My children studied only with oil lamp

The tragic story of the family after the war.


මගේ දරුවන් ඉගෙන ගත්තේ තෙල් පහනෙන් විතරයි

පවුලේ කථාව යුද්ධයේ ප්රතිඵලයයි.


விளக்கை பயன்படுத்தியே பிள்ளைகள் படித்தனர்

போரின் விளைவால் அவஸ்தையுறும் குடும்பத்தின் கதை.



CMP/MN/MW/VAK/04

Name : T.Anthoniyar Roj
Address : Manalmoddai, Vaddakkandal, Mannar

I was born in 1975 in Mannar. My parents lived in Palamunai, Mannar. Later, we came to Manalmoddai. My father was a fisherman and mother was a housewife.

I have one elder sister and three younger brothers. I studied up to Grade 5. I did not like to study further and the situation at home also was not conducive for studies. I stopped studies and stayed at home. Then I started to go for work with mother.

My other sisters also did not study much. I understand the difficulties I now face for not studying. That is why I take much effort to educate my children. My children ask me whether I studied. I tell them that they should not suffer as I do now. Therefore, everyone should study well and only then we can have a good life.

I have got married and my husband is doing agriculture. I have four children the first one is a girl and studies in grade 11. The other children also study. My last child is 2 years old. I educate them well and I expect them to study well and obtain good jobs and have a good life.

We firstly displaced in 1990 to Madu. Few months later, we returned to our native place. Again and again we displaced and managed our life.

In 2007, we saw displacement and destructions of properties in large scale. During that period, we underwent great difficulties. In 2007 we displaced to Periyamadu, Koorai, Nachchikudah, Konavil,Visuvamadu and finally to Iruddumadu, and through Suthanthirapuram we reached army. During displacement at the time of war, we lost all our belongings. Only now, we are gradually collecting little by little.

In 2006, my husband was arrested by the movement. In 2007, we displaced and we did not know what to do. I displaced with my father and mother taking my children with me. Then in 2008, my husband was released. From then he was with us till the end.

During the war, we faced many difficulties for food, clothing and for all other needs. We managed everything and brought up the children. At times, he could not get proper opportunity for earning. In February 2009, we came to the army through Suthanthirapuram. The army took us to Vavuniya Camp. That time, my elder daughter was very sick and we took her to hospital. Then, from there, I came to my mother in law’s house with my son having no knowledge of others. My husband was at the camp.

My first and second daughters were with my mother in law during the 2007 war. At the time of war, the roads were closed. Only my last child was with me. I felt sad to leave behind my two children. Those two children were very small and I often thought of their situation and burst into tears as they were female children. I could not have meals properly. I saw them again only by March 2009. I could not forget the incident that I had to stay away from my small children for 21/2 years. I was very pleased to see my departed children. I never expected that I would be alive after the war and join my children.

I still burst into tears when thinking of the difficulties we faced. What shall we do and the bitter past experience of the Tamil people is enough. At least hereafter, we should be allowed to live peacefully without any threats. This is the wish of the Tamil people.

I live at the lower land area of Kaddukarai tank. There are 15 families here. There is no electricity for a long time. We were given electricity only at the latter part of June 2016 that is seven years after our resettlement. Until then, we lived with Kerosene lamp and my children too studied using Kerosene lamp.

The road in our area is in bad condition. It is a gravel road. It cannot be used during rainy season. When the “Kaddukkarai Tank” overflows, our house would be full of water. No one can go on the road. It is very difficult to keep the children and still it continuous.

We were given housing scheme. We have completed the house and live in it. When we resettled, the government gave us money and livelihood assistance. We managed the family with this money. Later, my husband obtained loan started agriculture. Now, he looks after us with the income from agriculture. The income from agriculture is inadequate for the educational expenses of the children and other expenses. We somehow manage life with this income.

Most of the people in our village are engaged in agriculture. But their earning is not sufficient to maintain their family. Therefore, the government should implement programms to provide employment. Especially, I think, it would be useful, if they set up factories and grant employment to youths.

