I look back at the path that passed


මා යන මාර්ගය දෙස ආපසු හැරී බලන්න


கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்



CMP-MN-Md-PV-04.
I was born in Chavakachcheri, Jaffna. Because my father was working in Trincomalee, I studied at Pulmoddai Muslim Maha Vithyalayam till Grade 5. Later due to India-Sri Lanka accord we moved to Chavakachcheri and studied at Chavakachcheri Central Colleage till my O/L.
Later the conflict situation escalated in our country and I couldn’t continue with my education. I was supposed to sit for my O/L in 1990 but due to the war I sat for it in 1991. But I wasn’t enthusiastic about the studies in 1991, as I was before in 1990.
In the year 1995 we got displaced and stayed in Vishwamadu. We went through so many difficulties and got apart from all our family members. Later we lived together in Vishwamadu. I couldn’t continue with my higher studies due to the difficulties at home. Since we were living in the area under the control of the Movement, I was working at their pass issuing office in Mallavi as a paid employee.
Year 2000 was the period of propaganda for the Tamil armed group. Since we were already working with them, they recruited us during their first propaganda meetings, thinking that we would have better understanding about their actions. After the training they gave us a base. About 12 of us went to Chavakachcheri to protect people’s belongings. That was my job. For about 4 months I stayed in Kaithady and Keraitheevu. Later I came to Vanni for my younger sister’s wedding and then stayed at Puthukudiyiruppu for some time.
Many people know me, because I was working at the pass issuing office for a long time. Because of that I was kept at Pandivirichchan detention camp for about 2 years. I got married in 2003 to a Jaffna girl I fell in love with. It was a rule in our movement that the lovers cannot work at the same place.
Because of that I came to Pallamadu. I got in to trouble at my working place. If we wish to leave them and go home we would be kept in their custody for 5 years. At that time my wife gave a still birth due to not having a proper care. Because of that they released me in one month time. They gave me a letter to protect me from their future recruitments. Because of that letter I escaped the forced recruitments in 2004.
During the war time we take rice in water. We would cook just a handful of rice in 2 to 3 cups of water. That rice and water were our food. Then there was no value for the money, people only valued the goods.
While there was shell attack I found protection under the lorry. There were dead bodies under it and I was hiding among them. All of a sudden I felt something brushing over my leg. It was a girl who got injured and left behind thinking that she was dead. She gained conscious and asked “Brother, I want water”. I went around asking for water but people were busy getting ready to leave the place. It was very difficult to get water. It was the final moments of war and it was not the time to go out but to stay inside the bunkers. Somehow I brought her some water in a coconut shell. When I told about her to others a lady realized that it was her daughter and took her away with a help of some people. Later I heard that she died.
We went to buy rice. A person came along with me died on the spot getting injured in the stomach by the shelling. It was so difficult to pass just 150 meters; it would take 3 hours to pass that distance.
We went up to Mullivaikkaal and stayed at zone 4. I got separated from my wife. She was travelling in one bus and I was at the bus behind it with our baby. They stopped the bus and asked those who were with LTTE to surrender. Because I had the baby they asked me to handover the baby and come.
I came to the camp in May and surrendered to the military in July. I was at Poosa for two years. There were 1200 prisoners in that camp. We get cooking duty on a rotation basis. The military was doing vegetable plantation, about 150 of us would help plucking the vegetables in the morning. This is the kind of work we do. The biggest punishment of all is doing nothing.
They would conduct frequent inquiries. They were not very tough ones. After considering whether to remand me or to send me for rehabilitation, it was decided to send me for rehabilitation since I have already left the group. After rehabilitation I was released on March 2012.
We opened a shop at Pandivirichchan in 2004. It was not my own shop. It was established on loan from my sister-in-law who lives abroad, it was mostly like I was employed to run the shop.
I know the future would not be the way I want it to be. Though we are free from troubles under the present good governance, we don’t have the basic facilities. Those needs have to be addressed. It would be good if the Tamils could enjoy their rights. Things haven’t changed much in our lives.
I have joined a party. But I am stressed out about the thoughts whether to leave the party or to work further with them.
