We went up to Mullivaikal

A story of family which suffered from the war.


අපි මුල්ලිවයික්කාල් වලට ගියා

යුද්ධයෙන් පීඩා විඳි පවුලේ කථාවක්.


முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்

போரினால் அவதிக்குள்ளாகிய ஒரு குடும்பத்தின் கதை இது.CMP/MN/MN/THA/01

I was born in 1973 am the only child for my parents. My father died when I was young. My kother educated me with so much hardship by going to labour work.
In 1992 I got married and had five children. My husband does agricultural work. We lead a average life. My husband bought machines and did his work and we lived well. We were displaced in 2003 due to army activities. We faced lot of difficulties but my children and I didn’t have any wounds or loss of life but my husband got wound in his leg. We went till Mullivaaikad. We didn’t have any water to drink. We drank salt water we didn’t have food and lived in poverty because of the army operations. We moved from Mullivaaikad and went in to places which the army controlled. After two days they took us to the refugee camp we didn’t receive any help there too. There were two families in a tent. Children could go to school but we had to stand in a queue to get food and water. We lived for 7 months in the camp. Later we went to our village at Thamaraikulam. We didn’t have any facilities here. The houses were destroyes we didn’t have drinking water. Gradually families began to settle in our village and drinking water was given to the village. Houses were constructed for us only 5 years after we settled. My husband started farming the land. We didn’t have much facilities.
I will leek you about my village.
This village was earlier a pond with full of lotus flowers because of this the name Thamaraikulam was given. It was developed in 1965 for the people who were after by the storm in 1964. Some inhabitant were there before this too. It was an agricultural village. Upland cultivation and paddy cultivation was done around the village.
Most of the people in this village are in the government service. All the youngsters receive education leave. As self employment everybody cultivates. The majority in this village is Tamils. Catholics and Tamil live here. There are two temples
01. Sri Durga Temple at the beginning of Thamaraikulam village
02. Annai Velankani

There is a preschool and a AGA office, Public Hospital and a sub post office. Those who live here are middleclass and most live below poverty line.


CMP/MN/MW/THA/01-01

1973 වර්ෂයේ උපන් මා මගේ අම්මා තාත්තාට හිටි එකම දරුවා. මගේ කුඩා කාලයේදීම පියා මිය ගිය. ඒ නිසා මගේ මව කුලී වැඩ කරලා බොහොම අමාරුවෙන් මට ඉගැන්නුවා. 1992 දී මම විවාහයක් කරගත්තා. දැනට මට දරුවන් 05 දෙනෙකු ඉන්නවා. මගේ ස්වාමි පුරුෂයා කුලී වැඩ කරනවා. අපේ ජීවිතය සාමාන්‍ය තත්ත්වයකින් තමයි තිබුණේ. පසුව මගේ ස්වාමි පුරුෂයා යන්ත්‍රසූත‍්‍ර අරගෙන වැඩ කරන්න පටන්ගත් පසු අපි හොඳට ජීවත්වුණා. ඉන්පසු 2008 වර්ෂයේ හමුදා මෙහෙයුම හේතුවෙන් අපි අවතැන්වුණා. මේ නිසා බොහෝ දුක් කරදරවලට මුහුණ දුන්නා. එහෙත්, මට හෝ මගේ දරුවන්ට කිසිදු තුවාලයක් හෝ ජීවිත හානියක් හෝ සිදුවූයේ නැහැ. නමුත්, මගේ ස්වාමි පුරුෂයාගේ කකුල තුවාල වුණා. මේ නිසා අපි නොයෙකුත් දුෂ්කරතාවලට මුහුණ දුන්නා. අපි අන්තිම කෙළවර වන මුල්ලිවායික්කාල් දක්වා ගියා. එහි බොන්න වතුර පවා නැතිව ලූණු වතුර බිව්වා. කෑම බිමත් හිඟයි. අපි ඉතාමත් දුප්පත් තත්ත්වයෙන් සිටියා. ඉන්පසු හමුදා ප‍්‍රහාරය එක දිගට එල්ල වූ නිසා මුල්ලිවායික්කාල් වලින් ඉවත්වී හමුදා පාලනය තිබූ ප‍්‍රදේශයට ගියා. එහිදී දවස් දෙකකට පසු අපිව අනාථ කඳවුරට අරන් ගියා. එහිදී අපට ප‍්‍රමාණවත්

