We live with confidence

A widow mother shares her life challenges and desires with us.


අපි විශ්වාසයෙන් ජීවත් වෙමු

ඔහු සමඟ වැන්දඹුවක් ලෙස ඔහු මුහුණ දෙන අභියෝග ඔහු සමඟ බෙදා ගනී.


தன்னம்பிக்கையுடன் நாங்கள் வாழ்கிறோம்

ஒரு விதவைத்தாய் தன் வாழ்க்கையில் எதிர்கொள்கின்ற சவால்களை எம்மிடம் பகிர்கின்றார்.



CMP/AMP/POT/INE/02

Dear sisters, I relate my sad story. I am a window. My son was abducted from our house on 01.04.2008 in our presence. He has three children.
Nimmiya 15 years Grade 10
Anujan 13 years Grade 07
Seenujan 11 years Grade 06

They all study at M.M school. I have been living with great difficulties. We have not been provided even food stamps by the government. Food stamps given to affluent people too have not been given to these innocent children and to me, being a window. I do not understand whether this is the mistake of the government or the officers concerned. I have been rearing my son’s children amidst all difficulties to make them good citizens in this society which has no conscience. I have been spending the whole day for these children with a determination that they should get higher studies. I never get any other thought during daytime. Because, I think of nothing other than their studies, class, school and their work. I do not sleep during nights. When the children sleep, I sit close to them. My mind is full of sorrow when they ask for their father. Sometimes, I fear of thinking of their future and whether I could be able to make them attain good position in life or not. If their future would be better, it would give happiness.

If the government and officials do their best for poor people like us, it would be prosperous for all. There are 4 widows in our family. We do not get any income from males. For others, we seem to be rich and may be because of that nobody help us. We exploit our own life courageously not in a wrong way, while trusting God without telling lies and compelling others. Nobody knows whether we take meals or are starving. We are human beings outwardly but the sadness we experience every day, whether my son would come or not, cannot be measured. If you rescue my son, it would be a great strength. I believe that those who reads this would help our children for their future studies, considering their plight of life.

Yours truly,
R.Yamunadevi
Inspector Etham
Pottuvil-10










CMP/AMP/POT/INE/02-1

ආදරණීය සහෝදරයින්ට මා අයදින්නාවූ මාගේ ශෝක කථාවයි. සහෝදරිය, මම එක් වැන්දඹුවක්ය. මාගේ පුත්‍රයා 2008.04.01පදින මගේ නිවසේ අපි ඉදිරිපිටදී පැහැර ගන්නා ලදි. ඔහුට දරුවන් 3කි.
නිම්මියා - වයස 15 – 10 වසර
අනූජන් - වයස 13 – 7 වසර
සීනුජන් - වයස 11 – 6 වසර

