondavatuvan to Mattakalappu Tarava .
South east of Puliyantivu till Kittanki, there was a river, through which merchants from India, China, Persia and Arabia travelled to Mattakalappu tharavai. During that time Alavakkarai, Sevakapatru and Allai was filled with water.

Because of this canoe, boats and ships came here and took spices, honey and wax from the hill country from Mattakalappu tharava.

There was famous markets in our village near Sinnapalli Kullathadi and an old market at Alayadi. As the harbor activities grew. Ships, canoe and boats came to Mattakallappu tharava, the name gradually changed to Sammanthurai.

SammanKarar was the division of Indian muslim. When they came to Colombo for their trade activities, to worship they made a mosque. Even now the mosque is called Samman Kottu Palli.

In Sammanthurai there were several types of rice, murungan samba, Sivappu samba and Nakkeera samba were produced and exported. As samba rice was exported to foreign countries, it was called Samba thurai and changed to Sammanthurai. Sammanthurai was a famous mercantile market and a harbor.

Later this harbor was covered by mud, reeds and Lotus and the boats were not able to travel. In 1900 our people went to Kalmunai on foot from there along Kitangithurai, they went by boat to Batticaloa. Through land they went by bullock carts to Kalladi and stopped their carts and went by boats through Batticaloa lake to Batticaloa for their work. When they built the Kalladi bridge, they completely changed the route by land.
During the period of Wickramabahu the second, the King of Polannaruwa, Batticaloa was under his rule. At that time Indian merchants with Muhaideen aandahai came to Karavahu. When the king got to know his glory, he sent a delegation to bring him to cure his son Wijayabahu the second, who couldn’t speak. Because of his treatment, Wijayabahu was cured and the King presented him Karavahu area and he ordered all the mosque be called Muslim Muhaideen Mosque. That’s why the mosque in sammanthurai is still called Muhaideen Palli.

As King Wijeyabahu the second ordered all the mosque in our area was called Muhaideen Palli. In Sainthamarudu, Valaichenai and Akkaraipatru have these Muhaideen Palli

The first mosque in Sammanthurai was also called muhaideen palli, so it was known that it was built in 1200.

Our area was under the rule Kandy senarath (1604-1635). There was five jungles routes to Sammanthurai to Kandy. This road led from Sammanthurai, Inginiyagala, Wellassa, and Bibile. In this route, trained bullocks carried dried fish, salt, clothes to Kandy. From Kandy they carried wheat, honey and tusks. Historical facts says that they were taken to India by merchants.

In 1475 Kosappa and his disciple Kos muhaideen and 6 year old Ummul Kuldum came to Sammanthurai by the East sea to Batticaloa and through Batticaloa lake and Kittanki to Sammanthurai and stayed at the place where the Big mosque is situated now.

At the place Kosappa Palli was built and in 1926 from India a person named Katta moulana tore down the small mosque with the permission of the villagers built a new storey mosque and was opened to public in 1950. It was a famous mosque in the Eastern Province. Every body came here.

Now the mosque was demolished and a large modern mosque was built destroying ancient symbols. During the reign of the Dutch, the muslims were removed from the south but number of muslims in Sammanthurai increased.

In 1800 Sammanthurai was ruled by Easa Muhanthiram under Senarath reign. When the British tried to take over Kandy, they were stopped by troops under Easa Muhanthiram at Batticaloa Othachi

Majority of the Muslims in the island lived in the ancient place, Sammanthurai. It was a better place in economic development, Agriculture, and transport facilities.
To the east of Sammanthurai , there are paddy fields and villages like Pavadipalli, and to the West the village of Veeravanai, and in the North Village of Vannar Vattai, Sevakapatru and Alaikulam pond, and to the South Karuvattukal block J. These are the boundaries of Sammanthurai. In 1950, the muslims were 88% and tamils were 12%. The tamils lived in Veeramunai, Vannaravatai, Mukuvatai. There were four Mosques, Sinnapalli, Periyapalli, Thakapalli, Puthupalli and There were Methodist Mission School, Girls School, Government School, Muslim Government School and Karvatukal Muslim School. Junior Secondary School.

Before 1950 We came to know there were 33 tribes in Sammanthurai, but 3 tribes vanished. There were temples for Kannagi Amman in the village of Veeramunai and Pathrakaali Amman temple in Tamil Kurichi. There were rivers around Sammunthrai, Nellubidy, Pallakar, Pallarau, Udanga aru, Kudavattai aaru. There were small ponds like Paadathukulam, Sinna pallikulam, Sivanar Kulam, Vathalakulam, Udayarkulam.
In 1949 the foundation stone for Kallaru Project was laid. Complete co-operation was given by the member of parliament. The engineer for this project was M.M.Ismail from Sammanthurai.

30 acres of land benefited from this project. Forest area was destroyed and 36 colonies of 150 houses were built. Each family received a house and half an acre of flat land and 3 acres of land.

The majority community was given the land and controlled the it.
The medical sector was given much attention. As there was little English medicine. Ayurvedic medicine was the need of the hour.
• Sitham
• Ayurvedic
• Yunani
• Homeopathy
• Asma – Quran medicine
• Manthiriha medicine
These were in practice here. These medicine was practice by Fakir Lebbai, Uduma Lebbai, Noolachian. Presently when you look at Sammanthurai, it has grown immensely
Earlier education was a privilege of those who had facilities. Now it is changed completely. There are 275 doctors from Sammanthurai.

The university entrants has grown to 200 – 300. There are more than 10000 graduates. Sammanthurai is unique in this way.
Natural Disasters and problems which happened in Sammanthurai

• In 1950 , there was flood in Sammanthurai, which destroyed people’s belonging and created poverty.
• There was an eclipse of the sun in 1950- 1960, the sun completely disappeared for 10 minutes causing panic among the people
• There was a storm in 1976, causing destruction of houses and people faced much difficulty
• From 1985, there was conflict between Muslims and Tamils. People who travelled for work were killed, Vehicles were hijacked, money stolen and there were problems everywhere. The situation worsened, and in 1989 the Indian army also attacked the tamils in Sammanthurai. Muslims were chased from Majidpuram, Veermunai, Malvathai and Kulani. Their houses were broken and burgled of their belongings and burnt. The tamils and muslims were displaced and went to safe places. At this time people were kidnapped and burnt and murdered. Muslims went to places where the muslims were in majority and tamils went to places where the tamils were in majority. As there is no problems now, the people came back to their places and started a new life
• In December 2004, the tsunami destroyed the shore lines of Sammanthurai and people from Karaitivu, Ninthavur, Kalmunai, Sainthamarudu, Maruthamunai ran away from their homes to Sammanthurai. The people of Sammanthurai opened their hands to the people and gave them food and accommodation. They gave their fullest co-operation and helped every one sans their religious beliefs. Mosques, Town hall, relative houses, Schools were given to the people affected by tsunami. One person gave his bulls which was his livelihood for food. Further the dead bodies were brought by the people of sammanthurai and was given a decent burial. Member of Parliament M.I.Anwer worked with this people day and night and buried the people. The people of this village kept the refugees in their home. Widows, widowers and orphans were taken in marriage by these people. New relationship was created. This place was glorified and respected.

.





CMP/AMP/SAM/UDA/5– 01

පොදු කථා 03ක්

x ගංවතුර නිසා ඇති වූ විපත
x සුළි සුළං
x ජාතිවාදී අරගල
x සුනාමි - ජනතාවගේ දිළිඳුකම් හා බලපෑම්

සම්මන්තුරේ ඉතිහාසය

හැඳින්වීම

ජීවිත කථාව

සම්මන්තුරේ මුල් කාලයේ දී මඩකලපු තරවු යන නමින් හැඳින්වූ බවත්, 1700න් පසු මෙම නම වෙනස් වී ‘‘සම්මන්තුරේ” යන නම සැදුණු බවත්, පුරාණ ඉතිහාසය පවසයි.

