Love beyond boundaries

A lady from Akkaraipattu speaks of her difficulties after losing her parents and how she overcame such obstacles in life with the help of wonderful people who aided her without giving consideration to religious or racial differences


සීමවක් නොමැති ආදරය

අක්කරේපත්තු ප්‍රදේශයේ කාන්තාවක් තම දෙමාපියන් අහිමිවීමෙන් පසුව මුහුණ දුන් දුක් කම්කොටළු හා ඇය එම බාධක, ආගම් ජාති භේද නොහඳුනන මනුස්සකමේ උදව්වෙන් ජයගත් ආකාරය පිළිබඳ කතා කරයි


அன்புக்கு ஏது எல்லை

பெற்றோரை இழந்து வறுமையும் , இன்னல்களும் நிறைந்த வாழ்வில் ஒரு பெண் சந்தித்த அற்புதமான மனிதர்கள் இனம், மதம் கடந்து அவள் மீது பொழிந்த காதலை பற்றிய அனுபவ பகிர்வு இதுவாகும்.



P.Indrakanthi
Playground road
Akkaraipatru -07

My name is P.Indrakanthi. I was born in Badulla. I have only one brother. His name is Sivapatham. My father was a teacher at a school in Badulla. My mother earlier worked in the estate. My mother looked after us lovingly until she came from work. My brother and I went to school together. My father died because of the terrorist conflict in 1980 when I was 05 years old. My mother looked after us by going to work in the estate. My mother died of stomach ailment suddenly. I was 10 years old then. We were left alone. My brother told me that he would take me and go to Ampara. I told him that no body should suffer like we did. My brother got a job at the bakery.

My brother brought food from where he worked. We both ate bun and bread. Some tamils lived near us, they were fond of us. They gave us what they cooked. They also took care of me when my brother went to work. My brother went to work at 5 a.m. I got up and did all the work at the house. My brother would bring food items from the bakery and come for lunch and we used to eat. My neighbours gave us curries.

Every Friday we went to pillayar temple. I used to pray to take me to the place where lot of tamils lived. At that time, the Sinhala and Tamil ethnic conflict started. My brother and I came to a place called Meerodai Katu and lived in muslim brothers place as refugees.

The people in the house treated me like their child. They gave me their cultural dress and changed me. I stayed there till I was 20. My brother left me there and went to work. When I was there at Meerodai Katu, I got to know Rajaletchumy Akka’s family. They adopted me. My brother told me to live with them. My brother was happy and told me it was better to live with tamil family. My brother went to work again. When he came from work, he used to bring fruits and food. In 1988, the Sinhalese shot him . I didn’t have anybody then.

When the trouble started at Meerodu Katai, Rajaluxmy family moved to Akkaripatru. They looked after me carefully like family. I looked after their family and took their children to school. I was 23 then, all in the family talked among themselves that I had to be married to some one. My adopted mother told me that its time for me to get married. So I was married to a person named Visvalingam. I lived happily with my husband.

When the trouble started in 1990, we lived for sometime in Thirukovil. We heard that all was well at our village and came back. We rented our house and moved in. I gave birth to a girl in 1991. My husband was in difficult position when she was born. He did small handiwork and made a living.
After four years, I gave birth to a boy. After his birth my husband’s work went very well.

The landlord of the house asked us to move. So my husband built a small house in his land . My adopted family didn’t even give a land or anything. I had worked for them for so many years but I was very happy with my husband. I got a boy again after 5 years.

All my three children went to school and now they have grown. My daughter got married after a few years. We brought up our family without any economical hardships. Our life goes on happily.


