Our tragic life journey

This letter tells all about the sorrow which happened during the war time.


අපේ ඛේදජනක ජීවන ගමන

මෙම ලිපිය සියලු යුද කාලය තුළ සිදු කරන ලද දුක ගැන කියනවා.


கடந்துவந்த பாதை

கடந்த கால யுத்தக்கறை படிந்த துயரங்களை இந்த கடிதத்தின் ஊடாக பெண்ணொருவர் தெரியப்படுத்துகின்றார்.



CMP/AMP/SAM/MTY/05-1

To my loving sister,
Through this letter I will tell all about the sorrow which happened to me during the war time. I remember in 1987 in the Tamil Muslim conflict my husband. two children my mother and my younger brother took refuge in Sammandhurai post office with other people. During that time government through the GS provided us with food the Indian army also helped us as we couldn’t stay there we came back to our place with the help of Indian army. The LTTE attacked the government forces in 1990 there were fears attacks between both the groups public were displaced. We took refuge in Korakka Tamil school the army shot and killed those who took refuge. Everybody ran in different direction my children, my husband and relations ran in different directions. My self my husband and 2 children my mother with the public went to Kaaraitheevu we stayed in our relative place.

When we heard the army went away we came back to our places. We heard they shot a lot of people and burnt them. When we went to see my brother was also shot and killed. I couldn’t even say it was my brother. Everywhere there were shooting and killing we were so terrified and went to my sister’s house in Pandiruppu. Even there we heard the army rounded up everyone at home and murdered them. We didn’t know what to say to them.
The soldiers shot the public and burned them like birds I couldn’t even burry my brother if I say that it was my brother they would also shoot me. My husband also disappeared I left my mother at Pandiruppu. I walked to my husband’s place at Thalanguda with my children I stayed in my relative place without food or dress with only water. My husband came and joined us after a while we were happy to see him there were fights between armed group and soldiers again. We took refuge at a school we faced a lot of difficulties without food or jobs.

We with 25 other family came back to our village with the help of Grama Sevaka. Our houses were like grave yards and we couldn’t identify our house.
Later through the Grama Sevaka’s assistants we cleared the jungle and made a small house for 2 years we lived there without proper food or water later we educated the children by doing labour work my husband fell sick and we went to hospital after hospital to cure him his hands and feet were paralised. I went to work and looked after my husband and children. My husband died at Ampara hospital my children finished there studies and went to labour work. No children should not hear about war.

Yours
Sivapaakiyam


CMP/AMP/SAM/MTY/05-1

සිවපාක්කියම්,
සම්මන්තුරේ.
මගේ සදාදරණීය සහෝදරිය වෙත ඔබගේ ආදරණීය නංගීගෙන්,


මගේ එම පසු ගිය යුද්ධ කාලයේ දී ඇති වූ දුක් කම්කටොලු පිළිබඳව මෙම ලිපිය මගින් දන්වන්නම්. අපි පවුල් පිටින් සම්මන්තුරේ ජීවත් වූ ඒ කාලය මට මතක යි. 1987 වර්ෂය කියා හිතෙනවා. එම කාලය තුළ ඇති වූ දෙමළ මුස්ලිම් අරගලය නිසා මමත්, මගේ ස්වාමි පුරුෂයාත්, දරුවන් දෙදෙනයි, අම්මයි, මල්ලියි රැකවරණය සොයා සම්මන්තුරේ තැපැල් කාර්යාලයේ මහජනතාව සමග ගියා. ඒ කාලයේ රජය ග‍්‍රාම නිලධාරිවරුන් මගින් කෑම ලබා දුන්නා. ඉන්දියානු හමුදාව අපටත්, රැකවරණය සොයා පැමිණි අනෙක් අයටත් කෑම ලබා දුන්නා. තව දුරටත් එහි සිටිය නොහැකි නිසා ඉන්දියානු හමුදාවේ සහාය මත නැවතත් අපගේ පදිංචි ස්ථානයට ගියා.

