The hardships of my family

A poverty-stricken family humbly asks to help.


මගේ පවුලේ දුක්ඛිත තත්ත්වය

උදව් කිරීමට දරිද්රතාවය පැතිරුන පවුලේ නිහතමානීව අසයි.


எனது குடும்பத்தின் கஷ்ட நிலைமை

வறுமையில் வாடும் குடும்பமொன்று தமக்கு உதவி புரியுமாறு தாழ்மையாக வேண்டுகிறது.



CMP/AMP/SAM/BLJ/09
119, Thennampillai village,
B, block “J” West II
Sammanthurai

The hardships of my family

In 1978, my father was selling bricks in Nainakaadu. He married my mother in 1982 . There were 7 girls and 04 boys in my family. After the fourth girl the first boy was born. The 4 elder girls studied well. The second girl, felt bad about her father’s difficulty and worked with my father in Nainakaadu. With much hardship my father bought a land .
All of the children was in the age to be educated but we had no facility to educate all of them. My elder sisters stopped their studies and in the land my father bought, we sold bricks. In 2004, my father was taken ill. We had to stop the work. We faced a lot of hardship. My three sisters attained the age of marriage. My parents with much difficulty, built two roomed houses and got them married. Their husbands finished the houses.
My fifth brother dropped out of school in the young age and worked as driver and looked after family. He married after two years. He wasn’t allowed in the house even three years after his marriage. The fourth sister had a proposal, as there was no house to give, she was married in my third sisters family. We don’t have a house and we live in my third sister’s house.

My seventh brother now only went abroad for one year. He manages my family. He sends 25000/= . We spend it for the education of the children and my fathers medical expenses. Even that is not enough. My elder sister studied up to O/L and stopped her studies because there wasn’t any facilities to continue her studies but with the help of my mother’s brother she did A/L and qualified to enter University. She applied for the university. Other two boys are studying . I studied upto OL and am undergoing training in sewing.

My father’s health has turned bad. He is a diabetic and has heart disease, his life is going with medicine. He was taken to Kandy hospital for operation, but he was sent back because of his age.

My mother and younger brother has asthma.We don’t have a house to live in. We hope that you will consider our difficulty and beg you to help us.

Yours
Rasiya







CMP/AMP/SAM/BLJ/09 – 1

119/B, බ්ලොක් J බටහිර II,
තෙන්නම්පිල්ලෙයි ගම්මානය,
සම්මාන්තුරේ.
2016.05.07

පියා
මව
දරුවන්
පිරිමි දරුවන් 04
ගැහැණු දරුවන් 07
පවුලේ කතාව


මගේ පවුලේ දුක්ඛිත තත්ත්වය.

මගේ පවුලේ තත්ත්වය ගැන පවසන්නම්. මගේ පියා 1978 නෙයිනාකාඩවල ගඩොල් විකුණමින් සිටියා. 1982 මගේ මව සමග විවාහ වුණා. මගේ මවට ගැහැණු දරුවන් 07 දෙන යි, පිරිමි දරුවන් 04 දෙන යි. ගැහැණු දරුවන් 04 දෙනෙකුගෙන් පසුව තමයි පස් වැනි පිරිමි දරුවා ඉපදුණෙ. වැඩිමහල් ගැහැණු දරුවන් 04 දෙනා දක්ෂ ලෙස ඉගෙන ගත්තා. මේ අයගෙන් දෙවැනියා පියා පමණක් මහන්සි වෙලා රැකියාව කරනවා කියා, අපි හැම දෙනාට ම ජීවත් වෙන්න ප‍්‍රමාණවත් නැති නිසා මගේ දෙවැනි සහෝදරිය පියා සමග නෙයිනාකාඩු යන ස්ථානයේ නොයෙකුත් දුෂ්කරතා මත්තේ රැකියාව කරමින් අපිව ජීවත් කෙරෙව්වා. මෙම රැකියාව කරමින් සිටිය දී දුක් විඳලා මගේ පියා ඉඩමක් ගත්තා.

