CMP/MN/MW/PPK/08
I relate my history.
I live in Paalaiperumalkaddu. I was born in 1969 at Iluppakadavai in Mannar. My father is a farmer. Mother is engaged in small scale domestic entreprise. I was told that my grandparents had already passed away when I was born. I have not seen them even in photograph. I was told that my mother was sick when I was born. Therefore, my family was very sad. The doctors had told either the mother or the child only could survive. But with the grace of god, both I and my mother survived. At small age, I had two sisters and one brother. When I was born, we lived in a clay cottage. My father often says that because of the good fortune of my birth, they were able to build a brick house in two years.
I got married in 1989 and came to live in Ampalapperumal Kaddu. That time, the situation was very dangerous there. Often battle took place between army and movement. During that time, the army shot the public in a hostile manner. Due to fear I, my husband and his mother stayed in Iluppakkadawai, our own place. Two of my husband’s relative families put up a temporary cottage in our paddy field and stayed with us.
During the war occurred in 1990, we went to Mannar town in displacement and returned in 1992. The Liberation Tigers were with us in that period. We were proud to have our culture, heritage and our traditions. We lived peacefully under brother’s control. In those days, a woman alone can go around at nights. We did not have any fear at all. But now the situation is different. There were many Christians and Hindus. A considerable number of Muslims were there. Due to some problems, Muslims were removed from here. Our time was passing in this away.
Again in 2000, a war situation aroused and we displaced again. This time, the displacement was larger than the past. Sometimes due to rain and flood we displaced at certain periods only. We were in Madu for 11/2 years. We faced great difficulties for food. There were some people died of disease. Many people died of no proper medical treatment, fear of war, no proper food in displacement and venomous bites.
During rainy season, in some occasions we did not have dresses for change. In comparison with other families, we had certain amount of coconut and money with us. But the very poor families had no food. I still remember well that there was a family close to us. The husband died in the war and that woman having a small child underwent untold hardships for food.
When we cook rice or porridge that small boy often came to us and I gave him meals in a plastic bowl. He did not eat it alone and taking it home shared with his mother. It was a very sad sight. When they did not have relief rations, I managed to give them some food stuffs. Whatever we say, she was a young mother.
Following the ceasefire in 2002, we returned to our own places. There was no war. That time, we managed to find our own employment. About five years passed. After a long period of marriage, I got a male child in 2003. I was over joyed to have the baby. We were happy and spent our time repairing our houses. We visited our father’s place. My husband looked after me tenderly. In 2007, war commenced in large scale. All in the village displaced, firstly to Madu and then to Vidathaltheevu. As my husband had a tractor, we were able to take paddy, coconut and dresses with us. That time, my father expired. My mother was with my younger sister. When the navy started firing shells from Vidathaltheevu beach, we moved to Mulangkaavil. As the army captured all our places, we went to Mulangkaavil, Suthanthirapuram, Kalmadu and to Visuwamadu. All most all the money had been gradually exhausting. Other items too have used up and only one bag of paddy was left. We stayed in Visuvamadu Hall. Shell attacks started close by and the war intensified. There was smoke everywhere and everything was burning. The situation looked very cruel.
The war continued. My husband was arrested in Suthanthirapuram and died in a shell attack. Three others died with him. We could not bury his body as there was rain and continuous shell attack. Before dusk, I left that place only with the dress I was wearing and went to Palai. I had no money even a cent. There was no any water to give my child. He was continuously crying.
Within a short distance to our hut, Malathi troops were staying. They gave food and water. They gave biscuit, butter and water bottle and asked us not to stay there and sent away. As such, we were in Mullivaikkal till 17th.
After the war ended, the army kept us in a ground even without food for a whole day. That night they took us by bus to Anada Cumarasuwamy Camp in Vavuniya. I could not bear the death of my husband. I too wanted to die. I could not do anything but to be alive. In October, we returned to our village. Then only I came to know of sister’s problems. She and her husband were wounded in the leg by shell attack. They two had severe injuries. She had a child. There is no news the other younger brother had died in the war. My mother also passed away after my elder sister’s death.
Now, we have got Indian housing scheme. I live in that house now. With the expectation of bright future and thinking of the return of my husband, I am living. I manage my life with little amount of money at the bank, earning from paddy cultivation and money received from the paddy field lease.