පහසුකම් කිසිවක් ලැබුණේ නැහැ. එහි එක කූඩාරමක් ඇතුළේ පවුල් දෙකක් බැගින් නැවැත්තුවා. එහි පාසල් පහසුකම් තිබුණා. නමුත්, කෑම බිම පෝලිමේ ඉඳලා බොහෝ දුෂ්කරතා මැද ඒවා ලබාගන්න සිද්ධවුණා. මාස 07ක් බොහොම අමාරුවෙන් එම කඳවුරේ සිටියා. පසුව අපේ ස්ථිර පදිංචි ස්ථානය වන තාමරෙයිකුලම් ප‍්‍රදේශයේ අපි සමග පවුල් කීපයක් පදිංචි කළා. කඳවුරේ සිට අපේ ස්ථිර පදිංචි ස්ථානයට පැමිණියත් අපට ප‍්‍රමාණවත් පහසුකම් කිසිවක් ලැබුණේ නැහැ. යුද්ධය අවසන් වෙලා අලුතින් නැවත පදිංචි වූ නිසා නිවාස සියල්ල හානිවී තිබුණා. එපමණක් නොවේ පානීය ජල පහසුකම් කිසිවක් ලැබුණේ නැහැ. ඉන්පසු පවුල් එකින් එක අපේ ගමේ පදිංචි වුණා. යම් විධියකින් පානීය ජල පහසුකම් ද ලබා දුන්නා. නැවත පදිංචිවෙලා අවුරුදු 05කට පසුව තමයි අපට ස්ථිර නිවාස ඉදිකර දුන්නේ. මෙතෙක් කල් අපි පැල්පත්වල තමයි ජීවත් වුණේ. දැනට මගේ ස්වාමි පුරුෂයා ගොවිතැන් කරනවා. අපට පහසුකම් කියලා කිසිවක් ලොකුවට ලබා දුන්නේ නැහැ. නමුත්, අපි බොහෝ දුක් කරදර මැද ජීවත් වෙනවා. තවද අපේ ගමේ ඉතිහාසය හා ප‍්‍රවණතාව ගැන කියනවා නම්,

මෙම ගම්මානය මන්නාරම දිස්ත්‍රික්කයේ කලින් නෙළුම් මල් වලින් පිරුණු පොකුණක්ව තිබුණු නිසා ඊට තාමරෙයිකුලම් (නෙළුම් පොකුණ) යන නමින් හඳුන්වනවා. ඒ කාලයේ 1964 වර්ෂයේ කොටින්ගේ ග්‍රහණයට ලක්වූ ජනතාව වෙනුවෙන් 1965 වර්ෂයේ උදා කරන ලද ගම්මානයකි. මීට පෙරද මෙහි ඇතැම් පිරිස් පදිංචිවෙලා ඉඳලා තිබෙනවා. මෙම ගම්මානය මුල් කාලයේ කෘෂි ගම්මානයක් ලෙස උදා කරලා තිබෙනවා. මෙම ගම්මානය වටා ගොඩ ගොවිතැන් හා වී ගොවිතැන් කරනවා. මෙහි බොහෝ දෙනෙකු රජයේ සේවය කරනවා. මෙහි ජීවත්වන බාල වයස්කාරයින් සියලු දෙනාම අධ්‍යාපනය ලබනවා. ස්වයං රැකියා වශයෙන් වී ගොවිතැන් කරනවා. මෙහි දෙමළ බහුතරයක් හින්දු ආගමිකයන් හා කතෝලික ආගමිකයන් ලෙස ජීවත්වෙනවා. මෙම ගම්මානයේ පූජනීය ස්ථාන දෙකක් තිබෙනවා.
ෂග ශී‍්‍ර දුර්ගාදේවි දේවස්ථානය.

මෙය තාමරෙයිකුලම් ගම්මානයේ මුල් කාලයේ සිට තිබෙනවා.
ෂෂග අන්නයි වේලාන්කන්නි දේවස්ථානය ආදිය තිබෙනවා. මෙහි පොදු රාජ්‍ය සේවයක් ලෙස පෙර පාසලක්, ගම්මානයේ පළමුවන පාරේ සහකාර දිසාපති කාර්යාලයක්, මහ රෝහලක් හා උප තැපැල් කාර්යාලයක් තිබෙනවා. මෙහි පදිංචි ඇතැම් පිරිස මධ්‍යම පංතියේ සිටින අතර ඇතැම් අය ජීවන රේඛාවට පහළින් ජීවත්වන පිරිසක් ලෙස දක්නට ලැබේ.
CMP/MN/MW/THA/01

