Decades of hard work taken by the sea

A woman who suffered immensely working under horrid conditions in the Middle East relates how everything she earned in decades was swept away by the sea in a split second


දශක ගණනක දුක් මහන්සිය මුහුද බිලිගත් හැටි

කාන්තාවක් තමන් අනේක දුක් විඳ මැද පෙරදිග ගොස් හම්බ කළ සියළු දේ එක් ක්ෂණයකින් මුහුද බිලිගත් ආකාරය පැහදිලි කරයි.


கடலில் எடுக்கப்பட்ட பல தசாப்தங்கள்

மத்திய கிழக்கில் கொடூரமான நிலைமைகளில் பணிபுரிந்த ஒரு பெண் பல தசாப்தங்களாக சம்பாதித்த எல்லாவற்றையும் கடற்பகுதியில் பிளவுபடுத்தியதைப் பற்றி விவரிக்கிறது.




Dodampahala Central,
Dikwella,

My life story starts from my school age. That is 1980 period. I had a love affair in school time. I and my boyfriend had the love affair for 8 years. When the time passed that way, one day after school, we ran away to a faraway village. After that, husband earned from kuli (work for wages). We lived in a thatched house. My father and other relations were wealthy. But my husband is very poor, innocent and honest person. But, my father mother and other relations were against us. After such difficult time, we rented a house at Dikwalla town. When we were living like that, my husband joined fisheries. He decided to go to the sea. After one year, we bought a little land. We built a takaran (tin sheet)hut in it and lived a very difficult life where it was difficult even to earn the daily food. After that, when we were unable to live, I decided to go abroad. After deciding, I went abroad within one month. Then I worked so helplessly and sent money for my husband to build a house. After many months of sending money, we could build a part of three room house. The house was completely built from three months by sending hard earned money. When I came to Sri Lanka after one and half years, I was very happy to see my little house. After four weeks, I went abroad again to take furniture to our house. I worked for two years and came back after obtaining everything wanted for the family.
When I returned like that, I was very sad to see my husband sick and laying in the bed. I admitted him to a hospital after keeping all equipment at home, and started treatments for him. He recovered after one month and we lived happily after that. I got pregnant. I delivered the child in 1989. While we were living like that, husband stopped going to work. He became lazy. Again I went to Quait on 1988.04.01. When the time flew like that, I came back to Sri Lanka, after working three years. After that, a dark shadow fell on our lives. That is 2014.12.26. All my dreams were washed away by Tsunami wave. Everything I earned during many years, floated in the water. Nobody in my family helped me. I felt like my heart was about to break.
I was unable to think how to live the life. The villagers helped and built a house for us. At present, I live with lot of difficulties with my husband and daughter.



දොඩම්පහල, මධ්‍යම,
දික්වැල්ල.

මාගේ ජිවිත කතාව ආරම්භ වන්නේ මම පාසල් යන අවධියේ සිටයි. ඒ 1980 පමණ කාලයේදී මම පාසල් යන අතරතුරේදී ප්‍රේම සම්බන්ධතාවයක් පවත්වාගෙන ගියා. මමයි මම යාලු වෙලා හිටිය පිරිමි ළමයයි අවුරුදු 8 ක් පමණ සම්බන්ධතාවයක් පවත්වාගෙන ගියා. මෙහෙම කාලය ගත වෙද්දී අප දෙන්නා ගෙවල් වලට හොර රහසේම පාසල් නිම වී ඈත ගමකට පැනලා ගියා. එසේ ගොස් ටික කලක් මහත්තයා කුලී වැඩ කරලා තමයි කන්න දුන්නේ. අපි දෙන්නා අතු පැලක් සාදා ගෙන තමයි ජිවත් වුනේ. මගේ පැත්තේ පවුලේ අයට මෙන්ම මගේ තාත්තටත් ගොඩාක් සල්ලි තිබුනා. නමුත් මගේ මහත්තයා ගොඩාක් දුප්පත් පවුලක ඉතා අහිංසක අවංක පුද්ගලයෙකි. නමුත් මගේ තාත්තයි, අම්මයි අනෙක් පවුලේ අයයි අප දෙදෙනාට විරුද්ධව තමයි කටයුතු කලේ. මෙසේ ඉතා දුෂ්කර කාලයක් ගත කර අප දෙදෙනා දික්වැල්ල නගරයෙන් කුලියට කාමරයක් ගත්තා. මෙසේ ජිවත් වෙලා ඉන්නකොට මහත්තයා ධීවර කර්මාන්තයට එකතු උනා. එයා මුහුදු යන්න තීරණය කළා. මෙසේ අවුරුද්දක් පමණ ජිවත් වෙලා කුලී ගෙව ගෙවා ඉදල අපි දෙන්නා කුඩා ඉඩම් කෑල්ලක් ගත්තා. ඒකෙ කුඩා ටකරන් කාමරයක් අටවාගෙන ඉතා අසරණව එදා වේල හොයා ගන්නේද බොහොම අමාරුවෙන්. පසුව අපි දෙදෙනාට ජිවත් වෙන්න බැරි තැන තමයි මම රට යන්න තීරණය කලේ. මෙසේ තීරණය කර මාසයකින් රට බලා පිටත් විය. එහිදී මම ඉතා අසරණ ලෙස එහි වැඩපල කර මහත්තයාට සල්ලි යැවුවා ගෙයක් හැදීමට. මෙසේ මාස ගණනාවක්ම සල්ලි යවමින් කාමර 3 ක පුංචි ගෙයක බාගයක කොටසක් සාදා නිම කරන ලදී. මෙසේ මාස 3 ක් පමණ අපමණ දුක් විද සල්ලි හම්බ කර ගෙය සාදා නිම කරන ලදී. මම අවුරුදු 1 1/2 පමණ ලංකාවට එන විට මගේ පුංචි නිවහන දුටු විට මට මහත් සතුටක් ඇති විය. මෙසේ සති 4 කින් මම නැවත රට බලා ගියේ ගෙට අවශ්‍ය බදු භාණ්ඩ ලබා ගැනීමේ අධිෂ්ඨානයෙනි. මෙසේ අවුරුදු 2 ක් පමණ සේවය කර ගෙදරට අවශ්‍ය සියලු දේ රැගෙන නැවත ගෙදර බලා පිටත් විය.

