I was humiliated

The story of a woman who has suffered many troubles in life


මට නින්දා කළා

ජීවිතයේ බොහෝ කරදරවලට ගොදුරු වූ කාන්තාවක් පිළිබඳ කතාව


நான் அவமதிக்கப்பட்டேன்

வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்த பெண்ணொருவின் கதை



CMP/MN/MU/SIL/04

Our place is Navalapity estate. My mother lived at Palamaasi in Nawalapity. We got displaced from there when we were small and came here. There was famine at the time we came here. There was no rain. Srima was in power then. We suffered severe hardships. Food was scarce. Then we came here. I had waited in queue for bread in this Aadkaaddi Junction. There are seven children in our family. Two died. We faced severe hardships here. Later I got married. I have five children.
From here we went to Paruppukadanthan. Then we came here. From here we went to India in 1990 and lived there for five years. We returned from India in 1995. Then, as there was shell fire, we went to Madu. There my sister was taken away by the movement. She was a student. She went willingly. Then we went to Army controlled area. We lived there for two years. Then, in the year 2000 we came here. My children were studying. We returned to Madu, lived there for a while and then again returned here. After my son was caught, in May 2007, we left this place and went to Aathimoddai – then from there we went to Murippu in Naavadai, and from there to Iranamadu then to Visuvamadu. As we were going to Visuvamadu we underwent many hardships. We didn’t have money or anything, we walked and hitchhiked to Suthanthirapuram. We had been there for a month our son who was injured came, stayed for two days, and then left. We also left and went to Aachithoddam and stayed there only for five days. So far we had travelled by foot. We had clothes, pots and pans and a bicycle. We carried the things on the bicycle. From thence no vehicles, no things to carry, we had left everything at Suthanthirapuram. Our home had been a temporary shed. We went to Aachiupram and to Theviupram. We spent a night at the riverside and went to Valaignar Mada Kovil.
While we were there, we were struck by shell fire. Five or six of us were injured and died. People who stayed near me also died. I was injured. Then we went to Mullivaikal. Here, only a few were selected and sent. To them, we were a fighter’s family. We were treated like dirt. Then we went to Mullivaikal seaside. We stayed there only for five or six days. We faced terrible hardships. Shell fire was fierce. Many lost their lives. We queued up for porridge, bread or buns. We almost starved. The Army came after 6 days. We all panicked and left around early morning 4am. Till then we were roaming around.
Stopping at bunkers, we reached the vicinity of Vadduvaalai bridge around 8 O/clock. We had peace there and were able to relax. Shell fire wasn’t fierce. We felt we had escaped death. We stayed for two days. We then travelled by night, reached Omanthai and were taken to Anandakumarasamy inn. We spent nearly an year there. We have to thank those in authority for bringing us straight here without making us pack our things and move from camp to camp. Some had to pack their things and move from camp to camp. We were spared this agony.
But we suffered from scarcity of food in the camp. For 2 days my children and I suffered from lack of food, food was brought in lorries. 15 known people would also come along. They give the food to people who were known to them. Others starved. We had starved for 2 days. After that we didn’t starve for an year. But we weren’t happy. In the days of war, we starved at times but ate well at other times. If we didn’t have curries we ate with sambol. Even during the days of shell blasts, we have had something to eat. We were very sad because we had starved for two days in the camp though we were free from shell blasts.
After that we came here. IOM gave us a small tin shed. We had no house. A gentleman helped me. I had 4 sons and a daughter. My daughter got chickenpox. The said gentleman had a house where he had locked up some odds and ends. Now he gave us that house saying “you can live here. Tell me what you want and I will provide it all.” He bought us rice and everything. We got pots and pans and started cooking the very next day.
They said there is a housing scheme and ‘Vaalvodaya’ gave us this house. We haven’t completed it properly yet. I work as a carpenter. I have had a fall during my work and I broke both my arms. The bones broke and I couldn’t turn my arms. My children saw my condition and gave up their studies. I had told them to continue their studies though they are not good at it. But they didn’t.This is the state of my affairs. If I have married and raised five children, it is because of the magnanimity of the Inspector of Maanaankulam. I can’t forget him. He fed us. I only looked after cows. He took care of me like his child. We worked for him, but he fed my children.
They brought the body of my eldest son and said he had died bravely. I had raised him up to the age of seventeen. If he should die, he could have died in Pallamadu hospital. I had brought him up amidst great difficulties. He had been very sick. I sold everything for his treatment. I had sold the cow, the goat and even the paddy I had for seeding. In the end I even left my house and lived elsewhere for his sake. Like an eagle, they took him away, this makes me sad. They did not let him live with us even for a while. I suffered because of him. But I can’t forget him. I believe my son is not dead. They brought me an 8 days old body and told me not to unwrap it and take a look. But I unwrapped and had a look. It wasn’t my son. I still don’t believe my son is dead. I live with the hope he is still alive. Let him come to me before I die. It doesn’t matter if he has lost his leg or arm. I can afford to take care of him.