I and my sister help each other and as my husband was the only child, there is no help. My son is studying. He is my property, hope and everything.
I pray god that there should not be no such war in future. But we were happy and contented when the movement existed. Life is now difficult and there are no relatives and no life. Finally, we are living without peace. My husband is not alive and my sister’s husband is handicapped. As the woman headed family, we have to afraid of many people. Even in our community, we had to live with culprits. Housing scheme was not provided to the really war affected people. Those who live in Colombo, Mannar and Puttalam are given housing scheme.
02
If we ask the government about this, they scold us and disrespect us. To whom we could complain. Anyhow, when the movement existed everything was in order.
Thanks.
CMP/ MN/ NW/ PPK/ 38
නම :-
ලිපිනය :- පාලෙයි පෙරුමාල් කටිට
වයස :- 47
මම 1969 වන අවුරුද්දේ මන්නාරම් ඉරුප්පයික් කඩවයිල් නම් ගමේ උපත ලැබුවා. මගේ පියා ගොවියෙක් , අම්මා නිවස තුළ පොඩි රැකියාවක් කරා. මම ඉපදෙන විට මගේ දෙමවි පියන්ගේ දෙමව් පියන් මිය ගොස් ඇති බව කිවා. මම ඒ අයව පිංතුර වල වත් දැකලා නෑ.මම ඉපදෙන විට අම්මා ගොඩාක් අසනිපයෙන් අදලා තියනවාලු ඒ නිසා අපේ ගෙදර අය දුකින් ඉදලා තියනවා. මෙහිදි වෛද්ය වරුන් පවසා තියනවා අම්මාව හො මාව පමනයි බෙරා ගත හැක්කේ කියලා නමුත් දෙවියන්නනිසා මමත් මගේ අම්මාත් බෙරුනා කියලා මං පොඩි කාලේ අනිත් අය මට කිව්වා. මට සහෝදරයන් 3 දෙනෙක් ඉන්නවා.
සහෝදරියන් 2 නෙක් සහ පිරිම සහෝදරයෙක්. මම ඉපදෙන විට මැට වලින් හදපු පැල්පතක තමයි ජිවත් වුනේ. මම ඉපදුන වසනාව අවු 2 ඇතුලත ගල්වලින් ගෙවල් හැදුවා කියලා මගේ පියා නතර පවසනවා. මම 1984 විවාහා වෙලා අම්බලප්පෙරුමාල් කට්ටු වලට අවා. මෙහි ඉතා දරුණු පරිසරයක් තිබුනා. හමුදාව සහ කොටි අතර නිතර නිතර රන්ඩු ඇති වෙනවා ඒ වන විට හමුදාව හිතේ හැටියට මිනිසුන්ට වෙඩි තියලා මරනවා. බය නසා මමත් මගේ සැමියාත් ඔහුගේ වමත් මම ඉපදුන තැන වන ඉලුප් පෙයි කඩයෛ හි ගිහින් නැවතුනා. මගේ සැමියාගේ නැදැයො සහග පවුල් දෙකම තාවකාලිව පැල්පත් සදාගේන ජිවත් වුනා. 1990 දි සිද්ද වුන රංඩු තුලින් අපි අවතැන් වි මන්නාරමට ගියා. නවතත් 1997 දි පැමිනියා. ඒ කාළයේ අපිත් එක්ක හිටියා. අපේ සංකෘතින් , පාරම්පරික දෙවල් , අපේ සිරිත් විර්ත කියා අපේ අඩම්බරකම් හා සැනසිල්ලෙන් අයියාගේ පාළනය තුළ ජිවත් වුනා. ඒ කාළයේ කාන්තාවන් රාත්රියේ ගිහින් එන්න පුළුවන් කිසිම භියක් නැතිව. නමුත් අද දින තත්වය වෙනස්. කිතුනුවන් සහ හින්දු අය ගොඩාක් සිටියා. මුස්ලිම් අය සමහර තැන් වලසිටියා. සමහර ප්රශ්ණ නිසා මුස්ලිම් අය මේ ඉදලා පිටත් කරනු ලැබුවා.