දැනට මඩකලපුව යන නමින් හැඳින්වෙන මට්ටු නගර්වල පුරාණ නම පුලියන්තීවු වේ. අපේ අය 1950 දක්වා පුලියන්තීවු යනවා, පුලියන්තීවු උසාවිය, පුලියන්තීවු කච්චේරිය කියා තමයි කීවෙ.

1200 වර්ෂයේ දී පමණ අපේ ප‍්‍රදේශයේ ප‍්‍රසිද්ධ අලියාර් ලෙබ්බේ නිසාවයි යන අයගේ නිවසේ සිදු වූ විවාහ මංගල්‍යයකට අප ප‍්‍රදේශයට අයත් ගම්මාන බොහොමයකින් නියෝජිතයන් පැමිණ සිටි බව පැරණි කවි පදවල සඳහන්ව ඇත. ‘‘කල්යාන චෙප්පු” යන ග‍්‍රන්ථයේ දැක්වෙන කවි පදවල සම්මන්තුරේවල පැරණි නම ‘‘මඩකලපු තරවු” යන නමින් හැඳින්වූ බව ද සඳහන්ව ඇත.

පොළොන්නරුව රජතුමා වන 2 වෙනි වික‍්‍රමබාහු රජතුමාගේ (කි‍්‍ර.පූ. 1116-1137) පාලන සමයේ මුහයිදීන් ආණ්ඩවර් කල්මුණේ කඩක්කරෙයි පල්ලිය පිහිටා ඇති ස්ථානයේ වාසය කර ඇති බව ඉතිහාසයේ සඳහන්ව ඇත.

තව ද, නුවර රාජධානියේ රාජසිංහ රජතුමා, අලූත්නුවර සිට කොටබෝව, කොණ්ඩවට්ටුවාන් යන මාර්ග ඔස්සේ මඩකලපු තරවුවලට ඇවිත් ගිය බව පුරාණ ඉතිහාසයේ සඳහන් වේ.

5-02

පුලියන්තීවු අග්නිදිග ප‍්‍රදේශය ඔස්සේ කිට්ටංගි දක්වා පළල් ගැඹුරු ජල පහරවල් තිබුණු නිසා මුහුදු මාර්ගයෙන් ගමන් කළ ඉන්දියාව, චීනය, පැසිබික් අරාබියේ වෙළෙන්දන් එම මාර්ගය භාවිත කොට කිට්ටංගි වරායේ සිට මඩකලපු තරවයි දක්වා පැමිණ ඇත. ඒ කාලයේ අපේ ගමේ අලවක්කරෙයි, සේවක පත්තුව, අල්ල යන ප‍්‍රදේශ පුරා ම වතුර පිරී තිබුණි.

එම නිසා මෙහි රුවල්, බෝට්ටු හා නැව් වැඩි වශයෙන් නැවැත්වීමටත්, වෙළඳ භාණ්ඩ කඳුකර ප‍්‍රදේශයට කැලෑ පාරවල් ඔස්සේ රැගෙන යාමටත්, එහි සිට සුවඳ විලවුන්, මී පැණි, ඉටි ආදිය මඩකලපු තරවයි ඔස්සේ ගෙනැවිත් ආපසු රැගෙන යාමටත් මෙහි අවස්ථා හා පහසුකම් තිබුණි.

තව ද, අපේ ගමේ තිබෙන සින්නප්පල්ලි වැව අසල තාවකාලිකව ඉදි කර තිබූ පැල්පත් මගින් ඉදි කර තිබූ වෙළඳ පොළත්, ඒ කාලයේ ආලෙයඩි යන නමින් හැඳින්වූ පැරණි මාර්කට් එකත් ප‍්‍රධාන වෙළඳ පොළක් ලෙස ප‍්‍රසිද්ධ වී තිබුණි. වෙළඳ නෞකා, බෝට්ටු හා රුවල්වල පැමිණීමත් සමග වරායේ කටයුතු ව්‍යාප්ත වී, මඩකලපු තරවයි යනුවෙන් හැඳින්වූ අපේ ගමේ නම ක‍්‍රම ක‍්‍රමයෙන් වෙනස් වී සම්මන්තුරෙයි යන නමින් හැඳින්විය.

සම්මන්කාරයන් යනු දකුණු ඉන්දියාවේ මුස්ලිම් ජනවර්ගයක කොටසකි. සම්මන්කාරයන් වෙළඳ ව්‍යාපාර සඳහා කොළඹ වරාය මගින් කොළඹට ඇවිත් නැවතී සිටින අවස්ථාවේ දී තමන්ගේ ආගමික වතාවත් සඳහා මුස්ලිම් පල්ලියක් ඉදි කර ඇත. අදටත් එම පල්ලිය සම්මන් කෝට්ටු පල්ලිය යන නමින් හැඳින්වෙන බව දැන ගැනීමට ලැබී ඇත.

5-03

සම්මන්තුරෙයි ප‍්‍රදේශයේ සම්බා වී වර්ග, මුරුංගන් සම්බා, රතු සම්බා, සූදුරු සම්බා වැනි වී වර්ග වැඩිපුර නිෂ්පාදනය කර අස්වැන්න ලබන නිසා හා මෙහි සිට විදේශීය රටවල්වලට වී අපනයනය කිරීම නිසා සම්බාතුරෙයි පසුව සම්මාතුරෙයි යන නමින් හැඳින්වී දැනට සම්මාන්තුරෙයි යන නම සැදී ඇති බවත් දැන ගැනීමට ලැබී ඇත. කෙසේ වෙතත් සම්මාන්තුරෙයි වරායක් ලෙසත් ප‍්‍රසිද්ධ වී වාණිජ වෙළඳ පොළක් ලෙසත් තිබුණා යන වග පමණක් සත්‍යයකි.

ඉන් පසු සම්මාන්තුරෙයි වරාය මඩ වගුරු බිම් බවට පත් වී, ඊ තණකොළ වැවී, නෙලුම් වැලිවලින් පිරී, බෝට්ටු හා ඔරු ගෙන යාමට නොහැකි තත්ත්වයක් ඇති වූ නිසා 1900 වර්ෂයෙන් පසු අපේ අය බිම් මාර්ගයෙන් කල්මුණේට ගොස් එහි සිට කිට්ටංගිතුරෙයි ඔස්සේ බෝට්ටුවලින් මඩකලපුවට යාම් ඊම් කළ බවත්, බිම් මාර්ගයෙන් හා කරත්තවලින් කල්ලඩිවලට ගොස් වාහන එහි නවත්වා මඩකලපුවේ කලපුව හරහා බෝට්ටුවලින් ගොස් මඩකලපුවේ තමන්ගේ රාජකාරි කටයුතු කර ගෙන ආ බවත් දැන ගැනීමට ලැබී ඇත. පසුව මඩකලපුවේ කල්ලඩි පාලම ඉදි කළාට පසුව මුළුමනින් ම අපේ ප‍්‍රදේශවාසීහු බිම් මාර්ගය භාවිත කළහ.

පොළොන්නරුව රාජධානියේ 2 වෙනි වික‍්‍රමබාහු රජතුමාගේ (කි‍්‍ර.පූ. 1116-1137) කාල වකවානුවේ මඩකලපුව ප‍්‍රදේශය එතුමාගේ රාජධානිය යටතේ පාලනය වූ බවත්, ඒ කාලයේ මඩකලපුව කරවාගු ප‍්‍රදේශයේ ඉන්දියානු වෙළෙන්දන් සමග එකතු වී මුහයිදීන් ආණ්ඩවර් කරවාගු ප‍්‍රදේශයට පැමිණියා. ඔහුගේ හාස්කම් ගැන දැන ගත් 2 වෙනි වික‍්‍රමබාහු රජතුමා, කථා කිරීමට නොහැකි තම පුතා වූ 2 වෙනි විජයබාහුට (කි‍්‍ර.පූ. 1137-1153) ප‍්‍රතිකාර ලබා දීම සඳහා රජතුමා කරවාගුවලට දූත පිරිසක් එවා මුහයිදීන් ආණ්ඩවර්ගේ වෙදකමින් පසු 2 වෙනි විජයබාහු කථා කිරීමට පටන් ගත් නිසා සතුටට පත් වූ 2 වෙනි වික‍්‍රමබාහු රජතුමා තමා රජ කළ කරවාගු ප‍්‍රදේශය මෙතුමාට පරිත්‍යාග කළ බවත්,

5-04

තව ද, මෙම ප‍්‍රදේශයේ ඇති සෑම මුස්ලිම් පල්ලියක් ම මුහයිදීන් පල්ලිය යන නමින් හැඳින්විය යුතු බවත් අණ කළා. එම නිසා තමයි සම්මාන්තුරේ මුල් ම මුස්ලිම් පල්ලිය මුහයිදීන් පල්ලිය යන නමින් හැඳින්වෙන බව අපි දනිමු.

