CMP-MN-MUS-ARI-07
My Name :- B.Sahaya Mary Cruz
Date of Birth :- 1958.06.21
Age :- 58
Address :- Arippu, Silabathurai
T.P.No :- 0770571446
I am unmarried. I lived with my parents, brother from small age. My brother married and moved away. My father looked after us with his little work. As time went by my parents got sick and got old. I went for labour work and looked after my parents. After marriage, My brother didn’t look after us and I got sick we sold our house and with that money we made a small hut and lived there.
My father got sick and died in 2005. My mother and I lived alone. We were displaced in 2007. We didn’t know where to go and lived with our relatives for a few years. We were rehabitilucfed and lived with them for some time my mother died in 2013.
Now I am living with those relatives they are not well off. Even they were poor, they look after me. I get sick after and go to clinic. I got government assistance through samurthi and look after my importance eryzenses.
As I live with my far away relative brother I live alone without a husband, parents I struggle to live my life. I don’t have a permanent income, if there is any assistance kindly give it to my brother who looks after me. I complete my life history.
මගේ නම - පීගසහායමේරි
උපන් වර්ෂය - 1958.06.21
වයස අවු - 58
ලිපිනය ථ- අරිප්පුල සිලාවත්තුරෙයිග
දුරකථක අංකය - 077 0571446
ඉහත විස්තර සඳහන් මා අවිවාහකයිග මා කුඩා කාලයේ සිට අම්මාල තාත්තා අයියා සමග ජීවත්වුණාග අයියා විවාහ වෙලා අපෙන් වෙන්වෙලා ගියාග ඊට පස්සේ තාත්තා හම්බ කරන සුලු ආදායමෙන් තමයි අපේ පවුල ජීවත් වුණේග කලක් යත්ම අම්මාල තාත්තා දෙදෙනාම වයස්ගතව හා රෝගී තත්ත්වයෙන් සිටියාග ඒ වෙලාවෙ මම තමයි සුලු වශයෙන් කුලී වැඩ කරලා ඒගොල්ලන්ව නඩත්තු කළේග විවාහයෙන් පසු අයියා අපට සැලකුවෙම නැහැග ඒ වෙලාවෙ මගෙත් ශාරීරික තත්ත්වය එතරම් හොඳ නැහැග නිතර නිතර ලෙඩ වෙනවාග ඊට පස්සෙ අපි පදිංචිවෙලා සිටි නිවස විකුණලා ඒ සල්ලි වලින් පොඩි පැල්පතක් හදාගෙන අපේ පවුල ජීවිතය ගත කළාග
මෙසේ සිටියදී 2005 වර්ෂයේ තාත්තා තදබල ලෙස අසනීප වෙලා මිය ගියාග ඊට පස්සෙ මමයි අම්මයි අනාථයො ලෙස තමා ජීවත් වුණෙග මෙසේ සිටියදී 2007 වර්ෂයේ අපි අවතැන් වුණාග
එම අවතැන්වීමේ දී අපි කා සමග කොතනටද යන්නෙ කියා නොදැන සිටි මොහොතක දුරින් ඥාතියෙකු වන සහෝදරයෙකු සමග වසර කිහිපයක් සිටියාග එසේ සිටියදී නැවතත් නැවත පදිංචි කළ අවස්ථාවේදී ඔවුන් සමග ඔවුන්ගේ නිවසේම සිටියදී 2013 වර්ෂයේ අම්මත් මිය ගියාග
ඉන්පසු දැනට මා ඔවුන් සමග තමයි ඉන්නෙග ඒ අයත් ලොකුවට පොහොසත් කියලා කියන්න බැහැග දුප්පත් වෙලත් මටත් සලකනවාග දැනට මමත් නිතර නිතර ලෙඩ වෙලා මාස්පතා රෝහලේ ක්ලින්ක් එකට යායුතු තත්ත්වයට පත්ව සිටිනවාග දැනට මා රජයේ ආධාර යටතේ සමෘද්ධි ප්රතිලාභියෙකු ලෙස එයින් ලැබෙන සුලු ආධාර මුදලින් මගේ අත්යාවශ්ය වියදම් පිරිමහගන්නවාග
දැනට මා මගේ දුර ඥාතියෙකු වන සහෝදරයෙකුගේ නිවසේ පදිංචි සිටින නිසා අනාගතයේදී මට ස්වාමි පුරුෂයාල දරුවන්ල දෙමව්පියන්ල සහෝදර සහෝදරියන් කියා කිසිවෙකු නැති නිසා සමාජයේ හුදකලාවූ පුද්ගලයෙකු ලෙස සමාජයේ ජීවත් වෙනවාග
