We built bunkers to protect our lives

A father shares the hardships caused by the brutal war.


අපේ ජීවිත ආරක්ෂා කර ගැනීමට අපි බංකර් සකස් කර තිබෙනවා

ම්ලේච්ඡ යුද්ධය නිසා ඇතිවූ දුෂ්කරතා පියාට බෙදා දෙයි.


எமது உயிரைப் பாதுகாக்க பங்கர்களை அமைத்து இருந்தோம்

கொடூர யுத்தத்தினால் ஏற்பட்ட கஷ்டங்களை தந்தையொருவர் பகிர்கிறார்.



CMP-MN-MW-PUK-02

I live in Puliyamkulam. I am 64 years old. I married and had two daughters. I work whenever I can, since I am old and I cannot work hard. One daughter has studied up to her Advance level and is looking for employment and the other daughter has studied up to O/L and staying at home. Both of them are unmarried. My life is filled with sorrow.
My wife died after 9 years of marriage, my mother brought up kids after my wife’s death, later she too died. My eldest daughter is in charge of the house now.

We were displaced to ‘Paaliyaru’, we stayed there for about a year. Due to heavy shelling we were moving from ‘Kalmadu’ to ‘Vanneri’ and then to ‘Mulangkavil’. Initially we used to take all the household goods in a vehicle. We built a hut and lived in it. We had lack of water and food. Due to the continuous shelling we built bunkers, we were unable to cook and eat due to fear. We face many such difficulties. When people got killed in shelling, we moved to ‘Vanneri’ and stayed for 2 days since the shelling continued we moved to ‘Kalmadu’ and lived there for 10 months. We were unable to sleep and cook and eat food properly due to this heavy shelling, this way we arrived at ‘Suthanthirapuram’ we lived in all the above places for short periods due to heavy shelling.

We were once again displaced from ‘Suthanthirapuram’ to ‘Mattalan’ since there weren’t any vehicle we walked pushing the bicycle with the children clinging on to it. We left in the morning and reached ‘Matalan’ in the evening. We couldn’t make a bunker, so we put up a hut protected by sandbags. Shell fell into the neighboring hut and killed the entire family. By god’s grace nothing happened to our family. When shelling increased people ran to the army controlled area. We too attempted twice and succeeded only on the third attempt. One person who travelled with us lost his leg when he stepped on a landmine.
When we reached the army control area, they gave us food and transferred us to the Arunachalam refugee camp. We stayed there for one year, after which we returned to our village. We were glad that we were not affected badly. Now I am not in a physical state to work. Due to the displacement the education of the kids has been disturbed. The future generation’s education standards should improve, the society should have good habits. My only wish is that my daughters should lead a happy life and should be economically sound.




මම පූලියම්කුලම් ග‍්‍රාමයේ ජීවත් වෙනවා. මගේ වයස අවුරුදු 64 යි. මා විවාහකයි. දරුවන් දෙදෙනෙක් ඉන්නවා. දෙදෙනාම ගැහැණු දරුවන්. හැකි අවස්ථාවල මම වැඩට යනවා. වයෝවෘද්ධ වීම හේතුවෙන් මට බර වැඩවල යෙදීමේ හැකියාවක් නැහැ. මම හැකි ආකාරයට එක දරුවෙක් අ.පො.ස.(උසස් පෙළ) දක්වා ඉගැන්නුවා. ඔහු දැන් රැකියාවක් සොයමින් සිටිනවා.

