Muslims were ordered to leave

Life story of a retired principal


මුස්ලිම්වරුන්ට නියෝගයක් නිකුත් කිරීමට නියෝග කෙරිණි

විශ්රාමික විදුහල්පති ජීවිත කතාව


முஸ்லிம்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

ஓய்வுபெற்ற அதிபர் ஒருவரின் கடந்தகால அனுபவங்கள்



CMP/MN/MN/TAR/01

I was born in Tharapuram. My mother died when I was five. When I was 18 my father got married again and he got four daughters. I am the only son.
I got educated and not only became a teacher but a principal. I have told many things to my students. For around 45 years I was a Grade 1, Principal. During my time I have upgraded small schools in to big Mahavidyalayams. In Sri Lanka, I have put great efforts at the ministerial level to gain physical assets to schools, to develop the standards of the students and schools.
Though I am above 73 now, I am still concern about the matters of students’ education and schools.
Students should have noble behaviors; they shouldn’t violate the core principals. Students should respect the teachers. They should treat the teachers with courtesy. I don’t like young girls and boys being too friendly in any schools. I hate that very much. Now being in administration I have done a lot of service to the teachers, students, schools and the villagers. I wish people live in harmony without racial discriminations as Tamils, Sinhalese and Muslims.
I was the principal at Velakulam for about 45 years. In addition to that I have upgraded many small schools in to Mahavidyalayams. Students from those Mahavidyalayams can be seen today as doctors, architects, teachers and MPs. I am very proud of that.
In 1990 Muslims were ordered to leave the places within 24 hours. We went through so many difficulties and went to Kalpitty through sea and went to so many other places. Some organizations and institutions helped us, we can never forget that. We got displaced and went there, we were not refugees, we were just displaced people.
We were at Tharapuram and due to displacement we went to Puthalam. In the year 1971 I was a principal at Viruthodai, Puthalam. Puthalam is not a new place to me. That was an old village for me. I considered that as my own village. The displacement that took place in 1990 was so terrifying and scary.
Tharapuram was a peaceful place. Because, there was no discrimination as Tamil, Sinhalese and Catholic. We had very strong relationship with the neighboring villagers as one family. Because of that they didn’t like this separation of us. Neither the Tamils nor Catholics liked us moving to Puthalam. They fought for us. When I was a leader for a Muslim organisation I gave the displaced people in camps houses, wells, sheets and lamps.
We lost everything and went empty handed. When we came back to our village there were no goods or the house. We cannot blame anyone. Now people are doing agriculture and plantations for their living. We don’t have any difficulties. That much people are united in our village. There is no space for a problem now.
We went to Puthalam in 1990 and then I returned to my own village Tharapuram in 2005. But still so many people continue to live where they got displaced. If the resettlement get properly implemented everyone would come back.
I wish I could be doing community services even when I am old. Only that would bring peace to me.


