The colours of my life

A woman shares about various problems that happened in her family.


මගේ ජීවිතයේ වර්ණවත් රටාව

කාන්තාවක් ඇගේ පවුල තුළ විවිධ ප්රශ්න බෙදා ගනී.


எனது வாழ்க்கையின் வண்ணக் கோலம்

தனது குடும்பத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி பெண்ணொருவர் பகிர்ந்து கொள்கின்றார்.
M.I.Thowfia
299/1/3A Kallarachal -02
Sammanthurai
2016.05.09

The colours of my life

I have 06 members in my beautiful family.There are two girls, two boys , father and mother make up the six. In this beautiful family, suddenly my father took to drinking. We were living with much difficulties. My father came home drunk and chased my mother all over the road and beat her. We were very scared and when we see our father we were affected mentally. My mother told us that it was very difficult for her to make us study. We went to the paddyfield and looked after our family. My mother shed tears over us and worried about us. My father took all the money that we brought us, hitting my mother. He came home and took the cane and chased my mother all over the road. We were just scared. We advised him a lot but he didn’t listen to us. Mean while my elder brother got married. We gave the only house and married off my elder sister too. My father died, we were saddened. After some time my second brother got married. Later I eloped with a man that I loved and married him. We stayed for fifteen days in my mothers sister’s place after that I returned home. My mother told me that she wouldn’t give house or land, she told me to go away. Without any place to stay we went to my mother-in-law’s house and stayed there for a month. My mother-in-law is a cruel woman, I suffered a lot there. Even though my husband is a good person, his mother is not. After a month I couldn’t take it any more and went to my mother’s place and told her our difficulties. She took pity and gave us a cadjan house. I gave birth to 3 children, two boys and a girl. After that with much difficulty I sent my husband abroad. He told that our children shouldn’t suffer like we did and went abroad. I sent my girl to the madrasa, my second boy is studying in Grade 7. My mother-in- law came home and fought with me to give half of the money my husband sent me.
I asked my husband how can we bring up our girl if we give half of the money to his mother. He told that he is not producing money abroad, after that I kept quiet. I go to my son’s preschool and help out. I think that the past we had hardship and in present also we are having hardship.CMP/AMP/SAM/SAM/06-01

M.I. නොබියා,
299/1/3A,
කල්ලරෙච්චල් - 02,
සම්මන්තුරේ.
2016.05.09

මගේ ජීවිතයේ වර්ණවත් රටාව

ඉහත නම් සඳහන් මගේ පවුල 06 දෙනෙකුගෙන් යුත් ලස්සන පවුලක්. ඒ පවුලේ ගැහැණු ළමයි 02 යි. පිරිමි ළමයි 02යි, අම්මයි, තාත්තයි, පවුලේ ඔක්කෝම 06 දෙන යි. හරි ලස්සන පවුලක්. හරි ලස්සනට තිබුණු මගේ පවුලේ එක පාරට ම මගේ පියා මත්පැන්වලට ඇබ්බැහි වුණා. ඒ වෙලාවෙ මගේ පවුල ඉතා මත් අමාරුකම් මත ජීවත් වුණා. හිටි ගමන් මගේ පියා බී ගෙන ඇවිල්ලා මගේ මවට පාරවල් පාරවල් ගාණෙ එළව එළවා පහර දෙනවා. මේ නිසා අපේ හිතට බයක් දැණුනා. අපේ පියා දකින විට අපට මානසික පීඩනයක් ඇති වුණා. පසුව අපට අම්මා කීවා දරුවනි, තව දුරටත් මට ඔය ගොල්ලන්ට උගන්වන්න වත් පහසුකම් නැහැ කියලා. හරි කියලා අපිත් දුක් කරදර මත්තේ ඇදුම රෝගයත් තිබිය දී වල් නෙළලා, වී කරල් ගහ ගෙන ඇවිල්ලා, අපේ පවුල නඩත්තු කළා. අපේ අම්මා අපි දිහා බලලා කඳුළු සැලුවා. දුක් වෙනවා. ඒ වයසෙත් අපි හම්බ කරලා ගෙනැත් දෙන සල්ලි ටික අපේ පියා රණ්ඩු වෙලා අම්මට ගහලා, ඒ සල්ලි ටික උදුරා ගෙන ගිහින් බී ගෙන ගෙදරට ඇවිල්ලා නැවතත් අපේ අම්මව අතේ වේවැලක් තියා ගෙන පාරට එළවනවා. අපිත් බය වෙලා කඳුළු සලනවා. අපි කොච්චර දැනමුතුකම් කීවත් තාත්තා අහන්නෙ නැහැ. ඒ වන විට මගේ වැඩිමහල් සහෝදරයා විවාහ වුණා. පසුව තිබුණු එක ම නිවස අපගේ වැඩිමහල් සහෝදරියට දී ඇයටත් විවාහයක් කර දුන්නා.

