My grandparents..

A young speaks of how she came to call her grandmother as 'mother' and her grandfather as 'father'


මගේ ආච්චි සහ සීයා

තරුණ කාන්තාවක් තමන්ගේ ආච්චි අම්මාට 'අම්මා' ලෙසටත් සීයාට 'තාත්තා' ලෙසටත් ආමන්ත්‍රණය කිරීමට සිදුවුනේ ඇයි දැයි පැහැදිලි කරයි.


என் தாத்தா, பாட்டி

'அம்மா' மற்றும் அவரது தாத்தா 'தகப்பன்' என்று பாட்டினை அழைப்பது எப்படி என்று ஒரு இளைஞர் பேசுகிறார்.





ආදරණිය චමින්ද අයියා වෙත,

මගේ නම ඩබ්.ඒ.කේ.දිලිනි සෙව්වන්දි. මම ඉපදුනේ 1999.11.20. දැන් මට වයස අවුරුදු 17 ක් වෙනවා. මගේ අම්මාගේ නම ඩබ්.සෝමලතා. තාත්තාගේ නම ඩබ්.ඒ.කේ.රුවන්. එත් ඒ දෙන්නම මගේ ලග නෑ. දැන් මගේ පවුලේ 5 දෙනෙක් ඉන්නවා. ඒ මමයි, ආච්ච්යි, අයියා, පුංචි, බාප්පා. ඒ කට්ටිය තමා මගේ පවුල. ආච්චිගේ නම කරුණාවතී, අයියගේ නම දමිත් ධනංජය, පුංචිගේ නම ඩබ්.සමන්ති, බාප්පගේ නම චන්දන. මගේ ගම කබුරුපිටිය. ගෙවල් තියෙන්නේ කබුරුපිටිය ටවුන් එකේමයි. මගේ ගෙදර ලිපිනය කොරටුවත්ත, මගමුරේ, කබුරුපිටිය. මම 1 වසරේ ඉදන් 11 ශ්‍රේණියට යනකන් ඉගෙනගත්තේ මාර/ කඹුරුපිටිය විද්‍යාලයට. O/L විභාගය ලියල ඉවරයි. A/L වලට ඉගෙන ගන්න මාර/ නාරන්දෙණිය ජාතික පාසලට යන්න හිතාගෙන ඉන්නවා.

ඇත්තටම මගේ ජිවිත කාලය පුරාවට අමතක නොවන මතකයක් තමයි මගේ අම්මයි, තාත්තයි. මගේ අම්මා සෝමලතා. මගේ අම්මා ගැන පොඩි හරි මතකයක් නෑ. අඩුම ගානේ එයාගේ කටහඩවත්, රූපයවත් මතක නෑ. මගේ අම්මාට මාව හම්බ උනේ කොළබ දී. මගේ අම්මාට මාව හම්බ වෙලා හරියටම මාස 03 කදී ඒ කියන්නේ 2000.04.30 මගේ අම්මා නැති උනා. ඒ නැති උනේ මොකද කියල තවමත් මම දන්නේ නෑ. ඒත් මම ඒ ගැන හොයනවා. අම්මා නැති උනාට පස්සේ මට කිරි දුන්නේ පුංචි අම්මා. අම්මා නැති උනාට පස්සේ තාත්තා මන් ගැන හොයල නෑ. අම්මාගේ තුන් මාසේ දානේ දෙන්නත් කලින් තාත්තා වෙන කෙනෙක්ව කසාද බැදලා. මොනවා උනත් මට දැන් අවුරුදු 17 ක් වෙනවා. එත් මම තාත්තාට තවමත් තාත්තා කියලා කථා කරලා නෑ. එයාව මට මුණ ගැහෙනවා. එත් මම කවදාවත් කතා කරලත් නෑ. කතා කරන්නෙත් නෑ. එයා හොද තාත්තා කෙනෙක් නෙමෙයි මම එයාට වෛර කරනවා. මොකද මගේ අම්මා නැති වෙන්න මූලික හේතුව එයා කියලා මට හිතෙන නිසා. මම මගේ පුංචි කාලේ ඉදන්ම දැනගත්තා මගේ අම්මා නැති වෙලා කියලා. එත් මට ඒ ගැන කිවුවේ නෑ කවුරුවත්. මට අම්මගෙයි, තාත්තගෙයි අඩුව පිරෙවුවේ ආච්චි. තාත්තාගේ අඩුව පිරෙවුවේ සීයා. මම පුංචි කාලේ ඉදන්ම ආච්චිටයි, සීයටයි, අම්මේ තාත්තේ කියලා කතා කලේ. මගේ අම්මා නැති වෙලා අවු.17 ට මට අම්මගේ අඩුව මේ දෙන්නා දැනෙන්න දුන්නේ නෑ. මම හැදුනේ වැඩුනේ සීයාගේ මහා ගෙදර. මම පොඩි කාලෙවදිපුරම හිටියේ ගෙදර නෙමෙයි. උඩහ ගෙදර විමල ඇන්ටිලයි