I hate my life

The sad story of a patient lady


මම මගේ ජීවිතයට වෛර කරනවා

රෝගී තරුණියක් පිළිබඳ කණගාටුදායක කථාව


வாழ்க்கையே இனி வேணாம்

ஓர் நோயாளி பெண்ணின் சோகம் நிறைந்த கதை



CMP/MN/MN/MTN/02
My name is Jeyanthini. My parents are living in Vamathevam. We are six siblings in the family; all six of us are girls. Except for one sister who is still studying, all the others are married. I studied at Iluppakkada School. I only sat for the first term exams of O/L. Due to this Movement troubles I couldn’t sit for O/L exams. Now for any further studies or jobs, they ask for O/L results.
I was having a relationship with my Uncle’s son while I was studying. He told me “You marry me, I wouldn’t let you go to the Movement, I would look after you, stay with me”. “No! No matter what you do, they would somehow take me, I would go” said I. “No, no! I would take you along with me” he said, and took me with him. But by just the 9th day of my departure, the Movement have taken my father and demanded me to join them. All six of us are girls, if something happened to my father who would take care of our family? I thought. “If anything happened to me, the effect is only on me. But if something happened to my father, the whole family would be affected.”. With that thought, I informed that I would come, and requested to release my father. I have joined the movement when I was just 18. And they have set my father free.
Because the Movement took me, I couldn’t even sit for O/L exams. After taking me with them, they kept me at Kuttysprene Motor shop and trained me. They gave me training only for 1 ½ months. After that as a member of Motor troop I was trained on computer, launching shells etc. After the training I was assigned to launch shells but I was too afraid to do that, so I would help on finding the directions using GPS in the computer.
I would have been with them only for 6 to 7 months. Later I was injured in a shell attack. Due to the injury I suffered a lot.
After 6 months, on 6th December I got injured. I could feel the blood bleeding from my head. I fell on the ground, tried to lift my hand but I couldn’t. Then I realized that my hand was also injured. They took me in a vehicle, and removed the shrapnel under anesthesia. I wasn’t aware of what happened after that. They put 16 stitches in my stomach. There were injuries in my hip, back and elbows. Bomb shrapnel have pierced my thighs. They put 6 stitches in my forehead. Still there are shrapnel in my body, in my back and hand. I cannot work outside under sun. After my injury I felt my body burning.
“Sister, don’t save me. Please put poisonous injection and kill me. I cannot bear this suffering. Kill me somehow”, I would scream and shout. “We have saved you with much difficulty, you are too young, don’t think like that, we would be able to save you” she said. For three months I was bed ridden. They took care of me like I was an infant.
I don’t know how to describe that. My wounds would ooze, and would give out bad smell. I found it impossible to lie on bed even. I couldn’t sleep in the nights. I would scream out asking for sleeping tablets or sleeping injections. They would say “We shouldn’t be giving you sleeping injections, we would give you tablets, here, take these tablets” and would give me tablets around 9 or 10 in the night. I would sleep after taking the pills but would wake up early morning and start screaming.
Then worms developed in my back and it started to itch. Because I was in so much pain I didn’t feel that itching much. I told the nurse “sister my back is itching, please have a look”. Then she checked and found out there were worms. She got afraid and ran away. I told them “you are running away, I can’t even walk”. I asked them to lift me up. After sitting up I asked them “what’s the matter?”. “Nothing, there is one worm, we would take it out and give you a bath, then you would be fine” they said. They took the worm out and gave me a bath. And later in the evening they found out there were 7 worms under the POP in my hand. Then they removed the POP. I was there at that hospital for about 2 ½ months. Later, when I was able to walk a bit, one day they said “you would be shifted to another hospital”. And that day about 9pm they took me to another hospital.
At about 9.30pm the hospital was bombed by a Kibir air plane and so many have died. The bodies were unidentifiable. My relatives have gone there in search of me and have decided that I was too dead. They have looked around for me and came back crying.
That time I was already married. So my husband cried a lot missing me. He didn’t know where I was, so he hasn’t come to the hospitals I had been in after my injury. He was searching for me. They would take me out of the theater under the influence of the anesthesia. Once he found out hearing me screaming. After that he would visit me every day. Later I was kept at a place called Senthiran Sellaiyadi. There my father came and told “you just sneak out of this place with him, I would take you home”. I agreed. One day at about 9 or 10 pm, in pitch dark, I escaped. I couldn’t walk or even sit on a bicycle. My father and husband somehow took me from that place.
When I was home, again there was heavy shelling. I couldn’t walk. There was no way to put medicine to my wounds. My sister had helped to heal my wounds by cleaning them with Dettol. I couldn’t put this hand down. There were stitches in my back and waist. We went to the hospital to take those stitches out.
Then my father said, “It looks like they would take you with them after removing the stitches. It doesn’t matter if you don’t take those stitches out, come lets go home”. I agreed and went home. Later when my wound got healed the stitches too got covered by skin. After that it was my father who takes me and carries me around. Finally on 17th March we moved from that place but I couldn’t even walk. While walking my sister-in-law’s husband got injured by a bullet. He was taken to the hospital and my father accompanied him. But he couldn’t be saved, he died there. His child was a 1 ½ months old infant then. My sister-in-law couldn’t come. So we came to this side.