ඉන් පසු 1990 වර්ෂයේ ඇති එල්.ටී.ටී.ඊ. (LTTE) ත‍්‍රස්තවාදී කල්ලිය රජයේ හමුදාවට විරුද්ධව ප‍්‍රහාර එල්ල කළා. දෙපාර්ශ්වය අතර ප‍්‍රහාරය උග‍්‍ර වුණා. මෙහි දී මහජනතාව සියලු දෙනා ම අවතැන් වීමට සිදු වුණා. ඒ අය සමග නැවතත් අපි අවතැන් වී කෝරක්කල් දෙමළ මහා විද්‍යාලයට ගියා. මෙසේ රැකවරණය සොයා ගිය දෙමළ ජනතාව හමුදාවේ ඝාතනයට ලක් වුණා. වෙඩි තබා මරා දැම්මා. වධ දුන්නා. ඒ හේතුවෙන් සියලූ දෙනා ම තම සහෝදර සහෝදරියන්, දරුවන් සියලු දෙනා ම අත හැර දාලා එක් එක් දිසාවට දුව ගෙන ගොස් බේරුණා. මෙසේ මගේ දරුවොත්, ස්වාමි පුරුෂයත් එක් එක් දිසාවට දුව ගෙන ගියා. හමුදාව ගියාට පසු මමයි,

05-2

මගේ ස්වාමි පුරුෂයාත්, දරුවන් දෙදෙනයි, අම්මයි ජනතාව සමග කාරෙයිතීවුවලට ගියා. එහි සිටි ඥාතියෙකුගේ නිවසේ නැවතුණා. ඉන් පසු හමුදා සොල්දාදුවන් අපගේ ප‍්‍රදේශවලින් ගිය බව දැන ගෙන නැවතත් අපගේ පදිංචි ස්ථානයට යාමට තැත් කළ විට, යන අතරමග දී මහජනතාවට වෙඩි තබා මරා දමා පුලූස්සා ඇති බව දැන ගැනීමට ලැබුණා. එම ස්ථානයට ගොස් බලන විට මගේ මල්ලිත් එහි වෙඩි වැදී තිබූ අය අතර මගේ මල්ලිටත් වෙඩි තබා මරා දමා තිබෙනු දැක අපගේ සිත් බිඳී ගියා. මෙහි දී මරණ හඳුනා ගැනීම සඳහා හමුදාව අපට කථා කළ විට මෙයා මගේ මල්ලි යැයි කියා ඔහුගේ මරණය භූමදානය කරන්න බැරිව මර ලතෝනි සමග එහි සිටිය නොහැකිව පාර දිගේ පයින් ගියා. එහි පෙනෙන තෙක් මානයක ම හමුදාව ජනතාවට වෙඩි තබා ටයර් දමා පුලුස්සා මරා දැමුවා. ඒ දෙස බලා මුහුණ වසා ගෙන සිත් තැවුල් පිටින් ඇස් දෙකට කඳුළු පුරවා ගෙන පට්ටිරුප්පුවල සිටින අපේ අක්කගේ ගෙදරට ගියා. එහි ගියාට පසු එහි සිටි අයත් හමුදාව වැටලීම් කර, නිවෙස්වල සිටි අය අල්ලා ගෙන ගොස් මරා දැමුවා කියා ආරංචි වුණා. මෙසේ අල්ලා ගෙන ගිය අය අපගේ ඥාතීන් කියා දැන ගත් පසු අවතැන් වී ගිය අපගේ සිත ඔවුන් සනසනවා ද නැති නම් අපි ඔවුන්ගේ සිත් සනසනවා ද කියා නො දැන දුක් වුණා. ඇස් දෙකේ කඳුළු වගුරමින් අපට නිදහස ලැබෙන්නෙ කවදා ද කියන සාංකාවෙන් සිටියා. මේ තත්ත්වය මත හමුදා සොල්දාදුවන් මිනිසුන්ව කාක්කොන්ට කුරුල්ලන්ට වෙඩි තියනවා වාගේ පේළියට වෙඩි තබා ටයර් දමා ගිනි තබමින් සිටියා. මගේ මල්ලිව හඳුනා ගෙන මගේ