පී’ඉන්ද්‍රාකාන්ති"
කී්‍රඩාපිටිය පාර"
අක්කරෙයිපත්තු - 07

මගේ නම පී’ඉන්ද්‍රාකාන්ති මම ඉපදුණේ බදුල්ලෙ’ මට සහෝදරයෙක් විතරයි’ ඔහුගෙ නම සිවපාදමි’ මගේ තාත්තා බදුල්ලෙ පාසලක ගුරුවරයෙකු ලෙස රාජකාරි කළා’ අමිමා වත්තෙ වැඩ කරගෙන සිිටියා’ තාත්තා මාවයි අය්යවයි සුරතල් කරලා ආදරයෙන් හැදුවා’ මෙසේ සිටියදී අය්යයි මමයි එකට පාසල් ගිහින් එනවා’ මට වයස අවුඃ05ක් විතර ඇති’ තාත්තා ම්ය ගියා’ 1980 වර්ෂයේ ඇතිවූ ත්‍රස්තවාදි කලබල හේතුවෙන් තමයි තාත්ත ම්ය ගියේ’ ඊට පස්සෙ අපේ අමිමා වත්තෙ වැඩ කරලා අපිව හැදුවා’ මෙසේ ජීවත් වෙම්න් සිටියදී අමිමත් හිටිහැටියේ බඩෙි අමාරුවක් හැදිලා ම්ය ගියා’ ඒ වෙලාවෙ මමයි අය්යයි තනිවුණා’ එතකොට මට වයස අවුඃ10ක් විතර ඇති’ අය්යා කීවා නංගි අපි දෙදෙනා අමිපාරට පිටත්වෙලා යමු’ එහෙ ගිහිල්ලා මම ඔයාට හමිබකරලා දීලා ඔයාට මම හොඳින් සලකනවා කියා’ එවිට මම කිවිවා අපි දෙදෙනා විඳින දුක වෙන කිසිම කෙනෙකුට විඳින්න සිද්ධවෙන්න එපා කියලා ඇඬුවා’ එහෙ ගිහිල්ලා අය්යා බෙිකරියක වැඩ කළා’
මගේ අය්යා බෙිකරියේ ගින්දර මැද්දෙ වැඩ කරලා මට කන්න අරන් එනවා’ එහෙන් දෙන පාන්" බනිස් මමයි මගේ අය්යයි කනවා’ එහෙ මමයි අය්යයි නැවතිලා සිටි ගෙදර අසල දෙමළ අය පදිංචිවෙලා සිටියා’ ඒ අය මා සමග හරි ආදරෙන් සිටියා’ ඒ අය අපට උයලා කන්න දෙනවා’ ඒ අයගෙ ගෙවල්වල මොනවා හැදුවත් මටයි අය්යටයි ඉතිරි කරලා මට අඬගහලා දෙනවා’ අය්යා වැඩට ගියාට පස්සෙ මට කථා කරලා දැනමුතුකමි කියනවා’

අය්යා පාන්දර 5’00 ට වැඩට යනවා’ ඊට පස්සෙ මම නැගිටලා ගෙදර වැඩ ටික කරනවා’ ඊට පස්සෙ අය්යා දවල් කෑමට එනවා’ එනවිට බෙිකරියෙ තිබෙන කෑම වර්ග ගේනවා’ අපි දෙදෙනා ඒවා කනවා’ දවල්ට අල්ලපු ගෙදර අය මට කථා කරලා මාzපිණි දෙනවා’
මෙසේ සිටියදී මමයි අය්යයි සෑම සිකුරාදා දවසකම එහි තිබෙන පුල්ලෙයාරු කෝවිලට යනවා’ එහෙ ගිහිල්ලා දෙවියන්ගෙන් වරමි ඉල්ලනවා’ මට දෙමළ ජනතාව වැඞ් දෙනෙකු ඉන්න තැන ගෙදරකට යන්න ලැබෙන්න ඔින කියා දෙවියන්ගෙන් ඉල්ලනවා’ මෙසේ ජීවත් වෙම්න් සිටියදී එහි සිංහල දෙමළ කලබල ඇති වුණා’ ඒ නිසා මමයි අය්යයි මීරෝඩෙයිකටිටු කියන තැනකට ආවා’ එහෙ ඇවිල්ලා මුස්ලිමි සහෝදරයෙකුගෙ ගෙදරක සරණාගතයො ලෙස සිටියා’
ඒ මුස්ලිමි සහෝදරයො මාව දැක්ක ගමන් ඒගොල්ලන්ගේම දරුවෙකු ලෙස බලන්න පටන්ගත්තා’ එහිදී ඒ අයගෙ දරුවෙකුට වගේ ඇඳුමි අන්දලා ඒ අයගේ සංස්කෘතියට අනුව මාව වෙනස් කළා’ අවුරුදු 20 දක්වා මම එහෙ නැවැතිලා සිටියා’ මාව එහෙ නවත්තලා අයියා නැවතත් අමිපාරට ටික දවසකට පස්සෙ වැඩට ගියා’
එහි මීරෝඩෙයිකටිටු ප්‍රදේශයේ සිටියදී තමයි මට රාජලCෂම් අක්කාගේ පවුල සමග ආශ්‍රයක් ඇති වුණෙ’ ඒ මුස්ලිමි සහෝදරයගෙ ගෙදර අසල තමයි රාජලCෂම් අක්කගේ පවුල සිටියේ’ එහි ගහිල්ලා ඒ ගොල්ලන් සමග ආශ්‍රය කරන්න පටන් ගත්තට පසු ඒ ගොල්ලන් මාව දරුකමට හදන්න ගත්තා’ අමිපාරට වැඩට ගිහින් ආපු අය්යා කීවා කමක් නැහැ’ ඔයා මීට පස්සෙ රාජලCෂම් අක්කගේ ගෙදරම ඉන්න පුලූවන් කියා’