දෙවෙනි දුව අ.පො.ස.(සාමාන්‍ය පෙළ) දක්වා ඉගෙන ගෙන නිවසේ සිටිනවා. දෙදෙනාම අවිවාහකයි. මගේ ජීවිතය ගැන සඳහක් කරනවා නම් එය ඉතාම ශෝචනීයයි. විවාහ වී වසර 9කින් පසු මගේ බිරිඳ නැති වුණා. බිරිඳගේ අභාවයෙන් පසු මගේ මව තමයි මගේ දරුවන් රැක බලා ගත්තේ. මවත් පසුව නැති වුණා. දැන් මගේ දියණිය තමයි නිවසේ සියලු වගකීම් භාරගෙන කටයුතු කරන්නේ. පසුව අපි අපේ ගමෙන් අවතැන්වී පාලියාරු කියන ස්ථානයේ වසරක් පමණ කාලයක් ජීවත් වුණා. දිගටම සිදුවූ ෂෙල් ප‍්‍රහාර හේතුවෙන් ඉන්පසු ගල්මඩු, වන්නේරි, මුලන්කාවිල් යන ප‍්‍රදේශවලට ගියා. මුලදී අපි අපගේ ගෙදර බඩු බාහිර වාහනවල පටවා ගෙන මෙසේ අවතැන් වුණා. පොඩි පැල්පතක් අටවා ගෙන එම පැල්පතේ අපි ජීවත් වුණා. ජල ප‍්‍රශ්නය, ආහාර ප‍්‍රශ්නය වැනි විවිධ ප‍්‍රශ්නවලටත්, දුක් කරදරවලටත් අපට මුහුණදීමට සිදුවුණා. අඛණ්ඩව ෂෙල් ප‍්‍රහාර සිදුවන විට අපගේ ජීවිත ආරක්ෂා කර ගැනීම සඳහාත් බංකර් තනා ගත්තා. කෑම පිසීමට පහසුකම් තිබුණේ නැහැ. බයෙන් තමයි ජීවත් වුණේ. මෙසේ විවිධ දුෂ්කරතාවන්ට මුහුණදීමට අපට සිදුවුණා. එසේ සිටින විට නැවතත් පාලීයාරු ප‍්‍රදේශයේ සිට මුලන්ගාවිල් ප‍්‍රදේශයට අවතැන්වී පැමිණියා. පැල්පතක් අටවා ගෙන සතියක් පමණ එහි සිටියා. එම ප‍්‍රදේශයේත් ෂෙල් ප‍්‍රහාර එල්ල වුණා. බොහෝ අය ජීවිතක්ෂයට පත්වුණා. බොහෝ අය තුවාල වුණා. එතනින් බේරී නැවත වන්නේරි ප‍්‍රදේශයට ගොස් දින 2ක් එහි සිටියා. තෙවෙනි දිනයේදී ෂෙල් ප‍්‍රහාර එල්ල වීම නිසා ගල්මඩු ප‍්‍රදේශයට ගියා. ඉටි රෙදිවලින් පැල්පතක් තනා ගෙන එම ප‍්‍රදේශයේ මාසයක් පමණ ජීවත් වුණා. නැවතත් ෂෙල් ප‍්‍රහාර එල්ල වුණා. අපට සැනසිල්ලේ නිදා ගැනීමට හෝ කෑම පිසීමට හෝ කෑම අනුභව කිරීමට අවස්ථාවක් ලැබුණේ නෑ. සැමවිටම ෂෙල් ප‍්‍රහාර පිළිබඳ බියෙන් තමයි අප ජීවත් වුණේ.

එක් එක් ස්ථානවල අපි සතියයි, මාසයයි, වසරක් වගේ ජීවත් වුණා. නමුත් ක්‍රම ක්‍රමයෙන් අවතැන්වීමත්, ෂෙල් ප්‍රහාරත් දරුණු වුණා. එමනිසා සුදන්දර පුරම් ප‍්‍රදේශයේ ඉටි රෙදිවලින් පැල්පතක් අටවා ගෙන ජීවත් වුණා. ඊළඟ දවසේ බංකර් එකක් තනා ගත්තා. ෂෙල් ප‍්‍රහාර උග්‍රවන විට නැවතත් අවතැන් වුණා. වාහනවල බඩු පටවා ගෙන අපි ගියා. ඉන්පසු බඩු පැටවීමට එසේ වාහන ලැබුණේ නැහැ. ජීවිතයට කිසිම ආරක්ෂාවක් තිබුණේ නැහැ. ඕනෑම මොහොතක ඕනෑම දෙයක් සිදුවීමට හැකියාවක් තිබුණා. ඒ වාගේ ෂෙල් ප‍්‍රහාර, හමුදා වැටලම් වාගේ දේවල් දරුණු ලෙස සිදුවුණා. මා හා මාගේ දරුවන් පාපැදියෙන් හා පයින් බඩු බාහිර රැගෙන ගියා. මාතලන් ප‍්‍රදේශයට ගියා. රාත්‍රී කාලයේ කෝවිලක නවාතැන් ගෙන ඊළඟ දිනයේ සවස් වරුවේ මාතලන් ප‍්‍රදේශයට ගියා. එහි බංකර් තැනීමට හැකියාවක් තිබුණේ නෑ. පැල්පත් වටා පස් පිරවූ ගෝනි තබා ගෙන සිටියා.

