We do not want another war

Experiential sharing about the war life


ලැජ්ජාවක් නොවන්න

යුද්ධ ජීවිතය ලියාපදිංචි කිරීම


இனியொரு யுத்தம் வேண்டாம்

யுத்த வாழ்க்கை தொடர்பான பதிவு



CMP/MN/MN/PES/03

My father died when I was 8 years old. He died of TP. We face war from the time he died. We would often run inside the bushes. There were troubles throughout the year 1986. During the war time my younger brother went missing from Pesalai. That was the time when the Movements started; he went missing during that time. We started looking for him, he was only 16 then.
After the 1985 riots we decided to move to India. Father was no more; we were 4 including the mother. We went to India with our mother but came back due to the difficulties we faced there. When we were coming back mother died by falling in to the sea. There were 30 in the boat, they have overloaded the boat, it was November and the boat got capsized. Only one Sinhalese person in it survived. We stayed there alone. We had our aunties there. They are relatives from my father’s side. We stayed with them. My brother was also there.
We came back to Sri Lanka in 1987. Our house was damaged and we were staying once at one aunt’s place and then at another’s. Again in 1990, my brother, younger sister and I went to India. We stayed there as refugees and came back.
They brought marriage proposal to me, so we bought this land and built the house. My younger sister is staying with me; she was 6 when our mother died. During the trouble time we went to India for 3 times.
During the war time we run to temple seeking refuge. We would cook and eat here, while eating there will be an attack. We would run when the attack begins. Since there was a sentry here we would run to faraway places and come back when the firings stop.
The temple got attacked once. We were sleeping in there. In the mornings we go (home) wash our faces and finish cooking by 10 or 12 noon. We never knew what would happen at the next moment.
We heard the sound from the sea so we ran to the temple thinking it would be safe there. After getting in to the temple we started hearing the sound outside the temple. We closed all the doors and lay face down on the floor. They rolled the Grinade inside and it rolled over near my aunt. Her whole body got wounded. The small boy and I also got wounded. I have 5 children. One of my son, my husband and me got injured. My aunt’s son and another aunt were also got severely injured since they were together. 6 of us got injured.
We didn’t think we would survive from that. I have another son. He was small and I kept him cuddled in my arms. When I got injured I got paralyzed bellow my hip. I lost conscious. People came and looked at me. I shouted asking them to carry me, so they did. My uncle lift me up and walked me, I couldn’t walk. I couldn’t sense what was happening to me.
When I got injured inside the temple, I tried to breathe through my mouth but couldn’t do so. I was trying to figure out whether I was alive, I felt like I was going unconscious. That’s why I grabbed the people and shouted asking them to carry me.
One lady next to me was dead. One more person was also there with her hip injured. My mother lay dead on the floor with her head sliced opened. The site of her and the blood kept people away from carrying me. I was lying there. I tapped people and asked for their help. Somebody has tied my wound removing the sarong they were wearing.
They took me to Pesalai hospital, then to Mannar hospital and then came to the temple. Then for a month we stayed in the priest’s room. After the treatment and recovery we came home.
Then we went to India as refugees. We could go there only by boat. On November 2nd we went. 30 people were there in the boat. This time we went through the center of the bay we came back also through that. Center of the bay is deep sea, so we were scared to board the boat. We were scared thinking whether we would reach the shore or not. There were small children with us. We kept them cuddled in our arms. That time everyone looked at us to find out who we were. We thought all of us would be dead. We told the boat man that the boat could get damaged by hitting the …… and asked him to go carefully. We scolded him asking whether he is going to capsize the boat.
It is believed that there are …. In the deep sea. We usually don’t go through the deep sea. The boat man said “I am good at sailing, I know; don’t be afraid, I will take you there”. The helicopter came just when we went there. They pushed us to go inside the bushes and asked us to lie face down on the floor and they untied the boats from the shore. We laid down crying.
It was relaxing and peaceful over there, but staying there was difficult. We have sold all the jewelries. I thought it’s impossible to stay there and came to our country. We were there for 3 months. We went there because we got scared of that attack on us. That time the war was at its peak. They were shooting and attacking without an aim. We went because it was impossible to stay.