I have appealed to find him. I have met the foreign affairs minister one and a half months ago. This is what they said, “We will appoint a commission to look for the lost, we will give you an answer or we will give you a document to certify he is lost. We will help you in someway.” But so far nothing has been done for the lost. Although help has been given to ex fighters. We are undergoing hardships without our children in our old age. But none care for us. Neither the GS nor the AGA. They believe we survive somehow. But much has been done for those who have came from detention. It is because they are alive.
We have lost our children, and what are we doing? We go to templets, attend meetings here and there abiding by their instructions – but we are still in tears. We attended the meeting held by the UNHR. What have they said? “We won’t find your child. If you can, you try,” they have answered in one sentence. We have not approached any establishments with requests for money, asking Rs 25,000, Rs 50,000 to compensate for the loss of our child. What is the use of 25,000 when we have lost our child?
The education of my children was disrupted because of my condition. I had been unemployed for two years because both my hands had been broken. My two children are working instead. One is working as a mason. The other is working in Colombo. It is enough for me if they are well established in their jobs. They are not well educated. Two of my children are studying. The condition of our life is a little satisfactory now.


CMP/MN/MU/SIL/04
මගේ ගම නාවලපිටිය එස්ටේට්. නාවලපිටියේ අපේ අම්මා හිටපුතැන පළමාසි. එහෙ ඉඳන් තමයි අපි අවතැන් වෙලා ආවේ. පොඩි වයසේ දී තමයි මෙහෙට ආවේ. ඒ කා‍ළේ දී හරියට ඉඩෝරයි. වහින්නේ නැහැ. ඒ කාළේ සිරිමාවෝගේ ආණ්ඩුව. ආවට අපට හරියට කරදරයි. කෑමට එහෙම හරියට කරදර වෙලා තමයි මෙහෙ ආවේ. මම මෙතන ආට්කාට්ටි හන්දියේ පාන්වලට පෝළිමේ ඉඳලා තියෙනවා. අපේ පවු‍ලේ සහෝදරයෝ හත් දෙනෙක්. දෙන්නෙක් මැරුණා. මෙහෙත් හරියට කරදර වෙලා තමයි ජීවත් වුනේ. ඊට පස්සේ මම බැන්දා. මට ළමයි පස් දෙනයි.
මෙහෙ ඉඳන් පරිප්පුකඩන්දාන්වලට ගියා. පස්සේ මෙහේ ආවා. ආයේ මෙහේ ඉඳන් ඉංදියාවට ගියා. 1990 දී ගිහිල්ලා අවුරුදු 05 ක් ඉංදියාවේ හිටියා. 95 දී ආයෙත් ආවා. ඊට පස්සේ මෙහේ ඉද්දී ෂෙල් වැටෙනකොට මඩුවලට ගියා. එතකොට මගේ නංගිව සංවිධානෙන් අරන් ගියා. ඉගෙන ගෙන හිටපු එක්කනා. එයාම ගියා. පස්සේ හමුදා පාලනය යටතට ගියා. අවුරුදු දෙකක් ‍එහෙ හිටියා. ඊට පස්සේ 2000 දී ඇවිත් මෙහෙ හිටියා. ළමයි ඉගෙන ගන්නවා. ආයේ මඩුවලට ගිහිල්ලා ටික දවසක් ඉඳලා ආයෙත් එහෙ ඉඳන් අවතැන් වෙලා මගේ පුතාව අල්ලගත්තට පස්සේ 2007 පස්වෙනි මාසේ මෙහෙන් පිටත් වෙලා ගිහින් ආත්තිමෝට්ටෙයිවල ඉඳලා පස්සේ නාඕඩෛයි වලට ඇවිල්ලා මුරිප්පුවල ඉඳලා ඉරණමඩුවලට ගහිල්ලා විශ්වමඩු යන‍කොට තමයි අපිට හැම කරදරයක්ම වුනේ. අපි ළඟ සල්ලිත් නැහැ. මොකුත් නැහැ. පයිනුයි, වාහනවලයි ගිහිල්ලා අන්තිමේ දී සුගන්ධිරපුරම්වල එක මාසයක් ඉන්නකොට මගේ පුතා තුවාළ වෙලා ඇවිත් ඉන්නකොට බැලුවා. දවස් දෙකක් ඉඳලා එයා ආපහු ගියා. පස්සේ අපි එතැන ඉඳන් ලෑස්තිවෙලා අච්චිතෝට්ටාන්වලට ගියා. එහෙ දවස් පහයි. ඒ වෙනකම්ම අපි පයින් තමයි ගියේ. අපි අඳින ඇඳුමුයි, වළන් මුට්ටි ටිකයි බයිසිකලේ බැඳගෙන තල්ලු කරගෙන ගියා. එහෙ කිසිම වාහනයක් නැහැ. පටවන්න බඩුත් නැහැ. සුගන්ධිරපුරම්වල දී බඩු ඔක්කොම නැතිවුනා. තාවකාලික කූඩාරම්වල හිටියේ. හැම දෙයක්ම සුගන්ධිරපුරම්වල අතහැරලා පුළුවන් දෙයක් අරගෙන තමයි අපි ගියේ. ආච්චිතෝට්ටාන්වලට ගිහිල්ලා දේවිපුරම්වලට ගිහිල්ලා එක රැයක් ගං ඉවුරේ නැවතිලා ඉඳලා ආයෙත් වලෛයිනර්මඩම් කෝවිලේ හිටියා.