ඒ ගැන අහලා අය්යා ගොඩාක් සතුටු වුණා’ දෙවියන් අපිව අතහැරියෙ නැහැ නංගි කියලා ගොඩාක් සතුටුවුණා’ මුස්ලිමි සහෝදරයාගෙ ගෙදර ඉන්නවාට වඩා අපේ දෙමළ ජාතිකයෙකුගේ ගෙදරක සිටිම ආරCෂාකාරියි කියා කීවා’ අය්යා නැවතත් වැඩට ගියා’ වැඩ ඇරිලා එනවිට බොහොම සතුටින් මට පළතුරුයි" කෑම වර්ගයි අරන් එනවා’ මෙසේ සිටියදී මගේ අය්යා හොඩාක් හමිබ කරනවා දැකලා සිංහල අය ඔහුට වෙඞ් තියලා මරා දැමුවා’ ඒ ම්නීමරුවො මාවයි අය්යවයි වෙන්කළා’ ඒ වෙලාවෙ හිතුව මම අනාථවුණ කියලා’ එහෙම හිතාගෙන තමයි මම ජීවත්වුණේ’
මීරෝඩෙයිකටිටෙයි ප්‍රදේශයේ කලබල ඇතිවූ පසු රාජලCෂම් අක්කාගේ පවුල මාවත් එක්කගෙන අක්කරෙයිපත්තු වලට ආවා’ එහාට ආවට පස්සෙ රාජලCෂම් අක්කාගේ පවුලේ අය සමග මාවත් බාල සහෝදරියක් ලෙස අක්කාගේ අමිමා හෝ වෙිවා සහෝදර සහොදරියන් හෝ වෙිවා මට හොඳට සලකනවා’ අක්කගේ අක්කලා අය්යලාගේ දරුවන් පවා මට ඇන්ටි" නැන්දා කියා කථා කරනවා’ මෙි විදියට රාජලCෂම් අක්කා කියන හැම වැඩක්ම මම නොපිරිහෙලා ඉටු කරනවා’ මෙි නිසා මා ගැන පුදුම ආදරයක් තිබුණ ඒගොල්ලන්ට’ ඒගොල්ලන්ගෙ අක්කලාගේ දරුවන්ව පාසලට කැටුව යාමෙි සිට ඒගොල්ලන්ගෙ සෑම වැඩක්ම මම කරනවා’
මෙසේ සිටියදී රාජලCෂම් අක්කාගේ ගෙදරට ඒගොල්ලන්ගෙ යහzවන් ඇවිල්ලා කථා කරලා යනවා’ ඒ විතරක් නොවෙයි ඒ අය ගෙවල් හදන වැඩ වලටත් එනවා’ එසේ සිටියදී මම විවාහ වයසට එළඹ්ලා කියා ඒ අය අතර කථා වෙනවා’ ඊට පස්සෙ මාව හදාගත්තු අමිමා මා ළඟට ඇවිල්ලා කිවිවා ඔයාට විවාහයක්