Even in India we couldn’t stay. There was no job. We were in a camp in Thoothukudy. We got aids. There was a Kerosene department; we would get Kerosene from there. They would provide us everything. We had our jewelries. We stayed there with that support, and then we came back because it was not sufficient.
It was peaceful there but there were difficulties too. We were able to sleep and eat there. But it was not like that here. Now that the war has ended its peaceful here.
Now we live feely here. But we don’t know what would happen. If there is no war, we could do anything, with war there is no point of gaining assets. Now we are living feely, if this situation remains the same we would live happily. There shouldn’t be a war in future.


CMP/MN/MN/PES/03
මට අවුරුදු 8 ක් විතර වෙද්දී තාත්තා නැති වුනා. එයාට ටී බී උණ තිබ්බ නිසා නැති වුනේ. එයා හිටපු කාළේ ඉඳන් යුද්ධේ තමයි. අපි කැලේට දුවන එක තමයි. 1986 අවුරුද්දේ ඉඳන්ම ප්‍රශ්න පැවතුනා. අපේ මල්ලී කැරැල්ල කාළේ අතුරුදහන් වුනා පේසාලෛයිවල දී. ඒ කාළේ සංවිධාන ඇතිවෙන්න පටන් ගත්තා තමයි. එයා එතකොට අතුරුදහන් වුනා. අපි හොයන්න පටන් ගත්තා. එතකොට එයාට වයස 16 යි.
85 කැරැල්ලත් එක්කම ඉංදියාවට යන්න පිටත් වුනා. තාත්තා නැහැ. අම්මත් එක්ක අපි හතර දෙනෙක්. අම්මත් එක්ක ඉංදියාවට ගිහිල්ලා එහෙ කරදර නිසා අපි ආයෙත් ලංකාවට ආවා. ආපහු ආපු වෙලාවේ අම්මා මුහුදට වැටිලා නැතිවුනා. ‍බෝට්ටුවේ ආපු 30 ක් විතර හිටපු නිසා සැප්තැම්බර් මාසේ දී බෝට්ටුව පෙරලුනා. ඒකෙන් සිංහල එක්කෙනෙක් විතරයි බේරුනේ. අපි එහෙ තනියම හිටියා. නැන්දා එහෙම හිටියා. අපි වැඩිපුර හිටියේ තාත්තගේ කට්ටියත් එක්ක. අයියා කෙනෙක් හිටියා.
87 දී ලංකාවට ආපහු ආවා. අපි හිටපු ගේ සම්පුර්ණයෙන්ම විනාශ වෙලා. නැන්දගේ ගෙදරයි, ලොකු අම්මගේ ගෙදරයි මාරු වෙවී හිටියා. අයෙත් අයියයි, මායි, නංගියි 1990 දී ඉංදියාවට ගියා. එහෙ සරණාගතයෝ විදියට ඉඳලා ආයෙත් ලංකාවට ආවා.
මට විවාහයක් කතා කළා. ඒත් එක්කම මෙහෙ ඉඩමක් අරගෙන ගෙයක් හැදුවා. ‍මගේ පොඩි නංගී මාත් එක්ක තමයි ඉන්නේ. අම්මා නැතිවෙනකොට එයාට අවුරුදු 06 යි. ප්‍රශ්න කාළේ තුන් පාරක් ඉංදියාවට ගිහින් ආවා.
කළබල කාළෙට මෙහෙ ඉඳන් කෝවිලට දුවනවා. මෙහෙ උයාගෙන කනවා. කකා ‍ඉන්නකොට ෂෙල් වැටෙනවා. ෂෙල් වැටෙනකොට දුවනවා. සෙන්ට්‍රිය මෙහෙ තිබ්බ නිසා දුර තැන්වලට ගිහිල්ලා වෙඩි අඩුවුනාම ආයෙත් එනවා.
