To my dear sister

A women describes about the communal violence that happened in Sri Lanka.


මගේ ආදරණීය සොහොයුරිය

ශ්රී ලංකාවේ ජනවාර්ගික ප්රචණ්ඩත්වය ගැන කාන්තාවක් විස්තර කරයි.


எனது அன்புள்ள சகோதரிக்கு

இலங்கையில் நடந்த இன வன்முறை பற்றி ஒரு பெண் விவரிக்கிறார்.



aCMP/AMP/SAM/MTY/02
S.L.Kulandhayumma
1 Korak kovil road
Sammandhurai
2016.03.28
Dear Sister,
We lived with 10 people in our family. I’m the 5th in our family. I am affected by the war in 1990. We couldn’t eat our food peacefully. We escaped when they came to shoot us. When we are running they shot us from the helicopter. They came to shoot me too when I was bathing and I ran and fell in a pit and broke my hand. I didn’t have any money to get treatment for my broken hand. It was very difficult without money I couldn’t manage my expenses. Even when my mother fell down there were nobody to carry her with much difficulty I carried her and We didn’t have anything to eat for a week I fell down my cloths were torn I stayed with torn cloths. We didn’t have cloths to wear. When I was 25 I got married. They put bombs into our house we were surrounded by the Indian military but we escaped from them. My husband drank a lot. and use to hit me and broke things in our home when he’s angry he burns my cloths throe the rice plate and scolds his children in bad words. After marriage my life was not peaceful he drinks daily and gives only half of what he earns.. Now I’m doing a labour work. I take that money for my expenses. When I tell my husband not to drink he scolds me. I have two children and one got married. I am sick and because of his drinking habit he got sick too.

Yours faithfully
Kulandhaiumma


CMP/AMP/SAM/MTY/02-1

S.L. කුලන්දයි උම්මා,
කෝරක් කෝයිල් පාර,
මඩකලපුත්තරසු II,
සම්මන්තුරේ.
2016.03.28

මාගේ ආදරණීය සහෝදරිය වෙත,

මගේ පවුලේ 10 දෙනෙකු ජීවත් වුණා. එහි මම පස් වෙනි දරුවා. මා 90 වර්ෂයේ යුද්ධයේ භීෂණයට හසු වුණා. මා 90 වර්ෂයේ යුද්ධයෙන් පීඩාවට පත් වී බත් මාළු උයලා, කන්න ගන්නා විට දහවල් කාලයේ කන්න වත් නිදහසක් නැහැ. අපට වෙඩි තියන්න ආපු වෙලාවේ අපි බේරිලා දුවන්න පටන් ගත්තා. අපි දුවන විටත් හෙලිකොප්ටරයෙන් ඇවිල්ලා අපිට වෙඩි තැබුවා. මා ඇඳ ගත්තු ඇඳුම පිටින් නාන විට මට වෙඩි තියන්න ආවා. මම දුවන විට වළකට වැටිලා අතක් කැඩුණා. අත කැඩිච්ච වෙලාවේ රෝහලට යන්න වත් මුදල් තිබුණේ නැහැ. මුදල් නැතිව දුක් වින්දා. මගේ උම්මා දුවන විට පාරේ වැටී සිටින විට මගේ උම්මා උස්සන්න වත් කෙනෙකු හිටියෙ නැහැ. මම තමයි බොහොම අමාරුවෙන් ඉස්සුවේ. අපි සතියක් ම කෑවෙ නැහැ. පවුලේ කිසි ම කෙනෙකුට අඳින්න ඇඳුමක් තිබුණෙ නැහැ. මම දුවන විට වළකට වැටුණා. මගේ ඇඳුම ඉරිලා තිබුණා. ඉරී ගිය ඇඳුම පිටින් තමයි හිටියෙ. මම අවුරුදු 25 දී විවාහයක් කර ගත්තා. ඉන් පසු පොලීසිය ගහපු වෙලාවෙ අපේ ගෙදරට බෝම්බයක් වැටුණා. උදේ මිනිස්සු අපේ ගේ වටා අපි මැරුණා කියා බැලුවා. ත‍්‍රස්ත කල්ලිය හා හමුදාව අපේ ගේ තුළට රිංගුවා. ඉන්දියන් හමුදාවත් ඇවිල්ලා රිංගුවා. අපි පැනලා දිව්වා. දැන් මතක් වෙන කොටත් භය හිතෙනවා.

