Problems grew

Experiential sharing on war


ගැටලු වර්ධනය විය

යුද්ධය අත්දැකීම්


பிரச்சினைகள் அதிகமாயின

போர் தொடர்பான அனுபவ பகிர்வு





CMP/MN/Md/PV/09
1985 දී පණ්ඩිවිරිච්චාන්වල පියතුමා මගින් ටික‍ දෙනෙක් පදිංචි කෙරෙව්වා. අපේ අම්මගේ, තාත්තාගේ ගම බෙංගාලේ. මට සහෝදරයෝ පස් දෙනෙක් ඉන්නවා.
මට අවුරුදු 8 දී යුද්ධේ පටන් අරන් අපි එතකොට පොඩි ළමයි. හමුදාවෙන් එනවා කියලා අපේ අම්මා තාත්තා අපිව කැලේට අරන් ගිහිල්ලා දවස් හතරක් පහක් කෑමත් නැතිව කැලේ අස්සේ කූඩාරමක් ගහගෙන හිටපු කාලෙකුත් තියෙනවා. අවුරුදු නවයක් දහයක් ඇති. අපි හැම වෙලේම පොළවේ යට බංකර් ගහගෙන වැඩිපුරම බංකර් ඇතුලේ තමයි අපි හිටියේ.
ඒ වගේම ඉස්කෝලෙට ගියත් අපි ඉගෙන ගත්තේ යුද්ධය ගැන. යුද්ධය තමයි අපේ හිතේ වැඩිපුරම තැම්පත් වෙලා තියෙන්නේ. එහෙම ඉන්න ගමන් 1990 දී හැමෝම එල් ටී ටී එකට හොරෙන් හමුදාවටත් බයේ එල් ටී ටී ඊ එකටත් බයේ හොරෙන් වෑන් එකක තලෛයිමන්නරමට ගිහිල්ලා එහෙ ඉඳන් හොරෙන්ම බෝට්ටුවක නැගලා රාමේෂ්වරන් ගියා. එහෙ 90 ඉඳන් 95 වෙනකම්ම අපේ ජීවිතේ ගතවුනා.
ආයේ එහෙදී ඉන්දියන් හමුදාව ලංකාවේ අනාථයෝ කියලා මුද්දරයක් ගහලා ඒ පොඩි වයසේ දීම ඉගෙන ගන්න කරදර වෙලා ඒ පොඩි ව‍යසෙම මං වැඩට ගිහින් තියෙනවා. වැඩට ගිහිල්ලත් මම ඉගෙන ගත්තා. පස්සේ වයස 15 කට පස්සේ මෙහෙ අවිල්ලත් යුධ බිය තමයි හිතේ තදින්ම කාවැදිලා දිගින් දිගටම පීඩා කළේ. අඩු වුනේම නැහැ.
ආයේ අවුරුදු 15 ඉඳලා ‍කොහේ ගියත් ලංකා හමුදාව එනවා. ඉංදියන් හමුදාව එනවා. ටෙලෝ ගහනවා කියලා ප්‍ර‍ශ්න. ඊට පස්සේ ටික කාලෙකින් ලංකාවේ හමුදාව පණ්ඩිවිරිච්චාන්වලට ආවා. හමුදාව එල් ටී ටී ඊ එකත් එක්ක ගැටිලා එල් ටී ටී ඊ පසුබැහැලා යනවත් එක්කම අවුරුදු තුනක් ලංකා හමුදාවේ කඳවුරක හිටියා. ඒ අවුරුදු තුන බය නැතුව, ජීවිත තර්ජනයක් නැතුව හිටියා. ඒ අවුරුදු තුනට පස්සේ ආයෙත් යුද්ධයක්.
මට අවුරුදු 21 දී මම විවාහ වුනා. මගේ ළමයට මාස 09ක් වෙලා තියෙද්දී ඒ කාළේ යුද්ධය දරුණුයි. එහෙදිත් අපි මඩුවලට දුවනවා, ආයේ එනවා. අපිව බේරගත්තේ මඩු මාතාව තමයි. අන්තිම යුද්ධයේ දී 2006 දී හැමෝම යුද්ධෙට සහභාගී වෙච්ච අන්තිම යුද්ධෙ දී ලංකාවේ හමුදාවයි එල් ටී ටී ඊ එකයි අතර දරුණු ගැටුම් තිබ්බ වෙලාවේ අපි හිටියේ එල් ටී ටී ඊ පාලනය යටතේ. වවුනියාව දිස්ත්‍රික්කය හමුදා පාලනය යටතේ තිබුනා. මේ දෙගොල්ල අතරේ ගැටුම් සිද්ධ වෙනකොට ක්ලේමෝර් ගොඩක් පත්තුවුනා. ෂෙල් ගැහුවා. කැලේට ගිය අය මැරිලා තියෙනවා. දර කඩන්න ගිය අය මැරිලා තියෙනවා. පාරේ ගිය අය මැරිලා තියෙනවා. කවුද ගහන්නේ.. කාටද ගහන්නේ කියලා තේරෙන්නේ නෑ. එල් ටී ටී ඊ ගහනවද හමුදාව ගහනවද කියලා අපට තෙරෙන්නේ නෑ. මැරිච්ච අයව අපි ඇස් දෙකෙන්ම දැක්කා.
