I lost my life

Experiential sharing on war life


මගේ ජීවිතය නැතිවුනා

යුධ ජීවිතයේ අත්දැකීම් හුවමාරු කර ගැනීම


நான் என் வாழ்க்கையை இழந்தேன்

போர் வாழ்க்கை தொடர்பான பகிர்வு



CMP/MN/MW/PUK/05

My name is Arul Gnanadas Mary Yoojina. We are 7 siblings in our family. I am the 3rd child. I had 2 elder brothers, 3 younger sisters and 1 younger brother. Of this 4 have died 3 of us are living. 2 younger sisters and I. all the others have died in war.
In 1996 I was at my aunty’s house in Kilinochi, studying. As I was thus studying, I lost my hand on 2nd August, 1996. Even after that I continued my studies there. I had no work. I studied only up to Grade 8. We were in great difficulties. We could survive only if father goes to work. Such was the state of affairs. As I was the third child and eldest among girls, I brought up my siblings. I look after them when my father and mother go for work. That’s why I gave up my studies after Grade 8.
I lost my hand when I was 16. Handless, I lived with my parents. I lost my hand on the 2nd of August, 2006. Army had captured Kilinochi. When the army captured Elephant Pass, I was at my aunty’s house in Kilinochi, studying. Shell blasts were severe. At such times we all run to the bunker. But the shell fell at the entrance. My aunty’s daughter who was beside me passed away. My hand got squashed. I was 16 then. I was terrified to see the blood. I was badly injured. Without anybody’s permission my hand was amputated. Had they not done so, my hand would have healed in the course of time. After all I am young. Only on the 3rd day I opened my eyes to see I had lost my hand. I shouted out I wanted my hand. From where would they give me my hand? It had been amputated.
In 2001 we were displaced. We went to Madu. At first we were at Nedunkeni in the Mullaitheevu district. When the army began to capture Kilinochi, we were displaced to Madu. I got married on December 2001. It was a love marriage. My parents were dead against it. In spite of that he accepted me and we got married.
My eldest son was born in 2003. His tonsil was torn and we suffered greatly. My second son was born in 2006. When he was eight months old, we were again displaced. We returned to Madu. There we lived at Thatchinamadu. When troubles started again we came to our place.
Then troubles became intense. Then we were displaced to Periayamadu, Paaliyaru, Hahapaduvan, Vanneri, Vaddukachi, Visuvamadu – staying only five to ten days in each place. All this happened within an year.
The pain I saw in this situation was more than the pain I had when I got injured. It can’t be expressed in words. They carried the dead like carrying the killed dogs in garbage vehicles and buried them. Finally we went to Matalan. We were there for 6 months. No firewood. We got only water. One kilo rice cost Rs 250. Can’t let my husband go out. He would be caught. My younger sister and youngest brother were caught then. The houses were side by side. One day we were sleeping. The time was around 1am. We feared shell fire. So we kept sand bags around us when we slept. At dead of night it seemed as if we were floating in water. We got up to see rain water had seeped in as the sea was nearby. We broke loose the sand bags, split the sand and slept again.
My father, mother, younger sister were all with me. If rice is given in our line, it is I who go to get it. None could go out. If they venture out, they would be caught. Because I don’t have a hand they wouldn’t catch me. Finally I bought rice for Rs 250 per measure. We would make curry without coconut, chilies, only cumin seed powder is used. My eldest son cries and refuses to eat. Only dhal curry. My husband said, “Can’t live here anymore ,must go to army area”. Then that night around 2 am war broke out. Shells came incessantly as in the world war we saw in aliens. We never believed we would live.
Later we heard those who wanted could go through Matalan Hospital. My youngest sister was with my mother. Mother said, “Take your children and go cautiously. I fear to bring young girls amidst the army - they would be caught”. I came with this fear. As we went through the vicinity of Matalan Hospital, there was heavy rain. My husband got hold of our bag of cloths and my second son. I didn’t take even the deeds of our land or pictures. I came holding my eldest son by hand. There was an umbrella in my son’s hand. Apart from that we didn’t bring anything.
