We had no choice, but to flee to India

The story of the family who displaced to India as refugees due to war.


අපි මිනිසුන් සමඟ ඉන්දියාවට ගියා

යුද්ධය නිසා සරණාගතයින් ලෙස නැවත ඉන්දියාවට පැමිණි කථාව.


மக்களுடன் மக்களாக இந்தியாவிற்கு சென்றுவிட்டோம்

யுத்தம் காரணமாக அகதிகளாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து நாடு திரும்பிய குடும்பத்தின் கதை.



CMP/MN/MW/PUK/01

My name is Joseph Ramayi. I am living in a village called Puliyankulamin in the Adamban region in Mathottam district of Mannar. I was born in Mattala. My father’s name was Velu and my mother’s name was Nagamma. I had ten brothers. I was living happily with my family. The war started in 1987 and during the war my entire family was shattered. Only my father, mother and one brother stayed back in Sri Lanka and the rest of my relatives including myself and my other brothers went to India as refugees along with other people.

Years went by and we all reached our marriageable age. I met a boy called Joseph and got married to him. We married with the blessings of elders. The married life went well and I was very happy when I gave birth to my first baby. Now I have 4 kids-3 daughters and a son. After a few years, I went abroad to work. I spent 1 year and during that time my husband had taken my 4 kids to Sri Lanka. I also returned from abroad to Sri Lanka and settled down in my husband’s village Puliyankulam in Mannar. My kids joined Mannar/Adamban Madya maha Vidyalayam and studied well. When the war erupted in 2008 between Sri Lankan forces and LTTE we all were displaced to many places and suffered a lot. My kids did not understand the difficulties and thought we were on a tour. Later only they realized the terror of the shelling. We moved to many places and finally settled in Valaignar Madam with our relatives. Suddenly my husband took my family to a different place and within hours of our departure that place was shelled and all our relatives got killed. Though it was a sad incident we felt relieved that we survived somehow. It was a tough life there. We could not even find a single meal. Then we moved to a military controlled area. They took us to social welfare center called Arunachalam. After spending 2 years in the camp we came back to our own village. We started paddy farming and improved our economic status. I do not know what evil eye fell upon us. My family started going through a bad time. My husband went to Malaysia for a job to improve our financial status. He was happily working there and sending us money regularly. He used to speak to us over the phone and was on constant touch. But for the past one year there is no news from him. We do not know what has happened. He does not send any money. All 4 kids are schooling. I find it difficult to spend on my kids’ education. Sometimes I do daily wage jobs to satisfy our day to day needs. I hope my husband would come back to Sri Lanka and solve our problems. I expect my kids to study well and become good citizens for the country. I pray that no problem should come in the present government.

Puliyankulam.


මන්නාරම දිස්ත්‍රික්කයේ මාතොට නගරයේ අඩම්පන් ප‍්‍රදේශයේ පූලියම්කුලම් ගමේ මම ජීවත් වෙමි. මගේ නම ජෝශප් රාමායි වේ. මගේ උපන් ස්ථානය මාතලේ වේ. පියාගේ නම වේලූ. මවගේ නම නාගම්මා. මට සහෝදරුවරු 10දෙනෙක් සිටිති. මම මගේ පවුල සමඟ සතුටින් ජීවත වුණා. 1987 කාල වකවානුවේ යුද්ධය ආරම්භ වුණා. යුද්ධය හේතුවෙන් අපේ පවුලේ සාමාජිකයන් සියලුදෙනාම වෙන්වී එක් එක් ස්ථානවලට ගොස් මගේ මව, පියා හා වැඩිමහල් සහෝදරයා පමණක් ශ‍්‍රී ලංකාවේ සිටියා. මම අනෙකුත් සහෝදරයන් සමඟ සරණාගතයන් වශයෙන් ඉන්දියාවට ගියා.