මෙසේ මගේ ජීවිතය බොහෝ විට දුකින් තමයි ගත වෙන්නෙග එම නිසා මෙවැනි තත්ත්වයකින් සිටින මාහට ජීවත් වීමට ස්ථිර වශයෙන් යම් ආධාරයක් හෝ මට සලකන මගේ සහෝදරයාටත් ප්රයෝජනවත් වන පරිදි ඔබගේ ව්යාපෘතියෙන් උපකාරයක් කරන්නට පුලූවන් නම්ල එම උපකාරය ලබා දීමට කාරුණීක වන ලෙස බැගෑපත්ව ඉල්ලා සිටිමින් මගේ ජීවිත කථාව අවසන් කරමිග
ස්තුතියි
මෙයටල
අත්සන ථ- පීගසහායමේරිග
CMP/MN/MW/ARI/07
எனது பெயர்: பி சகாயமேரி குரூஸ்
பி. ஆண்டு: 1958.06.21
வயது:58
முகவரி: அரிப்பு, சிலாவத்துறை
தொ.இல: 0770571446
மேற்படி விடயங்களை கொண்ட நான் திருமணமாகாதவர். நான் சிறு வயதிலிருந்தே அம்மா,அப்பா,அண்ணா, ஆகியோருடன் வசித்து வந்தேன். பின் எனது அண்ணா திருமணமாகி எங்களை விட்டு சென்றார். பின் எனது அப்பாவின் சிறு உழைப்பால் எங்கள் குடும்பம் வாழ்ந்து வந்தது. காலப்போக்கில் எனது அம்மா, அப்பா இருவரும் வயது முதிர்ந்த நிலையிலும், நோயிலும் இருந்தார்கள். அந்த சமயத்தில் நானே சிறு சிறு கூலி வேலைகளைச் செய்து அவர்களை பராமரித்து வந்தேன். திருமணத்தில் இருந்து எனது அண்ணா எங்களை கவனித்ததே இல்லை. இந்த நேரத்தில் எனக்கும் உடல்நிலை சரியான நிலையில் இல்லை. அடிக்கடி நோயுற்றேன். பின் நாங்கள் வசித்த வீட்டை விற்று அந்த பணத்தை வைத்து எங்கள் குடும்பத்தை ஒரு கொட்டில் போட்டு நடத்தி வந்தோம்.
இவ்வாறு இருந்த போது 2005ம் ஆண்டு எனது அப்பா கடும் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அந்த நிலையில் நானும் எனது அம்மாவும் அனாதையாக்கப்பட்டு நிலையில்தான் வாழ்ந்தோம். இவ்வாறு இருந்த போது 2007ம் ஆண்டு நாங்கள் இடப்பெயர்வை சந்தித்தோம்.
அவ் இடப்பெயர்வின் போது நாங்கள் யாருடன் எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்த வேளையில் எனது தூரத்து உறவினரான சகோதரத்துடன் சில வருடங்களாக வாழ்ந்து வந்த வேளையில் மீண்டும் மீள்குடியமர்த்தப்பட்ட போது அவர்களுடன் அவர்களின் வீட்டிலேயே வசித்து வந்தே வேளை 2013ம் ஆண்டு எனது அம்மாவும் இறந்துவிட்டார்.
அதன் பின் நான் இப்போது அவர்களுடனயே வசித்து வருகின்றேன். அவர்களும் பெரியளவில் வசதி படைத்தவர்கள் இல்லை. வறுமைப்பட்ட நிலையிலும் என்னையும் கவனித்து வருகுிறார்கள். தற்போது நானும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு மாதாந்தம் வைத்தியசாலை கிளினிக் செல்ல வேண்டிய நிலைக்குஆளாகியுள்ளேன். இந்நிலைமையால் எனக்கு அரச உதவித்திட்டமான சர்த்தி திட்ட பயனாளியாக இருந்து அதனால் எனதுமுக்கியமான செலவுகளை நிவர்த்தி செய்து வருகின்றேன்.
தற்போது நான் எனது தூரத்து உறவினரான எனது சகோதரனின் வீட்டில் வசித்துவருவதனால் எதிர்காலத்தில் எனக்கு கணவன் என்றோ பிள்ளைகள் என்றோ தாய் தந்தை சகோதரன் என்றோ இல்லாமல் தனிப்பட்ட நபராக சமூகத்தில் ஒருவராக இருந்து வருகின்றேன்.
இவ்வாறுஎனது வாழ்க்கை தொடர்ந்தும் துன்பமாகவே பல வேளைகளில் அமைந்து வருகின்றது. எனவே இந்நிலையில் இருக்கும் எனக்கு எனது வாழ்க்கைக் காலத்தை கொண்டு நடத்த நிரந்தமான, ஒருஉதவியையோ அல்லது எதுவாக இருந்தாலும் என்னை கவனித்துக் கொள்ளும் என்னுடைய சகோதரனும்க்கும் பயன்படும் வகையிலும் அமையக் கூடிய வகையில் தங்களின் திட்டத்திலிருந்து உதவிபுரிய முடியுமானால் அதை செய்து உதவுமாறும் மிகவும் தாழ்மையுடன் தங்களை கேட்டு எனதுவாழ்க்கை சரித்திரத்தை நிறைவு செய்கின்றேன்.
நன்றி