War started again

The woman says about the continuity of the conflict period


යුද්ධය නැවතත් ආරම්භ විය

සටන් බිමේ අඛන්ඩතාවය ගැන කාන්තාව කියයි.


மீண்டும் யுத்தம் தொடங்கியது

தொடர்ச்சியாக காணப்பட்ட போர்ச்சூழல் பற்றி பெண்ணொருவர் கூறுகிறார்.



CMP/MN/MW/KUV/01

நீ மேரி ஜெசிந்தா
குருவில் வட்டக்கண்டல்
மன்னார்

நான் வவுனியா பெரிய நொச்சிக்குளம் கிராமத்தில் 1970ம் ஆண்டுபிறந்தேன். எனதுஅப்பா ஒர்விவசாயி எனக்குநான்குதம்பிமார் இருக்கின்றார்கள. எனது அம்மா வீட்டை பார்ப்பதுடன் கூலி வேலை செய்கிறார். பின்னர் மடுவில் இருந்தோம்.

1985ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மன்னார்பாடசாலைகளில் இடம்பெயர்ந்து வந்தோம். நான் இருந்த இடம் சிங்கள மக்களின் எல்லைப் பகுதியாக இருந்ததன் காரணமாக சில வன்செயல்கள் இடம்பெறும். அங்கிகிருந்து முழு பொதுமக்களும் இடம்பெயர்ந்து வந்தோம்.

இன்னொரு மாதங்களின் பின்பு பேசாலை பாடசாலை ஒன்றுக்கு மாற்றப்பட்டோம். அதற்குபின்னர் மன்னார்பகுதியில் அங்கிருந்து சென்ற குடும்பங்களின் வீடுகளில் தங்கியிருந்தோம்.

1987ம் ஆண்டு எமது அயலூரான அரிப்பிற்கு சென்றோம். அங்கு 1990ம் ஆண்டுவரை எங்களுடைய தெரிந்த நபர்களின் வீடுகளில் இருந்தோம். எமது ஐயா விவசாயம் தெரிந்தவர். தம்பி ஆட்களோடு சேர்ந்து தொழில் செய்ய தொடங்கினார்.

1990ம் ஆண்டு மீண்டும் சிறியகுளம் சென்றோம். அங்கு ஒரு தம்பி இயக்கத்திற்கு சென்றுவிட்டான். மீண்டும் 1990ம் ஆண்டு பிரச்சினையுடன் மடுவில் ஒர் வீட்டில் 1994ம் ஆண்டு மட்டும் அங்கிருந்தோம்.

அதன் பின்னர் தம்பி இயக்கத்தில் இணைந்ததன் காரணமாக எமது வாழ்வாதாரத்திற்காக 5 பசு மாடுகள் தந்தார்கள். பின்னர் அதைக் கொண்டு இடம்பெயர்ந்து பிரம்மாந்துறையில் இருந்தோம். அதே நேரம் எனது தம்பி ஆட்கள் கட்டுக்கரைக் குளத்தில் தொழில் செய்தார்கள்.

1995ம் ஆண்டு எனக்குபேச்சு திருமணம் மூலம் குருவில் வட்டக்கண்டலில் திருமணம் நடைபெற்றது. எனது கணவருக்கு தாய்,தந்தை இல்லை. தமக்கையுடன் இருந்தார். அதன் காரணமாக அவர்கள் எங்களுடன் வந்து விட்டார்.

1996ம் ஆண்டு எனக்கு ஒரு மகன் பிறந்தான். 1997ம் ஆண்டு இடம்பெயர்ந்து மாட்டு வண்டியில் மடுவிற்கு எனது குழந்தையுடன் சென்றோம்.

அங்கு தரப்பால்கள் மூலம் கொட்டில் கட்டி இருந்தோம். எனது இரண்டாவதுமகனும் 1997 கடைசியில் அந்த கொட்டிலில் தான் பிறந்தான்.

அந்தக் கடையில் 1996ம் ஆண்டு எனது தம்பி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அவரின் உடம்பு கூட கிடைக்கவில்லை.

