A past too painful for the light of day

A young woman from Pitabaddara village reminisces her parents' experiences during the bloody JVP insurrection


බිහිසුණු අතීතයක්

පිටබැද්දර ගමෙහි තරුණියක් JVP භීෂණ් යුගය ගැන තම දෙමාපියන්ගේ අත්දැකීම් බෙදා හදා ගනී.


நாளின் ஒளிரும் கடந்த காலத்திலேயே மிகவும் வேதனையாக இருக்கிறது

பிதாபதர் கிராமத்திலிருந்து ஒரு இளம் பெண், இரத்தக்களரி ஜே.வி.பி கிளர்ச்சியின் போது தனது பெற்றோரின் அனுபவங்களை நினைவூட்டுகிறார்



G. Sanduni Sarangika
‘Jayabima’
Siyabalagoda
Pitabaddara
11-08-2016

Dear Ambassador,

I was born on the 2nd of August in 1994. Now I am 22 years old. During this lifetime I have met so many people. First, I want to give merit to my mother and father. I have to be thankful to them for taking care of me and giving me all the treasures of life up to now. During this life of 22 years I have faced many hardships. From childhood my parents always told me to study hard and be a person that spreads love to other people and always to help people in need. My father was very strict when we were small but my father was someone who had great knowledge about the society. He always told us to learn about things happening around the world. He told us to associate people above us. He told us not to associate ignorant people as it will only bring us some disadvantage and not benefit us. My father is not as strict now. I can no understand that everything my father taught me when I was child is correct. I also have to talk about my siblings. Our security was our 3 brothers. They always looked after us. Always kept telling us not to get involved in wrong things. They helped us a lot with our studies. They buy us clothes. It is our good luck that we have siblings as such. I also want to talk about myself and the friends I have met. The friends that I met during my o/ls were always trying to take me down the wrong path only a few encouraged me to study. Whenever I felt that I was going down a wrong path I always thought about my parents so that prevented me from doing anything wrong.
During the JVP era, many houses in our area had been burnt and destroyed. I don’t have any memories of that but whenever my parents spoke about it I feel sad. A lot of people had been killed. A lot of people had been shot to death. My parents don’t even like to think about that period. So many young people had been shot to death
Now I am studying at the Akuressa Technological training centre, where I am studying a computer course. I have a lot of friends there and we are all very united. They are good people. I also have to remember by teacher, she makes a lot of sacrifices to teach us. I want to give good merits to her for that. I also want to remember all the teachers at the centre. We are all very close and friendly now.

Thank you


ජී.සදුනි සාරන්ගිකා,
"ජයබිම",
සියබලාගොඩ,
පිටබැද්දර.
2016.11.08

ගරු තානාපතිතුමනි,

මා උපන්නේ 1994 අගෝස්තු මස 02 දිනයේදීය. දැනට මට අවුරුදු 22 ක් වේ. මේ දක්වා වූ ගමන් මගේ මට හමු වූ පුද්ගලයන් බොහෝ අය වේ. මුලින්ම මා මේ ලෝකයට බිහි කරපු මගේ අම්මා, තාත්තා දෙන්නට මුලින්ම පින් දෙනවා. පොඩි කාලේ ඉදල ආරක්ෂා කරලා, කන්න බොන්න දීල මට මේ අවුරුදු 22 ක් දක්වා වූ කාලය පුරාවටම දුන්නු සැප සම්පත් වලට ගොඩක් පින් දෙන්න ඕන. මේ අවුරුදු 22 ක් ආපු ගමන ගොඩාක් දුක් කම්කටොලු වලට මුහුණ දෙන්න වුනා. අපේ අම්මා තාත්තා පොඩි කාලේ ඉදලම කිවුවේ හොදට ඉගෙනගෙන ගොඩක් හොද මිනිස්සුන්ට ආදරය කරන කෙනෙක් වෙන්න කියලා. අසරණ මිනිස්සුන්ට පුළුවන් තරමින් උදව්වක් හැමවෙලාවෙම කරන්න කියලා. අපේ තාත්තා අපි පොඩි කාලේ ගොඩාක් සැරයි. එත් තාත්තා ගොඩාක් සමාජ දැනුම තියෙන කෙනෙක්. නිතරම සමාජේ වෙන දේවල් දැකලා ඒවා පාඩමක් කරගන්න කිවුවා. තාමාට වඩා උසස් ය නිතරම ආශ්‍රය කරන්න කිවුවා. බාලයෝ ආශ්‍රය කරන්න එපා කිවුවා. ආශ්‍රය කලොත් තමන්ට පාඩුවක් මිස වාසියක් වෙන්නේ නෑ කියනවා. එත් තාත්ත ඉස්සරට වඩා දැන් ටිකක් සැර අඩුයි. පොඩි කාලේ තාත්තා කියපු දේවල් දැන් අත්ති කියලා තේරෙනවා. ඒ වගේම අයියලා අක්කලත් මතක් කරන්න ඕන. අපේ ආරක්ෂාව අපේ අයියලා තුන්දෙනා. අපි ගැන ගොඩාක් හොයල බලනවා. නිතරම කියනවා වැරදි දේවල් වලට යොමු වෙන්න එපා කියලා. අපිට ඉගෙන ගන්න ගොඩාක් දේවල් වලින් උදව් කරනවා. ඇදුම් පැළදුම් අරන් දෙනවා. අපේ වාසනාව තමි ඒ වගේ අයියලා අක්කලා ලැබුණු එක. ඒ වගේම කියන්න ඕනි මගේ ගැනත්. මගේ ජිවිතේ ලැබුණු යාළුවො ගැනත් කියන්න ඕනි. සාමාන්‍ය පෙළ කාලේ මට හම්බුනු ගොඩාක් යාළුවො හිටියේ අපිව නිතරම වැරදි මාර්ගයට යවන අය. සුළු පිරිසක් තමා හිටියේ අපි ඉගෙන ගමු කියන්න. මගේ හිත වැරදි දෙකට යොමු වෙනකොටම මට මුලින්ම මතක් වෙන්නේ මගේ අම්මයි, තාත්තයි. ඒ හින්ද කවදාවත්ම වැරදි දෙකට හිත යොමු වෙලා නෑ.

