I built self confidence

The story of a woman who has come up with efforts despite various difficulties.


මම මා ගැනම විශ්වාසයක් ඇති කළා

විවිධ දුෂ්කරතාවන් අතර වෙහෙස මහන්සි වී සිටින කාන්තාවගේ කතාව.


எனக்குள் நம்பிக்கையை உருவாக்கினேன்

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியால் முன்னேறிய பெண்ணின் கதை.



CMP/AMP/SAM/BLJ 07
A.Jayira
141/D, Block “J” West II
Sammanthurai
06.05.2016

With much hardship my parent made us study. There are 4 girls including me and two boys. My father wanted me to study well. He was a farmer. He told me often, I was born a boy, all this hardships would have gone away. What my father earned was not enough to run the family. Expenses for education, meals, it was too much. We spent less amount for meals and lived our life. My father passed away. God gave us misery after misery. My main aim was to finish my studies and start a small industry and reduce the burden of my family. When I was studying Grade 7, I went to the fields and did odd jobs, with the money I got, I spent it on my studies. The balance money I gave it to my mother. I didn’t go for tuition . I borrowed books from others and studied. My sisters also went to the fields for work. I was the out going person in the family, and moved with the other society freely. I completed my studies and went as preschool teacher on 15.01.1991to Asma vidyalayam. I taught children from 3 years to 5 years. I went from house to house and took all the children who didn’t come to school and gave them free classes. All the staff in the school contributed 300/= and gave me 1800/= for a month.

I trained students for cultural programmes. The dance I trained got awards in Divisional level and Provincial level. I trained students in march past and drill. and got them awards. One day the principal called me and asked me to fill an application for well fare officers. I applied and went for the interview. I was selected and got my appointment in 1994. I worked as a welfare officer for 11/2 years. I got information that this job was only limited for Ampara and they want to stop this job. I applied for samurdhi and got the appointment in the District secretariat, that time the chairman came and told them not to give the letter to me as my brother had worked for United National Party. I was so shocked and I didn’t know what to do. I told them that my brother will get married and move away. I asked them to give the appointment letter. They refused. I went home and cried a lot. I believed myself and told myself not to trust anyone. I went to AlAshar vidydalayam and taught there for 12 years. As there was shortage of space for the students the W.D.F constructed a building for the school in my land. Now there are 75 students and four teachers. I work as principal and 3 teachers are there. I went for several training and I have a diploma in the Batticaloa, a one year diploma.
• Ampara Aadi - one year diploma
• Colombo Bright Organization - One year Preschool diploma
• Akkaraipatru W.D.F Italian Organization - One year diploma
• Sainthamarudu Alhilal Preschool - One year diploma
• Nutritious food Project training

I did awareness training, health, management training. I am the vice president for V.C.R.M.C. Finally I did official language Sinhala III for 108 hours and passed the exam.I passed Sinhala in OL too. I have been doing this Slida Preschool for 25 years. on 28.04.2016 we received 3000/= for three months, totaling 9000/= and we were so happy. Its all God’s grace.




CMP/AMP/SAM/BLJ/07 – 01

A. ජායිරා,
141/D, බ්ලොක් J බටහිර II,
සම්මන්තුරේ.
2016.05.16

මගේ ජීවිතයේ ඇති වූ ශෝක ජනක තත්ත්වය.

