We displaced to India

Experiential sharing of a family that displaced to India due to war.


අපි ඉන්දියාවට අවතැන් වුණා

යුද්ධය හේතුවෙන් ඉන්දියාවේ අවතැන් වූ පවුලක අත්දැකීම් හුවමාරු කර ගැනීම.


நாங்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தோம்

போரினால் இந்தியவுக்கு இடம்பெயர்ந்த குடும்பத்தின் வாழ்க்கை பற்றியது.



CMP/MN/MN/PES/02

My name is Reeni. I was born in 1976, December. I studied at St.Mary’s Pre-school. Then I received my primary education at Punitha Mariyal School. Later from Grade 6 to Grade 10, I studied at Pathima Mathiya Mahavidyalayam. In the meantime we went to India in 1985 due to the ethnic riots.
In 1985 we went to India crossing the sea in boats illegally. In our village 3 of our relatives got shot together. We were in shock looking at those three; we feared the same could happen to us, so we went to India without the knowledge of Sri Lankan military. There they registered us in Mandabam Camp and left us at Seva village in Earodu district. That is a backward village; there were no facilities for education. We didn’t go to school there.
Again in 1986, Indian army sent us back with the Sri Lankan military’s permission. We were kept and fed in Thalaimannar Harbour at the Nevy camp for 2 days and sent home.
Later when I was studying in Grade 8 in 1990, the conflict began and we again got displaced and went to India illegally by boat without the knowledge of Sri Lankan army. That time our father didn’t join us. Father is a government servant – teacher. We were 6 children; our mother went to India taking the 6 of us. Then my brother was 15 and I was 14. The younger brother and younger sister were like 4, 5. We went by Dolar. To climb on Dolar we should go first in a plastic boat. The boat capsized. We climbed the Dolar, all wet. It was the day of ‘Adi Amavasai’ – New moon day of July, the boat was unbalanced, and we went, not knowing whether we would escape or not. When we reached the shores of India, they waved the white flags and safely put us on the shore.
From 1990 to 1992 we lived in India. We didn’t have any facilities to study. We were in Thirupoor in Koyamputhur district. Because there was no help for my mother, we went to the place where my mother’s brother lived.
In 1992 they took us from Thiruppur near Pollachchi to Madras, got us registered and sent to Trincomalee, Sri Lanka.
Then I studied Grade 10 skipping the Grades 8 and 9. Sat for my A/L in 1997. Started to work in 1998. If we didn’t have that gap of interruption in our education we would have been more knowledgeable.
I got married in 1999. I have 3 children. My husband owns a grinding mill, during the night he works as a watcher in the school. Elder daughter is studying A/L, second one is Grade 9 and the third one is Grade 4. My son came first in the district by scoring 186 marks in Grade 5 (2012). My elder brother’s daughter also scored 189 in 2014 scholarship exam and came second in the district. My father bought bicycles for his grandchildren to encourage them.
On 2005, December 23rd one Nevy truck got damaged on a landmine attack launched by some unidentified group, when it was going through Pesalai 100 Housing Scheme. At that time four of our people, father and mother from one family and a mother and daughter from another family died. Cannot say which place but some traces were found.
One 17th June, 2006 one incident took place in our temple. On the previous day one landmine got blasted near the Gnanapirakasiyar statue in our village. So we all got scared and went to the temple to stay.
If we hear a blast we would normally go to the Vetti Annai temple to stay. Likewise that day also we stayed the night and while going home in the morning around 6am we heard firing from the sea side. Those who had returned from fishing said there were a shower of bullets in the sea and asked us to return to the temple. So we didn’t go to home. There would be around 3000 people inside the temple. When we were in the temple we felt as if the bullets were falling on us. We didn’t know who was firing and on what direction the bullets were moving. We ducked our heads in fear and were shouting “God Mary!! God Mary!!”.
