My elder brother was tortured for three months in prison.

A sister who lost her family members in the 1990s ethnic conflict telling her sad story.


මගේ සහෝදරයා මාස තුනක සිරදඬුවම් කළා.

1990 ගනන්වල ජනවාර්ගික ගැටුමේ ඇගේ පවුලේ සාමාජිකයන් අහිමි වූ සහෝදරියක් ඇගේ දුක්ඛිත කථාව කථා කරයි.


பெரிய அண்ணாவை மூன்று மாதங்கள் சிறையில் வைத்து சித்திரவதை செய்தார்கள்.

1990களில் இடம்பெற்ற இனப்பிரச்சினையில் தனது குடும்பத்தினரை இழந்த சகோதரி தனது சோகக்கதையினை எம்மிடம் கூறுகின்றார்.



CMP/AMP/POT/HIJ/01

My grandfather (named Thambiyar) was a house keeper at the Arugambay bungalow, presently a army camp. It was a government inn. My grandfather’s mother was a keeper before him.

After her death my grandfather took over the responsibility. His wife and children did chena cultivation in Ullai. My father worked in Trincomalee for a while and married my mother and came to Arugambay. After my grandfather retired my father (Devasundaram) took over the bungalow. My grandfather with seven daughter and brother lived at Sinna Ullai. At that time 10 muslim families and my father, a tamil family lived at Ullai comfortably. All the families tamil Sinhalese lived in unity.

There was no vehicle at that time, only bullock carts. My grand father had a cart. I still remember the two bulls, white one and a grey one with big sharp horns. There was no bridge only a road, small part of it still remains. My mother in law came in the cart to the bungalow and went to the theatre to see films and went in the morning to Ullai. It was told by my father’s sister ( Now in Kalmunai).

I have three elder sisters and two brothers and a younger brother . I was 4or 5 then, My father got a transfer to Batticaloa. We had two acres of land in Ullai. My mother’s brother came here and cut the jungle and cultivated the land. When my father went to Batticaloa, he left us in Ullai. One evening he took me in the bicycle and my mother took my younger brother.

My mother’s brother cultivated a lot, There were cassava, pumpkins, drumsticks and he gave a lot to everybody. When we celebrated Deepavali and Pongal, we shared with everybody. I started my pre school at six, I went with muslim brothers to the school. I studied up to Grade 5 at Sinna Ullai and Grade 6 – 10 at Methodist Mission School. We walked to school from Ullai.

The road from the bridge to A.G.A office was surrounded by thick jungle, we used to run to school. When I was studying grade 4 my father got a transfer to Erikosan Bugalow near A.G.A office. My sister, Aunties daughter and I went to our father and at lunch there and came home.

The white people came to the bungalow even during my grand father’s time. When I was studying grade 6, lot of white people came to Ullai. That time the rent 2 rupees per day with meals. When we came from school at Pottuvil, we brought vegetables and cooked for them.

We were not rich but lived without any hardship. My elder sister got married and we built a house for her. My second sister married a muslim and went away, those were sad days for us. My third sister married my father’s sisters son. My brother also got married and I completed school in 81.

The land at Sinhapura school was ours, the government took it over and colonized it with Sinhalese. After that a lot of vans, buses began to travel. I also got married to person in Nuwara Eliya.

In 84 my father retired and in 83 ethnic trouble started. My elder brother was arrested by the army and kept in prison and tortured for three months. He was released after three months. I went to Nuwara Eliya and worked as a labourer there. When I went there my elder son was 5 months old. Father, mother and elder sister was at Ullai. I visited them once in three months. My second son was born in 89. I came home to my mother, the trouble stepped up. The army shelled us and murdered the youth, arrested them. We were refugees. My younger brother was arrested and till now he was not to be seen. My elder brother and sister went through the jungle to Jaffna. In 90 we took refuge in Komari. My second was 6 months old. We walked from Komari , bought things and ate.
The army together with muslims burnt the my house and my sisters houses. They burnt my father also. I lost my elder brother, younger brother, my sister and my mother. I went to Nuwara eliya from the camp and worked as a labourer there..

There was muslim family behind our land, we lived like relatives. The son started to trouble for the land. He even came to Nuwara Eliya asking for the land. My two sisters sold their land to them. They started to build even in my land.. My mother sent me letter asking me to come and get the money for the land. It was very difficult to travel for tamils. Somehow I got the money from him ( Shyman view a popular hotel was built in my land) . So many difficulties continued in my life.

I bought a small land with the money I got. I didn’t have any help from any body. I lived for 27 years at Sooriyakanthi estate at Ragala. My husband needed only gold and money. He didn’t visit me after two sons and a girl were born. He kept our sons with him after their studies. He told me to look after myself. I didn’t have any experience in working. I went to work in a house in Colombo for six months. My elder son called me one day and said that father was going to get married. I came back. It was to his sister’s daughter. All planned to chase me away .

I sold the house for small amount and came back to potuvil, my daughter also came with me. He sent money for my daughter. I went to work for white people at Ullai. My husband and children came and chased me from my house.