අප ප‍්‍රදේශයේ මුල් කාලයේ තිබූ සෑම මුස්ලිම් පල්ලියක් ම 2 වෙනි වික‍්‍රමබාහු රජතුමාගේ අණ පරිදි මුහයිදීන් පල්ලිය යන නමින් හැඳින්වූ බවත් දැන ගැනීමට ලැබී ඇත. කාත්තාන්කුඩි, සායින්දමරුදු, වාලෙච්චේනෙයි, අක්කරෙයිපත්තු යන ප‍්‍රදේශවල මුහයිදීන් පල්ලි තිබෙන බවත් දනිමු.

සම්මාන්තුරේ ප‍්‍රදේශයේ මුල් මුස්ලිම් පල්ලිය වන සින්න පල්ලිය ද මුහයිදීන් පල්ලිය යන නමින් හැඳින්වෙන බවත්, ඒ අනුව මෙම පල්ලිය 1200 වර්ෂයට වඩා ඉපැරණි බවත් දැන ගැනීමට ලැබී ඇත.

ඉන් පසු අප ප‍්‍රදේශය මහනුවර සෙනරත් (කි‍්‍ර.පූ. 1604-1635) නමැති අයගේ රාජධානිය යටතේ තිබී ඇත. සම්මාන්තුරේ ප‍්‍රදේශයේ සිට නුවරට කැලෑ පාරවල් 05ක් තිබී ඇති බවත්, එම පාරවල් සම්මාන්තුරේ, ඉඟිනියාගල, වෙල්ලස්ස, බිබිල හරහා නුවරට ගිය බවත්, එම පාරවල් හරහා තමයි සම්මාන්තුරේ ප‍්‍රදේශයේ සිට තවලම කියන පුහුණු කළ හරකුන්ගේ පිටේ දෙපැත්තට දමා ඇති පොට්ටනිවල කරවල, ලුණු, ඇඳුම් වැනි භාණ්ඩ රැගෙන ගිය බවත්, නුවර ප‍්‍රදේශයේ සිට නැවතත් එම තවලම මගින් ම කැලෑ පාර දිගේ සම්මාන්තුරේවලට සුවඳ විලවුන්, ධාන්‍ය වර්ග, මී පැණි, ඇත් දළ වැනි බඩු හුවමාරු කර ගෙන, සම්මාන්තුරේ හරහා වෙළෙන්දන් ඉන්දියාව වැනි රටවල්වලට ගෙන ගිය බවත්, ඓතිහාසික සාධක මගින් දැන ගැනීමට ලැබී ඇත.

5-05

1475 වර්ෂයේ දී පමණ ඉන්දියාවේ සිට වාණිජ නැවෙන් කෝසප්පා නමැති සාධුවරයෙකුත්, ඔහුගේ ඇබිත්තා වන කෝස් මුහයිදීන් නමැති අයත්, වයස අවුරුදු හයක ගැහැණු දරුවෙකු වන උම්මුල් කුල්තුම් නමැති අයත් ශී‍්‍ර ලංකාවේ නැගෙනහිර වෙරළ දිගේ මඩකලපුවට පැමිණ, එහි සිට සම්මාන්තුරේට මඩකලපු කලපුවේ කිට්ටංගිතුරෙයි ඔස්සේ මඩකලපුවට ළඟා වුණා. ඔවුන් දැනට පෙරිය පල්ලිය ඉදි කර තිබෙන ස්ථානයේ නැවතී සිටියා.

එම ස්ථානයේ කෝසප්පා පල්ලිය යන නමින් පල්ලියක් ඉදි කර, 1936 වර්ෂයේ ඉන්දියාවෙන් පැමිණි කට්ටමෞලානා නමැති පුද්ගලයෙකු මෙම ස්ථානයේ තිබූ කුඩා පල්ලිය කඩලා අලුතින් විශාල පල්ලියක් ඉදි කරන්න ප‍්‍රදේශවාසීන්ගේ අනුමැතිය ලබා ගෙන ඔවුන්ගේ සහයෝගය ඇතිව ලොකුවට තට්ටු (මහල්) පල්ලියක් හදලා 1950 වර්ෂයේ විවෘත කරන ලදි.

නැගෙනහිර පළාතේ ප‍්‍රසිද්ධ පල්ලියක් ලෙස හැඳින්වූ එම පල්ලිය නැරඹීමට සියලු ම ජනතාව පැමිණෙන පල්ලියක් ලෙස දැක්වුණා.

දැනට මහ පල්ලිය කඩා (2008) එම ස්ථානයේ විශා, දැන් කාලයට ඔබින පරිදි නවීකරණය කිරීමේ දී මෙහි තිබූ කබුරුස්ථාන හඳුනා ගැනීමට නොහැකි පරිදි විනාශ වී ඇත.

ඕල්ලන්දක්කාරයන්ගේ පාලන සමයේ දකුණේ ජීවත් වූ මුස්ලිම් ජනතාව පලවා හරින ලදහ. එහෙත් මෙම කාල සීමාව තුළ මුස්ලිම් ජනතාවගේ වර්ධනය ශීඝ‍්‍රයෙන් වැඩි වුණා.

1800 කාල සීමාව තුළ සම්මාන්තුරේ ප‍්‍රදේශයේ ඊසා මුහාන්දිරම් යන අය සෙනරත් රජුගේ පාලන සමයේ පාලනය කළා. ඒ කාලයේ මුහාන්දිරම් යනු කුඩා රාජධානියක රජතුමෙක් මෙන් වූ තනතුරකි.

5-06

වෙරළබඩ ප‍්‍රදේශවල 1804 වර්ෂයේ ඉංගී‍්‍රසිකාරයන්ගේ පාලන සමයේ නුවර ප‍්‍රදේශය අත්පත් කර ගැනීම සඳහා වෙරළ දිගේ නුවරට යන්න තැත් කළ අවස්ථාවේ දී ඊසා මුහාන්දිරම්ගේ ප‍්‍රධානත්වයෙන් ගිය සොල්දාදුවන් පිරිසක් මඩකලපුව ඔත්තාච්චිමඩමේ දී ඉංගී‍්‍රසිකාරයන්ගේ සොල්දාදුවන් පිරිසට යාමට ඉඩ නො දී වළක්වා තිබෙනවා.

05-07
සම්මාන්තුරේ ප‍්‍රදේශය දිවයිනේ මුස්ලිම් බහුතරයක් ජීවත් වන පැරණි ගම්මානයකි. වර්ග ඵල අනුව හා මූලික ආර්ථික සම්පත්වලින් ද, අධ්‍යාපන සංවර්ධනය, කෘෂිකර්ම සංවර්ධනය සහ ප‍්‍රවාහන වැනි පහසුකම්වලින් ද පිරිපුන් ප‍්‍රදේශයක් ලෙස දැක්වුණි.

