I joined the movement...

The story of a family that has displaced many times due to war.


මම බෑදුනා ඒ බලවේගයට

යුද්ධය හේතුවෙන් බොහෝ වතාවක් අවතැන් වූ පවුලක කථාව.


நான் இயக்கத்தில் சேர்ந்தேன்

போரினால் பல தடவைகள் இடம்பெயர்வை சந்தித்த குடும்பத்தின் கதை.



CMP/MN/MW/SAL/03

Name : P.Nilogan
Address : Salampan, Aandankulam

I was born in 1984 at Adampan Hospital and live in Salampan village. My father is a Carpenter. My mother is engaged in domestic work. I have a brother and a sister. I got my Primary education at R.C Maha Vidyalaya. I could not continue my education and helped my father in agriculture.

When the war began in 1999 between army and movement, we displaced to Madu. Later in 2002, when the war receded, we returned to our native place Salampan and lived peacefully. Nevertheless, the war started again and we had to displace.

However, when the war intensified, the liberation tigers joined one person per house with their movement. As such, in 2006, I joined the movement willingly.

Then the war went worse and people displaced in large amount to Vanni region. There, the basic facilities for them were inadequate. My parents too displaced and suffered a lot. They experienced the impacts of the war and destruction of their properties. As I was in the movement, I could not help them.

I was injured in the war in 2008. Though, I was getting treatment at Mullaitivu hospital, due to the war it became difficult and the movement transferred me to their hospital.

Owing to the war in 2009, my parents displaced to various places and finally they came to Mulliwaikkal. One day they visited me and seeing my body condition, they started crying. Later, my father took me to Pulmoddai in the Trincomalee district. From there, I was sent to Mannar Hospital. I got medical treatment there for one year. In May 2009, my mother came into the army controlled territory. On the way, shells were fired and we, up to now, do not know what had happened to my sister. Mother came to army control and stayed in the camp. Later, through relatives, my mother came to know that I was at hospital. She contacted me and came out of the camp with the help of relatives.

In the latter part of 2010, we were resettled in our own village. That time en, I was getting treatment at Mannar hospital. I returned home by 2011. Nevertheless, I often went to hospital for treatment.

But, I was not curing well and I was transferred to Colombo National Hospital. Although, I was treated for nearly nine months there, my physical condition did not recover completely. Still, my body cannot function below the chest.

Now, I am unable to perform all my work. My parents look after me as a small child. Knowing my condition, various organizations help me.

My father is a carpenter and sees to my needs and looks after my mother also. He has reached 62 year of age. Though, he often gets ill, he takes care of us.
Most of the people in my community are farmers. They depend on this income for their livelihood. I was affected by the shell attack in Manalaru area during the war in 2008 and as my body does not function below the chest, I do not have any feelings or desire. My life moves within limits. I can never go to places I like.

If I need to go anywhere, I have to accompany someone. I do not like to go anywhere. So, mostly I stay at home. My friend come to my home and freely chat with me. They take me to the Saalmpan Tank which is close to my house. While enjoying the natural beauty of the place, I chat with friends. It would be nice to the mind.

I go to hospital for medical treatment monthly. I need to spend Rs. 8,000/= per month for medicine. My father provides me this amount through his income. Sometimes, my relatives also help me.

When I was young, I imagined how I should live in the society, How I should take care of my parents and brother. All hopes have gone astray. Losing my own sister in the final war, gives much pain to the mind. I had only one sister and still my parents and I do not know what had happened to her.

As my physical condition is wore and I am unable to move around, I do not think about the society. I think only about my life.

My future expectation is that the Tamil community should be provided with permanent solution. Their problems should be solved. They should live peacefully in the society. The present government says that they would find permanent solution to the Tamil community. I do not know to what extent it has been given.

The Tamil community should live with freedom and self-respect. My desire is that the world should contribute to fulfill this.

Thanks.
P.Nilojan
Salampan
Aandankulam
Mannar.











නම : පී. නිලෝජන්
ලිපිනය : සාලම්බන්, ආන්ඩාන්කුලම්.