I went again to work for white people and with the money I got, I bought a house. I divorced my husband 4 years ago. I gave the house to my daughter. Even from here they sent me. I lived at the house at Etham, My elder son and his wife came there. Now I am working at Ullai. My home is a question mark now. There was a loan for 3 lakhs. To pay back the loan I have to work hard. I lived up to now without any help from my relatives. I am now 53 years old. I helped everybody but nobody helped me. There is nobody to even to say kind words except god.




CMP/AMP/POT/HIJ/01

මගේ සීයා ( නම තමිබියර්- ඔහුව නොදන්නා දෙමළ" මුස්ලිමි" සුz වශයෙන් සිංහල පිරිස කිසිවෙකු= සිටින්න බැහැ’ හැමෝම හඳුනනවා’ අරුගමිබෙිවල තිබෙන හමුදා කෑමිප් එක අපේ සීයාගේ කාලේ ඉරිකේෂන් බංගලාවක් ලෙස තිබුණා’ එහි මගේ සීයා (කීපර් - නිවාස පාලක ලෙස සිටියා’ මෙම රජයේ නිවාසය මගේ සීයාගේ කාලයට පෙර ඔහුගේ මව තමයි පාලක ලෙස සිටියෙ’
ඇය ම්ය ගියාට පසු මගේ සීයා භාරගෙන පාලනය කරගෙන ගියා’ එසේම ඔහුගේ භාර්යාව හා ළමයි උල්ල ප්‍රදේශයේ කැලෑ කපලා හේන් ගොවිතැන් කරගෙන සිටියා’ මගේ පියා සීයාගේ උදවිවට හිටියා’ ඉන්පසු මගේ සීයා ටික කලක් ති්‍රකුණාමලයේ වැඩ කළ බවත්" පසුව එහිදී මගේ අමිමාව විවාර කරගෙන නැවතත් අරුගමිබෙි වලට ආ බවත්" මගේ සීයා විශ්‍රාම ගත් පසු මගේ පියා (දේවසුන්දරමි- එම බංගලාව භාරගත් බවත් මගේ සීයා උල්ල ප්‍රදේශයේ පදිංචිව සිට ගැහැණු ළමයි 7 දෙනෙකු හා මල්ලි කෙනෙකුත් සින්න උල්ල ප්‍රදේශයේ ජීවත්වුණා’ ඒ අවස්ථාවෙි මුස්ලිමි පවුල් 10ක් සමග සීයාගේ පවුල විතරක් දෙමළ පවුලක් ලෙසට සැප පහසුකමි ඇතිව ජීවත්වුණා’ ලොකු ගෙයක් කියලා නැහැ මැටි ගෙයක් තමයි’ නමුත් සතුටින් සිටියා’ සිංහල පවුල් 05 යි’ හැමෝම සමගියෙන් තමයි ජීවත්වුණෙ’
ඒ කාලෙ වාහන කිසිවක් තිබුණෙ නැහැ’ ගොන් කරත්ත වලින් තමයි ගමන් යන්නෙ’ අපේ සීයා ළඟත් ගොන් කරත්තයක් තිබුණා’ ඒ ගොන්නු දෙදෙනා මට දැනුත් මතකයි’ ලොකු ගොන්නු දෙදෙනෙක්’ එකෙක් සුදුපාට" එකෙක් අz පාට’ එකෙකුට උල් අං දෙකක් තිබුණා’ ඒ කාලෙ පාලම තිබුණෙ නැහැ’ පාරුව තමයි තිබුණෙ’ ඒකෙ සලකුණු ටිකක් දැනටත් තිබෙනවා’ අපේ නැන්දලා කරත්තෙන් ඇවිල්ලා බංගලාවෙි කරත්තෙ නවත්වලා’ මයිලන් තියේටර් (සිනමා ශාලාව- එකේ චිත්‍රපටි බලලා" උදේට තමයි උල්ලට යන්නෙ’ එසේ සතුටින් සිටි කාලය ගැන තාත්තාගේ නංගි (දැන් කල්මුණේ ඉන්නවා’- මට කීවා’
මෙසේ සිටියදී මට වැඞ්මහල් අක්කලා දෙදෙනයි" අයියලා දෙදෙනයි" මල්ලියි’ මට අවුරුදු 3ක් 4ක් විතර ඇති මට හොඳට මතක තිබෙනවා’ අපේ තාත්තාට මඩකලපුවට ස්ථාන මාරුවක් ලැබුණා’ උල්ල ප්‍රදේශයේ අපට අක්කර දෙකක වත්තක් තිබුණා මගේ නමට’
අමිමාගේ මාමා (අමිමාගේ මල්ලි- මෙහෙ ඇවිත් කැලෑ කපලා ගොවිතැන් කළා’ තාත්තා මඩකලපුවට ගියා’ අපිව උල්ලට ගෙනත් නවත්තලා ඔහු ගියා’ මගේ මල්ලිව තාත්තා වඩාගෙන ආවා’ මාව තාත්තා බයිසිකලේ තබා තල්ලූ කරගෙන ආවා’
01 ජ් 02
අමිමාගේ මල්ලි මාමා හොඳට වගා කරනවා’ මඤ්ඤොක්කා" වටිටක්කා" ගස් ලබු" කකුල් බිත්තර" ගොඩායි’ මුරුංගා ගස් හරියට තිබුණා’ අමිමා හැමෝටම ගොඩාක් අරගෙන දෙනවා’ තෛපොංගල්" දීපාවලිය" සිංහල දෙමළ අzත් අවුරුද්ද කියා ඒවා අපි විතරක් සමරන්නෙ නැහැ’ හැමෝටම බෙදා දෙනවා’ ඒ වගේම තමයි මුස්ලිමි අය ඒ ගොල්ලන්ගේ අවුරුදු අපට ගෙනත් දෙනවා’ එතකොට මට වයස අවුරුදු 06 යි’ ඉන්පසුව තමයි පසරිචිචෙිනෙයි පාසලේ ප්‍රාථම්ක පංතිය පටන් ගත්තෙ’ මුස්ලිමි යහz යෙහෙළියන් සමග මා පාසල් ගොස් එනවා’ 4 වැනි පංතියේ සිට 5වැනි පංතිය දක්වා සින්න උල්ල පාසලේ ඉගෙනුම ලැබුවා’ (පොල් අතු වලින් සෑදූ පාසලක්- 6-10 දක්වා පොතුවිල් මෙතෝදියස් ම්ෂන් පාසලේ ඉගෙනුම ලැබුවා’ උල්ලෙ ඉඳලා පයින් තමයි පාසලට යන්නෙ’
අපේ ගෙදරට තවත් දෙදෙනෙකු වැඞ්වුණා’ හැමෝම දහවැනි පංතිය දක්වා තමයි ඉගෙන ගත්තෙ’ පාලම ළඟ ඉඳලා සහකාර දිසාපති (AගඨගA- කාර්යාලය දක්වා භයානක කැලේ’ ඒ තැන් වලට යනවිට අපි දුවගෙන තමයි යන්නෙ’ මම හතරවැනි පංතියේ ඉගෙන ගන්නා විට අපේ තාත්තා නැවතත් ස්ථාන මාරුවෙන් මෙහි පැම්ණ AගඨගA’ කාර්යාලය අසල උල්ල වාරිමාර්ග බංගලාවට වැඩට ආවා’ මම" මගේ අක්කා" නැන්දගේ දුව යන තුන්දෙනාම පාසලේ සිට ගෙදර එනවිට තාත්තා ළඟට ගිහිල්ලා කෑම කාලා තමයි ගෙදර යන්නෙ’
මගේ සීයගේ කාලයේ සිට සුද්දො බංගලාවට එනවා’ මම හතරවැනි පංතියේ ඉගෙන ගන්නා විට පිටරට අය බොහෝ දෙනෙකු උල්ලට එන්න පටන් ගත්තා’ අපිත් පැල්පත් හදලා දුන්නා’ ඒ කාලෙ දවසකට රුඃ2/} යි කුලිය ගන්නෙ’ අපේ රටෙි කෑම දෙනවා’ අපි පාසල් ගිහින් එනවිට පොතුවිල් වලින් එළවz අරන් එනවා’ හැමෝම එකතුවෙලා උයලා දෙනවා’
01 ජ් 03
ලොකුවට පොහොසත් කියලා නැහැ’ දුක් විඳින්නෙ නැතිව ජීවත්වුණා’ ලොකු අක්කගේ විවාහය සිදුවුණා’ ඇයට වෙනමම ගෙයක් හදලා දුන්නා’ දෙවැනි අක්කා මුස්ලිමි අයෙකුව විවාහ කරගෙන ගියා’ එදා සිට අපේ ගෙදර හැමෝටම ශෝක දිනය තමයි’ තුන්වෙනි අක්කට තාත්තාගේ නංගිගේ පුතාව විවාහ කරදුන්නා’ ලොකු අය්යත් විවාහ කරගෙන ගියා’ 1981 දී මමත් පාසල් අධ්‍යාපනය අවසන් කළා’