ගෙදර මොකද චූටි අයියත් එක්ක සෙල්ලම් කර කර එහාට වෙලා හිටියා. කොහොම උනත් සීයා ලග තමයි මම පුංචි කාලේ ඉදන් හැදුනේ. සීයා කියල කිවුවේ තාත්තටනේ. ඉතින් තාත්තා මම 1 වසරේ ඉදලා 5 වසරට යනකන් තාත්තා මම ඉස්කෝලෙට එක්කන් ගියා. එක්කන් එනවා. මගේ සපත්තු දෙක හෝදලා දෙනවා. ඒ තරම් ආදරෙන් මාව බලා ගත්තා. මට කොහෙවත් යන්න දෙන්නෙත් නෑ. ඒ තරම් මාව පරිස්සම් කළා. මම ගෙදරදී වැරද්දක් කළාම මට ගහන්න එනකොට මම දුවගෙන යන්නේ තාත්තා ගාවට. ඊට පස්සේ කවුරුවත් එන්නේ නෑ මට අතවත් තියන්න. ඒ විදියට තමයි මගේ කාලය ගෙවිලා ගියේ. කොහොම උනත් මට අම්මගේ ටිකෙන් ටිකෙන් ටික දැනෙන්න ගත්තා. ඒ ඉස්කූලේ 9 වසරේදී වගේ. ඒ මොකද කියලා මට හිතා ගන්න බැරි උනා. කවුරුත් මේ තරම් මට ආදරේ කරද්දී ඒ අඩුව දැනුනේ ඇයි කියලා. කාලය හෙමිහිට ගෙවිලා යන කොට අප්‍රේල් මුල් සතියේ තාත්තා එක සැරේටම ලෙඩ උනා. තාත්තා ඉස්පිරිතාලේ එක්ක ගියාම ඩොක්ටර්සලා කිවුවේ තාත්තාට අංශභාගේ හැදිලා කියලා. එදා තමයි මගේ මුළු ලෝකයම කඩාගෙන වැටුනේ. මම ගොඩක් ආදරේ කරන තාත්තාට මේ වගේ දෙයක් උනා කියන එක මට හීනයක්. කොහොම උනත් අපි තාත්තාව සනීප කරගන්න පුළුවන් හැමදේම කළා. එත් හැමදාම කවුරුත් ලග තියා ගන්න බෑනේ. තාත්තා අපි එක්ක අවුරුදු සමරන්න හිටියා. අපේ තාත්තා 2014.04.17 දවසේ හවස අපි කවුරුත් දාල දුර ගමනක් ගියා. තාත්තා නැති උනාම මට හිතා ගන්න බැරි උනා මොනවා කරන්නද කියලා. තාත්තගේ අවසාන වැඩ කටයුතු ඉවර උනායින් පස්සේ ඉදන් මම ඉස්කෝලේ ගියා. ගියාට වැඩක් නෑ. තාත්තා කොයි වෙලෙත් මතක් වෙනවා. කිසි වැඩක් කරන්න බැරි උනා. ගෙදර ගියාම මොකක් හරි වැරද්දක් කලාම මට ගහන්න එලවාගෙන එනකොට යන්නේ තාත්තගේ කාමරේට. තාත්තා කියා ගෙන එනකොට නිකන්ම අහුවෙනවා. එතකොට තමයි මතක් වෙන්නේ තාත්තා කාමරේ නැහැ කියල.ගෙදර යට කොහොම දැනුනත් මට දැනෙන්නේ තාත්තා මගේ ගාව තවමත් ඉන්නවා කියලා. කොහොම උනත් මම මොනවා හරි දෙයක් කරනවානම් ඒ මතක අතරේ තාත්තා ඉන්නවා. සමහර දවසට මම මල් නෙලනකොට තාත්තා මතක් වෙනවා. මොකද තාත්තා මල් නෙලන හැටි මැවිලා පෙනෙනවා. මොනවා උනත් මම මේ හැමදේම දරාගෙන ජිවත් වෙන්න උත්සාහ කරනවා. අම්මා පුංචි කාලේදී නැති උනා. තාත්තා ඕනම කාලේදී නැති උනා. මේ දේවල් නිසා මට මගේ ජිවිත කාලය පුරාම අමතක නොවන දෙන්නා තමයි මගේ අම්මයි තාත්තයි. අපේ ලග ඉන්න අය හැමදාම අපේ ලග තියා ගන්න බෑ. මොකද කවද හරි එයාලට අපේ ජිවිත වලින් වෙන්වෙලා යන්න වෙනවා. ඒක මට විතරක් නෙමෙයි හැමෝටම අයිති දෙයක් නිසා මම හිත හදා ගෙන ඉන්නවා. මම තනියෙන් ඉන්නකොට මේ හැමදෙයක්ම මට මතක් වෙනවා. ඒ වෙලාවට මම දුක නැති වෙන්න සින්දු අහනවා. මෙතෙක් කාලයක් පුරාවට මට අමතක කරන්න බැරි දෙන්නා මගේ අම්මා, තාත්තා තමයි.