1984 වසරේ සාලම්බන් රෝහලේ ඉපදුණු මම සාලම්බන් ග‍්‍රාමයේ ජීවත් වෙනවා. මගේ පියා වඩු කාර්මිකයෙක්. මව ගෘහණියක්. මට අයියයි, අක්කයි. සහෝදරවරුන් දෙදෙනෙක් සිටිනවා. මූලික අධ්‍යාපනය ආන්ඩාන්කුලම් රෝමානු කතෝලික මහා විද්‍යාලයෙන් ලබා ගත්තා. වැඩිදුර අධ්‍යාපනයක් ලබා ගැනීමට නොහැකි වුණා. දැන් පියාගේ ගොවිතැන් කටයුතුවලට, ඔහුට උදව් වෙනවා.

1999 වසරේ හමුදාව හා කොටි සංවිධානය අතර යුද්ධය ආරම්භ වුණා. එම තත්ත්වය තුළ අප අවතැන්වී මඩු ප‍්‍රදේශයට ගොස් ජීවත් වුණා. පසුව 2002 වසරේ සටන් විරාමය පැවැති කාලයේ අපේ ගම වන සාලම්බන් ග‍්‍රාමයට පැමිණියා. කිසිම ප‍්‍රශ්නයකින් තොරව ජීවත් වුණා. නමුත්, නැවතත් යුද්ධය ඇවිලුණු නිසා අවතැන්වීමට අපට සිදුවුණා.

ඉතා දරුණු ලෙස යුද්ධය පැවතුණු කාල වක වානුවේදී එක පවුලට එක්කෙනා බැගින් විමුක්ති කොටි සංවිධානයට ඔවුන් බඳවා ගත්තා. ඒ අනුව මමත් මගේ කැමැත්තෙන් සංවිධානයේ බල කිරීමෙන් එම සංවිධානයට 2006 වසරේ බැඳුණා.

ඉන්පසු දරුණු යුද්ධයක් පැවතුණා. මිනිස්සු වැඩි වශයෙන් අවතැන්වී වන්නි ප‍්‍රදේශයට ගියා. එහි ඔවුන්ට මූලික පහසුකම් කිසිවක් තිබුණේ නැහැ. මගේ දෙමව්පියොත් අවතැන්වී නොයෙක් දුක් කරදරවලට මුහුණ දුන්නා. යුද්ධය හේතුවෙන් ඔවුන් විවිධ ස්ථානවල අවතැන්වී ජීවත් වුණු අතර ඔවුන්ට තමන්ගේ දේපලද අහිමි වුණා. මම සංවිධානයේ සිටි නිසා ඔවුන්ට කිසිවක් කිරීමට නොහැකි වුණා.

2008 අගෝස්තු මස සිදුවූ යුද්ධයේදි මා තුවාල ලැබුවා. මුලතිව් රෝහලේ ප‍්‍රතිකාර ලබා ගත්තා. නමුත්, යුද්ධය අඛණ්ඩව පැවතුණ නිසා වැඩිදුර ප‍්‍රතිකාර ලබා ගැනීමට නොහැකි වුණා. කොටි සංවිධානය තමන්ගේ රෝහල් වෙත මාව රැගෙන ගියා.

2009 යුද්ධයේදී මගේ දෙමාපියන් විවිධ ස්ථානවල අවතැන්වී ජීවත්වීමෙන් පසු අවසානයේදී මුල්ලිවයික්කාල් ප‍්‍රදේශයට පැමිණියා. දවසක් ඔවුන් මාව හමුවීමට ආවා. මගේ ශරීරයේ තත්ත්වය දෙස බලා ඔවුන් හඬා වැළපුණා. පසුව පියා මාව නැවේ රැගෙන ආවා. ත‍්‍රිකුණාමලයේ පුල්මුඩ්ඩේ ප‍්‍රදේශයේ නැවෙන් බස්සවා මන්නාරම රෝහලට යැව්වා. එහි වසරක් පමණ කාලයක් ප‍්‍රතිකාර ලබා ගත්තා. මගේ මවත් 2009 මැයි මාසයේ හමුදා පාලන ප‍්‍රදේශයට ආවා. ඔවුන් එන විට ෂෙල් ප‍්‍රහාරයක් එල්ල වුණා. ඉන්පසු අපේ අක්කාට සිදුවුණේ කුමක් දැයි අපි තවමත් දන්නේ නැහැ. මව ඥාතීන් සමඟ හමුදා පාලන ප‍්‍රදේශයට පැමිණ කඳවුරක සිටියා. පසුව මා රෝහල් ගතව සිටින බව නෑදෑයන්ගෙන් දැන ගෙන අපිව එක්ක සම්බන්ධ වුණා. කඳවුරේ සිට ඥාතීන්ගේ උදව්වෙන් පිටට ආවා.