එසේ ජීවත්වන විට ළඟ පැල්පතට ෂෙල් ප‍්‍රහාරයක් එල්ලවී එම පවුලේ අය ජීවිතක්ෂයට පත්වුණා. ඊට අමතරව පුද්ගලයන් කිහිප දෙනෙකුට අත් පා අහිමි වුණා. ආබාධිත තත්ත්වයට පත්වුණා. දෙවියන්ගේ කරුණාවෙන් අපට කිසිම හානියක් සිදු වුණේ නැහැ. ෂෙල් ප‍්‍රහාර දරුණු වන විට සියලුදෙනාම හමුදාව වෙත ගොස් භාර වුණා. එසේ යන විට එක දරුවෙකුට බෝම්බයක් පෑගීම නිසා පය අහිමි වුණා. අපි නිරාහාරව එම ස්ථානයට පැමිණි විට හමුදාව අපට ආහාර ලබාදී, අරුනාචලම් කඳවුරට රැගෙන ගියා. එම කඳවුරේ වසරක් පමණ අපි සිටියා. නැවත 2010 වසරේ අපේ ගමට පැමිණියා. අපි ඒ අවස්ථාවේ බොහෝ සතුටු වුණා. අපිට කිසිම හානියක් සිදුවුණේ නැහැ.

දැනට මගේ රැකියාව කර ගැනීමට හැකියාවක් නැහැ. ශරීර ශක්තිය හීනවෙලා තියෙන්නේ. අවතැන්වීම හේතුවෙන් අපේ දරුවන්ගේ අධ්‍යාපනයට බාධාවක් එල්ල වුණා. අනාගත දරුවන්ගේ අධ්‍යාපනය දියුණු විය යුතුයි. හොඳ ගති-ගුණවලින් පිරි සමාජයක් බිහිවිය යුතුයි. මගේ භාර්යාව අහිමි වුණත් මගේ ගැහැණු දරුවන් දෙදෙනා දැනට සතුටින් ජීවිතයක් ගත කරනවා. දිළිඳුකමින් මිදී ආර්ථික සංවර්ධනයක් ළඟා කරගත යුතුයි යන්න අපගේ බලාපොරොත්තුවයි.