ඒ කාළේ කෝවිලටත් පහර දුන්නා. ඒ වෙලාවේ අපි කෝවිල ඇතුළේ තමයි නිදාගෙන හිටියේ. උදේට ඇවිල්ලා මූණ සෝදගෙන දහය දොළහ වෙනකොට උයන්‍න ඕන. කොයිවෙලේ මොනවා වෙයිද දන්නේ නෑනේ.
මුහුද පැත්තෙන් තමයි සද්ද ඇහෙන්නේ. අපි කෝවිලට දුවමු කියලා කෝවිලට දිව්වා. කෝවිල ඇතුළට ගිය ගමන් එළියෙන් සද්දය ඇහුනා. දොරවල් ඔක්කොම වැහුවා. අපි ඔක්කොම බිම දිගා වුනා. ඇතුළට ග්‍රෙනේඩ් එකක් දැම්මම ඒක නැන්දා ළඟට පෙරළිලා ආවා. එයාගේ මුලු ඇ‍ඟේම තුවාළ. මටයි පොඩි පුතාටයි තුවාළ. මට ළමයි පස් දෙනෙක් ඉන්නවා. මටයි, මහත්තයාටයි, එක පුතෙකුටයි තුවාළ වුනා. අනික පුංචි අම්මගේ පුතාටයි, අපේ නැන්දටයි එකම තැන හිටපු නිසා ගොඩක් තුවාළ වුනා. හය දෙනාටම තුවාළ වුනා.
අපි පණ පිටින් එයි කියලා විශ්වාස කළේ නැහැ. තව පොඩි පුතෙක් හිටියා. ඒ පොඩි ළමයා මගේ ළඟ හිටියේ. මට වෙඩි වැදිච්ච ගමන් ඉණෙන් පල්ලෙහා වැඩ කළේ නැහැ. මට යාන්තම් සිහිය ඇවිල්ලා අම්මට කිව්වා මම මොනවාහරි කරලා මැරෙන්න යන්නේ නැගිටලා දුවන්න කියලා. එයා මාව ඇතුළේ ඉද්දී ගෙනියන්න බෑ කිව්වා. අල්ලගෙන බදා ගත්තා. ලේ ගලනවා. මගේ ඉණෙන් පල්ලෙහා වැඩ කරන්නේ නැහැ. මොකවත්ම තේරෙන්නේ නැහැ. පස්සේ හැමෝම ඇවිල්ලා බැලුවා. මම කෑ ගැහුවා. මාවත් උස්සගෙන ගෙනියන්න කියලා. එතකොට මාවත් උස්සගෙන අරන් ගියා. එතකොට බාප්පා තමයි මාව උස්සගෙන අරන් ගියේ. මට ඇවිදින්න බැරුව ගියා. මොකක්දෝ වෙන්න පටන් ගත්තා.
කෝවිලේ දී මට වෙඩි වැදිච්ච වෙලාවේ මම කටින් හුස්ම අරගෙන අරගෙන බැලුවා. හුස්ම ගන්නේ නෑ වගේ තේරුණා. පණපිටින් ඉන්නවද කියලා බලලා මට සිහිය නැති වෙන්න එන්නේ කියලා කට්ටියට අල්ලලා මාවත් උස්සගෙන යන්න කියලා කෑ ගැහුවා.
මගේ ළඟ අක්කා කෙනෙක් මැරිලා හිටියා. තව එක්කෙනෙක් ඉණටම වෙඩි වැදිලා වැටිලා හිටියා. මැරිලා හිටිය අම්මාගේ බෙල්ල කැඩිලා තිබුනා. ඒ ලේ දැකලා ඒ ගොල්ලන්ව දැකලා තමයි කවුරුවත් මාව ඉස්සුවේ නැත්තේ. මම වැටිලා හිටියා. මම කොහොමහරි බඩගාගෙන ගිහිල්ලා මට මොනවා හරි කරන්න කිව්වා. කවුදෝ ඇඳගෙන හිටපු සරමක් මට අන්ඳවලා තිබුනා.
පේසාලෛ ඉස්පිරිතාලෙට ගිහිල්ලා, මන්නාරම ඉස්පිරිතාලෙට ගිහිල්ලා පසසේ කෝවිලට ආවා. ඇවිල්ලා එක මාසයක් කෝවිලේ දෙවියන්ගේ කාමරේ හිටියා. බෙහෙත් එහෙම අරගෙන සනීප වුනාට පස්සේ ගෙදරට ආවා.