මෙසේ මම ගෙදර එන විටදී මහත්තයා අසනීප වී එක්තැන් වී දැකීමෙන් මට මහත් වූ වේදනාවක් ඇති විය. මම ඔහුව රෝහලක නවත්වා රටින් ගෙනා බඩු ගෙදරට ගෙනවිත් දමා මහත්තයාගේ රෝගය සදහා ප්‍රතිකාර කිරීම පටන් ගත්තේය. පසුව මාසයක් පමණ වන විට මහත්තයා සුව වී අප දෙන්නා සතුටින් කාලය ගත කළේය. මම ළමයෙක් ගැබ් ගත්තේය. මට ළමයා හම්බ උනේ 1987 දීය. පසුව මෙසේ ජිවත් වෙද්දී මහත්තයා රස්සාවකට යාම නතර කර දැම්මේය. ඔහු කම්මැලි විය. මෙසේ සිටියදී අතේ සතේ නැති විය. මම නැවතත් 1988.04.01 නැවත කුවේට් රාජ්‍යයට ගියේය. මෙසේ කාලයක් ගත වෙද්දී මම අවුරුදු 3 ක් පමණ රට සේවය කර ලංකාවට පැමිණ ජිවත් විය. මෙසේ ලංකාවට පැමිණ ජිවත් වන විටදී මගේ ජිවිතයට කණකොකා හැඩලීය. ඒ 2004.12.26 වන දිනයි. මගේ සියලු සිතුම් පැතුම් ගේ දොර සියල්ලම සුනාමි රල පහර රැගෙන යන්නට ගියා. මම අවුරුදු ගණනාවක් සේවය කර හම්බ කරගත්තු සියලු දේ වතුරේ පාවී යන්නට ගියා. මගේ පවුලේ අයත් මට කිසි උපකාරයක් කලේ නැත. මගේ පපුව පැලෙන්නට යනවා මෙන් මට දැනීය.

දැන් ඉතින් කෙසේ හෝ ජීවිතය ගැට ගසා ගන්නේ කෙසේද සිතා ගත නොහැකි විය. පසුව ගමේ අය එකතු වී මට පුංචි ගෙයක් සාදා දුන්නේය. මගේ මහත්තයයි, මමයි, දුවයි අද වන විටත් දුක් සේ ජිවත් වෙනවා.