1997இல் அங்கிருந்து அடிக்கடி வந்து வந்து செல்வோரில், 1998இல் மீண்டும் யுத்தம் தொடங்கியது 1999இல் மீண்டும் மடுவிற்கு சென்றோம். மீண்டும் 2002இல் இங்கு வந்தோம். ஓர் 5 வருடங்களுக்கு சந்தோசமாக இருந்தோம் எனது கணவன் குளத்தில் மீன்பிடிப்பதும் விவசாயம் செய்துவந்தார்.

மேலும் எனக்கு 2000ம் ஆண்டுபெண் பிள்ளையும்,2002ம் ஆண்டு ஆண் பிள்ளையும் பிறந்தார்கள். யுத்த பிரச்சியின் பின்புதான் கடைசி மட்டும் பிரச்சினை இல்லாத நேரமென்றுஇல்லை ஆஸ்பத்திரியில் எனது தம்பிமார்கள் 2மாதம் ஊருக்கு திரும்பவும் சென்றுதமது சொந்த இடத்தில் இருந்தோம்.

2007ம் ஆண்டு மீண்டும் யுத்தம் தொடங்கியது. நான் பெரிய மடுவில்தான் இருந்தோம். 2008இல் கிபிர் அறம்புறமாக திரியும் வேறு தைமாதம் எங்களை பார்க்க வந்த அம்மா பங்குனி மாதம் காட்டக் காரணமாக இறந்துவிட்டார். மிகவும் கஸ்டத்தின் மத்தியில் அம்மாவின் சடங்கிற்கு சென்றோம். மாயத்தூர், புத்தூர் இடம்பெயர்ந்து தர்மபுரத்தில் 2,3 மாதங்கள் இருந்தோம். அப்போது நடந்தே செத்திட்டோம். மாசி மாதம் 12ம் திகதி வரை அதிகாலையில் மிக சிரமப்பட்டோம். நாங்கள் சமைத்து சாப்பிட்டோம்.

என்னை மறக்க முடியாத சம்பவ எதுவென்றால் மகன் கையில் வைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தோம். ஆமிக்கும் இயக்கத்திற்கும் சண்டை நடைபெற்றது. இடையில் நான் மாட்டிக் கொண்டேன். ஆமி சுட்டத்தில் கையில் சென்ற திசை மாறி சென்றேன். தனியாக தம்பியும் தப்பினோம். அப்போது தையல் இயந்திரத்தை தூக்கி வரும் போது செல் அடித்து நெத்தியில் காயம் ஏற்பட்டது.

மாசி மாதம் 12ம் திகதி ஒரு மாதிரியாக வந்து சேர்ந்தோம். ஆமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தோம். பம்பமடு காம்பில் எங்களை வைத்திருந்தார்கள்.

அங்கிருந்து சண்டையில் இயக்கப் பிள்ளைகளை கொண்டு வந்து அங்கேவிட்டு விட்டு வந்தார்கள். சோன் 4 முகாமிற்கு அழைத்து சென்றார்கள். 9 மாதங்கள் வரையில் ஜெயில் வாழ்க்கை முறையில் பிள்யைின் கல்வி படியறுந்தது.

அப்போது 2009ம் ஆண்டு கார்த்திரைக மாதம் தற்காலிக வீட்டில் இருக்கின்றோம். அடுத்த வருடம் வீட்டுத் திட்டம் கிடைத்தது.

எனது மகளுக்கு பல்கலைக்கழகம் கிடைத்தது. மற்றொரு மகளுக்கு ஏசி மெக்கானிக் பார்க்கிறார். மற்றவர் படிக்கவில்லை.

முன்பு இவ்வாறு எங்களுடைய சமூகம் இல்லை. இப்ப நள்ளிரவில் போய் வரலாம் என்ற நிலை முன்பு இருந்த நிலை இப்போது பெண்கள் வீட்டில் உள்ளதே பயமாக உள்ளது. கசிப்பு பாவனை எமது கிராமத்தில் அதிகம் உள்ளது. வீட்டுக்கு வீடு வடிக்கின்றார்கள். இதனை கண்டும் காணாதவர்கள் போல் திரிகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இதனால் துன்பம்.