ඊට පස්සේ සරණාගතයෝ වෙලා ඉන්දියාවට ගියා. එහේ යන්න බෝට්ටුවක් තමයි තිබුනේ. ඒකෙම ගියා. සැප්තැම්බර් දෙවෙනිදා ඒකේ තිස් ‍දෙනෙක් හිටියා. නඩුක්කුඩා පැත්තෙන් තමයි මේ පාර ගියේ. එනකොටත් නඩුක්කුඩා‍ පැත්තෙන් තමයි ආවේ. නඩුක්කුඩා කියන්නේ ගැඹුරු මුහුදනේ.. බෝට්ටුවට නගින්න බයයි. ගිහිල්ලා වෙරළට ගොඩබහියි ද කියලා බයක් ති‍බුනා. පොඩි ළමයිනුත් හිටියානේ.. ඒගොල්ලොත් බෝට්ටුවේ තියාගෙන එතකොට හැමෝම කවුද එන්නේ කියලා බැලුවා. එතකොට අපි හිතුවා අපි ‍ඔක්කොම මැරෙයි කියලා, එකතුවෙලා ඉමු කිව්වා. බෝට්ටුව පදින එක්කනාට අපිව මරන්නද යන්නේ කියලා අපි බැන්නා.
ගැඹුරු මු‍හුදේ ‍පාවෙන බෝම්බ තියෙනවා කියලා කියනවා. අපි මෙච්චරකල් මේකෙන්නේ ගියේ.. දැන් තමයි ගැඹුරු මුහුදට එන්නේ කියලා බෝට්ටුව පදින එක්කනා කිව්වා. මට මේක පුරුදුයි මම ඒක දන්නවා බය නැතුව ඉන්න. මම එක්ක ගිහිල්ලා ‍ගොඩ බස්සවන්නම් කියලා කිව්වා. අපි ගිහිල්ලා බහිනකොටම ටෙලෝ එකෙන් ආවා. එහෙමම අපිව එක්ක ගිහිල්ලා කැළේට දාලා අතෑරලා දාලා නිදාගන්න කියලා යන්න ගියා. එහෙමම ගිහිල්ලා ආයෙත් අපි නිදාගෙනම ඉන්නම් කියලා අඬලා නිදාගත්තා තමයි.
එහෙ නිදහසක් තිබුනා. ඒත් එහෙ ඉන්න කරදරයි. තිබ්බ රත්ත්‍රන් ඔක්කොම විකුණ්නා. ඉන්න බෑ කියලා අපේ රටට යමු කියලා ආවා. මාස තුනක් හිටියා. වෙඩි වැදිච්ච බයට තමයි ගියේ. මෙහේ හරියට ප්‍රශ්න තිබ්බානේ.. ඇස් පියාගෙන ඔහේ වෙඩි තියනවා. ඉන්න බෑ කියලා තමයි ගියේ.
ඉංදියාවෙත් ඉන්න බැහැ. ආදායමක් නැහැනේ. අපි තූත්තුකුඩියේ කඳවුරක හිටියා. ආධාර දෙනවා. ලාම්පුතෙල් ගන්න තැනක් තියෙනවා. ඒකෙන් ලාම්පුතෙල් ගන්නවා. ඒගොල්ලෝ හැම දේම දෙනවා. රත්ත්‍රන් බඩුත් තිබුනා. ඒක තියාගෙන තමයි හිටියේ. ඒක අපිට මදි කියලා තමයි ආවේ.
එහෙ නිදහස තිබුනා. ඒත් එහෙ කරදරයි. එහෙදී නිදාගන්න පුලුවන්. කන්නත් පුලුවන්. ඒත් මෙහෙ එහෙම නෑ. දැන් කළබල ඉවර වෙලා නිදහසේ ඉන්නවා.