මගේ ජීවිතයේ මා හට ඇති වූ ශෝකය. මුල දී මගේ දෙමව්පියන් ඉතා මත් අමාරුකම් මත මට අධ්‍යාපනය ඉගැන්නුව. මගේ පවුලේ සාමාජිකයන් 08 දෙන යි. මව, පියා, සහෝදරියන් 04 දෙන යි, නංගිලා 01 යි, මා ඇතුළු සහෝදරියන් 02 දෙනෙකුගෙන් යුත් පවුලක ඉපදුණු මා, මාගේ පියාගේ අදහසක් තිබුණ මට හොඳින් උගන්වන්න ඕන කියලා. පියා ගොවිතැන් කරනවා. පියා නිතර නිතර කියනවා මගේ දුව පිරිමියෙකු වෙලා ඉපදුණා නම් මගේ දුක් සියල්ල නැති වෙනවා කියා. පියාගේ ආදායම එදිනෙදා වියදමට ප‍්‍රමාණවත් නැහැ. අධ්‍යාපනික වියදම්, සෞඛ්‍ය වියදම්, කෑම වියදම් මේ විදියට වියදම් අධික නිසා මගේ පියා රු: 50/=ට ලබා ගන්නා කෑම පාර්සලයක් මම රු: 25/=ට ලබා ගෙන අපි චාම් ජීවිතයක් ගත කළා. ටික කලකට පසු පියා මිය ගියා. අමාරුකම් මැද ජීවත් වූ අපිව දෙවියන් වහන්සේ තවත් අමාරුවේ දැම්මා. පියා ගියත් මගේ අධ්‍යාපනය අත හැරියෙ නැහැ. මම කෙසේ හෝ හොඳින් ඉගෙන ගෙන පොඩි රැකියාවක් හෝ කරල පවුලේ බර අඩු කරන්න ඕන කියනෙක තමා මගේ ඉලක්කය. 7 ශ්‍රේණිය ඉගෙන ගන්නා කාලයේ සිට සෙනසුරාදා ඉරිදා නිවාඩු දිනවල කුඹුරුවලට වල් නෙළන්න යනවා. එහෙන් දෙන මුදල් අර ගෙන මගේ අධ්‍යාපනයට අවශ්‍ය දේවල් ලබා ගන්නවා. ඉතිරි මුදල් මවගේ අතට දෙනවා. ටියුෂන් පන්තිවලට යන්නෙ නැහැ පහසුකම් නැති නිසා.

07 - 02

වෙනත් අය පාඩම් කරපු පොත් ටිකත් අර ගෙන පාඩම් කරනවා. මගේ අනික් සහෝදරියනුත් මා සමග වල් නෙළන්න එනවා. එම සහෝදරියන්ට බය ගතියක් තිබෙනවා. පියා මරණයට පත් වුණා කියන දුක. මම තමයි ඔවුන්ගේ සිත් සනසන්නේ. මම නිතර ම කඩිසරව තමයි ඉන්නෙ. සමාජයේ ඕනෑ ම කෙනෙකු සමග සුහදව කථා කරනවා. මට බාල අයටත් ඉගෙන ගන්න අවශ්‍ය පහසුකම් සලසා දීලා ඉගෙන ගැනීමට දිරි ගන්වනවා. මෙතරම් අමාරුකම් මත ඉඳ ගෙන වුවත් අපගේ තත්ත්වය ගැන සලකා කෙසේ හෝ ඉගෙන ගන්න ඕන කියන ආශාවක් තිබුණා. කෙසේ නමුත් මහන්සි වෙලා අධ්‍යාපනය අවසන් කළා. 1991.01.15 දින පෙර පාසල් ගුරුවරියක් ලෙස අල්-අස්මා විද්‍යාලයට එන ලෙස විදුහල්පතිතුමා කීවා. අපේ තත්ත්වය ගැන සිතලා, එහි වයස අවු: 03 සිට 05 දක්වා වූ ළමුන් 30ක් සිටිනවා, එහි ඉගැන්නුවා. එම පාසලේ 05 වසර දක්වා තිබෙනවා. පෙර පාසල අවසන් කරලා ඉන් පසු නොපැමිණි ගුරුවරුන්ගේ පන්තිවලට උගන්වනවා. එම පාසල් පරිසරයේ නූගත් දෙමව්පියන් තම දරුවන් පාසලට එවන්නෙ නැහැ. එවැනි දරුවන් ගෙයක් ගෙයක් ගානෙ සොයා ගෙන ගොස් පාසලට ඇතුළත් කිරීම, ඉගෙන ගන්න පහසුකම් නැති දරුවන්ට නොමිලේ පන්ති පැවැත්වීම වැනි සේවාවන්වල යෙදී සිටියා. එම පාසලේ ගුරුවරු එක් කෙනෙකුගෙන් රු: 300/= බැගින් අය කරලා මසකට රු: 1800/= වැටුපක් මට ලබා දෙනවා. එම පාසලේ සංස්කෘතික වැඩසටහනුත් මම පුරුදු කරනවා. මා ඉගැන්වූ ග‍්‍රාමීය ගොයම් කැපීමේ නැටුමක් ප‍්‍රාදේශීය මට්ටමේ සිට කොට්ඨාස මට්ටම දක්වා තේරී, මෙම පාසල හොඳ පාසලක් ලෙස ප‍්‍රසිද්ධ වුණා. තව ද, ඇවිදීම, ශාරීරික අභ්‍යාස එවැනි දේවල්වලටත් ළමුන් තේරී, මමත් බොහෝ