After sometimes we noticed smoke inside the temple. We were wondering why there is smoke inside the temple, wanted to check whether they have come inside the temple, but again the firing started and then it stopped. We were all shivering so hard. I was hugging my two children. I didn’t know where my husband was. We were wondering, what’s the point of living such a life. 30 years of our life is gone in fear.
About 40 people who were inside the temple got injured. We were scared to take them to the hospital. We sent them to hospital over the temple’s side wall. While doing so one old lady died by getting shot at her head. They took them to the Mannar hospital located at Pesalai. Later we got to know that they have actually targeted the temple.
Out of 40, 5 had badly got affected, so many of them are not alive. So many weddings were supposed to happen that time. Even some came running to temple dressed as a bride.
On some other wedding ceremony they have finished cooking and the firing had started. Later when they returned they found the food was covered with sand. We don’t know what happened. For 3 months we slept in the temple. In 2006 since the temple got attacked everyone got displaced and went to India. Some have returned to the village many haven’t.
Our temple was newly built about 10 years before. Even the temple was not safe so we thought the houses would also get targeted and it would not be safe to live in there, so we got displaced.
When we see from the top of the temple we could see the Nevy standing on sea all wet and firing. Later those who got affected and the others who have seen it went and gave their witness in the court, saying that the attack was done by the Sri Lankan government – the Nevy. But due to fear and security issues the case wasn’t taken forward.
I can never forget our displacement to India. We travelled in the sea for 3 nights. We were given all three meals. We couldn’t figure out whether it was day time or night. We had light inside the ship but still it was difficult. We would figure out the time whether its day or night based on the food they give.
There are no troubles after 2009. We are living happily. We don’t fear whether there would be any sound of blasts or firing when we go to sleep in the night.
I expect our children should get appropriate job opportunities for what they have studied. I expect that they should be given jobs based on their education not based on political influence. Our students show top performance in education.
After 2009 there are no troubles at all.


CMP/MN/MN/PES/02
මගේ නම රීනි. මම 1976 දෙසැම්බර් මාසේ ඉපදුනේ. සෙන් මේරිස් එකේ පෙරපාසල් ගියා. ඊට පසසේ ශාන්ත මරියා විද්‍යාලයේ ප්‍රාථමික ඉගෙන ගත්තා. ඊට පස්සේ 6 වසර ඉදන් 10 වසර දක්වා ෆාතිමා මධ්‍ය මහා විද්‍යාලයේ ඉගෙන ගත්තා. ඒ අතර මැද දී 1995 දී සිද්ධ වෙච්ච කැරළි කෝළාහල නිසා අපි ඉංදියාවට ගියා.
1985 දී අපි හොර බෝට්ටුවකින් ගියා. අපේ ගමේ නෑදෑයෝ තුන් දෙනෙක් එක තැනදී වෙඩි තියලා මැරුවා. ඒ තුන් දෙනාව දැක්කට පස්සේ අපිටත් ඒ දේම සිද්ධ වෙයිද කියලා බයට ලංකාවේ හමුදාවට හොරෙන් ඉංදියාවට ගියා. එහෙ මණ්ඩපම් කෑම්ප් එකේ රෙජිස්ටර් වෙලා අපිව ඊරෝඩු දිස්ත්‍රික්කයේ සේවා කියන ගමේ නැවැත්තුවා. ඒක දුප්පත් ගම්මානයක්. එහෙ ඉගෙන ගන්න කිසිම පහසුකමක් නැහැ. අපි ඉස්කෝලේ ගියේ නැහැ.
ඊට පස්සේ 86 අවුරුද්දේ ලංකා හමුදාවේ අවසර අරගෙන ඉංදීය රජය අපිව එවලා තලෛමන්නාරම වරායට ඇවිල්ලා නේවි කෑම්ප් එකේ දවස් දෙකක් ඉඳලා කෑමත් දීලා ඊට පස්සේ අපේ ගෙවල් වලට යැව්වා.