2010 වසරේ අවසන් භාගයේදී අපගේ මුල් ගමේ අපි නැවතත් පදංචි කළා. මා එවිට මන්නාරම රෝහලේ ප‍්‍රතිකාර ලබමින් සිටියා. 2011 වසරේ නිවසට පැමිණියා. නමුත්, දිගටම රෝහලට ගොස් ප‍්‍රතිකාර ලබා ගනිමින් සිටියා.

නමුත්, මගේ සෞඛ්‍ය තත්ත්වයේ වර්ධනය නොවීම හේතුවෙන් මා කොළඹ රෝහල වෙත මාරු කළා. එහි මාස 9 ක් පමණ ප‍්‍රතිකාර ලබා ගත්තා. සම්පූර්ණයෙන් මා සුවපත් වුණේ නැහැ. දැන් පපුව ප‍්‍රදේශයට පහළ ප‍්‍රදේශය අක‍්‍රියව තිබෙනවා.

දැන් මගේ කටයුතු ස්වාධීනව කර ගැනීමට හැකියාවක් නැහැ. මගේ දෙමව්පියන් මාව ළදරුවෙක් වාගේ බලා ගන්නවා. විවිධ සංවිධාන මගේ මේ තත්ත්වය බලා මට යම් යම් උදව් ලබා දෙනවා.
මගේ පියා වඩු කර්මාන්තයේ යෙදී ලබා ගන්නා ආදායමෙන් මගේ අවශ්‍යතා ඉටු කරනවා. ඔහුගේ වයස අවුරුදු 62 යි. ඔහුත් බොහෝ අවස්ථාවල අසනීප වුණත් අපිව හොඳට රැක බලා ගන්නවා.

අපේ ප‍්‍රජාවගෙන් බොහෝ දෙනෙක් කෘෂිකර්මාන්තයේ යෙදී සිටිනවා. එම ආදායමෙන් තමයි ඔවුන් ජීවත් වෙන්නේ. යුද්ධයේදී 2008 වසරේදී වැලිඔයේ සිදුවූ ෂෙල් ප‍්‍රහාරයකින් තුවාල ලැබූ නිසා මගේ ශරීරයේ පහළ කොටස අක්‍රීය තත්ත්වයක තිබෙනවා. මට කිසිම ආශාවන් හෝ බාලාපොරොත්තු නැහැ. මගේ ජීවිතය ඉතා කෙටි චක්‍රයක තුළයි සිදුවන්නේ. මා කැමති ස්ථානවලට යාමට නොහැකියි.

මා යම් ස්ථානයකට යා යුතු නම් කවුරු හරි මා සමඟ පැමිණිය යුතුයි. එම නිසා මම යන්නට කැමැත්තක් දක්වන්නේ නැහැ. නිවසට කොටු වෙලා තමයි ජීවත් වෙන්නේ. මගේ මිතුරන් නිවසට පැමිණෙනවා. මාව සනසනවා. නිවස අසල පිහිටි සාලම්බන් වැවට එක්ක යනවා. එහි ස්වභාවික සෞන්දර්ය නරඹා අපි සතුටු වෙනවා. මිතුරන් සමඟ කතා කිරීම සිතට සැනසිල්ලක් ලබා දෙනවා.