The bus service is not satisfactory. Buses ply only in the mornings and evenings. Children go to school by bus. If the bus does not come, then they do not go to school. Therefore, the bus service to our village should be increased.

Before, the war and the movement was existing, ladies moved everywhere at any time. Nowadays, when it gets dark, we are afraid. This situation should change. We must move without any fear. I have been awaiting for the children until they return from school.

Youngsters are unemployed in our village. If they are given employment, the anti–social activities could be eradicated from the society.

We can go on relating many stories to reveal our grief.
02





නම : අන්තොනියා රෝජ්.
ලිපිනය: මනල්මෝට්ටෙයි, වට්ටන්කන්ඩල්, මන්නාරම.

1975 වසරේ මා මන්නාරමේ ඉපදුණා. මගේ දෙමව්පියන් මන්නාරමේ පල්ලිමුල්ලෙයි ප‍්‍රදේශයේ පදිංචි වී සිටියා. ඉන්පසු අපි නැවත මනල්මෝට්ටෙයි ප‍්‍රදේශයට පැමිණියා. මගේ පියා ධීවර කර්මාන්තයේ යෙදී සිටියා. මව ගෘහිණියක්.
මට සහෝදරවරුන් 4දෙනෙක් ඉන්නවා. අක්කා කෙනෙකු හා මල්ලිලා තිදෙනෙක් ඉන්නවා. මා වසර 5 දක්වා ඉගෙන ගත්තා. වැඩිදුර අධ්‍යාපනයක් ලැබීමට මා වැඩිය කැමැත්තක් දැක්වුයේ නැහැ. ගෙදරත් එයට උචිත පරිසරයක් තිබුණේ නැහැ. අධ්‍යාපනය නතර කර නිවසේ නතර වුණා. ඉන්පසු මව සමඟ වැඩට යන්න පටන් ගත්තා.
මගේ අනෙකුත් සහෝදරයනුත් වැඩි අධ්‍යාපනයක් ලබා ගත්තේ නැහැ. අධ්‍යාපනයක් නැති නිසා මම විඳින දුක් කරදර දැන් මට වැටහී තිබෙනවා. එම නිසා මගේ දරුවන් දුක් විඳිනවා. දරුවන් මගෙන් අහනවා, ඔබ ඉගෙන ගත්තාද කියා. මම විඳින දුක ඔබලා නොවිදිය යුතුයි කියා මා දරුවන්ට කියනවා. සියලුදෙනාම අධ්‍යාපනයක් ලබා ගත යුතුයි. එවිට තමයි සමාජයේ හොඳ තත්ත්වයක ජීවත්වීමට හැකි වන්නේ.
මා අවුරුදු 25දී විවාහ වුණා. සැමියා ගොවිතැන් කරනවා. මට දරුවන් 4දෙනෙක් සිටිනවා. වැඩිමහල් දුව 11වන ශ්‍රේණියේ අධ්‍යාපනය ලබනවා. අනෙකුත් ළමයිනුත් පාසල් යනවා. බාල පුතාගේ වයස අවුරුදු 2යි. ඔවුන් හොඳ අධ්‍යාපනයක් ලබා හොඳ රැකියාවක් ලබා ගත යුතුයි යන්න මගේ බලාපොරොත්තුවයි. හොඳ ජීවිතයක් ගත කරන්න ඕනේ.