අපි දැන් නිදහසේ තමයි ඉන්නේ. මොන මොනවා වෙනවද කියලා දැන් තේරෙන්නේ නැහැ. යුද්ධෙ නැත්නම් ඕන දෙයක් කරන්න පුලුව‍න්නේ.. යුද්ධය ආවොත් දේපළ එකතු කරලත් වැඩක් නැහැ. අපි දැන් නිදහසේ තමයි ඉන්නේ. මෙහෙම හිටියොත් සතුටින් ඉන්න පුලුවන්. ආයේ නම් යුද්ධය ඇතිවෙන්න එපා.


CMP/MN/MN/PES/03
எனக்கு 8 வயதாக இருக்கும் போது அப்பா இறந்திட்டார். அவருக்கு TP வருத்தம் இருந்ததால இறந்திட்டார். அவர் இறந்த காலத்திலே இருந்து யுத்தம் தான். நாங்கள் பற்றைக்குள் ஓடுறதுதான். 1986 ம் ஆண்டு எல்லாம் பிரச்சினை நடந்து கொண்டே இருந்தது. எங்கட தம்பி போர்க்காலத்தில் காணாமல் போய் விட்டார் பேசாலையில் இருந்துதான். அப்போது இயக்கங்கள் தோன்ற வெளிக்கிட்டது தானே. அப்ப அவரை காணவில்லை. நாங்கள் தேட வெளிக்கிட்டோம். அப்போது அவருக்கு 16 வயதுதான்.
85 கலவரத்தோட இந்தியா போக வெளிக்கிட்டோம். அப்பா இல்லை. அம்மாவோட நாங்க 4 பேர். அம்மாவோட இந்தியா போயிட்டு அங்க கஸ்டம்தானே திருப்பி இலங்கைக்கு வந்தனாங்க. திருப்பி வந்த இடத்தில அம்மா கடல்ல விழுந்து இறந்துட்டாங்க. படகுல வந்தது 30 பேர் ஆள் கூட ஏத்தி வந்ததால கார்த்திகை மாதம் போர்ட் மூழ்கிற்றுது. அதில சிங்கள ஆள் ஒருவர்தான் தப்பினது. நாங்க அங்க தனியே இருந்தோம். மாமி ஆக்கள் இருந்தார்கள். அப்பாட ஆக்கள் அவங்களோடதான் கூட இருந்தோம். அண்ணா இருந்தான்.
87 இல இலங்கைக்கு திரும்ப வந்தோம். நாங்க இருந்த வீடு அழிந்து போயிட்டு மாமி வீடு, பெரியம்மா வீடு என்று மாறி மாறி இருந்தோம். திரும்பவும் அண்ணாவும் நானும் தங்கையும் 1990 ம் ஆண்டு இந்தியாவுக்குப் போனோம். அங்க அகதியாக இருந்து திரும்பவும் பின்னர் இலங்கைக்கு வந்தோம்.
எனக்கு கல்யாணம் பேசினாங்க. அதோட இங்க காணி எடுத்து வீடு கட்டினோம். எனது கடைசித் தங்கை என்னோடதான் இருக்கிறாள். அம்மா இறக்கேக்க அவளுக்கு 6 வயது. பிரச்சினை நேரத்திலே 3 தடவை இந்தியாவுக்குப் போய் வந்தோம்.
போர் நடந்த காலத்தில இங்கிருந்து கோயிலுக்கு ஓடுறதுதான். இங்க சமைக்கிறது சாப்பிடறதும். சாப்பிட்டுக் கொண்டிருக்கையில வெடி விழும். வெடி விழ ஓடுறது. சென்ரி இங்க இருக்கிறதால தூரத்து இடங்களுக்கு போயிட்டு வெடி ஓய்ந்தோன வந்திருவோம்.
அந்த நேரம் கோயில் அடிபாடு நடந்தது. அந்த நேரம் கோயிலிலதான் படுத்துக் கொண்டிருந்தோம். காலம வந்து முகம் கழுவி 10 - 12 மணிக்குள்ள சமைக்கோணும். எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியாதுதானே.