We couldn’t walk in that Nanthi Sea. Our feet would sink in it. I couldn’t walk and I started screaming. “I am unable to walk, I cannot do anything, its oki even if I die, you go ahead mother” I screamed out. My mother didn’t let me give up. Even though my husband was not there with us, my parents held my hands and somehow brought me to the place. We then were kept in Vavuniya, Arunachala Camp at the Tamil Madyamaha Vidyalayam.
I couldn’t put my hands down, couldn’t walk much. Then I told my mother “the stitches in my back are constantly pricking me, we need to go to the hospital to remove them”. She agreed and took me to the Vavuniya hospital. We stayed there for 5 days but we were not attended well. The doctor asked me to bend and had a look on my back. He said it doesn’t show much, and put me on bed and pulled the stitches out. A small piece got torn out. He didn’t put any injection for me to numb, just pulled it out. Later it got infected and another piece of stitch started to come out. Later I was taken to the Arunachalam camp and then to our own village.
After the injury I started thinking why should I live with my husband? I lost interest in life. I was told that my kidneys are dysfunctional. I started thinking why I should live after this. My husband was a healthy man. I thought he should have a better life and wrote a letter asking him to get married to someone else. He wasn’t accepting that. He said “No matter what happens to you, I don’t mind if we can’t have children, I would take care of you till the end, come with me”. I refused to go and fought with him. He persistently tried to convince me and promised me that he would take care of me. But I adamantly refused it. For about one and a half years I was living separated from him. Getting injured after marriage we lived apart for one and a half years. Later my mother convinced me saying “its okay, you go and live with him. He is refusing to get married he wants to live with you. You go and stay with him”. I agreed and united with him in Adamban.
Even two years after joining him, I couldn’t do any work. He would do all the work for me. I wanted to go out and work but he wouldn’t let me go. He would say “if you go to work you would fall sick, and then I would have to spend more than what you earn. You don’t have to go anywhere, just stay here I would look after you”. He took care of me very well. Later we got a daughter. When she was about 3 years old, we went to Koorayi. We got this child when she was about 3 or 3 ½. Just after one month of his birth we moved to Koorayi from my mother’s place.
Under that Housing Scheme we only received half of the support. My husband did the rest of the work. Somehow he completed the house, but it was not complete and the finishing touches was not done, no doors fixed. Just the floor was done. It was December then, we had heavy rain. That was when this child was born. On December 22nd, the paddy got matured and he went to work as a guard there. That was a Monday and he left at about 11, in the motor bike. But during the night he got bitten by a snake and my mother and others took him to the hospital. He was only 26 years old when this happened.
He was kept in the IC room in Mannar hospital. He was taken on Tuesday and he was alive till Wednesday night. Early morning about 2.50am I got a phone call saying that he couldn’t be saved and he was dead. I didn’t know what to do.
At that time my daughter was 3 ½ years old, and this boy was one month and 8 days old. I had suffered a lot.
We hired a vehicle from Jaffna to bring him here. One month after the funeral I went and stayed with my mother.
My sister was working in a garment. She was receiving about Rs 12,000. She took care of the house expenses and also the expenses of my children. She took care of us for about 6 to 7 months. Later I went to our house to live alone. I didn’t want to trouble my mother and the others. So I left my daughter with them and took only my son with me. Now I don’t have anyone to help me. It’s so scary to be in the house. Though there are people living around nowadays it’s scary to live in a house without a men’s presence. There were no doors or windows. I went and stayed with my mother-in-law for a year. I would cook and eat at our place during the day time and go to my mother-in-law’s place only to sleep in the night.
Then I thought, for how long I would be doing this, and decided to sleep at home. I got my grandmother down to stay with me, she is old though. Now I have few cows. I was milking them for about one and a half months. Now I don’t get much milk since there is no rain and therefore no grass. So now I experience much hardship. There is no one to help me. Next year my daughter would be in Grade 1. So the cost of education would be more. So I asked my mother whether she would take care of my son so that, no matter how hard it is, I could go for garment work. “You got injured, your hands cannot function how are you going to work there?” said mother. I told her “the difficulties here are better than what I have to go through there under the sun, I would go to work”. “Okay, your wish, I would look after your son, you go” said the mother. With that word I started working.
If they haven’t forcefully recruited me, I would have definitely sat for my O/L exams. With the O/L results I would have studied further. With that result I would have joined some work. Now for everything they ask for the results.
Now I am 26 years old. I am now going for garment work, no matter what difficulties I had to face. If I go there in the morning I could return only by evening 6pm. It is difficult. This boy is small. I feel so bad to leave him and go. I was afraid that he would feel lost when I leave him alone. They wouldn’t give us leave even when I fall sick. I heard that nowadays only Sundays are off days in the garment industry. I have started working there regardless of these issues.
My children should not go through difficulties like I had gone through. I have to help build a future for them. I would struggle as much as possible to earn and save some money in the bank for their educational expenses. That would be enough for their future.
The future generation should not suffer like the way we did. We have gone through so much difficutlies. They shouldn’t suffer like us; they should be able to study well without any interruptions like we had. They should study well and build a prosperous future for them.