මෙසේ වසර ගණනාවක් දුකින් හා වේදනාවෙන් අපි කාලය ගත කළා. අපි සියලුදෙනාම වැඩිවියට පත්වී විවාහ වයසට එළැඹුණා. එහි ජෝශප් නැමැති පුද්ගලයා මට හමුවී ඔහු සමඟ පේ‍්‍රම සම්බන්ධයක් ගොඩ නඟා ගත්තා. වැඩිහිටියන්ගේ ආශිර්වාදය සහිතව අපි විවාහ වුණා. ඉන්පසු අපේ ජීවිතය සතුටින් ගෙවී ගියා. දැනට මට දරුවන් 4දෙනෙක් සිටිනවා. ගැහැණු දරුවන් 3දෙනෙක් හා පිරිමි දරුවෙක්. මා මගේ සැමියා හා දරුවන් සමඟ සතුටින් ජීවත් වුණා. වසර කීපයකට පසු මම විදේශ ගත වුණා. ළමුන්ගෙන් වෙන්වී යෑමට සිදුවීම ඉතාම කනගාටුදායක අවස්ථාවක් වුණා. එසේ වසරක් ගත වුණා. මගේ සැමියා දරුවන් 4දෙනා සමඟ ශ‍්‍රී ලංකාවට පැමිණියා. මමත් විදේශ ගතවී සිට වසර 2004 දී ශ‍්‍රී ලංකාවට පැමිණ දරුවන් හා සැමියා මුණ ගැසුණා.

ඉන්පසු අපි සියලුදෙනාම මගේ සැමියාගේ ගම වන මන්නාරම දිස්ත්‍රික්කයේ අඩම්පන් ප‍්‍රදේශයේ ඇති පූලියම්කුලම් ගම්මානයට පැමිණ පදිංචි වුණා. ළමයින් මන්/අඩම්පන් මධ්‍ය මහා විද්‍යාලයේ අධ්‍යාපනය ලැබුවා. මගේ දරුවන් හොදින් තමන්ගේ අධ්‍යාපන කටයුතු කරගෙන ගියා. 2008 කාල වකවානුවේ විමුක්ති කොටි සංවිධානය හා ආරක්ෂක හමුදාවන් අතර යුද්ධයක් ආරම්භ වුණා. එමනිසා අප සියලුදෙනාම අවතැන් වුණා. විවිධ ස්ථානවලට ගොස් දුක් වින්දා. ළමයින්ට එම දුක් කරදර එතරම් දුරට තේරුණේ නැහැ. අපි විනෝද ගමනක යෙදී සිටින ආකාරයක් තමයි ඔවුන්ට එය දැනුණේ. එලෙස අපි දිගටම අවතැන්වී ජීවත් වුණා. අවසානයේ වලෙයිඥර්මඩම් යන ස්ථානයට ගියා. එහි අපගේ නෑදෑ හිතවතුන් සමඟ එකට ජීවත් වුණා. එහි සිටින විට මගේ සැමියා අපව වෙනත් ස්ථානයකට රැගෙන ගියා. අපි ගොස් පැය කීපයකින් පසු එම ස්ථානය කරා ෂෙල් ප‍්‍රහාර එල්ල වුණා. එහි සිටි අපගේ නෑදෑයින් එම ප‍්‍රහාරයෙන් ජීවිතක්ෂයට පත්වුණා. මෙම සිදුවීම නිසා අපි බොහෝ දුරට කම්පා වුණා. මගේ සැමියා හා දරුවන් තමන්ගේ ජීවිත බේරා ගැනම ගැන සිතට යම් සැනසමුක් දැනුණා. එහි එක් වේලක කෑමක් වුණත් අපිට ලබා ගැනීමට හැකියාවක් තිබුණේ නැහැ. මේ සියලුම දේවල් බලන විට හිතට දැඩි වේදනාවක් දැනුණා. මේවා ඉවසීමට නොහැකි තත්ත්වයක තමයි අපි නැවතත් එම ස්ථානයෙන් පිටත් වී හමුදා පාලන ප‍්‍රදේශයට පැමිණියේ.