ඔවුන් පාසැල් අධ්‍යාපනය ලබමින් සිටී. මම ඉතාමත් අමාරු තත්වයක ජීවත් වෙමින් සිටිමි. රජයෙන් පවා ආහාර මුද්දරය අපට ලැබුනේ නැත. කොතරම් නම් පහසුකම් ඇති අයට පවා ලැබෙන්නාවූ මෙම ආහාර මුද්දරය අහිංසක දරුවන්ටත් වැන්දඹුවක් වන මටත් ලැබුනේ නැත. මෙය රජයේ වැරැද්දක් නොව රාජකාරියේ සිටින්නාවූ අයගේ වැරැද්දක් බව මට වැටහුනේ නැත. හෘද සාක්ෂියක් නොමැති මෙම සමාජය මධ්‍යෙය් මම මගේ මනසේ වීර්යත් සමග මගේ අනර්ඝ දරුවන් මෙම සමාජයට සරිලන යහපත් දරුවන් වෙන්න අවශ්‍යයි කියා සිතමින්ම මෙම කරදර මධ්‍යයේ ජීවත් වෙමින් සිටිමි. මෙම දරුවන් උසස් අධ්‍යාපනය ලැබිය යුතුයි යන වීර්යයයෙන් මාගේ මුළු දවසම මෙම දරුවන් උදෙසා වැය කරමි. මට වෙන කල්පනාවක් එන්නේ නැත. මක්නිසාද යත් දරුවන්, පංති, පාසැල සහ ඔවුන්ගේ ක්‍රියාවන්. ඒ නිසා මනසේ වෙන කිසිම සිතුවිල්ලක් එන්නේවත් නිදා ගැනීමේ දී නින්ද එන්නේවත් නැත. දරුවන් ළඟින් නිදා ගන්නාවූ මම ඔවුන්ගේ ළඟින් සිටිමි. මනසේ වේදනාවය. අපේ තාත්තා කවදද අම්මේ එන්නේ? යනුවෙන් අසන්නෝය. ඔවුන්ගේ අනාගතය, මේ ගැන සිතීමේදී භයකුත් පැමිණෙනවා, ධෛර්යකුත් පැමිණෙනවා. භය, මෙම දරුවන් කරදර මැද එගොඩ කරන්න පුළුවන් වෙයිද? බැරි වෙයිද? යන්නයි. සතුට, අනාගතය යහපත්ව පැමිණේවි යන්නයි. කරුණාකර අපි වැනි දුප්පතුන්ට රජය හෝ රජයේ පරිපාලන නිලධාරීන් හෝ හෘද සාක්ෂියට විරුද්ධ නොවී වගකීම තේරුම් ගත්තොත් හැමෝටම යහපත් කාලයක් වේවි. මාගේ පවුලේ වැන්දඹුවන් 4කි. අපට පිරිමි කෙනෙකුගේ ආදායම් කිසිවක් නැත. බලන්නාවූ අයට අපව පොහොසත් වගේ පෙනේ. ඒ නිසාද දන්නෑ අපට කිසිම උපකාරයක් නොකරන්නේ? අපගේ ධෛර්ය නිසාම අප ජීවත් වන්නාවූ ජීවිතය වැරදි මාර්ගයෙන් බොරු කියමින් අනික් අයව වේදනාවට පත් කරමින් ජීවත් නොවී අපගේම ආත්ම විශ්වාසය සමග අපි ජීවත් වෙමු. අපගේ නිවසේ අපි කෑම කනවද? බඩගින්නේ ඉන්නවද? කාටවත් දන්නේ නැත. පිටස්තරයෙන් අපි හොඳ මිනිසුන්. අප විඳින්නාවූ වේදනාවන්, පැහැර ගත් දරුවා එයිද? නැද්ද? යන්න දිනපතා අප විඳින්නාවූ වේදනාව මනින්න බැහැ. මාගේ පුත්‍රයාව නිදහස් කරදුන්නොත්, එයම විශාල වරමකි. මෙය කියවන්නාවූ අය, අපගේ තත්වයේ අවධානයට යොමු කර අපගේ දරුවන්ගේ අනාගත අධ්‍යාපනයට උපකාර කරයි යන්න සිතමින් මාගේ කථාව අවසන් කරමි.

මෙයට,
විශ්වාසී,
R. යමුනා දේවි.

ලිපිනය :- R. යමුනා දේවි
ඉන්ස්පෙක්ටර් ඒත්තම් පොතුවිල් - P/10




CMP/AMP/POT/INE/02

அன்பின் சகோதரிகளுக்கு நான் விண்ணப்பிக்கும் எனது சோகக்கதை. சகோதரி நான் ஓர் விதவை. எனது மகன் 2008.04.01ம் திகதி எனது வீட்டில் எங்களது முன்னிலையில் கடத்தப்பட்டார். அவருக்கு 3 குழந்தைகள்.

