The day my father lost his job

A daughter expresses herself on the most unforgettable day of her life


මගේ පියාට රැකියාව අහිමි වූ දවස

දැරිවියක් තම ජීවිත්යේ ව්ඩාත්ම අමතක නොවන දවස ග් ඇන් තම අදහස් ප්‍රකාශ කරයි.


என் அப்பா வேலை இழந்த நாள்

ஒரு மகள் தன் வாழ்வின் மிகவும் மறக்க முடியாத நாளில் தன்னை வெளிப்படுத்துகிறாள்



E.P. Chamika Kaushalli,
“Lakshila Cottage”,
Iriyathota,
Kamburupitiya.
28.04.2016

The Principal,
Mara/Iriyathota Maha Vidyalaya,
Kamburupitiya,

Dear Principal,
There are five members in my family. They are: father, mother, sister, brother and myself. My father is E.P. Kumudupala. My mother is G. Lathika Damayanthi. My sister is E.P. Lakshila Kaushalli and my brother is Sasindu Lakshan. My father is a farmer. But, mother does nothing. She is a house wife.
My sister, my brother and I are studying. My sister is studying for an external degree. I am preparing for G.C.E. A/L Examination-2018. My brother studies at Grade 11. These are our family details.
The most unforgettable day in my life is the day when my father lost his job. We were sorrowful that day. My brother was little at that time and he didn’t feel it very much. Therefore he doesn’t know it very much. My father was a Security Officer in Sewanagala Sugar Company. He lost his job in 2003. After that day, my father is doing farming. Although we were sad that day, we are happy now. This is the unforgettable experience in my life.
Presently, I hope to successfully complete the G.C.E. Advanced Level Examination and to obtain a good occupation. I study Sinhala, Buddhist Civilization and Geography. I am much interested in studies. I try hard to realize my dream of becoming a teacher. Even if I couldn’t be a teacher, I wish at least to get a government job to realize the dreams of my parents.
My ambition is to become a teacher. It is my dream and my only wish from my childhood. I have told it to my parents. They are also eager about my ambition. I will be a good teacher and I will serve the country with my best.
Now I am about to finish this letter. I had all these in my mind and I had nobody to tell them. This letter helped so much today. Also it was useful for me to tell about my family and my ambitions. There are lot of people like me who want to express their thoughts. I expect, they also will read my little letter and write their ideas like me.
Activities like this are very rare at present. Most people are hiding their ideas within themselves and suffer a lot. I think you also have got opportunity to write like this. Therefore, write down your ideas and post it to somebody whoever you like. I conclude here. That is why I wrote this.

Signed,
Chamika.