05-3

මල්ලිගේ මෘත ශරීරය හඳුනා ගෙන භූමදානය කිරීමට නොහැකි වුණා. මන්ද යත් ඔහුගේ මෘත ශරීරය භූමදානය කළොත් අපිවත් ඔවුන් ත‍්‍රස්තවාදී කල්ලිය කියා වෙඩි තබා මරා දමනවා. ඒ නිසා මගේ ම මල්ලිව මගේ මල්ලි නො වෙයි කියා සිත තුළ දෙදරමින් කියා සිටියා. මගේ අම්මාව පාන්ඩිරුප්පුවල නවත්වලා එහි සිට දරුවන් සමග මගේ ස්වාමි පුරුෂයාගේ ගම වන තාලංකුඩා ගමට ගියා. එහි ටික දවසක් ඥාතීන්ගේ නිවෙස්වල කන්න අඳින්න වත් නැතිව වතුර ටික බීලා ජීවත් වුණා. ඉන් පසු මගේ ස්වාමි පුරුෂයා අපි සිටි තැන හොයා ගෙන අපි ඉන්න තැනට ආවා. ඔහුව දුටු සතුට එක පැත්තකින් නැවතත් දුකක් ඇති වුණා. හමුදාව හා ත‍්‍රස්තවාදීන් අතර නැවතත් එහි දීත් සටනක් ඇති වුණා. අපි නැවතත් එහි සිට පාසලට ගොස් සිටියා. කිසිදු ආදායමක් නැතිව, රැකියාවත් නැතිව ඥාතීන්ගෙන් ලැබෙන කෑම ටික කාලා ඉතා මත් අමාරුවෙන් සිටියා. මේ තත්ත්වය අපට විතරක් නෙමෙයි සමස්ත දෙමළ ජනයාට ම ඇති වුණා. නැවතත් 1995 දී මම මගේ ස්වාමි පුරුෂයා හා දරුවන් සමග අපේ ගමේ ග‍්‍රාම සේවක මගින් පවුල් 25ක් ආවා. ඒ වන විට අපේ ගෙවල් අමු සොහොනක් වගේ දක්නට තිබුණා. ගේ සොයා ගන්න වත් බැරි වුණා.

05-4

ඉන් පසු අපි ග‍්‍රාම සේවක හමු වුණා. ඔහු ටිකක් උදව් කළා. වත්තෙ කැලෑ සුද්ධ කරලා පැල්පතක් හදලා දුන්නා. එහෙම දීලත් අල්ලපු ගෙවල්වල සිදු වී තිබෙන සිද්ධීන් ඇස් දෙකට පෙනෙන විට ඉන්න බැහැ. මන්ද යත් අපේ ගම අමු සොහොනක් වෙලා තිබුණා. ඉන් පසුවත් වතුර නැතිව, හරි හැටි කෑමක් නැතිව අවුරුද්දක් දෙකක් පමණ ජීවත් වුණා. ඉන් පසු කුලී වැඩ කරලා දරුවන්ට උගන්වලා හදා ගෙන හිටියා. ඉන් පසු මගේ ස්වාමි පුරුෂයාට අසනීප වුණා. එක් එක් ඉස්පිරිතාලයක් ගාණෙ අර ගෙන ගිහිල්ලත් සනීප කරන්න බැරි වුණා. අත් පා එකින් එක ම ගලවන්න සිද්ධ වුණා. රැකියාවක් කරන්න බැරි වුණා. මම කුලී වැඩ කරලා දරුවන්වයි, ස්වාමි පුරුෂයාවයි බලා ගත්තා. ඉන් පසු මට මගේ ස්වාමි පුරුෂයාව බේරා ගන්න බැරි වුණා. 2013 අම්පාර රෝහලේ දී ඔහු මිය ගියා. එතැනින් දරුවන්ගේ අධ්‍යාපනයත් අවසන් වුණා. ඔවුන් කුලී වැඩ කරලා අපේ ජීවිතය ගෙවා ගෙන යනවා. මට වෙච්ච මේ තත්ත්වය වෙන කිසි ම කෙනෙකුට ඇති වෙන්නත් හොඳ නැහැ. අවුරුදු 25 කාලයක් හදා ගත්ත දරුවන්ට යුද්ධය කියන වචනය වත් අහන්න සිද්ධ වෙන්න එපා.

මෙයට,
සිවපාක්කියම්.

CMP/AMP/SAM/MTY/05

எனது அன்பு சகோதரிக்கு பாசமிகு தங்கை எழுதுவது

சிவபாக்கியம்
சம்மாந்துறை

எனக்குகடந்த கால யுத்தக்கறை படிந்த அந்த காலங்களில் ஏற்பட்ட துயரங்களை இந்த கடிதத்தின் ஊடாக தெரியப்படுத்துகின்றேன். நாங்கள் குடும்பமாக சம்மாந்துறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தக் காலத்தில் எனக்கு ஞாபகம் இருக்கின்றது. 1987ம் ஆண்டு நினைக்கின்றேன். இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட தமிழ் முஸ்லீம் கலவரத்தினால் நானும் எனது கணவரும் இரண்டு பிள்ளைகளும் எனது தாயும் தம்பியும் அடைக்கலம் தேடி சம்மாந்துறை தபால் நிலையத்தில் பொதுமக்களோடு தஞ்சமடைந்தோம். அந்த நேரத்தில் அரசாங்கத்தின் ஊடாக கிராம சேவகர் மூலம் உணவுதந்தார்கள். மேலும் இந்திய இராணுவத்தினர் எங்களுக்கும் அடைக்கலம் தேடி அங்கு வந்தவர்களுக்கும் உணவு தந்தார்கள். மேலும் தொடர்ந்து அங்கு இருக்க முடியாத காரணத்தினால் இந்திய இராணுவத்தின் உதவியுடன் மீண்டும் எங்களது இடத்திற்கு சென்றோம்.