අපි මුලින්ම 1990 වසරේදී මඩු ප‍්‍රදේශයට අවතැන්වී ගියා. මාස කීපයකට පසු ගමට ආවා. නැවතත් අවතැන්වී විවිධ ස්ථානවලට ගොස් ජීවත් වුණා.
2007 වසරේ විශාල අවතැන්වීමක් හා දේපළ විනාශයක් සිදුවුණා. එම කාල වකවානුවේ අපි නොයෙකුත් දුක් කරදරවලට මුහුණ දුන්නා. 2007 වසරේ අවතැන්වී පෙරියමඩු, කූරායි, නාච්ච්කුඩා, කෝනාවිල්, විෂ්වමඩු වැනි විවිධ ප‍්‍රදේශවල ජීවත් වුණා. අවසන් වරට සුතන්දිරම්පුරම් ඉරට්ටුමඩු හරහා රජයේ පාලන ප‍්‍රදේශයට පැමිණියා. යුද්ධයේදී අවතැන්වීම හේතුවෙන් අපගේ දේපළ සියල්ලම අහිමි වුණා. නැවත ඒවා අපි ටික ටික එක්රැස් කරමින් සිටිනවා.
2006 වසරේදී කොටි සංවිධානය මගේ සැමියා සැකපිට අත් අඩංගුවට ගත්තා. නැවත 2007 වසරේ අපි අවතැන් වුණා. මගේ දෙමව්පියන් සමඟ මගේ දරුවන් රැගෙන අවතැන්වී ගියා. නැවත 2008 වසරේදී සැමියාව මුදා හැරියා. ඉන්පසු ඔහු අප සමඟ සිටියා.
යුද්ධය පැවති කාල වකවානුවේදී අප ආහාර, ඇඳුම් පැළඳුම් කිසිවකින් තොරව ඉතා දුක්ඛිත ජීවිතයක් ගත කළා. කෙසේ හෝ මේ වටපිටාව තුළ මගේ දරුවන් හදා ගත්තා. සැමියාට නිසි ලෙස රැකියාවක් ලැබෙන්නෙත් නැහැ. 2009 වසරේ පෙබරවාරි මාසයේ සුතන්දිරම්පුර හරහා හමුදා පාලන ප‍්‍රදේශයට ආවා. හමුදාව අපව රැගෙන ගොස් වව්නියාව කඳවුරේ රැදෙව්වා. එම අවස්ථාවේ මගේ වැඩිමහල් පුතා අසනීපයට පත්වුණා. අපි ඔහුව රෝහලට රැගෙන ගියා. නැවත එහි සිට මගේ පුතා රැගෙන නැන්දාගේ ගෙදරට පැමිණියා. සැමියා කඳවුරේම සිටියා.
2007 වසරේ යුද්ධයේදී මගේ වැඩමහල් දියණිය, දෙවෙනි දුව නැන්දම්මා සමඟ සිටියා. යුද්ධය නිසා පාර වැසුවා. මගේ බාල ළමයා පමණක් මා සමඟ සිටියා. අනෙකුත් දරුවන් අත්හැර යාමට සිදුවීම ගැන දැඩි සේ දුක් වුණා.
දරුවන් දෙදෙනො හැම විටම කල්පනා කරමින් සිටියා. නිසි ලෙස ආහාර ගත්තෙත් නැහැ. 2009 මාර්තු මාසයේදී මම ඔවුන් නැවත දැක්කා. වසර 2 1/2ක් පොඩි දරුවන්ගෙන් වෙන්වී සිටීම මට අමතක කරන්න බැරි සිදුවීමක්. කෙසේවෙතත්, අවසානයේදී මම මගේ දරුවන් දැක්කා. යුද්ධය සිදුවූ අවස්ථාවේ මා කවදා හෝ පණ පිටින් මගේ දරුවන් නැවත දැක ගත හැකි යැයි නොසිතුවෙමි.
අද වන තෙක් අප විඳි දුක ගැන සිතා කඳුළු හෙළනවා. අපට කුමක් කළ හැකිද? දෙමළ ජනතාව අද වන තෙක් විඳපු දුක් කන්දරාව ඇති. මින් පසුවත් අපි සැනසිල්ලේ කිසිම තර්ජනයකින් තොරව ජීවත් විය යුතුයි. දෙමළ ජනතාවගේ අභිලාසය එයයි.