கடல்லதானே சத்தம் கேட்குது நாங்க கோயிலுக்கு ஓடுவோம் என்டு கோயிலுக்கு போனோம். கோயிலுக்கு உள்ள போனோன வெளியில சத்தம் கேட்டுது. கதவெல்லாம் பூட்டிட்டாங்க. நாங்க எல்லாம் குப்புற படுத்திட்டோம். உள்ள கிரனெட்ட உருட்டி விட அது எங்கட மாமிக்கு பக்கத்திலதான் உருண்டது. அவருக்கு உடம்பு முழுக்க காயம். எனக்கும் சின்னப் பொடியனுக்கும் காயம். எனக்கு 5 பிள்ளைகள் இருக்கு. எனக்கும் கணவருக்கும் 1 மகனுக்கும் காயம். மற்றது சித்திட மகனுக்கும் எங்கட மாமிக்கும் ஒரு இடத்திலே இருந்ததால கூடுதலாக காயப்பட்டது. 6 பேரும் காயப்பட்டோம்.
நாங்க உயிரோட வருவம் என்று நினைக்கல. இன்னொரு மகன் இருக்கின்றான். சின்னப்பையன் அவன் என்ற அணைக்குள்ள கிடந்தான். எனக்கு வெடிப்பட்ட உடனே இடுப்புக்கு கீழே இயங்கல. எனக்கு அறிவுகெட, அம்மாக்கு ஏதோ செய்து சாக போறன், நீ எழும்பி ஒடுறா என்று சொன்னேன். அவன் எனக்குள்ள இருந்து கொண்டு போக மாட்டன் என்று சொல்லிட்டான்.கட்டிப் பிடிச்சுட்டு படுத்திட்டான். இரத்தம் போய்க் கொண்டு இருக்கின்றது. எனக்கு இடுப்புக்கு கீழே இயங்கல. ஒன்றுமே தெரியல. பிறகு ஆக்கள் எல்லாம் வந்து பார்த்தாங்க. நான் கத்தினேன். என்னையும் தூக்கிக் கொண்டு போங்க என்று சொல்ல என்னையும் தூக்கிக் கொண்டு போனார்கள். அப்போது என்னைய சித்தப்பாதான் தூக்கி நடத்தினார். எனக்கு நடக்க முடியாம இருந்தது. ஏதோ எல்லாம் செய்ய தொடங்கி விட்டுது.
எனக்கு கோயில்ல வெடிப்பட்ட உடனே நான் வாயால மூச்சு ஊதி ஊதி பார்த்தா மூச்சு வராத மாதிரி இருந்தது. உயிரோட இருக்கின்றனா என்று பார்த்த எனக்கு உணர்வு இல்லாம போகுது என்று தான் ஆக்களை புடிச்சி என்னையும் தூக்கி கொண்டு போங்க என்று கத்தினேன்.
எனக்கு பக்கத்தில் ஒரு அக்கா இறந்து போய் கிடந்தார். இன்னொரு ஆள் இடுப்பிலே வெடிப்பட்டு சரிந்து கிடந்தார். செத்துக் கிடந்த அம்மாவுக்கு தலை பிளந்து காணப்பட்டது. அந்த இரத்தத்தைப் பார்த்து அவங்களப் பார்த்துத்தான் என்னைய ஒருத்தரும் தூக்கவில்லை. நான் படுத்துக் கிடந்தேன். நானாகத்தான் சுரண்டி எனக்கு ஏதாவது செய்யுங்கள் என்று சொன்னேன். யாரோ உடுத்தி இருந்த சரத்தை கலட்டித்தான் எனக்கு கட்டி இருந்தார்கள்
பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு போய் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு போய் பிறகு கோயிலுக்கு வந்தோம். வந்து 1 மாதம் கோயில்ல சுவாமி அறையில் இருந்தோம். மருந்து எடுத்து எல்லாம் சுகம் ஆகின பிறகு வீட்ட வந்து விட்டோம்.