ඊට පස්සේ අපේ ගමේ ඉඳන් ප්‍රශ්න වැඩිවේගෙන ආවා. අපේ පැත්තට හමුදාව එනවා. අපේ ගමේ ඉඳන් කිලෝ මීටර තුනක් එ‍හාට පයින් ගිහිල්ලා එතකොට මගේ පුතාට සනීප නැහැ. පුතා මහත්තයා එක්ක යවලා මම අවුරුදු නවයේ ළමයයි 2006 ඉඳන් අවුරුදු තුනක් ම අවතැන් වෙලා බේරෙයි ද නැද්ද කියලා දන්නේ නැතිව තනියම මුල්ලි වයික්කාල් දක්වා ගියා.
මුල්ලි වයික්කාල්වල මස තුනක් කන්න දෙයක් නැතුව වතුර බිබී හිටියා. හිතෙකකොට දුක හිතෙනවා. මට මහත්තයාට කතා කරන්න විදියකුත් නෑ. ලියුමක් ලියන්නවත් මොකවත්ම නැහැ. එහෙම ඉන්නකොට අන්තිම කාලේ දී මාතලං වෙරළේ දී මම බෝට්ටුවක නැගලා යාපනේට ගියා.
පස්සේ එහෙ ඉඳන් ‍2009 මාර්තු මාසේ 04 වෙනිදා බෝට්ටුවක නැගලා පස්වෙනිද යාපනේ මුහුදට ගිහිල්ලා හමුදාවට බාරවෙලා කටුකම්බිවල හිර ජීවිතය ගෙවලා ආයෙත් මාස 12 කට පස්සේ තමයි ඒ ගොල්ලෝ මාව හොයාගෙන එළියට අරන් මෙහෙ ගෙනෙල්ලා නැවත පදිංචි කළේ. 2010 දී මෙහෙට ආවා.
2010. 01. 20 දිනෙන් පස්සේ අද දක්වාම යුද්ධයක් නැතිව අපි දැන් හොඳ තත්ත්වයක ඉන්නවා.
‍අපේ ගමට ආපු වෙලාවේ කිසිම දෙයක් තිබුනේ නැහැ. අපේ ඉඩමේ වෙන කාටවත් පදිංචි වෙන්න දෙන්නේ නැතිව තිබුනා. කොහෙ බැලුවත් බෝම්බ, බංකර්, සොහොන් එහෙම තිබුනා. ඒත් මෙහෙට ආවට පස්සේ අපේ ඉඩම් ඔක්කොම මැග් ආයතනයෙන් බාරගෙන මීටර් 50 කින් එහාට යන්න එපා කියලා ඒවා අස් කළා.
අවුරුදු තුනකට පස්සේ අපි අපේ පොළවේ පය තිබ්බා. ගොවිතැනක් කරන්නත් අමාරුයි. ළමයි ඉගෙන ගන්නවා. ඊට පස්සේ ගොවිතැන් කරමු කියලා වත්ත සුද්ධ කරනකොට එතන බෝම්බයක් තිබිලා පුපුරලා මගේ ඇඟ පුරාම තුවාළ. ඒත් ජීවිතයට මොකුත් වුනේ නැහැ. තාම ඔලුවේ කෑල්ලක් තියෙනවා. දැන් ඒ කෑල්ල ගත්තොත් ඉණට පහළ පණ නැතිවෙයි කියන තත්ත්වයක් තියෙනවා. අපේ රස්සාව කුළී වැඩයි ගොවිතැනයි තමයි. ඒ රස්සාව කවදාවත් අතහරින්න බැහැ. ඒකත් එක්ක පොඩි කඩයක් තියාගෙන ඉන්නවා. කුකුලෝ හරක් හදනවා. දැන් වාහනයක් ලීස් එකට අරන් තියෙන්නේ. දැන් මෙහෙම අපේ ජීවිතේ ඉස්සරහට අරගෙන යනවා.
අපි එක එක පඩිය නගිනකොට යුද්ධෙ කාලේ සිද්ධ වෙච්ච දේවල් මතක් වෙනවා. මම කිලෝ මීටරයක් විතර දුර ලේ වැටිච්ච පාරක ගිහින් තියෙනවා. මම කෑම නැතිව මාස තුනක් හිටියා. දැන් මට අවුරුදු 38 යි. මට අවුරුදු 8 ඉඳන් 34 වෙනකම්ම යුද්ධෙයි.. අවතැන් වීමයි.. තමයි.