මෙසේ අපේ කාළය ගෙවි ගියා.නැවත 2000 යුදමය වාථාවරණයක් ඇති විය. අපි නැවත් අවතැන් වි ගියා මිට පෙර කාළවල් වලට වඩා මේ කාළය තුළ වැඩි වශයෙන් මේ අවතැන් විම පැවතුනා. මේ අතර වැස්ස , ගංවතුර නිසා අවතැන් වුනා. අවුරුදු එකාමාහරකට වඩා අපි මඩු වල ජිවත් වුනා. කැමට ගොඩාක් දුක් වින්ද අතර ලෙඩ රෝග වලින් බෙහෙත් නැතිව විශාල මරණය පත් වු අවස්ථාවන් ඇත. යුද්ධයට භය වෙලා කැම නැතුව ලෙඩ වෙලා මරුණ අය ගොඩායි. වැසි දවස් වල මාරු කරන්න ඇදුම් නැතුව අපහසයට ලක් වුනා වාරගණන් විශාලයි. අනිත් පවුල් සමග සංසන්දනය කරන විට වී , පොල් , මුදල් කියන ටිකක් තිබුනා. නමුත් වඩා දිලිදු පවුල් කැම නැතුව ඉන්නවා. මට හොද මතකයක් තියනවා අපේ අල්ලපු ගෙදර සිටියා අම්මාගේ සැමියා යුද්ධය තුලින් මිය ගියා.ඒ අම්මාට කුඩා දරුවෙක් විතරයි. ඒ දෙන්නා ගොඩාක් දුක් වින්දා කැමට. අපි කැද බත් කියා හදන වෙලාවෙදි , කන වෙලාවෙදි ඒ දරුවා අප වෙත දුව එනවා. මම ඔහුට භාජනයකට දලා දුන්නොත් මම විතරක් කැවොත් කියලා ගෙදර ගිහින් අමිමාටත් දිලා කනවා. බලන විට දුක හිතෙනවා ඒ පවුලට බඩු නැතිව සිටන විට අපට පුළුවන් විදියට අප උපකාර කරනවා. පව් නේ මොනවා කියන්නද ඒ අය අපේ ජාතියේ අය නෙද. 2002 සටන් විරාමයෙන් පසු නැවත් අපි අපේ තැන් වලට අවා. එතරම් රන්ඩු තිබුනේ නෑ ඒ කාළයෙදි. එදා බෙරුණ අය අවු 5 අපිම බලාගේන කාළය ගෙවි ගියා. පසුව 2003 මට පිරි දරුවෙක් ලැබුනා මටි කියාගන්න බැරි සතුටක්. ලමයා ඉපදුන සතුටට අපේ පැල්පත් නිවාසය හදාගේන සතුටින් ජිවත් වුනා. තාත්තා ඉන්න තැනටත් ගිහින් එනවා. මගේ සැමියා මට දුකක් නොදි සතුටින් බාල ගත්තා. 2007 දි දරුණුම තත්වයට අපි සැවම අවතැන් වුනා. ප්රථමයෙන් මඩු වලට ගියා. අපිට තිබුනු පොලි වි සමහර සමහර ඇදුම් ටික මගේ සැමියට චුට්ටක් තිබුන නිසා අපට යම් දරට යමක් කරගන්න පුළුවන් වුනා. අපේ තාත්තා ඒ අවස්ථාවෙදි තමයි මරණයට පත් වුනේ. අම්මා මගේ නංගි සමග ඉන්න විට සෙල් වැදෙන්න පටන් ගත්තා ඒ නිසා අපි මුල................................