In the midst of crossfire

A story of lost family members due to a cross-fire between the military and the LTTE


වෙඩි හුවමාරුවක් අතරමැද

හමුදාවත්, එල්. ටී. ටී. ඊ සංවිධානයේ වෙඩි හුවමාරුවකට අතරමැදිවීමෙන් පවුලේ සාමජිකයන් අහිමිවීම පිළිබඳ කතාවකි


துப்பாக்கி சன்னங்களுக்கு நடுவே

இலங்கை அரச படையினருக்கும் விடுதலை புலிகளுக்குமிடையே நடந்த சண்டையொன்றில் பரிதாபகரமாக உயிர்களை இழந்த குடும்பமொன்றில் கதை.



CMP-MN-MUS-ARI-01
Name – Frances Peris Kannikainathan Peiris
Age- 37 years
Religion –Roman Catholic
Place- Mutharipputhurai
Gender- Male

Present State- Born in mutharipputhurai, I got married to Anitha of Katkidanthakulam on 22nd feb 2009 and living with a son and daughter.
Self history- My father’s name is Frances Peris, My mother’s name is Anthonia Lambert (Kamala). We were 6 siblings of whom 5 are boys and one girl. Paternal grandfather’s name is Coorey Das, he had 12 children and the eldest child was my father. His house was in front of the ‘kaanikkai matha’ church. My maternal grandfather’s name is Sinnappu. He had 5 children and my mother was the second child. My mother owns 2 ½ acres of dowry land in konangkulam . during president Premadasa’s time they built 20 houses through the housing scheme project of which ours was one by the beach. Because of this my mother and brother received houses through the Indian housing scheme project.
Now 4 of us are married and only brother is living with my mother. The house by the beach was registered under my father’s name; since my brother who is a government servant was to receive a subsidy we all signed on a blank sheet and transferred it to his name. This has become an issue in the family claiming the property rights of everyone to just one person. A united family has now become helpless. What is the reason for this? Our father who died. If my father and younger brother were alive today, would we have faced such situation? It makes us recall the moment we lost them both.
15th may 2000, Monday morning 7 O’clock the srilankan army rounded up and created a fear amongst the villagers.The reason behind the round up was that a man with weapons had entered our village from sillavathurai. Around 50 military personals attacked, and we were asked to go to the temple. The brother who was immediately younger to me got sick so my mother took him to church. My father went to the shores. My other siblings and I were dressed up for school, my mother and brother came back screaming and tensed. My father also rushed back home due to the noise. We all ran towards the temple. The army was chasing the liberation tigers, and two families got stuck between them. My father got caught during the shooting between them and got killed. While running for shelter we saw our father fall unconscious. I took my father to the lap; he didn’t speak a single word. Among the shed bullets we were in unbearable sorrow and cried unstoppably. We couldn’t bear the fact that our father wouldn’t return. We cried out throwing ourselves on to his dead body. When my father died one of the LTTE members threw himself on to our father and pretended to cry and escaped. The military that lost track of him, rounded us up. They dragged our innocent elder brother and kicked him with the boots , thrashed and beat him up. We left our father lying there and begged at the feet of each military personal for our brother. One side we were mourning the loss of our father and on the other side we were saddened by the injustice caused by them. We felt like we were orphaned among them. Unable to bear the death of our father after a week my younger brother passed away. Our family is shattered over the irreplaceable loss.
Looking back at my wife, she too lost her father when she was six years old and has her mother who lives with her 2 sisters and 2 brothers. Mother is sickly and taking treatment for her illness. We wonder how to locate my wife’s paternal and maternal relatives and lands.
My wife’s maternal grandfather’s name is ‘Marisaan Thambiappu’ and her mother’s name is ‘Punithseeli’, married name is Selvaratnam. They lived is ‘thiruketheeswaram, Nagathalvu, Mannar’.
In the small village Nagathalvu, they held high positions in church administrations. We have heard people tell that they are from ‘Marisaan Thambimuthu generation’. They also owned a lot of Land. I have heard that my wife’s mother’s great grandmother laid the stone for ‘Saint Thomas church’. Marisaan thambiappu got married to Mariamma from Kalmunai, Batticaloa. Land details Marisaan Thambiappu owned.
1. Vellikamam -15 acres
2. Narivillikulam -1acre
3. Kallanagathalvu -3 acre
4. Neelasanai – ½ acre
5. Nagathalvu – 2 acre
6. Sirunavatkulam – 4 acre
7. Chettiarkandal -1acre
8. Vellaiyanpitty LT land – 2 acre
9. Oomayankandal LT land – 2acre

All-inclusive he owned 30 acres of land. Her father had 8 children





නම : ප්‍රාන්සිස් පීරිස් කානික්යෙයිනාදන් පීරිස්

වයස : 37

ආගම : රෝමානු කතෝලික

ස්ථානය : මුත්තරිප්පුයිතුරෙයි

ස්ත්‍රී-පුරුෂභාවය : පිරිමි

වත්මන් තත්ත්වය : මගේ උපන් ප්‍රදේශය මුත්තරිප්පුයිතුරෙයි වන අතර මා 2009 පෙබරවාරි 22 වෙනි දින කට්කිඩන්දකුලම් ප්‍රදේශයේ පදිංචිව සිටි ඇන්ටනීටා සමඟ විවාහ වූ හා ප්‍රහාර එල්ල කළා. මට පිරිමි දරුවෙක් හා ගැහැණු දරුවෙක් වශයෙන් දරුවන් දෙදෙනෙක් සිටිනවා.