දැන් වන විට මට සාමාන්‍ය පෙළ විභාගයට මුහුණ දීල ඉන්නේ. ප්‍රතිඵලත් ආවා. මගේ සා.පෙ.ප්‍රතිඵල බුද්ධාගම - C, සිංහල - C, භූගෝල විද්‍යාව - C, නැටුම් - C, ඉතිහාසය - S, විද්‍යාව - S, ICT - S, ගණිතය/ ඉංග්‍රීසි - W තමයි. මම නැවතත් සා.පෙළ විභාගයේ ගණිතය, ඉංග්‍රීසි ආයෙත් ලියන්න හිතාගෙන ඉන්නවා. මම හිතාගෙන ඉන්නේ නාරන්දෙණිය ජාතික පාසලට යන්න. මම වැඩියෙන් නාරන්දෙණිය ඉස්කෝලෙට යන්න හිතාගෙන ඉන්නේ මගේ මගදී කඩා කප්පල් වුන Sports කරන එක ආයෙත් පටන් ගන්න. සා.පෙ.ප්‍රතිපල එනකන් සංහිදියා ආයතනයේ (Sri Lanka Unites) එකේ කෝස් එක කරන්න ගියා. Sri Lanka Unites එකට ගියාම ඉස්කෝලෙදි වෙන්වෙලා තිබුන යාළුකම් ආයෙත් පටන් ගන්නවා. කවදාවත් දැකපු නැති, කතා කරලා නැති ළමයි මගේ හොද යාළුවො උනා. එතරම් බැදීමක් එයාල අතර ඇති උනා. Sri Lanka Unites එකට ඉගෙන ගන්න ගිහින් දැන් මාස 03 ක් වෙනවා. අපේ කෝස් එකේ මාස කාලය අවු.05 ක් වෙනවා. තව මාස 2යි අපට Sri Lanka Unites එකේ ඉගෙන ගන්නේ. මේ මාස 03 ක් වැනි පොඩි කාලයට අපි ගොඩක් දේවල් ඉගෙන ගත්තා. Sri Lanka Unites එකේ අපට උගන්වන්නේ IT, බිස්නස්. ඉංග්‍රීසි නව නායකත්ව පුහුණු තව ගොඩාක් දේවල් කියා දෙනවා. අපට උගන්වන්න ඉන්නේ චමින්ද අයියා. කපිල සර්, ශකිලා අයියා. ජෙනිෆ අපිට උගන්වනවා. අපි හරිම විනෝදයෙන් යාලුවොත් එක්ක, සර් ලත් එක්ක වැඩ කරන්නේ. අපි විනෝද වෙනවා. වාදී වෙලා හැමදාම බැනුම් අහන්න වෙනවා. සමහර දවස් වලට කියනවා අපි තමයි නරකම සෙට් එක කියලා. මොකද අපි ගිහිල්ලා මේ මාස 3 ට ෆෑන් එකක් කැඩුවා. Computer Table එකක් කැඩුවා. සීනී දාල තිබුන වීදුරු බෝතලයක් කැඩුවා, පුටු කැඩුවා. ඉතින් මේ වගේ දේවල් කරනකොට හොද ළමයි කියලා කියන්න පුලුවන්ද? අපි නරක සෙට් එක කියන එක ඇත්ත. අපි සතියක් හොදට හිටියොත් ඊලග සතියේ නරකයි. අන්න එහෙමයි අපේ වැඩ. පන්තියේ වැඩ වලට අමතරව බලු පටියෙකුත්බලා ගන්නවා. A/L වලට ඉස්කෝලෙකට යනකන් මම මේ දේවල් තමයි කරන්නේ.