එහෙ ඉන්නකොට මාත් එක්ක හිටපු පස් හය දෙනෙක් තුවාළ වෙලා මැරුණා. මගේ ළඟ හිටපු අය මැරුණා. මටත් තුවාළ වුනා. ඊට පස්සේ මුල්ලිවයික්කාල්වලට ගියා. එහෙ තියාගෙන ඉඳලා සමහරුන්ව තෝරලා තමයි යැව්වේ. ඒ අතර මම ඒ ගොල්ලන්ගේ භාෂාවෙන් එල් ටී ටී ඊ පවුලක්. මම මනුෂ්‍යයෙක් කියලවත් ඒ ගොල්ලෝ හිතුවේ නැහැ. පස්සේ මුල්ලිවෛයික්කාල් වෙරළට ගියා. එහේ දවන් පහ හයක් හිටියා. ඒ දවස්වල දිගටම ෂෙල් ගහනවා. දිගටම මැරෙනවා. කැඳ බොන්න පෝළිමේ ඉන්නවා. පාන් බනිස් ගන්න පොළිමේ ඉන්නවා. එක වේලක් කාලා ආයේ කන්නේ නැතුව බඩගින්නේ හිටපු එකයි තමයි අපේ ජීවිතේ. දවස් හයකට පස්සේ තමයි අපිට හමුදාවෙන් ඇවිල්ලා සනසවලා උදේ හතරට පිටත් වුනේ. ඒ වෙනකම්ම අපි ඇවිද්දා තමයි.
බංකරේ ළඟ ඉඳලා අටට විතර ඇති වට්ටුවා‍ලෙයි පාළම ළඟට යනකොට. පාළම ළඟට ගියාට පස්සේ තමයි අපට නිදහසේ ඉන්න ලැබුනේ. ෂෙල් ගහන‍ එක අඩුවුනා. ආයේ අපි මැරෙන එකක් නෑ කියලා හිතුවා. දවස් දෙකක් ඉඳලා ඕමන්තෛයි ගිහිල්ලා රෑට රෑට එක්කන් ගිහින් ආනන්ද කුමාරස්වාමි මඩමේ නැවැත්තුවා. අවුරුද්දක් විතර එහෙ හිටියා. එහෙට මෙහෙට කඳවුරු මාරු කරන්නේ නැතුව බඩු බැඳගෙන යන්න කියන්නේ නැතුව අපිව කෙළින්ම ගිහිල්ලා දාපු එකට ඒ නිලධාරීන්ට ස්තුති කරන්න ඕන. සමහර කට්ටියව කලිමුට්ටෛයි වලට එක්කන් ගිහිල්ලා එහෙ මෙහෙ එක්ක ගිහිල්ලා බඩු පටවලා එහෙට මෙහෙට දුක් වින්දා. අපිට ඒ කරදරේ නැහැ.
ඒත් අපි කඳවුරට ගිහිල්ලා කෑමට හරියට කරදර වුනා. දවස් දෙකක් මායි මගේ ළමයිනුයි හරියට දුක් වින්ඳා. කෑම නැහැ. ලොරියේ කෑම එනවා. ඒකට දන්න අය පහළොස් දෙනෙක් විතර නඟිනවා. දන්න අය නැගලා ඒ ගොල්ලෝ දන්න අයට කෑම අරන් දෙනවා. බැරි අයට කෑම ගන්න විදියක් නැහැ. දවස් දෙකක් කඳවුරේ බඩගින්නේ හිටියා. ඊට පස්සේ අවුරුද්දක්ම බඩගින්නේ හිටියේ නැහැ. ඒත් සතුටක් නැහැ. යුද්ධෙ වෙලාවේ සමහර වෙලාවට බඩගින්නේ හිටියත් සමහර වෙලාවට හොඳට කෑවා. සමහර වෙලාවට එළවළු නැතත් සම්බෝලයක් හරි හදාගෙන කෑවා. ෂෙල් වැටෙන තැන්වලදී පවා අපි කෑවා. කඳවුරට ගිහිල්ලා දවස් දෙකක් ෂෙල් වැටෙන්නෙත් නැති තැනක මේ වගේ බඩගින්නේ හිටියානේ කියලා හරියට දුක්වුනා.