07 - 03

තෑගි හා ප‍්‍රසංශා ලබා ගෙන තිබෙනවා. එක පාරට ම විදුහල්පතිතුමා කීවා සමාජ සේවා නිලධාරි තනතුර සඳහා ඉල්ලුම් පත් කැඳවලා තිබෙනවා. ඉල්ලුම් පත‍්‍රය තිබෙනවා. සම්පූර්ණ කරලා යවන්න කියා. එසේ ම මමත් ඉල්ලුම් පත‍්‍රය සම්පූර්ණ කරලා යැව්වා. සම්මුඛ පරීක්ෂණයට කැඳෙව්වා. ඒකෙන් මම තේරිලා ප‍්‍රාදේශීය ලේකම් කාර්යාලයට පත්වීමක් ලැබුණා. 1994 වර්ෂයේ පත්වීම් ලිපිය අතට ලැබුණා. මට හරි සන්තෝස යි. අවුරුදු 1 Xක් සමාජ සේවා නිලධාරිනියක ලෙස රාජකාරි කළා. ඉන් පසු කථාවක් තිබුණා අම්පාර දිස්ති‍්‍රක්කයේ පමණ යි මෙම තනතුර තිබෙන්නෙ, මෙය නවත්වලා වෙනත් රැුකියාවක් දෙනවා කියලා. සමෘද්ධි නියාමක තනතුර සඳහා සම්මුඛ පරීක්ෂණය පැවැත්තුවා. එයිනුත් මම තේරිලා පත්වීම් ලිපිය මගේ නමට ඇවිල්ලා තිබෙනවා කියා එහි වැඩ කරන අයෙකු කීවා. පෙර පාසලත් කර ගෙන මම සමාජ සේවා නිලධාරි ලෙසත් සේවය කළා. පත්වීම් ලිපිය භාර ගන්න එන්න කීවා. මම ගියා. පත්වීම් ලිපිය මගේ අතට දුන්නා. මගේ සතුටට නිමක් නැහැ. ඒ අවස්ථාවට ප‍්‍රාදේශීය සභාවේ සභාපතිත් ඇවිත් සිටියා. ඔහු මට පත්වීම දෙන්න එපා කියලත්, මගේ සහෝදරයා එක්සත් ජාතික පක්ෂය සඳහා වැඩ කරන බවත්, කොඩි බැඳපු බවත් කියා මගේ පත්වීම් ලිපිය ඉල්ලා ගත්තා. මට පපුව පුපුරනවා වාගේ දැනුණා. මම ඉන්නෙ කොහෙද කියා වත් මතකයක් නැහැ. තත්පර කිහිපයකට පසු මම කීවා මගේ සහෝදරයා විවාහ කර ගත්තාට පසු ඔහු මෙහෙන් යනවා. මගේ පත්වීම දෙන්න කියා කීවා. ඔහු දුන්නෙ නැහැ. මම කිව්වා අඬන දරුවෙකුට බිස්කට් දෙනවා වාගේ පත්වීම් ලිපිය අතට දීලා උදුරා ගත්තා නේ ද කියලා. තව දුරටත් එම ස්ථානයේ සිටියොත් මට ඇඬෙනවා. ඇඟට පණ නැහැ වාගේ දැනුණා. මම ගෙදරට ගියා. ගෙදර ඇවිල්ලා හයියෙන් කෑ ගහලා ඇඬුවා. එවිට,