It is dangerous to look back my past life, so I don’t want to do that. Whatever the initiatives I take, I feel anxious.



CMP-MN-Md-PV-04.
මම ඉපදුනේ චාවකච්චේරිවල. අපේ තාත්තා ත්‍රිකුණාමලේ වැඩකළ නිසා මම 05 වසර දක්වා පුල්මුඩේ මුස්ලිම් මහා විද්‍යාලයේ ඉගෙන ගත්තා. ඊට පස්සේ ඉන්දු ලංකා ගිවිසුම හින්දා අපේ ගමවන චාවකච්චේරියට ඇවිල්ලා චාවකච්චේරි මධ්‍ය මහා විද්‍යාලයේ දී සාමාන්‍ය පෙල දක්වා ඉගෙන ගත්තා.
ඊට පස්සේ අපේ රටේ යුධ පසුබිම නිසා දිගටම ඉගෙන ගන්න විදයක් නැතිවුනා. 1990 වසරේ දී මම සාමාන්‍ය‍ පෙළ ලියන්න ඕන. යුද්ධය නිසා කොහොමහරි 1991 දී සාමාන්‍ය‍ පෙළ ලීවා. ඒත් 1990 දී ඉගෙනගන්නකොට තිබ්බ උනන්දුව 1991 දී තිබුනේ නෑ.
අපි 1995 දී අවතැන් වෙලා විශ්වමඩුවල හිටියා. අවතැන් වෙච්ච වෙලාවේ හරිම කරදර මැද්දේ අපේ පවුලේ හිටිය අයත් වෙන්වෙලා ඉඳලා ආයෙත් එකතුවෙලා විශ්වමඩුවල හිටියා. ගෙදර කරදර නිසා මට දිගටම ඉගෙන ගන්න බැරිවුනා. හමුදාවේ පාලනය යටතේ හිටිය නිසා සංවිධානයත් එක්ක එකතුවෙලා පඩියට මන්නාවිවල පාස්දෙන වැඩේ කළා.
2000 දී සංවිධානයේ ප්‍රචාරනය පටන්ගන්න කාළේ. එතකොට ඉස්සෙල්ලම සංවිධානයට සම්බන්ධවෙලා හිටිය අය ගත්තා. පුහුණුව ඉවරවුන ගමන් අපිට ඒරියා එකක් දුන්නා. චාවකච්චේරියට ඇවිල්ලා මිනිසුන්ගේ දේපළ ආරක්ෂා කිරීමට අපි දොළහක් විතර ගිහින් හිටියා. එක් තමයි මගේ ඩියුටිය. මාස හතරක් විතර මම කයිතඩිවලයි, කේරතිව්වලයි හිටියා. ඊට පස්සේ මගේ නංගිගෙ විවාහය නිසා වන්නියට ඇවිත් පස්සේ ටික කාලයක් පුදුකුඩුඉරුප්පුවල හිටියා. මම ගොඩාක්කල් පාස් දෙන වැඩේ කරපු නිසා ගො‍ඩාක් අය මාව දන්නවා. ඒනිසා කෙලින්ම පාන්ඩිරිච්චාන් රැඳවුම් කඳවුරේ අවුරුදු දෙකක් හිටියා. පස්සේ යාපනේ කෙල්ලෙකුට කැමතිවෙලා 2003 දී කසාද බැන්දා. සංවිධානයේ එක කොන්දෙසියක් තිබුනා. කැමැති වුනත් එකම තැනක වැඩ කරන්න බැහැ.
ඒ නිසා පල්ලමඩුවලට ආවා. 2003 වසරේ දී වැඩකරපු තැන ගැටලුවක් මතුවුනා. ගෙදර යනවානම් ඒගොල්ලන්ගේ බාරයේ අවුරුදු 05ක් ඉන්න ඕන. ඒකාලේ පවුලට බ‍බෙක් හම්බවෙන්න ඉඳලා හරියට බලාගත්තෙ නැතිව ඉඳලා නැතිවෙලාමයි ඉපදුනේ. ඒ කාරණය නිසා මාව එක මාසෙන් නිදහස් කළා. මට ලියුමක් දීලා තිබුනා මාව කිසි කෙනෙකුට සංවිධානයට බඳවගන්න බැහැ කියලා. ලියුම තිබුන නිසා 2004 අනිවාර්ය බඳවා ගැනීමේ දී මාව ගත්තේ නැහැ.