අවුරුදු 34 ට පස්සේ තමයි නිදහසේ හුස්මක් අරගෙන ජීවත් වෙන්නේ. මේක මෙහෙමම තියෙන්න ඕන කියලා හිතනවා. අයේ පටන් ගන්න හොඳ නැහැ. මගේ දුවට දැන් වයස 17 ක්. දැන් අවුරුදු 05 ක ඉඳන් තමයි බයක් නැතිව ඉන්නේ. මම විඳපු දුක් අපේ පරම්පරාව වත් අපේ ළමයිවත් විඳින්න හොඳ නැහැ කියලා තමයි මගේ අදහස.
මම කෑම්ප් එකේ දී කටුකම්බි 07 ක් ඇතුළේ හිටියා. ඒගොල්ලෝ දෙන කෑම තමයි කන්න ඕන. කෑම අඩුපාඩුවක් නැතුව තිබුනා. ඒත් ඒ කෑම පිළිගන්න බෑ කියලා අදහසක් තිබුනා. ටික දවසක් යනකොට ඒ කෑම බාරගත්තා. ආයේ නෑදෑයෝ ඇවිල්ලා අපිව බලලා උදව් කළා. අපි කඳවුරේ දී ගොඩාක් දුක් වින්දා. අපි එල් ටී ටී ඊ පාලනය යටතේ ඉඳලා පණ බේරගෙන දුවලා ආපු වෙලාවේ ඇඳගෙන හිටපු ඇඳුම පිටින් තමයි ආවේ. අපිට ඇඳුම මාරුකරගන්නවත් කවුරුවත් ඇඳුමක් දුන්නේ නැහැ. දවස් තුනකට පස්සේ තමයි හමුදාවද ආයතනද දන්නේ නෑ කෑමයි ඇඳුනුයි දුන්නා. අපි මුහුදේ වතුරත් බීලා තියෙනවා. කරදරයක් නැති තැනකට ගිහින් නැවැත්තුවට පස්සේ තමයි ඉස්සර තිබ්බ ලෙඩ මතුවෙලා ආවේ. අපි අවුරුදු තුනක් ජීවත් වෙච්ච ජීවිතයට වඩා මේ ජීවිතය හොඳයි.
අපේ ගෙදර ඉඳන් මාර්තු ‍12 වෙනිදා එළියට බැහැලා ගියා. එළියට ගිහිල්ලා කිලෝ මීටර් 03 ක් ඇතුළත තමයි හිටියේ. පණ්ඩිවිරිච්චාන්වලට හමුදාව ආවම මඩුවලට යනවා. මඩුවලට ආමි ඇවිල්ලා අල්ලගන්නකොට තච්චනාමඩුවලට යනවා. මඩුවලත් කට්ටිය හිටියා. තච්චනාමඩුවල ඉස්කෝලයක් තිබුනා. මඩුවල ඉස්කෝලයක් නැති නිසා මඩුවල ඉඳන් තච්චනාමඩුවලට ළමයි එනවා. ඒ ළමයා ආපහු එන වෙලාවට තමයි මඟදී ක්ලේමෝර් පිපුරුනේ. ඒක හමුදාවෙන් තිබ්බද එල් ටී ටී ඊ එකෙන් තිබ්බද දන්නේ නැහැ. ඒක අපිට වැඩක් නැහැ. ‍එත් දුක් වින්දේ ඉස්කෝල ළමයි. එතනින් හතර දෙනෙක් තමයි බේරුනේ. ප්‍රින්සිපල් ඇතුලුව ඔක්කොම මැරුණා. ළමයි නව දෙනෙක් එතනම මැරුණා. ‍ටීචර් ලා දෙන්නෙකුයි, ප්‍රින්සිපලුයි කෝමා එකෙන් ඉඳලා දවස් හතකට පස්සේ තමයි මැරුණේ. ඒක දැනුත් අපිට මැවිලා පේනවා. එදා එක ළමයෙක් කියලා තියෙනවා මම අද ඉස්කෝලේ යන්නේ නෑ කියලා. එතකොට විභාගය ළඟයි. යන්න ඕන කියලා අම්මා බලෙන්ම යවලා. 2006 දී මේ ක්ලේමෝර් සිද්ධිය වුනේ.
ඒ විදියට ඒ වෙඩි සද්ධ තාමත් අපේ කන්වල රැව් දෙ‍නවා. කොහේ හරි තැනක ෂෙල් එකක් හරි, මෝටාර් එකක් හරි වැදුනොත් අපි මෙහෙ බයවෙනවා. එහෙ ෂෙල් එකක් වැදුනා නම් අපි ළමයිවත් ඇදගෙන බංකර්වලට දුවනවා. බංකර්වල තමයි අපේ ජීවිත සම්පූර්ණයෙන්ම ගෙවුනේ. පොළවේ වලක් හාරලා ඒකට බැහැලා තමයි අපි වැඩිපුර ජීවත් වුනේ. පණ තිබුනොත් මොනවාහරි කරන්න පුලුවන් කියලා අපි අන්තිම වෙලාවේ ඇඳගෙන හිටපු ඇඳුම පිටින් දුවලා අද ජීවිතය අතින් අරගෙන ඉන්නවා.
