ශාලිකා මදුශානි,
සරමුදුගොඩ,
මුල්ලන,
මලිදුව,
අකුරැස්ස.
2016.11.08
ගරු උපදේශිකා තුමිය වෙත,
මගේ වයස අවුරුදු 25 යි. මේ වයස පොඩි වයසක් වුනත් අවුරුදු 25 ක කාලය තුල ලබා ගත් දේ ලියන්න තමයි මම දැන් මේ හදන්නේ. මගේ පවුලේ අම්මයි, තාත්තයි, නංගියි, මල්ලියි, මමයි හිටියේ. මගේ පවුලේ ඉතාමත් සුන්දර මතක සටහන් තියෙනවා. නමුත් මට සුන්දර මතක සටහන් ටිකක් පමණයි මතක තියෙන්නේ. පොඩි කාලේ ඉදලම මම මගේ නංගිටයි මල්ලිටයි ගොඩාක් ආදරෙයි. මම තමයි නංගි, මල්ලි පෙර පාසල් එක්ක ගියේ. ඒ කාලේ මාත් පොඩියි. මට තේරෙන්නෙත් නෑ. එත් මම ඒ දෙන්නා පෙර පාසල් එක්කගෙන ගියා. මොකද කිවුවොත් අපේ ආර්ථික තත්වය අමාරු නිසා අම්මා, තාත්තා දෙන්නම කුලී වැඩ කරා. ඒ නිසා තමයි නංගිගෙයි, මල්ලිගෙයි වගකීම මට ගන්න උනේ. එත් මම හරි ආශාවෙන් ඒක කළා. ඒත් මගේ අම්මා ගෙදර එන්නේ අපි තුන්දෙනාට පෙර පාසලේ, පාසලේ උගන්වපු දේවල් බලන්න. අපි තුන්දෙනා අවුරුදු 2 න් 2 කට වැඩිමල්. ඉතින් අම්මා මගේ පොත් තමයි කලින්ම බල්ලන්නේ. පොත් බලන අතරේ වැරදි තියෙනවනම් වැරදෙන එකක් ගානේ මට ගහනවා. ඒ නිසාද මන්ද මන් මේ තත්වෙන් යම් දැනුම් මට්ටමකින් ඉන්නේ. මාව ශිෂ්යත්ව විභාගය සමත් කිරීමට අම්ම නොගත් උත්සාහයක් නෑ. එත් මට ශිෂ්යත්වය සමත් වෙන්න බැරි උනා. ලකුණු 15 ක් මදි උනා. ඒත් අම්මා මට මොනවත් කිවුවේ නෑ. අම්මා කිවුවේ මන් උබට ගැහුවේ තරහට නෙවෙයි කියලා අපේ අම්මා කියනවා. උඹට ගගහ ඉගැන්නුවේ නැත්නම් උඹ ඔය ලකුණු ටිකවත් ගැන නෑ කියල.එත් මගේ අම්ම මම ශිෂ්යත්වය ලියලා මාස දෙක තුනක් වෙන්න ඇති මගේ අම්මා මේ ලෝකේ දාල අපෙන් සදහටම සමු ගත්තා. එදා මම පොඩි උනත් මට දැනුනේ මගේ මුළු ලෝකයම කඩන් වැටුනා කියලා. අම්මාගේ ආදරේ ගොඩ කාලයක් ලබන්න බැරි උනා. එත් මගේ තාත්තා අම්මගේ අඩුව චුට්ටක්වත් දැනෙන්න දුන් නෑ. මගේ තාත්තා මට නංගිටයි, මල්ලිටයි අම්මයි තාත්තයි දෙන්නම උනා. එතන ඉදන් අම්ම වගේ තාත්තා අපිට කන්න බොන්න ගෙනත් දුන්නා. උයල පිහල දුන්නා. මාත් තාත්තට උදවු කරා. මොකද අම්ම අපිව දාල යන්න කලින් ගෙදර වැඩ කන්න උයන හැටි සේරම කියල දුන්නා. ඒක නිසා මට පුළුවන් උනා යම් තරමකින් හරි තාත්තට උදව් වෙන්න. අපේ තාත්තා ලස්සන හදවතක් තියෙන මනුස්සයෙක්. බත් කවන්නේ අපි තුන්දෙනාටම තාත්තා. ඔය අතරේ තාත්ත අපිට පොඩි පොඩි සින්දු කියලා දෙනවා. කතා කියනවා. මේ වෙනකොට මම ටිකක් ලොකු ළමයෙක්. ඒක නිසා තාත්තා 70 සහ 80 දශකයේ තිබුන භීෂණ කාලය ගැනත් කිවුවා. මොකද තාත්ත කියන්න හේතු උනේ තාත්තගේ මල්ලි භීෂණ කාලේ අරගෙන ගිහින් පුච්චලා මරල. අපේ ගේ වට පිටාව ගස් වලින් පිරුණු වට පිටාවක්. ඉතින් ගොඩක් දෙනෙක් අපේ ගෙවල් පිටි පස්සේ තමයිලු හැංගිලා ඉදල තියෙන්නේ. අපේ බාප්පා විතරක් නෙමෙයි තව ගොඩක් දෙනෙක්ගේ ජිවිත බිලිගෙන තියෙනවා. මේ භිෂණය තියෙනවා. ඇත්තටම අපිට ඒ වාගේ අත්දැකීම් නැහැ තාත්ත කියල තියෙනවා.