My dream

Experiential sharing on war life


මගේ සිහිනය

යුධ ජීවිතයේ අත්දැකීම් හුවමාරු කර ගැනීම


எனது கனவு

போர் வாழ்க்கை தொடர்பான பகிர்வு



CMP/MN/MW/SAL/08

I was born in Salamban. I have 11 siblings. I got married at the age of 32. When I was 34 I got a son, and then a daughter when I was 37. I only got two children. Both of us did labor work and educated our children with much difficulty.
In 2006 they took my son away to fight in the war. During the last stages of war he escaped at Tharmapuram and came to us. I was in much agony; I hid him inside the bunker to save him. My husband was 60 and feeble. I was also feeble due to lack of food during the displacement. There was a church at Valiyamadam. My son would spend the night there. One day during the day time they caught and took him with them. I would cry out in grief in that church, 8 days later he came back.
When my daughter was about to sit for her O/L we had to get displaced. We got displaced in 2007 and stayed at Kumunamunai in Mulangkaavil. Later it was Vanneari, Kalmadu, Moongkilaaru and then at last Valiyamadau and Mullivaikkaal.
One day my daughter told me that the father needs tea. When I came out to make tea a bomb splinter got in to my chest. I had to leave my children with my siblings to go get the treatment. Then my daughter cried wanting to join me. But they didn’t allow that. They sent me alone to Trincomalee in a ship. Later they took me to Pathaviya. I didn’t know anyone there. Nobody was alone there except me. They gave me medicine and injections and cured me. From there they took me to Mathavachchi hospital and there I got completely cured.
When I returned, my relatives told me that neither my husband nor my children were alive. I didn’t want to believe that, I trusted that they would be somewhere. But everyone denied it. My siblings were also nowhere to be seen. I was crying hard, then when my relatives saw me getting off a bus and they took me with them.
Later I was told that my son was kept in the detention camp. I registered in the Kachcheri and went to see my son. When I met him he cried saying the father and the sister were dead. I came back after consoling him.
Later on 22nd October 2010 we came back to our own village Saalamban. I was living with my elder sister. I would cry saying why should I live when my husband and daughter were dead. My elder sister and the other relatives would console me saying “why? you have a son! He would somehow escape the camp and come back to you, don’t worry, have trust”. They kept my son for 2 years. I did road work and would spend Rs1000 to go visit him. Lately they kept him in Batticalo and released him after 2 years.
Later through the help of the ‘Vaalvuthayam’ project I built a house. I haven’t enjoyed happiness in my life; it was sorrow that I experienced. But I don’t show my sadness to others.
I was happy when my son got returned. We had a plantation land on which my son started some plantations. I told him that he was 28 and it is time to get married, so that I can die happily after seeing my grandchildren. Finally he agreed for marriage fearing that I would die due to that sadness.
I want to get him married off and see him having a happy and comfortable life with his children. That’s my wish and future ambition.