2008 අන්තිමේ දී මුල්ලි වයික්කාල්වල දරුණු ගැටුම් ඇතිවුන වෙලාවේ මමත් එක්ක විසි දෙනෙක් විතර හිටියා. එතකොට දෙයියනේ අපි මැරෙන්න ඕන කියලා තමයි හිටියේ. එතකොට ජීවත් වෙන්න ආසාවක් තිබ්බේ නැහැ. අපි ඉස්සරහ දීම අම්මට ෂෙල් වදිනවා. තාත්තා මැරිලා ළමයි ඉන්නවා. ළමයි මැරිලා අම්මලා ඉන්නවා. ඒවගේ දේවල් අපි ඇස් දෙකෙන්ම දැක්කා. එතකොට මම දෙවියන්ට කිව්වා ෂෙල් වැටෙනවානම් මටයි, ළමයටයි දෙන්නටම වැටෙන්න ඕන. මට වැටිලා ළමයා ඉතුරු වෙන්න එපා කියලා. ඒ කියන්නේ මම මැරුණොත් ළමයා කොහේ යන්නද? ඒ වගේ මරණ භයක් තිබුනා. මරණය හැමෝටම එකපාර එන්න ඕන කියලා තමයි අපි හිතුවේ. මාතලං ඉස්පිරිතාලේ ළමයින්ට උණ හැදිලා ගියත් බෙහෙත් නැහැ. අතේ තුවාළ වෙලා ගිය සහෝදරයෙක්ගේ අත මගේ ඉස්සරහ දීම කපලා දැම්මා මම දැක්කා. ඉස්පිරිතාලේ කුණු වතුර යනවා. ඒත් මම බලාගෙන ඉඳලා තියෙනවා.. ලේ තමයි යන්නේ. කොහේ බැලුවත් මරණය තමයි. මරණය දැකලා අපි භය වුනේ නැහැ. මැරෙනවා නම් මැරෙන්න ඕන. අතපය නැතිව ඉන්න එපා කියලා ගොඩක් වෙලාවට හිතුවා.
මට අමතක කරන්න බැරිම දෙය යුද්ධය. අපි යුද්ධයෙන් බැට කාලා මෙච්චර කාලෙකට තුවාළයක්වත් ජීවිත හානියක්වත් නැතිව නැවත පදිංචි කළාට පස්සේ මගේ වත්තේ දීම බෝම්බයක් වැදිච්ච එක අමතක කරන්න බැහැ. යුද්ධය මට මැරෙනතුරු අමතක කරන්න බැහැ. යුද්ධයෙන් කී දෙනෙක් මැරුණද? ඒ ගොල්ලන්ගේ නමුත් අමතක වෙලා. යුද්ධයට මුහුණ දීලත් අපි පණ පිටින් ඉන්නවා. ඒක අපි කරපු පිනක්ද, අපේ අම්ම තාත්තා කරපු පිනක් ද තේරෙන්නේ නැහැ. දෙවියෝ අපිට දුක් දුන්නත් ජීවිතයට කිසිම කරදරයක් නැතිව ආරක්ෂා කළා. ඒකට දෙවියන්ට ස්තූති කරන්න ඕන. මට අමතක කරපු දේවල් මතක් කරන එක දුකක්. ඔයගොල්ලෝ අහපු නිසා තමයි මම කිව්වේ. පොඩි කාලේ දී මම දුක් විඳපු දේවල් මැරෙණකම් මට මතක් වෙනවා. ‍මගේ ළමයින්ටත් මම කියනවා අපි මෙහෙම දුක් වින්දා කියලා. මගේ ළමයි පණ්ඩිවිරිච්චාන්වල ඕ ලෙවෙල්වලින් හොඳ ප්‍රතිඵල අරන් තියෙනවා. මම ඉගෙන ගත්ත කාළේ පොතක් අරන් දෙන්නවත් බැරි තත්ත්වයක අම්ම තාත්තා ඉද්දී වැඩට ගිහිල්ලා තමයි ඉගෙන ගත්තේ. ඒ කරදර අපේ ළමයින්ට නැහැ. ඒ තත්ත්වය මගේ ළමයින්ට වෙන්න එපා කියලා මගේ ළමයි හොඳට ඉගෙන ගෙන හොඳ තැනකට එන එක තමයි මගේ බලාපොරොත්තුව.