As we were coming in the vicinity of Matalan, I slipped and fell down. My husband thought I had been struck by a shell. My son shouted. “Oh, father, our mother has fallen”. I said, “Nothing is the matter with me, I slipped and had fallen. I will get up.” Soon as I got up I saw an army point. Facing the military is a new experience to us and we were scared, but they were no problem. They held our hand and helped us to cross the bund. As we came to this side via Matalan, we saw that we had to cross the sea. The water was above my head.
We held everyone by hand and swam across and reached the shore. We came to the army area around 7am. We had only water. As there were many people, there was no food. It was 7pm. The army hadn’t taken us in. our elder son was in my hand our younger son was in my husband’s hands. They took the males and females separately. They gave priority for those who were with children. But that priority was not given to the women side. So I asked my husband to take the two children and go in and said I will come after getting checked.
I was not let in even at 7pm. They had checked in my husband and kept him at Vandikulam School. When I crossed over at 12 midnight, I couldn’t see my husband or children. I had had only water in the morning. Nothing else. I walked the streets crying and shouting. I had never been separated from my husband and children. Someone said he had been taken to Kilinochi. I was scared to be all alone. It was 12 midnight. Crowds were sleeping all around. I was shouting out my elder son’s name – ‘Kajan’. But there was no response. There was light on the road side. If I stood there i could see them if they come. So thinking, I stood there.
The army brought the bus and asked us to board it. We were to be taken to Kilinochi. I shouted and cried. “We will unite you with your family”, they said. When we reached Vallipuram School we were told there was no room for us. “Take them to Omanthai immediately” they said. We reached Omanthai around 6am. I looked for my family but they weren’t there. I inquired with the CID, “They are in Vallipuram School. They will be brought here” I was told. Thus, only after 3 days I met my husband and children.
For 3 days I didn’t eat or drink. I had no slippers to wear. We were made to board buses and again taken to the camp. I couldn’t cry any longer. The army gave food but I could neither take it nor eat. I was worried about my family. On the 3rd day my sister-in-law made me eat a handful of rice and curry saying, “if you starve any longer you will faint before they come.” Standing there, in the hot sun without slippers looking at the buses for my family, I got blisters on my feet. On the 3rd day someone told me my husband and children had come. I ran to them. “Why did you leave us and go?” asked my second son. I told I was forced to go. I didn’t go willingly.
That night we were given bread. My husband went and got it for us. Only on that day all three of us ate. On the next day we were taken to Arunachalam camp. Our sufferings in the camp can’t be told in words. They would give us ‘Runposa’ floor to eat, no drinking water. We didn’t have cloths to change. We had only the clothes we were wearing. One son was wearing a trouser and a shirt. The other one wore only a trouser. No other cloths.
One son had diarrhea. We washed his trouser and put it out to dry. But it was stolen. Can’t blame anyone. We underwent untold sufferings in camp. My second son had diarrhea. No hospital to go for treatment. We got to hear my married sister had been injured. Our brother had died. Four had died in our family.
We were in the camp for 6 months. After that we came to our place. We came on December, 2009. Our house had been destroyed by shell blasts. We stayed in mother’s house and put up a temporary shed to live in. Later we were given this house. We have no land of our own. My mother had given me only this piece of land where I live. My husband is a laborer. Only now he goes to the sea in Thiruketheeswaram. All my 3 children are studying. I am the head of many organisations like Samurhty. Thus I spend my time outdoors. In spite of economic difficulties, I am very happy with my husband and children.
These are my expectations; my husband married me a handless person. He is facing many difficulties. I keep telling my children, “your father is going through so many difficulties, you should study well. Get good jobs and look after your father and mother”. My husband should enjoy a retired life in his 50th year. My children should not suffer like us.




CMP/MN/MW/PUK/05
எனது பெயர் அருள்ஞானதாஸ் மேரியூஜினா. எங்கட வீட்ட 07 பேர் சகோதரங்கள் அதிலே நான் 3 வது பிள்ளை. எனக்கு 2 அண்ணா, 3 தங்கை, 1 தம்பி. இதிலெ 4 பேர் இறந்திட்டார்கள். 3பேர்தான் இருக்கிறோம். நானும் 2 தங்கச்சியும்தான் இருக்கிறோம். மற்றவங்க எல்லாம் யுத்தத்தில இறந்திட்டாங்க.