CMP/MN/MN/MTN/02
எனது பெயர் ஜெயந்தினி. எங்கட அம்மா அப்பா எல்லாம் வாமதேவத்துக்குள்ள இருக்கிறாங்க. எனக்கு ஆறு சகோதரங்கள். நாங்க ஆறும் பொம்புள புள்ளைகள் தான். இப்ப எல்லாம் முடிச்சிட்டாங்க. ஒரு தங்கச்சி மட்டும் இருக்கு. படிச்சுக்கொண்டு இருக்கிறா. நான் இலுப்பக்கட ஸ்கூல்ல தான் படிச்சேன். படிச்சு....முதல்...ஓ.எல்....முதலாம் தவணை மட்டும்தான் எழுதினோம். இந்த இயக்கப் பிரச்சினை என்று சொல்லி ஓ.எல். கூட எழுத முடியல்ல. இப்ப எந்தப் படிப்பு..எந்த வேல வேணும்னு சொன்னாலும் ஓ.எல். ரிசல்ட் தான் கேக்கிறாங்க.
நான் படிக்கிற நேரமே எங்கட மாமாட மகனாத்தான் விரும்பியிருந்து, அப்ப அவரு சொன்னாரு "நீ என்னய முடிச்சிரு. நான் ஒன்னய இயக்கத்துக்கு, விட மாட்டேன் தானே. நான் ஒன்னய வெச்சுப் பார்த்துக்கிடுவேன். நீ இரு. "அப்டின்னு சொல்ல.. "இல்ல. நீ என்னதான் செஞ்சாலும் என்னய கொண்டுபோயிடுவாங்க அவங்க. நான் போயிட்டு வாறன் " அப்டின்னு சொல்ல, " இல்ல...இல்ல..நான் ஒன்னய கூட்டிட்டுப்போறன் " என்று சொல்லி என்னய கூட்டிட்டு போயிட்டாரு. கூட்டிட்டு போயிட்டு ஒம்பதாம் நாளே இயக்கத்துக்கு வந்து எங்க அப்பாவப் புடிச்சுக்கிட்டு, என்னய வர சொல்லி இருந்தாங்க. பிறகு நான் பாத்தன். எங்கள்ல ஆறும் பொம்புள புள்ளைகள். எங்கட அப்பாக்கு ஏதும் பிரச்சினையாயிருந்தா, எங்கட குடும்பத்தை யார் பாப்பா ? எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா... அது என்னோட போயிடும். எங்கட அப்பாக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா எங்கட வீட்ல எவ்வளவு பேர் இருக்கிறோம். அப்டின்னு சொல்லி, நான் வாறன். எங்கட அப்பாவை விடுங்க என்று சொல்லி, 18 வயசுல போயிட்டு, எங்க அப்பாவை விட்டுட்டாங்க.
நான் இயக்கம் அப்படி புடிச்சிட்டுப் போனத்துனால எனக்கு ஓ.எல். சோதினை கூட எழுத முடியல்ல. பிறகு அவங்க என்னய அங்க கொண்டுபோய்ட்டு குட்டிஸ்ப்ரீன் மோட்டார் கடைல தான் வெச்சிருந்தாங்க. வெச்சு பயிற்சி எல்லாம் தந்தாங்க. ஒன்றரை மாசம் தான் பயிற்சி கொடுத்தாங்க.அதுக்குப்பிறகு மோட்டார் படையின்னு சொல்லி கம்ப்யூட்டர், ஷெல் அனுப்புறது சம்பந்தமா எல்லாம் படிச்சு தந்தாங்க. படிச்சு தந்திட்டு, பிறகு அந்த மோட்டார் படையில் சேர்த்து ஷெல்லடிக்க விட்டது. நான் ஷெல்லடிக்கிறத்துக்கு எல்லாம் போக மாட்டேன். ஏன்னா சரியான பயம். அதனால அந்த ஜிபிஎஸ் மாதிரிக்கு கம்ப்யூட்டர்ல அடிச்சு திசைகள் காட்டி கொடுக்கிறது. .
அதுக்குப்பிறகு ஆறேழு மாசம் தான் இருந்திருப்போம். இயக்கத்துல இருக்கும்போது, ஷெல் வந்து விழுந்தது. அதனால நான் காயப்பட்டேன். காயப்பட்டு அங்க சரியான மாதிரி கஷ்டப்பட்டேன்.
ஒரு ஆறு மாசம் கழிச்சு ஒரு மார்கழி மாசம் ஆறாம் திகதி காயப்பட்டேன். எனக்கு காயப்பட்டவுடனே தலையில இருந்து ரெத்தம் வழியுது எனக்கே தெரியுது. கீழ்ல விழுந்து கிடக்க கைய தூக்கி பாக்குறன்... கைய தூக்க முடியல. அப்ப தான் தெரியும் எனக்கு கைல காயம் இருக்குன்னு சொல்லி. அதுக்கு பிறகு என்னய ஒரு வாகனத்துல ஏத்திட்டு போய்ட்டு..மயக்க ஊசி எல்லாம் போட்டு, பீஸெல்லாம் எடுத்தாங்க. அதுக்குப் பிறகு என்ன நடந்திச்சுன்னு எனக்கு தெரியாது. என் வயித்துல எல்லாம் 16 தையல் போட்டு இடுப்புல காயம், பெக்ல காயம்..முழங்கையில் இப்படி பெரிய காயம். இந்த துடையில பொத்துட்டு.... ரெண்டு துடையிலயும் பொத்துட்டு அப்படியே போயிருச்சு. நெத்தியில ஆறு தையல் போட்டிருக்கோம். இன்னும் பீஸெல்லாம் இருக்கு எனக்கு. முதுகுல எல்லாம் பீஸ் இருக்கு. கையில பீஸ் இருக்கு. வெயில்ல எல்லாம் போய் வேல எல்லாம் நிண்டு செய்ய ஏலாது. அதுக்குப்பிறகு காயப்பட்டதுக்குப் பிறகு, சரியான எரிவு..