යුද්ධය කාලේ කැඳ වතුර තමයි අපි බිව්වේ. හාල් අහුරක් දාලා ඒකට වතුර කෝප්ප තුන හතරක් දාලා බත් උයනවා. ඒ කැඳවතුර තමයි අපේ කෑම. ඒ කාලේ සල්ලිවලට වටිනාකමක් නෑ. බඩුවලට තමයි වටිනාකම. ෂෙල් වදින වෙලාවෙ මම ලොරියක් යට හිටියේ. ලොරිය යට මළමිනී තිබුනා. ඒවා උඩ තමයි හැංගිලා හිටියේ. එකපාරටම කවුදෝ මගේ කකුලෙන් ඇද්දා. බලනකොට තුවාලවෙලා මැරිලා කියලා දාලාගිය ගෑණු කෙනෙක්. එයා ඇස් ඇරලා අයියේ වතු‍ර ඕන කියලා කිවිවා. ගිහිල්ලා වතුර ඉල්ලනකොට හැමෝම අවතැන්වුන වෙලාව. වතුර හොයාගන්න හරි අමාරුයි. ගෙදරින් එළියට යන්නේ නැතිව බංකර්වලටම වෙලා ඉන්න ඔන අන්තිම වෙලාව. කොහොමහරි පොල්කටුවකට වතුර ගෙනල්ලා දුන්නා. ළඟ හිටපු අයට කිව්වාම අයියෝ... ඒ මගේ දුව තමයි කියලා එක අම්මා කෙනෙක් කීවා. ඊට පසසේ කට්ටියත් එක්ක ඇවිත් උස්සගෙන ගියා. පස්සේ එයා මැරුණා කියලා දැනගත්තා.
අපි හාල් ටිකක් ගන්න ගියා. මාත් එක්ක ආපු කෙනෙකුගේ බඩට ෂෙල් එකක් වැදිලා එතනම මැරුණා. එතැන මීටර් 150ක් වත් ඇවිදින්න අමාරුයි. මීටර් 150ක් ඇවිදින්න දින තුනක් ගතවෙන තත්ත්වයක් තමයි තිබුනේ.
පස්සේ අපි මුල්ලි වෛයිකාල් දක්වා අවතැන් වෙලා හතරවෙනි කලාපේ හිටියා. මායි පවුලයි වෙන්වුනා. ඒ කොහොමද කිව්වොත් පවුල ඉස්සරහ බස් එකේ. මායි අත දරුවයි අනිත් බස් එකේ. මගදී බස්එක නවත්තලා සංවිධානයේ හිටපු අයට යටත් වෙන්න කිව්වා. මම දරුවත් එක්ක හිටපු නිසා දරුවව බාර දීලා එන්න කිව්වා.
මම පස්වෙනි මාසේ කඳවුරට ආවා. හත්වෙනි මාසේ හමුදාවට බාර වුනා. පූසාවිල්වල අවුරුදු 05ක් හිටියා. මම හිටපු කඳවුරේ 1200ක් හිටියා. මාරුවෙන් මරුවට උයන ඩියුටිය ලැබෙනවා. හමුදාවෙන් එළවලු වගා කළා. 150ක් විතර දෙනා උදේට එළවලු කඩලා දෙනවා. මේවගේ වැඩ තමයි තියෙන්නේ. දඬුවම් කියලා ලොකු දඬුවමක් නෑ. වරින්වර විමර්ශන තියෙනවා. හරිම අමාරු ප්‍රශ්න කිරීම. කියන්නත් අමාරුයි. මාව රිමාන්ඩ් කරනවද පුනරුත්තාපනය කරනවාද යන්න තීරණය කරගන්න බැරිව ඉඳලා අන්තිමේ දී මම සංවිධානයෙන් අස්වෙලා හිටපු නිසා පුනරුත්තාපන කඳවුරේ ඉඳලා 2012 මාර්තු මාසේ නිදහස් වෙලා සමාජයට ආවා.