CMP/MN/MW/SAL/08
මම ඉපදුනේ සාලම්පනිවල. මට සහෝදර සහෝදරියෝ 11ක් ඉන්නවා. මට වයස 32 දී විවාහය සිද්ධවුනා. 34 දී මට පුතෙක් ඉපදුනා. පස්සේ මට 37 වෙනකොට දුව ඉපදුනා. මට මේ දෙන්නා විතරයි. කරදර මැද දෙන්නා එක්කම කුළී වැඩ කරලා තමයි ළමයි දෙන්නට ඉගැන්නුවේ.
යුද්ධය නිසා යුද්ධයට එක්ක යනවා කියලා 2006 අවුරුද්දේ පුතාව එක්ක ගියා. අන්තිමට ආපු ධර්මපුරම්වල දී අන්තිම යුද්ධය වෙලාවෙ මගේ පුතා පැනලා ආවා. මම හරි අමාරුවෙන් මගේ පුතාව බංකරයක් ඇතුළේ හංගගෙන පරෙස්සම් කරගත්තෙ. මගෙ මහත්තයාට අවුරුදු 60ක්. අවතැන්වෙලා ගිය තැන කන්ඩවත් විදියක් නැතිව දුක් විඳලා මටත් බැරිවෙලා ගියා. වළියමඩම්වල හින්දු කෝවිලක් තිබුනා. ඒකේ තමයි පුතා රෑට නිදාගත්තේ. එක දවසක් දවල් ඇවිල්ලා පුතාව අල්ලගෙන ගියා. මං ඒ ‍කෝවිලට ගිහිල්ලා අඬ අඬා හිටියා. කොහොමහරි දවස් අටෙන් පුතා ගෙදර ආවා.
දුව සාමාන්‍ය පෙළ ලියන කාලේ අවතැන් වුනේ. 2007 අවුරුද්දේ අවතැන් වෙලා මුලන්ගාවිල් කුමුනමුනෛයිවල හිටියා. පස්සේ වන්නේරි, කල්මඩු, මූන්ගිලාරු, ඊට පස්සේ වළියමඩු අන්තිමට මුල්ලි වෛයික්කාල්වලට ආවා.
දවසක් මගේ දුව අම්මේ තාත්තාට තේ ඕනෙලු.. වක් කරලා දෙන්න කියලා කිව්වා.. එළියට තේ වක්කරන්න ආපු වෙලාවේ පපුවට ෂෙල් කෑල්ලක් වැදුනා. මම මගේ ළමයි මගේ සහෝදරයගෙ ගෙදර තියලා මම බෙහෙත් ගන්න යනකොට දුව අම්මේ මාත් එනවා කියලා ඇඬුවා. ඒත් එයාලා කැමති වුනේ නෑ. මාව තනියම නැවට නග්ගලා ත්‍රීකුණාමලෙන් බැස්සුවා. පස්සේ පදවියට එක්ක ගියා. මම එහෙ කවුරුවත් අඳුරන්නේ නැහැ. එහෙ තනියම කිසිම කෙනෙක් නැහැ. එයාලා බෙහෙත් දාලා බෙහෙත් විදලා මාව සනීප කළා. මැදවච්චිය රෝහලට එක්ක ගියා. පස්සේ ලෙඩේ සනීප වුනා. මම ආපහු ආව ගමන් නුඹේ මිනිහා, ළමයි කවුරුවත් නෑ කියලා නෑදෑයෝ කීවා. එහෙම නෑ කොහේ හරි ඉන්නවා කියලා මම කිය කියා හිටියා. පස්සේ මගේ දුවයි, මහත්තයයි නැතිවුනා කියලා කීවා. ඒ ගොල්ලෝ මෙහෙ නෑ කියලම කිව්වා. සහෝදරයොත් හිටියේ නෑ. මම අඬ අඬා හිටියා. මම බස් එකෙන් බහිනවා දැකලා නෑදෑයෝ මාව එක්කන් ගියා.
ටික කාලෙකට පස්සේ පුතාව රැඳවුම් කඳවුරේ ඉන්නවා කියලා කිව්වා. මම කච්චේරිය මඟින් ෆෝම් එකක් දාලා පුතා බලන්න ගියා. එයා මාව දැකපු ගමන් තාත්තත් නෑ, නංගිත් නෑ කියලා එයා දුකින් ඇඬුවා. මම එයාව සනසවලා ආවා. පස්සේ 2009.10.22 අපේ ගමවන සාලම්පන් වලට ආවා. මගේ අක්කත් එක්ක මම හිටියා. මට හිතේ අමාරුවයි මානසික පීඩනයයි. මහත්තයයි දුවයි නැහැ. ඇයි මම විතරක් ජීවත් වෙන්න ඕන කියලා මම අඬනවා. මගේ අක්කයි නෑදෑයොයි කීවා ඇයි ඔයාට පුතෙක් ඉන්නවා නේ කියලා. එයා කොහොමහරි බේරිලා එනවා දුක් වෙන්න එපා විශ්වාසයෙන් ඉන්න කියලා එයාලා කියනවා. අවුරුදු දෙකක් පුතාව රැඳවුම් කඳවුරේ තියාගෙන හිටියා. මම පාරේ වැඩ කරලා හම්බවෙන සල්ලි වලින් රුපියල් දාහක් එකතු කරලා පුතාව බලන්න යනවා. මඩකලපුව කඳවුරේ තමයි අන්තිමට තියාගෙන හිටියේ. අවුරුදු දෙකකට පස්සේ තමයි පුතාව නිදහස් කළේ.
පස්සේ ජීවනෝදය වැඩසහටනෙන් ගෙවල් දුන්නා. මම ගෙය හදලා ඉවර කළා. මම කොච්චර දුක් වින්ඳත් හිතින් දුක් විඳින්නේ නැහැ. හිතේ දුකක් තිබුනත් කාටවත් පෙන්නන්නෙත් නැහැ.
මගේ පුතත් ආවා. එතකොට මට ටිකක් සන්තෝෂයක් දැනුනා. අපිට කුඹුරු ඉඩමක් තියෙනවා. ඒකේ පුතා ගොවිතැන් කළා. පුතේ උඹට දැන් අවුරුදු 28 යි. උඹ දැන් විවාහ වෙලා මට මුනුපුරෙක්ගේ මූණ බලලා සතුටින් ඇස් දෙක පියාගන්න ඕන කියලා කිව්වා. පුතා මම ඒ කල්පනාවෙන්ම මැරෙයි කියලා බයවෙලා විවාහ වෙන්න කැමැති වුනා.
මගේ පුතාට විවාහය කරලා දීලා මගේ ඇස්දෙන්ම පුංචි මුණුපුරාගේ මූණ දැකලා ඒගොල්ලෝ සතුටින් ඉන්නවා මට දකින්න ඕන. ඒක තමයි මගේ ආසාවයි. බලාපොරොත්තුවයි.