මෙි අතරතුර අපට උල්ල සිංහපුර පාසල තිබෙන ඉඩම අපේ’ ඒ කාලෙ අපේ ඉඩම රජයට අරගෙන සිංහල ජනපදයක් ඇති කළා’ අපේ ඉඩම උදුරා ගත්තා’ ඉන්පසු වෑන් බස් කියා වාහන බොහොමයක් දුවන්න පටන් ගත්තා’ මමත් නුවරඑලියේ කෙනෙක්ව විවාහ කරගත්තා’

තාත්තටත් විශ්‍රාම ලැබුණා 1984 දී" 1983 දී කලබල පටන් ගත්තා’ මුලින්ම මගේ ලොකු අය්යාව හමුදාව අරගෙන ගිහින් මාස තුනක් සිරේ තියාගෙන වදහිංසා කළා’ මාස තුනකට පසුව නිදහස් කළා’ ඉන්පසු මම නුවරඑලියට ගියා’ ( විවාහය මගේ ජීවිතයට ශෝකයක්- කුලී වැඩ කරලා දුක් විඳලා ජීවත් වුණා’ අපි යනවිට අපේ පුතාගේ වයස මාස 05යි’ අමිමා" තාත්තා" ලොකු අක්කා හැමෝම උල්ලෙ තමයි හිටියෙ’ මම මාස තුනකට වරක් ඇවිත් යනවා’ දෙවැනි පුතා 1989 දී ඉපදුණා’ අමිමාගෙ ගෙදරට ඇවිත් සිටියා’ ඒ කාලෙ රටෙි ප්‍රශ්න වැඞ්යෙන් තිබුණාු කාලය’ හමුදාව සෙල් ප්‍රහාර එල්ල කළා’ තරුණයින්ව මරා දැමුවා’ අත් අඩංගුවට ගත්තා’ අපි හැමෝම අනාථ වුණා’ (දෙමළ ජනතාව පමණක්- මගේ මල්ලිව අල්ලාගෙන ගියා’ අද දක්වා නැහැ’ ඉන්පසු ලොකු අය්යා" නංගි හා තවත් මල්ලි කෙනෙක් කැලෑ පාරෙන් යාපනේට ගියා’ 1990 දී අපි අනාථයින් බවට පත්වී කෝමාරිවල හිටියා’ මගේ දෙවැනි පුතාට මාස 06 යි’කෝමාරිවල ඉඳලා පයින් ඇවිල්ලා" බඩු අරගෙන ගොස් උයාගෙන කනවා’
01 ජ් 04
1990 දී අපට ගෙවල් තුනක් තිබුණා’ අක්කලා දෙදෙනාගේ ගෙවල් සහ මගේ ගෙදර’ ගෙවල් තුනම මුස්ලිමි අය සහ හමුදාව එකතුවෙලා ගිණි තැබුවා’ ඒ තුලට මගේ පියාවත් (වයස අවු’56- පණ පිටින් දාලා පිචිචුවා’ 1990 දී මගේ ලොකු අය්යාර්‍ණ මල්ලිර්‍ණ නංගි තාත්තා සියz දෙනාම අහිම්වුණා’ ඉන්පසු මම අවුරුද්දකින් පසුව අනාථ කඳවුරේ සිට නුවරෙලියට ගොස් කුලී වැඩ කරලා ජීවත්වුණා’
ඒ වගේම උල්ල ප්‍රදේශයේ අපේ ගේ පිටුපස මුස්ලිමි පවුලක් සිටියා’ ඥාතීන් වගේ තමයි සිටියේ’ ඔවුන්ට පුතෙක් සිටියා’ ඔහු අපිට කරදර කරන්න පටන් ගත්තා’ අපේ ඉඩම ඉල්ලාගෙන නුවරඑලියට පවා එන්න පටන් ගත්තා’ අපේ අක්කලා දෙදෙනා බයට ඔහුට ඉඩම දීලා මුදල් ගත්තා’ මගේ ඉඩමත් අල්ලාගෙන ගොඩනැගිලි හදන්න පටන් ගත්තා’ ඔවුන් සුද්දන්ට ව්කුණා ගත්තා සහෝදරයින් අහිම් වූ ව්යෝවයෙන් ම්දීමට පෙර ඉඩමි ප්‍රශ්න’ එක පැත්තකින් මටත් ඇව්ල්ලා සල්ලි ගන්න කියලා අමිමා ලියුමි ලියනවා’ වාහන වලට හරි අමාරුයි දෙමළ ම්නිස්සු හැංගි හොරා ජීවත් වූ කාලයක්’ මම කොළඹට ඇව්ල්ලාර්‍ණ එහි සිට පොතුව්ල් ගිහිල්ලා ඔහුගෙන් මුදල් අරගෙන ගියා’ (අපේ වත්ත දැන් හොඳ ප්‍රසිද්ධ සියාමි ව්වි නැමැති හෝටලය - කොතරමි දුක් කරදර ද ගෙවල් දොරවල් නෑදෑ හිත ම්තුරන් කියා දරාගත නොහැකි දුක් වෙිදනා තවමත් තිබෙනවා මගේ ජීවිතේ’