මටත් ඇත්තටම අහස උසට බලාපොරොත්තු ගොඩාක් තියනවා. මම තවදුරටත් ඉගෙන ගෙන කැමති රටට වැඩක් කරන්න පුළුවන් කෙනෙක් වෙන්න. මම වෙලාවකට හිතෙනවා Sri Lanka Unites එකෙන් මට දුර ගමනක් යන්න පුළුවන් කියලා. ඒත් මගේ අනාගත බලාපොරොත්තුව වෙලා තියෙන්නේ Navy Officer කෙනෙක් වෙන්න ක්‍රීඩා වලින් ඉදිරියට ගිහින්. හැබැයි ඒ දේ කරන්න මට ගොඩාක් හල හැප්පීම් වලට මුහුණ දෙන්න වෙනවා. මොකද මගේ ගෙදරින් කැමති නෑ මම Navy එකට යනවට. මොකද ඒ වගේ තැනක් ගැහැණු ළමයෙකුට ගැලපෙන්නේ නෑ කියන මතයේ ඉන්න නිසා. මොනවා උනත් මම මගේ Target එකට යනවා. මොකද ඒ දේ මගේ බලාපොරොත්තුව නිසා. මට Navy ඒකට යන්න බැරි උනොත් මම හිතාගෙන ඉන්නේ වන සංරක්ෂණ එකට යන්න. Sri Lanka Unites එකෙනුත් ලොකු හයියක් වේවි කියල හිතනවා. තව ක්‍රීඩා වලින් ඉදිරියට යන්න හිතාගෙන ඉන්නවා. මම තව ගොඩක් කැමති හීනයක් තමයි Volley Ball වලින් ගිහින් ජාත්‍යාන්තර ටීම් එකට සෙල්ලම් කරන එක තමයි මගේ ලොකුම බලාපොරොත්තුව. හීනය වෙලා තියෙන්නේ. මම ඒ දේ කොහොම හරි කරනවා කියන Target එක තමයි මගේ බලාපොරොත්තුව. මම Navy එකට ගිහින් Navy Officer කෙනෙක් වෙලා මගේ අම්මා (ආච්චි) ඉස්සර මන් වෙනුවෙන් විදපු දුක් වලට වටිනාකමක් දෙන්න හිතාගෙන ඉන්නවා.

මම මගේ ජිවිත කතාව කාටවත් හරියට කිවුවේ නෑ. මොකද මම එහෙම කිවුවොත් සමහර අය හිතාවි මම අනුකම්පාව අරගන්න එහෙම කියනවා කියලා. මගේ ජිවිතයේ මම මේ හැමෝමත් එක්ක හිනා වෙලා සතුටින් හිටියට මම මගේ හිත යටින් ජිවිත කාලය පුරාම දුක් වෙන කෙනෙක්. හැමෝම මම එහෙම ඉද්දි හිතන්නේ මට දුක කියන එක දැනෙන්නේ නෑ. මාරු ආතල් එකේ ඉන්න කෙනෙක් කියලා. හැබැයි මම එහෙම ඉන්නේ මට මගේ දුක නැතිව නිදහසේ ඉන්න පුළුවන් නිසා. මගේ ජිවිතයේ ඇත්ත කතාව දන්නේ කිශිප දෙනයි. ඒ ය මට ගොඩාක් සනීප නිසයි දන්නේ. සදුනිකා, මලීෂා, උමාෂා, දුලක්ෂි, නදීර, කවිෂ්ක මේ කට්ටිය තමා මගේ කතාව හරියටම දන්නේ. ඒත් මම ආශ්‍රය කරන සමහර ය දන්නෙත් නෑ. මේ කතාව මෙහෙම ලියලා ඉවර වෙද්දී මගේ හිතට ලොකු සහනයක් දැනෙනවා. හැමදාම හිත ඇතුලේ දුක තියාගෙන විදවනවට වඩා මේ කතාව මට කියන්න බැරි නිසා මම මේ කතාව වචන වලට ලිවුවේ. දැන් හිතට දැනෙන දුක ටිකක් හරි අඩු වෙලා තියෙන නිසා මට ලොකු සතුටක් දැනෙනවා.