ඊට පස්සේ 08 වසරේ ඉගෙන ගන්නකොට 90 දී ප්‍රශ්නය ඇවිල්ලා ආයෙත් අවතැන් වෙලා ලංකා රජයට හොරෙන් හොර බෝට්ටුවල ඉංදියාවට ගියා. එත‍කොට තාත්තා ඉංදියාවට ගියේ නැහැ. තාත්තා රජයේ නිලධාරියෙක්. (ගුරුවරයෙක්) අපි ළමයි හය දෙනෙක්. ‍අම්මා අපි හය දෙනාම අරගෙන ඉංදියාවට ගියා. එතකොට අයියට අවුරුදු 15 යි. මට 14 යි. අපේ මල්ලිටයි, නංගිටයි 4 යි, 5 යි. අපි ට්‍රෝලර් එකේ තමයි ගියේ. ප්ලාස්ටික් බෝට්ටුවේ ගිහිල්ලා තමයි ට්‍රෝලර් එකට නගින්න ඕන. බෝට්ටුවත් පැද්දෙනවා. තෙමිලා තමයි ට්‍රෝලර් එකට නැග්ගේ. බෝට්ටුව පැද්දෙනකොට පැත්තකට හේත්තු වෙලා අපි බේරෙයි ද නැද්ද කියන බයකින් තමයි ගියේ. ඉංදියාවේ වෙරළට ගිය ගමන් සුදු කොඩි පෙන්නලා ආරක්ෂිතව බැස්සුවා. 90 ඉඳන් 92 වෙනකම් ඉංදියාවේ හිටියා. ඉගෙන ගන්න කිසිම පහසුකමක් නැහැ. එතකොට කෝමබතූර් දිස්ත්‍රික්කයේ තිරුප්පූර්වල හිටියා. අම්මට උදව්වක් නැති නිසා අම්මගේ සහෝදරයා හිටපු තැනට ගියා.
එහේ ඉඳන් ලංකාවට ආයේ එවනවා කියලා අපිව ආයෙත් පොල්ලාච්චිවලට කිට්ටු තිරුප්පූර් කියන තැන ඉඳලා පස්සේ මදුරාසියට එක්ක ගිහිල්ලා ලියාපදිංචි කරලා ත්‍රිකුණාමලයට ඇවිල්ලා 1992 දී ලංකාවට ආවා.
ඊට පස්සේ 8 – 9 පංතිවල ඉගෙන ගන්නේ නැතුව 10 පංතියේ ඉගෙන ගත්තා. 1997 ඒ ලෙවෙල් ලිව්වා. 1998 දී වැඩට ගියා. අපිට ඉගෙන ගන්න බාධා නැතිව තිබුනා නම් අපි මීටත් වඩා හොඳට ඉගෙන ගෙන තියෙයි. 1998 දී මම විවාහ වුනා. මට ළමයි තුන්‍ දෙනයි. එයා මෝලක් තියාගෙන ඉන්නවා. රෑට ඉස්කෝලේ මුරකරු වැඩේට යනවා.ලොකු දුව ඒ ලෙවෙල්. දෙවැනියා 9 වසරේ. තුන් වෙනියා 4 වසරේ. මගේ පුතා 5 වසර විභාගෙන් ලකුණු 186 ක් අරගෙන දිස්ත්‍රික්කයේ පළවෙනියා වුනා. මගේ අයියගේ දුවත් 2014 දී පහේ ශිෂ්‍යත්වයෙන් ලකුණු 189 ක් අරගෙන දෙවැනි තැන ගත්තා. අපේ තාත්තා ළමයිව උනන්දු කරන්න ඕන කියලා බයිසිකල් අරන් දුන්නා.
2005 දෙසැම්බර් 23 වෙනිදා පේෂාලේ ගෙවල් 100 වැඩසටහනේ දී නේවි ට්‍රක් එකක් යනකොට නාදුනන කෙනෙක්ගේ බෝම්බ පහරින් ට්‍රක් එකට හානි වුනා. එතකොට ඒකේ අපේ කට්ටිය අම්ම කෙනෙකුයි තාත්තකෙනෙකුයි තව අම්ම කෙනෙකුයි දුවෙකුයි ගෙවල් දෙකක හතර දෙනෙක් මැරුණා. තැන කොහෙද දන්නේ නැහැ. ඒත් සමහර බධාවන් තිබුණා.
