Unforgettable memories of my family

The woman says her sad family life experiences in the past.


මගේ පවුලේ අයට අමතක නොවන මතකයන්

කාන්තාව ඇගේ දුක්ඛිත පවුල් ජීවිතය අත්දැක ඇති බව පවසයි.


எனது குடும்பத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத நினைவலைகள்

பெண்ணொருவர் தனது சோகம் நிறைந்த குடும்ப வாழ்க்கை அனுபவத்தினை கூறுகின்றார்.CMP-MN-MUS-ARI-04

Unforgettable memories of my family
I am living in a village called Arippu. My mother got me married in 2001. My painful life started with that. I had 3 children amidst all the difficulties. I worked for daily wages and with the help of my mother I brought the children up. When I was leading my life with much hardship I learnt that he was living with another woman. He used to go out and come back suddenly. One day he left home and never returned, after that I was living with my mother. He did not even return after 3 years. In 2007 we had to leave our village and settle in a refugee camp in Nanattan area due to army’s harassment. Later my mother passed away and my siblings also did not love me. I was left alone. Since I could not raise my kids single handedly I married again and the new life went well. We understood each other well. After we had a baby girl we returned back to our village. Kids grew up and started studying well. I sent my eldest daughter who was studying at Arippu School to Vankalai Catholic Home for Women due to poverty. I was very happy about her. When she came back for vacation she went to have a bath in the pond and she drowned there. I lost all the hopes and happiness. Now I am living for the other kids with a heavy heart. I end my sad story with this.
Thank you.

මගේ පවුලේ අයට අමතක නොවන මතකයන්
මම ජීවත් වන්නේ අරිප්පු නමැති ගමකයි. 2001 දී මගේ අම්මා මාව විවාහ කර ගත්තා. සියලු දුෂ්කරතා මැද මට දරුවන් තිදෙනෙක් සිටියෙමි. මම දෛනික වැටුප් සඳහා වැඩ කළා. මගේ අම්මාගේ උපකාරයෙන් මම ළමයින්ව ගෙනාවෙමි. මම හුඟක් දුෂ්කරතාවලට මුහුණ දුන්න නිසා මම වෙනත් කාන්තාවක් සමඟ ජීවත් වෙනවා කියලා දැනගත්තා. ඔහු හදිසියේම පිටතට ගොස් ආපසු පැමිණියාය. දවසක් ඔහු ගෙදරින් පිට වී නැවත ආවේ නැහැ. ඊට පස්සේ මම අම්මා එක්ක ජීවත් වුණා. අවුරුදු 3 කට පසුව ඔහු ආපසු පැමිණියේ නැත. 2007 දී අපි අපේ ගම අත්හැර අනවසර හමුදා කඳවුරේ නැනෙතාන් ප්රදේශයේ සරණාගත කඳවුරක පදිංචි වුණා. පසුව මගේ අම්මා අභාවප්රාප්ත වූ අතර මගේ සහෝදර සහෝදරියන්ද මට ආදරය නොවූහ. මම තනි වෙලා හිටියේ. මම මගේ දරුවන්ව තනිවම නැවත විවාහ කර ගැනීමට නොහැකි නිසා මම නැවත විවාහ වූ අතර නව ජීවිතය යහපත් විය. අපි හොඳින් තේරුම් ගත්තා. අපිට ළදරුවෙක් ලැබුණාට පස්සේ අපි ආපහු අපේ ගමට ගියා. ළමයි හැදී වැඩුණු අතර හොඳින් ඉගෙනීමට පටන් ගත්හ. දරිද්රතාවය හේතුවෙන් කාන්තාවක් වන කාන්තාවයි කතෝලික නිවසේ සිට අරිප්පු ප්රාථමික විද්යාලයේ අධ්යාපනය ලබමින් සිටින මගේ වැඩිමහල් දියණිය මම යවා ඇත. මම ඇය ගැන ගොඩක් සතුටු වුණා. ඇය නිවාඩුවට පැමිණෙන විට ඇය පොකුණෙහි සැතපෙන්නට ගොස් එහි ගිලී මිය ගියාය. සියලු අපේක්ෂාවන් හා සතුට අහිමි විය. දැන් මම දරු සෙනෙහසින් සිටින අනෙක් දරුවන් වෙනුවෙන් ජීවත් වෙමි. මම මගේ කණගාටුව කතාව අවසන් කරනවා.