මෙයට දයාබර නැගණිය
(දිලිනි සෙව්වන්දි)


2016.04.05
அன்புள்ள சமிந்த அண்ணா அவர்களுக்கு,
எனது பெயர் W.A.K. திலினி செவ்வந்தி. நான் பிறந்தது 1999.11.20இல் ஆகும். இப்போது எனக்கு 17 வயதாகிறது. எனது அம்மாவின் பெயர் W. சோமலதா. அப்பாவின் பெயர் W.A.K.ருவன். ஆனால், அவர்கள் இருவரும் என் அருகில் இல்லை. இப்பொழுது எனது குடும்பத்தில் 05 போ் இருக்கிறார்கள். அது நான், பாட்டி, அண்ணா, சித்தி, சித்தப்பா இவர்கள் தான் என் குடும்பத்தினர். பாட்டியின் பெயர் கருணாவதி. அண்ணாவின் பெயர் தமித் தனஞ்ஜய. சித்தியின் பெயர் W.சமன்தி. சித்தப்பாவின் பெயர் சந்தன. எனது ஊர் கம்புருபிட்டிய வீடு கம்புருபிட்டிய நகரத்திலேயே தான் இருக்கிறது. எனது வீட்டு முகவரி கொரட்டு வத்த, மகமுரே, கம்புருபிட்டிய. நான் 1 வகுப்பில் இருந்து 11ஆம் வகுப்பு வரை படித்தது மார/ கம்புருபிட்டிய மகா வித்தியாலயத்தில். சாதாரண தரப் பரீட்சை எழுதி முடித்துவிட்டேன். உயர் தரம் படிப்பதற்கு மார/ நாரந்தெனிய தேசியப் பாடசாலைக்குச் செல்வதற்கு எண்ணியுள்ளேன்.
உண்மையாகவே என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஞாபகம் தான் எனது அம்மா, அப்பா. எனது அம்மா சோமலதா. எனது அம்மாவைப் பற்றிக் கொஞ்சம் கூட ஞாபகமில்லை. குறைந்தளவில் அவரின் குரல், உருவம் கூட ஞாபகம் இல்லை. என் அம்மாவிற்கு நான் கிடைத்தது கொழும்பிலாகும். என் அம்மாவிற்கு நான் கிடைத்து மூன்று மாதத்தில், அதாவது 2000.04.30 என் அம்மா இறந்துவிட்டார். அவர் இறந்தது எவ்வாறு என்று இன்னும் எனக்குத் தெரியாது. நான் அதைப்பற்றித் தேடுகிறேன். அம்மா இறந்ததன் பின்னர் எனக்குப் பால் கொடுத்தது எனது சித்தி. அம்மா இறந்ததன் பின்னர் அப்பா என்னைப்பற்றி அக்கறை காட்டவில்லையாம். அம்மாவின் மூன்று மாதக் கரும காரியங்கள் செய்வதற்கு முன்பே அப்பா வேறொருவரைத் திருமணம் முடித்துவிட்டாராம். என்னவெனினும் இப்போது எனக்கு 17 வயதாகிறது. ஆனால், நான் அப்பாவை இன்னும் நான் அப்பா என்று கூப்பிட்டது கிடையாது. அவரை நான் சந்திப்பேன். ஆனால், அவருடன் நான் ஒரு வார்த்தையேனும் கதைத்ததும் இல்லை. கதைக்கவும் மாட்டேன். அவர் ஒரு நல்ல அப்பா இல்லை. அவரை நான் வெறுக்கிறேன். ஏனென்றால், என் அம்மா இறப்பதற்கு அடிப்படைக் காரணம் அவர்தான் என்று நான் நினைப்பதால் ஆகும். நான் எனது சிறு வயதிலிருந்தே தெரிந்துகொண்டேன் என் அம்மா இறந்துவிட்டார் என்று. ஆனால், இதைப்பற்றி யாரும் எனக்குச் சொல்லவில்லை. எனக்கு அம்மா அப்பாவின் குறையைத் தெரிய வைக்கவில்லை. ஏனென்றால், எனது அம்மாவின் குறையைத் தீர்த்தவர் எனது பாட்டி. அப்பாவின் குறையைத் தீர்த்தவர் தாத்தா. நான் சிறு வயதிலிருந்தே அப்பா அம்மா எனக் கூப்பிட்டது தாத்தாவையும் பாட்டியையும் தான். எனது அம்மா இறந்து 17 வருடமாகியும் இவர்கள் இருவரும் அம்மாவின் குறையைத் தெரிய விடவில்லை. நான் தாத்தாவின் பெரிய வீட்டிலேயே தான் வளர்ந்தேன். நான் சிறு வயதில் அதிகமாக வீட்டில் இருக்கவில்லை. உடகஹாகெதர விமலா மாமியின் வீட்டில் சின்ன அண்ணாவுடன் விளையாடிக்கொண்டு அங்கே தான் இருந்தேன். எவ்வாறாயினும் தாத்தாவிடம் தான் நான் சிறு வயதிலிரந்து வளர்ந்தேன். தாத்தா என்று சொன்னது அப்பாவைத் தானே. அப்பா என்னை முதலாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை என்னைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்வார். கூட்டி