ඔවුන්ව අපිව සුබසාධන මධ්‍යස්ථානවලට රැගෙන ගොස් පදිංචි කෙරෙව්වා. අප සිටි කඳවුරේ නම අරුනාචලම් කඳවුර. අප එහි වසර 2ක් ජීවිතය ගත කළා. අපිව නැවත පදිංචි කළා. අපගේ ගමට නැවත පැමිණියා කියන සතුට පමණයි අප සතුව තිබුණේ. ඉන්පසු කාලයාගේ ඇවෑමෙන් ගොවිතැන් කටයුතුවල යෙදීමෙන් ටිකින් ටික ආර්ථික තත්ත්වය දියුණු කර ගත්තා. ඉන්පසු ඇස්වහක් මෙන් අපට යම් සිදුවීමක් සිදු වුණා. කාලයක් සිටි අපගේ පවුල තුළ ප‍්‍රශ්න හා දුක් කරදර ඇතිවීමට පටන් ගත්තා. මෙම දුක් කරදරවලින් මිදීම සඳහා මගේ සැමියා විදේශ ගත වුණා. ඔහු ගියේ මැලේසියාවට. ඔහු සතුටින් එහි වැඩ කරමින් අපටත් මුදල් එව්වා. ළමයින් සමඟ දුරකථනයෙන් සතුටින් කතා කළා. පසවු කුමක් සිදු වුණා දැයි අපි නොදනිමු. දැනට වසරක් පමණ කාලයක් ඔහු අප සමඟ සම්බන්ධ වුණේ නැහැ. මුදල් එවන්නේත් නැත. ඔහුට සිදුවුණේ කුමක් දැයි අප නොදනිමු. මගේ දරුවන් 4දෙනාම දැනට අධ්‍යාපනය ලබනවා. ඔවුන්ගේ අධ්‍යාපන වියදම් පවා පිරිමහා ගැනීමට මට අමාරුයි. සමහර අවස්ථාවල කුලී වැඩවලට යනවා. ඒකෙන් යම් ආදායමක් ලබා ගන්නවා. කෙසේවෙතත්, මගේ සැමියා නැවත ශ්‍රී ලංකාවට පැමිණිය යුතුයි. අපගේ මේ ප‍්‍රශ්නවලට විසඳුමක් ලැබිය යුතුයි. මගේ දරුවන් හොඳ අධ්‍යාපනයක් ලබා, හොඳ පුරවැසියන් ලෙස ජීවත් විය යුතුයි. එපමණක් නෙවෙයි, දැනට මේ රටේ පවතින පාලනයේ කිසිම ප‍්‍රශ්නයක්, කලබලයක් ඇති නොවී අප සියලුදෙනාම සතුටින් ජීවත් විය යුතුයි.


CMP/MN/MW/PUK/01

மன்னார் மாவட்டத்தின் மாதோட்ட நன்நகரில் உள்ள அடம்பன் பிரதேசத்தில் புளியங்குளம் எனும் கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனது பெயர் ஜோசப் ராமாயி. எனது பிறந்த இடம் மாத்தளை ஆகும். எனது தந்தையின் பெயர் வேலு. தாயின் பெயர் நாகம்மா. எனக்கு 10 சகோதரர்கள் உள்ளனர். நான் எனது குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தோம். 1987 காலப் பகுதிகளில் யுத்தம் ஆரம்பமானது. இந்த யுத்தத்தின் எங்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருமே பிரிந்து ஆங்காங்கே சென்று அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தோம். எனது அம்மாவும் அப்பாவும் ஒரு அண்ணாவும் தான் இலங்கையில் இருந்து விட்டார்கள். நானும் ஏனைய சகோதரர்களும் அகதிகளாக மக்களுடன் மக்களாக இந்தியாவிற்கு சென்றுவிட்டோம்.

இவ்வாறாக பல வருட காலங்கள் கவலையுடனும், துன்பங்களுடனும் கழிந்து சென்று விட்டன. நாங்கள் அனைவரும் வளர்ந்து திருமண பருவ வயதை அடைந்தோம். அங்குதான் நான் ஜோசப் என்பவரை சந்தித்து காதலித்தோம். பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். அதன் பின்னர் எங்களது வாழ்க்கையிலும் சந்தோசமாக கழிந்து சென்றது. அதனாலும் அதிகமான சந்தோசம் கிடைத்தது. எனக்கு குழந்தை பிறந்தது. தற்போது எனக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். 3 பெண் பிள்ளைகளும் 1 ஆண் பையனும் உள்ளனர். நான் எனது கணவருடன் பிள்ளைகளுடன் சந்தோசமாக காலத்தை கழித்தேன். சில வருட காலங்களில் நான் வௌிநாட்டிற்கு சென்றேன். பிள்ளைகளை பிரிந்து சென்றது கவலையாக தான் இருந்தது. இவ்வாறே 1 வருடம் கழித்து சென்றது. எனது கணவர் 4 பிள்ளைகளையும் அழைத்து இலங்கை வந்தார். அவ்வாறே நானும் வௌிநாட்டில் இருந்து 2007ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்து பிள்ளைகள் கணவருடன் வந்து சேர்ந்தேன்.