CMP/MN/Md/PV/09
1958ம் ஆண்டு பண்டிவிரிச்சானில் பங்குத்தந்தை ஊடாக கொஞ்ச மக்கள் குடியேற்றப்பட்டார்கள். எங்கட அப்பா அம்மாட சொந்த இடம் வங்காலை எனக்கு 05 சகோதரங்கள்
எனக்கு எனக்கு 8 வயசில யுத்தம் தொடங்கி நாங்க சின்னப் பிள்ளைகள் ஆமி வருது என்று எங்கள எங்கட தாய் தகப்பன் காட்டுக்குள்ள கொண்டு போய் 4 5 நாள் சாப்பாடு இல்லாம கூட காட்டுக்குள்ள குடிசை அமைச்சி இருந்த காலமும் இருக்கு . 9 வயது 10 வயசு மட்டுக்கும் நாங்க எந்த நேரமும் நிலத்திற்கு கீழே பங்கர் வெட்டிக் கொண்டு எங்கட வாழ்க்கை கூடுதலா பங்கருக்குள்ளதான் இருந்தது.
அதேபோல பாடசாலைக்கு போனாலும் நாங்கள் எடுத்துக் கொண்ட பாடம் இந்த யுத்தம். யுத்தம்தான் எங்கட மனதில் மிக ஆழமாகப் பதிந்து இருக்கின்றது. அப்பிடி இருக்கேக்க 1990ம் ஆண்டு எல்லாரும் வந்து LTTE க்கு தெரியாம ஆமிக்கும் பயப்படணும் LTTE பயப்படணும் களவாக ஒரு வேனில தலைமன்னார் போய் அங்கிருந்து களவாகவே போர்ட்ல இராமேஸ்வரம் போனோம். அங்க 90 இ;லிருந்து 95 மட்டும் எங்கட வாழ்க்கை போனது.
திருப்பி அங்கயும் இந்திய இராணுவம் இலங்கை அகதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அந்த சிறு வயதிலேயே கல்வி கற்கிறதுக்கு கஸ்டப்பட்டு அந்த சின்ன வயசிலேயே நான் வேலைக்கு போயிருக்கிறன். வேலைக்குப் போய் கூட என்ட கல்வியை தொடரந்து இருக்கிறன் பிறகு 15 வயதிற்குப் பிறகு இங்க வந்தும் யுத்த பயம் எங்கள் மனதில் ஆழமாக யத்தத்தின்ட தாக்கம் அதிகரித்ததே தவிர குறையவே இல்லை.
திருப்பி 15 வயதிலிருந்து எங்க போனாலும் இலங்கை ராணுவம் வருது, இந்தியா ராணுவம் வருது. டெலி அடிக்குது என்று சொல்லி பிரச்சனை அதற்குப் பிறகு ஒரு கொஞ்ச காலம் இலங்கை ராணுவம் 98 இல பண்டிவிரிச்சானுக்கு வந்தது ராணுவம் LTTE யோட சண்டை பிடிச்சு LTTE பின்நோக்கி போனதும் 3 வருடம் இலங்கை இராணுவம் முகாமிட்டு இருந்தது. அந்த 3 வருடம் பயமில்லாம உயிர் ஆபத்து இல்லாமல் இருந்தோம். அந்த 3 வருடத்திற்கு பிறகு திருப்பி ஒரு யுத்தம்.
நான் 21 வயதில் திருமணம் செய்தேன். எனது பிள்ளைக்கு 9 மாதம் இருக்கேக்க அந்த நேரம் கடும் யுத்தம். திருப்பி அதிலேயும் நாங்கள் மடுவுக்கு ஓடுவதும் திரும்பி வருவதுமாக இருந்தோம். எங்களுக்கு தஞ்சம் மடுமாதான். கடைசிக் கட்டம் 2006 ம் ஆண்டு எல்லாரும் யுத்தத்துக்கு முற்றுமுழுதான கடைசி இறுதி யுத்தம் இலங்கையில் இராணுவத்திற்கும் LTTE இற்கும் பயங்கர யுத்தம் வந்தபோது எங்கட வந்து LTTE இன் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. வவுனியா மாவட்டம் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இவர்கள் இரு தரப்பினரும் சண்டை பிடிக்கேக்க நிறைய கிளைமோர் வெடிச்சிருக்கு செல் வெடிச்சிருக்கு காட்டுக்குள் போனவர்கள் செத்து இருக்கின்றார்கள். விறகுக்குப் போனவர்கள் செத்து இருக்கின்றார்கள்.வீதியால் போனவர்கள் செத்து இருக்கின்றார்கள். யார் அடிக்கின்றார் யாருக்கு அடிக்கின்றார்கள் என்று தெரியாது. LTTE அடிக்குதா ராணுவம் அடிக்குதா என்று எங்களுக்குத் தெரியேல எங்கட கண் ஊடாகவே நாங்க கண்டிருக்கிறோம். செத்திருக்கிறாங்க.