CMP/MN/MW/PUK/02

நான் புளியங்குள கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனது வயது 64. நான் திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள். இரண்டும் பெண் பிள்ளைகள். நான் இயலுகின்ற வேலைகளில் வேலைக்குச் செல்வேன். எனக்குவயதும் சென்று விட்டதால் கடுமையாக தொழில் செய்ய முடியாது. என்னால் இயன்ற வரையில் ஒரு பிள்ளை உயர்தரம் படித்துவிட்டு வேலைவாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். இரண்டாவது மகன் க.பொ.த சாதாரண தரம் படித்து விட்டு இருக்கிறார். இரண்டு பேருக்கும் திருமணம் ஆகவில்லை.
எனது வாழ்க்கையைப் பற்றிக் கூறப்போனால் மிகவும் சோகமானது. எனதுமனைவி நான் திருமணம் முடித்து 9 வருடங்களில் இறந்து விட்டார். எனது மனைவி இறந்த பின் எனது தாயரே எனது பிள்ளைகளை வளர்த்து வந்தார். அவரும் இறந்து விட்டார். இப்போது எனது மகளே வீட்டுக்குப் பொறுப்பாக இருந்து வருகின்றார். தொடர்ந்து எமக்கு சொந்த ஊரை விட்டு இடம்பெயர்ந்து பாலியாற்றில் இருந்தோம். 1 வருடமாக அங்குதங்கி இருந்தோம். தொடர்ந்து செல் வீச்சு காரணமாக கல்மடு தொடர்ந்து வன்னேரி தொடர்ந்து முழங்காவில் வென்றோம். இப்படி தொடர்ந்து செல் வீச்சுகாரணமாக ஆரம்பத்தில் வாகனங்களிலே எமதுவீட்டுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வோம். ஒரு சிறிய தரப்பால் கொட்டகை அமைத்து அதில் வசித்து வந்தோம். நீர் பிரச்சினை சாப்பாட்டுக்கு பிரச்சினை. இப்படியாக பல இன்னல்களை எதிர்நோக்கி இருந்தோம். தொடர்ந்து செல் வீச்சு எமது உயிரைப் பாதுகாக்க பங்கர்களை அமைத்து இருந்தோம். சமைத்து சாப்பிட முடியாது பயம். இப்படியாக இன்னல்களை அனுபவித்தோம். அவ்வாறு அவ்வாறுதரப்பால் போட்டு இருந்த பின் மீண்டும் இடப்பெயர்வு பாலியாற்றிலிருந்து முழுங்காவில் அங்கு சென்று தரப்பால் கொட்டகை போட்டு 1 கிழமை இருக்கும். மீண்டும் செல் வீச்சு உயிர் பழிகள் காயப்பட்டவர்களும் அதிகம் அதிலிருந்து தப்பி மீண்டும் வன்னேரி சென்று 2 நாள்தான் இருந்ததும் 3ஆம் நாள் செல் வீச்சுதொடர்ந்து கல்மடு சென்றோம். 1 மாதங்கள் வரை தரப்பால் கொட்டகை வாகனங்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து இருந்தோம். மீண்டும் செல் வீச்சு நாங்கள் நிம்மதியாக உறங்கவோ உணவை சமைத்து உண்ணவோ முடியாது. எப்போது இடப்பெயர்வோ செல்வீச்சு தொடர்ந்து வருமே பயத்திலே இருப்போம். இப்படியாக சுதந்திரபுரம் வந்தோம். நாங்கள் ஒவ்வொரு இடங்களிலும் 1 கிழமை, 1 மாதம்,1 வருடம் என இருந்தும் ஆனால் மிக இடப்பெயர்வு அதிகரிக்க செல் வீச்சின் அகோரமும் அதிகரித்தது. ஆனால் சுதந்திர புரத்தில் தரப்பால் கொட்டகை போட்டு அடுத்த நாளே பங்கர் வெட்டி ரவுன்ஸ் செல் தாக்குதல் அதிகரிக்க மீண்டும் இடப்பெயர்வு ஆரம்பத்தில் வாகனங்களிலே பொருட்களை ஏற்றிச் சென்றோம். பின்பு பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு வாகனங்கள் கிடைக்கவில்லை. உயிருக்கு எவ்விதமான பாதுகாப்பும் இல்லை. எந்த நேரமும் என்னவும் நடக்கலாம். அவ்வாறு செல் வீச்சு ரவுன்ஸ் அகோரம் நடந்து கொண்டிருக்கவே நானும் எனது பிள்ளைகளும் சைக்கிளிலே நடையிலே பொருட்களை கட்டிக் கொண்டுமாத்தளன் நோக்கி காலை சென்ற நாங்கள் இரவு கோயிலிலே தங்கி அடுத்த நாள் பின்னேரம் மாத்தளன் சென்றடைந்ததும் அங்குபங்கர் வெட்ட முடியாது தரப்பால் கொட்டகையை சுற்றி மண் மூடைகளை சுற்றி வைத்துக் கொண்டு இருந்தோம். அப்படியாக இருக்கும் வேளையில் பக்கத்தில் தரப்பால் கொட்டகையில் மேலே செல் விழுந்து குடும்பத்தோடு இறந்துவிட்டார்கள். அது மட்டுமல்லாமல் கால் அற்றவர்கள், அங்கவீனம் ஆனவர்களும் அதிகம் ஏதோ எங்களுக்குஇறைவன் செய்த செயல் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. செல் வீச்சு அதிகரிக்கவே எல்லோரும் இராணுவத்தினரிடம் ஓடி வந்தார்கள். நாங்களும் செல்வதற்கு இரண்டு மூன்று தடவை முயுற்சித்து மூன்றாவது தடவை நானும் எனது பிள்ளைகளும் வந்து சேர்ந்தோம். எங்களோடு வந்த ஒருவருக்கு மைன்சில் மிதித்தால் கால் இல்லாமல் போய்விட்டது. நாங்கள் சாப்பாடும் இல்லாமல் வந்தவுடன் இராணுவத்தினர் உணவு தந்து எம்மை அருணாச்சல முகாமில் தங்க வைத்தார்கள். முகாமில் ஒரு வருடமாக முகாமில் இருந்து 2010ஆம் ஆண்டு எமது சொந்த ஓருக்குவந்துவிட்டோம். மிகவும் சந்தோசம் இருந்தாலும் எங்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை. இப்போது என்னால் தொழிலை செய்ய முடியாது. உடல் வலுவற்ற நிலையாகி விட்டது. நாங்கள் இடப்பெயர்வு காரணமாக பிள்ளைகளில் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இனி வருகின்ற பிள்ளைகளில் கல்வி அதிகரிக்க வேண்டும். நல்ல பழக்க வழக்கமுள்ள சீரான சமூகமாக வாழ வேண்டும். எனக்கு இயலாமல் விட்டாலும் எனக்கு மனைவி இறந்துவிட்டாலும் எனது பெண் பிள்ளைகள் இரண்டு பேரும் நல்ல ஒரு வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க வேண்டும். வறுமையிலிருந்து நீங்கி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License