ඊට පස්සේ මෙහෙට ආවා. අයි ඕ එම් එකෙන් පොඩි ටකරන් ගෙයක් දුන්නා. ගෙයක් නැහැ. එක මාමා කෙනෙක් තමයි මට උදව් කළේ. ළමයි හතර දෙනෙකුට එක ගෑණු ළමයයි. එයාට සරම්ප හැදිලා තිබුනා. එයාට තමයි ඒ මාමා කතා කරලා බඩු තියෙන වහල තිබ්බ ගේ දීලා මෙහෙ ඉන්න පුතේ කියලා ඔයාට ඕන මොනවද මම ගෙනෙල්ලා දෙන්නම් කියලා හාල් එහෙම ඔක්කොම ගෙනත් දීලා ඊළඟ දවසෙම අපි හට්ටි වළං අරගෙන උයන්න පටන් ගත්තා.
ගෙවල් වැඩසටහනක් එනවා කියලා ජීව‍නෝදය එකෙන් මේ ගේ දුන්නා. සම්පූර්ණයෙන්ම හදලා ඉවර නැහැ. මම වැඩට යනවා. වඩුවැඩ වලට යන‍කොට වැටිලා මගේ අත් දෙකම කැඩිලා හරවන්න බැහැ. ඉගෙන ගනිමින් හිටපු ළමයි මගේ තත්ත්වය දැකලා ඒගොල්ලොම ඉගෙනීම අත්හැරියා. ඉගෙන ගන්න බැරිවුනත් කොහොම හරි ඉගෙනගන්න කියලා මම කිව්වා. ඒත් එයාලා ඉගෙන ගත්තේ නැහැ. මේක තමයි මගේ තත්ත්වය. වැඩිපුරම මේ මානාකුළම්වල ඉන්ස්පෙක්ටර් අයියගෙ ගෙදර තමයි මේ තත්තවෙට ළමයි කසාද බැඳලා ළමයි පස් දෙනෙක් හදාගන්න ඒගොල්ලෝ තමයි හේතුවුනේ. ඒගොල්ලෝ අමතක කරන්න බැහැ. ඒගොල්ලෝ දීපු බත්. මම හරක් බලාගත්තා. මට ඒ ගොල්ලන්ගේ ළමයෙකුට වාගේ සැළකුවා. වැඩ කළා. වැඩ කරලා කෑම අරන් ගිහිල්ලා ළමයින්ට දෙන්න පුලුවන් වුනා.
ලොකු පුතා වීර වරයෙකුගේ මණයක් කියලා ගෙනෙල්ලා පෙන්නුවා. අවුරුදු 17 ක් වෙනකම් මගේ ළමයා මම හැදුවා. මගේ ළමයා මැරෙණවා නම් කල්ලමඩු ඉස්පිරිතාලේ දී මැරෙන්න තිබුණා. එච්චර දුක් විඳලා හැදුවා. ඒ තරම් අසනීප වෙලා හිටියා. එළුවෝ විකුණ්නා. හරක් විකුණ්නා. වී, හාල් විකුණ්නා. අන්තිමේ දී ඉන්න තැනත් අතෑරලා වෙන තැනකට ගිහිල්ලා හිටියා එයා වෙනුවෙන්. එයාව ඉගිළිලා ගියා වගේ අරන් ගියා. ඒක තමයි තියෙන දුක. ගෙනිච්චට පස්සේ ටික වෙලාවක්වත් අපෙත් එක්ක ඉන්න ඉඩ දුන්නේ නැහැ. එ‍යාගෙන් කරදරයි තමයි. ඒත් එයාව අමතක කරන්න බැහැ. මගේ ළමයා තාම මැරුණේ නෑ කියලා තමයි තාම හිතන්නේ. මට දවස් අටකට පස්සේ මිනියක් ගෙනෙල්ලා පෙන්නුවා. ඇරලා බලන්න එපා කිව්වා. මම ඇරලා බැලුවා. ඒත් එයා නෙවෙයි. මට ඒ ගැන විශ්වාසයක් නැහැ. මේ වෙනකම් මම විශ්වාස කරන්නේ නැහැ. මගේ ළමයා ඉන්නවා කියලා තමයි මම විශ්වාස කරගෙන ඉන්නේ. තාම ජීවතුන් අතර ඉන්නවා කියලා විශ්වාස කරනවා. මම මැරෙන්න ඉස්සෙල්ලා අතපය නැතිව වුනත් කමක් නැහැ ආවොත් මම එයාව බලාගන්නවා.