அதன் பிறகு எங்கட ஊரில் இருந்த பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டு வருது எங்களை நோக்கி இராணுவம் வந்த கொண்டிருந்தான். எங்கட ஊரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அங்க இருந்து நகர்ந்து நகர்ந்து என்ர மகனுக்கு சீரியஸ் என்டு சொல்லி என்ர மகனை புருசனோட அனுப்பிட்டு நானும் 9 வயது பிள்ளையும் 2006 இல் இருந்து 3 வருடங்கள் இடம்பெயர்ந்து; தப்புவமோ இல்லையோ என்று தெரியாமல் தனியா முள்ளிவாய்க்கால் வரை போனன்.
முள்ளிவாய்க்காலில் 3 மாதங்கள் சாப்பிட சாப்பாடு இல்லாமல் வயிற்றில் தண்ணீரை தடவி கொண்டு இருப்போம். நினைத்தால் வேதனையாக இருக்கு எனக்கு எனது கணவரின் தொடர்பும் இல்லை. கடிதத் தொடர்போ எதுவுமே இல்ல. அப்பிடி இருந்த நேரம் கடைசிக்கட்டத்தில் மாத்தளன் கடற்கரையில் ஒரு போட்டியில் நானாகவே ஏறி அந்த போட் யாழ்ப்பாணத்தில் கரையேறியது.
பிறகு அதிலிருந்து 2009ம் ஆண்டு பங்குனி மாதம் 4ம் திகதி அந்த போட்டில் ஏறி 5ம் திகதி யாழ்ப்பாணக் கடலுக்குப் போய் அங்கு இராணுவத்தின் கைகளில் நாங்கள் பொறுப்பேற்று 7 பட்டுக் கம்பிக்குள்ளே சிறை வாழ்க்கை வாழ்ந்து திருப்பி ஒரு 12 மாதங்களுக்குப் பிறகுதான் அவர்கள் என்னைக் கண்டுபிடித்து வெளியெடுத்து இங்க கொண்டு வந்து அங்கால மீளக் குடியேற்றி 2010 ம் ஆண்டு இங்கு வந்தோம்.
2010-01-20ம் திகதியில் இருந்து இற்றை வரைக்கும் திருப்பி யுத்தம் எல்லாம் முடிவடைந்து இப்ப நாங்கள் ஒரு நல்ல நிலையில இருக்கிறம்.
எங்கட ஊருக்கு வந்த நேரம் எந்த உடமையுமே இல்லை. எங்கட காணிக்குள் வேறு யாரையுமே குடியேற விடாதநிலையில எங்கு பார்த்தாலும் வெடிகுண்டுகளும் பங்கருகளும் புதைகுழிகளும் கிடந்து ஆனால் இங்கு வந்த பின்னர் எங்கட காணிகளை எல்லாம் அதை MAG நிறுவனம் பொறுப்பெடுத்து 50 மீட்டர் தூரத்தில போகக் கூடாது என்று சொல்லி வச்சிருந்து இவற்றை அகற்றினர்.
பிறகு 3 வருடத்திற்கு பிறகு எங்கட மண்ணில கால் வச்சனாங்க. தோட்டம் செய்றதா இருந்தாலும் கஸ்டம் பிள்ளைகளும் படிக்கிற பிள்ளைகள் அதற்கு பிறகு தோட்டம் செய்வோம் என்று காணியை துப்பரவாக்கிய நேரம் அதுக்குள்ளே ஒரு குண்டு கிடந்து வெடித்து எனக்கு உடம்பெல்லாம் காயம் ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை இன்னும் தலையில் பீஸ் இருக்கின்றது. இப்ப அந்த பீஸை எடுத்தா இடுப்பிற்கு கீழ பெரலைஸ் ஆகும் என்கிற சூழ்நிலை இருக்கிறது. எங்கட தொழில் கூலிவேலை விவசாயம் தான். அந்த தொழில் எங்கள எந்த நாளும் கைவிடாது. அத்தோட ஒரு சின்னக்கடை வைத்திருக்கின்றோம். கோழி மாடு வளர்க்கிறோம். இப்ப ஒரு வாகனம் லீசுக்கு எடுத்திருக்கிறோம். இப்படி எங்கட வாழ்க்கையை நாங்கள் முன்னேற்றிக் கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் ஒவ்வொரு ஏணியில் ஏறேக்க நாங்கள் யுத்த காலத்தில் நடந்து வந்த பாதைகள் ஞாபகத்திற்கு வருகின்றது. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட நான் இரத்தத்தில கால் வைச்சு நடந்திருக்கிறன். நான் சாப்பாடு இல்லாமல் 3 மாதம் இருந்தேன். இப்ப எனக்கு 38 வயது எனக்கு 8 வயதில் இருந்து 34 வயது மட்டும் ஒரே யுத்தமும் இடப்பெயர்வும் தான்
34 வயதிற்குப் பிறகு தான் நிம்மதியா ஒரு சுவாசக் காற்றை சுவாசிச்சுக் கொண்டு இருக்கிறோம். இது இப்படியே இருக்கோணும் என்று நினைக்கின்றோம். திருப்பி தொடரக் கூடாது. என்ர மகளுக்கு இப்ப 17 வயது இப்ப 5 வருடமாகத்தான் பயமில்லாம இருக்கிறாங்க. நான் அனுபவித்த வேதனைகளை எங்கட சந்ததிகளோ எங்கட பிள்ளைகளே அனுபவிக்கக் கூடாது என்கிறதுதான் என்ர கருத்து.