පසුව 06-02

මගේ පියා මරණයට පත් වුණා. අපි මහත් ශෝකයක් මත ජීවත් වෙමින් සිටියා. ටික කලක් ගත වුණා. මගේ දෙවැනි සහෝදරයත් විවාහයක් කර ගත්තා. පසුව මමත් කෙනෙකුට ආදරේ කරලා විවාහ කර ගත්තා. දින 15ක් අපේ අම්මගෙ නංගිගේ ගෙදර නැවතිලා සිටියා. ඉන් පසු අපේ ගෙදරට ගියා. එවිට මගේ මව කීවා උඹට ගෙවල් දොරවල් ඉඩකඩම් කිසිවක් දෙන්නෙ නැහැ. උඹ කොහේ හරි පලයන් කියා කීවා. පසුව මමත් මගේ ස්වාමි පුරුෂයත් ඉන්න තැනක් නැතිව මොනවා කරන්න ද කියා දන්නෙ නැතිව නැන්දම්මාගේ ගෙදරට ගොස් නැන්දම්මාගේ කුරිරු වධහිංසා මත්තේ ඇගේ නිවසේ දුක් වේදනා හා කඳුළු මැදින් ජීවත් වුණා. මගේ ස්වාමි පුරුෂයා හොඳ වුණත් නැන්දම්මා කුරිරු වදකාරියක්. මාසයකට පසු කෙසේ හෝ අපේ ගෙදරට යා යුතු යි කියා සිතා පසු දින මමයි මගේ ස්වාමි පුරුෂයයි අම්මා ළඟට ගොස් හඬා වැලපුණා. මොනවා කරන්න ද වෙච්ච දේ වුණා. මට පොඩි අතුපැලක් දුන්නා. ඉන් පසු මට දරුවෝ 03 දෙනෙක් ඉපදුණා. පිරිමි දරුවො 02යි, ගැහැණු දරුවන් 01යි, මමයි, මගේ ස්වාමි පුරුෂයයි, ඔක්කොම 05 දෙනෙකුගෙන් යුත් ලස්සන පවුලක් ලෙස ජීවත් වුණා. මේ අතරතුර මගේ ස්වාමි පුරුෂයා බොහොම අමාරුවෙන් පිටරට යැව්වා. අපටත් දරුවො ඉන්නවා. අපි දුක් වින්දා වගේ අපේ දරුවන්ට දුක් විඳින්න දෙන්න බැහැ කියා ඔහු පිටරට ගියා. පසුව ගැහැණු දරුවා මදරසාවලට ඇතුල් කළා. ඇයත් දැන් හොඳට වැඩ කර ගෙන යනවා. මගේ දෙවැනි පුතා දැන් 07 වෙනි පන්තියේ ඉගෙන ගන්නවා. මගේ 03 වෙනි පුතත් පෙර පාසලට යනවා. මෙසේ සිටිය දී මගේ නැන්දම්මා ඇවිත් මගේ පුතා හම්බ කරලා එවන සල්ලිවලින් මටත් දෙකෙන් පංගුවක් දෙන්න ඕන,