வருவார். எனது பாதணிகளைக் கழுவித் தருவார். அவ்வாறு என்னைப் பாதுகாத்தவர். நான் வீட்டில் தவறு செய்து என்னை அடிக்க வந்தால் நான் ஓடிச் செல்வது அப்பாவிடம். அதற்குப் பிறகு யாரும் வரமாட்டார்கள் என் மேல் கை வைக்கவும் மாட்டார்கள். அவ்வாறு தான் என் காலம் கடந்தது. எவ்வாறாயினும் எனக்கு அம்மாவைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் தெரிய வந்தது. அது நான் பாடசாலையைில் 9ஆம் தரம் கற்கும்போது. அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அனைவரும் எனக்கு இப்படி அன்பு செலுத்தும்போது இந்தக் குறை எனக்குத் தெரியவந்தது ஏன் என்று புரியவில்லை. காலம் மெதுவாகக் கடந்து போகும்போது 2014 சித்திரை முதல் வாரத்தில் அப்பா ஒரேயடியாக நோயில் விழுந்தார். அப்பாவை வைத்தியசாலைக்குக் கூட்டிச் சென்றோம். வைத்தியர்கள் அப்பாவிற்குப் பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார்கள். அன்றுதான் என் முழு உலகமும் இடிந்து விழுந்தது. எனக்கு அதிகமாக அன்பு செலுத்தும் என் அப்பாவிற்கு இப்படி நடந்தது என்குக் கனவாக இருந்தது. எப்படியும் எங்கள் அப்பாவைக் குணமாக்குவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். ஆனால், ஒருவரை எந்நாளும் எம் பக்கத்தில் வைத்துக்கொள்ள முடியாதுதானே. அப்பா எங்களுடன் பெருநாள் கொண்டாட இருந்தார். எங்கள் அப்பா 2014.04.17ஆம் திகதி மாலை வேளையில் எங்கள் அனைவரையும் விட்டுவிட்டு நீண்ட தூரம் போய்விட்டார். அப்பா இறந்தவுடன் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அப்பாவின் இறுதிக் கிரியைகள் அனைத்தும் முடிந்தவுடன் நான் மீண்டும் பாடசாலைக்குச் சென்றேன். போனதற்குப் பிரயோசனமில்லை. அப்பாவையே எந்நேரமும் ஞாபகம் வந்தது. எந்தவொரு வேலையும் செய்ய முடியவில்லை. வீட்டுக்குப் போனதும் ஏதாவது தவறு செய்தால் என்னை அடிப்பதற்குத் துரத்தும் போது நான் ஓடிச் செல்வது அப்பாவின் அறைக்கு அப்பா என்று சொல்லிக்கொண்டு போகும் போது அகப்பட்டுக்கொள்வேன். அப்போது தான் அப்பா அறையில் இல்லை என்று ஞாபகம் வரும். வீட்டாருக்கு எப்படியோ தெரியாது எனக்கு என் அருகே அப்பா இருப்பதாகவே உணர்கிறேன். எவ்வாறாயினும் நான எதைச் செய்யும்பொழுது அந்த ஞாபகத்தில் என் அப்பா இருக்கிறார். சில நாட்கள் நான் பூ பறிக்கும்போது அப்பா ஞாபகத்திற்கு வருவார். ஏனென்றால், அப்பா பூ பறிக்கும் விதம் என் கண்முன் தோன்றும். என்னவெனினும் நான் இவைகளைப் பொறுத்துக்கொண்டு வாழ்வதற்கு முயற்சிப்பேன். அம்மா நான் சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அப்பா தேவையான காலத்தில் இறந்துவிட்டார். இக்காரணங்களால் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத இருவர் தான் என் அம்மாவும், அப்பாவும். எம்முடன் இருப்பவர்களை எந்நாளும் எங்களோடு வைத்துக்கொள்ள முடியாது தானே. ஏனென்றால், எப்போதாவது ஒரு நாள் அவர்கள் எங்கள் வாழ்க்கையில் இருந்து விலகிச் சென்றேயாக வேண்டும். அது எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருத்தமானது என்று நான் மனதைத் திடப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். நான் தனிமையில் இருக்கும்போது இவை அனைத்தும் எனக்கும் ஞாபகம் வரும். அந்நேரம் நான் துக்கம் மறக்கப் பாடல் கேட்பேன். இதுவரை காலமும் மறக்க முடியாத இருவர்தான் என் அம்மாவும் அப்பாவும்.