அந்த அக்காள்டயும் சொல்லி கத்துவன். "அக்கா என்னய நீங்க காப்பாத்த வேணாம். விஷ ஊசி அடிச்சு கொன்னுடுங்க என்னால இந்த வேதனையெல்லாம் தாங்கிக்கொள்ள ஏலாது. என்னய எப்படியாச்சும் கொன்னுடுங்க" என்று சொல்லி கத்தினேன். அப்ப அவங்க சொன்னாங்க " உங்கள நாங்க இவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாத்தியிருக்கோம். இப்ப சின்ன வயசு. நீங்க அப்படியெல்லாம் ஒண்ணும் யோசிக்காதீங்க. உங்களய நாங்க காப்பாத்திடுவோம் " அப்டின்னு சொல்லி மூன்று மாசமா நான் நடக்கவே மாட்டேன். படுத்த படுக்கையிலேயே தான் இருப்பேன். சின்னப்புள்ளைங்கள எப்படிப் பாப்பாங்களோ, பிறந்த புள்ளைய எப்படிப் பாப்பாங்களோ அதே மாதிரிக்குத்தான் என்னையும் பாத்துக்கொண்டாங்க.
என்னால அத எப்படி சொல்றன்னு தெரியல..அப்டியே உந்துநீர் வடியும்..சரியான நாத்தம். படுத்துக்கூட இருக்க ஏலாது. இரவில எல்லாம் ஒரு சொட்டு நித்திர தூங்க ஏலாது. நித்திர குளிச தாங்க. இல்லாட்டி நித்திர ஊசி போடுங்க என்று சொல்லி கத்தினேன். அவங்க சொல்லுவாங்க " நித்திரை ஊசி எல்லாம் போடக் கூடாதும்மா. உங்களுக்கு நித்திரை குளிசை தாறோம். இந்தாங்க நீங்க நித்திரை குளிசையை போடுங்க " என்று சொல்லி 9,10 மணிக்கு போல நித்திரை குளிசையை தருவாங்க. நித்திரை குளிசையை தந்தா, நித்திரை குளிசையை போட்டுட்டு, தூங்குவேன். தூங்கி விடிய வெள்ளன எழும்பி கத்த வெளிக்கிட்டுடுவேன்.
அந்த நேரம் பார்த்து எனக்கு முதுகுல புழு வெச்சிட்டு. புழு வெச்சதும் கடிக்குது... கடிக்க அப்ப எனக்கு அந்த வேதனைக்கு அந்த கடி வேதனை ஒண்ணும் தெரியல்ல. அப்ப நான் சொன்னான் அங்கிருந்த நேர்ஸ் ஆக்கள்ட்ட தான் சொன்னேன் . " அக்கா எனக்கு முதுகெல்லாம் கடிக்குதக்கா. ஒருக்கா பாருங்கக்கா " அப்டின்னு சொன்னேன். பாக்க புழு வெச்சிருந்திச்சு. புழு வெச்சிருக்க அவங்க பயந்து ஓடுறாங்க. ஓட , அப்ப நான் சொன்னேன்..இவங்க எல்லாம் பயந்து ஓட, எனக்கு நடக்கக் கூட முடியாது. நான் எழும்பி.. என்ன தூக்கி விடுங்க அக்கா என்று சொல்லி, தூக்கி விட்டது தான், அப்ப " என்னக்கா ?" அப்படின்னு சொல்லிக் கேட்டேன். " ஒண்டுமில்லம்மா. ஒரு புழு ஒன்று இருக்கு. அத எடுத்தா.. குளிச்சா சரியாய் போயிடும்" என்று சொல்ல, பிறகு அந்த புழுவை எடுத்து.. குளியாட்டி விட்டாங்க. குளியாட்டி விட்டு... பின்னேரம் கொஞ்சத்தால பாத்தா...கையில பீ ஓ பீ போட்டிருந்தாங்க. பீ.ஓ.பீ ல ஏழு புழு வெச்சிருந்திச்சு. திரும்ப அதுக்குப் பிறகு பீ.ஓ.பீ ய அவுத்து அதுக்குப்பிறகு ஒரு ரெண்டரை மாசமா அந்த ஹொஸ்பிடலிலேயே இருந்தேன். அதுக்குப்பிறகு சரின்னு சொல்லி கொஞ்சம் நடக்கக்கூடிய மாதிரிக்கு வர, சொன்னாங்க "வேற ஹொஸ்பிடலுக்கு உங்களை கொண்டு போகணும்" என்று சொல்லி அண்டிரவு ஏத்துறாங்க, அன்றிரவு ஒரு ஒன்பது மணி இருக்கும். ஏத்துறாங்க.