මගේ ඉතිහාසය : මගේ පියාගේ නම ප්‍රාන්සිස් පීරිස්, මවගේ නම ඇන්තෝනියා ලැම්බට් (කමලා). අපගේ දෙමව්පියන්ට පිරිමි දරුවන් 5 දෙනෙක් හා ගැහැණු දරුවෙක් සිටියා.

මගේ පියාගේ පියාගේ නම ක්රෝරස් පීරීස්. ඔහු දරුවන් 12 දෙනෙකුගේ පියෙක් වූ අතර, මගේ පියා එම දරුවන්ගෙන් වැඩිමහල් පිරිමි දරුවා විය. ඔවුන්ගේ නිවස පිහිටා සිටියේ කානික්කෙයිමාද පල්ලියට ඉදිරිපසය.

මාගේ මවගේ පියාගේ නම සින්නප්පු ලැම්බට්. ඔහුට දරුවන් 5 දෙනෙකි. මගේ මව 2 වෙනි දරුවා විය. මගේ මවගේ පියා මවට ලබාදුන් අක්කර 2 1/2 ක දෑවැදි ඉඩම කෝනම්කුලම් යන ස්ථානයේ තිබෙනවා. ප්‍රේමදාස ජනාධිපතිවරයාගේ පාලන සමයේදී නිවාස 20 යෝජනා ක්‍රමය ක්‍රියාත්මක විය. එයින් අපටත් නිවසක් ලැබුනා. අපගේ නිවස මුහුදට යාබදව පිහිටා තිබෙනවා. එම නිසා දැනට නැවතත් මවට හා බාල සහෝදරයාට ඉන්දියානු නිවාස යෝජනා ක්‍රමය යටතේ නිවසක් ලැබී තිබෙනවා.

දැනට අපගේ පවුලේ සහෝදර සහෝදරියන් 4 දෙනෙක් විවාහවී සිටිති. බාල සොහොයුරා පමණක් මව සමඟ සිටිනවා. මුහුදු වෙරළේ ලබා දුන් නිවස මගේ පියාගේ නමට ලියාපදිංචි වී තිබුණා. මගේ මල්ලී රජයේ සේවකයෙක්. ඔහුට එම නිවස ලබාදෙන බවත්, අන් අයට මුදල් ලබාදෙන බවත් පවසා හිස් කඩදාසි කෑල්ලක සියලූ දෙනාගෙම අත්සන් ලබා ගත්තා. දැනට එම නිවස ඔහුගේ නමින් තිබේ. පසුව අප රවටා හොරෙන් එම ඔප්පුව ලියාගෙන ඇත. එම නිසා අප අතර යම් විරසකයක් ඇති වී තිබුණා. සියලූ දෙනාටම අයිති දේපලක් එක පුද්ගලයෙකුට පමණක් ලබා දෙන්නේ කෙසේද? දැඩි සෙනෙහසින් ජීවත් වූ අපේ පවුල අද බෙදී වෙන්වී දුක්ඛිත තත්ත්වයක ජීවත් වෙනවා. මෙයට හේතුව කුමක්ද? අපගෙන් වෙන්වූ අපගේ පියා ජීවතුන් අතර සිටී නම් මෙවැනි තත්ත්වයක් ඇතිවිය හැකිද?

වසර 2000 මැයි මස 15 වෙනි දින සඳුදා උදේ 7 ට පමණ ශ්‍රී ලංකා හමුදාව අපේ ගම වටකර ප්‍රහාරයක් එල්ල කළා. ගමේ ජීවත්වුණු සියලූම ජනතාව මෙම තත්ත්වය නිසා දැඩි භීතියට පත්වුනා. සිලාවත්තුරේ ප්‍රදේශයේ සිට යතුරු පැදියකින් තුවක්කුවක් සහිත ගමට පැමිණි පුද්ගලයෙක් ලූහුබැඳ පැමිණි හමුදාව වෙඩි ප්‍රහාර එල්ල කළා. හමුදා භටයින් 50 දෙනෙකුට වැඩි පිරිසක් මෙම ප්‍රහාරයට සම්බන්ධ විය. ගමට පිවිසි හමුදාව මහජනතාව පල්ලිය තුළට යා යුතු බව අණ කළා. මගේ බාල සහෝදරයෙක් අසනීප තත්ත්වයෙන් පසු වු හෙයින් මව සහ ඔහු බස් රථයෙන් පිටත්වී ගියා. පියා මුහුදු වෙරළට ගොස් සිටියා. මා, වැඩිමල් සහෝදරයා, බාල සහෝදරිය හා බාල සහෝදරයා යන සියලූ දෙනාම පාසල් යාමට සුදානම් වී නිල ඇඳුමෙන් සිටියෙමු. මන්නාරම නගරයට යාමට ගිය මව හා බාල සහෝදරයා බියට පත්වී නිවස කරා දිව ආහ. මුහුදු වෙරළට ගිය පියාද ශබ්දය අසා වහා නිවසට දිව ආවේය. අප සියලූ දෙනාම එක්වී පල්ලිය දෙසට දිව ගියෙමු. එවිට විමුක්ති කොටි සංවිධානයේ සාමාජිකයෙක් ලූහුබැඳිමින් හමුදාව එම ස්ථානයට පැමිණියා. ඔවුන් මැදට පවුල් 2 කට අයත් අප අසු වුනෙමු. එතන සිදුවූ වෙඩි තැබීමකින් මගේ පියා ජීවිතක්ෂයට පත් වුනා. ඉදිරියට දිව ගිය අප හැරී බලන විට පියා බිම වැටී සිටියා. මා පියාව මගේ උකුලේ තබා ගත්තෙමි. ඔහු වචනයක් හෝ කතා නොකළේය. තුවක්කු උණ්ඩ ඉදිරියේ සිහිවිකල් වූ පුද්ගලයන් මෙන් දුකින් හා වේදනාවෙන් හඬා වැළපුනෙමු. පියා නැවත නොපැමිණේද කියා දුක් වුනෙමු. ඔහුගේ මෘතදේහයේ වැටී හඬා වැළපුනෙමු.