හරි ගිහිල්ලා තිබෙනවා ඉන්දිරා කියා’ මමත් කිවිවා හරි හොඳ තැනක් නමි සොයලා බලලා කරලා දෙන්න කියා’ 1989 දී විතර මටත් වයස අවුරුදු 23ක් වෙනවා’ හොයලා බලලා" මට මගේ අය්යා වෙනුවට සහෝදර සහෝදරියන් හැටියට ඉඳලා විවාහය කර දුන්නා’ මා විවාහ කරගත්තෙ විශ්වලිංගමි නැමැති පුද්ගලයෙකුව’ විවාහ වෙලා සතුටින් ජීවත්වුණා’
එසේ ජීවත්වෙම්න් සිටියදී 1990 කලබල කාලයේදී අපි හැමෝම ටික කලක් තිරුක්කෝවිල් ප්‍රදේශයට ගොස් සිටියා’ ටික කලකට පසු ආරංචියක් ලැබුණා අපේ ප්‍රදේශයේ කලබල ඉවරයි කියා’ ඊට පස්සෙ අපි අපේ ගෙවල් වලට ගියා’ එහෙ ඇවිල්ලා ටික දවසකින් මමයි මගේ ස්වාම් පුරුෂයයි ගෙයක් කුලියට අරගෙන වෙනම පදිංචියට ගියා’ කුලී ගෙදර සිටියදී 1991 වර්ෂයේ මට දුවෙක් ඉපදුණා’ ඒ දරුවා ඉපදෙන විට මගේ ස්වාම් පුරුෂයාට රැකියාව ටිකක් අමරුවුණා’ මොනවා කරන්නද කුඩා කර්මාන්ත කරලා ආර්ථීකය පිරිමහගෙන හිටියා’ මෙසේ සිටියදී දුව ඉපදිලා අවුරුදු 04 කට පසු මට පුතෙක් ඉපදුණා’ ඒ දරුවා ඉපදුණාට පසු මගේ ස්වාම් පුරුෂයාට රැකියාව හොඳට ගියා’
එසේ ජීවත්වූ කාලයේ කුලී නිවසින් අපට ඉවත්වෙන්න කීවා’ පසුව එතනින් ඉවත්වෙලා මගේ ස්වාම් පුරුෂයාගෙ ඉඩමෙ පොඞ් නිවසක් හදාගෙන ජීවත්වුණා’ රාජලCෂම් අක්කාගේ ගෙදර එචිචර කාලයක් ඉඳලත්" ඒගොල්ලන්ගෙ ගෙදර වැඩ කරලත් මට පොඞ් ඉඩමි කෑල්ලක්වත් දුන්නෙ නැහැ’ මගේ ස්වාම් පුරුෂයාගේ පැත්තෙන් මම වසනාවන්තයි’




කියා සිතාගෙන සතුටින් ජීවත්වුණා’ අවුරුදු කිහිපයකට පසු එනමි අවුරුදු 05 කට පසු මට තවත් පිරිම් දරුවෙකු ඉපදුණා’ ඒ දරුවා ඉපදුණාට පස්සෙ අපි තවත් සතුටුවුණා’
ඉන්පසු දරුවො 03 දෙනාම ලොකු මහත්වෙලා පාසල් ගොස් එනවිට තුන්දෙනාම ලොකුයි’ හරි සන්තෝසයි’
ඉන්පසු වසර කිහිපයකට පසු මගේ දුවට විවාහයක් කරදීලා සතුටින් සිටියා’ දැන් දුවත් සතුටින් ජීවත් වෙනවා’ මගේ ස්වාම් පුරුෂයයි" මමයි දරු දෙදෙනා සමග කිසිදු ආර්ථීක ප්‍රශ්නයකින් තොරව ඉතා සතුටින් ජීවත් වෙනවා කිය ා සතුටින් කියා සිටිනවා’