2006 හයවෙනි මාසේ 17 වෙනිදා අපේ කෝවිලේ දී එක සිද්ධියක් වුනා. ඊට කළින් දවසේ අපේ ගමේ තිබ්බ නානප්‍රකාශියාර් පිළිමයට කිට්ටුව වෙඩිල්ලක් වැදුනා. වෙඩි වැදිච්ච නිසා අපි ‍ඔක්කොම කෝවිලට නවතින්න ගියා.
වෙඩි සද්දයක් ඇහුන ගමන් අපි බයට නවතින්නේ වෙට්‍රි අන්නන් කෝවිලේ. මෙහෙම කෝවිලේ රෑට ඉඳලා උදේ 6 ට විතර ඇති ගෙදර යනකොට මුහුද පැත්තෙන් වෙඩි සද්දයක් ඇහුනා. වැඩට ගිහිල්ලා එන අයට මුහුදේ වෙඩි තියනවා. අයෙත් කෝවිලට යන්න කිව්වා. එහෙමම අපි ගෙදර ආවේ නැහැ. තුන්දාහකට වඩා සෙනගක් ඉන්නවා කෝවිල ඇතුළේ. කෝවිලේ ඉන්කොට අපිට උඩින් වෙඩි වදිනවා වගේ. කවුද වෙඩි තියන්නේ කියලා දන්නේ නැහැ. කොහේ ඉඳන් කොහෙට වෙඩි තියෙනවද කියලා දන්නේ නැහැ. බයට ඔළුව නමාගෙන මාතා මාතා කිය කියා හිටියා.
ටික වෙලාවකට පස්සේ බලනකොට කෝවිල ඇතුලේම දුම් දානවා. ඇයි මේ කෝවිල ඇතුලෙම දුම් දාන්නේ.. මේක ඇතුළටත් ආවද කියලා බලන‍කොට පස්සේ වෙඩි සද්දේ නැතුව ගියා. හැමෝගෙම අතපය තුවළ වෙලා. මම මගේ ළමයි දෙන්නත් තුරුළු කරන් හිටියා. මහත්තයා කොහේ ඉන්නවද දන්නේ නැහැ. මෙහෙම ජීවිතයක් අපිට ඕනද කියලා හිතුනා. බයෙන්ම අවුරුදු 30 ක් ගතවුනා. කෝවිලේ හිටපු 40 දෙනෙකුට විතර තුවාළ. ඒ ගොල්ලෝ ඉස්පිරිතාලේ ගෙනියන්න එළියට ගෙනියන්න බයේ කෝවිලේ පිටිපස්සේ තාප්පෙට උඩින් පැනලා ඉස්පිරිතාලේ යැව්වා. එතකොට වයසක අම්මා කෙනෙකුට ඔලුවට වෙඩි වැදිලා මැරුණා. පස්සේ පේසාලෛයිවල ඉඳලා මන්නාරම ඉස්පිරිතාලෙට යැව්වා. කෝවිල වටකරලා වෙඩිතියලා කියලා පස්සේ දැනගන්න ලැබුනා.
40 දෙනාගෙන් 5 දෙනෙකුට ගොඩක් තුවාළයි. ගොඩක් අය පණ පිටින් නැහැ. ඒ වෙලාවේ මගුල් ගෙවල් ගොඩක් තිබුනා. මනමාලී ඇඳුමෙනුත් කෝවිලට දුවලා ආවා.