ප‍්‍රතිකාර සඳහා මාසිකව රෝහල වෙත යනවා. මාසිකව රුපියල් 8,000ක වෛද්‍ය වියදම් කළ යුතුව තිබෙනවා. පියා වැඩ කරලා උපයන මුදලින් තමයි මේ මුදල මට ලබා දෙන්නේ. සමහර අවස්ථාවල ඥාතීන් උදව් කරනවා.

මගේ කුඩා කාලයේ මගේ අනාගත ජීවිතය ගැනත්, මගේ දෙමාපියන්, සහෝදර සහෝදරියන්ට සලකන ආකාරය පිළිබඳවත් සිහින මවමින් සිටියා. දැන් එම සිහින සියල්ල පුස් සිහිනයක් සේ පත්වෙලා තිබෙනවා. මේ යුද්ධයේදී මගේ සහෝදරිය මට අහිමි වුණා. ඒ ගැන මම බොහෝ සේ දුක් වෙනවා. මට හිටියේ එක සහෝදරියයි. ඇයට සිදුවූයේ කුමක් දැයි අද වන තෙක් අපි දන්නේ නෑ. මගේ දෙමව්පියන් හා මා, ඇය ගැන සිතා සදාකල් දුක් වෙනවා.

මගේ සෞඛ්‍ය තත්ත්වය ඉතා දුර්වල නිසාත්, ආබාධිත තත්ත්වය නිසාත් මම සමාජය ගැන සිතන්නේ නැහැ. මගේ ජීවිතය ගැන පමණක් සිතා ජීවත් වෙනවා.

අනාගත බලාපොරොත්තුව වෙන්නේ දෙමළ ජනතාවට ස්ථිර විසඳුමක් ලබා දී, ඔවුන්ගේ ප‍්‍රශ්න විසඳිය යුතුයි යන්නයි. ඔවුන් සමාජයේ සාමකාමීව ජීවත්වන තත්ත්වයක් උදා විය යුතුයි. වත්මන් රජය දෙමළ ජනතාවට ස්ථිර විසඳුමක් ලබාදෙන බව කියනවා. එය කෙතරම් දුරකට සාර්ථක වනවා දැයි අපි දන්නේ නැහැ.

දෙමළ ජනතාව සියලූම අයිතිවාසිකම් සහිතව නිදහසින් හා ආත්මාභිමනයෙන් ජීවත් විය යුතුයි. ඒ සඳහා ලෝකයේ අනෙකුත් රටවල් තමන්ගේ දායකත්වය ලබාදිය යුතු යන්නයි මගේ කැමැත්ත.
ස්තුතියි.



CMP/MN/MW/SAL/03

பெயர்: பே. நிலோஜன்
முகவரி: சாளம்பன், ஆண்டான்குளம்

1984ஆம் ஆண்டு அடம்பன் வைத்தியசாலையில் பிறந்த நான் சாளாம்பன் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றேன். எனது தந்தை யார் தச்சு வேலை செய்து வருவதுடன் தாய் வீட்டு அணியினை மேற்கொண்டு வருகின்றார். எனக்கு இரண்டுசகோதரர்கள் ஒருஅண்ணாவும், அக்காவும் ஆகும். எனது ஆரம்பக்கல்வியினை ஆண்டான்குளம் றோ.க மகா வித்தியாலத்தில் கல்வி கற்று வந்தேன். தொடர்ந்து படிக்க முடியவில்லை. அப்பாக்கு உறுதுணையாக நான் விவசாயம் செய்து வந்தேன்.

1990ஆம் ஆண்டு இராணுவத்திற்கும் ஆமிக்கும் போர் ஆரம்பமானதால் இடம்பெயர்ந்து மடுவில் இருந்து வந்தோம். பின்னர் 2002ஆம் ஆண்டு மீண்டும் போர் ஓய்வுக்கு வர எமது சொந்த இடமாகிய சாளம்பன் கிராமத்தில் குடியிருந்து எமது வாழ்க்கையினை இனிதே நடத்தி வந்தோம். ஆனாலும் போர் மீண்டும் ஆரம்பமாகியதால் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆயினும் போர் உக்கிரமாக இடம்பெற்ற காலக்கட்டத்தில் வீட்டுக்கொருவரினை விடுதலைப் புலிகள் தமது இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர். அதற்கு ஏற்ப நான் எனது சம்மதத்துடன் கட்டாயத்தின் பேரில் இயக்கத்தில் இணைந்து கொண்டேன். 2006ஆம் ஆண்டு.

