Please help me to seek a proper solution

Emotional sharing of a woman after 26 years of her husband's disappearance


කරුණාකාර මට නිවැරදි තීරණයක් ගැනීමට උදව් කරන්න

කාන්තාවගේ මනෝවිශ්ලේෂණය වසර 26 කට පසු ඇගේ සැමියාගේ අතුරුදන් වීමෙන් පසු


எனக்கு முறையான தீர்வு ஒன்று கிடைக்க உதவிபுரியுங்கள்

கணவர் காணாமல் போய் 26 வருடங்கள் கழிந்த நிலையிலும் அவர் பற்றிய எந்ததகவலும் கிடைக்காமல் பரிதவிக்கும் பெண்ணொருத்தியின் உளப்பகிர்வு



CMP/AMP/POT/INE/06

Sabapathy Vimaladevi
Inspector Eltham
Pottuvil – 01

My husband Ilayathamby Karunagaran served as a watcher in the Irrigation Department. On duty, he went to paddy fields on 27.07.1990. While he was measuring the paddy field, the Special Task Force supervised it. They took my husband who was on duty there for inquiry on suspicion.

They told that he had been kept at Arugambe Police. When we went there, they told that was not there. Then I went to Pottuvil Police. They also said that he was not there and I went to Komari Police. They also told that he was not there. Then I went to the Human Rights Commission and Red Cross Society and searched my husband. I have been suffering much with my two daughters. They both are big children. I have no means of income to spend for my life for my children. I have been living with much difficulties. Also, even after 26 years have passed since my husband has disappeared, there is no any information regarding him. Further, from the office of my husband where he worked, I got his salary for few years. It also has been stopped. Now, without any assistance, I have been living with my two children with much difficulty. Please help me to seek a proper solution. Help me at least to get my husband’s pension money. I beg of you to find out whether my husband is alive or not?

Faithful wife,
S.Vimaladevi















CMP/AMP/POT/INE/06-1

සභාපති විමලාදේවි,
ඉන්ස්පෙක්ටර් ඒත්තම්,
පොතුවිල් - 10.

(ඉලයතම්බි කරනාකරන්) ඉහත නම් ඇති මාගේ ස්වාමි පුරුෂයා ධීවර වරායක මුරකරු ලෙස රාජකාරී කලේය. ඔහු ඔහුගේ රාජකාරිය නිමිත්තෙන් 1990.07.27 දින කුඹුරට ගියේය. ඔවුන් එහි කුඹුරෙ හාන වැඩය කරමින් සිටියහ. එවිට එහි පැමිණ හමුදා භටයින් නිරීක්ෂණය කරමින් පැමිණියහ. ඒ වෙලාවේ රාජකාරිය කරමින් සිටි මාගේ ස්වාමි පුරුෂයාව සැක පිට ප්‍රශ්න කිරීමට කැඳවා ගෙන ගියහ. රැගෙන ගියාවූ අයව අරුගම්බේ පොලීසියේ රඳවා ගෙන සිටින බව ප්‍රකාශ කළහ. එතැනට ගොස් අසන විට එතැන ඔහු නැති බව ප්‍රකාශ කලහ. එයට පසු පොතුවිල් පොලිසියට ගොස් ඇසුවෙමි. එහි නැති බව පැවසූ විට කෝමාරි පොලිසියට ගොස් ඇසුවෙමි. එහි නොමැති බව ප්‍රකාශ කළහ. එයට පසු මානව හිමිකම් කවුන්සිලයට මෙන්ම රතු කුරුස සංවිධානයටත් ගොස් මාගේ ස්වාමි පුරුෂයාව සෙවුවෙමි.