அதன் பிறகு அகதிகளாக இந்தியாவுக்குப் போனம். அங்கு போறதுக்கு Board தான் இருந்தது. அதிலே போனோம். கார்த்திகை மாதம் 2 ம் திகதி. அதிலே 30 பேர் வந்தாங்கள். நடுக்குடாவால தான் இந்த தடவை போனோம். திரும்ப வரும்போது நடுக்குடாவால தான் வந்தோம். நடுக்குடா ஆழ்கடல் தானே தோனியிலே ஏற ஒரு பயம். போய் கரை சேருவமா என்ற மனப்பயம். சின்ன பிள்ளைகளும் தானே இருந்தது. அதுகளையும் அணைக்குள்ள வச்சிருந்து அப்ப எல்லாம் யார் வாறது என்று எல்லாரும் பார்த்தார்கள். அப்ப நாங்கள் நினைத்தோம். நாங்க எல்லாம் செத்திடுவம் என்று அப்ப ஓட்டிட்ட சொன்னம், பார்லில முட்டிடும் பார்த்து ஓடுங்க என்று. எங்களை கவுக்கயா போறீங்க என்று பேசினோம்.
ஆழ்கடல் இல் பார் கிடக்கும் என்று சொல்லுவாங்க. நாங்கள் இவ்வளவு நாளும் இதாலதானே போனோம். இப்பதான் ஆழ்கடல் போனது. அதோட ஓட்டி சொன்னார். நான் நல்ல ஓட்டிதான் எனக்கு தெரியும் பயம் இல்லாம இருங்க. நான் கொண்டு போய் சேர்ப்பேன் என்று சொன்னார். நாங்களும் போய் இறங்க ரெலி வந்திட்டு. அதோட எங்களை வரச் சொல்லி பற்றைக்குள்ள தள்ளி குப்பறப்படுக்க சொல்லி விட்டு போட்ட அவிட்டு விட்டான். அதோட போய்ட்டு திரும்பவும் நாங்கள் குப்பறவாகப் படுக்கின்றோம் என்று சொல்லி அழுதிட்டு படுத்தது தான்
அங்க நிம்மதி இருந்தது ஆனா அங்க இருக்க கஸ்ரமா இருந்தது. இருந்த நகை எல்லாத்தையும் வித்தாச்சி. இருக்க ஏலாது நம்ம நாட்டுக்கு போவம் என்று வந்திட்டன். 3 மாதங்கள் இருந்தோம். வெடிபட்ட பயத்தால தான் போனோம். இங்க கூடுதலான பிரச்சினையாத்தானே இருந்தது. கண்மூடித்தனமாக சுட்டுக் கொண்டு இருந்தாங்க. இருக்க ஏலாது என்றதனால் போனோம்.
இந்தியாவிலேயும் இருக்க ஏலாது. உழைப்புக்கள் இல்ல தானே. நாங்கள் தூத்துக்குடியில் முகாமில இருந்தோம். நிவாரணம் தருவாங்க. மண்ணெண்ணெய் துறை இருக்கிறது. அதில் மண்ணெண்ணெய் எடுக்கிறது. அவங்க எல்லாம் தருவாங்க. நகைகளும் இருந்தது. அதை வைத்துத்தான் இருந்ததோம். அது நமக்கு போதாது என்றுதான் வந்திட்டோம்.
அங்க நிம்மதி இருந்தது. ஆனால் அங்க கஸ்ரம் இருந்தது தானே. அங்க படுத்து தூங்க முடிந்தது. சாப்பிடவும் முடிந்தது. ஆனால் இங்க அப்பிடி இல்லை. இப்ப போர் முடிந்த காலத்திலே நிம்மதியாக இருக்கும்.
இப்ப நாங்கள் சுதந்திரமாகத்தான் இருக்கின்றோம். என்ன என்ன நடக்கும் என்று இப்ப தெரியாது. யுத்தம் இல்லா விட்டால் நாங்கள் எதையும் செய்யலாம் தானே யுத்தம் வந்தால் சொத்துக்கள் சேர்த்தும் பிறகு வேலையில்லைதானே. இப்ப நாங்கள் சுதந்திரமாகத்தான் இருக்கின்றோம்.இப்பிடியே இருந்தா சந்தோசமாக வாழலாம். இனிமேலும் போர் நடக்க கூடாது.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License