අවතැන් වි ගියා. ඉන් පසු හමුදාව ඔක්කම අල්ලගේන එන්න පටන්ගත්ත නිසා අපි විවිද තැන් වලට ගියා. අනේ තිබුන මුදල් ඉවර වෙන තත්වයක. ගෙනාපු බඩු ඉවර විගෙන එමක එක වී මිටියක් විතරයි තියෙන්නේ. වසුවමඩු පොදු මන්ඩපයේ නැවතිලා හිටිය වෙලාවේ ඒ ලගට සෙල් වදින්ට පටන් අරන් යුද්ධය දරුණව පවතින්න පටන් ගත්තා. හැම තැනම දුමි වලින් පිරිලා. හැම දෙයක්ම සුද්ද වෙලා වගේ. ඒ වෙලාවේ අපේ ගොඩාක් දෙවල් සෙල් වැදිලා විනාශ වුනාඒ වගේම දිගටම යුද්ධය තිබෙන නිසා මගේ සැමියත් සුදන්දින පරත්තිල් සෙල් වැදිලා මැරුනා. ඒ සමගම 3 දෙනෙක් මිය ගියා. වල දාන්නවත් බැරි වුනා. වැසි මෙන් සැම විටම සෙල් වැටෙන්න පටන් ගත්තා. අපි ඉරුට්ටුමඩු හරහා තෙල්ලි පුනම් ගිහින් පිටින් ඉරනෛයික් කලෙය් ගියා. මං ලග සතයක් වත් තිබුනේ නෑ. ළමයාට කන්න නෑ. දිගටම අඩගා ගත්ත ගමන් තමයි අපි හිටපු පැල්පත් වල ටික වෙලාවකින් පසු සොල්දාදුවෝ ඉන්නවා ඒ අය ලගට ගිය විට. ඒ ලග තිබුනු බිල් අලවපු වතුර බොතලයක් දිලා අපට එහේ ඉන්න එපා කියලා යවනවා. මෙසේ දරකට ඇති අවසානයේ මැයි 17 ක්වා හිටියා. රන්ඩු ඉවර වෙලා හමුදාව අපව නග්ගගෙන පිට්ටනියක් වත් නැත්ව රාත්රිෙය් බස් එකේ නග්ග ගෙන වව්නියාවට අසන්නව කුමාරස්වාමි කදවුරේ අපිව දැම්මා. මටනම් සැමියා මැරුණ එක දරා ගන්න බෑ. මාත් මැරිලා යනවානම් කියලා හිතුනා. මොනවා කරනද කියලා තෙරෙන්නේ නෑ දරුවා නිසා ඉන්නවා. මින් පසු මෙවැනි යද්ධයක් වෙන්න එපා කියලයි මම දෙවියන්ගෙන් ප්රර්ථනා කරන්නේ. නමුත් කොටි සංවිධානය ඉන්න විට අපි සතුටින් සැනසිල්ලෙන් ජිවත් වුනා. මෙච්චර අසාදාරණ වලට මුහුණ දිලා දැන් සැනසිල්ලක් නෑ සමාදානයක් නෑ ජිවිතයක් නෑ මගේ සැමියත් නෑ. ඇත්තටමු යුද්ධයෙන් පිඩාවට පත් වුන අයට නිවාස සැනසිල්ලෙන් නිවාස ලැබුනේ නෑ. කොළඹ පුත්තලට මන්නාරම අයට නිවාස ලැබුනා. ඒ අයගෙන් මේ දෙවල් ගැන ඇසුවොත් අපට බැනලා අපහස කරලා යනවා. අපි කාටද කියන්නේ මොනවා වුනත්.නැවත ................................මසේ අපේ තිබුනු බඩු එක්ක අපේ ගමට අවා. එහි අවාට පසු තමයි මගේ සැමියාව දැක්කේ. එයාගේ සැමියත් සෙල් වැදිලා අංග විකල වුනා එයටත් එක දරවයි හිටියේ.
CMP/MN/MW/PPK/08
எனது வரலாற்றை கூறுகின்றேன்.
நான் பாலைப்பெருமாள்கட்டு எனும் இடத்தில் வசிக்கின்றேன்.
