Pakkiyarasa Seetha
Inspector Etham
Pottuvil
2016.03.29
My mother had four children, three girls and a boy. When we were young, my father left our mother and remarried my mother’s younger sister. After that our mother suffering a lot to reared us by herself. She went to coolly work to rear us. We could not go to school amidst difficulties. While living a difficult life, I got married in April 1990 at the age of 16 years.
In June 1990, the war begun terribly. My husband’s name is Tharumalingam Baskaran. When the war started, we left our native place and stayed in the refugee camp at Komari. Then the army convened a meeting and asked us to go to our native place and told that they would provide security. That time I was pregnant by two months. We returned to our place on 28.07.1990. We saw that none of our belongings was left at home and everything had been stolen. Three days after we returned home (31.07.1990), the army and police rounded up our area by 4 o’clock in the morning. By 6 o’clock, they went house by house and checked the houses. They asked all males to bring their National Identity Cards. They kept all of them sat down under a tree. They checked the NIC of each male. They took 18 youngsters on 31.07.1990 to the police station while leaving the elderly people. All ladies went following them. They told us, that they would be released in the evening after inquiry and doing some work at the Police Station. The whole day, they did not return.
The next morning, we went to the Police Station. The police officers did not give us any information. Hearing our sorry state, Member of Parliament Majeed came there. After meeting the police officers, he told us that the police had told him that they had not taken anybody to the Police Station. Also as they could not provide security for all, we were asked to go beyond Urani. Those who had lost their husbands and children, again went to Komari. We lived in Komari for 3 years with severe poverty.
Then we came to our native place Inspector Etham. Meanwhile, on 11.02.1991, my child was born at the Refugees Camp. I and my child lived with the support of my husband’s relatives. I left my child with my husband’s mother and went abroad. While in abroad, I educated my child. After studies, as there is no employment, my son also went abroad. Now, I live with his support. I conclude my story and if possible, please search my husband.
Thanks.
True wife.
පාක්කියරාසා සීතා,
ඉන්ස්පෙක්ටර් ඒත්තම්,
පොතුවිල් - 10.
2016/03/29
මගේ අතීත කථාව. මගේ අම්මට ළමයි 4ක් හිටියා. ගෑණු ළමයි 3යි, එක පිරිමි ළමයයි. අපේ තාත්තා අපි පුංචි කාලයේ අම්මාව අතඇරලා දාලා අපෙ අම්මාගෙ නංගිව කසාද බැන්දා. ඒකෙන් පස්සෙ අපෙ අම්මා බොහොම දුක් මහන්සියෙන් අපිව හැදුවා. කුලී වැඩට ගිහිල්ලා තමයි අපිව හැදුවෙ. අපිට (කරදර නිසා) ඉස්කෝලෙ යන්න බැරි වුනා. මේ විදියට කරදර මැද අපි ජීවත් වුනා.
මම මගේ මේ කරදර මැද අවුරුදු 16 දී 1990 අවුරුද්දෙ 4 වන මාසෙ කසාද බැන්දා. 1990 හය වැනි මාසෙ යුද්ධෙ පටන් ගත්තා. මගෙ මහත්තයාගෙ නම ධර්මලිංගම් බාස්කරන්. යුද්ධය පටන් ගත්ත කාලෙ අපි පදිංචි වෙලා හිටපු තැන අත ඇරලා “කෝමාරි” කියන ගමට ගිහිල්ලා එහෙ අනාථ කඳවුරක ජීවත් වුනා. මේ විදියට අපි එක මාසයක් ජීවත් වුනා. ඒ වෙලාවේ හමුදාවෙන් අපිට රැස්වීඹක් තියලා කිව්වා “ ඕගොල්ලන්ට ඕගොල්ලො හිටපු අයිති තැනට යන්න යන්න පුළුවන්, ඕගොල්ලන්ට අපි ආරක්ෂාව දෙනවා ” කියලා. ඒ වෙලාවේ මම ළමයෙක් හම්බ වෙන්න හිටියේ (මාස 2) 1990. 07. 28 දවසේ අපි අපේ තැනට ආවා. එහෙ ආපුවහම අපේ ගෙදර කිසිම බඩුවක් තිබ්බෙ නෑ. හැමදේම හොරු අරගෙන තිබ්බා. උයලා කන්ඩවත් මුකුත් නැති තත්වයක තමයි අපි හිටියේ.