සම්මාන්තුරේ නැගෙනහිර වෙල් යායවල් සහ මාවඩිපල්ලි ගම්මානයත්, බටහිර දෙසින් වීරමුණෙයි ගම්මානයත්, උතුරු දෙසින් වන්නාරවෙට්ටෙයි, සේවකපත්තු යායවල්, අල්ල වැව, දකුණු දෙසින් කරුවාට්ටුක්කල් බ්ලොක් ජේ ප‍්‍රදේශයත් ලෙස ව්‍යාප්ත වී ඇත. 1950 වර්ෂයට පෙර මෙම ප‍්‍රදේශයේ ජනගහනය මුස්ලිම් බහුතරය 88% හා දෙමළ ජනතාව 12% ජීවත් වූහ. වීරමුණෙයි, වන්නාරවෙට්ටෙයි, මූක්කුවෙට්ටෙයි ප‍්‍රදේශවල දෙමළ ජනතාව පදිංචිව සිටි අතර, සින්න පල්ලි, පෙරිය පල්ලි, තක්කා පල්ලි, පුදුප්පල්ලි නමින් මුස්ලිම් පල්ලි 04ක් ද, මොතෝදිස් ද මිෂන් විදුහල, බාලිකා විදුහල, රජයේ බාලිකා විදුහල, රජයේ මුස්ලිම් විදුහල, කරුවාට්ටුක්කල් මුස්ලිම් විදුහල, කනිෂ්ඨ විදුහල යන පාසල් පමණක් තිබුණි.

1950 වර්ෂයට පෙර සම්මාන්තුරේ ප‍්‍රදේශයේ පවුල් 33ක් පදිංචිව සිටි බවත්, එයින් පැල්පත් 3ක් අතුරුදන් වී ඇති බවත් දැන ගැනීමට ලැබී ඇත. වීරමුණෙයි ගම්මානයේ කන්නගි අම්මන් කෝවිලත්, තමිල් කුරිච්චි ප‍්‍රදේශයේ භද්‍රකාලි මෑණියන්ගේ කෝවිලත් පිහිටා තිබුණි. සම්මාන්තුරේ ප‍්‍රදේශය වටා ඔයවල් ගලා ගෙන ගියා. නෙල්ලුප්පිට්ටි ආරු, පාලක්කර ආරු, පල්ලාරු, උඩංගා ඇරු, පයිනන්කට්ටු ආරු, කුඩාවට්ටෙයි ආරු සහ කුඩා ඇළ මාර්ග ද ගලා ගියා. තව ද මඩත්තුකුලම්, සින්නපල්ලි කුලම්, සිවනාර්කුලම්, ඒත්තාලක්කුලම්, උඩයාර්කුලම් වැනි කුඩා වැව් ද පිහිටා තිබුණි.

05-08

1949 අගෝස්තු 28 දින ගල්ඔය ව්‍යාපාරයේ අනුස්මරණ ස්මාරකයක් ඉදි කරන ලදි. මෙම
ව්‍යාපාරයට එවකට පාර්ලිමේන්තු මන්තී‍්‍රවරයෙකු ලෙස සිටි එම්.එස්. කාසියප්පර් මැතිතුමාගේ සම්පූර්ණ
සහයෝගය මේ සඳහා ලැබුණි. මෙම ව්‍යාපාරයට ප‍්‍රධාන ඉංජිනේරු ලෙස එම්.එම්. ඉස්මයිල් ඉංජිනේරුවරයා පත් කර තිබුණි.

සම්මාන්තුරේ ප‍්‍රදේශවාසීන්ගේ බිම් අක්කර 30ට මේ තුළින් යහපතක් ඇති විය. අප දිස්ති‍්‍රක්කයේ
තිබූ විශාල කැලෑ ප‍්‍රදේශයක් විනාශ කර, ගල්ඔය ව්‍යාපාරය යටතේ නිවාස 150කින් යුත් කොලනි ගෙවල් 36ක් ඉදි කර, එක් පවුලකට නිවසක් සමග ගොඩ ඉඩම් අක්කර භාගයක් සහ කුඹුරු ඉඩම් අක්කර තුනක් ලබා දෙන ලදි.

මෙසේ දියුණු වී තිබූ බිම් ප‍්‍රදේශ දැනට ශී‍්‍ර ලංකාවේ බහුජාතිකයන් විසින් ආක‍්‍රමණය කර ගෙන ඇත.

එසේ ම සම්මාන්තුරේ ප‍්‍රදේශයේ වෛද්‍ය ක්ෂේත‍්‍රය කෙරෙහි විශේෂ අවධානයක් යොමු වී තිබුණි. ඒ කාලයේ ඉංගී‍්‍රසි වෙදකම් අඩුවෙන් තිබුණි. එනිසා ආයුර්වේද වෙදකම්, ගොඩ වෙදකම් වැනි සේවාවන් ද මෙහි කාලීන අවශ්‍යතාවක් ලෙස දැක්වුණි.

• සිද්ධ
• ආයුර්වේද
• යුනානි
• හෝමියෝපති
• අස්මා - කුර්ආන් වෙදකම
• මන්තර වෙදකම්

යන වෛද්‍ය ක‍්‍රම මෙහි දැක්වුණි. සප්පත්තාර්, පෛකීර් ලෙබ්බෙයි පරිසාරි (වෙදා) උදුමා ලෙබ්බෙයි පරිසාරි, තූලාච්චියන් පරිසාරි යන අය ඉහත කී වෛද්‍ය ක‍්‍රමවලට ප‍්‍රසිද්ධ වී සිටියහ.

05-09

මෙසේ විවිධ අංශවලින් ප‍්‍රසිද්ධ වී තිබූ සම්මාන්තුරේ නගරයේ පවතින තත්ත්වය දෙස බලන විට විශාල දියුණුවක් දක්නට තිබෙන බව කිව හැකි ය.

මුල් කාලයේ අධ්‍යාපනික පහසුකම් තීරණය වූයේ තමන් සතු වත්පොහොසත්කම් මත ය. නමුත් දැනට එම තත්ත්වය සහමුලින් ම වෙනස් වී ඇත. වත්මන් තත්ත්වය අනුව සම්මාන්තුරේ ප‍්‍රදේශයේ සිටින වෛද්‍යවරුන්ගේ සංඛ්‍යාව 275 අභිභවා ගොස් ඇත.

සෑම වර්ෂයක් පාසා ම විශ්වවිද්‍යාලය සඳහා තේරෙන ශිෂ්‍ය සංඛ්‍යාව 200-300ත් අතර වන අතර, උපාධිධාරීන්ගේ සංඛ්‍යාව 10,000 අභිභවා ගොස් ඇත.

මෙසේ විශේෂ ඓතිහාසික දියුණුවක් ඇති ස්වාධීන ප‍්‍රදේශයක් ලෙස ‘‘සම්මාන්තුරේ” හැඳින්වේ.

05-10

සම්මාන්තුරේ ප‍්‍රදේශයේ පැවති ප‍්‍රශ්න හා ස්වාභාවික ව්‍යසන

1950 වර්ෂයේ දී පමණ සම්මාන්තුරේ ප‍්‍රදේශයේ විශාල ගංවතුරක් හට ගත්තා. මේ නිසා ජනතාවගේ ලක්ෂ ගණන් වටිනා දේපළ හානි වූ අතර, ඔවුන්ගේ රැකියාවන් ද නැති වී විශාල දිළිඳු බවකට පත් වුණා.

1950ත් 1960ත් අතර කාලය තුළ සූර්යග‍්‍රහණයක් ඇති වුණා. එහි දී උදෑසන සතුටින් උදා වූ හිරු එළිය ක‍්‍රමයෙන් අඩු වී විනාඩි 10ක පමණ කාලයක් තද කළුවරක් ඇති වීමෙන් පසු සාමාන්‍ය ලෙස සූර්ය ආලෝකය ලැබුණු බව දැන ගැනීමට ලැබුණි.

1976 වර්ෂයේ දී පමණ සුළි සුළඟක් ඇති වූවා. මේ නිසා ජනතාවගේ නිවාස හා දේපළ හානි වී ඔවුන් මහත් දුක්ඛිත තත්ත්වයකට පත් වුණා.