பெ. இந்திரகாந்தி
விளையாட்டு மைதான வீதி
அக்கரைப்பற்று 7

எனது பெயர் பெ.இந்திரகாந்தி நான் பதுளையை பிறப்பிடமாகக் கொண்டேன். எனக்கு ஒரு சகோதரன் மட்டும்தான் அவரின் பெயர் சிவபாதம் ஆகும். எனது அப்பா பதுளையிலுள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியராக கடமை புரிந்தார். அம்மா தோட்டத்தில் தொழில் புரிந்து வந்தார். எனது அப்பா என்னையும் எனது அண்ணாவையும் செல்லமாக அரவணைத்து வளர்ந்து வந்தார். இவ்வாறிருக்கையில் நானும் அண்ணாவும் பாடசாலைக்குஒன்றாகச் சென்றுவந்தோம். எனக்கு 65 வயதிருக்கும் எனது அப்பா இறந்துவிட்டார். ஏனென்றால் 1980ம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாதப் பிரச்சினையில் இறந்து விட்டார். அதன் பிறகு எனது அம்மா தோட்டத் தொழில் செய்து எங்களை வளர்த்து வந்தார். அவ்வாறு வாழ்ந்து வந்த காலகட்டத்தில் திடீரென்று எனது அம்மா வயிற்று வலிக்கோளாறினால் எனது அம்மாவும் இறந்துவிட்டார். அப்போதும் நானும் எனது அண்ணாவும் தனிமை அடைந்து விட்டோம். எனவே அந்த நேரம் எனக்கு வயது 10 இருக்கும். அண்ணா சொன்னார் தங்கச்சி நாம் இருவரும் அம்பாறைக்குப் புறப்பட்டுச் செல்வோம். அங்கு சென்று நான் உங்களுக்கு உழைத்து சம்பாதித்து உங்களைக் காப்பாற்றுகிறேன் என்று கூறினார். அப்போது நான் சொன்னேன். அண்ணா நாம் இருவரும் படும் கஷ்டம் எந்த மனிதனும் பெறக் கூடாது என்று சொல்லி அழுதேன். அங்கு சென்று அண்ணா ஒருபேக்கரியில் வேலை புரிந்து வந்தார்.

எனது அண்ணா பேக்கரியில் நெருப்பு வெக்கையில் வேலை செய்து எனக்கு சாப்பிடுவதற்கு எடுத்து வருவார். அங்கு கொடுக்கும் பாண் மற்றும் பணிஸ் என்பவற்றை நானும் எனது அண்ணாவும் சாப்பிடுவோம். அங்கு நானும் அண்ணாவும் தங்கியிருந்த வீட்டுப் பக்கத்தில் தமிழர்கள் குடியிருந்தார்கள். அவர்களுக்கு என்னோடு ரொம்ப விருப்பமாக இருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு சமைத்து சாப்பாடு தருவார்கள். அவர்கள் வீட்டில் என்ன செய்தாலும் எனக்கும் அண்ணாவுக்கும் வைத்து என்னை கூப்பிட்டுத் தருவார்கள். அண்ணா வேலைக்கு சென்ற பிறகு என்னை கூப்பிட்டு புத்திமதியும் கூறுவார்கள்.

அண்ணா காலையில் 5 மணிக்கு வேலைக்குச் சென்று விடுவார்கள். அதன் பிறகு நான் எழும்பி வீட்டு வேலைகளை செய்து முடிப்பேன். பின்னர் அண்ணா மதியநேரம் சாப்பாட்டுக்கு வருவார்கள். வரும்போது பேக்கரியில் இருக்கும் உணவு வகைகளை கொண்டு வந்த பின்னர் நாங்கள் சாப்பிடுவோம் மதியம் பக்கத்து வீட்டவர்கள் கூப்பிட்டு கறி வகைகளை தருவார்கள்.

இவ்வாறிருக்கையில் நானும் அண்ணாவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அங்குள்ள பிள்ளையார் கோயிலுக்கு செல்வோம். அங்கு சென்று நான் சாமிக்கிட்ட வரம் கேட்பேன். என்னை தமிழர்கள் நிறைய பேர் உள்ள வீட்டிற்கு அருகாமையில் என்னை கொண்டு சென்று விடு கடவுளே என சாமிக்கிட்ட வரம் கேட்பேன். இவ்வாறு வாழ்ந்து வந்த போது அங்கு சிங்களத் தமிழர் கலவரம் ஏற்படலாயிற்று. ஆகவே அங்கு நானும் எனது அண்ணாவும் மீரோடைக்கட்டு எனும் இடத்திற்கு அழைத்து வந்தார். அங்கு வந்து ஒரு முஸ்லிம் சகோதரர்கள் வீட்டில் வந்து அகதிகளாக இருந்தோம்.