ඉඩමි විකුණපු මුදල් වලින් මගේ ස්වාම් පුරුෂයාගේ ගමෙි ඉඩමි කෑල්ලක් ම්ළට අරගෙන ගෙයක් හැදුවා’ තාත්තා ’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
01 ජ් 5
දුක කියා නිම කරන්න බැහැ’ කිසිවෙකුගෙන් පිහිටක් නැහැ මට’ එයිනුත් අවුරුදු 23 ක් රාගල (සූරියකාන්ති වත්තෙ- පදිංචි වෙලා සිටියා’ මගේ ස්වාම් පුරුෂයාට මුදල්" රත්තරන් බඩු මෙිවා විතරයි ඔින’ දරුවො තුන්දෙනයි’ පිරිම් දරුවෝ 2යි" ගැහැණු දරුවො 1යි ඉපදුණා’ ඔහු වැඞ්පුර ගෙදරට එන්නෙම නැහැ’ හරි අමාරුයි’ පිරිම් දරුවො ඉගෙනගෙන අවසන් වුණාට පසු ඔවුන්වත් ඔහු ළඟට ගත්තා’ ගැහැණු දරුවා ළමා නිවාසයට ඇතුල් කළා’ මා ළඟට ඇවිත් කීවා ඔයාට අවශ්‍ය දේවල් ඔයාම බලාගන්න කියලා’ වැඩට ගිහිල්ලා පුරුදු නැහැ’ නමුත් ප්‍රථම වරට කොළඹ ගෙදරකට වැඩට ගියා’ මාස 06ක් වැඩ කළා’ මගේ ලොකු පුතා ටෙලිපෝන් කළා’ තාත්තා විවාහයක් කරගන්න යනවා එන්න කියා’ මමත් ආවා’ වෙන කවුරුවත් නෙමෙයි එයාගේ අක්කගේ දුව තමයි කියලා පුතා කීවා’ හැමෝම එකතුවෙලා මාව එළවා ගන්නට සැලසුමි කළා’ මගේ ගේ අරගෙන මා සුz ගනණකට ගේ විකුණලා නැවතත් පොතුවිල් ඇවිල්ලා (ජිරා නගර්වල- ගෙයක් ම්ලදී ගෙන තනියෙම අවුරුදු තුනක් වෙනවා ඇවිල්ලා’ අවුරුද්දකින් දුව මා ළඟට ආවා’ දෙදෙනාම එකට හිටියා’ දුවගේ වියදමට ඔහු මුදල් එවනවා’ මගේ අවශ්‍යතා වලට අමාරුයි’ මම නැවතත් උල්ල ප්‍රදේශයේ සුද්ධ් ළඟට වැඩට ගියා’ එතනත් මගේ ස්වාම් පුරුෂයයි ළමයි ටිකයි හැමෝම ඇවිල්ලා වැඩට බැඳුණා’ මගේ පවුලේ හැමෝම එකතුවෙලා මාව එළවා ගත්තා’
නැවතත් මම වෙනත් සුද්ධ්යක් ළඟට වැඩට ගිහින් හමිබ කරලා ගෙයක් ම්ළදී ගත්තා’ අවුරුදු 4කට පෙර මම මගේ ස්වාම් පුරුෂයාව දික්කසාද කළා’ රෙටිටෙයි හි ම්ළදී ගත් නිවස මගේ දුව වෙනුවෙන් තමයි ගත්තෙ’ ඔහුත් ඇවිල්ලා ඇය සමඟ ඉන්නවා’
01 ජ් 06
මෙහි ඉඳලත් මාව එළවා ගත්තා’ ඒත්තමි ප්‍රදේශයේ ම්ළදී ගත් නිවසේ තනියෙම හිටියා අවුරුද්දක්’ එතනටත් මගේ ලොකු පුතා භාර්යාවයි දරුවො ටිකයි අරගෙන ආවා’ දැනටත් උල්ල ප්‍රදේශයේ වැඩ කරනවා’ නවාතැන @ වෙලා තිබෙනවා’ ලCෂ 03ක් ණයයි’ ඒ ණය මුදල ගෙවනතුරු මම මහන්සිවෙලා වැඩ කරන්න ඔින’ 1990 සිට 2016 දක්වා නෑදෑයින්" හිත ම්තුරන් රජය" සංවිධාන කිසිවෙකුගෙන් උදවිවක් නැතිව මෙි තත්ත්වයෙන් ඉන්නවා’ මෙය මගේ කතාවෙි කෙටි සාරාංශය’ මට දැන් වයස අවුරුදු 53 යිත අනාගතය @ මම හැමෝටම උදවි කරනවා’ කවදත් සෑම ආකාරයෙන්ම උදවි කරනවා’ නමුත් මා වෙනුවෙන් උදවි කරන්න කිසිවෙකු නැහැ’ ආදරයෙන් වචනයක් දෙකක් කථා කරන්නවත් කිසිවෙකු නැහැ’ දෙවියන් වහන්සේ හැර’