මම දැනුත් අතුරුදන් අය හොයන එකට දාලා තියෙන්නේ. මාස එකහමාරකට කළින් විදේශ කටයුතු ඇමති හම්බ වුනා. ඒ ගොල්ලෝ මොනවද කියන්නේ කිව්වොත් තාවකාලිකව කොමිෂන් සභාවක් පත් කරනවා. ඒකෙන් ඔයගොල්ලන්ගේ ළමයි හොයලා දෙන්නම්. නැත්නම් මොකක් හරි උත්තරයක් දෙන්නම්. නැත්නම් අතුරුදන් වූ අයගැන සහතිකයක් දෙන්නම්. අපි ‍ඔයගොල්ලන්ට මොකක් හරි උදව්වක් කරන්නම් කිව්වා. නමුත් අද වෙනකම් සංවිධානයේ ඉඳලා ආපු අයට ගොඩක් උදව් කළා. ඒත් අද වෙනකම් අතුරුදහන් වෙච්ච අයට මේ වයසේ ළමයි නැතිව ‍අපි කොච්චර දුක් විඳිනවද එහෙම කියලා අපිව ග්‍රාම සේවක බලන්නෙත් නෑ. ඒ ජී ඒ බලන්නෙත් නෑ. ඒගොල්ලෝ කොහොම හරි කනවානේ කියන‍එක විතරයි ඒ ගොල්ලන්ගේ අදහස. ඒත් රැඳවුම් කඳවුරේ ඉඳන් ආව අයට ගොඩක් උදව් කරලා තියෙනවා. ඒ කියන්නේ ඒ අය පණ පිටින් ඉන්නවා. ඒ නිසා ගොඩක් උදව් කරනවා.
අපි මෙහෙ ළමයත් නැති වෙලා මොනවා කරන්නද? කෝවිල් වලට එහෙ මෙහෙ ගිහිල්ලා අද රැස්වීමට ‍එන්න, හෙට රැස්වීමට එන්න කියලා ඒ ගොල්ලෝ කියන දේවල් අහලා ආයෙත් අඬ අඬා ඉන්නවා. මම යූ එන් එච් ආර් රැස්වීමට ගියා. ඒගොල්ලෝ කිව්වා අපි ඔයගොල්ලන්ගේ ළමයා හොයලා දෙන්නේ නෑ කියලා. ඒ ගොල්ලෝ කෙළින්ම කිව්වා. ඔයගොල්ලන්ට පුලුවන් නම් ඔයගොල්ලන්ගේ ළමයින් හොයා ගන්න. ඒක තමයි ඒ ගොල්ලෝ කියපු වචනේ. කිසිම ආයතනයකට ගිහිල්ලා මට මගේ ළමයා නැහැ, මට විසිපන්දාහක් දෙන්න පනස්දාහක් දෙන්න කියලා ඉල්ලුවේ නැහැ. ළමයා නැතිව විසිපන් දාහක් අරන් මොනවා කරන්නද?
මගේ ළමයින්ගේ ඉගෙනීම නැතිවුනා. අත කැඩිලා අවුරුදු දෙකක් වැඩකරන්න බැරුව හිටියා. ඒ දෙන්නම මං වෙනුවෙන් වැඩ කරනවා. එක්කෙනෙක් මේසන් වැඩවලට යනවා. එක්කෙනෙක් කොළඹ වැඩ කරනවා. ඒ ගොල්ලන්ට හොඳ තැනකින් වැඩ හම්බ වෙනවා නම් ඒක මට ඇති. ඒ ගොල්ලන්ගේ ඉගෙනීම මදි. දෙන්නෙක් ඉගෙන ගන්නවා. දැන් අපේ ජීවිතේ ටිකක් හොඳයි.



CMP/MN/MU/SIL/04
எங்கட ஊர் நாவலப்பிட்டி எஸ்டேட். நாவலப்பிட்டியில எங்கட அம்மா இருந்த இடம் பழமாசி அங்கயிருந்துதான் நாங்க இடம் பெயர்ந்து வந்தோம். சின்ன வயசிலதான் இங்க வந்தோம். வந்த நேரம் சரியான பஞ்சம் இங்க. மழை இல்ல. அப்ப சிறிமா ஆட்சி. வந்தா எங்களுக்கு சரியான கஸ்டம்தான். சாப்பாட்டுக்கெல்லாம் சரியான கஸ்டப்பட்டுதான் இங்க வந்தோம். நானெல்லாம் இந்த ஆட்காட்டி சந்தியில பாணுக்கு கியூவில நின்றிருக்கிறன். எங்கள்ல 7 பேர் சகோதரங்கள். 2 பேர் இறந்திட்டாங்க. சரியான கஸ்டத்திலதான் இங்கயும் வாழ்ந்தோம். அதற்கு பிறகு நான் கல்யாணம் கட்டினன். எனக்கு 5 பிள்ளைகள்.