அந்த முஸ்லிம் சகோதரரர்கள் என்னை கண்டதும் அவர்களில் ஒரு பிள்ளையாக பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அங்கு அவர்களில் மக்களைப் போல் எனக்கு ஆடை அணிவித்து அவர்களின் கலாசாரத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துவிட்டார்கள். அங்கிருந்தவாறே நான் 20 வயது வரைக்கும் தங்கியிருந்தேன். எனது அண்ணா என்னை அங்கு விட்டுட்டு மீண்டும் அம்பாறைக்கு தொழிலுக்கு சற்று நாட்களின் பின்னர் வேலைக்கு சேர்த்து விட்டார்கள்.

அங்கு அதாவது மீரோடைக் கட்டையில் இருந்தவாறு தான் ராஜலெட்சுமி அக்கா குடும்பம் எனக்கு பழக்கம் ஆகிவிட்டார்கள். அந்த முஸ்லிம் சகோதரர்களின் வீட்டிற்கு அருகாமையில் தான் ராஜலெட்சுமி அக்கா குடும்பம் வசித்துவந்தார்கள். அங்கே சென்று அவர்களை பழக்கம் பிடித்து பின்னர் அவர்கள் என்னை தத்தெடுத்தார்கள். அம்பாறைக்கு வேலைக்கு வந்த அண்ணா கூறினார் பரவாயில்லை நீ ராஜலெட்சமி அக்காவின் வீட்டில் இனிமேல் தங்கி வாழலாம் என்றார்.

இதைப் பார்த்த அண்ணா மிகவும் சந்தோசமடைந்தார்கள். கடவுள் எம்மை கைவிடவில்லை தங்கச்சி என்றுகூறி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அண்ணா கூறினார் முஸ்லிம் சகோதரர்களின் வீட்டில் தங்குவதைவிட எமது தமிழர்களின் வீட்டில் வாழ்வது தான் பாதுகாப்பாக இருக்கும் எனக் கூறினார். அண்ணா மீண்டும் வேலைக்குச் செல்ல புறப்பட்டார்கள். வேலை முடிந்து வரும் போது மிகவும் சந்தோசத்தின் மத்தியில் அண்ணா எனக்கு நிறைய பழ வகைகள் உணவு வகைகள் என்பன வாங்கி வருவார்கள். அவ்வாறிருக்கையில் எனது அண்ணா நிறைய சம்பாதிப்பதைப் பார்த்து சிங்களவர் அண்ணாவை 1988ம் ஆண்டு சுட்டுக் கொன்று விட்டார்கள். அந்தக் கொலைகாரன் தான் என்னையும் அண்ணாவையும் பிரித்து விட்டார்கள். அப்போது நான் எண்ணினேன். நான் அனாதையாகிவிட்டேன் என எண்ணி வாழ்ந்து வந்தேன்.

ராஜலெட்சுமி அக்கா குடும்பத்தினர் மீரோடைக்கட்டையில் பிரச்சினையில் ஏற்பட்ட பின்னர் எல்லோரும் அக்கறைப்பற்றுக்கு வந்துவிட்டோம். அங்கு வந்ததும் ராஜலெட்சுமி அக்காவின் குடும்பத்தவர்களோடு என்னையும் கடைசி மகளான ராஜலெட்சுமி அக்காவின் அம்மாவோ சரி அவர்களின் சகோதரர்களோ சரி என்னை பார்ப்பார்கள். ராஜலெட்சுமி அக்காவின் அக்கா, அண்ணாவின் பிள்ளைகள் கூட என்னை அன்ரி அத்தை எனக் கூப்பிட்டு அரவணைப்பார்கள். இவ்வாறு ராஜலெட்சமி அக்கா சொல்லும் வேலைகளை நான் தவறாமல் செய்து வருவேன். இவர்கள் என் மீது கடுமையான பாசம் கொண்டார்கள். அவர்களின் அக்காமார்களின் பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டி செல்வதிலிருந்து அவர்களின் அனைத்து வேலையையும் செய்து வருவேன்.