நான் 1996ம் ஆண்டு கிளிநொச்சியில பெரியம்மா வீட்டை இருந்து படிச்சனான். படித்த இடத்தில் 1996ம் ஆண்டு 8ம் மாதம் 2ம் திகதி எனக்கு கை இல்லாமல் போனது. கை இல்லாது போயும் அப்பிடியே இருந்து படித்தேன். வேலை என்று ஒன்றுமில்லை. 8ம் ஆண்டு வரைதான் படிச்சனான். எங்கட வீட்ட சரியான கஸ்ரம் அப்பா வேலைக்குப் போனாத்தான் எங்கட குடும்பமே ஓட்ட முடியும் என்ற நிலைமைதான் இருந்தது. நான் வீட்ட 3 வது பிள்ளையும் மூத்த பெண் பிள்ளையுமாக இருந்ததனால் நான் தான் எனது சகோதரங்களை பார்த்து வளர்த்தேன். அப்பா அம்மா வேலைக்குப் போய்விட்டால் நான் தான் சகோதரங்களை பார்த்து வளர்த்தேன். அதோட நான் 8ம் ஆண்டிலேயே பாடசாலைப் படிப்பை நிறுத்தி விட்டேன்.
எனது 16 வயதில் எனக்கு கை இல்லாமல் போய் விட்டது. அப்பிடியே கை இல்லாமலேயே அப்பா அம்மாவுடன் இருந்தனான். என்ட கை போனது 2006ம் ஆண்டு 8ம் மாதம் 2ம் திகதி. கிளிநொச்சிய ஆமி பிடிச்சது. ஆனையிறவில ஆமி பிடிச்ச நேரம் நான் கிளிநொச்சியில பெரியம்மா வீட்டில இருந்து படிச்சனான். அந்த நேரம் சரியான செல் அடி. செல் அடிக்கிற நேரம் நாங்க பங்கருக்குள்ளதானே நாங்க எல்லாம் ஓடிப்போய் ஒரு போக் ஒன்று இருந்தது அந்த போக்குக்குள்ள பூந்திட்டம். அந்த நேரம் வாசல்லேயே வந்து செல் விழுந்திட்டுது. பக்கத்தில இருந்த பெரியம்மாட பிள்ளை இறந்திட்டா. எனக்கு கை வந்து அப்படியே சிதைந்திட்டுது. அப்ப எனக்கு 16 வயது. இரத்தத்த பார்த்தோன நான் பயந்திட்டன். எனக்கு நிறைய காயம். யாருடைய அநுமதியில்லாம கையை வெட்டி எடுத்திட்டாங்க. ஆனா கையை வச்சி தைச்சிருந்தாங்க என்டா நாளடைவில எனக்கு சரி வந்திருக்கும். சின்ன வயசுதானே. 3 வது நாள்தான் நான் முழிச்சிப் பார்த்தனான். பார்த்தா கையில்ல. அதற்குப் பிறகு நான் கத்தினன் கை வேணும் என்டு. எங்கயிருந்து கை கொடுக்கிறது. கையைத்தான் வெட்டிட்டாங்களே
2001ம் ஆண்டு மடுவுக்கு இடம்பெயர்ந்து சென்றோம். நாங்கள் ஆரம்பத்தில் நெடுங்கேணி முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்தோம். கிளிநொச்சி ஆமி பிடிக்கத் தொடங்கவே அங்கிருந்து இடம் பெயர்ந்து மடுவுக்கு வந்தனாங்க. 2001ம் ஆண்டு 12ம் மாதம்தான் திருமணம் செய்தேன். இவரை விரும்பித்தான் முடிச்சனான். அம்மா அப்பாட எதிர்ப்பு என்றா சொல்லோலாது. அவ்வளவு எதிர்ப்பு. இருந்தும் அவர் என்ன ஏற்றுக் கொண்டு முடிச்ச.