මම කට්ටුක්කයි වැවේ පහළ ප‍්‍රදේශයේ සිටිනවා. එහි පවුල් 15ක් පදිංචි වී සිටිනවා. දීර්ඝ කාලයක් අපට විදුලි බලය නෑ. 2016 වසරේ 6වෙනි මාසයේ අවසානයේ අපට විදුලි බලය ලබා දුන්නා. මෙම ස්ථානයේ පදිංචි වී වසර 7කින් පසුවයි විදුලි බලය ලැබුණේ. ඒ වෙනකන් අපි කුප්පි ලාම්පුව තමයි පාචිච්චි කළේ. මගේ දරුවනුත් කුප්පි ලාම්පුවෙන් තමයි පාඩම් කෙරුවේ.
අපි ජීවත්වන මේ ප‍්‍රදේශයේ මාර්ග සම්පූර්ණයෙන් අබලන් තත්ත්වයකයි පවතින්නේ. බොරලු පාරවල් තමයි තිබෙන්නේ. වර්ෂා කාලයේ මේ මාර්ග පාවිච්චි කරන්න හැකියාවක් නැහැ. කට්ටුකරෙයි වැවේ වාන් දොරටු විවෘත කරන විට අපේ නිවසත් සම්පූර්ණයෙන් ජලයෙන් යටවෙනවා. දරුවන් තියාගෙන දුෂ්කර ජීවිතයක් තමයි අපි ගත කරන්නේ.
නිවාස යෝජනා ක‍්‍රමය ලබා දුන්නා. නිවාස අපි තනා ගත්තා. එම නිවසේ තමයි දැනට ජීවත් වෙන්නේ. යළි පදිංචි වීමෙන් පසු අපට රජයෙන් යම් මුදලක් හා ජීවනෝපාය සහනාධාර ලබා දුන්නා. එම මුදල් පාවිච්චි කරමින් අපි අපේ පවුල නඩත්තු කෙරුවා. ඉන් පසු මගේ සැමියා ණය මුදලක් ලබාගෙන ගොවිතැන් කටයුතුවල යෙදුණා. දැන් ඔහු ගොවිතැන් කරලා තමයි අපිව රැක බලා ගන්නේ. නමුත්, ගොවිතැනින් ලැබෙන ආදායම නිවසේ වියදමටත් දරුවන්ගේ අධ්‍යාපනයටත් ප‍්‍රමාණවත් නැහැ. අපි බොහෝ අමාරුවෙන් තමයි ලැබෙන ආදායමෙන් ජීවිතය සකසා ගෙන තිබෙන්නේ.
අපේ ගමේ බොහෝ අය වෘත්තීය වශයෙන් ගොවිතැනේ යෙදී සිටිනවා. නමුත්, ඒ අයගේ ආදායම පවුල නඩත්තු කිරීමට ප‍්‍රමාණවත් නැහැ. එම නිසා රැකියා උත්පාදනය කරන ආකාරයේ වැඩසටහන් ක‍්‍රියාත්මක කළ යුතුයි. විශේෂයෙන් කර්මාන්තශාලා ඉදි කොට තරුණ තරුණියන්ට රැකියා අවස්ථා ලබා දිය යුතු බව මා සිතනවා.
අපේ ගමට උදේ සවස පමණයි බස් සේවාවක් තිබෙන්නේ. ළමුන් පාසලට බස් එකෙන් තමයි යන්නේ. බස් රථය නොපැමිණෙන දවසට ඔවුන් පාසල් යන්නේ නැහැ. එම නිසා අප ගමට තිබෙන බස් සේවාවන් වැඩි කළ යුතුයි.
යුද්ධයට පෙර කොටි සංවිධානය ක්‍රියාත්මක වූ කාලයේ අප ඕනෑම වේලාවක කාන්තාවන් එක් රැස්වී ඕනෑ තැනකට යමින් එමින් සිටියා. දැන් සවස් වුණාට පසුව අපට පිටවී යාමට බියක් තියනවා. මෙම තත්ත්වය වෙනස් විය යුතුයි. අපි කිසිම බියකින් සැකයකින් තොරව එහෙ මෙහෙ යාමට නිදහසක් තිබිය යුතුයි. ළමයි පාසල් අවසන්වී නිවසට පැමිණෙන තෙක් අපි බලාගෙන ඉන්නවා.
අපේ ගමේ තරුණ තරුණියන් විරැකියාවෙන් පෙළෙනවා. එම අයට රැකියා අවස්ථා ලබාදිය යුතුයි. එලෙස රැකියා අවස්ථා ලබා දෙන්නේ නම් නීති විරෝධි ක්‍රියා අඩුවිය හැකිය.
ස්තුතියි.