අපි 2004 දී පන්ඩිවිරිච්චාන්වල කඩයක් දාගෙන හිටියා. ඒක මගේම කඩයක් නෙවෙයි. පවුලගෙ නංගී රට ඉන්න නිසා ණයට, පඩියට කියන්නත් පුලුවන්. එහෙම කරගෙන යනවා.
අනාගතයේ දී අපි හිතන විදියේ වෙනසක් වෙන්නේ නෑ කියලා මම දන්නවා. දැන තියෙන යහපාලන රජය යටතේ ටිකක් නිදහසේ ජීවත් වුනත් මූලික පහසුකම් නැහැ. ඒවා සම්පූර්ණ කරන්න ඕන. දෙමළ ජනතාව ගැන කීවොත් ඒගොල්ලන්ගේ අයිතීන් ප්‍රචාරය ‍කළොත් තවත් හොඳයි. ඉස්සර හිටපු විදියටමයි දැනුත් ජීවත් වෙන්නේ. මම පක්ෂයකට සම්බන්ධවෙලා ඉන්නේ. එක ප්‍රශ්නයක් දිගටම තියෙනවා. ඒකෙන් අයින් වෙනවද නැත්නම් දිගටම ඉන්නවද කියලා හිතාගන්න බැරිව ඉන්නේ. ආපු දුර ගැන හිතුවොත් අපිට තමයි කරදර විඳින්න සිද්ධවුනේ. ඒනිසා ආපහු හිතලා බලන්න කැමැති නැහැ. මොනවා කරන්න උත්සාහ කළත් පීඩනයක් තියෙනවා.




CMP-MN-Md-PV-04.
நான் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிறந்தேன். எங்கட அப்பா திருகோணமலையில் வேலை செய்ததனால் எனது ஆரம்பக் கல்வியை 5ம் ஆண்டு வரை புல்மோட்டை முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் கற்று வந்தேன். அதன் பிறகு இந்தியா-இலங்கை ஒப்பந்தம் காரணமாக திருகோணமலையில் இருந்து சொந்த இடமாகிய சாவகச்சேரிக்கு வந்து சாவகச்சேரி மத்திய கல்லூரியில் O/L வரை கற்றேன்.
அதன் பிறகு எங்கட நாட்டில் போர்ச்சூழல் கல்வியை தொடர முடியாத நிலை. 1990ம் ஆண்டு நான் O/L எடுக்க வேண்டியது, ஆனால் போரினால் 1991ம் ஆண்டு O/L எடுத்தேன். ஆனால் 90ம் ஆண்டு படிக்கேக்க இருந்த ஆர்வம் 91ம் ஆண்டு படிக்கேக்க இருக்கேல.
1995 ம் ஆண்டு இடம்பெயர்ந்து விஷ்வமடுவில் இருந்தோம். இடம் பெயர்வு என்பது சரியான கஸ்டத்தின் மத்தியில் எங்கட குடும்பத்தில் உள்ளவங்கள எல்லாம் பிரிந்து வந்து பிறகு ஒன்று சேர்ந்து விஸ்வமடுவில இருந்தோம். வீட்டில் கஸ்டம் என்கிறதால மேற்படிப்பை என்னால் தொடர முடியவில்லை. இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள்ள இருந்ததால இயக்கத்தோடு பாஸ் கொடுக்கும் வேலையை சம்பளத்துக்கு மல்லாவியில் வேலை செய்து வந்தேன்.