තව එක මගුල් ගෙදරක උයලා ඉවර වෙනකොට වෙඩි සද්දේ ඇහුනා. පස්සේ ඇවිල්ලා බලනකොට බත් ඔක්කොම වැලි වගේ තිබුනා. මොනවා වුනාද දන්නේ නැහැ. අපි මාස තුනක් කෝවිලේ තමයි නිදා ගත්තේ. 2006 දී කෝවිලට ගහපු නිසා හැමෝම අවතැන් වෙලා ඉංදියාවට ගියා. සමහරු ආයෙත් ගමට ආවා. ගොඩක් අය තවම ගමට ආවේ නැහැ.
අපේ කෝවිල අවුරුදු 10 කට කලින් අලුතින් හදපු ‍කෝවිලක් වගේ පේනවා. කෝවිලටත් මේ වගේ ආරක්ෂාවක් නැහැ. ගෙවල්වලටත් වෙඩි සද්දය ඇහෙනවා. ගෙවල්වලත් ආරක්ෂාවක් නෑ කියලා හිතලා අවතැන් වුනා.
‍කෝවිලට උඩින් බලනකොට නේවි ඇඳුමෙන් මුහුදේ තෙමිලා වගේ ඉන්නවා. වෙඩි තියෙනවා. පස්සේ උසාවි එහෙම ගිහිල්ලා හානියට පත්වෙච්ච අය ගැන ඇස්වලින් දැකපු දේවල් සාක්ෂි කිව්වා. ලංකා හමුදාව තමයි නේවි තමයි කළේ කියලා ආරක්ෂාව ගැන ප්‍රශ්නය නිසයි... බයටයි ඒක එහෙමම යටපත් වෙලා ගියා.
මට අමතක කරන්න බැරි සිද්ධිය නම් අවතැන් වෙලා ඉංදියාවට ගිය එක. දවස් තුනක් මුහුදෙම ගියා. තුන්වේලටම කන්න දෙනවා. අපිට දැන් රෑද දවල්ද කියලා දැනගන්න විදියක් නෑ. නැව ඇතුළේ ලයිට් එළිය තිබුනට කරදරයි. ඒ නිසා ඒගොල්ලෝ දෙන කෑම දිහා බලලම දැන් දවල්ද රෑද කියලා තීරණය කළා.
2009 අවුරුද්දට පස්සේ කිසිම ප්‍රශ්නයක් නැහැ. අපි සතුටින් ජීවත් වෙනවා. රෑට නිදාගන්න කොට වෙඩි සද්දය ඇහෙයිද කියලා බයක් නැහැ.
අපේ ළමයි ඉගෙන ගත්ත පමණට සුදුසු රැකියා අවස්ථා දෙන්න ඕන කියලා බලාපොරොත්තු වෙනවා. දේශපාලන බලපෑමක් නැතුව ඉගෙනීම බලලා රැකියා දෙන්න ඕන කියලා බලාපොරොත්තු වෙනවා. අපේ ළමයි අධ්‍යාපනයෙන් ඉදිරියෙන්ම ඉන්නවා. 2009 අවුරුද්දට පස්සේ කිසිම ප්‍රශ්නයක් නැහැ.



CMP/MN/MN/PES/02
எனது பெயர் றீனி. நான் 1976 ம் ஆண்டு மார்கழி மாதம் பிறந்தேன். சென் மேரிஸ் முன்பள்ளி பாடசாலை கல்வியைக் கற்றேன். அதன் பின் எங்கட புனித மரியாள் பாடசாலையில் ஆரம்பக்கல்வியைக் கற்றேன். பின்பு 6 தொடக்கம் 10 வரை மேற்படிப்பை பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தில் கற்றேன். இடையில் 1985 ம் ஆண்டு இடம் பெற்ற இனக்கலவரத்தின் போது நாங்கள் இந்தியாவுக்குச் சென்றோம்.