இங்கயிருந்து பருப்புகடந்தானுக்கு போனோம். பிறகு இங்க வந்தோம் பிறகு இங்கயிருந்து இந்;தியா போனோம். 90 இல போய் 5 வருடம் இந்தியாவில இருந்தோம். 95இல திரும்பி வந்தோம். அதற்குப் பிறகு இங்கயிருந்து செல்லடி விழ மடுவிற்கு போனோம். அதில என்ட தங்கச்சிய இயக்கம் கொண்டு போயிட்டுது. படிச்சிக் கொண்டிருந்தவ அவவா போயிட்டா. பிறகு இராணுவத்திட கட்டுப்பாட்டுக்குள்ள போயிட்டோம். 2 வருடம் அங்க இருந்தோம். அதற்குப் பிறகு 2000 ஆண்டில வந்து இங்க இருந்தோம். பிள்ளைகள் படிச்சுக் கொண்டிருந்தாங்க. திரும்ப மடுவிற்கு போயிட்டு கொஞ்ச நாள் இருந்திட்டு திரும்ப அங்கயிருந்து இடம் பெயர்ந்து இங்க வந்திட்டு என்ட மகன பிடிச்ச பிறகு 2007 5ம் மாதம் இங்கயிருந்து வெளிக்கிட்டு போய் ஆத்தி மோட்டையில இருந்து பிறகு நாவோடை வந்து முறிப்பில இருந்திட்டு இரணமடுவிற்கு போய் விஸ்வமடு போகேக்கதான் எங்களுக்கு எல்லா நெருக்கடியும் வந்தது. எங்கள்ட காசும் இல்ல ஒன்டும் இல்ல கால் நடையாகவும் மிசின்களிலும் போய் கடைசியில சுதந்திரபுரத்தில ஒரு மாசம் இருக்கேக்க என்ட மகன் காயப்பட்டு வந்திருக்கேக்க பார்த்தன். 2 நாள் இருந்திட்டு அவர் திரும்ப போயிட்டார். பிறகு அதிலயிருந்து வெளிக்கிட்டு ஆச்சி தோட்டத்திற்கு போனோம். அங்க 5 நாள்தான் இதுவரைக்கும் நாங்க கால்நடைதான். எங்கட உடுத்தின உடுப்பு சட்டி பானை ஒரு சைக்கிள் இருந்தது சைக்கிளில வச்சி உருட்டிக் கொண்டு போனோம். அங்கால வாகனம் ஒன்டும் இல்ல ஏத்திறதுக்கும் சாமான் இல்ல. சுதந்திரபுரத்தோட எல்லா சாமானும் போயிட்டு எல்லா சாமானையும் விட்டுட்டோம் வீடு தற்காலிக கொட்டில் மற்ற எல்லா சாமான்களையும் சுதந்திரபுரத்தில விட்டுட்டுதான் தரப்பாள எடுத்துக் கொண்டுதான் போனோம். ஆச்சி தோட்டத்திற்கு போய் தேவிபுரம் போய் ஒரு நாள் இரவு ஆற்றங்;கரையில தங்கிட்டு திரும்ப வளைஞர் மட கோயிலில இருந்தோம்.
அங்க இருக்கேக்க செல் விழுந்து என்னோட இருந்த 5, 6 பேர் காயப்பட்டு செத்ததும் எனக்கு பக்கத்தில இருந்தவங்க செத்ததும் நானும் காயப்பட்டதும் பிறகு முள்ளிவாய்க்கால் போனோம். அங்க வச்சிருந்து ஒரு சில பேரைத்தான் தெரிவு செய்து அனுப்பினாங்க. இதுக்கிடையில நான் போராளி குடும்பம். அவங்கட பாஷயில நான் போராளி குடும்பம் என்ன ஒரு மனுசனாகவே அவங்க மதிக்கேல. பிறகு முள்ளிவாய்க்கால் கடற்கரைக்குப் போனோம். அங்க 5,6 நாள்தான் இருந்தோம். அதுக்குள்ள நெருக்கடியான செல்லடி நெருக்கடியான சாவுகள் லைன்ல கஞ்சிக்கு நின்டதும் பனிஸ்கள் பாணுக்கெல்லாம் லைன்ல நிண்டதும் ஒரு நேரம் சாப்பிட்டும் சாப்பிடாமலும் பட்டினி கிடந்ததும்தான் எங்கட வாழ்க்கை 6 நாளைக்குப் பிறகுதான் எங்களுக்கு இராணுவம் வந்ததும் நாங்க எல்லாம் அல்லோலப்பட்டு விடிய 4 மணிக்கு வெளிக்கிட்ட நாங்க அதுவரைக்கும் சுத்தினதுதான்.
பங்கர் வழியே இருந்திருந்து 8 மணி இருக்கும் வட்டுவாளை பாலத்தடிக்குப் போய்ச் சேர. பாலத்தடிக்குப் போய்த்தான் நாங்க ஆறுதலா இருக்கக் கூடியதாக இருந்தது. செல்லடி கொஞ்சம் குறைவு இனிச் சாக மாட்டோம் என்றிருந்தது. 2 நாள் இருந்து ஓமந்தைக்கு போய் இரவிரவா கொண்டு போய் ஆனந்த குமாரசுவாமி மடத்தில இருத்தினாங்க. ஒரு வருசத்திற்கிட்ட அங்க இருந்திருப்போம். அங்க இங்க முகாம் மாத்தாம சாமான் கட்ட விடாம எங்கள நேரடியா கொண்டு விட்டதுக்கு அந்த அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். சில பேர களிமூட்டைக்கு ஏத்தி அங்க இங்க ஏத்தி பிடிச்சி சாமான்கள இறக்கியெல்லாம் செய்தாங்க. எங்களுக்கு அந்த துன்பம் இல்ல.