CMP/MN/MW/SAL/08
நான் சாளம்பனில் பிறந்தேன். எனக்கு 11 சகோதரங்கள் உண்டு. எனக்கு 32 வயதில் திருமணம் நடைபெற்றது. 34 வயதில் எனக்கு மகன் பிறந்தான். பின்பு எனது 37வது வயதில் மகள் பிறந்தாள். எனக்கு 02 குழந்தைகள் மட்டுமே கஸ்டத்தின் மத்தியிலும் இருவரும் சேர்ந்து கூலி வேலை செய்துதான் இரண்டு பிள்ளைகளைப் படிப்பிச்சோம்.
யுத்த காரணத்தாலே போராட்டத்திற்கு கொண்டு போறன் எண்டு சொல்லி 2006ம் ஆணடு மகனை கொண்டு போனாங்க. கடைசியா வந்த இடத்தில் தர்மபுரத்தில் வச்சு கடைசி யுத்தத்தில் என்ர மன் ஓடி வந்திட்டான். நான் சரியான வேதனைப்பட்டு என்ற பிள்ளையை காப்பாற்றி பங்கருக்குள்ள பதுக்கி வச்சிருந்தன். எனது கணவருக்கு 60 வயது. அவருக்கும் ஏலாது. இடம் பெயரந்து போன இடத்தில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம துன்பப்பட்டுக் கொண்டு எனக்கும் ஏலாம போயிட்டு. வலிய மடத்தில் ஒரு வேத கோயில் ஒன்று இருந்தது. அதில்தான் மகன் இரவில் படுப்பார். ஒருநாள் பகல் வந்து பிள்ளையை பிடிச்சுக் கொண்டு போயிட்டாங்க. நான் அந்த கோயிலில போய் நெடுக கதறுறது. கடைசியா 8 நாளில் என்ற பிள்ளை வந்திட்டான்.
மகள் O/L எழுதிற நேரம் இடம் பெயர்வு வந்திட்டுது. 2007ம் ஆண்டு இடம் பெயர்ந்து முழங்காவில் குமுனமுனையில் இருந்தோம் திரும்ப வன்னேரி, கல்மடு, மூங்கிலாறு கடைசியா வலியமடு பிறகு முள்ளிவாய்க்கால் வந்தம்.
அப்ப என்ர மகள் அப்பா அம்மாவிற்கு தேநீர் வேண்டுமாம் ஊற்றிக் கொடுங்க என்று சொன்னா. வெளியில தேநீர் ஊற்ற வந்த நேரம் நெஞ்சில பீஸ் பட்டிட்டு. நான் எனது பிள்ளைகளை எனது சகோதரர்களுடன் விட்டுவிட்டு நான் சிகிச்சை பெறுவதற்காக செல்லும் போது மகள் அம்மா நானும் வாறேனம்மா என்று அழுதாள் .ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை. என்னை தனியாக கப்பலில் ஏற்றி திருகோணமலையில் இறக்கினார்கள். பின்பு பதவியா கொண்டு போனார்கள் எனக்கு அங்கு யாரையுமே தெரியாது. அங்க தனியா ஒருத்தரும் இல்ல. அவர்கள் மருந்து போட்டு , ஊசி போட்டு என்னைக் குணப்படுத்தி விட்டார்கள்.மதவாச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள் பின்பு வருத்தம் சுகமாகி விட்டது.