நிம்மியா - வயது15 - தரம் 10
அனுஜன் - வயது13 - தரம் 7
சீனுஜன்வயது 11- தரம் 6

எம்.எம்.ஸ்கூள்ள கல்வி கற்று வருகிறார்கள். நான் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருகிறேன். அரசாங்கத்தால் கூட உணவு முத்திரையும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எவ்வளவோ வசதியானவர்குளுக்கு வழங்கப்படும் உணவு முத்திரை கூட இந்த அப்பாவிக் குழந்தைகளுக்கும் விதவையான எனக்கும் வழங்கப்படவில்லை. இது அரசாங்கத்தின் தவறா இல்லை கடமைபுரியும் உத்தியோகத்தில் தவறா என்று எனக்குப் புரியவில்லை. மனசாட்சி இல்லாத இந்த சமுதாயத்திற்கு மத்தியில் நான் என் மன வைராக்கியத்துடன் எனது மகன்ட குழந்தைகளை இந்த சமுதாயத்துக்கு ஏற்ற நல்லவர்களாக வரவேணும் என்டு நினைச்சித்தான் நான் என்ட கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறன். இந்தப் பிள்ளைகள் உயர் கல்வி கற்கவேணும் என்ற வைராக்கியத்தில் எனது முழு நாளையும் இந்த குழந்தைகளுக்காக நான் செலவிடுகிறேன். பகலில் எனக்கு எந்த நினைவும் வருவதில்லை. ஏனெனில் பிள்ளைகள் வகுப்பு பாடசாலை மற்றது அவங்கட வேலைகள் அதனால் மனசில் எந்த எண்ணமும் வராது. இரவக்கி தூங்கும் போது நித்திரையே வராது. பிள்ளைகள் பக்கத்தில் படுக்கும் நான் அவர்களுக்கு பக்கத்தில் இருப்பன். மனதில் பிள்ளைகள் எங்களட அப்பா எப்ப அப்பம்மா வருவார் என்று கேட்பார்கள். அவர்கள் வருங்காலம் இதை எல்லாம் நினைக்கும் போது பயமும் வரும். தைரியமும் வரும் பயம் இந்தக் குழந்தைகளை கஷ்டத்துக்கும் மத்தியில் கரை சேர்ப்பனா, சேர்க்க மாட்டனா என்பது சந்தேகம். வருங்காலம் நல்லதாகவே அமையும் என்பது சந்தோசம். தயவுசெய்து எங்களைப்போல் ஏழைகளுக்கு அரசாங்கமோ அல்லது அரசாங்கத்தில் கடமைபுரியும் ஊழியர்களோ மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் கடமை புரிந்தால் எல்லோருக்கும் நன்மையான காலமாய் இருக்கும். எங்களது குடும்பத்தில் 4 விதவைகள். எங்களுக்கு ஆண் பிள்ளையின் வருமானம் எதுவும் இல்லை. பார்ப்பவர்களுக்கு நாங்கள் பணக்காரர் போல் தெரிகிறது. அதனால் தானோ தெரியாது. எங்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. எங்கட தைரியத்தை கொண்டு நாங்கள் வாழும் வாழ்க்கை தப்பான வழியில் பொய் பேசி மற்றவர்களை வேதனைப்படுத்தி வாழாமல் கடவுளை நம்பி எங்கட தன்னம்பிக்கையுடன் நாங்கள் வாழ்கிறோம். எங்கட வீட்டில் நாங்க சாப்பிடுகிறோம்மா, பட்டினி கிடக்கிறோமா, யாருக்கும் தெரியாது. வெளித் தோற்றத்திற்கு தான் நாங்கள் மனிதன். நாங்க படும் வேதனை கடத்தப்பட்ட மகன் வருவாரா? வரமாட்டாரா என்று தினமும் நாங்கள் அனுபவிக்கும் வேதனையை அளவிடமுடியாது. எனது மகனை மீட்டுத் தந்தால் அதுவே பெரிய வரம். இதை படிப்பவர்கள் எங்களது நிலைமைய கருத்திற் கொண்டு எங்கள் குழந்தைகளின் வருங்கால கல்விக்கு உதவுவார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறி எனது சிறிய மடலை முடிக்கிறேன்.

இப்படிக்கு
உண்மையுள்ள

ஆர்யமுனாதேவி

விலாசம்- ஆர்யமுனாதேவி
இன்ஸ்பெக்டர்ஏத்தம்,பொத்துவில்






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License