The tragedy that almost happened

A student speaks of an unfortunate accident which well may have turned out much worse


වීමට ආසන්නයට ආ විපත්තිය

ශිෂ්‍යාවක් තමාට සිදුවූ දරුණු අන්තුරක් ගැන මතක් කර සිටී


கிட்டத்தட்ட நடந்தது சோகம்

ஒரு துரதிருஷ்டவசமான விபத்தை ஒரு மாணவர் பேசுகிறார், இது மிகவும் மோசமாக மாறியிருக்கலாம்




R.L. Dulakshi,
“Priyanka”
Gatara,
Kamburupitiya.

Principal,
Mara/Kamburupitiya Maha Vidyalaya,
Kamburupitiya.

Dear Principal,

From the Memories

My name is Dulakshi Somaratne and I am 16 years old. I live in Gathara. There are five members in my family. My mother, Himali Jayawardane is a business woman. My father is a Doctor whose name is Nandana Somaratne. I have one sister and one brother. My sister is preparing for G.C.E. A/L Examination and my brother is preparing for Grade 5 Scholarship. I sat for O/L Examination in 2015 and I have got sufficient results to face Advanced Level. Now I am studying in the Science stream. I went to Pradeshiya Sabha Pre-School and Mara/Kamburupitiya Maha Vidyalaya from Grade 1 to Grade 11. In the school curriculum I loved Mathematics. I like to listen to songs and relax. My father was born in Ehaliyagoda. From my grandparents, only my mother’s mother is living. She is a retired teacher.

Unforgettable Events / People in my life

The day I faced the O/L Examination and my school trip are unforgettable events in my life.

I have one dangerous experience. That is the fatal accident that we faced while we were travelling back from my father’s house. I was 10 years old at that time. The accident took place in Kahawatte. We were travelling in a three-wheeler. My father was driving the three-wheeler. Our three-wheeler was hit by a small lorry. There was a steep hell in the other side of the road. Luckily everyone survived. My father was badly injured in one leg and in the neck. His neck was bleeding. It was difficult to take him out of the vehicle. He was unconscious. He was sent to the Kahawatte Hospital. According to the idea of the hospital staff, he wouldn’t survive if we were 10 minutes late. He was sent to Anuradhapura Hospital. None of others were injured. Father stayed in Ehaliyagoda till he recovered. We were shocked at the time of accident. We were unable even to talk. It was a great experience in our lives.

Every person is special. I don’t have somebody special as unforgettable person. There can be situations where anybody can become special.

Now, the three-wheeler is repaired. Father is well and we live happily.
Future Ambition

I have selected Science stream for Advanced Level Examination. I will study with interest. My aim is to realize everybody’s dreams by becoming a good citizen.
I wish to treat well my family members and other relations and to live happily and healthily.

Reasons to tell my story

This gives hopes to achieve my aims and ambitions. When we are well experienced, we can live easily and freely.
It persuades people to safeguard the other person’s lives because the value of life and importance of life is understood.
Experiences can be shared to give an ambition to another person and to succeed their lives.
Learning to prevent accidents by awareness.
Enabling to minimize shocks and such mentalities made by accidents by using awareness.

Signed,
Dulakshi


ආර්. එල්. දුලක්ෂි
‘ප්‍රියංකා‘
ගතාර.
කඹුරුපිටිය.

විදුහල්පති,
මාර/කඹුරුපිටිය මහා විද්‍යාලය,
කඹුරුපිටිය.

විදුහල්පතිතුමනි,

මතකයට ඉඩක්

මගේ නම දුලක්ෂි සෝමරත්න වන අතර මාගේ වයස අවු. 16 කි. මා ගතාර ප්‍රදේශයේ ජිවත් වේ. මාගේ පවුලේ සාමාජිකයන් ගණන 05 කි. හිමාලි ජයවර්ධන වන මාගේ මව වෘත්තියෙන් ව්‍යාපාරිකයෙකි. පියා වෛද්‍යවරයෙකු වන අතර ඔහු නමින් නන්දන සෝමරත්න වේ. මට සහෝදරියක් සමහ සහෝදරයෙක් සිටි. මගේ අක්කා මෙවර උසස් පෙල විභාගයට මුහුණ දෙන අතර මගේ මල්ලි මෙවර ශිෂ්‍යත්ව විභාගයට මුහුණ දෙයි. 2015 වර්ෂයේදි මා සාමාන්‍ය පෙළ විභාගයට මුහුණ දුන් අතර මා උසස් පෙළ විභාගයට මුහුණ දීමට තරම් සුදුසු ප්‍රතිඵලයක් ලබා ගෙනඇත. දැනට මා විද්‍යා අංශයෙන් ඉගෙනුම ලබයි. මා ඉගෙනුම ලැබුවේ ප්‍රාදේශිය සභා පෙර පාසලේ 1 ශ්‍රේණියේ සිට 11 ශ්‍රේණිය දක්වා මා ඉගෙනුම ලැබුවේ මාර/කඹුරුපිටිය මහා විද්‍යාලයේ පාසල් විෂය ධාරාවන් තුළින් මා වඩාත් ප්‍රිය කරන විෂය වූයේ ගණිතයයි. සිංදු ඇසීමට මෙන්ම නිදහසේ කාලය ගත කිරිමට බෙහෙවින් ප්‍රිය කරයි. මාගේ පියා උපත ලැබු ප්‍රදේශය ඇහැලියගොඩ ප්‍රදේශයයි. මව සහ පියාගේ දෙමව්පියන් අතරින් අම්මාගේ මව පමණක් දැනට ජීවත්ව සිටී. ඇය විශ්‍රාම ගිය ගුරුවරියකි.