පියා මිය ගිය පසු හමුදාව විසින් ලූහුබදින ලද කොටි සංවිධානයේ සාමාජිකයා පියාගේ ඇඟ උඩ වැටී හඬා වැළපෙන මෙන් රඟපෑමක් රඟ දක්වා ස්ථානයෙන් බේරී ගියා. ඔහුට පලා යාමට ඉඩදුන් හමුදාව අපව වටකර ගත්තා. අහිංසකයෙකු වු මගේ වැඩිමහල් සහෝදරයා ඇදගෙන ගොස් 50 දෙනෙකුට වැඩි හමුදා භටයන් මැද ඔහු තබා ආයුධ වලින් හා සපත්තු කකුල්වලින් ඔහුව පාගා, පයින් ගසා ප්‍රහාර එල්ල කළා. පියාගේ මිනිය එම ස්ථානය මත තබා අපේ වැඩිමහල් සහෝදරයා බේරා ගැනීම සඳහා එක් එක් හමුදා භටයන් ඉදිරියේ ඔවුන්ට දණ ගසා හඬා වැළපුනෙමු. එක පැත්තකින් පියා අහිමි වූ වේදනාව, තව පැත්තකින් අපගේ පවුලට මෙම හමුදා භටයන්ගෙන් සිදුවූ අසාධාරණය ගැන ඇතිවූ වේදනාව මෙම තත්ත්වය තුළ අප කිසිම හවුහරණයක් නොමැති අනාථයන් බවට පත් වී සිටියෙමු. පියාගේ වියෝව ඉවසා ගැනීමට නොහැකි තත්ත්වයක එම මස 22 වෙනි දින මගේ බාල සහෝදරයෙක් මිය ගියා. එදා දැඩි දුක්ඛිත තත්ත්වයකට පත්වූ අපගේ පවුල අද වනතෙක් සිදුවූ ඒ පාඩුව හිලව් කරගත නොහැකි තත්ත්වයක ජීවත් වන්නෙමු.

මගේ භාර්යාවගේ තත්ත්වය බලන විට ඇයද පියා අහිමිවී මව හා සහෝදරියන් දෙදෙනෙක් සහ සහෝදරවරු තිදෙනෙක් සමඟ ජීවත් වෙනවා. ඇය අවුරුදු 6 ක දරුවෙක් වශයෙන් සිටින විට ඇයගේ පියා ඇයට අහිමි විය. ඇගේ මව රෝගී තත්ත්වයක පසුවන අතර අඛණ්ඩව වෛද්‍ය උපදෙස් හා බෙහෙත් ලබාගෙන ජීවත් වේ.

මගේ බිරිඳගේ මවු පාර්ශ්වයෙන් හෝ පිය පාර්ශ්වයෙන් ගවේෂණය කර බලන විට, අපගේ අවශ්‍යතාවය වන්නේ අපට අහිමිවූ ඉඩම්, දේපල හා අපගේ පවුලේ ඥාතීන් නැවත ලබා ගන්නේ කෙසේද යන්න ප්‍රශ්නය වේ.

බිරිඳගේ මවු පාර්ශ්වයෙන් ඇයගේ මවගේ පියාගේ නම මරිසාන් තම්බි අප්පුත මවගේ නම පුනිදශීලා. විවාහය ලියාපදිංචි කළ නම සෙල්වරත්නම්. ඔවුන් මන්නාරම,නාගතාල්වු, තිරුකේදීශ්වරම් යන ලිපිනයේ ජීවත් වූහ. නාගතාල්වු කියන ඔවුන්ගේ කුඩා ගම්මානයේ පල්ලියේ ඔවුන් වගකීම් හා ප්‍රධාන නිලතල දැරූහ. ඔවුන් මරිසාන් තම්බි අප්පු පරම්පරාවට අයත් පුද්ගලයන් බව වැඩිහිටියන් මා වෙත පවසා ඇත. ඒවාගේම ඔවුන්ට විශාල ඉඩකඩම්ද අයිතිව තිබිණා. මගේ බිරිඳගේ පරම්පරාවේ ආච්චි කෙනෙක් මෙහි තිබෙන පල්ලියට මුල් ගල් තැබූ බවද මා අසා ඇත. මෙසේ ජීවත් වූ මරිසාන් තම්බි අප්පු මඩකලපුවේ කල්මුනේ පදිංචිව සිටි මරිඅම්මා සමඟ විවාහ වුනා. මරිසාන් තම්බි අප්පුට අයත් වූ ඉඩම් පිළිබඳ විස්තර පහත සඳහන් වේ:

 කුඹුරු ඉඩම් - අක්කර 15 යි
 නරිවිලිකුලම ඉඩම - අක්කර 1 යි
 පල්ලනාගතාල්වු ඉඩම - අක්කර 3 යි
 නීලසෙනෙයි ඉඩම - අක්කර 1/2
 නාගතාල්වු ඉඩම - අක්කර 2 යි
 සිරිනාවට්කුලම් ඉඩම - අක්කර 3 යි
 සෙට්ටියාර් කන්ඩල් ඉඩම - අක්කර 1 යි
 වෙල්ලයින් පට්ට් එන්ටී - ඛඔ ඉඩම - අක්කර 2 යි
 ඌමයන්කන්ටල් - ඛඔ ඉඩම - අක්කර 2 යි

මෙසේ අක්කර 30 ක ඉඩම්වල අයිතිකරුව සිටි බිරිඳගේ සීයා දරුවන් 8 දෙනෙකුගේ පියෙක් විය. නමුත් ඔහු පුද්ගලයන්ට ණය වූ අතර, එම ණය මුදල් ගෙවා ගැනීමට නොහැකි තත්ත්වයක එසේ ණය දුන් පුද්ගලයන් - හාල් සේරුවක් හා රුපියල් 60 ක් ණයට දුන් අය:මරිසාන් තම්බි අප්පුව රවටා ඔහුගේ ඉඩම් තමන්ගේ නමට ලියා ගත්හ. අද ඔහුගේ දරුවන් 8 දෙනාම කිසිම ඉඩමක් නොමැතිව රජයෙන් ලබාදෙන ඉඩම් ලබා ගැනීම සඳහා පොරකන තත්ත්වයක පත්ව සිටී.

භාර්යාවගේ පිය පාර්ශ්වය බලන විට ඇයගේ පියා දරුකමට හදා වඩා ගත් දරුවෙක් වේ. ඔහුගේ නම මුත්තු කුමාර්. කට්කිඩන්දකුලම් ග්රාමයේ ජීවත් වූ පුද්ගලයෙක් ඔහුව එසේ හදා වඩා ගත්තේය. එම පුද්ගලයා බොහෝ පහසුකම් සහිත සුඛෝපබෝගී ජීවිතයක් ගත කළ ධනවත් පුද්ගලයෙක් විය. ඔහුගේ නම වීරසිංහම් සන්ධයාගෝ සන්ධාන්. පෙරියනීලසෙනෙහි අවතැන්ව ජීවත් වූ පවුලක සිට බිරිඳගේ පියාව දරුකමට ලබාගෙන හදා වඩා ගත්තේය. තමන්ගේ දරුවා එසේ දරුකමට ලබා දුන් එම පවුල පසුව ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ සාම්බල්තීවු යන ස්ථානයේ, පදිංචි වූහ. පසුව එක් වතාවක් තමන්ගේ මව සෙබමාලෙයි පැමිණ තමන්ව හමුවී ගිය බවත්, තවත් අවස්ථාවක බාල සොහොයුරන් දෙදෙනෙක් තමන් බැලීමට පැමිණි බවත් බිරිඳගේ පියා කීවේය.

බිරිඳගේ පියා දරුකමට හදා ගත් පුද්ගලයාගේ නම සන්දියාගෝ සන්ධාන් වේ. මුත්තුකුමාර්ගේ විවාහය ලියාපදිංචි කිරීමේදී ඔහුගේ පියා එම නමින් අත්සන් කළ අතර, දරුවන්ගේ උප්පැන්න සහතිකවලදී සීයා නමින් සඳහන්ව ඇති ස්ථානයේ ඔහුගේ නම සඳහන්වී තිබේ. කෙසේ වෙතත්, ඔහුගේ බොහෝ දේපල, රාජ්‍ය බැංකුවල තැන්පත් කරන ලද මුදල් හා රන් ආභරණ හා ඔප්පු ලියාපදිංචි නොකර තිබූ ඉඩම් කලින් ගොවිතැන් කිරීම සඳහා ලබාගෙන සිටි පුද්ගලයන් අයිති කරගෙන ඇති බව විශ්වාස කරනු ලැබේ. තවද වයෝවෘද්ධ කාලයේදී ඔහුගේ ඇස් පෙනීම දුර්වල වු නිසා දරුකමට හදා ගත් පුත්‍රයා (මුත්තුකුමාර්) මෙන් රඟපෑ බොහෝ අය ඔහුගේ ඇගිළි සලකුණ ලබාගෙන ඉඩම් අත්පත් කරගෙන ඇත. ඔහු මිය යන විට ඒ බව තමන්ගේ ලේලි වෙත පැවසු බව මුත්තු කුමාර්ගේ බිරිඳ වන මගේ නැන්දම්මා පවසා ඇත.