07 - 04

මගේ බර ටිකක් අඩු වුණා වාගේ දැනුණා. මගේ හිත මම ම සනසා ගත්තා. මා තුළ විශ්වාසයක් ඇති කර ගත්තා. මින් පසු කිසි ම කෙනෙකු විශ්වාස කරන්නෙ නැහැ කියා එදා මම අධිෂ්ඨාන කර ගත්තා. කලින් සේවය කළ පෙර පාසල අත හැරලා ළඟ තිබෙන අල්-අස්හර් විද්‍යාලයේ අවුරුදු 12ක් වැඩ කළා. සිසුන් 65 දෙනෙකු හා ගුරුවරු 03 දෙනෙකු සිටිනවා. එහි 09 වසර දක්වා පන්ති තිබෙනවා. ඉඩ පහසුකම් මදි නිසා W.D.F. එක මගින් ඉතාලි ආයතනයක් මගේ ඉඩමේ සියලු පහසුකම් සහිතව ගොඩනැගිල්ලක් සාදා දුන්නා. ඉතා මත් සතුටින් ඉන්නවා. එහි සිසුන් 75ක් හා ගුරුවරුන් 04 දෙනෙකු සිටිනවා. එහි මම තමයි විදුහල්පති. මා යටතේ ගුරුවරුන් 03 දෙනෙකු වැඩ කරනවා. මම පුහුණු හා ඩිප්ලෝමා පාඨමාලා හදාරා තිබෙනවා.

1. මඩකලපුව විශ්වවිද්‍යාලය - 1 අවුරුදු ඩිප්ලෝමා.
2. අම්පාර හාඩි - 1 අවුරුදු ඩිප්ලෝමා.
3. කොළඹ පුද්ගලික ආයතනයක පෙර පාසල් පුහුණු - 1 අවුරුදු ඩිප්ලෝමා.
4. අක්කරෙයිපත්තු W.D.F. ඉතාලි ආයතනයේ - 1 අවුරුදු ඩිප්ලෝමා.
5. සායින්දමරුදු අල්-හිලාල් පෙර පාසල් පුහුණු - 1 අවුරුදු ඩිප්ලෝමා.
6. පෝෂණ වැඩසටහන් පිළිබඳ පුහුණු.

මෙවැනි විවිධ ඩිප්ලෝමා පුහුණු, දැනුවත් කිරීම්, සෞඛ්‍ය පිළිබඳ සම්මන්ත‍්‍රණ හා නායකත්ව පුහුණු ලබා ගෙන තිබෙනවා. අපේ ගමේ V.C.R.M. කමිටුවේ උපසභාපති. මේ සියල්ල කරලා පසුව රාජ්‍ය භාෂාව සිංහල II පැය 108 සම්පූර්ණ කරලා විභාගය සමත් වුණා. අ.පො.ස. (සා/පෙළ) විභාගයේ සිංහල විෂය සමත් වී තිබෙනවා. මේ සියල්ලත් සමග සිලයිඩා පෙර පාසල අවුරුදු 30ක කාලයක් ඉතා සතුටින් පවත්වා ගෙන යනවා. තවත් සතුටක් 2016.04.28 දින පෙර පාසල් ගුරුවරුන්ට ගෙවූ මසකට රු: 3000/= බැගින් මාස 03කට රු: 9000/=ක් ලබා ගත්තා. සතුටු යි. සියලු ප‍්‍රසංශා දෙවියන් වහන්සේට යි.

