We do not have any relatives

Sharing of the elderly person who lost the family members of the war.


අපට සලකන්නේ නෑ

පවුලේ සාමාජිකයන් අහිමි වූ වැඩිහිටි පුද්ගලයා බෙදාහදා ගැනීම.


எங்களுக்கு ஒரு உறவினர் கூட இல்லை

யுத்தத்தினால் குடும்ப உறுப்பினர்களை இழந்து அல்லலுறும் முதியவரின் பதிவு.



CMP-MN-MW-PPK-02

My name is Soosai Innasimuthu. I am 78 years old. I was born in Ratnapura and was living there when the riots started. In 1978 J R Jayawardane won the presidential election and came to power. Tamils were killed in that period. After the riots we moved here in 1979. My father was a mason. I had 4 sisters. I was the last one in the family. I studied up to grade 7. I had 2 daughters and a son. My son was killed by army. One of my daughters joined army and even she was killed by the army. My second daughter was also arrested by the army when she was 22.

As we were displaced, my wife lost vision in one eye. We first moved to Madu and then to Vannery. Later from Vannery to Suthanthirapuram. We lived in Suthanthirapuram for 2 years and were supplied with food by Zoa. I was wounded on the head in a shell attack. During the final war we were in Iruttu Madu in Kilinochchi. We surrendered to the army which occupied this area. We were taken to Vavuniya campus refugee camp and stayed there for 2 months. Then we were informed that people above 60 years could leave the camp. My elder brother came and took me to Pesalai. The Grama Sevaka officer advised us to go to our native place. In 2010 we came here.

We received the death certificate of the lost daughter and 25,000 rupees compensation for my lost son. Now I am working at PMT 1990 Samurdhi church. I am getting 10, 000 rupees. We don’t have any relatives. Since they have mixed with Sinhalese they do not care about us. We are living with a lot of difficulties. I confronted with AGA and asked to send our details. They asked for the documents with regard to joining LTTE and I gave them. But I have not heard from them still.






නම : සුසෙයි ඉන්නාසිමුත්තු
වයස : අවුරුදු 78යි
උපන් ගම : රත්නපුර

1978 වසරේ ජේ.ආර්. ජයවර්ධන මහතාගේ ජයග්‍රහණයෙන් පසු දෙමළ ජනතාව මරා දැම්මා. එම අවස්ථාවේ අපි මේ ප්‍රදේශයට පැමිණියා. අපට දරුවන් දෙදෙනෙක්. එක පුතෙක් හමුදාව විසින් ඝාතනය කරනු ලැබුවා. අනෙක් පුතෙක් කොටි සංවිධානයට බැඳී කටයුතු කෙරුවා. ඔහුත් වෙඩි තබා ඝාතනය කරනු ලැබුවා.

මගේ පියා මේසන් වෘත්තියේ යෙදී සිටියා. සහෝදරියන් 4දෙනෙක්. මම පවුලේ බාලයා. 7වෙනි ශ්‍රේණිය දක්වා අධ්‍යාපනය ලැබුවා. 1979 වර්ෂයේ මෙහි පැමිණියා. එසේ පැමිණීමේදී දැඩි දුෂ්කරතාවන්ට මුහුණ දුන්නා. එම අවස්ථාවේ තමයි හමුදාව මගේ පුතාව (අවරුදු 22 යි) අල්ලා ගෙන ගියේ.

බිරිඳට එක් ඇසක පෙනීම නැහැ. අපි මඩු ප‍්‍රදේශයට අවතැන්වී ගියා. ආපසු පැමිණ ගනේෂපුරම් කියන ස්ථානයේ ජීවත් වුණා. නැවත වන්නේරි ප‍්‍රදේශයට පලා ගියා. සුතන්දරම්පුරම් ප‍්‍රදේශයට ගියා. වසර 2ක් අවතැන්වී ජීවත් වුණා.

සංවිධානය විසින් ලබාදෙන ලද ආහාර අපි කෑමට ගත්තා. ෂෙල් ප‍්‍රහාරවලින් කරදර වුණා. හිසේ තුවාලයක් ඇති වුණා. අවසන් යුද්ධ කාල වකවානවේ කිලිනොච්චි ඉරුට්ටුමඩු ප‍්‍රදේශයේ සිටියා. හමුදාවට අපි බාර වුණා. පසවු වව්නියාවේ කඳවුරකට රැගෙන ගියා. එම කඳවුරේ මාස 2ක් රැදී සිටියා. වයස අවුරුදු 60ට වැඩි අය තමන්ගේ ගම්බිම්වලට යා හැකියි කියා ඔවුන් කීවා. එවිට මගේ වැඩිමහල් සොහොයුරා ඇවිත් පේසාලෙයි ප‍්‍රදේශයට අපි රැගෙන ගියා. පසුව 2010 වසරේ අපගේ ගමට පැමිණියා.