எனக்கு 2003 ம் ஆண்டு மூத்த மகன் பிறந்தான். அவருக்கு உள்நாக்கு கிளிஞ்சு அதால நாங்க பெரிய அவதிப்பட்டோம். 2006ம் ஆண்டு 2 வது மகன் பிறந்தான். 2 வது மகன் பிறந்து 8 மாதம் இருக்கேக்க திரும்பவும் இடம்பெயர்ந்தோம். திருப்பி மடுவுக்குப் போனோம். மடுவிற்குப் போய் தட்சினாமடுவில இருந்தோம். திரும்ப பிரச்சனை சரியா வந்தோன ஊருக்கு வந்தோம்.
பிறகு பிரச்சனை ஆக மோசமா போயிட்டுது. அதோட இடம் பெயர்ந்து பெரிய மடு பாலியாறு, நாகபடுவான், வன்னேரி, வட்டக்கச்சி, விஸ்வமடு இப்படி ஒவ்வொரு இடத்திலும் 5நாள்,10நாள்தான் இருக்கிறது. இதெல்லாம் ஒரு வருசத்துக்குள்ளதான் நடக்குது.
நான் காயப்பட்ட துன்பத்த விட அதில பார்த்த விடயத்த என்னெண்டு சொல்றதென்டு தெரியேல. நாய் அடிச்சு குப்பை வண்டியில ஏத்துவாங்க இல்லையா. அது போலத்தான் செத்தவங்கள ஏத்தி பெக்கோ வெட்டி புதைச்சாங்க. கடைசியாக மாத்தளனுக்குப் போனோம். அங்கு 6 மாதம் இருந்தோம். விறகு இல்லை, தண்ணீர் மட்டும் தான் கிடைக்கும். அரிசி வாங்கவதென்றால் 1KG அரிசியின் விலை 250 ரூபாய் கணவரை வெளியில் விட ஏலாது விட்டால் பிடித்து விடுவார்கள். அந்த நேரம் வந்துதான் எனது தங்கச்சிய கடைசித் தம்பிய பிடித்துக் கொண்டு போனாங்க. பக்கத்து பக்கத்துல வீடு. ஒரு நாள் நாங்க படுத்துக் கிடக்கிறோம். ஒரு மணி இருக்கும் செல் அடிக்கும் என்ற பயத்தில மணலை கிண்டி மண் மூடைகளை சைட்டில வைச்சுக் கொண்டுதான் படுக்கிறது. சாமத்தில பார்த்தா மிதக்கிற மாதிரி இருக்குது. என்ன என்டு எழும்பி பார்த்தா தண்ணீ வந்திட்டுது. மழை பெய்து கடற்கரை பக்கத்திலதானே தண்ணீ கீழால வந்திட்டுது. திருப்பி எழும்பி மண் மூடைகளை எல்லாம் எடுத்துக் கொட்டி போட்டுட்டுதான் திருப்பி படுத்தோம்.
அப்பா அம்மா தங்கச்சி எல்லோரும் என்னோடுதான் இருந்தார்கள். எங்க லைன்ல அரிசி கொடுத்தாலும் நான் தான் போய் வாங்குவேன். வெளியில யாருமே போகேலாது. விட்டா பிடிச்சுருவாங்களே ஏன் என்றால் எனக்கு கை இல்லைத் தானே அதனால் என்னை பிடிக்க மாட்டார்கள். கடைசியாக நான் போய் 250 ரூபாய்க்கு 1முப அரிசி வாங்கிட்டு வந்தோம். தேங்காய் இல்லாத கறி மிளகாய் இருக்காது சீரக தூளை போட்டுதான் கறி வைக்கிறது. மூத்த மகன் சாப்பிட மாட்டன் என்று அழுகிறேர். வெறும் பருப்புக் கறி அதோட என்ட கணவர் சொல்லிட்டேர் இனிமேல் இங்க இருக்கக் கூடாது. ராணுவ கட்டுப்பாட்டுக்குள்ள போயிருவோம் என்றார். பிறகு அண்டைக்கு இரவு 2 மணி இருக்கும் சண்டை என்டு சொன்னா நாங்க ஏலியனில பார்த்த உலக யுத்தம் மாதிரிதான் செல் வந்து விழுந்தது. துளி கூட நாங்க தப்புவோம் என்டு நினைக்கேல.
