CMP/AMP/SAM/BLJ/06 - 1
M.A.Faleela
Block J west 2
Thennampillai village
Sammandhurai
2016.05.09
History of my life story
Ours is a beautiful family with 12 members with 6 boys and 4 girls and our father and mother. My father worked as a labourer. He worked and brought all 10 of us. During 1989-1990 the LTT shot one of my brothers. During this time we were scared. and we didn’t have food , cloths. We were so scared and we were hiding from the terrorists. Then we went to our relatives house and stayed there for three days. On the third day we left their house and again went to our house we were always scared when we stayed at our home few years later the government brought end to this war. Now we were without fear and lived happily. My brothers built a house for my elder sister and they married her to a person. We all lived in one house with much difficulties later we built small house with mud. My father said that the elder son is growing old and had to marry him off and he married him off. My father built a house for my sister and married her to person who loved her. After that my father sold milk and brought up us. Time passed my other brother also married later on we also got married. Few years later my father also passed away. After his death my mother also got sick. Some years later I had 2 girls my first daughter is 10 the other is 7. Both of them are studying well. My family is in a good position now. We are live happily.
CMP/AMP/SAM/BLJ/06 – 01
M.A. පලීලා,
බ්ලොක් J බටහිර II,
තෙන්නම්පිල්ලෙයි ගම්මානය,
සම්මන්තුරේ.
2016.05.09
මගේ ජීවිත කතාව.
ඉහත නම් සඳහන් මාගේ පවුල 12 දෙනෙකුගෙන් යුත් ලස්සන පවුලක්. එම පවුලේ පිරිමි දරුවන් 06 දෙනෙකුත්, ගැහැණු දරුවන් 04 දෙනෙකුත්, මව සහ පියා සතුටින් ජීවත් වෙනවා. මගේ පියා කුලී වැඩ කරලා දරුවන් 10 දෙනාත්, අම්මත් ජීවත් කෙරෙව්වා. 89-90 වර්ෂවල ඇති වූ ජාතිවාදී අරගලයෙන් L.T.T.E. සංවිධානය මගේ සහෝදරයෙකු වෙඩි තබා මරා දැමුවා. ජාතිවාදී අරගලයේ දී අපි බය වෙලා, මුළු ගැන්විලා ඉන්න තැනක් නැතිව කන්න බොන්න ඉඳුම් හිටුම් කිසිවක් නැතිව ඒ මේ අත දුවලා හැංගුණා. ඉන් පසු අපි අපේ ඥාතීන්ගේ නිවෙස්වල නැවතී සිටියා. දින 03ක් ගත වුණා. ඥාතීන්ගේ නිවෙස්වලින් ඉවත් වී නැවතත් අපේ නිවසේ රැඳී සිටියා. අපේ නිවසේ සිටින සෑම මොහොතක ම අපට බියක් දැනුණා. වසර කිහිපයකට පසු ජාතිවාදී අරගල සියල්ලක් ම රජයෙන් අවසන් කරලා දැන් අපි සැම දෙනා ම අපේ නිවෙස්වල බිය සැක තුරන් වී සතුටින් ජීවත් වෙනවා. ඉන් පසු මගේ වැඩිමහල් සහෝදරයන් වැඩිමහල් සහෝදරියට නිවසක් සාදා දීලා විවාහයක් කර දුන්නා. ඉන් පසු අපි සියලු දෙනා ම එක ම නිවසක අමාරුකම් මැද සියලු දෙනා ම ජීවත් වෙමින් සිටියා. ඉන් පසු අපට ම කියා මැටිවලින් කුඩා පැල්පතක් සාදා ගෙන අපි සැම දෙනා ම අපේ පැල්පත්වල
06 - 02
ජීවත් වෙමින් සිටියා. ඉන් පසු අපේ තාත්තා කීවා වැඩිමහල් පුතාටත් වයස ගෙවී යනවා. ඔහුට විවාහයක් කර දෙන්න ඕන කියලා. ඔහුට විවාහයක් කර දුන්නා. ඉන් පසු මගේ සහෝදරියටත් කෙනෙකු ආදරේ කරලා මම මෙයාව විවාහ කර ගන්නවා කියා කීවා. ඉන් පසු මගේ පියා මහන්සි වෙලා ඇයටත් නිවසක් සාදා දීලා විවාහ කර දුන්නා. ඉන් පසු පියා කිරි විකුණලා අපිව ජීවත් කළා. කලක් ගත වුණා. මගේ දෙවැනි සහෝදරයටත් විවාහයක් කර දුන්නා. ඉන් පසු ක්රම ක්රමයෙන් අපි සියලු දෙනා ම විවාහ කර ගත්තා. ඉන් පසු කාලය ගෙවී ගියා. මගේ පියා මරණයට පත් වුණා. පියාගේ මරණයෙන් පසු මවත් ලෙඩ වුණා. කාලය ගෙවී ගියා. මට ගැහැණු දරුවන් 02 දෙනෙකු ඉපදුණා. එක් දරුවෙකුට වයස අවුරුදු 10 යි. දෙවැනි දරුවට වයස අවුරුදු 07 යි. මේ දෙදෙනා හොඳින් ඉගෙන ගන්නවා. මගේ පවුල දැන් සතුටින් ජීවත් වෙනවා.