நான் 1969ஆம் ஆண்டு மன்னார் இலுப்பைக்கடவையில் பிறந்தேன். எனது அப்பா ஓர் விவசாயி. அம்மா வீட்டில் சிறு தொழில் முயற்சியாளர். நான் பிறக்கும் போதுஎனதுஅம்மா அப்பாவின் தாய் தந்தை இறந்து விட்டதாக கூறினார். நான் அவர்களை போட்டோவில் கூட கண்டதில்லை. நான் பிறக்கும் போது எனதுதாய் சுகயீனம் உற்றிருந்ததாக கூறினார்கள். இதனால் என் குடும்பம் மிக கவலையில் இருந்தது. இதில் குழந்தை அல்லது தாய் தான் தப்ப முடியும் என வைத்தியர்கள் கூறினார்கள். தெய்வாதீனமாக நானும் எனதுஅம்மாவும் தப்பியதாக தெரிவித்தார்கள். என் சிறு வயதில் எனக்கு மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். இரண்டு பெண் சகோதரரும் ஒரு ஆண் சகோதரரும் நான் பிறக்கும் போது நாங்கள் மண் குடிசையில் தான் இருந்தோம். நான் பிறந்த அதிஷ்டம் இரு வருடங்களில் கல்வீடு கட்டியதாக எனதுதந்தை அடிக்கடி கூறுவார். நான் 1989ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அம்பலப் பெருமாள் கட்டுக்குவந்தோம். அப்போது இங்கு மிக கொடூரமான சூழ்நிலை நிலவியது. ஆமி இயக்கம் சண்டை அடிக்கடி நிகழும். அந்த நேரங்களில் ஆமி பொது மக்களை அடிக்கடி கண்ட பாட்டுக்கு சுடும். பயம் காரணமாக நானும் எனது கணவரும் அவரின் தாயும் எமது சொந்த இடமான இலுப்பக்கடவையிலேய தங்கியிருந்தோம். எனது கணவரின் உற்றார் உறவினர்கள் இரு குடும்பத்தாரும் தற்காலிகமாக எங்களின் வயலில் குடியசையிட்டு இருந்தார்கள்.
1990ம் ஆண்டுஇடம்பெற்ற சண்டையின் போது நாங்கள் இடம்பெயர்ந்து மன்னார்நகருக்கு சென்றுமீண்டும் 1992ம் ஆண்டு வந்தோம். அந்தக் காலத்தில் விடுதலைப் புலிகள் எம்முடன் இருந்தனர். எங்களது கலாசாரங்கள் பாரம்பரியங்கள் எங்கள் வழக்கமென நாங்கள் பெருமிதம் அடைந்திருந்தோம். நிம்மதியாகவும் அண்ணாவின் கட்டுப்பாட்டில் இருந்தோம். அந்த காலத்தில் இரவு நேரங்களில் கூட ஒருபெண் தனியாக சென்றுவர முடியும். எந்தவிதமான பயமும் இன்றி இருந்தோம். ஆனால் இன்றுநிலை வேறு. கிறிஸ்தவர்களும், இந்துக்களும் அதிகமாக இருந்தார்கள். முஸ்லீம்கள் குறிப்பிட்டளவில் இருந்தனர். சில பிரச்சினைகள் காரணமாக முஸ்லீம்கள் இங்கிருந்து அகற்றப்பட்டனர். இவ்வாறு எங்கள் காலங்கள் ஓடிக் கொண்டிருந்தது. மீண்டும் 200ம் ஆண்டு ஓர்யுத்த நிலை ஏற்பட்டு நாம் மீண்டும் இடம்பெயர்ந்து சென்றோம். முன்னைய காலங்களைவிட இந்த இடப்பெயர்வு அதிகாமாயிருந்தது. இதற்கிடையில் மழை வௌ்ளப்பெருக்கினால் சில சில சந்தர்ப்பங்களில் மட்டும் இடம்பெயர்ந்திருந்தோம். ஒன்றரை வருடங்கள் நாம் மடுவில் இருந்தோம். உணவுக்கு மிகவும் கஸ்டப்பட்டோம். நோயினால் இறந்தவர்கள் கூட இருக்கின்றார்கள். சரியாக வைத்தியம் இன்றி யுத்தத்திற்கு பயந்து இடம்பெயர்ந்து சரியாக உணவு இன்றி, விசக்கடி என இறந்தவர்கள் அதிகம். மழை நேரங்களில் மாற்ற உடுப்புக்கள் இன்றி கஸ்டப்பட்ட தருணமும் உண்டு. மற்றைய குடும்பங்களுடன் ஒப்பிடும் போது எங்களிடம் நெல்,தேங்காய், காசு என ஓரளவிற்கு இருந்தது. ஆனால் மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பங்கள் உணவின்றி கூட இருப்பார்கள்.