1973இல் பிறந்த நான் எனது அம்மா அப்பா என்போருக்கு ஒருபிள்ளை ஆவேன். நான் சிறு வயதாய் இருக்கும் போதே எனது தந்தை இறந்து விட்டார். ஆகையினால் எனதுதாய் கூலி வேலை செய்து மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தார். பின்னர்1992இல் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு தற்போது 5 பிள்ளைகள் உள்ளனர். எனது கணவர் விவசாயம் செய்கின்றார். எங்களது வாழ்வானது ஒரு சராசரி நிலையில் இருந்து வந்தது. பின்னர் எனது கணவர் இயந்திரங்கள் எடுத்து தொழில் புரிந்தமையினால் நாங்கள் நன்றாக வாழ்ந்து வந்தோம். பின்னர் 2008ம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக புலம்பெயர்ந்தோம். இதனால் பல துன்பங்களை நாங்கள் அனுபவித்தோம். ஆயினும் எனக்கோ எனது பிள்ளைகளுக்கோ எந்தவிதமான காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. ஆனால் எனது கணவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஆகையினால் நாம் பெரும் சிரமத்திற்கு உள்ளானோம். நாங்கள் இறுதிப் பகுதியான முள்ளிவாய்க்கால் வரை சென்றோம். அங்கு குடிக்க நீர்இல்லாமல் உப்புநீரை அருந்தினோம். மற்றும் உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. நாம் மிகுந்த வறுமை காரணமாக இருந்தோம். பின்னர் இராணுவத்தினரின் இடைவிடாத போர் நடவடிக்கை காரணமாக முள்ளிவாய்க்காலில் இருந்து இடம்பெயர்ந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றோம். அங்கு 2 நாட்களின் பின்னர் எங்களை அகதி முகாமிற்குள் கொண்டு சென்றனர். அங்கு எமக்கு போதிய வசதிகள் எவையும் கிடைக்கவில்லை. அங்கு ஒரு கூடாரத்திற்குள் 2 குடும்பம் என்ற அடிப்படையில் தங்க வைத்தனர். அங்கு பாடசாலை வசதிகள் கிடைத்தன. ஆயினும் (உணவு நீர்என்பவற்றைப் பெற வேண்டுமாயின் வரிசையில் நின்றுபெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே அதனைப் பெற்றுக் கொளள் வேண்டிய நிலை இருந்தது. 7 மாதங்கள் மிகவும் சிரமப்பட்டு அந்த முகாமில் தங்கினோம். பின்னர் எமது சொந்த ஊரான தாமரைக் குளத்திற்கு எங்களுடன் சில குடும்பங்களை குடியமர்த்தினர். முகாமில் இருந்து எமது சொந்த ஊர் வந்தாலும் அங்கும் எமக்கு போதிய வசதிகள் எவையும் கிடைக்கவில்லை. யுத்தம் முடிந்துபுதிதாக மீள் குடியேறியபடியால் வீடுகள் அனைத்தும் அழிவடைந்து காணப்பட்டது. அத்தோடு மட்டுமல்லாது குடிநீர் வசதிகள் எவையும் கிடைக்கவில்லை. பின்னர் ஒவ்வொரு குடும்பமாக எமதுஊரில் குடியேறினர். ஒருவாராற குடிநீர்வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மீள்குடியேறி 5 வருடங்களின் பின்னர் எமக்கு வீடுஅமைத்துக் கொடுக்கப்பட்டது. இவ்வளவு காலமும் நாங்கள் குடிசையில்தான் வாழ்ந்து வந்தோம். தற்போது எனது கணவர் விவசாயம் மேற்கொண்டு வருகின்றார். எமக்கான வசதிகள் பெரிதாக எவையும் செய்து கொடுக்கப்படவில்லை. ஆயினும் நாங்கள் பெரிதும் இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். மேலும் எமது கிராமத்தின் வரலாற்றையும் எழுச்சிப் போக்கினையும் கூறும் போது, இக்கிராமமானது மன்னார் மாவட்டத்திலே முதல் முதலில் தாமரைகளால் அமைக்கப்பட்ட தடாகமாக அமைந்திருந்தது. இதன் காரணமாக இதற்கு தாமரைக்குளம் என பெயர் சூட்டப்பட்டது. இக்கிராமம் 1964ம் ஆண்டு புயலினால் பாதிக்கப்பட்டோருக்காக 1965ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னரும் இங்கு சில குடியானவர்கள் வாழ்ந்து வந்தனர். இந்த ஆரம்பத்தில் விவசாய கிராமமாக உருவாக்கப்பட்டது. இக் கிராமத்தைச் சுற்றி மேட்டுநில பயிர்ச்செய்கையும் நெற்பயிர்ச்செய்கையும் உற்பத்தி செய்யப்பட்டது. இங்குகணிசமான பகுதியினர் அரச சேவையில் பணியாற்றுகின்றனர். இங்கு வசிக்கும் அனைத்து இளம் பராயத்தினரும் கல்வி பயின்றுவருகின்றனர். சுய தொழிலாக விவசாயமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்குதமிழ் இனத்தவரும் பெரும்பான்மையாக இந்துசமயத்தினரும் மற்றும் கத்தோலிக்க மதத்தினரும் வசித்து வருகின்றனர். இவ் ஊரில் இரண்டுஆலயஙகள் காணப்படுகின்றன.

1. துர்க்கை அம்மன் ஆலயம்
இது தாமரைக் குளம் கிராமத்தின் ஆரம்பத்தில் அமைந்துள்ளது.

2. அன்னை வேளாங்கன்னி ஆலயம்
என்பன அமைந்துள்ளது. இங்கு பொது அரச சேவையாக சிறுவர்முன்பள்ளி ஒன்றும் கிராமத்தவர்கள் ஆரம்ப வீதியில் உதவி அரசாங்க அதிபர் செயலகம் பொது மருத்துவமனை உப அஞ்சல் அலுவலகம் ஆகியன அமையப் பெற்றுள்ளன. இங்கு வசிப்பவர்கள் சிலர்நடுத்தர வர்க்கத்தினராகவும் பலர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர்.


A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License