06-03

කියා රණ්ඩු වෙනවා. මගේ ස්වාමි පුරුෂයා හම්බ කරලා එවන සල්ලිවලින් නැන්දම්මටත් දෙකෙන් පංගුවක් දෙන නිසා මම මගේ ස්වාමි පුරුෂයාගෙන් ඇහුවා අපටත් වැඩිවියට පත් වෙච්ච ගැහැණු දරුවෙක් ඉන්නවා, අපි ඇයටත් ගෙයක් දොරක් හදන්න ඕන කියා. එවිට ඔහු කීවා මොනවා කරන්න ද පිටරටවල්වල සල්ලි හෙලෙනවා ද කියා ඇහුවා. ඉන් පසු මා කිසිවක් කීවේ නැහැ. ඒ වෙලාවෙ මගේ බාල පුතා සමග පෙර පාසලට ගොස් ටිකක් උදව් කරලා දෙනවා. සමහර වෙලාවට මම හිතනවා අපිට එදත් දුක, අදත් දුක කියලා හිතෙනවා.

CMP/AMP/SAM/SAM/06-1

குடும்பக் கதை

எம்.ஐ. தௌபியா
299-1-3ஏ - கல்லரச்சல் 2
சம்மாந்துறை

எனது வாழ்க்கையின் வண்ணக் கோலம்
மேற்படி பெயருடைய எனது குடும்பம் 6 பேரைக் கொண்ட ஒரு அழகிய குடும்பம். அந்தக் குடும்பத்தில் 2 பெண் பிள்ளைகளும், 2 ஆண் பிள்ளைகளும் தாயும், தகப்பனுமாக எல்லாம் 6 பேரைக் கொண்ட ஒரு அழகிய குடும்பமாக இருந்தது. அழகாக இருந்த எனது குடும்பத்தில் திடீர் என்று எனது தகப்பன் மதுபாவனைக்கு அகப்பட்டார். அந்த நேரத்தில் எனது குடும்பம் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தது. திடீர் திடீர் என எனது தகப்பன் குடித்துக் கொண்டு எனது தாயை றோடு றோடாக திரத்தி திரத்தி அடித்தார். இதனைக் கண்டு எங்களது மனதில் ஒருபயம் ஏற்பட்டது. நாங்கள் எங்களது தகப்பனைக் கண்டு எங்களுக்கு மன உளத்தாக்கம் ஏற்பட்டது. பின்னர்எங்களுக்கு தாய் கூறினார். மக்கள் இதற்குப் பிறகும் உங்களைப் படிக்க வைக்க எனக்கு வசதியில்லை என்று கூறினார். சரி என்று நாங்களும் கஷ்டத்திற்குமத்தியில் அஸ்மா நோயுடுன் களை பிடிங்கி கதிர் அடித்து வந்து எங்களது குடும்பத்தை பராமரித்து வந்தோம். எங்களது தாய் எங்களைப் பார்த்து கண்ணீர் சிந்தினார். கவலைப்பட்டார். அந்த சமயத்திலும் நாங்கள் உழைத்து கொண்டு கொடுக்கின்ற காசை எல்லாம் எனதுதகப்பன் சண்டை போட்டு எனது தாய்க்குஅடித்து அந்தக் காசை பறித்து குடித்துக் கொண்டு வீட்டுக்குவந்து மீண்டும் எங்களது தாயை கையில் பிரம்புடன் றோட்டில் விரட்டுவார். நாங்கள் பயந்துகண்ணீர் சிந்தினோம். நாங்கள் எவ்வளவு புத்திமதிகளைக் கூறியும் அவர் கேட்கவில்லை அதே சமயத்தில் எனது மூத்த சகோதரன் திருமணம் முடித்து விட்டார். பின்னர்இருந்த ஒரு வீட்டையும் எனது மூத்த சகோதரிக்கு கொடுத்து அவளுக்கும் திருமணம் முடித்து வைத்தோம். பின்னர், எனது தகப்பன் மரணித்து விட்டார். நாங்கள் பெரும் துக்கத்தில் வாழ்ந்து கொண்டிருந்தோம். கொஞ்ச காலம் கடந்தது. எனதுஇரண்டாவதுசகோதரனும் திருமணம் முடித்து விட்டோம். 