මෙතෙක් ලැබූ අමතක නොවන අත්දැකීම් / පුද්ගලයින්

මා මුහුණ දෙන ලද සාමාන්‍ය පෙළ විභාගය මෑතකදි ලැබූ අමතක නොවන අත්දැකීමයි. පාසල් චාරිකාව ද මා ලද අමතක නොවන අත්දැකිමකි.
මා ලද භයානක අත්දැකීමක් ද ඇත. මා සහ මාගේ පවුලේ අය මාගේ පියාගේ ගෙදර ගොස් පැමිණෙන විට සිදු වූ භයානක අනතුරයි. එවිට මා හට අවු. 10 ක් පමණ වනු ඇත. අනතුර සිදුවුයේ කහවත්ත ප්‍රදේශයේදිය. අප ගමන් කළේ ත්‍රිරෝද රථයෙනි. ත්‍රිරෝද රථයේ රියදුරා මගේ පියාය. අප ගමන් කළ ත්‍රිරෝද රථය කුඩා ලොරි රථයක ගැටෙන්නට විය. එතැන එහා පැත්තෙ විශාල හෙලක් තිබුණෙ. වාසනාවට කාටවත් කරදරයක් වුනේ නැහැ. නමුත් මාගෙ පියාගේ කකුලකට සහ බෙල්ලට ගොඩක් තුවාල වුනා. තාත්තගෙ බෙල්ලෙන් ගොඩක් ලේ ගලන්න වුණා. තාත්තව ත්‍රිරෝද රථයෙන් එලියට ගන්න ගොඩක් අමාරු වුනා. තාත්තා සිහිය නැතිවයි හිටියෙ. තාත්තව ඉක්මනට කහවත්ත රෝහලට රැගෙන ගියා. රෝහලෙන් පැවසූ ආකාරයට තව විනාඩි 10ක් ප්‍රමාද වූවා නම් මගේ පියා අද ජීවතුන් අතර නැත. කහවත්ත රෝහලෙන් මගේ තාත්තව අනුරාධපුර රෝහලට රැගෙන ගියා. අපි කිසිම කෙනෙක්ට තුවාලයක් වුණේ නැහැ. තාත්තව සුව වෙනකම්ම හිටියෙ තාත්තගෙ ගෙදර වන ඇහැලියගොඩ ප්‍රදේශයේය. අනතුර සිදු වුණ වෙලාවෙ අපි හිටියෙ ලොකු කම්පනයකින්. කතා කරගන්නවත් බැරි තරමටම අපිට ඒක ලොකුම ලොකු භයානක අත්දැකීමක් වුණා.

හැම පුද්ගලයෙක්ම විශේෂයි අමතක නොවන පුද්ගලයින් කියලා විශේෂ අය නැහැ. මොකද සෑම පුද්ගලයෙක්ම වැදගත් වෙන, විශේෂ වෙන අවස්ථා අපේ ජීවිතේටම එන්න පුලුවන් නිසා.

දැන් ත්‍රිරෝද රථයත් හොදට හදලා තියෙන්නෙ. තාත්තත් දැන් ගොඩක් සුවෙන්. දැන් අපි ගොඩක් සතුටින් ජීවත් වෙනවා.

අනාගත බලාපොරොත්තුව

මා උසස් පෙළ සදහා විෂය ධාරාව තෝරාගෙන ඇත. මා හැකි අයුරින් උනන්දු වී විද්‍යා විෂය ධාරාව හදාරමි. කෙසේ හෝ හොද පුරවැසියෙක් වී සියලුම දෙනාගේ බලාපොරොත්තු ඉටු කරලිම මාගේ අරමුණයි.
අනාගතයේදී පවුලේ සියලු දෙනාටත්, අනෙකුත් නෑදෑයන්ටත් හොදින් හැකි අයුරින් සලකා සතුටින්, සෞඛ්‍යත්මත්ව ජීවත් වීමට බලාපොරොත්තු වෙයි.