දරුවො හැම දෙනා ම ලොකු මහත් වෙලා ඉගෙන ගන්නා වයසට එළඹිලා. ඒ නිසා ජීවිතය ගෙන යන්න ප‍්‍රමාණවත් පහසුකම් නොමැති වීම නිසා අපට උදව් කරන්න කවුරු වත් නැහැ. ඒ නිසා වැඩිමහල් ගැහැණු දරුවන් 03 දෙනා ම ඉගෙනුම අත හැරලා තම පියා සමග මිල දී ගත් ඉඩමේ ගල් වාඩියක් (ගඩොල් විකිණීම) කරලා ජීවත් වුණා.

සියලූ දෙනා ම එකතු වෙලා රැුකියාව කරමින් සිටිය දී මගේ පියා 2004 දී අසනීප වුණා. ඒ නිසා අපි කර ගෙන ආපු රැකියාව අත හැරියා. ඉන් පසු අපේ පවුල බොහෝ අමාරුකම් මත ජීවත් වුණා. මගේ සහෝදරියන් 03 දෙනෙකු විවාහ වයසේ සිටිනවා. ඔවුන්ට මගේ දෙමව්පියන් හැකි පමණින් කාමර දෙකකින් ගෙවල් හදලා දීලා ඔවුන් විවාහ කර දුන්නා. අපගේ අමාරුකම් ගැන දැන ගත් සහෝදරියන්ගේ ස්වාමි පුරුෂයන් ගෙවල් ටික මුළුමනින් ම හදා ගත්තා.

09 - 2

ඉන් පසු පස් වැනියට ඉපදුණු මගේ සහෝදරයෙකු වන මගේ මවගේ වැඩිමහල් පුතා කුඩා වයසේ දී ම ඉගෙනුම අත හැර දාලා රියැදුරකු ලෙස රැකියාව කරලා පවුල නඩත්තු කළා. ඔහු රැකියාව කරන්න පටන් අර ගෙන අවුරුදු 02ක් සම්පූර්ණ වුණෙත් නැහැ. විවාහයක් කර ගත්තා. විවාහ කරලා අවුරුදු 03ක් වෙනවා. අද දක්වා ඔහුට ගෙදර එන්නට අවසර දුන්නෙ නැහැ. ඉන් පසු හතර වැනියාට සිටි සහෝදරියට විවාහ යෝජනාවක් ආවා. එයාට නිවසක් නොතිබූ නිසා තුන් වැනි සහෝදරියගේ නිවසේ දී තමයි විවාහය කර දුන්නෙ. විවාහ වෙලා අවුරුදු දෙකක් වෙනවා. ඔවුන්ට කාමර දෙකේ ගෙයක් තමයි හදලා දීලා තිබෙන්නෙ. අද දක්වා අපි ගෙයක් නැතිව තුන් වැනි සහෝදරියගේ නිවසේ තමයි ඉන්නෙ. මා සමග සිටින ගැහැණු දරුවන් තුන් දෙනාට ම ගෙවල් හදන්න පහසුකම් නැහැ.

පසුව දැන් තමයි හත් වැනියට ඉපදුණු මගේ පිරිමි සහෝදරයා දැන් අවුරුද්දක් පමණ පිටරට ගිහින් ඉන්නවා. ඔහුගෙන් තමයි අපගේ ජීවනෝපාය රැඳී තිබෙන්නෙ. ඔහු මාස් පතා පඩියෙන් රු: 25,000/=ක් එවනවා. එයින් ළමයින්ගේ අධ්‍යාපනයටත්, පියාගේ අසනීපයටත් වියදම් කරනවා. ඒකත් මදි යි. මට වැඩිමහල් සහෝදරියන්ගෙන් කෙනෙකු අ.පො.ස. (සා/පෙළ) කරලා තිබෙනවා. උසස් පෙළ කරන්න පහසුකම් නැතිව ඉගෙනුම නතර කළා.

තවත් සහෝදරියක් අ.පො.ස. (සා/පෙළ) සමත් වෙලා උසස් පෙළ කරන්න පහසුකම් නැතිව මගේ සහෝදරයාගේ (මාමා) උදව් ඇතිව උසස් පෙළ සමත් වෙලා විශ්වවිද්‍යාලයට ඉල්ලුම් කරලා තිබෙනවා. අනික් පිරිමි සහෝදරයන් දෙදෙනා ඉගෙන ගන්නවා. මම අ.පො.ස. (සා/පෙළ) විභාගය ලියලා V.T.A. හි මැහුම් පුහුණුවේ යෙදී සිටිනවා.