CMP/MN/MN/TAR/01
මම ඉපුදුනේ තාරාපුරම්වල. මගේ අම්මා මට අවුරුදු 05 ක් වෙද්දී නැතිවුනා. මට අවුරුදු 18 ක් වෙලා තියෙද් දී තාත්තා ආයෙත් විවාහයක් කරගෙන එයාට ගෑණු ළමයි හතර දෙනෙක් ඉන්නවා. මම විතරයි පිරිමි ළමයා.
මම ඉගෙන ගෙන ගුරුවරයෙක් විතරක් නෙමෙයි විදුහල්පති කෙනෙක් විදියටත් ඉඳලා තියෙනවා. ශිෂ්‍යයින්ට ගොඩක් දේවල් කියලා දීලා තියෙනවා. මම අවුරුදු 45 ක් විතර එක ශ්‍රේණියේ විදුහල්පති කෙනෙක් විදියට හිටියා. මගේ කාලය තුළ පුංචි ඉස්කෝල මහා විද්‍යාල විදියට දියුණු කළා. ලංකාවේ මම පාසල්වල භෞතික සම්පත් එකතු කරන්න ආයතන මට්ටමින් වැඩ කරලා ශිෂ්‍යයින් සහ පාසැල් දියුණු කරන්න ගොඩාක් මහන්සි වුනා.
මට දැනට අවුරුදු 73 ක් පැනලත් පාසල් හා ශිෂ්‍යයින් ගැන මම හැම වෙලේම කැප වෙලා කටයුතු කරනවා.
ශිෂ්‍යයොන්ගේ විනය හොඳින් තියෙන්න ඕන. ඒ ගොල්ලන්ගේ විනය පිරිහෙන්න හොඳ නැහැ. ශිෂ්‍යයෝ ගුරුවරුන්ට ගරු කරන්න ඕන. ගුරුවරුත් එක්ක හොඳින් හැසිරෙන්න ඕන. තරුණ වයසට පත්වෙච්ච ශිෂ්‍යයෝ, ශිෂ්‍යාවෝ එක්ක සමීපව ආශ්‍රය කිරීම මම කිසිම පාසලක දී කැමති නැහැ. මට ඒකට ගොඩාක් කේන්ති යනවා. දැන් පරිපාලනය මගින් ගුරුවරුන්ට, ශිෂ්‍යයන්ට හා පාසල්වලට මම ලොකු සේවයක් කරලා තියෙනවා. දෙමළ මුස්ලිම්, සිංහල කියලා භේදයක් නැතිව හැමෝම සහයෝගයෙන් ජීවත් වෙන්න ඕන කියන එක මගේ ආශාව හා බලාපොරොත්තුවයි.
අවුරුදු 45 ක් විතර වේලාකුළම් විදුහල්පති විදියට වැඩ කරලා තියෙනවා. ඒත් එක්කම පොඩි පාසල් ගොඩක් මහා විද්‍යාල බවට පත්කරලා තියෙනවා. ඒ මහා විද්‍යාලයේ ඉගෙන ගත්ත ළමයි දැන් වෛද්‍යවරු, ගෘහ නිර්මාණ ශිල්පියෝ, ගුරුවරු, පාර්ලිමේන්තු මන්ත්‍රීලා විදියට ඉන්නවා. ඒක මට ලොකු ආඩම්බරයක්.