මම මාගේ ගැහැනු දරුවන් දෙදෙනා සමග වෙහෙස වෙමින් පැමිණියෙමි. දෙදෙනාම වැඩි වියට පත් දරුවන්. ඔවුන් සමග මාගේ කාලය ගත කිරීමට මට කිසිම උදව්වක් නැත. මහත් වෙහෙසක් සමග ජීවත් වෙමින් සිටිමි. එය පමණක් නොව, මාගේ ස්වාමි පුරුෂයා අතුරුදහන් වී වසර 26ක් ගතවී තිබෙන මෙහොතක ඔහු පිළිබද කිසිම තොරතුරක් ලැබී නැත. ඒ සමගම මාගේ ස්වාමි පුරුෂයා රැකියාව කරමින් සිටි කාර්යාලයෙන් මාගේ ස්වාමි පුරුෂයාගේ වැටුප් මුදල වර්ෂ කීපයක් ලබා ගත්තෙමි. එයත් නවත්වන ලදි. දැන් කිසිම උදව්වක් නොමැතිව මාගේ වැඩිවියට පැමිණි දරුවන් සමග ඉමහත් වෙහෙසක් දරමින් ජීවත් වෙනවා. කරුණාකාර මට නිවැරදි තීරණයක් ගැනීමට උදව් කරන්න. මාගේ ස්වාමි පුරුෂයා ඉන්නවද? නැද්ද? යන්න හඳුනා ගැනීමට මට පමණක් උපකාර කරන මෙන් ඉතාමත් යටහත්කමින් ඉල්ලා සිටිමි.
මෙයට,
විශ්වාසවන්ත භාර්යාව,
ස. විමලාදේවි.



CMP/AMP/POT/INE/06

சபாபதி விமலாதேவி
இன்ஸ்பெக்டர்ஏத்தம்
பொத்துவில் 10

இளைய தம்பி கருணாகரன் மேற்படி பெயருடைய எனது கணவர் நீர்ப்பாசன துறையில் காவலாளியாக கடமைபுரிந்து வந்தார். அவர் அவரது கடமை நிமித்தம் 1990.7.27ம் திகதி வயலுக்குச் சென்றார். அங்கு அவர்கள் வயலினை அளக்கும் வேலையினை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்குவந்த அதிரடிப்படையினர் மேற்பார்வையிட்டு வந்தனர். இவ்வேளை அங்கு கடமைபுரிந்து கொண்டிருந்த என் கணவரை சந்தேகத்தின் பேரில் விசாரிப்பதற்காக கூட்டிச் சென்றனர். கூட்டிச் சென்றவரை அருகம்பை பொலிஸில் வைத்திருப்பதாக கூறினர். அங்கு சென்று கேட்டபோது அங்கு அவர் இல்லை என்று கூறினர். அதன்பின் பொத்துவில் பொலிஸில் சென்று விசாரித்தேன். அங்கும் இல்லை என்று கூறவே கோமாரி பொலிஸில் சென்று விசாரித்தேன். அங்கும் இல்லை என்று கூறினார்கள். அதன்பின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் அங்கும் சென்று எனது கணவரை தேடினேன்.

நான் எனது இரு பெண்பிள்ளைகளுடனும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றேன். இருவரும் வயதுவந்த பிள்ளைகள் அவர்களுடன் எனது காலத்தை போக்குவதற்கு எனக்கு எந்த உதவியும் இல்லை. மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றேன். அதுமட்டுமின்றி எனது கணவர் காணாமல் போய் 26 வருடங்கள் கழிந்த நிலையிலும் அவர் பற்றிய எந்ததகவலும் கிடைக்கவில்லை. அத்தோடு எனது கணவர் பணிபுரிந்து வந்த காரியாலத்திலிருந்து எனது கணவரின் சம்பள பணத்தினை சில வருடங்கள் பெற்று வந்தேன். அதனையும் நிறுத்திவிட்டார்கள். இப்போது, எவ்வித உதவியும் இன்றி எனது வயதுவந்த பிள்ளைகளுடன் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றேன். தயவுசெய்து எனக்கு முறையான தீர்வு ஒன்று கிடைக்க உதவிபுரியுங்கள். எனது கணவரது ஓய்வூதிய பணத்தினை யாராவது பெற்றுக்கொள்ள உதவி புரியுங்கள். எனது கணவர் இருக்கின்றாரா? இல்லையா? என்பதை அறிய எனக்கு உதவி புரியுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வண்ணம்
உண்மையுள்ள மனைவி






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License