1985 වර්ෂයේ දී සම්මාන්තුරේ ප‍්‍රදේශයේ දෙමළ මුස්ලිම් ජාතිවාදී කලබල ඇති වූවා. මේ නිසා විවිධ දුෂ්කරතාවන්ට මුහුණ පෑවා. රැකියාවන් සඳහා ගෙදරින් පිට වෙන පුද්ගලයන් මරා දැමීම, ඔවුන්ගේ වාහන පැහැර ගෙන යාම, ඉඩම් උදුරා ගැනීම, මුදල් අය කිරීම වශයෙන් නොයෙකුත් ප‍්‍රශ්න ඇති වුණා. එම තත්ත්වය දිගින් දිගට ම වැඩි වෙමින් ගොස් 1989 දී ඉන්දියානු හමුදාවත් දෙමළ ජනතාවත් එකතු වී සම්මාන්තුරේ ප‍්‍රදේශයට පහර දුන්නා.

05-11
මජීත්පුරම්, වීරමුණෙයි, මල්වත්ත, කොලනිය යන විවිධ ස්ථානවල පදිංචිව සිටි මුස්ලිම් ජනතාව පලවා හරින ලදි. ඔවුන්ගේ නිවාස විනාශ කර දමා, වී ඇතුළු සියලූ දේපළ සූරා ගැනීමෙන් පසුව ගිනි තබන ලදි. එම නිසා දේපළ අහිමි වූ මුස්ලිම් දෙමළ ජනතාව තමන්ගේ උන්හිටි තැන් අත හැර ආරක්ෂාකාරී ස්ථානවලට ගියහ. මෙහි දී ජනතාව පැහැර ගෙන ගොස් පණ පිටින් ගිනි තැබීමත්, කපා මරා දැමීමත් සිදු විය. එහි දී මුස්ලිම් ජනතාව, මුස්ලිම් ජනතාව බහුලව වාසය කරන ස්ථානවලටත්, දෙමළ ජනතාව, දෙමළ ජනතාව බහුලව වාසය කරන ස්ථානවලටත් අවතැන් වී ගොස් ජීවත් වූහ. දැනට කලබලයක් නොමැති තත්ත්වයක් උදා වී තිබීම හේතුවෙන් ජනතාව තම ස්ථිර පදිංචි ස්ථානවලට ගොස් නැවත පදිංචි වී, තම නව ජීවිතය ආරම්භ කර ඇත.

2004 දෙසැම්බර් මස වෙරළාසන්න ප‍්‍රදේශවල ඇති වූ සුනාමි ආපදාවෙන් සම්මාන්තුරේ අවට ප‍්‍රදේශයන් වන කාරෙයිතීවු, නින්දවූර්, කල්මුණේ, සායින්දමරුදු, මරුදමුණේ වැනි වෙරළාසන්න ප‍්‍රදේශවල ජනතාව විපතට පත් වී තම ඥාතීන් හා දේපළ බිල්ලට දී දැඩි සිත් තැවුලකින් සම්මාන්තුරේ ප‍්‍රදේශයට දුව ගෙන ආවා. අන් අයගේ දුකට පිහිට වන ආකල්පයක් ඇති මෙම ප‍්‍රදේශවාසීන් දුක් වේදනා සමග පැමිණි ජනතාවගේ සිත් සනසා, ඔවුන්ගේ දුකට පිහිට වූහ. ඔවුන්ට කන්න අඳින්නට දී, විවේක ගැනීමට ස්ථාන ද ලබා දුන්හ. සම්මාන්තුරේ ජනතාව සියලූ දෙනා ම රැස් වී හැකි සෑම සහයෝගයක් ම ලබා දී ඔවුන්ගේ සිත් සැනසූහ.

05-12

අනාථ වී පැමිණි ජනතාව ජාති ආගම් භේදයකින් තොරව පිළිගත්තා. ගමේ පල්ලිවලත්, ඥාතීන්ගේ නිවෙස්වලත්, නගර ශාලා හා පාසල් යන සෑම ස්ථානයක ම ඔවුන්ට නවාතැන් දුන්නා. එක් පුද්ගලයෙකු ජීවත් වුණේ තමන්ගේ ගොන් කරත්තය මගිනි. නමුත් විපතට පත් වූ ජනතාවට ආහාර ලබා දීම සඳහා තමන්ගේ හරකුන් දීලා මස් කරලා ඔවුන්ට කන්න දුන්නා. මෙය ආඩම්බර විය යුතු කරුණකි.

තව ද, මිය ගිය අයගේ මළ සිරුරු මෙම ප‍්‍රදේශවාසීන් විසින් බර වාහන රැගෙන ගොස් එම සිරුරු රැගෙන විත් පල්ලියේ ජනතාව එකතු වී අපක්ෂපාතීව ඔවුන් පිරිසිදු කරලා නාවලා, කබන් එකේ දමලා භූමදානය කළා. මෙම කටයුතු සඳහා මෙම ප‍්‍රදේශයේ පාර්ලිමේන්තු මන්තී‍්‍ර වන මර්හූම් එම්.අයි. අන්වර් ඉස්මායිල් මැතිතුමා ජනතාවත් සමග රෑ දහවල් නො තකා ජනතාව සමග මළ සිරුරු භූමදානය කිරීමට වළවල් (කබූර්) කැපීමේ කටයුතුවල මුළුමනින් නිරත වී තිබීම අගේ කළ යුතු කරුණකි.

අවතැන් වී පැමිණි ජනතාවට එම ගමේ මිනිස්සු තම නිවෙස්වල ම නවාතැන් ලබා දුන් අතර, ස්වාමි පුරුෂයා අහිමි වූ, භාර්යාව අහිමි වූ, දෙමව්පියන් අහිමි වූ සරණාගතයන් ම මෙම ගමේ මිනිස්සු විවාහ කර ගෙන නව ජීවිතයක් පටන් ගත්තා. එම නිසා සම්මාන්තුරේ ප‍්‍රදේශය වෙනත් ගම්මානවලින් පැමිණෙන ජනතාව විසින් ගරු කරන ස්ථානයක් බවට පත් වුණා.

M.T. අලියාර්,
114/1, පෞස් මාවත,
උඩංගා - 01,
සම්මන්තුරේ.

CMP/AMP/SAM/UDA/05

வௌ்ளப்பாதிப்பு
சூறாவளி
இனக்கலவரம்
சுனாமி - மக்கள் வறுமை, பாதிப்பும்

சம்மாந்துறை வரலாறு

அறிமுகம்

சம்மாந்துறையின் ஆரம்ப காலப் பெயர் மட்டக்களப்பு தரவை என்று அழைக்கப்பட்டு வந்திருந்தாகிலும் 1900ம் ஆண்டு பின்னர் இப்பெயர் மாற்றமடைந்து சம்மாந்துறை என்று வழங்கப்பட்டதாகவும் பழைய வரலாறு ஆதாரங்கள் எடுத்துக் கூறுகின்றன.

தற்போதைய மட்டக்களப்பு என்று அழைக்கப்படும் மட்டு நகரின் பழைய பெயர் புளியந்தீவு என்பதாகும். எம்மவர்கள் 1960ம் ஆண்டுக்கு முன்பு வரை புளியந்தீவு போகிறோம், புளியந்தீவுகோடு,புளியந்தீவுகச்சேரி என்றுதான் கூறுவார்கள்.

1200ம் ஆண்டளவில் எம் பகுதியில் புகழ் பெற்ற அலியார் லெவ்வை திசாவை என்பவரின் வீட்டு திருமணத்திற்கு எமது பிரதேசத்தைச் சேர்ந்த பல ஊர்களின் பிரமுகர்கள் வருகை தந்தமையைப் பற்றியும் பழங்கால பாடல் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்யாணச் செப்பு என்ற காவியத்தின் இடம்பெற்ற பாடல் மூலம் சம்மாந்துறையின் பழைய பெயர் மட்டக்களப்புத் தரவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முகைதீன் ஆண்டவர் பெலன்னறுவை மன்னனான 2ம் விக்கிரமபாகுவின் (கி.பி. 116-1137) ஆட்சிக்காலத்தில் கல்முனை கடற்கரைப்பள்ளி அமைந்துள்ள இடத்தில் இருந்துள்ளனர் என்பதனை வரலாறுகள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.