பிறகு மாத்தளன் வைத்தியசாலை ஊடாக போறவர்கள் போகலாம் என்று சொன்னாங்க. அம்மாவோடதான் கடைசித் தங்கையும் இருந்தாள். அதோட அம்மா சொன்னார் நீங்கள் உங்களுடைய பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு கவனமாகப் போங்கள். இராணுவத்தின் மத்தியிலே குமர்ப்பிள்ளையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் பிடித்து விடுவான் என்ற பயத்தில் தான் வந்தேன். வைத்தியசாலை அடியால் வந்து கொண்டிருக்கேக்க சரியான மழை கணவரிடம் ஒரு உடுப்பு பையையும் 2 வது மகளையும் பிடிச்சுக் கொண்டார். நான் எனது காணி உறுதியோ படங்களோ எதுவுமே எடுக்கவில்லை. மூத்த மகனை கையிலே பிடித்துக் கொண்டு வந்தேன்.மகனின் கையில் ஒரு குடை இருந்தது. வேற எதுவுமே நாங்கள் கொண்டு வரவில்லை.
மாத்தளன் அடியால வந்து கொண்டிருக்கேக்க இடையில் நான் வழுக்கி விழுந்து விட்டேன். கணவர் நினைத்தது என்னவென்றால் எனக்கு வெடி பட்டு விட்டது அதனால் தான் நான் விழுந்து விட்டேன் என்று. மகன் கத்துறான் அப்பா அம்மா விழுந்திட்டா என்று. நான் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை வழுக்கிதான் விழுந்திட்டேன் எழும்புகின்றேன் என்றேன். எழும்பி முடிய வந்த கையோட பார்த்தால் Army இன் point எங்களுக்கு ஆமியின் அனுபவம் இல்லாததனால் பயமாகக் காணப்பட்டது. ஆனால் ஆமி பிரச்சினை இல்லை. வண்டால கையைப் பிடித்து அங்கால ஏற்றி விட்டான். இங்கால கொண்டு வந்தால் மாத்தளன் அடியில் வந்து ஒரு கடல் ஓடையாலே தாண்டிச் செல்ல வேண்டும் எனக்கு தலைக்கு மேலாக தண்ணீர் காணப்பட்டது.
எல்லோரையும் கையில் பிடித்து கடலில் நீந்தியவாறாக கரையை வந்தடைந்தோம். இங்கால 7 மணிக்கு ஆமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தும் பச்சைத்தண்ணீர் மட்டுந்தான் கிடைத்தது. நிறையச் சனம் வந்ததால் ஒரு சாப்பாடு இல்லை. அன்று இரவு 7 மணியாகி விட்டது. ஆமி எங்களை உள்ளே எடுக்கவில்லை. என்னுடைய கையில் மூத்த மகன்; கணவரின் கையில் சின்ன மகன் இருந்தான். ஆண்களை வேறாகவும் பெண்களை வேறாகவும் உள்ளே எடுத்தனர்.சின்னப் பிள்ளைகள் இருக்கின்றவர் முன்னுக்கு வரலாம் என்று கூறினார்கள். அதிலும் பெண்கள் பகுதியில் உள்ள சின்னப் பிள்ளைகளை விடவில்லை. அதோட நான் 2 சின்ன பிள்ளைகளையும் நீங்க கொண்டு உள்ளே போங்க நான் செக் பண்ணிட்டு வாறேன் என்று கூறினேன்.
