To my dear friend

The sister shares the significant incidents in her life.


මගේ ආදරණීය යාළුවාට

ජීවිතයේ වැදගත් සිදුවීම් සහෝදරිය පවසයි.


அன்புள்ள நண்பிக்கு

தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சகோதரியொருவர் பகிர்ந்து கொள்கின்றார்.



CMP/AMP/SAM/UTP/04

M. Murugamma
Udayapuram
30.05.2016
My autobiography

Dear friend
I am fine, and pray to god that you are well too. I am going to tell about the incidents in my life. I eloped with my love and married. My family lived in poverty. There were 11 in my family. My brothers and I went to work in the mill, We looked after the family. After marriage I went away.

My husband and I went to the mill for work and looked after our family. I had 4 children. Two of them died. I lived in much difficulty. My eldest son got married, I thought my daughter in law would look after us, but she was a hard woman, she was the reason for me to fight with my son. So I didn’t tell anything. I just let everything happen but I was sad. At this time my second son got married. but she didn’t look after us.

My husband got sick and was admitted to the Sammanthurai hospital for a month, but he was not cured. He got a wound, he was not cured in the hospital. We took him to Colombo hospital and kept him there for three months. Here too he was not cured. We brought him back to the village.

We gave country medicine, but he got worse, he didn’t eat much and got thin. He was not able to walk. We went to the priest at the temple, that didn’t help. He died. The coconut branch fell on his toe, and it brought him death.

I buried him and live with my elder son. I can’t write more. I will write more in the next letter. I finish my story for now.






CMP/AMP/SAM/UTP/04-01

එම්. මුරුගම්මා.

මගේ ජීවිත කථාව.

මා හිතවත් මිතුරිය මා සනීපෙන් ඉන්නවා. එසේ ම ඔබගේ සැප දුක් සඳහා දෙවියන් වහන්සේගෙන් ප‍්‍රාර්ථනා කරනවා.

මගේ ජීවිතේ සිදු වූ සිද්ධීන් ගැන ඔබට කියන්න යනවා. මම ආදරේ (Love) කරලා තමයි විවාහ කර ගත්තෙ. ගෙදරින් පැනලා ගියා. මගේ පවුල හරි දුප්පත්. මගේ පවුලේ සාමාජිකයන් 11 දෙන යි. මම දෙවැනි දරුවා. මම මෝලට වැඩට යනවා. මගේ මල්ලිලත් මෝලෙ වැඩ කරලා තමයි පවුල ජීවත් කෙරෙව්වේ. මම විවාහ වෙලා වෙනත් ගෙදරකට ගියා.

අමාරු යි තමයි. මොනවා කරන්න ද මමයි මගේ ස්වාමි පුරුෂයයි මෝලෙ වැඩට ගිහිල්ලා තමයි පවුල ජීවත් කෙරෙව්වේ. මට දරුවො 04 දෙන යි. එයින් දෙදෙනෙක් මිය ගියා. දරු දෙදෙනෙක් ඉන්නවා. මම බොහොම දුක් විඳලා ළමයි හැදුවා. මෙවැනි තත්ත්වයක් මත ජීවත් වෙමින් සිටිය දී,

මගේ ලොකු පුතා විවාහ වුණා. ගෙදරට ආපු ලේළි හොඳට බලා ගනියි කියලා හිතුවා. ඇය හරි දරුණු යි. ඒකිගෙ කරදර දරා ගන්න බැහැ. ඔවුන්ගේ දරුවා මගේ අතට දෙන්නෙ නැහැ. පුතාට කීවොත් පුතයි ලේළියි රණ්ඩු වෙනවා. ඒ නිසා මම කිසිවක් කියන්නෙ නැහැ. වෙන දෙයක් වෙච්චදෙන් කියලා පාඩුවෙන් හිටියත්,

04-02

හිතට දුක යි. මේ තත්ත්වය මත මගේ දෙවැනි පුතත් විවාහ කර ගත්තා.

ඒ ලේළි අපට සලකයි කියා සිතුවා. ඒ ලේළි ලොකු ලේළිට වඩා අපට සලකනවා අඩු යි. මෙසේ ජීවත් වෙමින් සිටිය දී මගේ ස්වාමි පුරුෂයාට අසනීප වෙලා සම්මන්තුරේ රෝහලේ මාසයක් සිටියා. සනීප වුණේ නැහැ.

කකුලෙ තුවාලයක් හැදුණා. මඩකලපුව රෝහලේ නවත්තලා සිටියා. එහි දීත් සනීප වුණේ නැහැ. ඊට පස්සෙ කොළඹ රෝහලට අරන් ගියා. එහි දීත් සනීප වුණේ නැහැ. මාස තුනක් කොළඹ රෝහලේ නවත්වලා ප‍්‍රතිකාර කළා. එහි දීත් සනීප වුණේ නැහැ. ඊට පස්සෙ කොළඹ රෝහලෙන් ගෙදරට ගෙනාවා.