CMP/AMP/POT/HIJ/01

எனது அப்பப்பா (பெயர் தம்பியா) இவரை தெரியாத தமிழ் முஸ்லிம்கள் இல்லை. இது அளவான சிங்களவர்கள் அனைவருக்கும் தெரிந்தவர். அங்கம் வகையில் இருக்கும் இராணுவ முகாம் எனது அப்பா காலத்தில் எரிக்கோசன் வங்களாவாக இருந்தது. அங்கு எனதுஅப்பப்பா (கீப்பராக) விடுதி பாதுகாவலர் நிர்வாகியாகவும் இருந்தார். இது அரசாங்க விடுதி எனது பாட்டனாருக்கு முன் அவரின் தாயார்தான் அதன் நிர்வாகியாக இருந்தார்.

அவர் இறந்த பின் எனது பாட்டனார் பொறுப்பேற்று நிர்வகித்து வந்தார். அதே நேரம் அவரது மனைவி பிள்ளைகள் உல்லையில் வளவுவெட்டி சேனை வயல் செய்து கொண்டும் இருந்தார்கள். எனது அப்பா பாட்டனாருக்கு உதவியாக இருந்தார். பின் எனது அப்பா சிறிதுகாலம் திருகோணமலையில் வேலை செய்ததாகவும் பின் அங்கு எனது அம்மாவை திருமணம் செய்து கொண்டு அறுகம்பை வந்ததாகவும் எனதுபாட்டனார் ஓய்வுபெற்ற பின் எனதுஅப்பா (தேவசுந்தரம்) ஆத்தவங்களாவை பாரம் எடுத்தாக எனது பாட்டனார் உல்லையில் குடியேறி அவர் பிள்ளைகள் 7 பெண்கள் தம்பியும் சின்ன உல்லையில் வாழ்ந்தார்கள். அந்த வேளை 10 முஸ்லீம் குடும்பம்ங்களில் அப்பாவின் மட்டும் தமிழ் குடும்பம் வசதியாகவும் வாழ்ந்தார்கள். பெரிய வீடும் இல்லை. மண் வீடுதான் நிறைய சந்தோசம் இருந்தது. சிங்கள குடும்பங்கள் ஒல்லோரும் ஒற்றுமையாக தான் வாழ்ந்தார்கள்.

