I am living a peaceful life

The experiential of sharing of the brother who worked hard and came up.


නිදහසේ ජීවත් වෙනවා

වෙහෙස මහන්සි වී වැඩ සතුටින් ජීවත් වූ සහෝදරයා හදා ගැනීමේ අත්දැකීමක්.


நிம்மதியான வாழ்க்கை வாழ்கின்றேன்

கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறிய சகோதரரின் அனுபவ பகிர்வு.



CMP/AMP/SAM/MTY07
T.Thayalan
Sammanthurai
2016.05.02
My biography

Dear mother,
I hope your are well, I pray to god that you are well too. I am the sixth child in the family, there are ten in my family. 04 sisters and 05 brothers. Two of my brothers died. So we are eight.

My mother had asthma and my father was old. The responsibility of the family fell on me. I went through lot of hardships to look after my family. My elder brothers left us. My mother often went to the hospital. Even though I am the male, I was young. They brought husky from the field and I used to sieve it and get the rice from it. I went to the mill and worked and bought groceries home. We had meals once a day. If it’s lunch no dinner, If it is dinner no lunch. We went through lot of difficulties. I don’t think anybody suffered in their young age like me. I didn’t have change of dress. I washed my dress each day and put it. I didn’t have house to live in. I lived in a cadjun house.

I used to sleep there. Thieves come at night and push the door. My mother screams and all of us used to scream. When my sisters attained puberty, I was the one who use to pour water on them. I looked after my family. One day my mother was hospital and my youngest sister attained puberty, I have to do everything for her. I had only relatives only for names.

I got a job in 1995, after that my difficulties reduced a little. I got married in 1996, my mother died after that. I married off my other sisters on my expenses and looked after their children. Even though I did everything for them, they forgot me. I put everything to god and led my life.

I got affected by the ethnic conflict in 1989. The Indian army came in 1990. We were frightened, during that time we were so frightened to be males.
Now I am living a peaceful life.



CMP/AMP/SAM/MTY/07-1

T. දයාලන්,
සම්මන්තුරේ.

යුද්ධයේ බලපෑම්

මගේ ජීවිත කථාව.

ආදරණීය අම්මා වෙත

මා සනීපෙන් ඉන්නවා. ඔබගේ සැපදුක්වලට දෙවියන් වහන්ගේ පිහිට ලැබෙන්න ඕන. මම පවුලේ 06 වැනි දරුවා. අපේ පවුලෙ සහෝදර සහෝදරියන් 10 දෙන යි. එයින් ගැහැණු සහෝදරියන් 04 දෙන යි. පිරිමි සහෝදරයන් 05 දෙන යි. පිරිමි සහෝදරයන් 02 දෙනෙකු මිය ගියා. අපි 08 දෙනෙකු ඉන්නවා.

මගේ අම්මට ඇදුම රෝගය. තාත්තට වයස යි. පවුලේ වගකීම තිබෙන්නෙ මගේ අත. මම බොහොම දුක් විඳලා අපේ පවුල බලා ගත්තා. අයියලා අපිව දාලා ගියා. පවුල් බර මගේ අත. අම්මා නිතර නිතර රෝහලට යනවා. මම පිරිමි දරුවෙකු වුණත් වයසින් බාල යි. මම වට්ටෙයිවලට (වෙල් යායවලට) ගොස් තණකොළ කපලා, වී කරල් ඇහිඳ ගෙන එනවා. ඒ කාලෙ දහයියා ගෙනැත් හලනවා. මම ගොස් ඒවා පොළලා, ඒවායේ තිබෙන හුණුසහල් ටික ගෙනැවිත් බත් උයා ගෙන කනවා. මෝලට වැඩට ගිහිල්ලා වැඩ කරලා සල්ලි අර ගෙන ඇවිල්ලා ඒ සල්ලිවලින් බඩු අර ගෙන බත් උයනවා. කෑම එක වේලක් තමයි. දවාලට කෑවොත් රෑට කෑම නැහැ. රෑට කෑවොත් දවාලට කෑම නැහැ. කොහොම හරි එක වේලක් පමණ යි. හරියට දුක් වින්දා. පුංචි කාලයේ කවුරු වත් මා වාගේ දුක් විඳින්නෙ නැතුව ඇති.