අත්සන:

CMP/AMP/SAM/BLJ/07

ஏ ஜாயிறா
141-டீ புளக் ஜே மேற்கு 2
சம்மாந்துறை
06.05.2016

குடும்ப கதை
வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்கள்

எனது வாழ்க்கையில் நான் பட்ட சோகங்கள். ஆரம்பத்தில் எனது பெற்றார்கள் மிகவும் கஷ்டமான நிலைமையில் கல்வி கற்க வைத்தார்கள். எனது குடும்ப அங்கத்தவர்கள் 8 பேர் தாய், தகப்பன், சகோதரிகள் 4 பேர் தங்கை 1 நான் உட்பட சகோதரன் 2 பேர் கொண்ட குடும்பத்தில் பிறந்த நான் எனது தகப்பனின் எண்ணம் என்னை நல்லாப் படிக்க வைக்கணும் என்று ஆசை. எனது தகப்பனின் தொழில் விவசாயம். என்னை அடிக்கடி சொல்லுவார் எனது மகள் ஒரு ஆண் பிள்ளையாகப் பிறந்து இருந்தால் எனது கஷ்டம் தீர்ந்துவிடும் என்று. ஏதோ தகப்பன் உழைப்பது அன்றாட வாழ்க்கைக்கு போதுமானாதல்ல. படிப்புச் செலவு அதிகமாக உள்ளதால் எனது தகப்பன் 50 ரூபாய்க்கு வாங்கும் சாப்பாட்டை 25 ரூபாய்க்கு வாங்கி எழிய மட்டத்தில் நாங்கள் வாழ்ந்து வந்தோம். சில நாட்களின் பின் எனது தகப்பன் இறந்துவிட்டார். கஷ்டத்தில் இருந்த எங்களுக்கு மேலும் கஷ்ட நிலையை இறைவன் தந்தான். நான் தகப்பன் இறந்து விட்டார் என எனது படிப்பை நிறுத்தவில்லை. எனது இலக்கு எப்ப சரி எனது படிப்பை முடித்து சிறிய தொழில் ஒன்றாவது செய்து நமது குடும்பச் சுமையை குறைக்க வேண்டுமென்று தரம் 7 படிக்கும் போதே சனி, விடுமுறைகளில் களை புடுங்கச் செல்வேன். அங்கு தரும் பணத்தை வாங்கி எனது படிப்புக்குத் தேவையானவகைளைச் செய்வேன். மீதியை எனது தாயின் கையில் கொடுப்பேன். டியுசன் படிக்கப் போவதில்லை வசதி இன்மையால்.