இப்பொழுது நான் சாதாரண தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்துவிட்டு இருகிகறேன். பெறுபேறும் வந்துவிட்டது. எனது சாதாரண தரப் பெறுபேறு பௌத்தம் = C, சிங்களம் = C, பௌதீக விஞ்ஞானம் = C, நடனம் = C, வரலாறு = S, விஞ்ஞானம் = S, ICT = S, கணிதம்/ ஆங்கிலம் = W ஆகும். நான் மீண்டும் சாதாரண தரப் பரீட்சையில் கணிதமும் ஆங்கிலமும் எழுதுவதற்கு எண்ணியுள்ளேன். அத்தோடு நான் நாரந்தெனிய தேசியப் பாடசாலைக்குச் செல்லவும் உத்தேசித்துள்ளேன். நான் அதிகமாக நாரந்தெனிய பாடசாலைக்குச் செல்ல நினைப்பது நான் இடை நடுவே நிறுத்திய விளையாட்டுக்களை மீண்டும் தொடங்குவதற்காகவேயுமாகும். சாதாரண தரப் பெறுபேறு வரும்வரை நல்லிணக்க நிறுவனத்தின் (Sri Lanka Unites) பயிற்சி ஒன்றைப் பெற்றுக்கொள்ளச் சென்றேன். Sri Lanka Unitesக்குச் சென்றவுடன் பாடசாலையில் பிரிந்திருந்த நட்பு மீண்டும் புதிதாக மலர்ந்தது. எப்பொழுதும் கண்டிராத, கதைத்தில்லாதவர்கள் என்னுடன் நல்ல நண்பர் ஆனார்கள். அவ்வாறன ஒரு பிணைப்பு அவர்களுடன் உருவானது. Sri Lanka Unitesஇல் படிக்கச் சென்று இப்பொழுது மூன்று மாதமாகிறது. எங்கள் பயிற்சியின் காலவரையறை 05 மாதங்களாகும். 03 மாதங்கள் தான் Sri Lanka Unitesஇல் படித்தேன். இக்குறுகிய 03 மாதங்களில் நாங்கள் அதிகமாகப் படித்துள்ளோம். Sri Lanka Unitesஇல் எங்களுக்கு IT வணிகம், ஆங்கிலம் மேலும் தலைமைத்துவப் பயிற்சி போன்றவற்றைப் படிப்பித்தார்கள். சமிந்த அண்ணா, கபில சோ், ஷகில அண்ணா, ஜேதீவ் ஆகியோர் எங்களுக்குப் படிப்பிப்பார்கள். நாங்கள் மிக வினோதமாக நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனும் வேலை செய்வோம். நாங்கள் அதிகமாக வினோதமடைந்து எந்நாளும் பேச்சு வாங்குவோம். சில நாட்களில் கூறுவர் நாங்கள் தான் மோசமான குழு என்று. ஏனென்றால் நாங்கள் வந்து இந்த 03 மாதத்தில் காற்றாடி ஒன்றையும் உடைத்து விட்டோம். Computer table ஒன்றையும் உடைத்து விட்டோம். சீனி போட்டு வைத்திருந்த போத்தலையும் உடைத்து விட்டோம். கதிரையை உடைத்து விட்டோம். இவ்வாறான வேலைகளைச் செய்தால் நல்ல பிள்ளைகள் என்று சொல்ல முடியுமா? நாங்கள் மோசமான குழு என்பது உண்மை. நாங்கள் ஒரு கிழமை ஒழுக்கமாக இருந்தால், அடுத்த வாரம் மோசம். அப்படித் தான் எங்கள் வேலை. வகுப்பு வேலையோடு நாயக்குட்டி ஒன்றையும் கவனித்துக்கொள்வேன். A/L க்குப் பாடசாலை செல்லும் வரை நான் இவைகளைத் தான் செய்துகொண்டிருப்பேன்.