ජේ.වී.පි භීෂණ කාලේ අපේ පැත්තේ ගෙවල් ගොඩක් ගිනි තියලා විනාශ කරලා තිබුනා. ඒ ගැන මටනම් මතකයක් නෑ. එත් දැන් අපේ අම්මලා තාත්තලා ඒ ගැන කියනකොට ගොඩාක් දුකයි. මිනිස්සු ගොඩාක් මරලා තියෙනවා. වෙඩි තියලා මරල දාල තියෙනවා. ඒ ගැන මතක් කරන්නවත් අපේ අම්මලා තාත්තලා කැමති නෑ. ගොඩාක් තරුණයින් වෙඩි තියලා මරල දාල තියෙනවා.

දැන් මම අකුරැස්ස තාක්ෂණ පුහුණු මධ්‍යස්ථානයේ පරිගණක පුහුණු පාඨමාලාවක් හදාරනවා. මට යාළුවො ගොඩාක් ඉන්නවා. එයාලා හරිම එකමුතුයි. ගොඩාක් හොද ළමයි. ඒ වගේම අපේ ගුරුතුමියත් මතක් කරන්න ඕනි. අපිට උගන්වන්න ලොකු කැපකිරීමක් කරනවා. එකට මිස්ට ගොඩාක් පින්. ඒ වගේම කාර්ය මණ්ඩලයේ ගුරුවරුනුත් මතක් කරන්න ඕනි. ගොඩාක් සුහදශීලි කණ්ඩායමක් අපි ඔක්කොම දැන්.


ස්තුතියි.