CMP/MN/MW/VAK/04

பெயர்: தே. அந்தோனியா ஜோஜ்
முகவரி: மணல்மோட்டை, வட்டக்கண்டல், மன்னார்

நான் 1975ம் ஆண்டு மன்னாரில் பிறந்த நான் எனது பெற்றோர் மன்னார் பள்ளிமுனையில் இருந்தாங்க. பேந்து நாங்கள் மணல்மோட்டைக்கு வந்திட்டம். என்ட அப்பா கடற்தொழில் செய்தார். அம்மா வீட்டு வேலையினையே செய்து வந்தார்.

எனக்கு 4 சகோதரர்கள் ஒரு அக்காவும் மூன்று தம்பிகளுமாவர். நான் 5ஆம் வகுப்பு வரைக்கும் படிச்சனான். மேலும் படிக்க எனக்கு விருப்பமும் இல்லை. வீட்டுச் சூழலும் அப்பிடியா போயிட்டது. அப்படியே படிப்பை நிறுத்திப் போட்டு வீட்டையே நின்டு போட்டன். பேந்து அம்மாவோடை வேலைக்கு போக வௌிக்கிட்டன்.

என்ர மற்ற சகோதரர்களும் பெரிசாக படிக்கவில்லை. படிக்காததனால் நான் படுகிற கஸ்டத்தினை இப்பதான் நான் புரிஞ்சு கொள்ளுறன். அதனால் பிள்ளைகளை கஸ்டப்பட்டு படிக்கப் பழகினன். பிள்ளைகள் என்னைப் பாத்து கேட்பாங்க நீங்க படிச்சனிங்களா என்டு. பிள்ளைகளுக்கு நான் சொல்லுவன் நான் படுகிற கஸ்டத்தினை நீங்கள் படக்கூடாது என்றதுக்காகத்தன் சொல்லுறன் என்டு சொல்லுவன். எனவே எல்லோரும் படிக்க வேண்டும் படிச்சால்தான் சமூகத்தில் நல்லா இருக்கலாம்.

நான் 25 வயசில கல்யாணம் கட்டினனான். அவர் விவசாயம் செய்கிறார் எனக்கு4 பிள்ளைகள் மூத்தது பெண் பிள்ளை அவள் தரம் 11ம் ஆண்டு படிக்கிறா மற்ற பிள்ளைகளும் படிக்கினம். என்ர கடைசிப் பெடியனுக்கு 2 வயது. அவர்களை நல்லா படிப்பிக்கிறன். அவங்கள் நல்லா படிச்சு நல்ல தொழிலை பெற வேண்டும். அவங்கள் நல்லா இருக்க வேண்டும் என்பதுதான் என்ர விருப்பம்.

நாங்கள் இடம்பெயர்ந்தனாங்கள். முதல் இடப்பெயர்வு 1990ம் ஆண்டு மடுவுக்கு இடம்பெயர்ந்தோம். பேந்து சில மாதங்களில் மீண்டும் சொந்த இடத்திற்கு வந்தம். பேந்தும் இடம்பெயர்ந்திட்டம். இப்படி பல தடவைகள் இடம்பெயர்ந்துஎங்கட வாழ்க்கையினை நடத்திக் கொண்டு இருந்தம்.

பேந்து 2007ஆம் ஆண்டுதான் பெரிய இடப்பெயர்வையும் சொத்துக்கள் அழிவையும் கண்டம். அந்தக் காலப்பகுதியில் நாங்கள் பட்ட கஸ்டம் அதிகம். 2007ம் ஆண்டு இடம்பெயர்ந்து பெரியமடு, கூராய், நாச்சிக்குடா, கோணாவில் விசுவமடு என பல இடங்கள் இடம்பெயர்ந்து கடைசியாக இருட்டுமடு சுதந்திரபுரம் ஊடாக ஆமிட்ட வந்திட்டம். போரின் போது இடம்பெயர்வால் எங்கட சொத்துக்கள் எல்லாத்தையும் இழந்திட்டம். இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக சேத்துக் கொண்டு இருக்கிறன்.