இவ்வாறு இருக்கும் போது ராஜலெட்சுமி அக்காவின் வீட்டிற்கு அவர்கள் நண்பர்கள் வந்து கதை விட்டுச் செல்வார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களின் வீடுகட்டும் வேலைகளுக்கும் வருவார்கள். அவ்வாறிருக்கையில் எனக்கு கல்யாணம் கட்டும் வயது வந்துவிட்டது என அவர்களுக்குள் கதைத்து முணுமுணுப்பார்கள். அப்போது என்னிடம் எனது வளர்ப்புத்தாய் வந்து கேட்டார். உனக்கு கல்யாணம் ஒன்று ஒரு வழியாக வந்துள்ளது இந்திரா என்று கூறினார்கள். நானும் சரி நல்ல கல்யாணம் என்றால் பார்த்து விசாரித்து முடித்து வையுங்கள் எனக் கூறினேன். அப்போது 1989ம் ஆண்டு இருக்கும் எனக்கும் வயது 23 ஆகிவிட்டது. சரி என்று விசாரித்து எனக்கு எனது அண்ணனுக்கு பதிலாக சகோதரத்துவத்துடன் சகோதரம் என எண்ணி எல்லோரும் சேர்ந்து எனக்கு விவாகத் திருமணம் செய்து முடித்து வைத்தார்கள். அப்போது நான் விஸ்வலிங்கம் என்பவைரை திருமணம் முடித்து வந்தேன். திருமணம் முடிந்து சந்தோசமாக வாழ்ந்து வந்தோம்.

அப்போது வாழ்ந்த வசந்த காலத்தில் 1990ம் ஆண்டு பிரச்சினை ஏற்பட்ட காலமாகவே இருந்து அப்போது நாங்கள் எல்லோரும் சிறிது காலம் திருக்கோயில் எனும் இடத்தில் வாழ்ந்து வந்தோம். பின்னர் கொஞ்சக் காலமாக கேள்விபட்டோம். பிரச்சினை எமது பிரதேசத்தில் நிறைவடைந்தது என்று அறிந்ததும் நாங்கள் எல்லோரும் திரும்பி எங்களின் வீடுகளுக்கு வந்து சேர்ந்தோம். அப்போது நாங்கள் வந்து சில நாட்களாக நானும் எனது கணவரும் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து சென்றுவிட்டோம். வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த போது 1991ம் ஆண்டு எனக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அவர் பிறக்கும் போது எனது கணவருக்கு தொழில் கடும் கஷ்டமாக இருந்தது. என்ன செய்வது சிறிய கைத்தொழில் செய்து பொருளாதாரத்தைப் போக்கிக் கொண்டிருந்தோம். அவ்வாறிருக்கையில் பெண் குழந்தை பிறந்து 4 வருடங்களின் பின்னர் எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிற்நதது. அக்குழந்தை பிறந்ததும் எனது கணவருக்கு ஏதோ தொழில் நல்ல முறையில் சென்றது.

அவ்வாறு வாழ்ந்த வந்த காலத்தில் வாடகை வீட்டில் எங்களை எழும்படி கூறினார்கள். பின்னர் எழுந்து எனது கணவரின் வளவில் வீடு ஒன்று சிறியதாக கட்டி அங்கு வாழ்ந்து வந்தோம். ராஜலெட்சுமி அக்காவின் வீட்டில் அவ்வளவு காலமாக வாழ்ந்து அவர்களுக்கு வேலை புரிந்ததற்காக ஒரு அளவு எல்லை வளவு கூட எனக்குத் தரவில்லை. எனதுகணவன் மூலம் நான் கொடுத்து வைத்தவன் என்று எண்ணி சந்தோசமாக வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் போது சில வருடங்களாக அதாவது 5 வருடங்களின் பின் எனக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவ்வாறு பிறந்ததன் பின்னர் நாங்கள் மீண்டும் சந்தோசம் அடைந்தோம்.

பின்னர்எனது 3 பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களாகி பாடசாலைக்குச் சென்று வந்த போது இப்போது 3 பேரும் வளர்ந்து விட்டார்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

அதன் பிறகு சில வருடங்களின் பின்னர் எனது மகளுக்கு திருமணம் முடித்துக் கொடுத்து விட்டு சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். இப்போது அவளும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது எனது கணவரும் நானும் எனது பிள்ளையும் எந்தவித பொருளாதாரப் பிரச்சினையுமின்றியும் மிகவும் சந்தோசமான முறையில் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கின்றோம். என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License