වීරසිංහම් සන්දධාන් සන්ධයාගෝ යන අයගේ දේපල පිළිබඳ විස්තර පහත සඳහන් වේ:

 මූක්කරායන් කුඹුරු ඉඩම - අක්කර 10 යි
 ඉරට්ටෙයිකුලම් - අක්කර 6 යි
 කට්කිඩන්දකුලම් - අක්කර 2 යි
 වැවට ඉහළින් පිහිටි ඉඩම - අක්කර 6 යි

එවක කුඩා දරුවන්ව සිටි බිරිඳ හා සහෝදරවරුන් දැන සිටි ඉඩකඩම් පිළිබඳ විස්තර ඉහත සඳහන් කර ඇත. තවමත් නොදැන සිටින ඉඩකඩම් තිබේදැයි අප නොදනිමු. ඔවුන් කුඩා දරුවන්ව සිටි කාලයේ 1986 වසරේදී දරුකමට හදා පියා, මව හා දරුකමට හදා ගත් පුතා යන තිදෙනාම මියගියා. සන්දධාන් සන්ධයාගෝ නැමැත්තාට තිබූ අතිරේක ඉඩම් පිළිබඳ විස්තර සැඟවී ගොස් තිබේ. භාණ්ඩ, දේපල, රන් ආභාරණ, මුදල් මේ සියල්ලම
- වසන් කර තිබේද?
- විකුණා තිබේද?
- සොරකම් කර තිබේද?

මේවා අද දක්වා ප්‍රහේළිකාවන් වේ. බැංකුවේ තැන්පත් කරන ලද ලක්ෂ 1 1/2 ක මුදලක් හා මේ සියල්ලම වසන් කර තිබේද?


මේවා අද දක්වා ප්‍රහේළිකාවන් වේ. බැංකුවේ තැන්පත් කරන ලද ලක්ෂ 1/1/2 ක මුදලක් හා නිවසේ තිබූ පවුම් 25 ක රන් ආභරණ, ලී බඩු ගමේ මිනිසුන් බෙදා ගත්තා. ඔහු දරුකමට හදා ගත් දරුවා වූ මුත්තුකුමාර්ගේ දරුවන් ජීවතුන් අතර සිටියත් ඔවුන්ට කිසිම ප්‍රතිලාභයක් ලැබුණේ නැහැ. තමන් විවාහවූ සැමියා හා ඇයගේ මාමා හා නැන්දා මියගියාට පසු මගේ බිරිඳගේ මව තනිවුනා. ගමේ මිනිසුන්ට බියවී තමන්ට තිබෙන එකම දේපල තමන්ගේ දරුවන් බවත්, ඔවුන් ඉතාම වටිනා දේපල බවත් සිතා ඇය ඇයගේ උපන් ගම වන නාගතාල්වු ගමට ගියාය. ඉන් පසු ඇයගේ දරුවන් වැඞීමෙන් අනතුරුව වසර 15 කට පසු නැවතත් කට්කිඩන්දකුලම් ගම්මානයට පැමිණියාය. මම ජීවත්වූ නිවස වැඩිමහල් පුත්‍රයාගේ නමට ලියා තිබූ හෙයින් එහි පැමිණ අද වන තෙක් ඇය එහි ජීවත් වෙනවා. මෙම පවුලට සිදුවූ මෙම දරිද්‍රතාවය කුමක්ද? දරුකමට හදා ගත් දරුවාට ලැබුණේ කුමක්ද? එසේ දරුකමට හදා ගැනීම ඔවුන් කළ වරදක්ද? යන සිතුවිලි වලින් මගේ බිරිඳගේ පවුලේ අය ජීවත් වෙති. කවදා හෝ දිනක අපගේ අයිතිවාසිකම් පිළිබඳ ඉල්ලීම් වලට දෙවියන් කන්දේවි.
ස්තුතියි.


CMP/MN/MU/ARI/01

பெயர்: பிரான்சிஸ் பீரிஸ் காணிக்கைநாதன் பீரிஸ்
வயது: 37
சமயம்: R.C
இடம்: முத்தரிப்புத்துறை
பால்: ஆண்

தற்போதைய நிலை: முத்தரிப்புத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட நான் கற்கிடந்த குளம் என்னும் கிராமத்தில் வசித்துவந்த அன்ரனிற்ராவை 2009ஆம் ஆண்டு, மாசி மாதம் 22ஆம் திகதி திருமணம் செய்து ஒரு ஆணும், ஒரு பெண்ணுமாக இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றேன்.

சுய வரலாறு: எனது அப்பாவின் பெயர் பிராசிஸ் பீரிஸ், எனது அம்மாவின் பெயர் அந்தோனியா லெம்பேட் (கமலா) இவர்களின் பிள்ளைகள் நாங்கள் 5 பேர் ஆண் 1 ஒரு பெண் சகோதரியும் ஆவார்.

எனது அப்பாவின் அப்பாட பெயர் குறோஸ் பீரிஸ். இவருக்கு12 பிள்ளைகள். அதில் மூத்த பிள்ளையாக பிறந்தவர்தான் என் அப்பா. இவர்களது வீடு காணிக்கை மாதா கோயிலுக்கு முன்பக்கமாக அமைந்துள்ளது.