2000ம் ஆண்டு இயக்கத்தின்ட பிரச்சாரம் ஆரம்பிக்கின்ற காலம். அந்த நேரம் வேலை செய்து கொண்டிருந்தவங்க தங்கள புரிந்து கொள்வார்கள் என்ற அடிப்படையில் முதலாவது பிரசாரத்திற்கு எடுத்தாங்க . பயிற்சியை முடித்தோன எங்களுக்கு ஒரு களம் கொடுத்தாங்க. சாவகச்சேரியில் வந்து மக்களுடைய உடைமைகளை பாதுகாக்கிறதுக்காக நாங்கள் 12 பேர் கிட்ட போயிருந்தோம். அதுதான் என்னுடைய வேலை. கிட்டத்தட்ட 4 மாத காலம் நான் கைத்தடியிலும் கேர தீவிலும் இருந்தன் அதற்குப் பிறகு என்ட தங்கச்சி கல்யாணம் என்டதால வன்னிக்கு வந்து பிறகு கொஞ்ச காலம் புதுக்குடியிருப்பில் இருந்தன்.
நான் நீண்ட காலமா பாஸ் வேலைல இருந்ததால என்ன நிறைய பேருக்குத் தெரியும். அதனால நேரடியா பண்டிவிரிச்சான் தடைமுகாமில 2 வருடம் இருந்தன். பிறகு யாழ்ப்பாண பிள்ளையை விரும்பி பிறகு 2003 ம் ஆண்டு திருமணம் செய்தேன். எங்கட இயக்கத்தில ஒரு கோட்பாடு இருந்தது விரும்பினால் ஒரே இடத்தில் வேலை செய்ய முடியாது.
அதனால பள்ளமடுவிற்கு வந்தன். 2003ம் ஆண்டு வேலை செய்த இடத்தில் முரண்பாடு வந்தது. நாங்க வீட்ட போறதெண்டால் 5 வருடம் அவர்களுடைய தடுப்பில் இருக்கணும். அந்த நேரம் மனைவிக்கு குழந்தை சரியான பராமரிப்பில்லாமல் இறந்து பிறந்தது. அதக் காரணம் காட்டி என்ன 1 மாதத்தில விடுதலை செய்தாங்க. எனக்கு ஒரு கடிதம் தரப்பட்டிருந்தது. என்ன யாராலயம் மீள இயக்கத்திற்கு சேர்க்க ஏலாது என்று. கடிதம் இருந்ததால் 2004 கட்டாய சேகரிப்பில் என்ன எடுக்கேல.
போர்கால சூழலில் தண்ணிக்குள்ளதான் சோறு பாரத்திருக்கின்றோம். ஒரு பிடி அரிசியில் 2,3 டம்ளர் தண்ணீர் விட்டு சோறு காச்சிறது அந்த சோறும் தண்ணீரும்தான் எங்கட சாப்பாடு. அப்ப காசுக்கு மரியாதை இல்ல. பொருளுக்குதான் மரியாதை.
செல் அடிபட்டுக் கொண்டிருக்கேக்க ஒரு லொறிக்கு கீழேதான் இருக்கிறன். அந்த லொறிக்கு அடியில இறந்த உடல்கள் அதற்கு மேலேதான் ஒளிந்து கொண்டிருக்கிறன். திடீரென பார்த்தா என்ட கால வருடிற மாதிரி இருந்தது. பார்த்தா காயப்பட்ட இறந்திட்டா என்று விட்டு விட்டு போன ஒரு பெண். அவ கண் முழிச்சி அண்ணா எனக்கு தண்ணி வேணும் என்டா. தண்ணிக்கு போய் ஆட்களைக் கேட்டா எல்லாரும் அப்பதான் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறாங்க. தண்ணீர் என்கிறது சரியான கஸ்டமான நிலை. வீட்ட விட்டு வெளியே போகாமல் பங்கருக்குள்ளேயே இருக்க வேண்டிய கடைசி நேரம். ஒரு மாதிரி ஒரு சிரட்டைக்குள்ள தண்ணிர் கொண்டு வந்து கொடுத்தேன். பக்கத்தில் உள்ள ஆட்களிடம் சொல்ல ஐயோ அவ என்ட மகள்தான் என்று ஒரு அம்மா சொல்லி ஆட்கள் வந்து தூக்கிக் கொண்டு போனாங்க. பிறகு அவ செத்திட்டா என்று கேள்விப்பட்டேன்.