2006ம் ஆண்டுகாலப்பகுதியில் என்ர அவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்திட்டாங்கள். இயக்கம் பேந்து2005ஆம் ஆண்டு இடப்பெயர்வும் வந்திட்டுது. என்ன செய்யிறது என்டே தெரியவில்லை. என் அம்மா , அப்பாவோடைதான் நான் என்ற பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு இடம்பெயர்ந்து போனன். பேந்து 2008ம் ஆண்டு காலப்பகுதியில் அவரை விட்டுட்டாங்கள். அதுக்கு பிறகுகடைசி வரைக்கும் அவர் என்னோடைதான் இருந்தார்.

போரின் போது நாங்கள் உணவு உடை எல்லாத்துக்கும் சரியான கஸ்டம். எல்லாத்தையும் சமாளித்து பிள்ளைகளை வளத்திட்டன். அவருக்கு வேலையும் சரியாக கிடைக்காது. ஒரு மாதிரி பிள்ளைகளை வளத்திட்டன். 2009ம் ஆண்டு 2ம் மாதம் சுதந்திரபுரத்தின்ஊடாக ஆமிட்ட வந்திட்டம். ஆமி உங்கள கூட்டிக் கொண்டு போய் வவுனியா முகாமிலை விட்டாங்க. அப்போதுஎ்ர பெரியவக்குசரியான வருத்தம். வைத்தியசாலைக்குகூட்டிக் கொண்டு போனேன். பேந்து அங்கயிருந்து தெரியாம என்ர மாமி வீட்ட வந்திட்டன். என்ர மகனையும் கூட்டிக் கொண்டு என்ர அவர் முகாமிக்குள்ள இருந்தார்.

2007ம் ஆண்டு சண்டையின் போது என்ர மூத்த பெண் பிள்ளையும் இரண்டாவது பெண் பிள்ளையும் அவரின் அம்மாவுடன் தான் இருந்தாங்க. சண்டையின் போது பாதை பூட்டிட்டாங்க. என்ர கடைசிபிள்ளை மட்டும்தான் என்னோடதான் இருந்தார். ஏனைய என்ர பிள்ளைகளையும் விட்டுட்டு போனது எனக்கு வேதனையினைத் தந்தது.

விட்டுட்டுப் போன இரண்டு பிள்ளைகளும் சின்னன் அவங்களின் நிலையினைப் பற்றிதான் எப்பவும் யோசிப்பன். அதுவும் பெண் பிள்ளை எப்பவும் அவங்கடை யோசினையாகவும் அழுகையும் தான். ஒழுங்கா சாப்பிட்டதும் இல்லை. 2009ம் ஆண்டு 3ம் மாதமளவில்தான் அவர்களினை பார்த்தனான். இரண்டரை வருடங்களாக சின்ன பிள்ளைகளை விட்டுப் பிரிந்து என்னால மறக்க முடியவில்லை. எப்பிடியோ ஒரு மாதிரி என்ர பிள்ளைகளை கண்டதே காணும். நான் சண்டைக்கிள்ள இருக்கும் போது உயிரோடு போவன் என்டும் என்ர பிள்ளைகளுடன் சேருவன் என்டும் நினைக்கவே இல்லை.

இன்டைக்கும் நாங்கள் பட்ட கஷ்டத்தினை நினைச்சால் அழுகைதான் வரும். என்னதான் செய்வது தமிழ் மக்கள் இவ்வளவு காலமும் பட்ட துன்பங்களும் துயரமும் போதும். எனியாவது நிம்மதியாக நாங்கள் எந்தவிதமான அச்சுறுத்தல்களும் இல்லாம நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களாகிய எங்கட விருப்பம்.