மேலும் கண்டி அரசானன இராஜசிங்கன் என்பவன் அளுத்நுவரவில் இருந்த கொட்டப்போவ, கொண்டவட்டுவான் ஊடாக காட்டுப்பாதை வழியே மட்டக்களப்புத் தரவை வந்து போனதாக சரித்திர வரலாறுகள் சான்று பகர்கின்றன.

புளியந்தீவின் தென்கிழக்கு பகுதியூடாக கிட்டங்கிவரை விரிவாக ஆழமான நீர் ஓடை இருந்ததால் கடல் மார்க்க பிரயாணம் செய்த இந்தியா சீனா பாரசீக அரேபிய வர்த்தகர்கள் இந்த பாதையைப் பயன்படுத்தி கிட்டங்கி துறையில் இருந்து மட்டக்களப்புதரவை வந்தனர். அப்போது எமதூரின் அலவக்கரை பகுதி, சேவகப்பற்று அல்லைப் பகுதி முழுவதும் நீரினால் நிறைந்ததாகக் காணப்பட்டது.

இதனால் இங்கு வள்ளங்கள் படகுகள் கப்பல்கள் கூடுதலாக தரித்து நிற்பதற்கும் வர்த்தகப் பொருட்களை மலைநாடுகளுக்கு காட்டுப்பாதையூடாக கொண்டு சென்று அங்கிருந்து வாசனைத் திரவியங்கள் தேன் மெழுகு என்பவைகளை மட்டக்களப்புத் தரவையூடாக கொண்டு வந்து செல்வதற்கு ஏற்ற வாய்ப்பு வசதிகள் இங்கு இருந்தன.

மேலும் எமதூரில் உள்ள சின்னப் பள்ளிக் குளத்தடியில் தற்காலிக கொட்டில்களால் அமைந்திருந்த சந்தையும் ஆலையடி என்று அப்போது அழைக்கப்பட்டு வந்த பழைய மார்க்கட்டும் பிரபல்யம் பெற்ற வர்த்தக சந்தையாகவும் பெயர் பெற்றிருந்தது. வர்த்தக கப்பல்கள் படகுகள் வள்ளங்களின் வருகையும் துறைமுகச் செயற்பாடுகளும் விரிவடைய எமதூரின் பெயர் மட்டக்களப்புதரவை என்பது படிப்படியாக மாறி சம்மாந்துறையாக மாறிவிட்டது.

சம்மன்காரர்கள் என்பது தென் இந்திய முஸ்லீம்களின் ஒரு பிரிவினராகும். சம்மன்காரர்கள் வர்த்தக நோக்கில் கொழும்பு துறைமுக மூலமாக கொழும்பில் வந்து தங்கிய போது தங்களுக்காக தொழுவதற்கான ஒரு பள்ளிவாசலை அமைத்தார்கள். இன்று கூட அப்பள்ளி சம்மன்கோட்டுப்பள்ளி என்று அழைக்கப்படுதவை நாம் அறியக் கூடியதாகவுள்ளது.

சம்மாந்துறையில் சம்பா இனவகையான முருங்கன் சம்பா, சிவப்புசம்பா, நச்சீரகச் சம்பா போன்ற நெல் வகைகள் அதிகமாக இங்கு உற்பத்தி செய்து விளைவிக்கப்பட்டதாலும் இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சம்பா நெல் ஏற்றுமதி செய்ததாலும் சம்பாதுறை என்றழைக்கப்பட்டு, சம்பாதுறை , சம்மாந்துறையாக மாற்றம் பெற்றதாகவும் அறியக் கூடியதாக உள்ளது. எது எப்படியிருந்தாலும் சம்மாந்துறை துறைமுகமாகவும் பிரபல்யம் பெற்ற வர்த்தக சந்தையாகவும் இருந்தது என்பது மட்டும் உண்மையாகும்.

இதன் பின்னர் சம்மாந்துறை துறைமுகம் சேறும் சகதியுமாகி நாணற்புட்கள் வளர்ந்து தாமரை கொடிகளினால் மூடப்பட்டு படகுகள் தோணிகள் பிரயாணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் 1900ம் ஆண்டிற்கு பின்பு எம்மவர்கள் தரை வழியாக கல்முனை சென்று கிட்டங்கி துறையூடாக படகுகளில் மட்டக்களப்புக்கு சென்று வந்ததாகவும் தரை வழியாகவும் கரத்தை வண்டிகள் மூலம் கல்லடி சென்று வாகனங்களை அங்கு நிறுத்தி விட்டு மட்டக்களப்பு வாவி ஊடாக படகுகளில் சென்று மட்டக்களப்பில் தனது அலுவல்களை முடித்து வந்ததாகவும் அறியக் கூடியதாக உள்ளது. பின்னர் மட்டக்களப்பு கல்லப்பாலம் கட்டப்பட்ட பின்னர் முழுக்க முழுக்க தரைப் பாதையையே எமது பிரதேசத்தினர் பாவித்தனர்.

பொலன்னறுவை மன்னன் 2ம் விக்கிரமபாகு (கி.பி 1116-1137) காலப்பகுதியில் மட்டக்களப்புப் பகுதி இவரின் ஆட்சி கீழ் இருந்ததாகவும் இக்காலத்தில் மட்டக்களப்பு கரவாகு பகுதியில் இந்திய வர்த்தகர் கூட்டத்தினரும் சேர்ந்து முகையதீன் ஆண்டவர் கரவாகு வந்தனர். இவரின் மகிமையை அறிந்த 2ம் விக்கிரமபாகு தனது வாய் பேச முடியாத மகன் 2ம் விஜயபாகு (கி.பி 1137-1153) என்பவருக்கு வைத்தியம் செய்வதற்காக மன்னர் ஒரு தூதுக் குழுவை கரவாகு அனுப்பி முகையதீன் ஆண்டவரின் வைத்தியத்தின் மூலம் 2ம் கஜபாகு வாய் பேசியதால் சந்தோசப்பட்ட 2ம் விக்ரமபாகு தனது நிர்வாகத்திற்குட்பட்ட கரவாகு பகுதியை இவருக்கு அன்பளிப்பு செய்ததாகவும் மேலும் இப்பகுதியிலுள்ள சகல முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் முகையதீன் பள்ளி என்று பெயரிடப்பட்ட வேண்டும் என்றும் கட்டளையிட்டான். இதனால்தான் சம்மாந்துறையின் பள்ளியை முகையதீன் பள்ளி என்று அழைப்பதை நாம் அறிவோம்.

எமது பகுதியில் இருந்த முதல் பள்ளிகள் எல்லாம் 2ம் விக்ரமபாகு மன்னனின் கட்டளைப்படி முகையதீன் பள்ளி என்று அழைக்கப்பட்டதாகவும் அறியக் கூடியதாக உள்ளது. காத்தாகுடி சாய்ந்தமருது, வாழைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற பகுதிகளிலும் முகையதீன் பள்ளிகள் இருப்பதாகவும் அறிகின்றோம்.

சம்மாந்துறையின் முதல் பள்ளியான சின்னப்பள்ளியும் முகையதீன் பள்ளி என்று அழைக்கப்பட்டதாகவும் இதன் மூலம் இப்பள்ளிவாசல் 1200ம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.

இதன் பின்னர் எமது பிரதேசம் கண்டி செனரத் (1604-1635) என்பவனின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. சம்மாற்துறையிலிருந்து கண்டிப் பகுதிக்கு 5 காட்டுப் பாதைகள் இருந்ததாகவும் இப்பாதை சம்மாந்துறை இங்கினியாகல வெல்லஸ்ஸ பிபிலை ஊடாக கண்டி சென்றதாகவும் இப்பாதையினுாடாக தான் சம்மாந்துறையில் இருந்து தாவளம் என்னும் பயிற்றப்பட்ட மாடுகளின் முதுகின் இரு பக்கமும் பொதிகளில் கருவாடு உப்பு ஆடைகள் போன்ற பொருட்கள் கொண்டு சென்றதாகவும் கண்டிப் பகுதியில் இருந்து மீண்டும் அதே தாவளங்கள் மூலம் காட்டுப்பாதையூடாக சம்மாந்துறைக்கு வாசனைத் திரவியங்கள் தானியங்கள் தேன் யானைத் தந்தம் என்பன பண்டமாற்று மூலம் பெறப்பட்டு சம்மாந்துறையூடாக வியாபாரிகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு கொண்டு சென்றதாகவும் வரலாற்று ஆதாரம் மூலம் அறிகிறோம்.