ஒம்பதரைக்கெல்லாம் கிபீர் காரங்க வந்து..குண்ட...அந்த ஆஸ்பத்திரிலேயே ஷெல்ல போட்டு... அங்க உள்ள நெறைய பேர் செத்துட்டாங்க. செத்ததும், பெக்கோ விட்டுத் தான் அள்ள மற்றாக்க எல்லாம் வந்து பாத்திட்டு... எங்க சொந்தக்காரங்க எல்லாம் வந்து பார்த்திட்டு, நானும் செத்துட்டேன் என்று சொல்லி, அங்க எல்லா இடமும் தேடி அழுதுகொண்டு வந்தாங்க.
இப்ப நான் முடிச்சிட்டன் தானே. முடிச்சத்துக்குப் பிறகு அவர் சரியான அழுதார். அழுதழுது...நான் எந்த ஹொஸ்பிடல்ல கிடந்தான்..காயப்பட்டதுக்கு பிறகு எந்த ஹொஸ்பிடல்ல கிடந்தாலும் என்னய தேடி வந்திடாது. என்னய தேடி வாராத விட, நான் இருக்கிற இடம் அவருக்கு தெரியாது. என்னய மயக்க ஊசி போட்டு, தியேட்டர்ல இருந்து வெளிய கொண்டு போவாங்க. நான் கத்தின சத்தம்...அந்த குரலை கேட்டு, என்னய தேடி வந்துட்டாரு. திருப்ப ஒவ்வொரு நாளும் வந்து வந்து பாப்பாரு. வந்து பார்த்து, அதுக்குப்பிறகு நடக்க ஏலாம இருக்கக்க , திரும்ப நான் பிறகு செந்திரன்செல்லையடி என்று சொல்லி. அந்தவொரு இடத்துல வந்திருந்தேன். எங்கட அப்பா தான் சொன்னாரு " நீ இப்படி தெரியாமகொள்ளாம இவங்களோடு வந்திரு. நான் ஒன்னய வீட்டை கூட்டிட்டு போயிடுறேன்" அப்படின்னு சொல்லி. சரின்னு சொல்லிட்டு நான் இருந்தேன். பிறகு கொஞ்சம் இருட்டுப்பட்டு ..ஒரு ஒம்பது...பத்து மணி இருக்கும். நல்லா இருட்டிருச்சு. என்னால நடக்க ஏலா. ஒரு சைக்கிள்ல கூட இருந்து போக ஏலாது. சரின்னு சொல்லி... பிறகு என்னய ஒரு மாதிரிக்கு எங்கட அப்பாவும் இவரும் தான்...ரெண்டுபேரும் வந்து இரவோடிரவா என்னய வந்து கூட்டிட்டு போனாங்க.
கூட்டிட்டுப்போய் அங்க வெச்சிருக்க, சரியான மாதிரி ஷெல்லடியாயும்... நடக்கயும் ஏலாது...ஒண்ணும் ஏலாது. மருந்து கூட கட்ட ஏலாது. பிறகு எங்கட அக்கா தான் டிட்டோல் வேண்டி வெச்சி .துடைச்சு கொஞ்சம் புண்ண ஆத்திக்கொண்டு வந்தா. இந்த கையெல்லாம் கீழ்ல விடவே ஏலாது. முதுகுல, இடுப்புல எல்லாம் தையல் போட்டு இருந்திச்சு. பெக்ல எல்லாம் தையல் போட்டு இருந்திச்சு. அத வெட்டுவோம் என்று சொல்லி ஹொஸ்பிடலுக்கு போனோம்.
அப்ப அப்பா சொன்னாரு...தையலை வெட்டுறோம் என்று சொல்லிட்டு உன்ன அப்படியே கூட்டிட்டுப் போயிடுவாங்க போல இருக்கு. நாங்க தையலை வெட்டாட்டியும் பரவாயில்ல. நாம வா போயிடுவோம் அப்டின்னுட்டாரு. சரின்னுட்டு நான் வீட்டை போயிட்டேன். வீட்டை போனதும் எனக்கு அப்படியே பெக்ல உள்ள சதையெல்லாம் கொஞ்சம் காயம் ஆற...தையல் ஊசியும் அப்படியே மூடுப்பட்டுரும். அப்படியே மூடுப்பட்டிருச்சி. அதுக்குப் பிறகு எங்கட அப்பாதான் எங்க போனாலும் கூட்டிட்டு... தூக்கிட்டெல்லாம் போய்த் திரிவாரு. கடைசியா மூன்றாம் மாசம் 17ஆம் திகதி அங்க இருந்து வெளிக்கிட்டு வர, என்னால நடக்கக்கூட முடியல்ல. அங்கயிருந்து நடந்து வரவே இவரட அக்காட புருசனுக்கு ரவுண்ஸ் பட்டு, ஹாஸ்பிடல் கொண்டு போயிட்டாங்க. அதோட எங்கட அப்பாவும் போயிட்டாரு. போனதும் அவரக் காப்பாத்தவே முடியல்ல. அவர் அப்பவே இறந்திட்டாரு. அவருக்கு அப்பவே ஒன்றரை மாசத்துக் கைக்குழந்தையொன்று இருந்திச்சு எங்கட மச்சாளுக்கு. எங்கட மச்சாவுக்கும் வர முடியல்ல. அப்ப நாங்க இங்கால வந்திட்டோம்.