15 நாட்களாக எனதுதாயின் சகோதரியின் வீட்டில் தங்கினோம். பின்னர் எனது வீட்டுக்குச் சென்றேன். அப்பொழுது எனது தாய் கூறினார். எனக்கு வீடு வளவு எதுவும் தரமாட்டேன். நீ எங்கயாவது போ என்று கூறினார். பின்னர் நானும் எனதுகணவரும் இருப்பதற்கு இஸ்டம் இன்றி என்ன செய்வது என்றுதெரியாமல் எனது மாமியாரின் கொடூர கொடுமையுடன் அவளின் வீட்டில் கண்ணீரோடும்,கவலையோடும் வாழ்ந்துவந்தோம். எனது கணவர் நல்லவராக இருந்தாலும் அவரின் தாய் கொடூரமானவளாக இருந்தாள். 1 மாதத்திற்குப் பின்னர்எப்படியாவது தனது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணி மறுநாள் நானும் எனது தாயிடம் சென்று அழுது புலம்பினோம். என்ன செய்வது நடந்தது நடந்துபோய் விட்டது என்று எண்ணி எனக்கு ஒரு சிறிய ஒன்றை தந்தால் அதற்குப் பிறகு எனக்கு 3 பிள்ளைகள் பிறந்தது. அதில் 2 ஆண் பிள்ளைகளும் 1 பெண் பிள்ளையும் நானும் எனது கணவரும் எல்லாம் 5 பேரைக் கொண்ட ஒரு அழகிய குடும்பமாக வாழ்ந்து வந்தோம். அதற்கு மத்தியில் எனதுகணவரை கஷ்டப்பட்டு வௌிநாடு அனுப்பி வைத்தேன். நமதுபிள்ளைகளும் கஷ்டப்படக் கூடாது என்று கூறி வௌிநாடு சென்றார். பின்னர்பெண் பிள்ளையை மத்ரஸாவில் சேர்த்து விட்டேன். அவளும் இப்போது நன்றாக ஓடிக் கொண்டுவருகுின்றது. எனது இரண்டாவது ஆண் பிள்ளை 7ஆம் வகுப்பில் கல்வி கற்கின்றார். எனது மூன்றாவது மகனும் முன்பள்ளிக்கு சென்று வருகின்றார். இப்படி இருக்கும் போது எனது மாமியார் வந்து எனது மகன் உழைக்கின்ற காசில் எனக்கும் அரைக்கு அரைவாசி தர வேண்டும் என்று சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார். எனது கணவர் அனுப்புகின்ற காசில் மாமியாருக்கு அரைக்கு அரைவாசி கொடுப்பதால் எனதுகணவரிடம் நான் கேட்டேன். நம்மலுக்கு வயதுக்கு வந்த பெண் பிள்ளை ஒன்று இருக்கின்றது. நாம அதுக்கு வீடு கட்ட வேண்டும் என்று கூறிய போது நான் என்ன செய்வது நான் என்ன வௌிநாட்டில் அள்ளிக் கொட்டுகின்றேனா என்று கேட்டார். அதற்குப் பிறகுநான் ஒன்றும் சொல்லவில்லை. அதேநேரத்தில் எனது கடைசி மகனோடு முன்பள்ளிக்குச் சென்று ஒரு சில உதவிகளைச் செய்துகொடுப்பேன். சில சமயத்தில் நான் நினைப்பேன். நமக்கு அன்றும் கஷ்டம், இன்றும் கஷ்டம் என்று நினைப்பேன்.


A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License