பின்னர் போர் உக்கிரமாக நடைபெற்றதனால் மக்கள் அதிகளவாக இடம்பெயர்ந்து வன்னிப் பகுதிக்குள் சென்றனர். அங்குஅவர்களுக்கு அடிப்படை வசதிகள் போதியதாக இருக்கவில்லை. எவை பெற்றோரும் இடம்பெயர்ந்து பல துன்பங்களைப் பட்டு இருந்தனர்.

எனது பெற்றோர் போரின் தாக்கத்தினை பல இடப்பெயர்வுகளினையும் சொத்தழிவினையும் அனுபவித்து வந்தனர். நான் இயக்கத்தில் இருந்தனால் அவர்களுக்கு எந்த விதமான உதவிகளையும் என்னால் செய்ய முடியவில்லை.

2008ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது நான் காயப்பட்டேன். முல்லைத்தீவு வைத்தியசாலையில் மருத்துவம் பெற்றுவந்த போதும் போரின் தாக்கத்தினால் தொடர்ந்து மருத்துவம் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் என்னை இயக்கம் தங்களின் வைத்தியசாலைக்கு என்னை மாற்றினார்கள்.

2009ஆம் ஆண்டு யுத்தத்தினால் எனது பெற்றோர் பல இடங்களில் இடம்பெயர்ந்து இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வந்தனர். ஒருநாள் என்னை பார்க்க வந்தனர். என் உடம்பின் நிலை கண்டு அழுது புலம்பினர். பின்னர் அப்பா என்னை கூட்டிக் கொண்டு கப்பலில் வந்தார். எங்களை திருகோணமலை புல்மோட்டையில் இறக்கி அங்கிருந்து மன்னார் வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள். அங்குஒரு வருட காலமாக மருத்துவம் பெற்றிருந்து வந்தேன். எனது தாயும் அக்காவும் 2009ஆம் ஆண்டு 5ஆம் மாதம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தார்கள். வரும் போது செல் அடித்ததனால் இதுவரைக்கும் எனது அக்காவுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அம்மா உறவினர்களுடன் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்து முகாமில் இருந்தார். பின்னர் நான் வைத்தியசாலையில் இருப்பது உறவினர் மூலமாக அறிந்து எங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி முகாமில் இருந்து உறவினர் மூலமாக வௌியில் வந்தார்.

2010ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் எமது சொந்தக் கிராமத்தில் மீள்குடியமர்த்தினார்கள். நான் அப்போது மன்னார் வைத்தியசாலையில் மருத்துவம் பெற்று வந்தேன். பின்னர் 2011ஆம் ஆண்டளவில் வீட்டுக்குவந்தேன். ஆனாலும் அடிக்கடி வைத்தியசாலைக்கு சென்று மருத்துவ வசதிகளைப் பெற்று வந்தேன்.

ஆயினும் எனது உடல்நிலை தேறிவருவது குறைவாகவே இருந்ததனால் என்னை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றினார்கள். அங்கு 9 மாதம் அளவில் மருத்துவம் பெற்று வந்த போதும் எனது உடல்நிலை முழுமையாக சீரான நிலைக்கு வரவில்லை. தற்போதும் நெஞ்சுப் பகுதிக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் இருந்து வருகின்றேன்.

தற்போது எனது வேலைகள் அனைத்தையும் என்னால் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகிறேன். எனதுபெற்றோர் தான் சிறு குழந்தையினால் போல் என்னைப் பராமரித்து வருகின்றனர். எவை இந்த நிலைமையினைப் பார்த்து பல நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன.