1475ம் ஆண்டளவில் இந்தியாவில் இருந்து வர்த்தகக் கப்பலில் கோசப்பா என்ற நல்லடியாரும் இவரின் சீடனான கோஸ் முகையதீன் என்பவரும் ஆறு வயதான பெண் குழந்தையான உம்முல் குல்தும் என்பவரும் இலங்கையின் கிழக்குக் கரையுடாக மட்டக்களப்பு வந்து அங்கிருந்து சம்மாந்துறைக்கு மட்டக்களப்பு வாவியின் கிட்டங்களி துறையினூடாக சம்மாந்துறைக்கு வந்து சேர்ந்தார்கள். இவர்கள் தற்போதைய பெரியபள்ளி அமைந்துள்ள இடத்தில் வந்து தங்கி இருந்தனர்.

அந்த இடத்தில் கோசப்பா பள்ளி எனும் பெயரில் ஒருபள்ளிவாயல் கட்டப்பட்டு 1936ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வந்த கட்டமொளலான என்பவர் இந்த இடத்தில் இருந்த சிறு பள்ளியை உடைத்து புதிதாக பெரிய பள்ளியாகக் கட்ட ஊர் மக்களின் அனுமதியைப் பெற்று அவர்களின் ஒத்துழைப்புடன் பெரிய பள்ளி விசாலமாக மெத்தைப் பள்ளியாக கட்டுப்பட்டு 1950ம் ஆண்டு திறக்கப்பட்டது.

இப்பள்ளிவாசல் கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற பள்ளியாகவும் எல்லா மக்களும் திரண்டு வந்து பார்த்தவொரு பள்ளியாகவும் இது காணப்பட்டது.

தற்போது பெரிய பள்ளியை இடித்து (2008) அவ்விடத்தில் விசாலமான இக்காலத்திற்கேற்றவாறு வடிவமாக்கப்பட்ட போது, இங்கிருந்த கபுறுஸ்தானங்கள் அடைாயளம் தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டன.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலப்பகுதியில் தென் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும் இக்காலப் பகுதியில் சம்மாந்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

1800 காலப்பகுதியில் சம்மாந்துறையில் ஈசா முகாந்திரம் என்பவர் செனரத்தின் ஆட்சியின் கீழ் ஆண்டு வந்தார். முகாந்திரம் என்பது குறுநில மன்னர் போன்ற பதவியாகும்.

கரையோரப் பகுதியை ஆங்கிலேயர் 1804ம் ஆண்டு கண்டி பகுதியை ஆட்சி செய்த போது கண்டியை கைப்பற்ற கரையோர பகுதியூடாக கண்டியை நோக்கிச் செல்ல முயன்ற போது ஈசாமுகாந்திரம் தலைமையில் சென்ற படையினர் மட்டக்களப்பு ஒந்தாச்சி மடத்தில் ஆங்கிலேய படையினரை கண்டி செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

சம்மாந்துறை முழு இலங்கைத் தீவிலும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பழம் பெரும் பிரதேசமாகும். பரப்பிலும் அடிப்படைப் பொருளாதார வளத்திலும் கல்வி வளர்ச்சியும் விவசாய அபிவிருத்தியிலும் போக்குவரத்து போன்ற வசதிகளிலும் மேம்பட்ட ஒரு சிறப்பான பிரதேசமாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறையின் கிழக்கில் வயல் வெளிகளிலும் மாவடிப்பள்ளிக் கிராமமும் மேற்குப் பகுதியில் வீரமுனைக் கிராமமும் வடக்கில் வண்ணார் வட்டையும் சேவகப்பற்க் கண்டலும் அல்லைக் குளமும் தெற்கில் கருவாட்டுக் கல் புளக்ஜே பகுதிகளையும் பரப்பெல்லைகளாகக் கொண்டுள்ளது.

1950ம் ஆண்டு முன்பு சனத்தொகை பெரும்பான்மையாக முஸ்லீம்கள் 88 வீதமும் தமிழ் மக்கள் 12 வீதமாக வாழ்ந்தனர். வீரமுனை வண்ணாரவட்டை முக்குவட்டையில் தமிழ் மக்கள் வாழ்ந்தனர். சின்ன பள்ளி பெரியபள்ளி தக்கா பள்ளி புதுப்பள்ளி என்ற 4 பள்ளிவாசல்களும் மெதடிஸ்த மிஷன் பாடசாலை பெண்கள் பாடசாலை அரசினர் பெண்கள் பாடசாலை அரசினர் முஸ்லிம் பாடசாலை கருவாட்டுக் கல் முஸ்லிம் பாடசாலை, கனிஸ்ட பாடசாலை என்ற பாடசாலைகள் மாத்திரமே இருந்தன.

1950ம் ஆண்டுக்கு முன்னர் சம்மாந்துறையில் 33 குடிகள் இருந்ததாகவும் அவற்றில் 3 குடிகள் மறைந்து விட்டதாகவும் அறிகின்றோம். வீரமுனைக் கிராமத்தில் கண்ணகி அம்மன் கோயிலும் தமிழ் குறிச்சியில் பத்திரகாளி அம்மன் கோயிலும் அமைந்திருந்தன. சம்மாந்துறையைச் சுற்றிவர பல ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. நெல்லுப்பிடி ஆறு பாலக்கர ஆறு பள்ளாறு உடங்கா ஆறு பயினன் கட்டு ஆறு குடாவட்டை ஆறு என்ற பல சிற்றாறுகளும் ஓடிக் கொண்டிருந்தன. மேலும் மடத்துக் குளம் சின்ன பள்ளிக்குளம் சிவனார் குளம் ஏத்தாளக் குளம் உடையார் குளம் போன்ற பல சிறிய குளங்களும் அமைந்திருந்தன.

1949ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி கல்லோயத் திட்டத்துக்கான நினைவுத் தூபி நடப்பட்டது. இத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எம்எஸ் காரியப்பர் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கினார். இத்திட்டத்திற்கு நியமிக்கப்பட்ட பிரதான பொறியியலாளர் சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.எம். இஸ்மாயில் எஞ்சினியராவார்.

சம்மாந்துறை மக்களின் 30 ஏக்கர் பூமி இதன் மூலம் நன்மை பெற்றது. எமது மாவட்டத்தில் பெரும் காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு கல்லோயா திட்டத்தின் கீழ் 150 வீடுகள் கொண்ட 36 கொளனி வீடுகள் அமைக்கப்பட்டு ஒரு குடும்பத்திற்கு வீடும் மேட்டுநிலம் அரை ஏக்கர் 3 ஏக்கர் காணியும் வழங்கப்பட்டன.

இவ்வாறு வளர்சசி பெற்று வந்த நிலங்களை இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர் ஆக்கிரமித்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

அதே போல சம்மாந்துறையில் வைத்தியத் துறையிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டு வந்ததனை காணலாம். அக்காலப் பகுதியில் ஆங்கில மருத்துவம் மிகக் குறைவு. எனவே ஆயர்வேத மருத்துவமும் கரிசாரிமாரின் சேவையும் இக்காலத்தின் தேவையாக காணப்பட்டது.

சித்தம்
ஆயுர்வேதம்
யூனானி
ஹோமியோபதி
அஸ்மா குர் ஆன் வைத்தியம்
மாந்ரீக வைத்தியம்

போன்ற வைத்திய முறைகளும் இங்கு காணப்பட்டுள்ளது. சப்பத்தார் பைக்கீர் லெவ்வை பரிசார் உதுமாலெவ்வை பரியாரி நூலாச்சியான் பரியாரி என்போரே மேற்கூறிய வைத்திய முறைகளில் தலைசிறந்தவர்களாக காணப்பட்டனர்.