85 இல நாங்க கள்ளத் தோணியிலதான் போனோம். எங்கட ஊரில உறவினர் 3 பேரை ஒருமிக்க சுட்டு போட்டாங்க. அவங்க 3 பேரையும் பார்த்த அதிர்ச்சியில் எங்களுக்கும் அந்த நிலம நேர்ந்திருமோ என்ற பயத்தில் இலங்கை ராணுவத்திற்கு தெரியாம இந்தியாவிற்குப் போனோம். அங்க மண்டபம் காம்பில் பதிவு செய்து எங்கள ஈரோடு மாவட்டத்தில் உள்ள சேவா கிராமத்தில் விட்டிருந்தாங்க. அது ஒரு பின்தங்கிய கிராமம். அங்க படிப்பு வசதி எதுவுமே இல்லை. நாங்க பாடசாலைக்கு போகேல்ல.
மீண்டும் 86ம் ஆண்டு இலங்கை ராணுவத்தின் பெமிசன் எடுத்து இந்திய அரசாங்கம் எங்களை அனுப்பி விட்டு தலைமன்னார் துறைக்கு வந்து நேவி காம்பில 2 நாள் தங்க வைத்து சாப்பாடும் தந்து அதற்குப் பிறகு எங்கட வீடுகளுக்கு அனுப்பி வச்சாங்க.
அதற்குப் பிறகு 8ம் தரம் படித்துக் கொண்டிருக்கேக்க 1990ம் ஆண்டு பிரச்சனை வந்து மீண்டும் இடம் பெயர்ந்து இந்தியாவிற்கு இலங்கை அரசாங்கத்திற்கு தெரியாம கள்ளத் தோணியில் போனோம். அந்த நேரம் அப்பா இந்தியாவிற்கு வரேல. அப்பா அரசாங்க உத்தியோகம். (ரீச்சர்) நாங்க 6 பிள்ளைகள் அம்மா 6 பேரையும் கொண்டு இந்தியாவிற்கு போனா அப்ப அண்ணனுக்கு 15 வயது, எனக்கு 14 வயது. எங்கட தம்பி தங்கச்சிக்கெல்லாம் 4, 5 வயது நாங்க டோலரிலதான் போனோம். பிளாஸ்டிக் போர்டில போய்ததான் டோலரில ஏறவேணும். போர்டும் கவிழ்ந்தது. நனைஞ்சுதான் டோலரில ஏறினோம். ஆடி அமாவாசை படகு சாய்ந்து கொண்டிருக்க தப்புவமோ இல்லையா என்ற பயத்திலதான் போனோம். இந்தியா கரைக்கு போனோன வெள்ளைக் கொடி காட்டி பாதுகாப்பா இறக்கினாங்க.
90ம் ஆண்டு 92ம் ஆண்டு வரை இந்தியாவில இருந்தோம். படிக்கிறதுக்கு எந்தவிதமான வசதியும் இல்ல. அப்ப கோயம்புத்தூர் மாவட்டத்தில் திருப்பூரில இருந்தோம். அம்மாவுக்கு உதவி இல்லாமையினால் அம்மாவின் சகோதரர் இருந்த இடத்திற்கு போனோம்.
அங்க இருந்து இலங்கைக்கு அனுப்பப் போறோம் என்று கூறி திருப்பி எங்களை பொல்லாட்சிக்குப் பக்கத்தில் உள்ள திருப்பூர் என்ற இடத்தில் இருந்து பின்பு மெற்றாஸ் கொண்டு போய் பதிவு செய்து திருகோணமலைக்கு வந்து 1992ம் ஆண்டு இலங்கைக்கு வந்தோம்.
அதன் பிறகு . 08, 09 ம் ஆண்டு படிக்காமலே 10 ம் ஆண்டு படித்தேன். 1997ம் ஆண்டு A/L எழுதினேன். 1998 ம் ஆண்டு வேலைக்குப் போனேன். எங்களுக்கு படிப்பு இடைவெளி இல்லாம இருந்திருந்தா இன்னும் எங்கட அறிவை வளர்த்து இருக்கலாம்
1999ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. எனக்கு 03 பிள்ளைகள். கணவர் மில் வைத்திருக்கின்றார். இரவு வேளைகளில் பாடசாலையில் வோச்சர் வேலை செய்கிறார். மூத்தவள் A/L, 2 வது 9ம் ஆண்டு, 3வது 4ம் ஆண்டு, எனது மகன் 5ம் ஆண்டு (2012) 186 புள்ளி எடுத்து மாவட்ட மட்டத்தில் 1ம் இடம் பெற்றுள்ளார். என்ர அண்ணன்ட மகளும் 2014 ஆண்டு நடந்த புலமைப்பரீட்சையில 189 மார்க் எடுத்து இரண்டாவது இடத்த எடுத்தா. எனது அப்பா பேரப்பிள்ளைகளை ஊக்குவிக்கு முகமாக சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்.