அந்த நந்திக்கடலால நடந்து வரவும் முடியல. சுழி.. காலால புதையும். காலுக்குள்ளால புதையும். நடந்துகூட வர முடியாது. நான் கத்துறன். என்னால நடந்து வர முடியல்ல. ஒன்றுமே முடியல்ல. நான் இங்கயே இருக்கிறன். நான் செத்தாலும் பரவாயில்ல. நீங்க போயிருங்கம்மா என்று சொல்லி கத்தினேன். அம்மாங்க அப்படியிருந்தும் என்ன விடயில்லை. இவரு வராட்டியும்.. எங்கட அம்மா,.எங்கட அப்பா..கைத்தாங்கள்லயே என்னய கொண்டுவந்து சேர்த்துட்டாங்க. கொண்டு வந்து சேர்த்ததும் திரும்ப வவுனியா..அருணாச்சல முகாம்..தமிழ் மத்திய மகா வித்தியாலயத்துல எங்களை வெச்சிருந்தாங்க.
எனக்கு கையெல்லாம் கீழ விட ஏலாது. நடக்க ஏலாது பெரிசா. அப்ப நான் அம்மாட்ட சொன்னன். " அம்மா பெக்ல உள்ள தங்கூசி குத்திகிட்டே இருக்குது. ஆஸ்பத்திரில போய் எடுக்கோணும் " அப்டின்னு சொல்ல, சரின்னு சொல்லி வவுனியா ஹொஸ்பிடலுக்கு கொண்டு போனாங்க. கொண்டு போய் அஞ்சு நாள் இருந்தோம். எங்கள பாக்கவே இல்ல ஒழுங்காக. டொக்டர் என்னய அப்படியே கூட்டிட்டுப் போயிட்டு கொஞ்சம் கீழ குனிங்க என்று சொல்லி பெக்க பார்த்தாரு. பெட்ல படுக்கப் போட்டு. சொன்னாரு சும்மா சாதுவாத்தாம்மா இருக்கு. மேலால தெரியுது., சரின்னு சொல்லி புடிச்சி இழுத்திட்டாரு. இழுக்கிறதுக்கு முதல் சின்ன துண்டொன்னு அறுந்து வந்திச்சு. விரைப்பூசியா..... ஒண்ணுமே போடல்ல. சும்மா புடிச்சு இழுத்தாரு. பிறகு கொஞ்ச நாள் போகேக்க உள்ள அப்படியே சிதல் வெச்சு குத்தி அடுத்த தங்கூசி வந்துக்கிட்டிருந்திச்சு. தங்கூசி வர அதுக்குப்பிறகு அப்படியே அருணாச்சலம் முகாமுக்கு ஏத்தினாங்க. அருணாச்சலம் முகாமில் இருந்து பிறகு, ஊருக்கு ஏத்திட்டாங்க.
காயப்பட்டதுக்குப் பிறகு, இவரோட இன்னும் இனி என்னத்துக்கு இனி வாழனும்...? வாழ்க்கையே இனி வேணாம்.. நமக்கு சொல்லிப்புட்டாங்க.. உங்களுக்கு இனி கிட்னி எல்லாம் இல்லன்னு வேற சொல்லிப்புட்டாங்க. அப்ப நான் யோசிச்சேன். எனக்கு கிட்னி எல்லாம் இல்லன்னு சொன்னாங்க. இனி என்னத்துக்கு நமக்கினி வாழ்க்கை? அவராச்சும் நல்லா இருக்காரு. அவராச்சும் நல்லா இருக்கட்டும் என்று சொல்லி...அவரை வேற கல்யாணம் முடிக்க சொல்லி கைப்பட கடிதமெல்லாம் எழுதிக் கொடுத்தேன். எழுதிக்கொடுக்க, அவரு என்னையை விட்ற மாதிரிக்கில்ல. நான் உன்னை என்ன நடந்தாலும் பரவாயில்ல. புள்ள இல்லாட்டியும் பரவாயில்ல. கடைசிக்காலம் மட்டும் நான் ஒன்னய காப்பாத்துவேன். நீ என்னோடயே வந்திருந்திடு என்று சொல்ல, இல்ல நான் வர மாட்டேன் என்று சொல்லி சரியான மாதிரி சண்டை புடிச்சேன், இல்லில்லை. நீ வா.. நான் ஒன்னய பாப்பேன் என்று சொல்ல..நான் அப்படி இருந்தும் அவரோட சேரவே இல்ல. ஒன்றரை வருசமா பிரிஞ்சே இருந்தோம். கல்யாணம் முடிச்சு... காயப்பட்டதுக்குப் பிறகு ஒன்றரை வருசமா பிரிஞ்சே இருந்து, அதுக்குப் பிறகு எங்கட அம்மாங்க எல்லாம் சொல்லி, பரவாயில்ல. அவரோட போய் சேர்ந்திரு. வேற கல்யாணம் முடிக்க மாட்டேன். ஒன்னய தான் முடிப்பேன் என்று சொல்லி வேற நிக்கிறாரு, நீ அவரோடயே போய் இரு அப்படின்னு சொல்ல, சரின்னு சொல்லிட்டு அங்கயிருந்து வந்து, அடம்பன்ல வெச்சுத்தான் சேர்ந்த.