ඔබට ස්තුතියි.


CMP/MN/MUS/ARI/04

எனது குடும்பத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத நினைவலைகள்

நான் அரிப்பு கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனது அம்மா 2001ம் ஆண்டு திருமணம் செய்துவைத்தார். கணவருடன் துன்பங்களும், வேதனையும் நிறைந்த வாழ்க்கை ஆரம்பமானது. பல பிரச்சினைகள் மத்தியில் மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தேன். அவர்களை வளர்த்தெடுப்பதற்குபல கூலி வேலை செய்தும் அம்மாவின் உதவியுடன் வளர்த்தெடுத்தேன். இப்படி பல எதிர்ப்புகளின் மத்தியில் வாழ்க்கை தொடர்ந்த நேரம் அவர் இன்னொரு திருமணம் முடித்திருப்பதாக அறிந்தேன். திடீரென போவார். காணாமல் போனவர் வரவில்லை. அதற்கு பிறகுஅம்மாவுடன் வாழ்ந்து வந்தேன். 3 வருடம் ஆனபிறகும் எனதுகணவர் வரவில்லை. அதற்கு பிறகு இராணுவத்தின் கெடுபிடியால் ஊரை விட்டு 2007ம் ஆண்டு இடம்பெயர்ந்து நானாட்டான் பிரதேசத்தில் முகாம் ஒன்றில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்து வந்தேன். எனது அம்மாவும் இறந்து போனார். எனது சகோதரம் யாரும் என்னை அன்பு செய்யவில்லை. நான் தனிமைப்படுத்தப்பட்டேன். எனது குழந்தைகள் வளர்க்க முடியவில்லை. அதற்கு பிறகு 2009ம் ஆண்டு எனக்கு ஒரு துணைவரை நான் தேர்ந்தெடுத்தேன். அவருடன் எனது குடும்ப வாழ்வு நன்றாக இருந்தது. இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்தோம். அவருக்கு ஒருபெண் குழந்தை பிறந்தது. மீண்டும் எங்கள் கிராமத்திற்குசென்றேன்.

அதன் பிறகு என் பிள்ளைகள் எல்லாம் நன்றாக வளர்ந்துபடிக்க தொடங்கினார்கள். அரிப்பு பாடசாலையில் படித்து வறுமை காரணமாக எனது மூத்த மகளை பங்கு தந்தையுடன் அனுமதினுயுடன் வங்காலை திருக்குடும்ப கன்னியர் மடத்துக்கு அனுப்பி வங்காலை பாடசாலையில் படித்தாள். இப்பாடியாக காலம் கடந்தன. எனது சந்தோசமும் அதிகரித்தது. அவள் எனது மகள் விடுமுறைக்காக வீட்டிற்குவந்திருந்த காலம் அவளை குளத்திற்குள் குளிப்பதற்காக இழுத்து சென்ற வேளை எனதுமகள் குளித்துக் கொண்டிருந்த நேரம் கிடங்கிற்குள் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டாள். எனது எதிர்பார்ப்புகள் எனது சந்தோசம் விருப்பம் ஆசை எல்லாமே உடைந்து சிதறின. அந்நேரம் முதல் இன்நேரம் வரை உடைந்த உள்ளத்துடன் மற்ற குழந்தைகளுக்காக மட்டும் உயிர்வாழ்கின்றேன். இத்துடன் எனது சோகம் நிறைந்த வாழ்க்கை வரலாற்றை முடிக்கின்றேன்.A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License