இரவு 7 மணியாயிட்டு என்னை விடவில்லை இவரை செக் பண்ணி வண்டிகுளம் பாடசாலையில் வைத்திருந்தார்கள். என்னை செக் பண்ணி விடும் போது இரவு 12 மணி இங்கால வந்து பார்த்தால் கணவர் பிள்ளைகள் யாரையுமே காணவில்லை. பகல் குடித்த பச்சைத் தண்ணீர் மட்டுந்தான் நானும் ரோட்டு வெளியில் திரிஞ்சு கத்திறன். அப்பிடி ஒருநாளும் கணவர் பிள்ளைகள் யாரையுமே பிரிந்து இருந்ததில்லை. ஒருவர் கிளிநொச்சிக்கு கொண்டு போய் விட்டார்கள் என்று கூறினார். நான் இப்ப தனித்த விட்டேனே என்ற பயம் எனக்குள் காணப்பட்டது. இரவு 12 மணி சனம் முழுக்க சுற்றிப் படுத்துக் கிடக்கு. நானோ எனது மூத்த மகனின் பெயரைச் சொல்லி கஜன் என்று கத்துகின்றேன். ஆனால் எந்த சத்தமும் இல்லை. பிறகு ரோட்டுக்கரையில் வெளிச்சமாக இருக்கு அங்க வந்து நின்றால் அவர்கள் வந்தால் தெரியும் என்று வந்து நின்றேன்.
பஸ்ஸை ஆமிக்காரன் ரோட்டில் நிறுத்தி விட்டு ஏறுங்கள் உங்களை கிளிநொச்சிக்கு கொண்டு போகோணும் என்கிறான். எனக்கு என்ன செய்வதென்று தெரியாது. நான் கத்திக் குலறினேன் அவர்கள் நாங்கள் உங்களை ஒன்றாகச் சேர்ப்போம் ஏறுங்கள் என்று கூறினார்கள். வல்லிபுரம் பாடசாலையில் கொண்டு வந்தவுடன் அங்கு இடமில்லை என்று கூறி விட்டார்கள் இவர்களை நேரடியாக ஓமந்தைக்கு எற்றுங்கள் என்று கூறி விட்டார்கள் ஓமந்தைக்கு காலை 6 மணியளவில் வந்தோம். இங்க வந்து பார்த்தா அவங்க யாரும் இல்ல. நான் CID இட்ட விசாரிக்க் எல்லாரையும் வல்லிபுரம் பாடசாலையில் வைத்திருக்கின்றார்கள். இனித்தான் கொண்டு வருவார்கள் என்று கூறினார்கள். இவ்வாறு 3 நாட்களின் பின்னரே எனது கணவனையும் பிள்ளைகளையும் கண்டேன்.
3 நாளாக சாப்பாடு தண்ணீர் இல்லை காலில் செருப்பும் இல்லை. ஒவ்வொரு பஸ்ஸால இறக்க இறக்க திரும்ப ஏற்றி முகாமுக்கு கொண்டு சென்றார்கள். என்னால் இனி கத்த ஏலாது ஆமி சாப்பாடு கொடுத்தான் ஆனால் என்னால் அதை வாங்கி சாப்பிட முடியவில்லை. கணவர் பிள்ளைகளுடைய யோசனைதான். இப்பிடியே இருக்கேக்க 3 வது நாள் அண்ணி சோறு வாங்கி குழைத்து ஒரு புடிதான் தந்திட்டு இதக்கு மேலேயும் நீ சாப்பிடாம இருந்தால் அவர்கள் வருவதற்கு முன் நீ மயங்கி விடுவாய் என்று கூறினார். அங்க இருநத வாற பஸ்ஸைப் பார்த்துப் பார்த்தே எனது கால் பொக்களித்து விட்டது. காலில் செருப்பும் இல்லை. வெயிலுக்குள் நின்ற சூடு. 3 வது நாள் கடைசியாக யாரோ வந்து உங்கட கணவரும் பிள்ளைகளும் வந்து நிற்கின்றார்கள் என்று கூறினார்கள். அதோட நான் ஓடிப் போய் பார்த்தேன். எனது 2வது மகன் ஏனம்மா எங்களை விட்டுட்டு வந்திட்டிங்க என்ற கேட்டான். நான் வரல்ல என்னை வில்லங்கத்தில் ஏத்திட்டுப் போயிட்டாங்க என்று கூறினேன்.