எனது அம்மாவின், அப்பாவின் பெயர் சின்னப்பு லெம்பெட். அவருக்கு 5 பிள்ளைகள். எனது அம்மா 2வது பிள்ளை. எங்கள் அம்மையா எனது அம்மாவுக்கு சீதனமாக கொடுத்த காணி. கோணம்குளம் எனும் இடத்தில் இரண்டரை ஏக்கர் உள்ளது. ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் 20 வீட்டுத் திட்டம் கொடுக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் எங்கள் வீடு கடற்கரைக்கு அருகில் உள்ளது. இதனை காரணமாக கொண்டு தற்போதுள்ள அம்மாவுக்கும்,தம்பிக்குமாக மீண்டும் இந்தியன் வீட்டுத் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 4 பேர் திருமணம் செய்துள்ளோம். ஒரு தம்பி மட்டும் அம்மாவடன் இருக்கின்றார். இதற்கிடையில் கடற்கரையில் கொடுக்கப்பட்டு வீடு எனது அப்பாவின் பெயரில் இருந்து அரச உத்தியோகத்தில் இருக்கும் தம்பிக்கு மானியமாக காசு கொடுப்பதாக கூறி அனைவரிடமும் வெற்றுத்தாளில் கையொப்பம் இட்டு கொடுத்து இன்று அவனது பெயரில் உள்ளது. தற்போது ஏமாற்றி உரிமையை மாற்றி வேண்டியதாக எண்ணி வீண் பிரச்சினைகள் ஏற்பட்டு மனக்கசப்பாக மாறிவிட்டது. எல்லோருக்கும் உரிமையுடையதை எப்படி ஒருவருக்கு கொடுப்பது. எப்படியெல்லாம் பாசமாக வாழ்ந்த எனது குடும்பம் இன்று பரிதவிக்கும் நிலை காண்கிறேன். இதற்கு காரணம் என்ன? எங்களை விட்டு உயிர் பிரிந்துபோன எனது அம்மா, அப்பாவுக்கு தம்பியும் இருந்து இருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? எனது அப்பாவும் எனது தம்பியும் எங்களை விட்டுப் பிரிந்த சந்தர்ப்பத்தை திரும்பி பார்க்க வைக்கின்றது.

2000-05-15 திங்கட்கிழமை காலை 7 மணியளவில் இலங்கை இராணுவம் எமது கிராமத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. அனைவரையும் பீதியில் ஆழ்த்தியது. தாக்குதலுக்கு காரணம். சிலாவத்துறையில் இருந்து மோட்டார் சைக்களில் துப்பாக்கியுடன் ஊருக்குள் வந்தவனை துரத்தி சுட்டதுடன் அவனுக்கு பின்னால் சுட்டுக்கொண்டே 50 பேருக்கு மேலான இராணுவம் தாக்குதலை மேற்கொண்டார்கள். ஊருக்குள் வந்த இராணுவம் பொதுமக்களை கோவிலுக்கு செல்லும்படி சொன்னார்கள். எங்களுடைய வீட்டில் எனக்கு அடுத்த தம்பிக்கு சுகமில்லை. என்று பஸ்சுக்கு அம்மாவும் தம்பியும் சென்று விட்டார்கள். எங்கட அம்மா கடற்கரைக்கு சென்றுவிட்டார். நான், அண்ணன், தங்கை, தம்பி பாடசாலை செல்வதற்கு சீருடை அணிந்தவர்களாக நின்றோம். மன்னாருக்கு செல்வதற்கு போன அம்மாவும் தம்பியும் பதறி அடித்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓடி வந்தார்கள். கடற்கரை சென்ற அப்பாவும் சத்தம் கேட்டு ஓடி வந்தார். நாங்கள் எல்லாருமாக சேர்ந்து கோயிலை நோக்கி ஓடினோம். அப்போது விடுதலைப் புலியில் ஒருவனை துரத்தியவாறு இராணுவம் வந்தது. அவர்கள் மத்தியில் இரண்டு குடும்பத்தினர் சிக்கி விட்டோம். சராமரியாக சுட்டதில் எனதுஅப்பா அதற்குபலியாகி விட்டார். முன்னே ஓடிய நாங்கள் திரும்பி பார்த்த போது அப்பா தனது நிலை இழந்து விழுந்தார். அம்மாவை நான் மடியில் தூக்கி வைத்தேன். அப்பா ஒரு வார்த்தை கூட கதைக்கவில்லை. துப்பாக்கி சன்னங்கள் நடுவே பித்துப் பிடித்தவர்கள் போல் வேதனை,கவலை தாங்க முடியாமல் அழுது புரண்டு ஒப்பாரி வைத்தோம். அப்பா மீண்டும் வரமாட்டாரா என்று ஏங்கினோம். அப்பாவின் மேல் புரண்டு அழுதோம்.

அப்பா இறந்த பின்புகூட இராணுவும் துரத்தி வந்த விடுதலைப் புலி அப்பாவின் மேல் விழுந்து அழுவது போல் நடித்து அங்கிருந்து தப்பிச் சென்றான். அவனை மாறவிட்ட இராணுவம் எங்களைச் சுற்றி குவிந்தார்கள். அப்பாவியான எங்கள் அண்ணனை எங்களிடம் இருந்து இழுத்து எடுத்து 50 பேருக்கும் அதிகமான இராணுவம் நடுவில் வைத்து எங்கள் அண்ணனை ஆயுதங்களாலும் சப்பாத்து கால்களாலும் மிதித்து உதைத்து அடித்தார்கள். அப்பாவை அதிலே போட்டுவிட்டு அண்ணனுக்காக நாங்கள் ஒவ்வொரு இராணுவத்தின் கால்களிலும் விழுந்து அழுது கதறி வேண்டினோம். அப்பாவை இழந்த கவலை எங்கள் குடும்பத்துக்கு இவர்களால் ஏற்பட்ட அநீதியை எண்ணி கோபம் வேதனை. இவற்றின் மத்தியில் நாங்கள் யாருமற்ற அனாதைகளாக நின்றோம்.