ஈ. பீ. சாமிக்கா கௌசள்ளி,
லக்ஸிலா இல்லம்,
ஈரியதொட்ட,
கம்புருபிட்டிய.
2016.04.28.
மதிப்பிற்குரிய அதிபர்,
மார/ ஈரியதொட்ட மகா வித்தியாலயம்,
கம்புருபிட்டிய.
மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே,
எனது குடும்பத்தின் தனிப்பட்ட தகவல்கள் என்றால், எனது குடும்பத்தில் இருப்பவர்கள் அப்பா, அம்மா, அக்கா, என்னுடன் தம்பியுமாகும். எனது அப்பாவின் பெயர் ஈ. பீ. குசுமபா. எனது அம்மாவின் பெயர் ஜீ. லனிக்கா தமயந்தி. எனது அக்காவின் பெயர் ஈ. பீ. லக்ஸிலா கௌசள்ளி. எனது பெயர் ஈ. பீ. சாமிக்கா கௌசள்ளி. எனது தம்பியின் பெயர் ஈ. பீ. சசிந்து லக்ஸான். எனது அப்பா விவசாயம் தான் செய்கிறார். அம்மா ஒன்னுமே செய்வதில்லை. அவள் இல்லத்தரசி. எனது அக்காவும், நானும் தம்பியும் இன்னும் படிக்கிறோம். எனது அம்மா வெளிவாரிப் பட்டதாரியாகப் படிக்கிறாள். நான் 2018ஆம் வருடத்தில் க.பொ.த. உயர்தரத்திற்கு முகம் கொடுக்கவுள்ளேன். எனது தம்பி 11ஆம் தரத்தில் தான் படிக்கிறான். இது தான் எனது குடும்பத்தின் தனிப்பட்ட தகவல்களாகும்.
நான் எனது வாழ்க்கையில் கண்ட மறக்க முடியாத அனுபவம்தான் எனது அப்பா செய்து கொண்டுபோன வேலை எனது அப்பாவிற்கு இல்லாமல் போன அந்த நாள். அன்று நான் மட்டுமல்ல எனது அம்மா, அதேபோன்று எனது அப்பா, எனது அக்கா, நானும் மிகவும் துக்கமடைந்தேன். அந்த நாளில் எனது தம்பி மிகச் சிறியவன். அவனுக்கு அது ஒன்றும் விளங்காது. அதனால் அவனுக்கு அதிகமாக அதைப்பற்றித் தெரியாது. எனது அப்பா செவனகல சீனித் தொழிற்சாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகத் தொழில்தான் செய்தார். 2003 ஆண்டில்தான் எனது அப்பா செய்துகொண்டு போன வேலை இல்லாமல் போனது. அன்று எனது அப்பாவின் வேலை இல்லாமல் போனதிலிருந்து எனது அப்பா இன்று வரை செய்துகொண்டு போவது விவசாயமாகும். நானும் எனது குடும்பத்தாரும் அப்பாவிற்கு வேலை இல்லாமல் போன தினத்தன்று மிகவும் துக்கமடைந்தோம். தாம் ஆனால் இன்று நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். இது தான் என் வாழ்க்கையில் நான் கண்ட மறக்க முடியாத அனுபவம்.
எனது நிகழ்கால நிலைமைதான் நன்றாக உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து நல்ல ஒரு தொழில் செய்வதாகும். நான் இப்பொழுது உயர்தரத்தில் படிக்கும் பாடங்களானது சிங்களம், பௌத்த நாகரிகம், பூகோள விஞ்ஞானமுமாகும். நான் இதற்காக மிகவும் முயற்சி செய்கிறேன். எப்படியாவது வெற்றி கண்டு எனது ஒரே எதிர்பார்ப்பான ஆசிரியயையாகும் எனது கனவை எப்போதாவது நிறைவேற்றிக்கொள்ள மிகவும் முயற்சி செய்கிறேன். எனக்கு எனது கனவை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனதெனில் எப்போதாவது அரச சேவை செய்து எனது அம்மா, அப்பாவின் கனவை நிறைவேற்றுவதே எனது நிகழ்கால நிலைமை.
எனது எதிர்கால எதிர்பார்ப்பு தான் ஆசிரியையாவது. எனது சிறு பராயத்திலிருந்து எனது ஒரே கனவு போன்றே எனது ஒரே எதிர்பார்ப்புதான் இந்தக் கனவு. எனது இந்த எதிர்பார்ப்பு சிறு வயதில் மட்டுமல்ல இப்பொழுதும் என் கனவினுள் அந்தச் சிறிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோன்று தான் நான் அதுபற்றி எனது அம்மா, அப்பா இருவருக்கும் சொல்லியிருக்கிறேன். எனது இந்த எதிர்பார்ப்பைப் பற்றி அவர்கள் இருவரும் மிகவும் ஆசையுடனேயே இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி நான் நாட்டிற்குப் பயனுள்ள ஆசிரியையாகி என்னால் முடிந்தளளவு நான் இந்த நாட்டிற்குச் சேவை செய்வது தான் எனது ஒரே எதிர்பார்ப்பு.
நான் இந்தக் கடிதத்தினை முடிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். நான் இதுவரை காலமும் இதைப்பற்றி யாருக்கும் சொல்லிக்கொள்ள முடியாது
எனது மனதினுள் இறுக்கி வைத்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் இன்று எனக்கு எனது மனதில் இருந்தவற்றைச் சொல்வதற்கு இந்தக் கடிதம் உதவியைச் செய்தது மட்டுமல்லாது மேலும் எனது எதிர்கால எதிர்பார்ப்புப் பற்றியும் அதோடு எனது குடும்பத் தகவல்கள் பற்றி அதிகமாகச் சொல்வதற்கும் உந்துதலாக அமைந்தது என நான் நினைக்கிறேன். மேலும் என்னைப்போன்று இது போன்றவற்றைச் சொல்லிக்கொள்ள முடியாமல் அநேகமானோர் இச்சமூகத்தில் இருக்கிறார்கள். இனி எனது இந்தச் சிறிய கடிதத்தை வாசித்துப் பார்த்து மற்றவர்களும் இதுபோல் எழுதுவார்கள் என நான் நினைக்கிறேன்.
இன்று இது போன்றவைகள் அநேகரிடமிருந்து மிகத் தூரத்தில் இருக்கிறது. தமது வாழ்வைச் சிதைத்துக்கொண்டு, அதிகமான பிரச்சினைகளை மனதில் இறுக்கிக்கொண்டு அநேகமானோர் இன்றைய சமூகத்தில் இருக்கிறார்கள் இல்லையா? உங்களுக்கும் இதுபோன்று எழுதுவதற்குச் சந்தர்ப்பம் இப்பொழுது கிடைத்துள்ளதாக நான் நினைக்கிறேன். இனி நீங்களும் உங்களுக்கு முடிந்தால் இதுபோன்று எழுதி தான் விரும்பும் யாருக்காவது உங்களது கடிதத்தைத் தபால் செய்யுமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். நான் இத்துடன் முடிக்கிறேன். இப்படியான இந்தக் கதையைச் சொல்வதற்குக் காரணம் அதுதான்.
இப்படிக்கு
மாணவி




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License