அதன் பின்னர் 1990ம் ஆண்டு ஏற்பட்ட எல்.ரி.ரி.ஈ பயங்கரவாத இயக்கத்தினர்அரச படையினருக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டனர். தாக்குதல்கள் இரு தரப்பினர்களுக்கும் இடையில் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பொது மக்கள் எல்லோரும் இடம்பெயர்ந்துசெல்ல நேர்ந்தது. அவர்களுடன் மீண்டும் நாங்களும் இடம்பெயர்ந்து கோரக்கர் தமிழ் வித்தியாலயத்தில் தஞ்சமடைந்தோம். இவ்வாறு தஞ்சமடைந்தவர்களை இராணுவத்தினர் படுகொலை செய்தார்கள். சுட்டுக் கொலை செய்தனர். துன்பப்படுத்தினார்கள். இதன் காரணமாக எல்லோரையும் விட்டுவிட்டு ஒவ்வொரு திசைக்கும் ஓடி தப்பிச் சென்றனர். இவ்வாறு எனது பிள்ளைகளும், கணவரும் சகோதரங்களும் ஒவ்வொரு திசைக்கு ஓடிச் சென்றோம். இராணுவத்தினர் சென்ற பின்னர் நானும் எனது கணவரும் இரண்டுபிள்ளைகளும் தாயும் பொதுமக்களோடு மக்களாக காரைதீவை சென்றடைந்தோம். அங்குள்ள உறவினர் வீட்டில் மீண்டும் தஞ்சமடைந்தோம். அதன் பின்னர் இராணுவ வீரர்கள் எங்களுடைய இடங்களில் இருந்து சென்றுவிட்டார்கள் என்பதனை அறிந்து மீண்டும் எங்களுடைய இடத்திற்குசெல்ல முற்பட்ட போது போகும் வழியில் பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்தும் எரித்தும் கிடப்பதாக அறிந்து கொண்டோம். அவ்விடத்திற்கு சென்று பார்த்த அங்கு சுடுபட்டு கிடந்தவர்களுக்கு இடையில் எனதுதம்பியும் சுடுபட்டு இறந்து கிடந்ததைக் கண்டு மனம் பதறிப் போனோம். இந்நிலையில் இராணுவத்தினர் அடையாளம் கண்டுகொள்வதற்கு அழைத்த போது இது எனது தம்பி என்றுகூறி அவரை அடக்கம் செய்ய முடியாத நிலையில் அவலக் குரலோடு அங்கிருக்க முடியாமல் நடந்து வீதியில் சென்றுகொண்டிருந்தோம். அங்கு கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் இராணுவத்தினர் மக்களை சுட்டும் டயர் போட்டு எரித்தும் கொலை செய்தனர். இதனைப் பார்த்து முகத்தை மூடிக் கொண்டு மனம் பதபதக்க கண்களின் கண்ணீரோடு பண்டிருப்பில் உள்ள எனதுஅக்காவின் வீட்டிற்குசென்றோம். அங்கு சென்ற போது அங்கும் உள்ளவர்களையும் இராணுவத்தினர்சுற்றி வளைத்து வீட்டில் இருந்தவர்களை பிடித்துச் சென்றுகொலை செய்தனர் என்ற செய்தி கேட்டோம். இவ்வாறு பிடித்து சென்றவர்கள் எங்களது உறவினர்கள் என்று தெரிந்ததும் இடம்பெயர்ந்து சென்ற எங்களுக்கு அவர்கள் ஆறுதல் சொல்வதா இல்லை நாங்கள் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதா? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருநதோம். கண்களில் கண்ணீரோடு எப்போது விடிவு கிடைக்கும் என்றுஏக்கத்தோடு இந்தோம். இந்த நிலையில் இராணுவ வீரர்கள் பொது மக்களை காக்க குருவிகளை சுடுவது போன்றுஅடுக்கடுக்காக சுட்டு வீழ்த்தி டயர்களை போட்டு எரித்தனர். எனதுதம்பியை அடையாளம் கண்டு எனது தம்பியின் உடலை எடுத்து அடக்கம் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவரை எடுத்து அடக்கம் செய்தால் எங்களையும் அவர்கள் இயக்கம் என்று