அப்போது வாகனம் எதுவும் கிடையாது. மாட்டு வண்டியில் தான் பிரயாணம் செய்வார்கள் எனது பாட்டனாரிடம் மாட்டு வண்டி இருந்தது. அந்த இரண்டு மாடுகளும் எனக்கு இன்னும் ஞாபகத்தில் உள்ளது. பெரிய மாடு வௌ்ளை ஒன்று. சாம்பல் நிறம் ஒன்று. கூரான பெரிய கொம்புகள். அப்போது பாலமும் கிடையாது. பாதைதான் அதன் சிறு அடையாளம் இ்ன்றும் உள்ளது. எனது மாமிமார் கரத்தையில் வந்து வங்களாவில் வண்டி மாட்டை நிறுத்தி விட்டு. மைளன் தியட்டருக்குச் சென்று படம் பார்த்து விட்டு காலையில்தான் உல்லைக்குசெல்வார்கள். சந்தோசமான நாட்களை எனதுஅப்பாவின் தங்கை (தற்போது கல்முனையில் இருக்கிறார்) என்னிடம் கூறினார்.

இப்படி இருக்கும் போது எனக்கு மூன்று அக்காவும் இரண்டு அண்ணாவும் தம்பியும் எனக்கு 45 வயது இருக்கும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. எனதுஅப்பாவிற்கு மட்டக்களப்பிற்கு மாற்றம் கிடைத்தது. உல்லையில் எங்களுக்கு இரண்டு ஏக்கர் வளவு எனது கடன் இங்கு வந்து காடு வெட்டி பயிர் செய்தார். அப்பா மட்டக்களப்பு எங்களை உல்லையில் கொண்டு வந்து விட்டு அவர் சென்றார். எனவே தம்பியை அம்மா தூக்கிக் கொண்டுவந்தார். என்னை அப்பா உயிருடன் வைத்து உருட்டிக் கொண்டு வந்தார். ஒர் மாலை பொழுது.

அம்மாவின் மாமா நிறைய பயிர் செய்கை மரவள்ளி பூசணிக்காய் பப்பாசி மரம் நிறைய கோழி முட்டை முருங்கை மரம் எல்லாம் இருந்தன. அம்மா எல்லாதுக்கும் நிறை அள்ளி கொடுப்பார். எங்கள் சித்திரை தீபாவளி என்று நாங்கள் மட்டும் கொண்டாடுவது கிடையாது எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பாங்க. அதேபோல் முஸ்லிம்களும் அவர் பெருநாளுக்கும் கொண்டுவந்து தருவார்கள். எனக்கு 6 வயது பின் நான் படிச்சேன். பாடசாலையில் ஆரம்பப் பாடசாலை தொடங்கியது. முஸ்லிம் நண்பர்கள் நண்பிகளுடன் நான் பாடசாலை சென்று வருவேன். நான்காம் வகுப்பு முதல் சின்ன உல்லை பாடசாலையில் 5ம் வகுப்பு வரை படித்தேன். (கிடுகால் கட்டிய பாடசாலை) 6-10 வரை பொத்துவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையில் படித்தேன். பாடசாலைக்குஉல்லையில் இருந்து நடந்துதான் செல்வோம்.

எங்கள் வீட்டில் இன்னும் இருவர் கூடிவிட்டார்கள். அனைவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தோம். பாலத்தடியில் இருந்து ஏஜிஏ ஒபிஸ் வரை மிகவும் பயங்கரமான காடு அந்த இடங்களில் நாங்கள் ஓடித்தான் செல்வோம் நான் நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது எனது அப்பா மீண்டும் மாற்றலாகி இங்கு வந்து ஏஜிஏ ஒப்பிஸுக்கு பக்கத்தில் உள்ள எரிக்கோசன் வங்களாவிற்கு வேலைக்கு வந்துவிட்டார். நான் எனது அக்கா மாமி மகள் மூவரும் பாடசாலை விட்டு வீடு வரும் போதுஅப்பாவிடம் சென்றுசாப்பிட்டு விட்டுதான் வருவோம்.

எனவே பாட்டனார் காலத்தில் இருந்து வௌ்ளைக்காரர்கள் வங்களாவிற்கு வருவது உண்டு. நான் 5ஆம் வகுப்பு படிக்கும் போது நிறைய வௌிநாட்டவர் உல்லைக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். நாங்களும் குடிகள் செய்து கொடுத்தோம். அந்நேரம் ஒரு நாளைக்கு 2 ரூபாய் நாள் வாடகை பணம் வாங்குவோம். எமது நாட்டு சாப்பாடும் கொடுப்போம். நாங்கள் பாடசாலை சென்று வரும் போது பொத்துவிலில் மரக்கறி வாங்கி வருவோம். அனைவரும் சோறு சமைத்து கொடுப்போம்.