අතුරුදහන්වූ පුතා පිළිබඳ මරණ සහතිකයක් අපට ලබා දුනුනා. වන්දි මුදල් වශයෙන් රුපියල් 25,000ක් ලැබුණා. නැවතත් අපි වන්දි ඉල්ලූ නමුත් බලධාරින් එය ප‍්‍රතික්ෂේප කළා. මම පල්ලියේ වැඩ කරනවා. එම වැඩ සඳහා පල්ලියෙන් මසකට රුපියල් 10,000ක් ලැබෙනවා. නෑදෑයන් කිසි කෙනෙක් නැහැ. ඒ අය සිංහල ප‍්‍රදේශවල ජීවත් වන නිසා අපට සලකන්නේ නෑ. මම ඉතා අමාරුවෙන් තමයි ජීවත් වෙන්නේ.


CMP/MN/MW/PPK/02

நினைவலைகள் செயற்திட்டம்

இதில் எனது வாழ்க்கை வரலாறு கூறுவதனால் எனது பெயர் சூசை இனாசிமுத்து. எனது வயது 78. எனது பிறப்பிடம் இரத்தினபுரி. அங்கு வசித்து வந்த காலங்களில் இனக்கலவரம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் 1978ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற காலம். அப்போது ஜெ.ஆர் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். அப்போது தமிழர்களைக் கொன்றார்கள். அந்த இனக்கலவரத்தின் போது நாங்கள் இங்கு வந்தோம். அதாவது 1979இல் குடியேறினோம். எனதுஅப்பா மேசன் தொழில் செய்தார். சகோதரிகள் 4 பேர். நான் குடும்பத்தில் கடைசிப் பிள்ளை. 7ம் தரம் வரைப் படித்தேன். எனக்கு 3 பிள்ளைகள் அதில் இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் இருந்தது. ஒரு மகனை இராணுவம் கொன்றது. அதன் காரணமாக மற்றைய மகள் இராணுவத்திற்கு சேர்ந்து இருந்தார். பின் இந்த மகளையும் இராணுவம் சுட்டு கொன்று போட்டார்கள். அப்போதுதான் எனது மற்ற மகளையும் இராணுவம் பிடித்துக் கொன்றது. அப்போது அவளுக்கு வயது 22 ஆகும்.

இவ்வாறான நிலையில் மனைவிக்கு ஒரு கண் பார்வை இல்லை. அந்த நிலையுடனே இடம்பெயர்ந்து போனோம். முதல் மடுவுக்குப் போனோம். அங்கிருந்து திரும்பி வன்னேரிக்கு ஓடினோம். பின் இங்கிருந்து சுதந்திரபுரம் சென்று சுற்றித் திரிந்தோம். அங்கு 2 வருடங்கள் இடம்பெயர்ந்து zoa நிறுவனங்கள் தந்த உணவை உண்டோம். அங்கு செல்லடி பட்டு தலையில் காயம் ஏற்பட்டது. இறுதி யுத்தம் நேரம் கிளிநொச்சி இருட்டுமடுவில் இருந்தோம். அந்த நேரம் அங்குவந்த இராணுவத்திடம் சரணடைந்தோம். இராணுவம் எங்களை வவுனியா கெம்பஸில் போட்டது. அங்கு 2 மாதம் இருந்தோம். பின் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தனது சொந்த இடங்களுக்கு போகலாம் என்று சொன்னார்கள். அப்போது என் அண்ணா வந்து பேசாலைக்கு கொண்டு சென்றார். பின் கிராம சேவகர் சொன்னார் எமது சொந்த இடத்திற்கு போகும்படியாக கூறினார். நாங்கள் 2010இல் வந்தோம்.

காணாமல் போன மகள் இறந்ததற்கான சான்றிதழ் தந்தார்கள். 25,000 மகனுக்காக நட்ட ஈடாக தந்தார்கள். மீண்டும் கேட்க தர மறுத்தார்கள். பி.டிம்.டி 1990 சமூர்த்தி, சர்ச்சில் சேவை செய்கிறேன். வருமானம் 10,000 சர்ச்சில் தாரங்க. இந்த இடத்தில் தான் வாழ்கின்றோம். ஒரு உறவினர்கள் கூட இல்லை. அவர்கள் சிங்களமயமாக இருப்பதால் எங்களை கவனிப்பதே இல்லை. கஷ்டத்தில் வாழ்கின்றோம். ஏஜி உடன் முரண்பட்டேன். எங்கள் விபரங்கள் அனுப்புமாறு கேட்டேன் என்று சொன்னேன். தங்களுக்கு தான் சொன்னேன். என் மகள்மார் இழந்ததற்காக இந்தியா கொண்டு சென்றார்கள். இயக்கத்திற்கு சென்றது பற்றி பிரதிகளை என்னிடம் கேட்டார்கள். நான் அதற்கு இணங்க அனைத்து பிரதிகளையும் ஒப்படைத்தேன். ஆனால் இது வரையும் எந்த திட்டமும் வழங்கவில்லை.







A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License