ஆனா நாங்க முகாமிற்கு போய் சாப்பாட்டுக்கு சரியா கஸ்டப்பட்டோம். 2 நாள் நானும் என்ட பிள்ளைகளும் சரியா கஸ்டப்பட்டோம். சாப்பாடு இல்ல லொறியில சாப்பாடு வரும் அதில 15 தெரிஞ்ச ஆட்கள் ஏறிருவாங்க தெரிஞ்ச ஆட்கள் ஏறினா தங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு கொடுக்கிறது சாப்பாடு ஏலாத ஆட்களுக்கு சாப்பாட்டுக்கு வழியில்ல இரண்டு நாள் முகாமில பட்டினி இருந்திருக்கிறோம். அதற்குப் பிறகு ஒரு வருசத்திற்கு பட்டினி இருக்கேல. ஆனா சந்தோசம் இல்ல. யுத்;தத்தில ஒரு நேரம் பட்டினி இருந்தாலும் ஒரு நேரம் நல்லா சாப்பிட்டோம். ஒரு நேரம் கறி இல்லாட்டியும் ஒரு சம்பல சரி போட்டு சாப்பிட்டோம். செல்லடி இருந்த இடத்தில கூட நாங்க சாப்பிட்டோம். முகாமில போய் இரண்டு நாள் செல்லில்லாத இடத்தில இப்படி பட்டினி கிடக்கிறோமே என்டு நிறைய கவலைப்பட்டோம்.
அதற்குப் பிறகு இங்க வந்தோம் ஐ ஓ எம் (IOM) ஒரு சின்ன தகர வீடு ஒன்டு தந்தாங்க. வீடு இல்ல ஒரு ஐயாதான் எனக்கு உதவி செய்தார். 4 பிள்ளைகளுக்கு ஒரு பொம்பிள பிள்ள அவவிற்கு அம்மை போட்டிருந்தது. அவர்தான் கூப்பிட்டு அவர் சாமான்கள் போட்டு பூட்டி வச்சிருந்த வீட்டக் கொடுத்து இதில இரு தம்பி உனக்கு என்ன வேண்டும் என்டு சொல்லு நான் வாங்கித் தாரன் என்டு சொல்லி அரிசி எல்லாம் வேண்டிக் கொண்டு வந்து தந்து அடுத்த நாளே நாங்க சட்டி எல்லாம் வாங்கி சமைக்கத் தொடங்கிட்டோம்.
வீட்டுத் திட்டம் வருது என்டு சொல்லி வாழ்வோதயத்தால இந்த வீட்ட தந்தாங்க. இத இன்னும் நாங்க சரிவர செய்து கொள்ளேல. நான் வேலைக்கு போறன் தச்சு வேலைக்கு போனாப்போல விழுந்து எனக்கு இரண்டு கையும் முறிஞ்சுது. எலும்பு உடைந்து கை திருப்பேலாது. படிச்சுக் கொண்டிருந்த பிள்ளைகள் என்ட நிலைமையை பார்த்து தாங்களாகவே படிப்பை விட்டுட்டாங்க. படிப்பு அவங்களுக்கு ஓடாடிட்டியும் நான் படிக்க சொன்னனான் ஆனா அவங்க படிக்கேல. இதுதான் என்ட நிலைமை மொத்தத்தில இந்த மானாங்குளத்தில இன்ஸ்பெக்டர் ஐயா வீட்டிலதான் நான் இந்த அளவிற்கு கலியாணம் முடிச்சு 5 பிள்ளைகளை பெத்ததுக்கு அவங்கதான் காரணம். அவங்கள மறக்க முடியாது. அவங்க போட்ட சோறு நான் மாடுதான் மேச்சன். இன்னும் நல்லா ஒரு புள்ள மாதிரி என்ன பார்த்தாங்க. வேலை செய்தோம். வேலை செய்தாலும் சாப்பாடு கொண்டு போய் புள்ளைகளுக்கு கொடு என்ட தன்மை இருக்கும்.