அப்பாவின் இவ்விழப்பை தாங்கிக் கொள்ள முடியாததால் அந்த மாதம் 2ஆம் திகதி ஒரு கிழமையால் எனது ஒரு தம்பி இறந்துவிட்டான். அன்று நிலைகுலைந்த எங்கள் குடும்பம் இன்று இழந்ததை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றது.

எனது மனைவியின் நிலையை மறுகணம் திரும்பிப் பார்க்கும் போது அவவும் தகப்பனை இழந்த நிலையில் தாயாருடன் இரண்டு பெண் சகோதரிகைளும் இரண்டு ஆண் சகோதரர்களும் இருக்கிறார்கள். இவவுடைய தந்தை இவவுக்கு 6 வயது இருக்கும் போது இறந்து விட்டார். தாயார் வருத்தமான நிலையில் தொடர் வைத்திய ஆலோசனை பெற்று மருந்து எடுத்துக் கொண்டு இருக்கின்றார்.

மனைவியின் தாய்வழியாகவோ தந்தை வழியாகவோ ஆராய்ந்து பார்க்கும் போது எங்களது தேடல் இழந்த நிலபுலன்களையும் உறவுகளையும் எப்படி அடையலாம்? எனும் கேள்வியோடு இருப்பதை அவதானிக்க கூடியதாகவும் உள்ளது.

மனைவியின் தாய்வழியை பார்க்கும் போது இவளது அம்மையாவின் பெயர் மரிசான் தம்பியப்பு. தாயின் பெயர் புனிதசீல. திருமணப் பதிவுப் பெயர் செல்வரெட்னம். இவர்கள் மன்னார், நாகதாழ்வு திருக்கேதீஸ்வரம் எனும் முகவரியில் வசித்தவர்கள் நாகதாழ்வு எனும் இவர்களதுசிறிய ஊரில். தொடக்கத்தில் கோயில் பொறுப்புக்கள் தலமை வகித்தவர்கள். மரிசான் தம்பியப்பு பரம்பரையை சார்ந்தவர்கள். என்பதை பெரியவர்கள் சொல்லி அறிந்து இருக்கின்றோம். அதே சமயம் நிறைய காணிகளுக்கு சொந்தக்காரர்களாகவும் இருந்து இருக்கிறார்கள். ஏன் இங்குள்ள புனித தொம்மையப்பர் கோவிலுக்கு கல்லு வைத்தவர். இவர்கள் அம்மாவின் பூட்டி என்பதை சொல்லக் கேள்விப் பட்டு இருக்கின்றோம்.

இப்படியாக இருந்து வாழ்ந்து வந்த மரிசான் தம்பியப்பு மட்டக்களப்பில் கல்முனை எனும் இடத்தில் இருந்த மரியம்மா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

மரிசான் தம்பியப்புவுக்கு இருந்த காணிகள் பின்வருமாறு:
வௌிக்கமம் - 15 ஏக்கர்
நறிவலிக்குளம் - 1 ஏக்கர்
பள்ளநாகதாழ்வு - 3 ஏக்கர்
நீலசனை - 1ஃ2 ஏக்கர்
நாகதாழ்வு - 2 ஏக்கர்
சிறுநாவற்குளம் - 4 ஏக்கர்
செட்டியார் கண்டல் - 1 ஏக்கர்
வௌ்ளையன்பிட்டி - எல்.ரி. காணி 2 ஏக்கர்
ஊமையன் கண்டல் - எல்.ரி. காணி 2 ஏக்கர்

இப்படியாக 30 ஏக்கர் காணிக்கு சொந்தக்காரராக இருந்த இவர்களது அம்மையாவுக்கு 8 பிள்ளைகள். இருந்தும் இவரிடம் இருந்து ஒரு கொத்து அரிசிக்கும் 60 ரூபா காசையும் இவர் கடன் வேண்டியவர்களிடம் கொடுக்க முடியாத நிலையில் அவரது காணியை எழுதி வேண்டி மரிசாள் தம்பியப்புவை ஏமாற்றியதுடன் இன்று இவரது 8 பிள்ளைகளுக்கும் எவ்வித காணிகளும் அற்ற நிலையில் அரசால் வழங்கப்படும் காணிகளுக்கு அவதிப்படும் நிலையை காணக் கூடியதாகவுள்ளது.