09 - 3

තව ද මගේ පියාගේ තත්ත්වය ඉතා මත් දුර්වල යි. ඔහුට තිබෙන රෝග (සීනි) හෘදයාබාධය හා හෘදය වස්තුවේ පුංචි තුවාල. බෙහෙත්වලින් ම තමයි ජීවත් වෙන්නෙ. හෘදය වස්තුවේ ශල්‍ය කර්මයක් කරන්න කියා නුවර රෝහලට ගියා. මගේ පියාගේ වයස වැඩි නිසා මොකක් හරි වෙයි දෝ කියන බයට ශල්‍ය කර්මය නො කර ම ආපහු ආවා. වෛද්‍යවරුන් මගේ පියාට කිසි ම වැඩක් කරන්න එපා කියලා තිබෙනවා. මගේ මවටත්, මගේ බාල සහෝදරයාටත් ඇදුම රෝගය තිබෙනවා.

මේ සියල්ල දැන ගෙන අපට ස්ථිර නිවසක් නැහැ. අපේ තත්ත්වය ඉතා මත් අමාරු යි. මේ ගැන සැලකිල්ලට ගෙන අපට කුමක් හෝ පුළුවන් උදව්වක් කරන ලෙස ඉතා බැගෑපත්ව, දුකින්, පහත් ලෙසින්, ගෞරවයෙන්, දෙවියන් වහන්සේගේ නාමයෙන් කරන ලෙස ඉල්ලා සිටිමි.

CMP/AMP/SAM/BLJ/09

தகப்பன்
தாய்
பிள்ளைகள்
ஆண் பிள்ளைகள் 4
பெண் பிள்ளைகள் 7

1198 தென்னம்பிள்ளைக்கிராமம்
புளக்ஜேமேற்கு 2
சம்மாந்துறை

எனது குடும்பத்தின் கஷ்ட நிலைமை

எனது குடும்ப சூழ்நிலையை எடுத்துரைக்கிறேன். எனது தகப்பனார் 1978ஆம் ஆண்டு நெயினாகாடு செங்கல் விற்பனை செய்து கொண்டிருந்தார். பின் 1982ம் ஆண்டு எனது தாயாரை திருமணம் முடித்தார். எனது தாயாருக்கு 7 பெண் பிள்ளைகளும் 4 ஆண் பிள்ளைகளும் பிறந்தார்கள். 4 பெண் பிள்ளைகளுக்கு அடுத்ததாகத்தான் ஐந்தாவதாக ஆண் பிள்ளை பிறந்தார். மூத்த நான்கு பெண் பிள்ளைகளும் திறமையாகப் படித்து வந்தார்கள். இவர்களில் இரண்டாவதாக இருப்பவர் தகப்பனார் மட்டுமே கஷ்டப்பட்டு தொழில் செய்து கொண்டிருக்கின்றார். என்று நாங்கள் அனைவரும் வாழ்வதற்கு போதாமையால் எனது இரண்டாவது சகோதரி எனது தகப்பனாரோடு நெயினாகாடு எனும் இடத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் தொழில் செய்து கொண்டு எங்களை வளர்த்து வந்தார்கள். இத் தொழிலை செய்து கொண்டிருக்கும் போது கஷ்டப்பட்டு ஒரு காணி ஒன்றை எனது தகப்பனார் வாங்கினார்.

பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து படிக்கின்ற வயதை அடைந்துவிட்டனர். ஆகையால் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துவதற்கு போதிய வசதி இன்மையால் எங்களுக்கு உதவி செய்யயாருமில்லை. ஆதலால் மூத்த மூன்று பெண் பிள்ளைகளும் படிப்பை நிறுத்திவிட்டு தன் தகப்பனாரோடு வாங்கிய காணியில் கல்வாடி (செங்கல்விற்பனை ) செய்து வாழ்ந்தோம்.

எல்லோரும் சேர்ந்து தொழில் செய்து கொண்டிருக்கும் போது எனது தகப்பனாருக்கு 2004ம் ஆண்டு சுகவீனமுற்று ஆதலால் நாங்கள் செய்து கொண்டிருந்த தொழிலையும் விட்டுவிட்டோம். பின் எங்களது குடும்பம் கடும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்தோம். மேலும் எனது சகோதரிகள் 3 பேர் திருமண வயதை அடைந்து விட்டனர். அவர்களுக்காக எனது தாய், தகப்பன் அவர்களால் முடிந்தளவுக்கு 2 அறைகளில் வீடு கட்டிக் கொடுத்து திருமணம் முடித்துக் கொடுத்தார்கள். எங்களது கஷ்ட நிலைமையை அறிந்த சகோதரிகளின் கணவர்மார்கள் வீட்டை முழுமையாகக் கட்டி முடித்தார்கள்.