பெரிய பணக்காரர்களாக இல்லை. கஷ்டம் இல்லாமல் வாழ்ந்தோம் பெரிய அக்காவிற்கு திருமணம் நடந்தது. அவவிற்கு காணியாக ஒரு வீடு கட்டிக் கொடுத்தார்கள். இரண்டாவது அக்கா முஸ்லிம் ஆளைத் திருமணம் செய்து போய்விட்டார். அன்றில் இருந்து எமது வீட்டவர் அனைவருக்கும் கவலையான நாட்கள் மூன்றாவது அக்கா அப்பாவின் தங்கை மகனை திருமணம் செய்துவைத்தார்கள். பெரிய அண்ணாவும் திருமணம் செய்துசென்று விட்டார். 81ம் ஆண்டு நானும் பாடசாலை முடித்து விட்டேன்.

இதற்கு இடையில் எமக்கு உல்லையில் உள்ள சிங்கபுர பாடசாலை உள்ள இடம் எங்களுடைய அந்த இரட்டை அரசாங்கம் எடுத்து சிங்கள குடியேற்றம் செய்தது. எங்கள் நிலம் பறிக்கப்பட்டது அதற்குப் பின் நிறைய வேன், பஸ் என்று வாகனங்களின் ஓடித் தொடங்கியது. நானும் திருமணம் செய்து கொண்டேன். நுவரெலியா சேர்ந்த ஒருவரை.

அப்பாவிற்கும் ஓய்வு கிடைத்தது. 84ஆம் ஆண்டு 32ம் ஆண்டு வன்செயல் ஆரம்பம் ஆகிவிட்டது. முதல் முதலாக எனது பெரிய அண்ணாவை இராணுவம் பிடித்து மூன்று மாதங்கள் சிறையில் வைத்து சித்திரவதை செய்தார்கள். மூன்றுமாதத்தின் பின் விடுதலை ஆகும். அதன் பின் நான் நுவரெலியா சென்றேன். (திருமணம் என் வாழ்க்கையில் சோகம்) கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டு இருந்தோம். நாம் போகும் போது எனது மூத்த மகனுக்கு 5 மாதங்கள். அம்மா, அப்பா பெரிய அக்கா எல்லாரும் உல்லையில் தான் இருந்தாங்கள். நான் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து போவது வழக்கம் இரண்டாவது மகன் 89ம் ஆண்டு பிறந்தான். அம்மா வீடு வைத்திருந்தார். அந்த நேரம் நாட்டுப் பிரச்சினை அதிக அளவிலான நேரம் இராணுவத்தின் செல் தாக்குதல் செய்தார்கள். வாலிபர்களை கொன்றார்கள். கைது செய்தார்கள். நாங்கள் அனைவரும் அகதியாக்கப்பட்டோம். தமிழர்கள் தட்டும் அதில் எனது கடைசி தம்பி பிடிக்கப்பட்டான். இன்று வரை இல்லை அதன் பின் பெரிய அண்ணா தங்கை இன்னும் ஒரு தம்பி காடுவெளியால் யாழ்ப்பாணம் கொண்டு சென்றார்கள். 90ம் ஆண்டு நாம் அகதியாக கோமாரியில் தஞ்சம் அடைந்தோம். எனது இரண்டாவது மகளுக்கு 6ஆம் மாதம் கோமரியில் இருந்துநடந்து வந்துசாமான் வாங்கிக் கொன்டு, 90ம் ஆண்டு எங்களது மூன்றாவது அக்கா இருவர் எனது வீடு மூன்று முஸ்லிம்கள் இருவரும் சேர்த்து நினைத்து கொழுத்திவிட்டார்கள். அங்குள்ள எனது அப்பாவையும் (56 வயது) உயிருடன் போட்டுக் கொன்று விட்டார்கள். 90ம் ஆண்டு எனதுபெரிய அண்ணா தம்பி தங்கை அப்பா அனைவரையும் இழந்தேன். அதன் பின் நான் ஒரு வருடத்தின் பின் அகதி முகாமில் இருந்து நுவரெலியா சென்று கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தேன்.