මාගේ කතාව පැවසිමට හේතු

මාගේ ඉලක්ක කරා හා බලාපොරොත්තු කරා ළගා වීමට දැඩි උනන්දුවක් එමගින් ඇති වේ. අත්දැකීම් වැඩි වන තරමටම අපට පහසුවෙන් සැහැල්ලුවෙන් ජිවත් වීමට හැකිය.

තමාගේ ජීවිතයේ වැදගත්කම, වටිනාකම තමාටම වැටහෙන නිසා තමාගේ මෙන් ම අන් අයගේ ජීවිත ද ආරක්ෂා කිරීමට පෙළඹේ.

තම අත්දැකීම් මගින් තමාගේ මෙන්ම අන් අයගේද අනාගතයට ද අලුත් බලාපොරොත්තු ලබා දී ඔවුන්ගේ ජීවිතද සාර්ථක කිරීමට හැකි වීම

මෙම අනතුරු පිලිබද පුද්ගලයින් දැනුවත් වීම තුලින් එවැනි අනතුරු ඉදිරියට සිදු නොවීමට වග බලා ගැනීම
මෙවැනි භයානක අනතුරුවලදී ඇතිවිය හැකි කම්පන, මානසිකත්වය පිලිබද දැනුවත්විම නිසා එම තත්ත්ව අවම කර ගැනීමට හැකි වීම.