மனைவியின் தந்தை வழியை ஆராயும் போது இவரது தந்தை தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பிள்ளையாகும். இவரது பெயர் முத்துக்குமார் இவரை தத்து எடுத்தவர். கற்கிடந்த குளம் எனும் இடத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் மிகவும் வசதி வாய்ப்புக்களுடன் பகட்டான முதலாளித்துவ வாழ்க்கை வாழ்ந்தவர். இவரது பெயர் வீரசிங்கம் சந்தியோடு சந்தான் என்பவர். இவர் பெரிய நீலசனையில் இடம்பெயர்ந்து வாழ்ந்தவர்களிடமிருந்து மனைவியின் தந்தையை தத்து எடுத்து வளர்த்தார்கள். தங்கள் சொந்தப் பிள்ளையை தத்து கொடுத்தவர்கள் அதன் பின் திருகோணமலை மாவட்டத்தில் சாம்பல்தீவு எனும் இடத்தில் குடியேறியதாகவும் அதன் பின் ஒரு முறை தன்னை பெற்ற தாய் செபமாலை என்பவர் தன்னைப் பார்க்க வந்து போனதாகவும் ஒரு முறை இரண்டு தம்பிமார் தன்னை பார்க்க வந்ததாகவும் அவரது தந்தை மூலம் அறிந்த விடயங்களாகும்.

மனைவியின் தந்தையை எடுத்து வளர்த்தவர்கள் சந்தியோடு சந்தான் என்பவர். முத்துக்குமாருடைய திருமணப் பதிவில் தான் அவரது தந்தை என்று ஒப்பமிட்டதுடன் பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழ்களிலும் அம்மையா (பாட்டனார்) எனும் இடத்தில் அவரது பெயர் இருந்த போதிலும் அவரது அனேகமான சொத்துக்களுக்கும் அரச வங்கிகளில் வைப்பு செய்த பணமாகினாலும் சரி நகைகளையும் எழுதாமல் விட்ட காணிகளையும் சும்மா செய்யும்படி கொடுத்தவர்கள் உரிமையாக்கி விட்டிருக்கலாம். என்று நம்பப்படுகின்றது. அத்தோடு அவரது முதுமையான வயதில் அவரது கண் பார்வை அற்றுப் போனதினால் வளர்ப்புமகன் போல் நடித்து பலர் அவரது கை விரல் அடையாளத்துடன் காணிகளை பெற்றுக் கொண்டதை அவர் சாகும் போது அவரது மருமகளிடம் கூறியதாக முத்துக்குமாரின் மனைவியாகிய எனது மாமியார் சொல்லிக் கேட்டுள்ளேன்.

வீரசிங்கம் சந்தான் சந்தியோடு என்பவரின் சொத்துக்களின் விபரம் பின்வருமாறு:
மூக்காரயன் கமம் - 10 ஏக்கர்
இரட்டைக் குளம் - 6 ஏக்கர்
கற்கிடந்த குளம் 2 ஏக்கர்
குளத்துக்குமேற்புலவு காணி - 6 ஏக்கர்

அப்போது சிறு பிள்ளைகளாக இருந்த மனைவி,சகோதரர்களுக்கு தெரிய வந்த காணிகள்தான் மேல் குறிப்பிட்டவையாகும். இன்னும் தெரிய வராமல் மறைக்கப்பட்ட காணிகள் இருக்கின்றதோ என்னவே? இவர்கள் சிறுவர்களாக இருந்த போதே 1986ஆம் ஆண்டு வளர்ப்பு தந்தை, தாய், வளர்ப்புமகன் மூவரும் இறந்துவிட்டார்கள். சந்தான் சந்தியோகுவுக்கு இருந்த மேலதிகமான காணிகள் மறைக்கப்பட்டதாகவே போய்விட்டது. பொருட்களும், சொத்துக்களும், நகைகளும் (25 பவுன்) பணமும் (ஒன்றரை இலட்சம்) இவைகள் அனைத்தும், மறைக்கப்பட்டதா? விற்கப்பட்டதா? களவாடப்பட்டதா?

இன்றும் இவைகள் தெரியாத புதிராகவுள்ளது. வங்கியில் வைப்பில் இடப்பட்ட ஒன்றரை இலட்சம் பணமும் வீட்டில் இருந்த 25 சவரண் நகையும் வீட்டிலுள்ள தளபாட பொருட்களும் ஊர் சனம் (சிலர்) பகிர்ந்துகொண்டதை அவர் வளர்த்த பிள்ளையாகிய முத்துக்குமாரின் பிள்ளைகள் இருந்தும் எவ்வித சன்மானமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. திருமணம் புரிந்த கணவரும். அவரது மாமனார். மாமியார் இறந்த பின்னர் தனியாக விடப்பட்ட எனது மனைவியின் தாயார் ஊர் மக்களுக்கு பயந்து தனக்கென்றுஉள்ள தனது சொத்தாகிய பிள்ளைகளே தனக்குஇருந்த பெரிய சொத்தாக எண்ணி தனது பிறப்பிடமாகிய நாகதாழ்வுக்கு சென்றுவிட்டார். பின்னர் தனது பிள்ளைகள் பெரியவர்களானதும் 15 வருடத்தின் பின் மீண்டும் கற்கிடந்த குளத்திற்கு வந்து மாமனார் வாழ்ந்த வீடு மூத்த மகனுடைய பெயரில் எழுதப்பட்டதினால் அங்குவந்து இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்துக்கு ஏற்பட்ட இவ் ஏழ்மை நிலை தத்து எடுத்த பிள்ளைக்கு பிள்ளையாக பிறந்தது என்ன? அவர்கள் தப்பா? எனும் எண்ணத்தோடு வாழும் எனது மனைவியின் குடும்ப நிலவரமாகும். என்றோ ஒருநாள் உரிமைக்கு செவிசாய்ப்பார்கடவுள்.
முற்றும்.
நன்றி!






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License