மூத்தவரை வீரச் சாவு என்டு சொல்லி கொண்டு வந்து காட்டினாங்க. 17 வயசுவரை என்ர பிள்ளையை நான் வளர்த்தன். என்ட பிள்ளை சாகிறதா இருந்தா பள்ளமடு ஆஸ்பத்திரியில செத்திருக்கோணும். அவ்வளவு கஸ்டப்பட்டு வளர்த்தன் அவ்வளவு வருத்தத்தில இருந்தான் எல்லாத்தையும் வித்தன் ஆட்ட வித்தன் மாட்டை வித்தன் விதை நெல்லை கூடி வித்தன் கடைசியில இருக்கிற இடத்தை கூடி விட்டுட்டு வேற இடத்திற்கு போய்த்தான் இருந்தன் அவனுக்காக அவன பருந்து மாதிரி கொண்டு போயிட்டாங்க அதுதான் ஒரு கவலை. கொண்டு போயும் ஒரு கொஞ்ச காலம் கூடி எங்களோட இருக்க விடல. அவனால கஸ்டம் கூடத்தான் ஆனா அவன மறக்க முடியாது என்ட பிள்ள இன்னும் சாகேல என்டுதான் நினைக்கிறன். எனக்கு ஒரு பொடிய 8 நாளுக்குப் பிறகு கொண்டு வந்தாங்க. திறந்து பார்க்க வேண்டாம் என்டாங்க. நான் திறந்துதான் பார்த்தன். ஆனா அவனில்ல ஆனா அதில எனக்கு நம்பிக்கை இல்ல. இதுவரைக்கும் நான் நம்பாமதான் இருக்கிறன். என்ட பிள்ளை இருக்கு என்டுதான் இருக்கிறன். இப்பவும் உயிரோட இருக்கிறான் என்ட நம்பிக்கைதான் இருக்கு நான் சாகிறதுக்குள்ள கால் இல்ல கை இல்ல என்டு வந்தாலும் பரவாயில்ல நான் வச்சு பார்க்கிற நிலைமையில இருக்கிறன்.
நான் இப்பவும் தேடுதலுக்குதான் போட்டிட்டு இருக்கிறன். ஒன்றரை மாதத்திற்கு முன்ன வெளிவிவகார அமைச்சரை சந்திச்சன். அவங்க என்ன சொல்றாங்க என்டா தற்காலிகமா ஒரு ஆணைக்குழு ஒன்று அமைக்கிறோம். அதில உங்கட பிள்ளைகளை தேடித் தருவோம் அல்லது ஏதாவது பதில் சொல்லுவோம். இல்லாட்டி காணாமல் போனவங்களுக்கான சான்றிதழ் ஒன்று தருவோம் உங்களுக்கு எங்களால ஒரு உதவித் திட்டம் ஏதாவது செய்வோம் என்டாங்க. ஆனா இதுவரைக்கும் போராளியா இருந்து வந்தவங்களுக்கு எத்தனையோ உதவி செய்திட்டாங்க. ஆனா இதுவரைக்கும் காணாமல் போனவங்களுக்கு இந்த வயசில பிள்ளைகள் இல்ல நாங்க இப்படி கஸ்டப்படுறோம் அப்படி என்டு எங்கள GS மாரும் பார்க்கிறதில்ல AGA உம் பார்க்கிறதில்ல. அவங்க ஏதோ சாப்பிடுறாங்க என்டதுதான் அவங்கட நினைப்பு. ஆனா தடுப்புக்கு போயிட்டு வந்த ஆட்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறாங்க. ஏனென்டா அவர் உயிரோட இருக்கிறார். ஆதனால நிறைய உதவி செய்யிறாங்க.
நாங்க இங்க பிள்ளைய இழந்திட்டு என்ன செய்யிறோம் கோயிலுக்கு அங்க இங்க போய் இன்டைக்கு கூட்டத்திற்கு வாங்க நாளைக்கு கூட்டத்திற்கு வாங்க என்டு அவங்க சொல்றத கேட்டுட்டு திரும்பவும் அழுதுட்டுதான் இருக்கிறோம். என்ன அந்த யுஎன்எச்ஆர் (UNHR) கூட்டத்திற்கு போனோம். என்ன சொன்னாங்க நாங்க உங்கட பிள்ளையை தேடித் தரமாட்டோம் அவங்க ஒத்த வரியில சொன்னாங்க உங்களால முடிஞ்சா உங்கட பிள்ளையை தேடிக் கொள்ளுங்க. அதுதான் அவங்க சொன்ன வசனம். எந்த நிறுவனத்திலேயும் போயிட்டு என்ட பிள்ள இல்ல எனக்கு 25 ஆயிரம் கொடுங்க 50 ஆயிரம் கொடுங்க என்டு கேட்டதில்ல. பிள்ளையே இல்லாம போயிட்டு இந்த 25 ஆயிரம் வந்து என்ன செய்ய
என்ட நிலைமையாலதான் என்ர பிள்ளைகள்ட படிப்பு இல்லாம போயிட்டு கை முறிஞ்சு 2 வருசம் வேலை இல்லாம போயிட்டு அவங்க இரண்டு பேரும் எனக்காக வேலை செய்யிறாங்க. ஒருத்தர் மேசன் வேலைக்கு போறார். மற்றவர் கொழும்பில வேலை செய்யிறார். அவங்களுக்கு ஏதாவது நல்ல இடத்தில வேலை கிடைக்கும் என்றா அதுவே எனக்குப் போதும் அவங்கட படிப்பு போதாது. இரண்டு பேர் படிக்கிறாங்க. இப்ப எங்கட வாழ்க்கை என்றால் இப்ப கொஞ்சம் பரவாயில்ல.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License