මෙයට,
දුලක්ෂි


R.L. துலக்ஸி,
பிரியங்கா,
கத்தார,
கம்புருபிட்டிய.
அதிபர்,
மார/ கம்புருபிட்டிய, மகா வித்தியாலயம்,
கம்புருபிட்டிய.
அதிபர் அவர்களுக்கு,
ஞாபகத்திற்கு ஒரு இடம்
எனது பெயர் துலக்ஸி சோமரத்ன. எனது வயது 16 ஆகும். நான் கத்தார பிரதேசத்தில் வாழ்கிறேன். எனது குடும்பத்தில் மொத்தமாக 05 அங்கத்தினர்கள் உள்ளனர். ஹிமாலி ஜயவர்தன எனும் எனது அம்மா தொழில் ரீதியில் ஒரு வியாபாரி ஆவார். எனது அப்பா ஒரு வைத்தியர். அவரின் பெயர் சோமரத்ன. எனக்கு ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் உள்ளனர். எனது அக்கா இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு முகம் கொடுக்க உள்ளதுடன், எனது தம்பி இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம் கொடுக்க உள்ளார். 2015இல் நான் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து மீண்டும் உயர்தரப் பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்குச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளேன். தற்போது நான் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கிறேன். நான் முதலாவதாகப் பிரதேச சபை முன்பள்ளியில் கல்வி கற்று அதைத் தொடர்ந்து 1 தரம் தொடக்கம் 11 தரம் வரை மார/ கம்புருபிட்டிய, மகா வித்தியாலயத்திலேயே கல்வி கற்றேன். பாடசாலைப் பாடத்திட்டங்களில் எனக்கு மிகவும் விருப்பத்திற்குரிய பாடமானது கணிதமாகும். பாடல் கேட்டு இரசிப்பதுடன் சுதந்திரமாகக் காலத்தைக் கடத்துவதற்கு எனக்கு மிகவும் விருப்பம். எனது அப்பா ஹேலியகொட பிரதேசத்தில் பிறந்தவர் ஆவார். அம்மா, அப்பாவின் பெற்றோர் வரிசையில் அம்மாவின் அம்மா மட்டுமே இப்போதும் உயிருடன் இருக்கிறார். அவர் ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியை ஆவார்.
இதுவரை பெற்ற மறக்க முடியாத அனுபவங்கள்/ நபர்கள்.
அண்மையில் நான் முகம் கொடுத்த சாதாரண தரப் பரீட்சையிலும், பாடசாலைச் சுற்றுலாவின் போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள்.
நான் அதிகமான அனுபவங்களைப் பெற்றுள்ளேன். நானும் எனது குடும்பத்தாரும் அப்பாவின் வீட்டுக்குச் சென்று வீடு திரும்பும்போது ஏற்பட்ட பாரிய விபத்து. அப்போது எனக்கு வயது 10 இருக்கும். கஹவத்தைப் பிரதேசத்திலேயே விபத்து ஏற்பட்டது. நாங்கள் முச்சக்கர வண்டியிலேயே பயணம் செய்தோம். நாங்கள் பயணித்த முச்சக்கர வண்டியின் மேல் ஒரு சிறிய லொரி மோதியதுடன் பாதையின் மறுபுறத்தில் இருந்த பெரிய ஆற்றின் மேல் விழுந்தது. அதிஷ்டத்தால் யாருக்கும் எவ்வித சேதமும் இல்லை. ஆனால், எனது அப்பாவின் காலுக்கும் கழுத்திற்கும் காயம் ஏற்பட்டிருந்தது. அப்பாவின் கழுத்தில் அதிகமாக இரத்தம் வரத் தொடங்கியது. அப்பாவை முச்சக்கர வண்டியிலிருந்து வெளியே எடுக்கவும் மிகவும் சிரமப்பட்டோம். அப்பா சுயநினைவில்லாமல் இருந்தார். அவரை உடனடியாகக் கஹவத்த வைத்தியசாலைக்குக் கொண்டுபோனோம். வைத்தியசாலைக்கு ஒரு 10 நிமிடம் பிந்திக் கொண்டுபோயிருந்தால் என் அப்பாவின் உயிரைக் காப்பாற்ற முடிந்திருக்காது எனச் சொன்னார்கள். பின்னர் கஹவத்த வைத்தியசாலையில் இருந்து அநுராதபுர வைத்தியசாலைக்குக் கொண்டுபோனோம். எங்களில் யாருக்குமே எந்தக் காயமும் ஏற்படவில்லை. அப்பாவிற்குக் குணமாகும் வரை நாங்கள் எல்லோரும் இருந்தது அப்பாவின் ஹேலியகொட வீட்டில்தான் இருந்தோம். விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் நாங்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்தோம். கதைக்கக் கூட முடியாத அளவிற்குக் கிடைத்தது அதிர்ச்சியான அனுபவமாகும்.
எந்த நபரும் விசேடமானவர்கள். மறக்க முடியாத நபர்கள் என்று விசேடமானவர்கள் யாருமில்லை. ஏனென்றால், அனைவரும் முக்கியமானவர்கள் இல்லை. விசேடமான சந்தர்ப்பங்கள் எங்கள் வாழ்க்கையிலும் வரலாம்.
இப்பொழுது முச்சக்கர வண்டியை நன்றாகச் செய்யப்பட்டுள்ளது. அப்பா நன்றாகக் குணமடைந்துவிட்டார். இப்போ நாங்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறோம்.
எதிர்கால எதிர்பார்ப்பு
நான் உயர்தரத்தில் படிப்பதற்கு விஞ்ஞான பாடத்தைத் தெரிவு செய்துகொண்டேன். நான் முடிந்தளவு முயற்சியுடன் விஞ்ஞான பாடத்தைப் படிப்பேன். எப்படியோ ஒரு நல்ல குடிமகனாகி அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது எனது நோக்கமாகும்.
எதிர்காலத்தில் குடும்பத்தின் அனைவருக்கும் மற்றச் சொந்தங்களுக்கும் நன்றாக முடிந்தளவில் உபசரித்து சௌபாக்கியத்துடன் சந்தோஷத்துடன் வாழ்வதே எனது எதிர்பார்ப்பாகும்.
எனது கதையைக் கூறுவதின் காரணம்.
எனது இலக்கு மட்டும் எதிர்பார்ப்புகளை நோக்கிப் பயணம் செய்ய இதனால் சிறந்த ஆர்வம் எனக்கு ஏற்படும். அனுபவம் அதிகரிக்கும் அளவிற்கு எங்களுக்கு இலகுவாக, மென்மையாக வாழ முடியும்.
தமது வாழ்வின் முக்கியத்துவம், பெறுமதி தமக்குப் புரியும் என்பதால் தமது மட்டுமல்லாது மற்றவர்களின் வாழ்க்கையையும் பாதுகாக்க முன்வரும்.
தமது அனுபவத்தின் மூலம் தமது மட்டுமல்லாது மற்றவர்களின் எதிர்காலத்திற்கும் புதிய எதிர்பார்ப்புகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்க்கையைச் சிறப்பாக்க முடியும்.
இந்த ஆபத்துத் தொடர்பாக மற்ற நபர்களைத் தெளிவுபடுத்துவதன் மூலம் இதுபோன்ற ஆபத்துக்களை இனிமேலும் நடக்காமல் இருப்பதற்கு வழிவகுக்கும் என்பதேயாகும்.
இதுபோன்ற பயங்கர ஆபத்துக்களால் ஏற்பட்ட அதிர்ச்சி, மனநிலை தொடர்பாகத் தெளிவு கிடைப்பதால் அந்த நிலையைக் குறைத்துக்கொள்ள முடியும்.
இப்படிக்கு




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License