அரிசி வாங்க போனம். என்னோட வந்த ஒரு நபர் செல் வயிற்றில பட்டு விழுந்து முடிந்து விட்டது. அந்த இடத்தில் 150 மீட்டரை கூட கடக்க முடியாத நிலை. 150 மீட்டரை கடக்க 3 மணித்தியாலம் எடுக்கின்ற நிலைதான் இருந்தது.
திரும்பி முள்ளிவாய்க்கால் வரை இடம்பெயர்ந்து சோன்-4 இல் இருந்தோம். நானும் மனைவியும் பிரிந்து விட்டோம். அது எவ்வாறு என்றால் என்னை முள்ளிவாய்க்காலில் வைத்து விசாரித்துக் கொண்டு இருக்கும் போது மனைவி முன்னுக்கு பஸ்ஸில் நானும் கைக்குழந்தையும் அடுத்த பஸ் இடையில் பஸ்ஸை மறித்து இயக்கத்தில் இருந்தவர்களை சரணடையச் சொன்னார்கள். நான் குழந்தையுடன் வந்ததனால் குழந்தையை ஒப்படைத்து விட்டு வருமாறு கூறினார்கள்.
5ம் மாதம் முகாமுக்கு வந்தேன். 7ம் மாதம் இராணுவத்திடம் சரணடைந்தேன். பூசாவில் 02 வருடங்கள் இருந்தேன். நான் இருந்த முகாமில் 1200 பேர் இருந்தாங்க. சமையல் மாறி மாறி வரும். ராணுவம் மரக்கறி பயிர் செய்து கொண்டிருந்தாங்க. 150 பேர் கிட்ட காலையில மரக்கறி ஆஞ்சு கொடுக்கிறது. இது மாதிரி வேலை என்றது இருக்கும். தண்டனையில பெரிய தண்டனை ஒன்டும் செய்யாமல் இருக்கிறது.
அடிக்கடி தொடர் விசாரணைகள் நடக்கும். கடும் போக்கான விசாரணை என்று சொல்ல ஏலாது. என்ன ரிமாண்ட பண்ணிறதா அல்லது புனர்வாழ்வு அளிக்கிறதா என்ற பிரச்சனையில கடைசியில நான் விலகினபடியால புணர்வாழ்வு முகாமில புணர் வாழ்வு அளிக்கப்பட்டு 2012ம் ஆண்டு 3ம் மாதம் விடுதலையாகி சமூகத்தோட இணைக்கப்பட்டேன்.
2004ம் ஆண்டு பண்டிவிரிச்சானில் ஒரு கடை போட்டிருந்தோம் இது என்ர சொந்தக் கடையில்ல மனிசிட தமக்கை வெளிநாட்டில இருக்கிறதால கடன் அடிப்படையில சம்பளத்திற்கு என்றும் சொல்லலாம் நடத்திக் கொண்டிருக்கிறன்.
எதிர் காலத்தில் நாங்கள் நினைக்கின்ற மாதிரி மாறாது என்று எனக்குத் தெரியும். இப்ப இருக்கிற நல்லாட்சி அரசாங்கத்தில் ஓரளவு சுதந்திரமான வாழக்கை வாழ்ந்தாலும் அடிப்படையான வசதி இல்ல. அவைகளை நிவர்த்தி செய்யோணும். தமிழ் மக்கள பொறுத்தளவி;ல் அவர்களுடைய உரிமைகள் பகிரப்பட்டால் இன்னும் நன்றாக இருக்கும். வாழ்ந்த காலத்தில் இருந்த அதே மாதிரிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறம்.
நான் ஒரு கட்சியில இணைந்திருக்கிறன். ஒரு அழுத்தம் இருந்து கொண்டே இருக்குது. அதிலிருந்து விலகிறதா அல்லது மேற்கொண்டு செயற்படுகிறதா என்ற ஐயப்பாட்டில் இருக்குது.
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறதால எங்களுக்கு ஆபத்து இருக்கிறது. அதனால அத திரும்பி பார்க்க விரும்பிறதில்ல. எத செய்ய முயற்சி செய்தாலும் ஒரு பதட்ட நிலைதான் எங்களுக்கு இருக்கு







A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License