අපි ඇවිල්ලා දවස් 3කට පස්සේ (1990.07.31) දවසේ හමුවෙන්, පොලීසියෙන් ඇවිල්ලා රවුන්ඩප් කළා. උදේ 6ට විතර හැම ගෙදරකටම ගිහිල්ලා ගෙවල් චෙක් කරා. එතැන හිටපු හැම පිරිමි කෙනෙකුටම එයාලගේ හැඳුනුම්පත අරගෙන එන්න කිව්වා. ඒගොල්ලන්ව එක්ක ගිහිල්ලා ගහක් යට වාඩි කෙරෙව්වා. හැම පිරිමි කෙනෙක්ගෙම අයිඩින්ටි කාඩ් එක බැලුවා. වයසක අයව අතඇරලා තරුණයන් 18 දෙනෙක් (1990.07.31) දවසෙ පොලිසියට අරන් ගියා. ගෑණු හැම කෙනෙක්ම පස්සෙන් ගියා. අපිට කිව්වා “ ඒගොල්ලන්ගෙ පොඩි ප්රශ්න කිරීමක් කරලා පොලිසියේ වැඩ වගයක් කරගෙන නිදහස් කරනවා ” කියලා. ඒ දවස තිස්සෙම ඒ අය ආවෙ නෑ.
පහුවදා උදේ අපි පොලිසියට ගියා. අපිට පොලිසියෙ මහත්තුරුන්ගෙන් කිසිම තොරතුරක් දැන ගන්න හම්බවුනේ නෑ. අපේ මේ තත්වෙ අහලා තිබ්බ මජීද් මන්ත්රීතුමා ආවා. එතුමා පොලිස් මහත්තුරු හම්බවුනාට පස්සෙ එතුමාට “ අපි කිසිම කෙනෙක් පොලිසියට ගෙනාවෙ නෑ” කියලා. එතුමා අපි හැමෝටම, “ඔයගොල්ලන්ට ආරක්ෂාව දෙන්න බෑ, ඔයගොල්ලො ඌරනි පහු කරලා යන්න” කිව්වා.
CMP/AMP/POT/INE/01
பாக்கியராசா சீதா
இன்ஸ்பெக்டர்ஏத்தம்
பொத்துவில்
2016.03.29
எனது ஆரம்பக்கதை. எனது தாய்க்கு நான்கு பிள்ளைகள் 3 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும். எனது தந்தையார் எங்களின் சிறுவயதிலே எங்கள் அம்மாவை விட்டு விட்டு எங்கள் அம்மாவின் தங்கையை மறுதிருமணம் முடித்து விட்டார். அதன் பின்பு எனது தாய் மிகவும் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்து வந்தார். கூலி வேலைக்குப்போய் எங்களை வளர்த்தார். எங்களால் (கஷ்டத்தின் மத்தியில்) பாடசாலை செல்ல முடியவில்லை. இப்படியாக கஷ்டத்தில் மத்தியிலே வாழ்ந்து வந்தோம். நான் எனது கஷ்டத்தின் மத்தியில் 16 வயதில் 1990ம் ஆண்டு 6 மாதம் பெரும் யுத்தம் தொடங்கிவிட்டது. எனது கணவரின் பெயர் தருமலிங்கம் பாஸ்கரன். யுத்தம் ஆரம்பித்தவுடன் நாங்கள் எங்களது சொந்த இடத்தை விட்டு கோமாரி எனும் ஊரில் சென்று அகதி முகாமில் வாழ்ந்துவந்தோம். இப்படியாக 1 மாதம் நாங்கள் வாழ்ந்துவந்தோம். அந்தவேளை இராணுவத்தினர் எங்களுக்கு கூட்டம் வைத்து சொன்னார்கள். உங்களது சொந்த இடத்திற்கு நீங்கள் செல்லுங்கள். உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தருவோம் என்று கூறினார்கள். அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன் (2 மாதம்) 1990ம் 7 28ம் திகதி எங்களது இடத்திற்கு வந்தோம். அங்கு வந்த போது எங்கள் வீட்டில் எந்த வித பொருட்களும் இல்லை எல்லாம் கள்வர்களினால் திருடப்பட்டது. சமைத்து சாப்பிடக்கூட எதுவும் இல்லாத நிலையில் இருந்தோம். நாங்கள் வந்து 3 நாள் (1990.07.31) திகதி அன்று இராணுவத்தினரும் பொலிஸாரும் விடியற்காலை 4 மணியளவில் ரௌன்டப் பண்ணிவிட்டார்கள். காலையில் 6 மணியளவில் ஒவ்வொரு வீடுகளாக சென்று வீடுகளை செக்பண்ணினார்கள்.