தொடம்பஹால மத்திய,
திக்வெல்ல.
எனது பாடசாலைக் காலத்தில் இருந்தே என் வாழ்க்கைக் கதையை ஆரம்பிக்கிறேன். 1980களில் பாடசாலை செல்லும்போதே நான் காதலித்துக்கொண்டிருந்தேன். நானும் நான் காதலித்த ஆணும் சுமார் 8 வருடங்களாகக் காதலித்துக்கொண்டிருந்தோம். இவ்வாறு காலம் கடத்திக்கொண்டிருக்கும்போது நாங்கள் இருவரும் பாடசாலை முடித்துவிட்டு வீட்டுக்கு இரகசியமாகத் தூர இடத்திற்கு ஓடிப்போனோம். அவ்வாறு சென்ற கொஞ்சக் காலம் எனது கணவர் கூலி வேலை செய்துதான் எனக்குச் சாப்பாடு கொடுத்தார். நாங்கள் இருவரும் ஓலைக் குடிசை ஒன்றைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தோம். எனது பக்கம் என் குடும்பத்தாருக்கும் எனது அப்பாவிற்கும் நிறையப் பணம் இருந்தது. ஆனால், எனது கணவர் வறுமையான குடும்பத்தைச் சோ்ந்தவர். அப்பாவி. நல்ல குணமுடையவர். எனினும் எனது அப்பா, அம்மா மற்ற என் குடும்பத்தார் அனைவரும் எங்கள் இருவருக்கும் எதிரான விடயங்களையே செய்தனர். இவ்வாறு மிகக் கஷ்ட காலத்தைக் கடத்திய நாங்கள் இருவரும் திக்வெல்ல நகரத்தில் வாடகைக்கு ஓர் அறையை வாங்கினோம். இங்கே வாழும்போது எனது கணவர் மீன்பிடித் தொழிலில் சோ்ந்தார். அவர் கடலுக்குச் செல்லத் தீர்மானித்தார். இவ்வாறு ஒரு வருடம் வாடகை கொடுத்துக்கொண்டே எங்களுக்கு என்று ஒரு சிறிய இடத்தை வாங்கினோம். அங்கே தகரத்தினால் ஒரு சின்ன அறையைச் செய்துகொண்டதுடன் மிகக் கஷ்டத்துடன் அன்றைய தினங்களுக்கான உணவைத் தேடிக்கொண்டதும் மிகக் கஷ்டத்தினாலாகும். பின்னர் எங்கள் இருவருக்கும் வாழ முடியாத காரணத்தால் நான் வெளிநாட்டிற்குச் செல்லத் தீர்மானித்தேன். இவ்வாறு தீர்மானித்து ஒரு மாதத்தில் நான் வெளிநாட்டிற்குப் போய்விட்டேன். நான் அங்கே கஷ்டத்துடன் வேலை செய்து இங்கே வீடு கட்டுவதற்காக என் கணவருக்குப் பணம் அனுப்பினேன். இவ்வாறு மாதக் கணக்கில் பணம் அனுப்பியதால் 3 அறைகளையும் வீட்டின் அரைவாசியையும் கட்டி முடித்திருந்தார். மீண்டும் 3 மாதங்கள் நான் கஷ்டத்துடன் அனுப்பிய பணத்தில் வீட்டைக் கட்டி முடித்திருந்தார். நான் ஒன்றரை வருடம் கழித்து நாட்டிற்குத் திரும்பி வந்து எனது வீட்டைப் பார்த்தபொழுது மிகச் சந்தோஷமடைந்தேன். மீண்டும் நான்கு வாரங்களுக்குப் பின்னர் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்ற அபிப்பிராயத்துடன் வெளிநாட்டிற்குச் சென்றேன். அவ்வாறு 2 வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்கைளயும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
இவ்வாறு நான் வீட்டிற்கு வரும்போது கணவர் சுகவீனமுற்று ஒரே இடத்தில் இருப்பதைக் கண்ட எனக்கு மிக வேதனை ஏற்பட்டது. நான் அவரை வைத்தியசாலையில் சோ்த்துவிட்டு வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த பொருட்களை வீட்டில் வைத்துவிட்டுக் கணவரின் நோயிற்குச் சிகிச்சை செய்ய முடிவெடுத்தேன். ஒரு மாதத்திற்குப் பின்னர் கணவர் குணமடைந்தவுடன் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தோம். நான் கருத்தரித்தேன். எனக்கு 1989இல் குழந்தை கிடைத்தது. இவ்வாறு இருக்கும்போது கணவர் வேலைக்குச் செல்வதை நிறுத்தினார். அவர் சோம்பேறியானார். இப்போது கையில் ஒரு சதமும் இல்லை. நான் மீண்டும் 1988இல் குவைத் நாட்டிற்குச் சென்றேன். அங்கே 5 வருடங்கள் வேலை செய்து விட்டு இலங்கையில் வந்து வாழ்ந்தேன். இவ்வாறு இலங்கையில் வந்து வாழும்போது எனது வாழ்வில் ஒரு துரதிஷ்டம் வந்து சோ்ந்தது. அதாவது 2014.12.26ஆம் திகதி எனது அனைத்து எதிர்பார்ப்புகள், கனவுகள், வீடு அனைத்தும் சுனாமி அலை வந்து அடித்துச் சென்றது. அனைத்தும் தண்ணீரில் மிதந்து சென்றது. எனது குடும்பத்தாரும் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனது இதயம் வெடிப்பதாக நான் உணர்ந்தேன்.
இப்பொழுது எப்படி வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது என்று தெரியாது இருந்தது. பின்பு கிராமத்தில் உள்ளவர்கள் ஒன்று சோ்ந்து எனக்கு ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொடுத்தார்கள். இன்று நானும், என் கணவரும், மகளும் துக்கத்தோடு வாழ்கிறோம்.




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License