07 - 2

මාරුවට අඳින්න ඇඳුමක් නැහැ. හෝදලා තමයි අඳින්නෙ. ඉන්න ගෙයක් නැහැ. පොල් අතු පැලක තමයි ජීවත් වුණේ.

කාගෙවත් ගෙදරකට ගිහිල්ල තමයි නිදා ගන්නෙ. ඒ කාලෙ හොරු එනවා. දොර තල්ලු කරනවා. අපේ අම්මා ඇවිල්ලා කෑ ගහනවා. අපිත් එකතු වෙලා කෑ ගහනවා. අපේ නංගිලා වැඩිවියට පත් වුණා ම මම තමයි ඔවුන්ගේ ඔළුවට වතුර වත් කරන්නෙ. ඒ විදියට මම අපේ පවුලට සැලකුවා. දවසක් අම්මා ඉස්පිරිතාලෙ. මගේ බාල ම නංගි වැඩිවියට පත් වුණා. මොනවා කරන්න ද කියා දන්නෙ නැහැ. මම තමයි මුලින් ම ඔළුවට වතුර වත් කළේ. මොනවා කරන්න ද අපට ඥාතීන් කියලා කවුරු වත් නැහැ. අම්මා හැටන්. තාත්තා ඉන්දියාව. ඉන්න අයට නිකන් ම මාමා, නැන්දා, පුංචි අම්මා කියලා කටට එන නෑකම කියලා කථා කළා.

ඒවා තමයි නෑකම්. 1995 දී මට ප‍්‍රාදේශීය සභාවේ රැකියාවක් ලැබුණා. ඉන් පසු අමාරුකම් ටිකක් අඩු වුණා.

1996 වර්ෂයේ මම විවාහ වුණා. ඉන් පසු මගේ අම්මා මිය ගියා. මගේ නංගිලාට මම තමයි මගේ වියදමින් විවාහ කර දුන්නෙ. විවාහ කර දුන්නා විතරක් නෙවෙයි ඔවුන්ගේ දරුවන්වත් මම තමයි බලා ගත්තෙ.

07 - 3

එච්චර දුක් විඳලා මම හදලා විවාහ කර දීලා දැන් මාව අමතක වෙලා. කමක් නැහැ. දෙවියන් ඉන්නවා කියලා හිතා ගෙන මගේ ජීවිතේ ගෙන යනවා.

1989 දී ඇති වූ ත‍්‍රස්තවාදී කලබලවලින් මට බලපෑම් තිබුණා. 1990 දී ඉන්දියානු හමුදාව ආවා. අර ගෙන ගිහින් ඔලුබක්කට පෙන්වනවා. ඉන්දියානු හමුදාව ආවොත් අපි හරි බයෙන් තමයි ඉන්නෙ. ඒ කාලෙ දි අපි පිරිමියෙක් වෙලා ඉපදුණේ ඇයි කියලත් හිතනවා.

එවැනි කාල වකවානුවක ඉඳලා දැන් නිදහසේ ජීවත් වෙනවා.

මෙයට,
T. දයාලන්

CMP/AMP/SAM/MTY/07

ரி தயாளன்
சம்மாந்துறை
2016.05.02

எனது வாழ்க்கை வரலாறு

அன்புள்ள அம்மாவுக்கு,

நான் நலம் உங்கள் நலத்திற்கும் இறைவன் துணைபுரிய வேண்டும். நான் எனது குடும்பத்தில் 6வது பிள்ளை எனக்கு 10 சகோதரர்கள் அதில் பெண் சகோதரர்கள் 4 ஆண் சகோதரர்கள் 5 பேர். அதில் 2 ஆண் சகோதரர்கள் செத்து விட்டார்கள். நாங்கள் 8 பேர் இருக்கின்றோம்.