எனக்கு உண்மையாக வானத்தின் உயரமளவிற்கு எதிர்பார்ப்புகள் இருக்கிறது. நான் இன்னும் படித்து நாட்டிற்கு ஒரு நல்ல சேவை செய்ய வேண்டும். நான் ஒரு சில நேரம் நினைப்பேன் Sri Lanka Unitesமூலம் எனக்கு நீண்ட தூரம் பயணிக்க முடியும் என்று. ஆனாலும் எனது எதிர்கால எதிர்பார்ப்பாக இருப்பது Navy officer (கடற்படை) ஆவதுடன் விளையாட்டுத்துறையில் முன்னோக்கிச் செல்வது. இதைச் செய்வதற்கு நான் அதிக சவால்களுக்கு முகம் கொடுக்க நோிடும். ஏனென்றால், நான் கடற்படைக்கு (Navy officer) செல்வது என் வீட்டாருக்கு விருப்பமில்லை. ஏனென்றால், இவ்வாறான இடங்கள் பெண் பிள்ளைகளுக்குப் பொருத்தமற்றது எனும் எண்ணத்தில் இருப்பதாலாகும். என்னவானாலும் நான் எனது எல்லைக்கு (target) செல்வேன். ஏனெனில், அது எனது எதிர்பார்ப்பு என்பதாலாகும். எனக்கு Navyக்குப் போக முடியாமல் போனால் வனவளப் பாதுகாப்பிற்குப் போவதற்கு நான் நினைத்துள்ளேன். Sri Lanka Unites லும் பெரிய உந்துதல் ஒன்று கிடைக்குமென்று நினைக்கிறேன். மேலும், விளையாட்டிலும் முன்னோக்கிச் செல்ல நினைத்துள்ளேன். எனது நீண்ட நாள் விருப்பமும் ஆசையும் எதிர்பார்ப்பும் தான் இலங்கைக் கரப்பந்தாட்ட (volley ball) தேசிய அணியில் இணைந்து சர்வதேச மட்டத்தில் விளையாட வேண்டும் என்பதாகும். அது எனது கனவாக உள்ளது. நான் அவைகளை எப்படியாவது செய்வேன். அது தான் எனது எல்லை( target) எதிர்பார்ப்பு. நான் Navy க்குச் சென்று Navy officer ஆகியதுடன் எனது அம்மா (பாட்டி) முன்பு என்னால் பட்ட கஷ்டங்களுக்க நல்ல ஒரு மதிப்பைப் பெற்றுக்கொடுக்க நினைத்துள்ளேன்.
நான் என் வாழ்க்கைக் கதையை யாருக்கும் கூறியதில்லை. நான் அவ்வாறு சொன்னால் சிலர் நான் அவர்களின் அனுதாபங்களைப் பெற்றுக்கொள்ளச் சொல்வதாக நினைப்பார்கள். நான் என் வாழ்வில் அனைவருடனும் சிரித்துச் சந்தோஷமாக இருந்தாலும் நான் எனது இதயத்தினுள் வாழ்க்கை முழுவதும் துக்கப்படுபவள். எல்லோரும் நான் இப்படி இருக்கும்போது எனக்குத் துன்பம் என்பது தெரிவதில்லை. நான் சந்தோஷமாக இருப்பதாக நினைப்பார்கள். ஆனால். நான் அப்படி இருப்பது எனக்கு நான் துக்கமில்லாமல் சுதந்திரமாக இரக்க முடியுமென்பதாலாகும். என் வாழ்வின் உண்மை நிலை தெரிந்தவர்கள் ஒரு சிலரே. எனக்கு மிக நெருங்கியவர்கள் என்பதால் அவர்களுக்குத் தெரியும். சந்துனிக்கா, மலிஷா, உமாஷா, துலக்ஸி, நதீர, கவிஷ்க்கஇவர்கள் தான் எனது கதையை நன்கு அறிந்தவர்கள். ஆனால், என்னொடு பழகும் சிலருக்குத் தெரியாது. இக்கதையை இவ்வாறு எழுதி முடிக்கும்போது என் மனதிற்குப் பெரிய ஆறுதல் ஒன்று கிடைக்கிறது. எந்நாளும் துன்பத்தை மனதில் வைத்துக்கொண்டு அவதிப்படுவதைவிடவும் எனக்குக் கதையாகச் சொல்ல முடியாது என்பதாலும் என் கதையை எழுத்து மூலம் எழுதினேன். இப்பொழுது மனதில் இருந்த துக்கம் கொஞ்சமாவது குறைந்ததனால் எனக்குப் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படிக்கு அன்புள்ள தங்கை
திலினி செவ்வந்தி




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License