02-2

මගේ ස්වාමි පුරුෂයා බොනවා. බීලා මට ගහනවා. ගහලා ගෙදර තිබෙන බඩු මුට්ටු බිඳිනවා. තරහ ගියොත් ඇඳ ගෙන සිටින ඇඳුමට ගිනි තියනවා. ලාම්පුව උස්සලා විසි කරනවා. කෑම දුන්නොත් බත් පිඟාන විසි කරනවා. දරුවන්ට පරුෂ වචනවලින් බණිනවා. විවාහ කර ගත් දින සිට මගේ ජීවිතේට සැනසිල්ලක් නැහැ. දිනපතා ම බොනවා. වැඩට ගියත්, කොච්චර හම්බ කළත් හම්බ කරන මුදල්වලින් භාගයක් තමයි දෙන්නෙ. මම ඒ කාලෙත් දුක් වින්දා. දැනුත් දුක් විඳිනවා. මට සැනසීමක් නැහැ. කුලී වැඩට තමයි ගියේ. ඒකෙන් ලැබෙන ආදායම තමයි මගේ වියදමට ගන්නෙ. එයා බීලා බීලා තමයි අපට දුක. බොන්න ඕනෙ නැහැ කීවත් මට බණිනවා. එසේ බැණුම් අහ ගෙන තමයි මම ජීවත් වුණේ. මට දරුවො දෙදෙනෙකු ඉන්නවා. එයින් එක් කෙනෙක් විවාහ වෙලා ඉන්නවා. මට ලෙඩ. එයාට බීලා බීලා ම ලෙඩ වුණා.

මෙයට,
කුතඋම්මා.

CMP/AMP/SAM/MTY/02-1

எஸ்.எல். குழந்தையம்மா
1 கோரக்கோயில் வீதி
மட்டக்களப்புத்தர 2
சம்மாந்துறை
2016-03-28

எனது அன்புள்ள சகோதரிக்கு,

எனது குடும்பத்தில் 10 பேர் வாழ்ந்தோம். அதில் நான் 5வது பிள்ளை ஆவேன். நான் 90ஆம் ஆண்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்தேன். நான் 90ஆம் ஆண்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு சோறு கறி சமைச்சி சாப்பிட எடுக்கும் போது பகலில் சாப்பிட நிம்மதி இல்லை. எங்களைச் சுட வந்தார்கள். சுட வந்த போது நாங்கள் தப்பி ஓடினோம். நாங்கள் தப்பி ஓடும் போதும் ஹெலிக்கப்டரில் இருந்து எங்களைச் சுட்டனர். நான் உடுத்தாடையுடன் குளிக்கும் போது என்னைச் சுட வந்தனர். நான் ஓடும் போது ஒரு குழியினுள் விழுந்து கை உடைந்தது. கை உடைஞ்சதுக்கு வைத்தியசாலைக்குப் போகயும் பணம் இல்லை. பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். எனது உம்மா ஓடும் போது றோட்டில் விழுந்து கிடக்கும் போது எனது உம்மாவை தூக்க யாரும் இல்லை. நான் மிகவும் கஷ்டப்பட்டு தூக்கினேன். நாங்கள் 1 கிழமை சாப்பிடவில்லை. எனது குடும்பத்தில் யாருக்கும் உடுமானம் இல்லை. நான் ஓடும் போது குழியில் விழுந்தேன். எனது உடுமானம் கிழிந்து விட்டது. கிழிந்த உடுப்புடன் தான் இருந்தோம். நான் 25 வயதில் கலியாணம் ஒன்று முடித்தேன். அதன் பிறகு பொலிஸ் அடிச்ச இடத்த எங்களின் வீட்டுக்குள் குண்டு விழுந்தது. காலையில் சனங்கள் எங்களின் வீட்டைச் சுற்றி நாங்கள் மௌத்தாகிட்டோம் என்று பார்த்தனர். இயக்கம், ராணுவம் எங்களின் வீட்டுககுள் பூந்தனர். இந்தியா இராணுவம் வந்து ஓடு பூந்தனர். நாங்கள் தப்பி ஓடினோம். நாங்கள் இப்போது நினைக்கும் போதும் பயங்கரமாக இருந்தது. எனது கணவர் குடிப்பார். குடித்து விட்டு அடித்தார். அடித்து விட்டு வீட்டுக்குள் இருந்த பொருட்களை உடைப்பார். கோபம் வந்தால். உடுமானத்தை பத்த வைப்பார். விளக்கை தூக்கி எரிவார். சாப்பாடு கொடுத்தால் சோற்றுத் தட்டை வீசுவார். பிள்ளைகளுக்கு ஊத்தப் பேச்சால் ஏசுவார். கலியாணம் கட்டிய பிறகு எனது வாழ்க்கையில் நிம்மதி இல்லை. தினமும் குடிப்பார். வேலைக்குப் போனாலும் அந்த காசை எவ்வளவு உழைத்தாலும் அதில் அரைப்பங்கைத் தருவார். எனக்கு அந்தக் காலத்திலும் கஷ்டம். இப்போதும் கஷ்டம். எனக்கு நிம்மதி இல்லை. நான் கூலி வேலைக்குத்தான் போனேன். அதில் வருகின்ற வருமானத்தைத் தான் எனது செலவுக்கு எடுப்பேன். அவர் குடித்து குடித்து தான் கஷ்டம். குடிக்கத் தேவையில்லை என்றாலும் எனக்கு ஏசுவார். அந்த ஏச்சை வாங்கித்தான் வாழ்ந்தேன். எனக்கு இரண்டு பிள்ளை. அதில் ஒரு பிள்ளைக்கு கல்யாணம் நடைபெற்று முடிந்தது. எனக்கு நோய். அவர் குடித்து குடித்து நோய் ஏற்பட்டது.

இப்படிக்கு,
குழந்தையம்மா






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License