තාත්තලා හරිම අමාරුවෙන්ලු ඒ කාලේ ඉගෙන ගත්තේ. අපිට මේ කාලේ ඒ වගේ තත්වයක් නැහැ. මොකද අවුරුදු 30 ගානක් තිබුණු කුරිරු යුද්ධය අතිගරු මහින්ද රාජපක්ෂ ජනාධිපතිතුමා නිමා කරපු නිසා ඒ කාලේ මේ කාලේ බලද්දී ඇත්තටම දැන් සමාජය ගොඩක් දියුණුයි. මේ ලිවුවේ මම භිෂණය ගැන තාත්ත මට කියපු දෙයක්. තවත් මට මගේ ජිවිතේ ඉතා දුක්බර කාල සීමාවක් තමයි මම උසස් පෙළ කරපු අවුරුද්ද 2010. මේ අවුරුද්දේ තමයි මගේ තාත්තා බස් රථ අනතුරකින් මිය ගියේ. මම හිතන් හිටියේ අම්ම නැති උනාට තාත්තවත් ඉන්නවනේ කියලා. එත් දෙන්නම නැති උනා. මම හිතුවේ අපි තුන්දෙනා ගිය ආත්මේ මොන තරම් කරුමයක් කරන්න ඇද්ද කියලා අපිට මෙහෙම වෙන්න. එත් මට මන් ගැන දුක නැහැ. මගේ නැඟී ගැන මල්ලි ගැන තමයි ගොඩාක් දුක. දැන් අපි තුන්දෙනා ඉන්නේ අම්මගේ අම්මා ලග. ඒ කියන්නේ අත්තම්මා ලග. අත්තම්ම තමයි දැන් අපේ ජිවිතේ. ඇත්තටම මම තව ලිවුවොත් මට ඇඩෙනවා. ඒ නිසා මෙතනින් නවතිනවා.
මීට
ශිෂ්ය
சாலிக்கா மதுஷானி,
சரமுதுகொட,
முல்லன,
மலிதுவ,
அக்குரெஸ்ஸ.
2016.10.08.
மதிப்பிற்குரிய விரிவுரையாளர் அம்மையாருக்கு,
எனது வயது 25. இது சிறு வயதானாலும் இந்த 25 வருட காலத்தில் அதிகமான அனுபவங்களைப் பெற்றுள்ளேன். கிடைத்தது. எனது 25 வருட கால அனுபவங்களைத் தான் இப்பொழுது எழுதுவதற்குத் தயாராகின்றேன். எனது குடும்பத்தில் நான், அம்மா, அப்பா, தம்பி, தங்கை ஆகியோரே இருந்தோம். எனது குடும்பத்தில் மிகவும் அழகான ஞாபகக் குறிப்புகள் இருக்கிறது. ஆனால், எனக்கு அழகான நினைவுகள் கொஞ்சம் தான் இருக்கிறது. சிறு வயதிலிருந்தே நான் தம்பிக்கும், தங்கைக்கும் மிகவும் அன்பு செலுத்தினேன். நான் தான் தம்பியையும், தங்கையையும் பாலர் பாடசாலைக்குக் கூட்டிச்சென்றேன். அப்போது நானும் சிறுவன். எனக்கும் ஒன்றும் விளங்காது. ஆனாலும், நான் பாலர் பாடசாலைக்குக் கூட்டிச்சென்றேன். எங்களது பொருளாதார நிலவரம் மிகவும் கஷ்டத்தில் இருந்ததால் ஆகும். அம்மாவும் அப்பாவும் கூலி வேலை தான் செய்தார்கள். அதனால் தம்பியினதும், தங்கையினதும் பொறுப்பை எனக்கு ஏற்க நேரிட்டது. ஆனாலும், அதை நான் மிக ஆசையுடன் செய்தேன். ஆனால், எங்கள் அம்மா வீட்டுக்கு வந்தவுடன் முன்பள்ளியில் எங்கள் மூவருக்கும் என்ன படிப்பித்துள்ளார்கள் என்று பார்ப்பார். நாங்கள் 3 பேரும் 2 வயது வித்தியாசத்தில் இருப்பவர்கள். அதில் நான் தான் மூத்தவன். அதனால் எனது புத்தகத்தைத் தான் முதலில் பார்ப்பார். புத்தகம் பார்க்கும்போது பிழைகள் இருப்பின் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அடி விழும். அதனால் தான் இன்று நான் சில அறிவு மட்டத்துடன் இருக்கிறேன். என்னைப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையச் செய்ய அம்மா செய்யாத முயற்சிகள் இல்லை. ஆனால், என்னால் புலமைப்பரிசிலில் சித்தியடைய முடியவில்லை. 15 புள்ளிகள் குறைவடைந்துவிட்டது. அதற்காக அம்மா எனக்கு ஒன்றும் சொல்லவில்லை. நான் உன்னை அடித்தது கோபத்தினால் அல்ல என்று சொன்னார். உன்னை அடித்துப் படித்துக் கொடுக்கவில்லை என்றால் நீ இந்தப் புள்ளியையும் பெற்றிருக்கமாட்டாய் என்று சொன்னார். ஆனால், எனது அம்மா நான் புலமைப்பரிசில் பரீட்சை எழுதி இரண்டு மூன்று மாதங்களுக்குள் என்னையும் இவ் உலகத்தையும் விட்டுப் பிரிந்துவிட்டார். அன்று நான் சிறியவனாக இருந்தாலும் எனது முழு உலகமும் உடைந்து விட்டதாகவே தெரிந்தது. அம்மாவின் அன்பை அதிக நாட்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனது அப்பா, அம்மா இல்லாத குறையைக் கொஞ்சமாவது தெரியவைக்கவில்லை. எனது அப்பா எனக்கும், தம்பிக்கும், தங்கைக்கும் அம்மாவும் அப்பாவுமாக இருந்தார்.