எனது அம்மாவிற்கு தொய்வு (அஸ்துமா) அப்பா வயது போனவர். குடும்பப் பொறுப்புஎன் கையில். நான் கடும் கஸ்டப்பட்டு எனது குடும்பத்தைப் பார்த்து வந்தேன். அண்ணன் மார் எங்களை விட்டு போய்விட்டனர். குடும்பப்பாரம் எனது கையில். அம்மா அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் விடுவார். நான் ஆண் பிள்ளை என்றாலும் எனக்கு வயது சிறியது. நான் வட்டைக்குள்ள களவெட்டி பார்த்து கறி பொறுக்கி வருவேன். அந்தக் காலம் உமி கொண்டுவந்து கொட்டுவார்கள். அதை நான் போய் புடைப்பேன். அதில் வரும் குறுநலைக் கொண்டு வந்து சோறுஆக்கிச் சாப்பிடுவோம். மில்லுக்கு வேலைக்கு போய் வேலை செய்து வந்துகாசி கொண்டுவந்து அதில் சாமான் வாங்கி சோறு ஆக்குவோம். சாப்பாடு ஒருநேரம்தான் பகலைக்குச் சாப்பிட்டா இரவைக்குச் சாப்பாடு இல்லை. இரவைக்குச் சாப்பிட்டா பகலைக்கு இல்லை.எதாவது ஒரு நேரம் மட்டும்தான் சாப்பாடு கடும் கஸ்டப்பட்டோம். எனக்குசிறிய வயது யாரும் அந்த வயதில் இப்படி கஸ்டப்பட்டிருக்க மாட்டார்கள்.

உடுப்புமாறிப் போட மாற்றுத் துணி இல்லை. கழுவிப் போட்டுத்தான் உடுப்புப் போடுவோம். இருக்க வீடும் இல்லை. ஒரு ஓலைக் குடிசையில்தான் வாழ்ந்தோம்.

நான் ஆக்கள் வீட்டதான் போய் படுப்பேன். அந்த நேரம் கள்ளன் வருவான். கதவைத் தள்ளுவான் எங்கட அம்மா வந்து கத்துவா. நாங்களும் சேர்ந்து கத்துவோம். எனது தங்கைமார் சாத்தியம் ஆனதும் நான் அவர்களுக்கு தண்ணீர்ஊற்றுவேன். அப்படியெல்லாம் நான் எனது குடும்பத்தைப் பார்த்தேன். ஒருநாள் அம்மா ஆஸ்பத்திரியில் எனது கடைசி தங்கை சாமத்தியம் ஆகிவிட்டாள். என்ன செய்வதுஎன்று தெரியாமல் நான் கண்ட தண்ணி ஊத்தினேன். என்ன செய்வது எங்களுக்கு சொந்தம் யாரும் இல்லை. அம்மா ஹட்டன். அப்பா இந்தியாவில இருக்கிறவர்களை சும்மா மாமி, மாம, சித்தி என்றுவாயில் வந்த உறவுகளைச் சொல்லி கூப்பிட்டேன்.

அதுதான் சொந்தம் 1995ம் ஆண்டுஎனக்குபிரதேச சபையில் வேலை கிடைத்தது. அதன் பிறகுகஸ்டம் குறைந்து விட்டது.

1996ம் ஆண்டு நான் திருமணம் முடித்தேன். அதன் பிறகுஎனதுதாயார் இறந்து விட்டார். எனது தங்கைமாருக்கு நான்தான் எனது செலவில் கல்யாணம் கட்டி வைத்தேன். அது மட்டும் இல்லை அவர்களுக்கு பிறந்த குழந்தைகளையும் நான் தான் பார்த்தேன்.

அவ்வளவு கஸ்டப்பட்டு நான் வளர்த்து கல்யாணம் கட்டி வைத்த என்னை மறந்துவிட்டார்கள். பரவாயில்லை. கடவுள் இருக்கான் என்றுஎண்ணி எனதுவாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கேன்.

1989ம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக நான் பாதிக்கப்பட்டேன். 1990ம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் வந்தனர். முண்டத்திடம் கொண்டு காட்டுவார்கள். இந்திய இராணுவம் வந்தாலே நாங்கள் பயந்து போய் இருப்போம். இந்தக் காலத்தில் ஆண் பிள்ளையாக ஏன் பிறந்தோம் என்று யோசிப்போம்.

அப்படியான காலக்கட்டத்தில் வாழ்ந்து இப்போது நிம்மதியான வாழ்க்கை வாழ்கின்றேன்.

இப்படிக்கு






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License