இத்தகு பல்வேறு வகையான சிறப்பம்சங்களை தன்னகத்தே தாங்கி நிற்கும் சம்மாந்துறையின் நகரானது தற்போதைய நிலையினை நோக்கின் பாரிய வளர்ச்சி கண்டுள்ளதெனக் கூறலாம்.

ஆரம்ப காலத்தில் கல்வி பெறும் வாய்ப்பானது தாம் கொண்டிருக்கும் வசதியை வைத்தே தீர்மானிக்கப்பட்டது. எனினும் தற்போது அந்நிலை முற்றாக மாற்றப்பட்டு காணப்படுகின்றது. இன்றைய நிலையில் சம்மாந்துறையில் வைத்தியர்கள் எண்ணிக்கை 275 ஐயும் தாண்டி காணப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்துக்கான தெரிவு 200-300 வரை காணப்படுகின்றது. அதேபோல பல்கலைக்கழக பட்டதாரிகள் 10,000ஐயும் தாண்டி காணப்படுகின்றனர்.

இவ்வாறு சிறப்பானதொரு வரலாற்று வளர்ச்சியைக் கொண்ட தனித்தன்மை வாய்ந்த ஊராக சம்மாந்துறை திகழ்கிறது.


சம்மாந்துறையில் இடம்பெற்ற பிரச்சினைகளும், இயற்கை அனர்த்தங்களும்

1950ஆம் ஆண்டு காலப் பகுதியில் சம்மாந்துறைப் பகுதிகளில் பாரிய வௌ்ள அனர்த்தம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இலட்சகணக்கான உடைமைகள் அழிவடைந்ததுடன் தொழில்கள், பாதிப்படைந்து பாரிய வறுமை நிலைக்குஉள்ளானர்கள்.

1950-1960இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சூரிய கிரகணம் நடைபெற்றது. இதன் போது காலையில் மகிழ்வோடு உதித்த சூரியனின் ஒளி மறைந்து சுமார் 10 நிமிடங்கள் இருளாக மாறியது. இதனால் மக்கள் பாரிய பதட்டமடைந்து அங்கலாய்ப்பிற்கு உட்பட்டனர். மீண்டும் 10 நிமிடங்களின் பின்னர் சூரிய ஒளி வழமை போன்று பரவியதாக அறிய முடிந்தது.

1976ம் ஆண்டு காலப்பகுதியில் சூறாவளி அனர்த்தம் ஏற்பட்டது. இதனால் மக்களின் வீடுகள் உடைந்தும் உடைமைகள் பாதிப்படைந்தும் பாரிய கஸ்டத்திற்கு உள்ளாகினார்கள்.

1985ம்ஆண்டிலிருந்து தமிழ்-முஸ்லிம் இனக்கலவரம் சம்மாந்துறையில் ஆரம்பமானது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானார்கள். தொழில் நிமித்தம் வெளியே செல்லும் நபர்கள் கொல்லப்படுதல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுதல் வளவுகள் பறிமுதல் செய்யப்படல். பணங்கள் அறவிடப்படல் என பல சிக்கல் நிலைகள் உருவாக்கப்பட்டன. இந்நிலை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்று 1989ம் ஆண்டு இந்திய இராணுவத்தினரும் தமிழர்களும் சேர்ந்து சம்மாந்துறையைத் தாக்கினர்.

மஜீட்புரம், வீரமுனை, மல்வத்தை களனி போன்ற பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் விரட்டப்பட்டனர். அவர்களது வீடுகள் உடைக்கப்பட்டு நெல் உட்பட அனைத்து உடமைகளும் சூரையாடப்பட்ட பின்னர் தீ வைக்கப்பட்டது. இதனால் உடமைகளை இழந்த முஸ்லிம் தமிழ் மக்கள் தமது இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்கள் நாடிச் சென்றனர். இதன் போது மக்கள் கடத்தப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டும் அறுத்துக் கொலை செய்யவும் பட்டனர். முஸ்லிம் மக்கள் முஸ்லிம்கள் செறிந்துவாழும் பிரதேசங்களிற்கும் தமிழர்கள் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிற்கும் இடம் பெயர்ந்து சென்று வாழ்ந்து வந்தனர். தற்போது பிரச்சினையற்ற சூழல் நிலவும் காரணத்தினால் மக்கள் தமது சொந்த இடங்களிற்கு மீளக் குடியேறி தமது புதிய வாழ்க்கையை ஆரம்பித்து வருகின்றனர்.

2004ம்ஆண்டு டிசம்பர் மாதம் கரையோரத்தைச் சேர்ந்த பிரதேசங்களில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் சம்மாந்துறையைச் அண்மித்த பிரதேசங்களான காரைதீவு, நிந்தவூர், கல்முனை, சாய்ந்த மருது மருதமுனை போன்ற கரையோரப் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டு தமது உறவுகளை உடைமைகளையும் பறி கொடுத்து விட்டு சம்மாந்துறையை நோக்கி ஏக்கத்துடன் ஓடி வந்தனர். அடுத்தவர் துன்பத்தில் ஆறுதல். அளிக்கும் மனப்பான்மை கொண்ட இவ்வூர் மக்கள் துன்பத்துடன் வந்தவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று ஆறுதல்படுத்தி அவர்களது துன்பங்களில் தாங்களும் பங்குகொண்டனர். அவர்களுக்கு உண்பதற்கு உணவளித்து உடுக்க உடையும் ஓய்வெடுக்க இடமும் வழங்கினர்.

சம்மாந்துறை மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தமது அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி அவர்களை ஆறுதல் படுத்தினர். அகதிகளாக வந்த மக்களை இனம் மதம் பாராது வரவேற்றனர். ஊரின் பள்ளிவாசல்களிலும் உறவினர் வீடுகளிலும் நகர மண்டபம் பாடசாலைகள் என அனைத்திடங்களிலும் தங்க வைக்கப்பட்டனர். ஒருநபர் தனது வாழ்வாதாரத் தொழிலாக மாட்டு வண்டிலைக் கொண்டிருந்தார். துன்ப்பட்ட மக்களிற்கு உணவளிக்க தனது மாடுகளை வழங்கி இறைச்சியைப் பெற்று அவர்களிற்கு உணவளித்தார். இது பெருமைக்குரிய விடயமாகும்.

மேலும் இறந்தவர்களின் சடலங்களை இவ்வூர் மக்கள் சென்று மீட்டு தமது கனரக வாகனங்களையே கொண்டு சென்று ஏற்றி வந்த பள்ளிவாசல்களில் மக்கள் சேர்ந்து பாரபட்சம்பாராது அவர்களை சுத்தம் செய்து குளிப்பாட்டி கபனிட்டு நல்லடக்கம் செய்தனர். இதற்காக இக்காலப்பகுதியில் இவ்வூரின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயின் அவர்கள் மக்களோடு சேர்ந்து இரவு பகலாக மக்களுடன் ஒன்றிணைந்து சடலங்களை நல்லடக்கம் செய்ய குழி (கபூர்) வெட்டும் செயலில் ஈடுபட்டு முழு மூச்சாக செயற்பட்டமை பெருமைக்குரிய விடயமாகும்.

ஊர் மக்கள் இடம்பெயர்ந்து வந்தவர்களை தமது வீடுகளிலேயே தங்க வைத்துக் கொண்டனர். அத்துடன் கணவனை இழந்தவர்களும் மனைவியை இழந்தவர்களும் தாயை இழந்த தந்தை இழந்த அனாதைகளாக இருந்தவர்களை இவ் ஊரில் உள்ளவர்கள் திருமணம் செய்து புது உறவுகள் உருவாக்கப்பட்டன. இதனால் சம்மாந்துறை ஊரானது ஏனைய ஊர் மக்களினால் மிகவும் பெருமையாகவும் மதிக்கக் கூடிய இடமாகவும் மதிக்கப்படுகின்றது.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License