எனக்கு நல்ல ஞாபகம் ஒன்று உள்ளது. அந்த நேரத்தில் எனக்கு பக்கத்தில் இருந்த அம்மாவுக்கும் போரில் கணவன் இறந்து விட்டார். அந்த தாயும் தன் சின்ன பிள்ளை மட்டுமே மிகவும் கஸ்டப்பட்டுள்ளார். உணவிற்காக. நாங்கள் கஞ்சி, சோறு என்று சமைக்கின்ற போது உண்ணும் வேளையில் அந்தச் சிறுவன் எங்களிடம் ஓடி வருவான் நான் அவனுக்கு ஒர் இறப்பர் கோப்பையில் உணவு கொடுக்க அவன் மட்டும் சாப்பிடாமல் நான் வீட்டுக்கு கொண்டுபோய் சாப்பிடுகின்றேன் என தனது தாய்க்கும் கொடுத்து சாப்பிடுவான். பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கும். அந்த குடும்பத்திற்காக நிவாரணப் பொருட்கள் இல்லாத நிலையில் என்னால் இயன்ற சில உணவுப் பொருட்களை கொடுத்து உதவுவோம். என்னதான் சொன்னாலும் அவர்கள் என்றும் இளம்தாயே. 2002ம் ஆண்டுயுத்த நிறுத்தத்தினைத் தொடர்ந்து மீண்டும் எங்களது இடங்களுக்கு வந்தோம். கண்ட நிலைமைகள் காணப்படவில்லை. அந்த நேரங்களில் எங்கள் பிழைப்புக்களை நாங்களே பார்த்துக் கொண்டோம். ஒரு 5 வருடங்கள் ஓடின. எனக்கு திருமணம் செய்த பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு 2003ம் ஆண்டு ஓர் ஆண் குழந்தை கிடைத்தது. எனக்கு சொல்ல முடியாத ஆனந்தம். பிள்ளை பிறப்பு சந்தோசம் எங்களின் ஊரில் வீடுகள் திருத்துவது என மகிழ்வாக இருப்போம். அப்பாவின் இடத்திற்குபோய் வருவோம். என்னை கணவர்கலங்காது வைத்து பார்த்துக் கொண்டார். 2007ம் ஆண்டு அனைவரும் இடம்பெயர்ந்து சென்றோம். முதலில் மடுவிற்கு பின்பு விடத்தல் தீவுக்கு எங்களிடம் இருந்த நெல், தேங்காய், கிடந்த கொஞ்ச உடுப்புக்கள் என எனது கணவரிடம் டக்டர் இருந்த படியால் எல்லோருக்கும் ஓரளவு சமாளிக்க கூடியதாக இருந்தது. எங்களின் அப்பா அந்த தருணத்தில் தான் இறந்தார். அம்மா எனது தங்கச்சியுடன் விடத்த தீவில் கடற்கரையில் நேவி செல் அடிக்கத் தொடங்கியதும் நாங்கள் ஆமி எங்களின் இடங்களை எல்லாம் பிடித்து வர முழங்காவில் சுதந்திரபுரம். கல்மடு, விலமடு என சென்றோம். கையில் இருந்த பணமும் முடியும் நிலை கொண்டு சென்ற பொருட்கள் எல்லாம் முஎந்து ஒரே ஒரு நெல் மூட்டை மட்டுமே இருந்தது. நாங்கள் விசுமடு மண்டபத்தில் தங்கியிருந்தோம். அருகில் செல் அடிக்கத் தொடங்கி கடும் சண்டை இடம்பெற்றது. ஒரே புகை மண்டலமாகவும் எல்லாம் எரிந்த வண்ணமாக மிக கொடூரமான காட்சியளித்தது. அந்த நேரத்தில் விமான குண்டுவீச்சில் அழிந்துவிட்டது. அப்படியே தொடர்ந்து சண்டை இடம்பெற எனது கணவன் சுதந்திரபுரத்தில் கைது செய்யப்பட்டு செல் வீச்சில் இறந்து விட்டார். அவருடன் முடியவில்லை. காரணம் மழை பெய்தாலும் ஒரே செல்வீச்சாக இருந்தாலும் நான் இருட்டுப்பட முதலில் சென்று அங்கிருந்து உடுத்த உடுப்புடன் இரவு பாலை சென்றோம். என்னிடம் ஒரு சத பணமும் கூட இல்லை. பிள்ளைக்குகொடுக்கக் கூட நீர் இல்லை. தொடர்ச்சியாக அழுத படி நின்றார்.