அப்பொழுதிலிருந்து அம்மாவைப்போன்று அப்பா உணவுகளைக் கொண்டுவந்து கொடுத்தது மட்டுமல்ல, சமையல் செய்து கொடுத்தார். நானும் அப்பாவுக்கு உதவி செய்தேன். எங்கள் அம்மா எங்களை விட்டுப் பிரிவதற்கு முன்பே வீட்டு வேலைகள், உணவுகளைச் சமைக்கும் முறைகள் பற்றி அனைத்தும் கற்றுக் கொடுத்திருந்தார். அதனால் என்னால் அப்பாவுக்குக் கொஞ்சம் உதவக்கூடியதாக இருந்தது. எங்கள் அப்பா அழகான இதயம் படைத்தவர். எங்கள் மூவருக்கும் சாப்பாட்டை ஊட்டி விடுவார். அத்தோடு எங்கள் அப்பா எங்களுக்குப் பாடல்களும், கதைகளும் சொல்லித்தருவார். அந்தத் தருணத்தில் நான் கொஞ்சம் பெரியவன் என்றபடியால் 70 மற்றும் 80 தசாப்தங்களில் இடம்பெற்ற கலவரத்தைப் பற்றியும் சொன்னார். அதைப்பற்றி அப்பா சொல்வதற்கான காரணம், அப்பாவின் தம்பி ஒருவரைக் கலவரக் காலத்தில் கூட்டிச்சென்று எரித்துக் கொலை செய்துள்ளார்கள். எங்களது வீட்டுச் சுழல் மரங்கள் நிறைந்த சூழல் என்றபடியால் எங்கள் வீட்டுக்குப் பின்னால்தான் ஒழிந்திருந்திருக்கிறார்கள். இக்கலவரக் காலத்தில் எனது சித்தப்பாவை மட்டுமல்ல, இன்னும் பலரின் உயிரையும் பலியெடுத்துள்ளார்கள். உண்மையில் எங்களுக்கு அவ்வாறான அனுபவங்கள் இல்லை. அக்காலத்தில் மிகக் கஷ்டத்தில்தான் கல்வி கற்றதாக அப்பா சொல்லியுள்ளார். எங்களுக்கு இப்போது அந்த நிலைமை இல்லை. 30 வருட காலப் பயங்கர யுத்தத்தை மேன்மைதங்கிய மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்கள் நிறைவு செய்தமையால் அந்தக் காலத்தை விட இந்தக் காலத்தில் சமூகம் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. எனக்கு அப்பா கலவரம் பற்றிச் சொல்லியதாலேயே நான் இதை எழுதினேன்.
இன்னும் எனது வாழ்வில் மிகவும் துயரமான காலம்தான். நான் உயர்தரப் பரீட்சை செய்த காலம், 2010ஆம் ஆண்டு எனது அப்பா ஒரு பஸ் விபத்தில் இறந்துவிட்டார். அம்மா இல்லை என்றால் அப்பா சரி இருக்கிறார் தானே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், இருவரும் இறந்துவிட்டார்கள். நாங்கள் மூவரும் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ எங்களுக்கு இப்படி நடக்கிறதே என்று நினைத்தேன். ஆனால், எனக்கு என்னைப் பற்றிய கவலைகள் இல்லை. எனது தம்பி, தங்கையைப் பற்றியே மிகக் கவலையாக இருந்தது. நாங்கள் மூவரும் இப்போது அம்மாவின் பாட்டி வீட்டிலேயே இருக்கிறோம். இப்போது பாட்டி தான் எங்களது உலகம். உண்மையில் இதைவிட நான் எழுத நினைத்தால் அழுகை வந்துவிடும். அதனால் இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
இப்படிக்கு,
மாணவன்.