மற்றவர்கள் படித்த புத்தகங்களையும் வாங்கிப் படிப்பேன். எனது மற்றச் சகோதரிகளும் களை புடுங்க போவார்கள். அச்சகோதரர்கள் பயந்த சுபாவத்தில் உள்ளவர்கள். தகப்பன் இறந்த சோகம் நான் தான் அவர்களை ஆதரவு படுத்துவது. நான் எப்போதும் சுறுசுறுப்பாகவே பேசுவேன். எனக்கு கீழ் உள்ளவர்களையும் படிப்பதால் தேவையான உதவிகளைச் செய்து படிக்க உற்சாகப்படுத்வேன். இவ்வளவு கஷ்ட நிலையிலிருந்து எங்களின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு எப்படி சரி படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஏதோ ஓரளவு கஷ்டப்பட்டு படிப்பை முடித்துவிட்டேன். 1991.01.15 ஆண்டு முன்பள்ளி ஆசிரியையாக அல் மா வித்தியாலயத்திற்கு வரும்படி அதிபர் கூறினார். எங்களுடைய நிலைமை அறிந்து அங்கு 3-5 வயது வரையுள்ள பிள்ளை 30 பேர்கள் உள்ளனர். அங்கு கற்பித்து வந்தேன். அப் பாடசாலையில் ஆண்டு 5 வரையுள்ளது. முன் பள்ளியை முடித்துக் கொண்டு வராத ஆசிரியர்களின் வகுப்புக்கு பாடம் எடுப்பது, அப் பாடாசலை ஏரியாவில் படிப்பறிவு இல்லாத பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை. அப்படியான பிள்ளைகளை வீடு வீடாக சென்று பிள்ளைகளை தேடி, பாடசாலைக்கு சேரும் வசதி இல்லாத மாணவர்களக்கு இலவச வகுப்புக்களை நடாத்துவது இப்படியான சேவைகளில் ஈடுபட்டு வந்துள்ளேன். அப்பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள் ஒருவர் 300 வீதம் காசி அறவிட்டு எனக்கு அதைச் சம்பளமாக 1800 மாதெமான்று தந்துள்ளார்கள். மேலும் அப்பாடசாலையில் கலை கலாசார நிகழ்ச்சிகளும் நான் பழக்குவது வழக்கம். நான் கிராம நடனம் ஒன்று பழக்கி பிரதேச மட்டம், கோட்ட மட்டம் எடுபட்டு நல்ல பாடசாலையாகக் கருதப்பட்டது. மேலும் அணிநடை உடற்பயிற்சி இப்படியானவைகளிலும் பிள்ளைகள் எடுபட்டு நானும் பல பரிசில்களையும் நல்ல மதிப்பையும் பெற்றுக்கொண்டேன். திடீரென அப்பாடசாலை அதிபர் என்னிடம் கூறினார் சமூக சேவையாளருக்கு ஆட் சேர்க்கிறார்கள். விண்ணப்பப்படிவம் உள்ளது. பூர்த்தி செய்து அனுப்பச் சொன்னார். அதேபோல் நானும் விண்ணப்ப்படிவத்தினை நிரப்பி அனுப்பினேன். நேர்முகப்பரீட்சைக்கு கடிதம் வந்தது. அதில் பங்குபற்றி நான் எடுபட்டு வேலையும் பிரதேசசெயலகத்தில் கிடைக்கப்பெற்றது. 4.2.1994 ஆண்டில் நியமனக்கடிதம் கைக்கு கிடைத்தது. எனக்கு மிகவும் சந்தோசம் ஒன்றரை வருடமாக சமூக சேவையாளராக கடமையாற்றினேன். பின் ஒரு தகவல் வந்தது. அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் தான் இவ் வேலை உள்ளது. இதை நிறுத்தி வேறு தொழில் கொடுப்பது எனக்கூறி சமூர்த்திக்கு நேர்முகப் பரீட்சை வைத்தார்கள். அதிலும் நான் எடுபட்டதாக நியமனக் கடிதம் எனது பெயருக்கு வந்துள்ளதாக அங்கு பணி புரிபவர் கூறினார். முன்பள்ளியும் செய்து கொண்டு நான் சமூக சேவையளருமாக வேலை செய்தேன். நியமனக் கடிதம் எடுப்பதற்காக வரச் சொன்னார்கள். அங்கு போனேன். எனது கையில் நியமனக் கடிதத்தை தந்தார்கள். எனக்கு அவ்வளவு சந்தோசம். கடிதத்தை வாசித்தேன் அந் நேரம் அங்கு பிரதேச சேமன் வந்தார். அவர் கூறினார் எனக்கு கடிதம் கொடுக்க வேண்டாம் என்றும் எனது சகோதரன் ஐக்கிய தேசியக் கட்சியில் பாடுபட்டதாகவும் கொடி கட்டியதாகவும் கூறி எனது நியமனக் கடிதத்தை வாங்கிவிட்டார். எனக்கு நெஞ்சு வெடிப்பது போல உள்ளது. நான் எங்கு நிற்கின்றேன் என நினைவு இல்லாத நிலையில் தவித்தேன். ஒரு சில வினாடியின் பின் கேட்டேன். எனது சகோதரன் திருமண முடித்தால் போய் விடுவார்கள். அதற்கான எனது நியமனக் கடிதத்தைத் தாருங்கள் என்றேன். அவர்கள் தர மறுத்தார்கள். நான் சொன்னேன் அழும்பிள்ளைக்கு பிஸ்கட்டை காட்டுவது போல் நியமனக் கடிதத்தை தந்து விட்டு பறித்து விட்டீர்கள் என்றேன். அவ்விடத்தில் இன்னும் நான் நின்றால் அழுகை அழுகையாக வருகிறது. உடன் சோக நிலையில் வீடு திரும்பினேன். வீடு வந்ததும் சத்தம் போட்டு அழுதேன். அப்போது எனது சுமை இறங்கிய மாதிரி உள்ளது. அதோட என்னதானே சமாதானப் படுத்தினேன். எனக்குள்ளே நம்பிக்கை உருவாக்கினேன். அன்று நினைத்தேன். இனிமேல் எவரையும் நம்பக்கூடாது. சொந்த முயற்சியில் ஈடுபட எத்தனித்தேன். ஆரம்பத்திலிருந்த முன்பள்ளியை விட்டு எனது பக்கத்திலுள்ள அல் அஸ்ஹர் வித்தியாலத்திற்கு வந்து 12 வருடமாக கற்பித்தேன். 65 மாணவர்களும் 3 ஆசிரியைகளும் உள்ளனர். அங்கு ஆண்டு 9 வரை உள்ளனர். இடவசதி போதாமையினால் டபிள்யு.டி.எப் ஊடாக இத்தாலி நிறுவனம் ஒன்று என்னுடைய காணியில் கட்டடம் ஒன்று கட்டித்தந்து சகல வசதிகளும் செய்து தந்துள்ளார்கள். மிகவும் சந்தோசமாக உள்ளோம். அங்கு 75 மாணவிகளும் 4 ஆசிரியைகளும் உள்ளோம். அதில் நான் அதிபராகவும் எனக்குக் கீழ் 3 ஆசிரியைகளும் உள்ளோம். நான் பல பயிற்சிகளிலும் டிப்ளோமா செய்துள்ளேன்.
மட்டக்களப்புப் பல்கலைக்கழகம் - 1 வருட டிப்ளோமா
அம்பாறையில் - 1 வருட டிப்ளோமா
கொழும்பு பிறைட் நிறுவனம் முன்பள்ளி டிப்ளோமா - 1 வருடம்
அக்கரைப்பற்று டபிள்யு.டி.எப் இத்தாலி நிறுவன்தினால் - 1 வருட டிப்ளோமா
சாய்ந்தமருது அல் ஹிலால் முன்பள்ளி டிப்ளோமா - 1 வருடம்
சத்துணவுத் திட்டம் பயிற்சி