அன்றிரவு பாண் கொடுத்தார்கள். இவர் போய் பாண் வாங்கிட்டு வந்தார். அன்றுதான் 3 பேரும் சாப்பிட்டோம். அடுத்த நாள் அருணாச்சலம் முகாமுக்கு ஏத்திட்டாங்க. அதக்குப் பிறகு நாங்கள் முகாமில் வைத்துப் பட்ட கஸ்ரம் என்றால் கொஞ்சமில்லை. அங்க ரன்போசா என்ற மாதான் தருவார்கள் பச்சை தண்ணீர் கூட இல்லை. அதைவிட கஸ்ரம் நாங்கள் உடுப்பு ஒன்றும் கொண்டு வரவில்லை. நான் போட்ட சட்டை மகன் போட்ட சேட்டும் காச்சட்டையும் போட்டாப் போல இன்னொரு மகன் காச்சட்டை போட்டாப் போல வேற உடுப்பே இல்லை.
ஒரு மகனுக்கு வயிற்றாலடி என்று காச்சட்டையைக் கழுவி வெளியில் காயப்போட்டு பிறகு பார்த்தால் காச்சட்டையைக் காணவில்லை. அதை யாரோ எடுத்திட்டாங்க. அதைக் குறை சொல்லுற அளவுக்கு இல்லை. இப்படியே முகாமில் சரியான கஸ்ரப்பட்டோம். தண்ணீர்இல்லை. 2 வது மகனுக்கு வயிற்றாலடி அதுக்கே போய் மருந்தெடுக்க வைத்தியசாலை இல்லை. எங்கட கல்யாணம் முடித்த தங்கச்சி காயப்பட்டு விட்டாள். தம்பி இறந்திட்டார் என்று கேள்விப்பட்டோம். 4 பேர் எங்கட குடும்பத்தில இறந்திட்டாங்க.
முகாமில 6 மாதம் இருந்தோம். அதன் பிறகுதான் நாங்க ஊருக்கு வந்து சேர்ந்தோம். 2009ம் ஆண்டு 12ம் மாதம் வந்தோம். வீடு செல் வீச்சால உடைந்திட்டுது. அம்மாட வீட்டில இருந்திட்டு தற்காலிகக் கொட்டில் அமைத்து இருந்தோம் பிறகு இந்த வீடு தந்தாங்க. எங்களுக்கு சொந்தக் காணி இல்லை. நான் இருக்கின்ற காணி மட்டும் தான் அம்மா எனக்குத் தந்தது. என்ர கணவர் கூலிவேலை செய்கின்றார். இப்பதான் திருக்கேதீஸ்வரம் கடல்தொழிலுக்கு போகிறார்;. 3 பிள்ளைகளும் படிக்கின்றார்கள். நான் மாதர்சங்கம் சமூர்த்தி போன்ற பல அமைப்புக்களில் தலைமை தாங்குவதனால் எனது பொழுது போக்கு வீட்டிலும் விட வெளிச்சூழலிலே செலவழிக்கின்றேன். நான் எவ்வளவுதான் பொருளாதாரச்சிக்கல் இருந்தாலும் கணவர் பிள்ளைகள் என்று மிகவும் சந்தோசமாக இருக்கிறன்.
எனது எதிர்பார்ப்பு என்னவென்றால் இவர் கையில்லாமல்தான் என்னை கல்யாணம் செய்தவர் ஆனா இவர் சரியா கஸ்டப்படுறார். நான் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்கிறது உங்கட அப்பா இவ்வளவு கஸ்டப்படுறார் நீங்க நல்லா படிக்கோணும் நல்ல உத்தியோகம் எடுத்து அப்பா அம்மாவ பார்க்கோணும் என்டு சொல்றது. பிள்ளைகள் 03 பேரும் நன்றாகப் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் கணவரது 50 வது வயதில் வீட்டில் ஓய்வாக இருக்க வேண்டும் என்பதாகும்.நாங்க கஸ்டப்பட்ட மாதிரி பிள்ளைகள் கஸ்டப்படக் கூடாது.











A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License