1990 අවුරුද්දේ දී පැය විසිහතරකට කලින් මුස්ලිම් අය පිටත්වෙලා යන්න ඕන කියනකොට අපි කොහොමද යන්නේ කියලා හරියට කරදර වෙලා මුහුදු මාර්ගයෙන් කල්පිටියට ගිහිල්ලා ගොඩක් තැන්වලට ගියා. අපිට ආයතන හා සංවිධාන ගොඩක් උදව් කළා. ඒක අමතක කරන්න බැහැ. අපි අවතැන් වෙලා තමයි ගියේ. සරණාගතයෝ නෙමෙයි. අවතැන් වූ අය. .
අපි තාරාපුරම්වල හිටියා. ඒ කාලේ අවතැන් වෙලා පුත්තලමට ගියා. 1971 දී මම පුත්තලමේ විරුතොඩෛයිවල විදුහල්පති විදියට හිටියා. මට පුත්තලම අලුත් තැනක් නෙමෙයි. ඒක මට පරණ ගමක්. මම මගේ ගම කියලා හිතාගෙන හිටියා. 1990 දී ඇතිවූ අවතැන් වීම හරිම භයංකාරයි.
තාරාපුරම් හරිම නිසංසල ගමක්. ඒකට කාරණය මෙහේ කතෝලික, දෙමළ, සිංහල කියලා භේදයක් නැහැ. එ‍හා ගමේ ඉන්න අයව එක අම්මගෙ ළමයි වගේ ආශ්‍රය කරනවා. ඒ නිසා ඒ ගොල්ලෝ අපේ බෙදීමට කැමති නැහැ. අපි පුත්තලමට යනවාට කතෝලික අයවත්, දෙමළ අයවත් කැමති වුනේ නැහැ. ඒ ගොල්ලෝ විරෝධතා කළා. මම මුස්ලිම් සංවිධානයක සභාපති වෙලා ඉඳලා 85 දී කඳවුරටයි, අවතැන් වූ ජනතාවටයි ගෙවල්, ළිං, ෂීට්, ලාම්පු ආදිය අරන් දුන්නා.
අපි හැමදේම අතහැරලා හිස් අතින් ගියේ. ආයේ ගමට එද්දී ගමේ බඩුත් නැහැ. ගේත් නැහැ. ඒකට කාටවත් චෝදනා කරන්න බැහැ. දැන් ගොවිතැන් එහෙම කරගෙන ජීවත් වෙනවා. අපිට කිසිම කරදරයක් නැහැ. ඒ තරමට මිනිස්සු අපේ ගමේ සහයෝගයෙන් ජීවත් වෙනවා. කිසිම ප්‍රශ්නයකට දැන් ඉඩ නැහැ.
පුත්තලමේ ඉඳන් 1990 දී ගියාට පස්සේ මම අපේ ගමවන තාරාපුරම් වලට 2005 දී ආවා. ඒත් තවම ගොඩක් දෙනෙක් අවතැන් වූ තැන්වලම ඉන්නවා. නැවත පදිංචි කිරීම හරියට වෙනවානම් හැමෝම ආපහු එනවා.
මගේ ආසාව මොකක්ද කිව්වොත් පොදුවැඩ කරන්න ඕන කියලා විතරයි. ඒකෙන් විතරයි මට සතුටක් ලැබෙන්නේ.