அதே நேரம் உல்லையில் எமது வீட்டுக்கு பின்னர் ஒரு முஸ்லிம் குடும்பம் இருந்தது. உறவினர் மாதிரி தான் வாழ்ந்தோம். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தா அவன் எங்களை தொந்தரவு செய்யத் தொடங்கிவிட்டான். எங்கள் வளவை கேட்டு நுவரெலியாவிற்கு கூட வந்துவிட்டான். எனவே அக்காமார் இருவரும் பயத்தில் அவர்களுக்கு வளவை கொடுத்து காசு வாங்கிவிட்டார்கள் என் வளவிலும் சேர்ந்து கட்டடம் கட்டத் தொடங்கிவிட்டார்கள். அவன் வௌ்ளைக்காரனுக்கு விற்று விட்டான். எங்கள் சகோதரங்களை இரத்தத்தில் இருந்து மீழ்வதற்குள் வளவும் பிரச்சினையும் ஒரு பக்கம் என்னையும் வந்து சாவை வாங்கி கொள்ளுமாறு அம்மா கடிதம் எழுதினார். வாகனம் மிகவும் கஷ்டம் தமிழர்கள் ஒழிந்து திரியும் காலம் நான் கொழும்பு வந்துபி ன் பொத்துவில் வந்து அவனிடம் காசை வாங்கிக் கொண்டுசென்றேன் (எங்கள் வளவுதான் இப்போது பிரபல்யமான சியாம்வீவ் எனும் கொட்டல்) எவ்வளவு கஷ்டம் வீடுவாசல் உற்றார் உறவினர் உடன் பிறப்புக்கள் என்று தாங்க முடியாத துயரங்கள் துன்பங்கள் இன்றும் தொடர்கின்றது என் வாழ்வில்.

வளவு விற்ற காசை எடுத்துக்கொண்டு எனது கணவரின் ஊரில் ஒரு சிறு வளவை வாங்கி வீடு கட்டினேன். அப்பா கஷ்டம் சொல்லில் அடங்காது. யாருடைய உதவியும் எனக்கு இல்லை. அப்படியும் 27 வருடங்கள் ராகலை (சூரிய காந்தி)தோட்டத்தில் வசித்தேன். அவர் காசு நகை இவைகள் மட்டுதான் அவருக்குத் தேவை. மூன்று பிள்ளைகள் 2 ஆண், 1 பெண் பிறந்த பின் அவர் அதிகம் வீட்டுக்கு வருவதே இல்லை. கடும் கஷ்டம் ஆண் பிள்ளைகள் படித்துமுடித்தவுடன் அவர்களையும் அவருடன் வைத்துக் கொண்டார். பெண் பிள்ளையை விடுதியில் சேர்த்து விட்டார். என்னிடம் கூறினார். உனது தேவையை நீ பார்த்துக் கொள் என்று கூறிவிட்டார். வேலைக்கு சென்று பழக்கம் இல்லை இருந்தது முதல் முறையாக கொழும்பிற்கு ஒரு வீட்டுக்கு வேலைக்குச் சென்றேன். 6 மாதங்கள் வேளை செய்தேன். எனது பெரிய மகன் ரி.பி. எடுக்கத்தான் அப்பா திருமணம் செய்ய போகின்றார். வாங்கள் என்றான். நானும் வந்தேன். வேறு யாரும் அல்ல அவளின் அக்கா மகளைத் தான் என்று மகன் கூறினான். எல்லோரும் சேர்ந்து என்னை விரட்ட திட்டம் இட்டார்கள். எனது வீட்டை எடுத்துவிட்டு நான் சிறு விலைக்கு வீட்டை விற்று விட்டு மீண்டும் பொத்துவில் வந்து ஓர் வீடு தனியாக மூன்று வருடம் வந்து ஒரு வருடத்தால் மகன் என்னுடன் வந்துவிட்டார். இருவரும் ஒன்றாக இருந்தோம். மகளுக்கு பணம் அனுப்புவார் எனது தேவைக்கு கஷ்டமாக இருந்தது. நான் உல்லையில் மீண்டும் வௌ்ளைகாரியிடம் வேலைக்கு சேர்ந்தேன். அங்கும் கணவன் பிள்ளைகள் அனைவரும் வந்து வேலைக்கு சேர்ந்தார்கள். என் குடும்பம் அனைவரும் சேர்ந்து என்னை விரட்டி விட்டார்கள்.

மீண்டும் ஒரு வௌ்ளைகாரியிடம் வேலைக்கு சேர்ந்து சம்பாதித்து ஒரு வீடு வாங்கினேன். 4 வருடங்களுக்கு முன்பு நான் என் கணவரை விவகாரத்து செய்தேன். ரெட்டையில் வாங்கிய வீட்டை எனது மகளுக்காக வாங்கினேன்.

இங்கும் என்னை வௌியாக்கிவிட்டார்கள். ஏத்தத்தில் வாங்கி வீட்டில் தனியாக இருந்தேன். ஒருவருடம் அங்கு எனது மூத்த மகனும் மனைவி பிள்ளையும் வந்துவிட்டார்கள். இப்போது உல்லையில் வேலை செய்தேன். வசிப்பிடம் உள்ளது. 3 இலட்சம் கடன் இருக்கு. அந்த கடன் முடியும் மட்டும் நான் கடுமையாக உழைக்க வேண்டும். 90ம் ஆண்டுதொடக்கம் 2016 வரை உற்றார் உறவினர் அரசாங்கம் நிறுவனம் யாருடைய உதவியும் இல்லாமல் இந்த நிலையில் இருக்கின்றனன். இது என்னுடைய கதை சுருக்கம். எனக்கு தற்போது 53 வயது. எதிர்காலம்? நான் எல்லோருக்கும் உதவி செய்கின்றேன் என்றுமே எல்லா விதமான உதவியும் ஆனால் எனக்காக உதவி செய்ய யாரும் இல்லை. அன்பாக நான்கு வார்த்தை சொல்ல கூட யாரும் இல்லை. கடவுளைத் தவிர.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License