CMP/AMP/SAM/BLJ/06
எம். ஏ. பழிலா
புளக்ஜேமேற்கு 2
தென்னம்பிள்ளைக்கிராமம்
சம்மாந்துறை
2016.05.09
இன மோதல்
எனது வாழ்க்கை வரலாறுகள்
மேற்படி பெயருடைய எனது குடும்பமானது 12 பேரைக் கொண்ட ஒரு அழகிய குடும்பம் அந்தக் குடும்பத்தில் 6 ஆண் பிள்ளைகளும் 4 பெண் பிள்ளைகளும் தாயும் தகப்பனும் வாழ்ந்து வருகிறோம். எனது தகப்பன் கூலிவேலை செய்து 10 பிள்ளைகளையும் எனது தாயையும் வளர்த்து வந்தார். 89-90 ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் எல்.ரி.ரி.ஈயினர் எனது சகோதரர்களில் ஒருவனை சுட்டுக் கொன்றுவிட்டார்கள். இனக்கலவரத்தில் நாங்கள் பயந்து அஞ்சி ஒடுங்கி இருப்பதற்கு இடமின்றி உணவின்றி உடை இன்றி இங்கும் அங்கும் ஓடி ஒழிந்து கொண்டோம். பின்னர் நாங்கள் எங்களது உறவினர்களின் வீட்டில் தங்கினோம். 3 நாட்கள் கடந்தது. உறவினர்களின் வீட்டை விட்டு மீண்டும் எங்களுடைய வீட்டில் தங்கினோம். எங்களது வீட்டில் இருக்கும் போதெல்லாம் எங்களுக்கு பயம் ஒன்று ஏற்பட்டது. பின்னர் ஒரு சில ஆண்டுகளில் இனக்கலவரங்கள் அனைத்தையும் அரசாங்கம் முறியடித்துக் கொண்டு இப்போது நாங்கள் எல்லோரும் எங்களது வீடுகளில் பயம், அச்சம் எல்லாம் நீக்கி நாங்கள் சந்தோசமாக வாழ்ந்து வருகிறோம். அதற்குப் பின்னர் எனது சகோதரர்கள் எனது மூத்த சகோதரிக்கு ஒரு வீட்டைக்கட்டி திருமணம் முடித்து வைத்தார்கள். அதற்குப்பிறகு நாங்கள் எல்லோரும் ஒரே வீட்டில் கஷ்டத்திற்கு மத்தியில் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருந்தோம். அதற்குப் பின்னர் எங்களுக்கென்று களி மண்ணால் ஒரு சிறிய குடிசைய களி மண்ணால் கட்டிக் கொண்டு நாங்கள் பின்னர் அனைவரும் எங்களது குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு எங்களது தந்தை கூறினார் எனது மூத்த மகனுக்கு வயது கடந்து கொண்டு செல்கின்றது. அவனுக்கும் ஒரு திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறி அவருக்கும் திருமணம் முடித்துவிட்டோம். பின்னர் எனது சகோதரியை ஒருவன் விரும்பி நான் இவளைத் திருமணம் முடிக்கப் போகிறேன் என்று கூறினார். அதே நேரம் எனது தகப்பன் கஷ்டப்பட்டு அவளுக்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொடுத்து அவளுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தோம். பின்னர் எங்களுக்கு எனது தகப்பன் பால் விற்று எங்களை வளர்த்து வந்தார். காலம் கடந்தது. எனது தகப்பனும் மரணித்துவிட்டார். தகப்பன் மரணித்து விட்டதன் பின் தாய் நோயுற்று விட்டார். காலம் கடந்தது. எனக்கு 2 பெண் பிள்ளைகள் பிறந்தது. ஒரு பிள்ளையின் வயது 10 இரண்டாவது பிள்ளையின் வயது 7. இவர்கள் இருவரும் நன்றாகப் படிக்கின்றார்கள். எனது குடும்பம் தற்போது நல்ல நிலையில் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றது.