சேர்ந்து ரெண்டு வருஷம் கழிச்சு, அப்ப அந்த நேரம் எனக்கு ஒருவேலயும் செய்யேலாது. அப்ப அவருதான் அவ்வளவு வேலையையும் செய்து தருவாரு. ஏதும் வேலைகளுக்குப் போரேன்னாக்கூட என்னய விட மாட்டாரு. பிறகு நீ வேலைகளுக்கெல்லாம் போனென்றா ஒனக்கு வருத்தம் வந்திடும். நீ செய்யிற வேலைய விட கூடவே நான் செலவழிக்க வேண்டியதால் நீ எங்கயுமே போக தேவல்ல. நீ இரு. ஒன்னய நான் பாப்பேன் என்று சொல்லி, என்ன நல்லா பாத்தாரு. நல்லா பாத்து... முதல்ல பொம்புளப்புள்ள ஒன்னு பிறந்திச்சு. பிறந்து புள்ளைக்கு மூன்று வயசு இருக்கும். பிறந்து கொஞ்ச நாளா கூராயி போயிட்டோம். கூராயி போய் இருந்து. மகளுக்கு மூன்று..மூன்றரை வயசுக்குப் பிறகு தான் இவரு பிறந்தது. இவரு பிறந்து ஒரு மாசம் முடியவே எங்கட அம்மா வீட்ல இருந்து, கூராயிக்கு போயிட்டேன்.
எங்களுக்கு அந்த வீட்டுத் திட்டத்தின்படி பாதி வீட்டுத்திட்டம் தான் கொடுத்திருந்தாங்க. அவர் மிச்ச வேலைகள் செய்து, ஒரு மாதிரியா முழுசா வீடெல்லாம் கட்டி, பூச்சு வேலைகள் முடிக்கல, கதவெல்லாம் போடல்ல. சும்மா நெல மட்டும் வெச்சிருக்கு. அந்த நேரம் சரியான மார்கழி மாசம் சரியான மழை. இவரு பிறந்த நேரம். மார்கழி மாசம் 22ஆம் திகதி இவரு வெள்ளாமை வெடிச்சு இருந்தது. காவலுக்கு போறன்னு திங்கக்கிழமை பதினொன்றரைக்கு போய்ட்டு வாறன் என்றிட்டு மோட்டார் பைக்ல போனாரு. இரவு போனவிடத்துல ஒரு பாம்பு கடிச்சி அம்மால்லாம் ஹொஸ்பிடலுக்கு கொண்டு போயிட்டாங்க. அப்ப அவருக்கு அந்த நேரம் 26 வயசு தான்
மன்னார் ஹொஸ்பிடலுக்கு கொண்டுபோய் ஐ.சி ரூமுல வெச்சிருந்தாங்க. செவ்வாக்கிழமை கொண்டு போனது. புதன்கிழமை இரவெல்லாம் இருந்தாரு. புதன்கிழமை விடிய வெள்ளன, ஒரு...2.50 இருக்கும், போன் வருது அவர காப்பாத்த முடியலயாம். அவரு இறந்திட்டாரு என்று சொல்லி. அதைக்கேட்டு எனக்கு என்ன செய்ரன்னே தெரியல.
அந்த நேரம் மூத்த பொம்புளப்புள்ளைக்கு மூன்றரை வயசு. இவரு ஒரு மாசம் 8 நாளும் பிறந்து. சரியான மாதிரி கஷ்டப்பட்டுட்டேன்.
யாழ்ப்பாணத்திலே இருந்து வாகனம் புடிச்சுதான் கொண்டு வந்தோம். கொண்டு வந்து அடக்கம் எல்லாம் செஞ்சிட்டு ஒரு மாசம் முடிஞ்சு, எங்க அம்மாவங்களோட போய் இருந்திட்டேன்.
அக்கா தான் கார்மெண்ட்ஸ் வேலைக்கு போயிட்டு அக்காக்கு எப்படியும் பன்னிரண்டாயிரம் அப்படித்தான் சம்பளம் கிடைக்கும். அதிலயும் வீட்டு செலவுக்கு கொண்டுவந்து , என்ற பிள்ளையையும் எங்க அக்காதான் பார்த்திகிடுச்சி. ஒரு ஆறேழு மாசம் எங்கக்கா பாத்துக்கிடுச்சு. அதுக்குப்பிறகு நான் தனியே வீட்டுக்கு போயிட்டேன். அம்மாவங்களுக்கெல்லாம் கரைச்சல் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி மகள மட்டும் அம்மாட்ட விட்டுட்டு, மகனை மட்டும் கூட்டிட்டு போனேன். கூட்டிட்டு போயிட்டு யாருமே இப்ப உதவிக்கு இல்ல. வீட்டுல இருக்கேலாது. பயம். சுத்திவர ஆக்கள் இருந்தாலும், இப்ப ஆம்புளைகள் இல்லாத வீட்டுல இருக்கிறன்டா சரியான பயம் தானே. கதவு, ஜன்னல் எல்லாம் ஒண்ணுமில்ல. எங்கட மாமி வீட்டுல ஒரு வருஷம் போயிருந்தேன். ஒரு வருஷம்... பகல்ல வீட்டை சமைத்து சாப்பிட்டு...இரவுல படுக்கிறதுக்கு மட்டும் எங்கட மாமி வீட்டுக்கு போறது.