நான் கட்டுக்கரைக்குளத்துக்கு கீழ்ப்பகுதியில் இருக்கிறன். அங்க பதினைந்து குடும்பங்கள் இருக்குது. நீண்ட காலமாக கரண்டு இல்லை. 2016ம் ஆண்டு 6ம் மாதம் கடைசிப் பகுதியில் தான் எங்களுக்கு கரண்ட் தந்தாங்க. கீழ் குடிமயர்ந்து 7 வருடங்கள் ஆகிய நிலையில்தான் கரண்ட் தந்தாங்க். அதுவரைக்கும் மண்ணெண்ணய் விளக்கிலதான் இருந்தனாங்க. என்ர பிள்ளைகளும் மண்ணெண்ணய் விளக்கினைப் பயன்படுத்தி தான் படிச்சாங்க.

நாங்கள் இருக்கிற இந்தப்பதியில வீதி என்பது சீரில்லை. மண் றோட்டு தான். மழைக்காலங்களில் பயன்படுத்தவே முடியாது. கட்டுக்கரைகுளத்தினால வான் பாஞ்சுதென்டால் வீடெல்லாம் தண்ணிதான் வரும் றோட்டால போகவும் முடீயாது. பிள்ளைகளை வைத்துக் கொண்டு சரியான கஸ்டம்தான் இப்பவும் பட்டுக்கொண்டிருக்கம்.

வீட்டுத்திட்டம் எல்லாம் தந்தாங்க. நாங்க கட்டி முடிச்சு அந்த வீட்டிலதான் இருக்கிறம். மீள்குடியமர்த்தவுடன் எங்களுக்கு அரசாங்கத்தால காசு எல்லாம் தந்தாங்க. வாழ்வாதார உதவி எல்லாம் தந்தாங்க. அந்தக் காசுகளை வைத்து குடும்பத்தினை நடத்திக் கொண்டு இருந்தம். பேந்து கடன் எடுத்துஎன்ர கணவர் விவசாயம் செய்ய வௌிக்கிட்டார். இப்ப விவசாயம் செய்துதான் எங்கள பார்த்துவாறார். விவசாயம் செய்து கிடைக்கிற வருமானம் பிள்ளைகளின் படிப்புச் செலவு ஏனைய செலவுக்கு காணாது. ஒரு மாதிரி கிடைக்கிற வருமானத்தினைக் கொண்டு சமாளித்து வாழ்க்கையினை நடத்திக் கொண்டுஇருக்கிறம்.

எங்கட கிராமத்தில அதிகளவானவர்கள் விவசாயம்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் வருமானம் குடும்பத்தினை நடத்த போதாது. எனவே அரசாங்கம் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் வேலைத்திட்டங்களை செய்ய வேண்டும். குறிப்பாக தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத் தந்தால் நல்லம் என்டு நினைக்கிறன்.

எங்கட கிராமத்தில குறித்த நேரத்துக்குஅதாவது காலையும், மாலையும்தான் பஸ் ஓடும் பிள்ளைகள் பாடசாலைக்குபஸ்சில தான் போய் வருவாங்க. பஸ்சில வேலைக்கு வராட்டி பள்ளிக் கூடத்துக்கும் பிள்ளைகள் போகமாட்டாங்க. எனவே எங்கட கிராமத்தில பஸ் சேவையினை அதிகரிக்க வேண்டும்.

போருக்குமுன்னம் இயக்கம் இருக்கேக்க நாங்கள் எந்த நேரமும் பெண்கள் கூடி நடமாடித் திரிந்தனாங்கள். இன்றைக்கு பொழுதுபட்டாலே பயமாகத் தான் இருக்கு. இந்த நிலைமை மாற வேண்டும். நாங்கள் எந்தப் பயப்பீதியும் இல்லாமல் நடமாட வேண்டும். பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்குவிட்டுட்டு வரும் வரையும் பார்த்துக் கொண்டுதான் இருப்பன்.

எங்கட கிராமத்திலை இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறாங்க. அவங்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தா சட்டவிரோத செயற்பாடுகளினைக் குறைக்கலாம்.

எனவே இப்படி எங்கட சோகக்கதை சொந்தக் கதைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.







A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License