அங்கு இருந்த ஆண்கள் எல்லாரையும் தே.அ அட்டையை எடுத்து வரும்படி சொன்னார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு போய் ஒரு மரத்தடியின் கீழ் அமரவைத்தார்கள். ஒவ்வொரு ஆண்களாக தே.அ.அட்டையினை பார்வையிட்டார்கள். வயது போனவர்களை விட்டு விட்டு இளமானவர்களை(1990.7.31ம்திகதி 18 பேர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். பெண்கள் அனைவரும் பின் தொடர்ந்து சென்றோம். எங்களிடம் கூறினார்கள் இவர்களை விசாரணை செய்து பொலிஸ் நிலையத்தில் சில வேலைகள் செய்ததன் பின் பின்னேரம் இவர்களை விடுவிக்கின்றோம். என்றுகூறினார்கள். அன்று முழுவதும் அவர்கள் வரவில்லை. மறுநாள் காலையில் நாங்கள் பொலிஸ் நிலைய்திற்குச் சென்றோம். எங்களுக்கு பொலிஸ் அதிகாரிகளினால் எதுவித தகவலும் கிடைக்கவில்லை. எங்களின் அவல நிலையை கேட்டறிந்து எம்.பி. மஜீத் அவர்கள் வந்தார். அவரின் பொலிஸ் அதிகாரிகளை சந்தித்தபின்னர் அவரிடம் நாங்கள் ஒருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரவில்லை எனவும் அவர் எங்கள் எல்லோரிடமும் உங்களுக்கு பாதுகாப்பு தரமுடியாது. நீங்கள் ஊரணியைத்தாண்டி செல்லவும் என்று கூறினார்கள். கணவரை இழந்த பிள்ளைகளை இழந்த அனைவரும் மறுபடியும் கோமாரிக்கும் சென்றோம். கோமாரி எனும் இடத்தில் கடும் பஞ்சத்துடன் 3 வருடங்கள் வாழ்ந்துவந்தோம். அதன்பின் எங்களது சொந்த இடமான இன்ஸ்பெக்டர் ஏத்தத்துக்குவந்தோம். இவ்வேளையில் 1991.02.11 திகதியன்று அகதிமுகாமிலே எனக்கு குழந்தையும் பிறந்தது. எனது கணவரின் உறவுகளின் பராமரிப்பில் நானும் எனது குழந்தையும் வாழ்ந்துவந்தோம். எனது கணவரின் தாயிடம் எனது குழந்தையை விட்டு விட்டு வெளிநாடு சென்றேன். வெளிநாடு சென்று குழந்தையும் படிப்பித்தேன். கல்வியை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாததால் எனது மகனும் வெளிநாடு சென்றுவிட்டான். தற்போது அவரின் ஆதரவில் வாழ்ந்துவருகின்றேன். இத்துடன் எனதுகதையை முடித்துக்கொள்கிறேன். முடிந்தால் எனது கணவரைத் தேடித்தரவும்.
நன்றி