.நாம எவ்வளவு காலத்துக்குத்தான் நாம மாமி வீட்டிலேயே போய்ப்போய்ப் படுக்குறது... அப்டின்னு சொல்லிட்டு ...நம்ம இனி வீட்டுல படுப்போம் அப்டின்னு சொல்லிட்டு, வீட்டுல படுக்க தொடங்கிட்டேன். எங்கட அம்மாட அம்மா..அவங்க வயசு போனவங்க தான் . அவங்கள தான் கூட்டிக்கொண்டுவந்து வெச்சு, வீட்டுல படுக்குறது. இப்ப கொஞ்சம் மாடு வெச்சிருக்கேன். ஒன்றரை மாசம் தான் பால் கறந்திட்டு இருந்த. இப்ப மழை இல்லாததுனால....புல் இல்லாததுனால பெரிசா பாலில்ல. அதனால இப்ப சரியான கஷ்டம் உதவி செய்ரத்துக்க ஒத்தரும் இல்ல. இனி அடுத்த வருஷம் மகள் முதலாம் ஆண்டு போயிடும். முதலாம் ஆண்டு போய்ச்சேர்ந்தா, இனி படிப்பு செலவும் நிறைய செலவாகும் என்று சொல்லி, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பரவாயில்ல, அம்மா நான் கார்மெண்ட்ஸ் வேலைக்குப் போறன். நீ தம்பிய பாத்துக்குவீங்களா' அப்டின்னு. அம்மா சொன்னாங்க, நீ காயப்பட்டிருக்கிற. உனக்கு கை ஏலாது. நீ அதோட போய், அங்கிருந்து என்னெண்டு வேல செய்யப் போப்போறாய் என்று சொல்ல, அம்மாட்ட சொன்னேன் அங்க கிடந்து வெயில்ல கஷ்டப்படறத்த விட, இங்க இருந்து கஷ்டப்பட்டாலும் எனக்கு பெரிசா தெரியாது. நான் போற, அப்டின்னு சொல்ல... அம்மா சொன்னாங்க, 'சரி, நீ ஆசைப்படற..வெயிலுக்கு இல்லாட்டியும் பரவாயில்ல. நான் மகனை பாத்துக்குறேன். நீ போ' அப்டின்னு சொன்னாங்க. அதோட சரின்னுட்டு போறன்.
அவங்க என்னய புடிச்சிட்டு போகாட்டி...நான் எப்படியும் ஓ எல் சோதினை எழுதியிருப்பன். ஓ எல் ரிசல்ட் தெரிஞ்சிருந்தா நான் எப்படியும் படிச்சிட்டு இருந்திருப்பேன். எப்படியும் நான் ரிஸல்ட்ஸ் இருக்குமாயிருந்தா வேலைக்கு சேர்த்திருப்பாங்க. இப்ப ஏதாயிருந்தாலும் ரிஸல்ட்ஸ் கேக்குறாங்க.
எனக்கு இப்ப 26 வயசு. நான் என்ன கஷ்டம் வந்தாலும் பரவாயில்ல அப்டின்னு சொல்லிட்டு, கார்மெண்ட்ஸ் வேலைக்குப் போயிட்டிருக்கேன். காலைல போனா, பின்னேரம் ஆறு மணிக்குத்தான் வரலாம். கஷ்டம் தான். சின்னப்பொடியன் தான் இவன எல்லாம் விட்டுட்டு போக சரியான மனவருத்தமா இருக்கு. ஏன்னு சொன்னா விட்டுட்டு போக ஏங்கிடுவான்னு சொல்லி கவலை. வருத்தமேதும் வந்திச்சுன்னா இந்த லீவெல்லாம் கொடுக்க மாட்டாங்க. காமரண்ட்ஸ்கள்ல இப்ப. ஞாயிற்றுக்கிழமைல மட்டும்தானாம் லீவாம். நான் அதெல்லாம் பரவாயில்லன்னு சொல்லித்தான் இப்ப நான் வெளிக்கிட்டுட்டேன்.
நான் இப்ப கஷ்டப்பட்ட மாதிரிக்கு, என் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது. அதுகளுக்கென்று சொல்லி நான் ஒரு எதிர்காலத்தை அமச்சு, என்னால எவ்வளவுக்கு கஷ்டப்பட்டு உழைக்க முடியுமோ உழைச்சு படிப்புச் செலவுகளுக்கு பேங்க்ல பிள்ளைகளுக்கு காசைப்போட்டு விடுவன். அதுகளிட எதிர்காலத்துக்கு காணும்தானே.
எங்களுக்கு நடந்த மாதிரிக்கு, வருகின்ற இந்த சின்னப்புள்ளைகளுக்கு இப்படியொரு இது வரக்கூடாது. இப்ப நாங்க சரியான மாதிரி கஷ்டப்பட்டுட்டோம். அதேமாதிரிக்கு அந்தப்புள்ளைங்கள் கஷ்டப்படாம, அதுகளுக்கு நல்ல படிப்பு எங்களை மாதிரிக்கு படிப்பு இடையூறெல்லாம் ஒண்டும் வராம, அதுகள் நல்லா படிச்சு... அதுகளுக்கென்று சொல்லி ஒரு எதிர்காலத்தை அமைக்கணும்.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License