நான் Camp இல் 7 பட்டுக் கம்பிக்குள் இருந்தேன். அவர்கள் தருகின்ற சாப்பாட்டைத்தான் சாப்பிட வேண்டும்.சாப்பாட்டுக்கு குறைவில்லாமல் இருந்தது ஆனா அந்த சாப்பாட்டை ஏற்றுக் கொள்ளாத தன்மை இருந்தது. நாளடைவில அந்த சாப்பாட்டை ஏற்றுக் கொண்டிட்டோம். திருப்பி உறவுகள் வந்து எங்களைப் பார்வையிடுற உதவிகளை வழங்கினாங்க. அந்த முகாமுக்குள் நிறைய வேதனைகளை அனுபவித்தோம். நாங்க LTTE கட்டுப்பாட்டுக்குள்ள இருந்து உயிரைக் காப்பாற்றி ஓடி வந்த நேரம் நாங்கள் உடுத்திய உடுப்போடதான் வந்தோம். எங்களுக்கு மாற்று உடுப்பு போடக்கூட யாருமே எங்களுக்குத் தரேல. 3 நாட்களின் பின்னர் தான் ராணுவமா அமைப்புகளா நிறுவனங்களா என்று தெரியாது சாப்பாடும் உடுப்பு வசதியும் தந்தார்கள். கடல் தண்ணிய கூட நாங்கள் எடுத்து குடிச்சிருக்கிறம். கஸ்டம் இல்லாத இடத்தில கொண்டு போய் வச்சிருந்த பிறகுதான் முதல் இருந்த நோய்கள் கூட வெளிக் கொணர்ந்தது. நாங்கள் 3 வருடம் வாழந்த வாழ்க்கையை விட இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
எங்கட வீட்டில் இருந்து பங்குனி மாதம் 12ம் திகதி வெளியேறினோம். வெளிய போய் 3 கிலோ மீட்டர் இடைவெளியில் தான் இருந்தோம். பண்டிவிரிச்சானில் ஆமி வந்தால் மடுவிற்குப் போவோம். மடுவிற்கு ஆமி வந்து முற்றுகையிட தட்சனாமடுவுக்குப் போவோம். மடுவிலயும் மக்கள் இருந்தது. தட்சனாமடுவில ஸ்கூல் இருந்தது. மடுவில ஸ்கூல் இல்லாததால் மடுவில இருந்து தட்சனாமடுவிற்கு பிள்ளைகள் வருவாங்க. அந்தப் பிள்ளைகள் திரும்பி வந்த நேரம்தான் இந்த கிளைமோர்கள் இடையில வெடிச்சது. அது ராணுவம் வச்சதா LTTE வச்சதா என்று தெரியேல. எங்களுக்கு அது தேவையில்ல ஆனால் பாதிக்கப்பட்டது பாடசாலைப் பிள்ளைகள் அதில 4 பிள்ளைகள்தான் தப்பினது. அதிபர் உட்பட எல்லா பிள்ளைகளும் செத்தவங்க. 9 பிள்ளைகள் அந்த இடத்திலேயே செத்தது. 2 டீச்சர் ஒரு பிரின்சிபல் கோமா ஸ்டேஐpல் இருந்து 7 நாளுக்குப் பிறகுதான் செத்தது. அந்த காட்சி இன்னும் எங்களுக்கு கண்கூடாக இருக்குது. அண்டைய நாள் ஒரு பிள்ளை சொல்லியிருக்கு நான் இண்டைக்கு பள்ளிக்கூடம் போக மாட்டன் என்று சொல்ல எக்சாம் டைமில போகோணும் என்று தாய் வில்லங்கமாக அனுப்பி வச்சிருக்கிறா. 2006ம் ஆண்டு கிளைமோர் சம்பவம் நடந்தது.
அப்படி அந்த வெடிச்சத்தங்கள் இன்னும் எங்கட காதில ஒளிச்சிக் கொண்டிருக்கு. எங்கேயோ ஒரு இடத்தில ஒரு செல்லோ பைட்டரோ குத்தினா எங்களுக்கு இங்க கிடுகிடுக்கும். அங்க ஒரு செல் அடிச்சிட்டு எண்டா எங்கட பிள்ளைகள் எங்கள இடிச்சுக் கொண்டு பங்கருக்குள்ள ஓடும். பங்கருக்குள்ளதான் எங்கட வாழ்க்கை முற்று முழுதாக இருந்தது. நிலத்திற்கு கீழ குழி தோண்டி அதற்கு கீழ பதுங்கு குழி அமைச்சுதான் எங்கட கூடுதலான வாழ்க்கை அமைஞ்சிருக்கு. உயிர் இருந்தா நாங்க எதையும் செய்து கொள்ளலாம் என்று நாங்க கடைசி கட்டத்தில உடுத்தின உடுப்போட போயிட்டு எங்கட உயிர இன்டைக்கு கையில பிடிச்சுக் கொண்டு இருக்கிறோம்.