சொல்லி சுட்டுக் கொன்றுவிடுவார்கள். அதனால் எனதுசொந்த தம்பியேயே எனதுதம்பி இல்லையென்று மனம் குமுற சொல்லி விட்டேன். அதன் பின்னர் எனது கணவரும் காணாமல் போய்விட்டார். எனது அம்மாவை பாண்டிருப்பில் விட்டுவிட்டு அங்கிருந்து எனதுபிள்ளைகளை அழைத்துக் கொண்டு கால்நடையாக எனது கணவரின் ஊரான தாழங்குடாவிற்குசென்றுதஞ்சமடைந்தோம். அங்கு சிறிது காலம் உற்றார் உறவினர்கள் வீட்டில் உணவு உடை இல்லாமல் நீரை அருந்திக் கொண்டு வாழ்ந்தோம். அதன் பின்னர் எனது கணவர்நாங்கள் இருந்த இடத்தை தேடிக் கண்டுபிடித்து எங்களுடன் வந்து சேர்ந்தோர். அவரைக் கண்ட சந்தோசம் ஒருபக்கம் இருக்க மீண்டும் கவலை ஏற்பட்டது. இராணுவ வீரர்களும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் அங்கேயும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. நாங்கள் மீண்டும் அங்கிருந்து பாடசாலையில் தஞ்சமடைந்தோம். எந்தவிதமான வருமானமும் இல்லாது தொழிலும் இல்லாது உறவினர்களின் உணவுதர அதனை உண்டு மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தோம். இந்த நிலை எங்களுக்கு மட்டுமன்றி அனைத்து தமிழ் மக்களுக்கும் ஏற்பட்டது. மீண்டும் 1995ம் ஆண்டு நானும் எனது கணவரும் பிள்ளைகளும் எனது கிராமத்திற்கு கிராம சேவகர் மூலம் 25 குடும்பத்தோடு வந்தோம். அந்த வேளையில் எங்கள் வீடுகள் சுடுகாடாக மாறி இருந்தன. அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு நாங்கள் கிராம சேவகர் ஊடாக கண்டு அதன் பின் அவர் எங்களுக்கு சில உதவிகளை செய்தார். நாங்கள் காடு வெளியாக்கி சிறிய கொட்டில் அடித்து தந்தார்கள். தந்தும் பக்கத்து வளவுகளில் நடந்திருக்கும் சம்பவங்களை கண்ணால் பார்க்கும் போது இருக்க முடியவில்லை. ஏனெனில் எங்கள் கிராமம் சுடுகாடாக மாறியது. அதன் பின் கஷ்டப்பட்டு இருக்க தண்ணீரல்லாமல் ஒழுங்கான சாப்பாடு இல்லாமல் ஒருவருடம் இரு வருடங்களாக வாழ்ந்து வந்தோம். அதன் பிறகு கூலித்தொழில் செய்து பிள்ளைகளை படிக்க சுகவீனம் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆஸபத்திரியாக அலைந்து திரிந்தாலும் சுகம் வரவில்லை. கால் கரங்கள் ஒவ்வொன்றாக கட்டப்பட்ட நிலைமை வந்துவிட்டது. தொழில் செய்ய முடியவில்லை. நான் கூலித் தொழிலுக்குபோய் பிள்ளைகளையும் கணவரையும் பார்த்து வந்தேன். அதன் பிறகு என்னால் என் கணவரையும் பார்த்து வந்தேன். அதன் பிறகு என்னால் என் கணவரை காப்பாற்ற முடியவில்லை. 2013இல் அம்பாறை ஆஸ்பத்திரியில் மரணித்து விட்டார். அதன் பிற்பாடு பிள்ளைகளின் படிப்பும் முடிவுற்று அதுகள் கூலித்தொழில் செய்து எங்களின் காலத்தை ஒட்டிக் கொண்டு வாழ்கின்றோம். எனக்கு வந்த நிலைமை யாருக்கு வரவேண்டாம் வரவும் கூடாது. 25 வருடங்களாக வளர்ந்து வந்திருக்கின்ற பிள்ளைகளுக்கு யுத்தம் என்ற சொல்ல வர வேண்டாம்.

இப்படிக்கு
சிவபாக்கியம்






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License