CMP/MN/MN/TAR/01
நான் தராபுரத்தில் பிறந்தேன். எனது அம்மா எனக்கு 5 வயதாக இருக்கும் போதே காலமாகி விட்டார் எனக்கு 18 வயது இருக்கும் போது எனது அப்பா இரண்டாம் தாரமாக கல்யாணம் முடிச்சு அவருக்கு 4 பெண் குழந்தைகள் நான் மட்டும்தான் ஆண்.
நான் படித்து ஒரு ஆசிரியராக மட்டுமன்றி அதிபராகவும் இருந்திக்கின்றேன். மாணவர்களுக்கு நிறைய விடயங்களை கூறியிருக்கின்றேன். நான் ஏறத்தாழ 45 வருடங்கள் Grade one Principal ஆக இருந்தேன். என்னுடைய காலத்திலே சிறிய பாடசாலைகளை பெரிய மகாவித்தியாலயமாக மாற்றி இருக்கின்றேன். இலங்கையில் நான் பாடசாலையில் பௌதீக வளங்களை சேர்ப்பதற்கு அமைச்சு மட்டத்தில் வேலை செய்து மாணவர்களையும் பாடசாலைகளையும் உயர்த்துவதற்காக பாடுபட்டிருக்கிறேன்.
எனக்கு இப்போது 73 வயதைத் தாண்டினாலும் பாடசாலை விடயத்திலும் மாணவர்களின் கல்வி விடயத்திலும் நான் எப்போதுமே அக்கறையாகவே இருந்து வருகின்றேன்.
மாணவர்கள் ஒழுக்கத்திலே முன்நிற்க வேண்டும். அவர்கள் ஒழுக்கத்திற்கு அப்பாற்படக்கூடாது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கௌரவமாக இருக்க வேண்டும். ஆசிரியர்களுடன் பண்பாகப் பழக வேண்டும். அடுத்து வயது வந்த ஆண், பெண் பிள்ளைகள் நெருங்கிப் பழகுவதை நான் எந்தப் பாடசாலையிலும் விரும்புவதில்லை.அது எனக்கு மிகவும் வெறுப்பான விடயம். இப்போது நிர்வாகத்திலே ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பாடசாலைகளுக்கும், ஊரவர்களுக்கும் நான் நிறையப் பணி செய்திருக்கின்றேன். தமிழ், முஸ்லீம்,சிங்களம் என்ற பாகுபாடின்றி எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது எனது ஆசையும் அவாவும் ஆகும்.
ஏறத்தாழ 45 வருடங்கள் வேளாகுளம் அதிபராக சேவையாற்றி இருக்கின்றேன். அத்தோடு பல சிறிய பாடசாலைகளை மகாவித்தியாலயமாக மாற்றி இருக்கின்றேன். அந்த மகாவித்தியாலயத்திலே படித்த பிள்ளைகள் இன்று வைத்தியராகவும், கட்டடக்கலைஞராகவும், ஆசிரியராகவும், MP ஆகவும் இருக்கின்றார்கள். அது எனக்கு ஒரு பெருமை தரக்கூடிய விடயமாகவும் காணப்படுகின்றது.
1990ம் ஆண்டு 24 மணித்தியாலத்துக்கு முன்னுக்கு முஸ்லீம்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கூற நாங்கள் எப்படிப் போவது என்ற நிலையில் மிகச் சிரமப்பட்டு கடல் மார்க்கமாக கற்பிட்டிக்குப் போய் பல பல இடங்கள் போனோம். எங்களுக்கு நிறுவனங்கள் அமைப்புகள் உதவி செய்தார்கள் அதனை மறக்க முடியாது நாங்கள் இடம் பெயர்ந்துதான் போனோம். அகதிகள் அல்ல. இடம் பெயர்ந்தவர்கள்
நாங்கள் தாராபுரத்தில் இருந்தோம். அந்த நேரத்திலே ஒரு இடப்பெயர்வு காரணமாக புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தோம். 1971 ம் ஆண்டு நான் புத்தளத்தில் விருதோடையில் அதிபராக இருந்தேன். எனக்கு புத்தளம் புதிய இடமில்லை. எனக்கு அது பழைய ஊர். நான் சொந்த ஊராக நினைத்து வந்தேன். 1990 ம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வு பயங்கரமாகவும், அச்சமாகவும் இருந்தது.
தாராபுரம் மிகவும் அமைதியான இடம். காரணம் இங்கு கத்தோலிக்கம்,தமிழ், சிங்களம் என்ற பேதம் இல்லை. பக்கத்து ஊரிலுள்ள அனைவரும் தாய் பிள்ளை போலவே பழகுவோம். அதனால் அவர்கள் எங்களுடைய பிரிவை விரும்பவில்லை. நாங்கள் புத்தளத்திற்கு போவதை கத்தோலிக் மக்களோ, தமிழ் மக்களோ விரும்பவில்லை. அவர்கள் போராடினார்கள். முஸ்லீம் அமைப்பில ஒரு தலைவராக இருந்து 85 முகாமிற்கு இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடு,கிணறு, சீற்று, லாம்பு என்பன கொடுத்தேன்
நாங்கள் எல்லாம் இழந்து வெறுங்கையுடன் போனோம். திரும்ப ஊருக்கு வரேக்க ஊரில் சாமானும் இல்லை. வீடும் இல்லை. அதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. இப்போது விவசாயம், தோட்டம் என்பன செய்து வாழ்ந்து வருகின்றனர். எங்களுக்கு எந்தவிதமான கஸ்டமும் இல்ல. அந்தளவுக்கு மக்கள் ஒற்றுமையாக எங்கட ஊரில இருக்கிறாங்க. எந்தப் பிரச்சனைக்கும் இப்போது இடமேயில்ல
புத்தளத்தில் இருந்து 1990 ம் ஆண்டு போன பிறகு 2005 நான் எனது சொந்த ஊராகிய தாராபுரத்திற்கு வந்து விட்டேன். ஆனால் இன்னும் பலர் இடம் பெயர்ந்த இடத்திலே இருக்கின்றனர். மீள்குடியேற்றம் சரியான முறையில் நடக்குமானால் எல்லோரும் திருப்பி வருவார்கள்.
என்னுடைய ஆசை என்னவென்றால் எனக்கு வயது போனாலும் பொது வேலைகள் செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டுமே. அதுதான் நிம்மதி;யைத் தரும்..





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License