பிறகு ஐந்தாவதாகப் பிறந்த எனது சகோதரனான எனது தாயின் மூத்த மகனாவார். இளம் வயதிலேயே படிப்பை விட்டுவிட்டு சாரதியாக தொழில் செய்து எனது குடும்பத்தைப் பராமரித்தார். அவர் தொழில் செய்யத் தொடங்கி 2 வருடங்கள் பூர்த்தியாகவும் இல்லை. திருமணம் முடித்து விட்டார். திருமணம் முடித்து 3 வருடங்களாகின்றது. இன்று வரைக்கும் இன்னும் வீட்டில் அவரை அனுமதிக்கவில்லை. அதற்குப்பிறகு நான்காவதாக இருந்த சகோதரிக்கு திருமணம் ஒன்று வந்ததது. அவருக்கு வீடு இல்லாததால் மூன்றாவது சகோதரியின் வீட்டில் திருமணம் முடித்துக் கொடுத்தார்கள். திருமணம் முடித்து இரண்டு வருடமாகின்றது. அவர்களுக்கும் 2 அறைகள் வீடு தான் கட்டிக் கொடுத்திருக்கின்றது. இன்று வரைக்கும் நாங்கள் வீடு இல்லாமல் மூன்றாவது சகோதரியின் வீட்டில் தான் இருக்கின்றோம். என்னோடு சேர்த்து இருக்கின்ற மூன்று பெண் பிள்ளைகளுக்கும் வீடு கட்ட வசதியில்லை.

பின்பு இப்போது தான் ஏழாவதாக பிறந்த ஆண் பிள்ளை எனது சகோதரன் ஒரு வருடமாக வெளிநாடு சென்றிருக்கின்றார். அவர் மூலமாகத்தான் எங்களுடைய வழ்வாதாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் ஒவ்வொரு மாதமும் அவருடைய சம்பளமாக 25,000ரூ அனுப்புவார். அதில் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காகவம், தந்தையின் சுகவீனத்திற்கும் செலவு செய்யப்படுகின்றது. அதுவும் போதாது. எனக்கு மூத்த சகோதரி ஒரு சாதாரணதரம் எழுதி விட்டு உயர்தரம் படிக்க வசதியின்றி படிப்பை நிறுத்திவிட்டார்.

மற்றைய சகோதரி சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் படிக்க வசதி இன்றி எனது தாயின் சகோதரனின் உதவியால் உயர்தரம் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து அனுப்பிவைத்துள்ளார். மற்றைய 2 ஆண் பிள்ளைகளும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் சாதாரணதர பரீட்சை எழுதிவிட்டு வி.ரி.ஏ இல் தையல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

மற்றும் எனது தகப்பனாரின் நிலமை மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. அவருக்குள்ள நோய்கள் இதயநோய் மற்றும் இதயத்தில் சின்னப் புண்கள். இன்னும் மருந்துகள் மூலமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதயத்தை சத்திரசிகிச்சை செய்வதற்காக கண்டி வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்கள். எனது தந்தை வயது முதிர்வடைந்ததன் காரணமாக ஏதாவது நடந்திருமோ? என்று பயத்தால் சத்திரசிகிச்சை செய்யாமலே திரும்பி வந்துவிட்டார்கள். வைத்தியர்கள் எனது தகப்பனை ஒரு வேலையும் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கின்றார்கள். மற்றும் எனது தாய்க்கும் எனது இளைய சகோதரனுக்கும் ஆஸ்துமா நோய் இருக்கின்றது.

இத்தனையையும் அறிந்து எங்களுக்கு நிரந்தரமாக இருக்க வீடும் இல்லை. எங்களது நிலைமை மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. இதனைக் கருத்திற்கொண்டு உங்களால் எங்களுக்கு ஏதாவது முடிந்த உதவியை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடனும் கவலையுடனும், பணிவுடனும், பண்புடனும் கடவுளுக்காக செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License