இப்படியாக பல வகையான டிப்ளோமாக்களையும் பயிற்சிகளும் விழிப்பு கருத்தரங்கு, சுகாதாரம் சம்பந்தமபான கருத்தரங்கு, தலைமைத்துவப் பயிற்சிகள் இப்பாடியானவைகள் செய்துள்ளேன். எங்கள் கிராமத்தில் வி.சி.ஆர்.எம்.சி குழுவிலும் உபதலைவராக இருக்கின்றேன். இவை எல்லாம் செய்து இறுதியாக கருமமொழி 2 சிங்களம் 108 மணித்தியால பயிற்சியும் செய்து பரீட்சையில் பாஸ் பண்ணியுள்ளேன். சிஙகளப் பாடம் சாதாரண தரம் எழுதி அதிலும் பாஸ் பண்ணியுள்ளேன். எல்லாம் மொத்தமாக கடைசியில் முன்பள்ளி 25 வருடமாக மிக சந்தோசமாக நடத்திக்கொண்டு வருகிறேன். இன்னும் ஒரு சந்தோசம் சென்ற 28-04-2016 அன்று முன்பள்ளி ஆசிரியைக்கு மாதமொன்றுக்கு 3000 ரூபா வீதம் 3 மாத சம்பளம் 9000 பெற்றுக் கொண்டோம். மிகவும் சந்தோசம். எல்லாப் புகழும் இறைவனுக்கே.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License