G. சந்துனி சாராங்கிகா,
“ஜயபிம”
சியம்பலாங்கொட (மே),
பிட்டபெத்தர.
2016.11.08.
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே,
நான் 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி பிறந்தவன். இப்பொழுது எனக்கு 22 வயதாகிறது. இதுவரை வந்த பயணத்தில் நான் அதிகமான நபர்களைச் சந்தித்துள்ளேன். முதலாவதாக நான் சந்தித்ததும் என்னை இவ்வுலகிற்கும் கொண்டு வந்தவர்களுமான என் அம்மா, அப்பாவிற்கு நமஸ்காரம் செய்கிறேன். சிறு வயதிலிருந்து என்னைப் பாதுகாத்து, உணவு, உடைகள் கொடுத்து என்னை இந்த 22 வயதுவரையான காலம் வரை கொடுத்த வளமான வாழ்க்கைக்கு நான் அதிகமாக அவர்களுக்குப் புண்ணியம் செய்ய வேண்டும். இந்த 22 வயது வரையான பயணமானது மிகவும் கஷ்டம், துயரங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எங்களது அம்மா, அப்பா நான் சிறு வயதாக இருக்கும்போதே கூறியதாவது நன்றாகப் படித்து, அதிகமாக மனிதர்களுக்கு அன்பு செலுத்துங்கள். துன்பப்படும் மனிதர்களுக்கு முடிந்தவரை எப்போதும் உதவி செய்யுங்கள் என்றும் ஆகும். எங்களது அப்பா நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது மிகவும் கோபக்காரராக இருந்தார். ஆனால், அப்பா அதிகமான சமூக அனுபவங்களைக் கொண்ட நபர். நிதமும் சமூகத்தில் நடப்பவைகளைக் கண்டு அவைகளைப் பாடமாக எடுத்துக்கொள்ளச் சொல்வார். தன்னைவிட மேலானவர்களுடன் நிதமும் உறவாடச் சொன்னார். தன்னைவிடக் கீழுள்ளவர்களுடன் உறவாட வேண்டாம் என்றும் அவர்களுடன் உறவாடினால் தமக்கு நஷ்டமே தவிர இலாபம் இல்லை என்றார். ஆனால், அப்பா முன்பைவிட இப்பொழுது கொஞ்சம் கோபம் குறைந்தவராகத் தெரிகிறார். எங்களுக்குச் சிறு வயதில் அப்பா சொன்னது இப்பொழுது உண்மையென விளங்குகிறது. அதேபோல் எனது அண்ணா, அக்காவையும் ஞாபகப்படுத்த வேண்டும். எனது அண்ணா மூவரும் தான் எங்களது பாதுகாவலர்கள். எங்களைப்பற்றி அதிகம் தேடிப்பார்ப்பவர்கள். குற்றச் செயல்களில் இணைய வேண்டாம் என்றும் நிதமும் சொல்வார்கள். நாங்கள் படிப்பதற்கு அதிகமான வழிகளில் உதவி செய்வார்கள். உடைகள் வாங்கித் தருவார்கள். சாப்பிட ஆசையான எல்லாவற்றையும் வாங்கித் தருவார்கள். எங்கள் அதிஷ்டம் தான் அவ்வாறான அண்ணா, அக்கா கிடைத்தது. அதேபோல் நான் என்னைப்பற்றியும் சொல்ல வேண்டும்.
சாதாரண தரப் பரீட்சை செய்யும் காலத்தில் என்னைச் சந்தித்த அதிக நண்பர்கள் தவறான வழிக்கு இட்டுச் செல்பவர்களாகவே இருந்தார்கள். சிறு குழுவினரே நாம் படிப்போம் என்று சொல்பவர்களாக இருந்தவர்கள். எனது மனம் தவறான வழிக்குச் செல்ல நினைக்கும்போது என் மனதில் முதலில் தோன்றுவது எனது அம்மாவும் அப்பாவும் தான். அதனால் நான் எப்போதும் தவறான செயல்களில் ஈடுபடுவதேயி்ல்லை.
ஜே.வி.பி கலவரக் காலத்தில் எங்கள் வீட்டுப் பகுதியில் அதிகமான வீடுகளைத் தீ வைத்து அழித்திருந்தார்கள். அதைப்பற்றிய ஞாபகம் குறைவு. ஆனால், எனது அம்மா, அப்பா அதைப்பற்றிச் சொல்லும்போது மிகக் கவலையாக இருக்கிறது. அதிகமான மக்களைக் கொலை செய்திருக்கிறார்கள். அதைப்பற்றி ஞாபகப்படுத்தக் கூட எனது அம்மா, அப்பாவிற்கு விருப்பமில்லை. அதிகமான இளைஞர் யுவதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளார்கள்.
நான் இப்போது அக்குரெஸ்ஸ தொழில் பயிற்சி மத்தியஸ்தானத்தில் கணினி பயிற்சிப் பாடநெறி ஒன்றைக் கற்கின்றேன். எனக்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் ஒற்றுமையானவர்கள். மிகவும் நல்லவர்கள். அதேபோல் எனது ஆசிரியரையும் ஞாபகப்படுத்த வேண்டும். எங்களுக்குப் படிப்பிப்பதற்கு அதிகமான விட்டுக்கொடுப்புகளைச் செய்கிறார். அதற்கு என் ஆசிரியருக்குப் புண்ணியம் கிடைக்க வேண்டும். அதேபோல் அலுவலக ஆசிரிய குழுக்களையும் ஞாபகப்படுத்த வேண்டும். மிகவும் சிறந்த புரிந்துணர்வுள்ள குழு நாங்கள் அனைவரும்.
நன்றி.




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License