பின்னர் நாங்கள் அனைவரும் எனது கணவரின் சொந்த இடமான மன்னார் மாவட்டத்தில் உள்ள அடம்பன் பிரதேசத்தில் புளியங்குளம் எனும் கிராமத்திற்கு வந்து குடியேறினோம். பிள்ளைகளை மன்-அடம்பன் ம.ம.வி. பாடசாலையில் கல்வி கற்பதற்காக சேர்த்தேன். எனது பிள்ளைகளும் நன்றாக படித்து வளர்ந்தார்கள். 2008 காலப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவப் படைக்கும் யுத்தம் ஆரம்பம் ஆனது. இதனால் எல்லாரும் இடம்பெயர்ந்து சென்றோம். இவ்வாறான பல இடங்களுக்குச் சென்று அவஸ்தைப் பட்டோம். பிள்ளைகளுக்கு கஸ்டம் ஒன்றும் புரியவில்லை. அவர்களுக்கு ஏதோ நாங்கள் சுற்றுலா செல்கின்ற மாதிரிதான் உணர்கின்றார்கள். பின்பு போக போகத்தான் தெரிந்தது. எறிகணை தாக்குதலின் அனுபவங்கள். இவ்வாறே நாங்கள் இடம்பெயர்ந்து கொண்டே சென்றோம். இறுதியாக வலைஞர் மடம் என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கு சொந்த பந்தங்களுடன் ஒன்றாக இருந்தோம். அப்போது திடீரென்று எனது கணவர் எங்களை வேறு இடத்திற்கு அழைத்து சென்றுவிட்டார். நாங்கள் சென்று சில மணி நேரங்களிலே அந்த இடத்தை நோக்கியே எறிகணை வீச்சு இடம்பெற்றுள்ளது. அங்குள்ள எங்கள் உறவினர்கள் இறந்து விட்டார்கள். இந்த சம்பவம் எங்களை கவலையில் ஆழ்த்தினாலும் எனது கணவர் பிள்ளைகளுக்கும் உயிர் பிழைத்ததை நினைத்துப் பார்க்கும் போது மனதிற்கு ஆறுதலைக் கொடுத்தது. அங்கு ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட கஸ்டமாக காணப்பட்டது. இந்த கொடுமை எல்லாம் பார்க்க வேதனையாக இருந்தது. இதனை பார்க்க முடியாமல்தான் அந்த இடத்தைவிட்டு வௌியேறி இராணுவத்துடன் வந்து இணைந்தோம்.

அப்போது அவர்கள் நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துச் சென்று குடியமர்த்தினார்கள். நாங்கள் குடியேறிய முகாமின் பெயர் அருணாச்சலம். அங்கு 2 வருட காலமாக எங்களது வாழ்க்கையை கழித்தோம். அதன் பின் எங்களை மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. எங்களது சொந்த இடத்திற்குவந்து விட்டோம் என்ற மகிழ்ச்சி மட்டும்தான் எங்களிடம் காணப்பட்டது. பின்புகாலம் செல்ல செல்ல பின்பு விவசாயம் செய்து படிப்படியாக பொருளாதாரத்தில் உயர்ச்சி அடைந்தோம். பின்பு யாரின் கண்பட்டதோ தெரியவில்லை. ஏனென்றால் ஒரு சிறிது காலமாக எங்களது குடும்பத்தில் ஒரே பிரச்சினையும் குடும்ப கஸ்டமாகவும் காணப்பட்டது. இந்த கஸ்ட நிலையை நிவர்த்தி செய்வதற்காக எனது கணவர் வௌிநாட்டிற்கு சென்று சந்தோசமாக வேலை செய்து பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். பிள்ளைகளுடனும் நன்றாக தொலைபேசியில் பேசிக் கொண்டு வந்தார். என்ன நடந்தது என்று தெரியவில்லை. தற்போது ஒரு வருட காலமாக ஒருதொடர்பும் இல்லை. பணமும் அனுப்புவதில்லை. அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எனது 4 பிள்ளைகளும் கல்வி கற்கின்றார்கள். இவர்களின் படிப்பு செலவிற்கு கூட கஸ்டமாக உள்ளது. சில வேளைகளில் நான் ஆங்காங்கே கூலி வேலைக்குச் சென்றுதான் எனது குடும்ப கஸ்ட நிலைய ஓரளவு நிவர்த்தி செய்து வருகின்றேன். எப்படியாவது எனது கணவர் நம் நாட்டிற்கு வர வேண்டும். எங்களது இந்த நிலை நீங்க வேண்டும். எனது பிள்ளைகள் எல்லோரும் நன்றாக படித்து நற்பிரஜையாக திகழ வேண்டும். அது மட்டுமல்லாது இந்த நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியில் ஒரு பிரச்சினையும், குழப்பமும் வராமல் எல்லோரும் சந்தோசமாக வாழ வேண்டும்.







A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License