வேலை எங்கும் பார்ப்பதனால் பிரச்சினை இனிமேல் ஒருயுத்தம் வேண்டாம். ஆனால் எம்மை போன்றவர்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். எம்மிடம் இருக்கும் பயம் அச்சம் போக வேண்டும். எல்லோரும் ஒரே மக்களாக நாட்டில் மதிக்கப்படல் வேண்டும். கிராமப்புற மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படல் வேண்டும். எமது சமூகத்தின் அடையாளங்கள் பேணிப் பாதுகாக்கப்படல் வேண்டும். தற்போது திட்டமிடலில் இடம்பெறும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை வாழிடம் பாதுகாக்கப்படல் வேண்டும்.

எமது சமூக நிலை மாறும் காலங்களில் பெண்களின் உரிமைகள் அடையாளங்கள் மற்ற இன சமூக கலாசாரங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். நாடும் கடவுள் சமூகம் என்ற ரீதியில் எம்மினமும் பாதுகாக்கப்படல் வேண்டும்.





CMP/MN/MW/KUV/01
N. Mery Jesintha
Kuruvil, Vaddakkandal, Mannar.

I was born in Periyanochikulam village in Vavuniya in 1970. My father is a farmer. I have four younger brothers. My mother is a house wife and also does coolly work. Later, we lived in Madu.

In 1985, we displaced to schools in Mannar. As the place we lived was a Sinhala bordering area, some riots took place and all people displaced.

After one month we were transferred to Pesalai School. Later, we stayed in the houses of the people who left Mannar.

In 1987, we went to our neighbouring village Arippu. Until 1990 we stayed in the houses of some known people. My father know agriculture and with the help of my younger brother, he started his work.

In 1990, we again went to Neriyakulam. There, one of my younger brother joined the movement. Following the 1990 riots, we stayed in a house in Madu until 1994.

As my brother joined the movement, we were given five cows for our livelihood. Then we displaced with the cows to Pirammanthanaru. At the same time, my younger brother and his team worked at Kaddukkarai Tank.

In 1995, I got married at Kuruvil, Vaddakkandal and it was a proposed marriage. My husband had no parents and he lived has sister and therefore they came to us.

I got a son in 1996. We displaced to Madu in 1997 with my toddler in a bullock cart. There we put up a cottage and lived in it. My second son was born in 1997 in that cottage. At the same time, my younger brother lost his life in 1996. His body too was not found.

In 1997, the war gradually started and we moved here and there. The war began in 1998. We again went to Madu. Again we came here in 2002. We lived happily for about five years. My husband was doing fresh water fishing and agriculture.

Further, I got a girl in 2000 and a boy in 2002. After the war, there is not a time having no problems. My brother who was in the hospital married a lady. In February 2004, we went back to our village and lived there.

The war again started in 2007, we were in Periyamadu. In 2008, The ‘Kibir’ fighter air crafts flew everywhere. My mother came to see me in January expired in February due to heart attack. We went to my mother’s funeral among lot of difficulties. We displaced to Nahapul, Mayaththoor, Puththoor and then went to Tharmapuram and stayed there for 2, 3 months. We underwent lot of difficulties up to February 12th early morning. We cooked meals.

There is an unforgettable incident that while I was having my son in my hand, clashes between army and movement took place and I was caught in between. The bullet fired by the army touched my hand and went in different direction and I and my brother escaped. Then, while I was carrying the sewing machine, I was injured on my forehead in a shell attack. By February 12th, we somehow managed to come to the army control. They kept us in the Pampamadu Camp.

They brought the youths of the movement and left them there. They took us to Zone 4 Camp. We were kept for nine months as in jail and education of the children was affected.

During November 2009, we were living in a temporary house. The next year, we were given housing scheme.

My daughter obtained University admission. The other son is working as an A.C. Mechanic. The other one did not study.

Our Society was not as it is now. Earlier, the situation was conducive for travelling at night. Nowadays, female children are afraid of staying even at home. The use of illicit liquor has increased in our village. House to house people are making illicit liquor. Others are negligent of this. Every house is affected by this.

There is problem everywhere. Hereafter, we do not need a war. But people like us should be safeguarded. The fear in our minds should be eliminated. All should be respected as equal citizens. The problems of rural people should be solved. The identity of our society should be preserved. The life and living places of the future generation should be protected.

When social changes take place, women’s rights, their identities, the society and culture should be protected. The country, society and our community should also be protected.

Yours
N. Mary Jesintha.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License