நாங்கள் இருந்த குடிசைக்கு கொஞ்ச தூரத்தில் மாலதி படை இருப்பார்கள் அவர்களிடம் சென்ற போது உணவும் கொடுப்பார்கள். நீரும் தருவார். அவர்களிடமிருநு்த பிஸ்கட்டில் பட்டர் தண்ணிப் போத்தல் தந்து எங்களை இங்கு இருக்க வேண்டாம் என்று கூறி அனுப்பிவிடுவார்கள். இப்படி ஓரளவு இறுதியாக முள்ளிவாய்க்காலில் 17ம் திகதி வரை இருந்தோம். சண்டை முடிய இராணுவம் எங்களை ஓர்மைதானத்தில் நீர்கூட இன்றி ஒரு நாள் முழுவதும் இன்று இரவு பஸ்சில் ஏற்றிச் சென்று வவுனியா ஆனந்த குமாரசுவாமி முதலில் என்னை விட்டார்கள். எனது கணவன் இறந்ததை தாங்க முடியவில்லை. நானும் செத்திடனும் போல இருந்தது. நான் என்ன செய்ய தெய்வ குழந்தையா இருக்க வேண்டிய நிலை மீண்டும் ஐப்பசி மாதம் எப்படா சனத்தோட மீண்டும் ஊருக்கு வந்தோம். அங்குவந்த பிறகு தான் எனது தஙக்கச்சியின் கஸ்டங்களும் அவரும் கணவரும் செல்பட்டு காலில் அடிபட்டு விட்டார்கள். இருவருக்கும் கடும் காயம். அவருக்கு ஒர் குழந்தை உண்டு. மற்றைய தங்கச்சி பற்றி இதுவரைக்கும் எந்தவித செய்தியும் தெரியாது. தம்பி போரில் இறந்து விட்டான். எனதுஅம்மாவும் அக்காவினால் சாவினால் இருக்கும் போது இறந்து விட்டார். இப்போது இந்தியன் வீட்டுத்திட்டம் எகிடைத்தது. அதில்தான் இப்போது இருக்கின்றோம். அப்போது சுபிட்சம் வரும் கணவர் எப்போது திரும்பி வருவார் என்ற எண்ணத்துடன் வங்கியில் இருக்கும் கொஞ்ச பணம் விவசாயம் செய்யனும். வயலினை குத்தகைக்கு விட்டும் எங்களது சீவியத்தை கொண்டு செல்கிறோம். தொழில் தங்கச்சியும் ஒருவருக்கு ஒருவர் துணை செய்து கணவரும் தனிப்பிள்ளை என்ற படியால் அண்ணனின் துணை என்றும் எனக்கில்லை மகன்தான் படிக்கின்றார். அவர்தான் என்சொத்து நம்பிக்கை எல்லாம். இனிமேல் இப்படியுமா ஓர்சண்டை இருக்கக் கூடாது என கடவுளை வேண்டுகின்றேன். ஆனால் இயக்கம் இருக்கும் போதுநிம்மதியாக சந்தோசமாக இருந்தோம். சிக்கலான அதிகாரிகளை மட்டும் எப்போதும் உறவுகளும் இல்லை. வாழ்க்கையும் இல்லை. இப்போது கடைசியாக நிம்மதி இன்றி இருக்கின்றோம். எனதுகணவரும் இல்லை. அவளது கணவரும் அங்கவீனமானவர். பெண் தலைமைத்துவ குடும்பம் என்ற காரணத்தினால் நிறைய பேருக்கு பயப்பட வேண்டியுள்ளது. எமது சமூகத்திலும் இல்லத்திற்குள் வாழும் சூழ்நிலை நிலவியது. உண்மையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வீட்டுத்திட்டம் கிடைக்கவில்லை. கொழும்பிலும்,புத்தளத்திலும் மன்னாரிலும் இருப்பவர்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது. அரசிடம் இதைக் கேட்டால் எங்களை பேசி அவமதித்து விடுவார்கள். நாங்கள் யாரிடம் சொல்வது என்றால் இருந்தாலும் இயக்கம் இருக்கும் போது எல்லாம் ஒழுங்கா இருக்கும்.
நன்றி