ගොඩ වෙදකම් කළා. ඔහුගෙ ඇඟ කෙට්ටු වෙලා කෑමබීම නැතුව ඔහුට ඇවිද ගන්න බැරි වුණා. ගොඩ වෙදකමෙනුත් පලක් වුණේ නැහැ. ඊට පස්සෙ පූසාරි කෙනෙක් ළඟට ගිහින් බැලුවා. ඒකත් හරි ගියේ නැහැ. පසුව ඔහු මිය ගියා. පොල් ගහෙන් පොල් අත්තක් තමයි කකුල උඩට වැටුණෙ. ඒක තමයි ඔහුගේ මරණයට හේතුව වුණෙ.

ඊට පස්සෙ ඔහුගේ දේහය භූමදාන කරලා මම මගේ ලොකු පුතාගෙ ගෙදර ඉන්නවා. මට වැඩියෙ ලියන්න බැහැ. ඊළඟ ලිපියෙ ඉතිරිය ලියන්නම්. මගේ කථාව මෙයින් අවසන් කරනවා.

CMP/AMP/SAM/UTP/04

எம் முருகம்மா
உதயபுரம்

எனது வாழ்க்கை வரலாறு

அன்புள்ள நண்பிக்கு நான் நலம் அது போல் நீங்களம் நலமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை உங்களுக்கும் கூறப் போகின்றேன். நான் லவ் பண்ணி கல்யாணம் கட்டினேன். எனதுகுடும்பத்தை விட்டு ஓடிப் போனேன். எனது குடும்பம் மிகவும் கஸ்டமான நிலையில் இருந்து எனது குடும்பத்தில் 11 பேர் நான் இறுதி பிள்ளை. நான் மில்லு வேலைக்குப் போவன். எனது தம்பிமாரும் மில்லு வேலைக்குப் போவார்கள். எனதுதம்பிமாரும் மில்லு வேலைக்குப் போய்த்தான் குடும்பத்தை வளர்த்துவந்தோம். நான் கலியாணம் கட்டியதும் வேறு வீட்டிற்குப் போய்விட்டேன்.

கஸ்டம்தான் என்ன செய்வது. எனதுகணவரும் நானும் மில்லு வேலைக்குப் போய்த்தான் குடும்பத்தைப் பார்த்தோம். எனக்கு 4 பிள்ளைகள் அதில் இரண்டு பேர்இறந்து விட்டனர். இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நான் கடும் கஸ்டப்பட்டு வாழ்ந்து வந்தேன். இவ்வாறான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கையில், எனது மூத்த மகனுக்கு திருமணம் நடந்தது. வந்த மருமகள் நல்லாப் பார்ப்பாள் என்று பார்த்தா அவள் கடும் ஆளா இருந்தாள். அவளுடைய தொல்லை தாங்க முடியவில்லை. என்னிடம் அவர்களுடையகுழந்தையதை் தரமாட்டார்கள். மகனிடம் சொன்னேன். மகனுக்கும் சண்டை வரும் அதனால் நான் ஒன்றும் சொல்வது இல்லை. என்னன்டாலும் நடக்ககட்டும் என்றுவிட்டு விடுவேன். இருந்தாலும் மனதில், கவலை தான். இப்படியான நிலையில் எனதுஇரண்டாவது மகனும் திருமணம் முடித்து விட்டான்.

அந்த மருமகள் எங்களைப் பார்ப்பாள் என்று நினைத்தோம். அவள் மூத்த மருமகளை விட கவனிப்பது குறைவு. இப்படி வாழ்ந்து கொண்டு இருக்கையில் எனது கணவருக்கு வருத்தம் வந்து சம்மாந்துறை வைத்தியசாலையில் 1 மாதம் இருந்தார். வருத்தம் சுகம் ஆகவில்லை.

காலில் ஒரு காயம்தான் வந்தது. மட்டக்களப்புவைத்தியசாலையில் வைத்திருந்தோம். அங்கும் சுகமாகவில்லை. அதன் பிறகு கொழும்புவைத்தியசாலைக்கு கொண்டுசென்றோம். அங்கும் சுகம் ஆகவில்லை. மூன்று மாதம் கொழும்பு ஆஸ்பத்திரியில் வைத்து வைத்தியம். செய்தோம். அங்கும் சுகம் ஆகவில்லை. அதன் பிறகு அதன் பிறகு கொழும்புவைத்தியசாலையில் இருந்துவீட்ட கொண்டு வந்தோம்.

நாட்டு வைத்தியம் செய்தோம் அவர் உடல் மெலிந்து சாப்பாடு இல்லாமல் அவரால் நடக்க முடியவில்லை. நாட்டு வைத்தியமும் கைவிட்டு விட்டது. பிறகு பூசாரியிடம் பார்த்தோம். அதுவும் சரிவரவில்லை. பிறகு அவர் இறந்துவிட்டார். தென்னை மரத்தில் இருந்து தென்னை மட்டைதான் கால் விரலில் விழுந்தது. அதுதான் அவருடைய உயிருக்கு உலை வைத்தது.

அதன் பிறகு அவரை அடக்கம் செய்துவிட்டு நான் எனது மூத்த மகள்ட வீட்டில் இருக்கின்றேன். என்னால் அதிகம் எழுத முடியவில்லை. எனது கதையை முடித்துக் கொள்கின்றேன்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License