நான் போனவுடன் உனது கணவர் பிள்ளைகள் எவருமே இல்லை என்று உறவினர்கள் கூறினார்கள். அப்படியில்லை எங்கையாவது இருப்பாங்க என்று நான் கூறிக் கொண்டு இருந்தேன் .பின்பு எனது மகளும் கணவனும் இறந்து விட்டதாக கூறினார்கள். அவர்கள் இங்கு இல்லன்டே சொல்லிட்டாங்க. சகோதரர்களையும் காணவில்லை. நான் கத்திக்கொண்டு இருந்தேன் நான் பஸ்ஸில் இருந்து இறங்கியதைக் கண்டு உறவினர்கள் என்னை அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
சிறிது காலத்தின் பின்னர் மகன் தடுப்பு முகாமில் வைத்திருப்பதாகக் கூறினார்கள் நான் கச்சேரி மூலம் Form போட்டு மகனை பார்க்கச் சென்றேன். அவனைப் பார்த்த போது அப்பாவும் இல்லை தங்கையும் இல்லை என்று கூறி கவலையோடு அழுதான். நான் ஆறுதல் கூறிவிட்டு வந்து விட்டேன்.
பின்னர் 2009..10..22 இல் எமது சொந்தக் கிராமமாகிய சாளம்பனுக்கு வந்தோம். எனது அக்காவோடே நான் இருந்தேன். எனக்கு வேதனையும் விரக்தியும். கணவனும் மகளும் இல்லை இன்னும் ஏன் தான் நான் உயிரோட இருக்க வேண்டும் என்று கூறி அழுவேன் அதற்கு எனது அக்கா மற்றும் உறவினர்கள் ஏன் உனக்கு மகன் ஒருவன் இருக்கின்றான். அவன் தப்பி வந்து விடுவான் கவலைப்படாதே நம்பிக்கையோடு இரு என்று கூறுவார்கள. 02 வருசம் மகனை தடுப்பில் வைத்திருந்தார்கள். .நான் ரோட்டு வேலையைச் செய்தே வரும் பணத்தை எடுத்து 1000 ரூபா கொடுத்து போய் பார்க்கிறது மகனைப் பார்க்கச் செல்வேன். மட்டகளப்பு முகாமில்தான் கடைசியா வச்சிருந்தாங்க. 2 வருடத்திற்கு பிறகுதான் மகனை விட்டாங்க
பின்னர் வாழ்வுதயத்தால் வீட்டுத்திட்டம் தந்தார்கள். நான் வீடு கட்டி முடித்தேன். நான் துன்பத்ததான் அநுபவிச்சிருக்கிறன் இன்பத்த அநுபவிக்கேல எவ்வளவோ துன்பம் இருந்தாலும் வெளியில காட்றதில்ல
எனது மகனும் வந்து விட்டான். அப்போது எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. எங்களுக்கு வெள்ளாமக் காணி இருக்கின்றது. அதோட மகன் வெள்ளாமை செய்தான். மகனே உனக்கு 28 வயசாகப் போகிறது. நீ ஒரு திருமணம் முடி உன் பிள்ளையை எனது பேரப்பிள்ளைகளைப் பார்த்த சந்தோசத்திலே நான் கண்ணை மூடிடுவேன் என்று கூறினேன். அவன் நான் அந்த ஏக்கத்திலேயே இறந்து விடுவேனே என்று என்று எண்ணி பயந்து திருமணத்திற்கு சம்மதித்தான்.
எனது மகனுக்கு திருமணம் முடித்துக் கொடுத்து என் கண்ணுக்கு முன் செல்வச் செழிப்போட குழந்தைளோட சந்தோசமாக வாழ்வதை நான் பார்க்க வேண்டும் இதுவே என்னுடைய எதிர்கால லட்சியமும் ஆசையும் ஆகும்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License