2008 ம் ஆண்டு கடைசியாக முள்ளிவாய்க்காலில் கடும் யுத்தம் நடந்த போது கூட ஒரு 22 பேருடன் நான் இருந்தேன். அப்போது கடவுளே நாங்கள் சாகனும் என்றுதான் எண்ணினோம். அப்போது வாழனும் என்ற ஆசையே இல்லை. எங்களுக்கு முன்னுக்கே தாய்க்கு செல் விழும் தகப்பன் சாக பிள்ளை இருக்கும். பிள்ளை சாக தாய் இருக்கும். இப்படியான சூழல் நாங்க கண்ணூடாகக் கண்டனாங்க. அப்போது நான் கடவுளிடம் செல் விழுந்தா எனக்கும் மகளுக்கும் 2 பேருக்கும் மேலே விழ வேண்டும் நான் செத்து பிள்ள இருக்கக் கூடாது. ஏனென்றால் நான் செத்தால் பிள்ளை எங்கே போகும் அப்பிடி ஒரு மரணபயம் எங்களுக்கு காணப்பட்டது. சாவு எல்லோருக்கும் ஒன்றாக வர வேண்டும் என்றுதான் நாங்க நினைச்சிருக்கிறோம்.
மாத்தளன் ஆஸ்பத்திரியில பிள்ளைகளுக்கு காய்ச்சல் என்று போனாக்கூட மாற்று மருந்து இல்லாம கையில காயப்பட்ட ஒரு சகோதரனுக்கு என்ர கண்ணுக்கு முன்னாலேயே அவர்ட கை துண்டிக்கப்பட்ட நிலையை நான் பார்த்திருக்கிறன். ஆஸ்பத்திரியில கழிவு தண்ணிதான் போகும். ஆனால் நான் பார்த்திருக்கிறன். இரத்தம்தான் போகும். எங்க பார்த்தாலும் சாவுதான். சுhவக் கண்டு நாங்க பயப்படல. சாவு வந்தா அந்த இடத்திலேயே போகோணும். கை போய் கால் போய் இருக்கக் கூடாது என்டு நினச்ச காலம்தான் கூட
என்னால் மறக்க முடியாத விடயம் யுத்தம். நாங்க யுத்தத்திற்குள்ள அடிபட்டு போய் இவ்வளவு காலத்திற்குள்ள ஒரு காயமோ உயிர் ஆபத்தோ ஏற்படாத நிலையில் மீள்குடியேற்றத்தின் பின்னர் என்ர சொந்தக் காணியில் குண்டு வெடித்தது மறக்க முடியாது. யுத்தத்தை என்னால் சாகும் வரை மறக்க முடியாது. யுத்தத்தில எத்தனையோ பேர் உயிரிழந்திருக்கிறாங்க அவங்கட பெயர் கூட அழிந்திருக்குது. யுத்தத்தில இருந்து கூட நாங்க இன்னும் உயிரோட இருக்கிறோம் என்டா அது நாங்க செய்த புண்ணியமா இல்ல எங்கட தாய் தகப்பன் செய்த புண்ணியமா தெரியேல. கடவுள் எங்களுக்கு துன்பத்த தந்தாலும் எங்கட உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாம காப்பாற்றியிருக்கிறேர். அதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
எனக்கு மறந்த விடயங்களை ஞாபகமூட்டுவது வேதனையாக காணப்படுகின்றது. நீங்கள் கேட்ட காரணத்தினால் தான் நான் கூறுகின்றேன். சின்ன வயசில நான் கஸ்டப்பட்டதெல்லாம் சாகும்வரையில எனக்கு ஞாபகம் வந்து கொண்டிருக்கும். என்ர பிள்ளைகளுக்கும் நான் சொல்லுறநான் நாங்க எப்படி கஸ்டப்பட்டனாங்க என்று. என்ட பிள்ளைகள் பண்டிவிரிச்சானில O/L இல நல்ல ரிசால்ட் எடுத்திருக்கிறா நான் படிச்ச காலத்தில கொப்பி வாங்கித் தரக் கூட முடியாத நிலையில பெற்றோர்கள் இருக்கையில நாங்க வேலைக்குப் போய்த்தான் படிச்சனாங்க. அந்தக் கஸ்டம் எங்கட பிள்ளைகளுக்கு இல்ல. பிள்ளைகளுக்கு அந்த நிலை வரக்கூடாது என்பதுதான் எனது பிள்ளைகள் நன்றாகப் படித்து நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License