2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் திகதி பேசாலை 100 வீட்டுத்திட்டத்தில் நேவி றக் போய்க்கொண்டிருக்கேக்க இனந் தெரியாத நபரால் கண்ணி வெடி வெடித்து அதிலே றக் சேதமாகியது. அந்த நேரம் அதில் எங்கட ஆக்கள் ஒரு தாயும் தகப்பனும் இன்னோரு தாயும் மகளும் 2 குடும்பத்து ஆக்கள் 4 பேரும் இறந்து விட்டார்கள். என்ன இடம் என்று இல்லை. ஆனால் சில தடயங்கள் கண்டெடுக்கப்பட்டது.
2006 ம் ஆண்டு 06ம் மாதம் 17 ம் திகதி எங்கட கோயில்ல ஒரு சம்பவம் நடந்தது. அதற்கு முதல் நாள் எங்கட ஊரில் இருந்த ஞானப்பிரகாசியார் சிலைக்கு பக்கத்திலே ஒரு கண்ணி வெடி வெடித்தது. வெடித்த நேரம் நாங்கள் எல்லோரும் பயத்தில கோயிலுக்கு தங்கப் போனோம்.
ஒரு வெடிச்சத்தம் கேட்டவுடன் பயத்தினால் நாங்கள் வெற்றி அன்னை ஆலயத்தில் தான் தங்குறது. இப்பிடி ஆலயத்தில் இரவு தங்கி விட்டு காலை 6 மணி இருக்கும் வீட்ட போகேக்க கடல் பக்கம் வெடிச் சத்தம் கேட்டது. தொழிலுக்கு போய் வந்தவர்கள் கடலிலே வெடி பொலியுது. திரும்பவும் கோயிலுக்கு போங்க என்று சொன்னார்கள். அதோடநாங்க வீட்டுக்கு வரேல்ல. கிட்டத்தட்ட 3000 பேருக்கு மேலே இருப்பாங்க கோயிலுக்குள்ள. கோயிலில் இருக்கேக்க எங்களுக்கு மேலால வெடி விழுற மாதிரி. யார் வெடி வைக்கிறாங்க என்று தெரியாது. எங்க இருந்து எங்க வைக்கிறாங்க என்று தெரியேல பயத்திலே தலையைக் குனிந்து கொண்டு மாதாவே மாதாவே என்று கூக்குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறோம்.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு பார்த்தா கோயிலுக்குள்ளே புகையுது. என்னடா கோயிலுக்குள்ளே புகையுது இதுக்குள்ளே வந்திட்டாங்களா என்று பார்த்தா வெடிச்சத்தம் பிறகு வெடிச்சத்தம் ஓய்ந்து விட்டது. எல்லாருக்கும் கை கால் உதறுது. நான் என்ர இரண்டு பிள்ளைகளையும் அணைச்சுக் கொண்டு இருக்கிறன். என்ர கணவர் எங்க இருக்கிறார் என்று தெரியேல இப்படி ஒரு வாழ்க்கை எங்களுக்குத் தேவையா என்று நினைச்சோம். பயத்திலேயே 30 வருடம் போயிற்று.