எனது தந்தை தச்சு வேலை செய்தே எனது தேவைகளையும் எனதுதந்தையினையும் பார்த்து வருகின்றார். அவருக்கும் 62 வயது ஆகின்றது. ஆயினும் அவருக்கும் அடிக்கடி வருத்தம் ஏற்படுகின்ற நிலையிலும் எம்மை பார்த்து வருகின்றார்.

எனது சமூகத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தினையே செய்து வருகின்றனர். அந்த வருமானத்தினை நம்பியே தமது வாழ்க்கையினை நடத்தி வருகின்றனர்.

போரின் போது 2008ஆம் ஆண்டு மணலாற்றுப் பகுதியில் இடம்பெற்ற செல் தாக்குதலின் போது காயப்பட்டதனால் எனது உடல் நெஞ்சுப் பகுதிக்க கீழ் இயங்காத நிலையில் உள்ளதால் எனக்குஎந்த ஆசைகளும் விருப்பங்களும் இல்லை. எனது வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்துக்குள்யேயே இருக்கிறது. என்னால் விரும்பிய இடத்துக்கு சென்று வரவே முடியாத நிலைக்கு உள்ளேன்.

நான் எங்கயும் போக வேணும் என்றால் யாருடனும் சேர்ந்தே போக வேண்டியுள்ளதனால் நான் எங்கயும் போக விரும்புவது இல்லை. ஆதலினால் நானும் எனது வீடும் என்றுதான் இருக்கிறேன். எனது நண்பர்கள் எனது வீட்டுக்கு வருவார்கள். என்னுடன் ஆறுதலாக கதைப்பார்கள். எனது வீட்டுக்கு அருகில் உள்ள சாளம்பன் குளத்துக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போவார்கள். அங்கு இயற்கை அழகை ரசித்து நண்பர்களுடன் கதைப்பன். அப்போது மனதுக்குஇனிமையாக இருக்கும்.

எனது வைத்திய தேவைக்காக மாதாந்தம் வைத்தியசாலைக்கு சென்று வருவேன். மாதாந்தம் மருத்துவத் தேவைக்காக 2000 ரூபாய் செலவு செய்ய வேண்டி ஏற்படும் இதற்கான காசினை கூடுதலாக அப்பா வேலைக்குப் போய் உழைத்தே தரவேண்டியுள்ளது. சில வேளைகளில் உறவினர்களும் வருவார்கள்.

நான் சிறுவயதில் இருக்கும் போது நான் எப்படி சமூகத்தில் இருக்க வேண்டும் எனது பெற்றோரை மற்றும் சகோதரர்களை எல்லாம் எப்படி வைத்திருக்க வேண்டும் என மனக் கோட்டை கட்டியிருந்தேன். அந்த மனக்கோட்டை மணல் கோட்டை ஆகிவிட்டது. இறுதி யுத்தத்தின் போது என உடன்பிறப்பாகிய தங்கையினையும் இழந்து நிற்பது மன வேதனையினையே தருகின்றது. எனக்கு ஒரு சகோதரி அவளுக்கு என்ன நடந்தது என்று இன்றும் தெரியாத நிலையினிலே எனதுதாய் தந்தையும் நானும் ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்.

எனது உடல் நிலை மோசமாகவும், என்னால் நடமாட முடியாத நிலையில் உள்ளதனால் நான் சமூகத்தினைப் பற்றி நினைப்பதில்லை. எனது வாழ்க்கை மட்டுதான் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

எதிர்காலத்தில் எனது எதிர்பார்ப்பாக உள்ளது. என்னவென்றால் தமிழ் மக்களுக்கு நிரந்தமான தீர்வு கிடைக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படல் வேண்டும். அவர்கள் நிம்மதியாக சமூகத்தில் வாழ வேண்டும். தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என கூறி வருகின்றது. அது எவ்வளவு தூரம் வழங்கப்பட்டிருக்கின்றது என்றுதெரியவில்லை.

தமிழ் மக்கள் சகல உரிமைகளுடன் சுதந்திரமாக சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் அதற்கு உலக நாடுகள் தங்களின் பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக உள்ளது.

நன்றி.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License