கோயிலுக்குள் இருந்த 40 பேருக்கிட்ட காயம். அவர்களை வைத்தியசாலைக்கு வெளிய கொண்டு போக பயத்திலே அவர்களை கோயிலுக்கு பக்கத்து மதிலுக்கு மேலாக வைத்தியசாலை அனுப்பினோம். அப்போது வயதான அம்மா ஒராள் தலையிலே துவக்கு வெடி பட்டு உடனே இறந்து விட்டார். பிறகு பேசாலையில் இருந்த மன்னார் வைத்தியசாலைக்கு ஏற்றினார்கள். கோயிலைச் சுற்றித்தான் வெடி வைத்திருக்கின்றார்கள் என்று பிறகு தெரிய வந்தது.
40 பேரில் 5 பேருக்கு நிறைய பாதிப்பு நிறைய பேர் உயிருடன் இல்லை. இந்த நேரம் நிறைய கல்யாணம் நடைபெற இருந்தது. மணப்பெண் கோலத்தில் கூட கோயிலுக்கு ஓடி வந்திருந்தாள்.
இன்னொரு கல்யாண வீடு சமைத்து முடிய வெடிச்சத்தம் பிறகு வந்து பார்க்கக்க சோறு எல்லாம் மண்ணாகக் காணப்பட்டது. என்ன நடந்தது என்று தெரியாது. நாங்கள் 3 மாதமாக கோயிலில்தான் படுத்தோம். 2006ம் ஆண்டு கோயில் அடிபாடு நடந்ததன் காரணமாக எல்லோரும் இடம் பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்றனர். சிலர் ஊருக்குத் திரும்பி வந்து விட்டனர். பலர் இன்னும் திரும்பி வரவில்லை.
எங்கட கோயில் 10 வருடத்திற்கு முன்பு புதிதாகக் கட்டப்பட்ட கோயிலாகக் காணப்படுகின்றது. கோயிலுக்கே இப்படிப் பாதுகாப்பில்லை. வீடுகளுக்கும் இனி வெடிசச்சத்தம் கேட்கும். வீடுகளுக்கும் பாதுகாப்பில்லை என்று எண்ணி இடம்பெயர்ந்தோம்.
கோயிலுக்கு மேல நின்று பார்க்கும்போது நேவி உடுப்போட கடல்ல நனைஞச்சாப்போல நிக்கிறாங்க வெடி வைக்கிறாங்க பிறகு கோர்ட்ல எல்லாம் போய் பாதிக்கப்பட்டவங்க கண்ணால கண்டவங்க எல்லாம் சாட்சிகள் சொன்னாங்க. இலங்கை அரசாங்கம்தான் நேவிதான் செய்தது என்று பாதுகாப்பு பிரச்சனையிலயும் பயத்திலயும் அது அப்படியே மருகி போயிட்டுது
என்னால் மறக்க முடியாத சம்பவம் என்னவென்றால் இடம்பெயர்ந்து இந்தியாவக்கு சென்றதுதான். 3 இரவுகள் கடலிலே பயணம் செய்தோம். 03 நேரமும் சாப்பாடு தருவார்கள். எங்களுக்கு இப்ப இரவா பகலா என்று அறிய முடியவில்லை. கப்பலுக்குள் Light வெளிச்சம் தான் இருந்தாலும் கஸ்ரம். இதனால் இவங்க தருகின்ற சாப்பாட்டை வைத்தே இப்போது இரவா பகலா என்ற தீர்மானத்தை எடுப்போம்.
2009ம் ஆண்டுக்குப் பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லை. சந்தோசமாக வாழ்ந்து வருகின்றோம். இரவில படுக்கும்போது வெடிச்சத்தம் கேட்குமா என்ற பயம் இப்ப இல்ல
எங்கட பிள்ளைகள் படிச்சதுக்கு தகுந்த வேலை வாய்ப்பினை தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். அரசியல் செல்வாக்கு இன்றி படிப்பை பார்த்து வேலை கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். எங்கட மாணவர்கள் கல்வியில் முன்னிலையிலேயே காணப்படுகின்றனர்.
2009ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு பிரச்சனையும் இல்ல.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License