Husband’s body was found in the sea

The story of a woman who is frustrated by her husband's loss.


ස්වාමිපුරුෂයාගේ මළ සිරුර මුහුදේ දක්නට ලැබිණි

ඇගේ සැමියා අහිමිවීම කලකිරීමට පත්ව සිටින කාන්තාවක් කතාව.


கணவனின் சடலம் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது

கணவனின் இழப்பால் வாழ்க்கை வெறுத்துப்போன பெண்ணொருவரின் கதை.



CMP/AMP/SAM/UTP 01
M.Thavamani
H.2A Udayapuram
Tamil Division -04
Sammanthurai

My Biography
I am the 11th child out of 14 in my family. I lived in such a poor status without food, dress or house. My father and mother died. We were orphaned, there was no relatives to raise us. In 1990, in the conflice, we went to the refugee camp, and I got married there. After three months, when my husband went for fishing, unidentified persons strangled and tortured him. His body was found in the sea. Some fishermen came told me in the camp. I complained to the army and the police. The army took up the search. My husband’s body was found near Karaithivu shores.

They brought him to the Sammanthurai Hospital. The did a post mortem and handed over the body in a polythene bag. We took the body to the refugee camp and buried it in the cemetery. I didn’t receive any compensation even though I gave facts. They changed the death certificate as death by suicide.

In 1990 we were settled in Sammanthurai, in small cottages without any thing. I faced lot of nasty talks when I lived alone. I married again in 2007, My husband wanted to abort the baby when I was pregnant and when I refused, he beat me. He left me and I lived with my sister who was a widow.

A child was born and I contacted W.D.F and told them about my struggle. A case was filed through W.D.F. When the case was going on he married again. He told that it was not his baby. We did a D.N.A test. The report was positive, I was the mother and he was the father. There were bad names for me. . I wanted to die with my child.

A women organization changed my mind. He gave the child one lakh. After that no assistance was given for me. My child is studying grade 2, still I face difficulties. My child name is Jenolika. My child should not face hardships like mine.



CMP/AMP/SAM/UTP/01- 01

M. තවමනී,
H24/උදයපුරම්,
දෙමළ කොට්ඨාසය - 04,
සම්මන්තුරේ.
2016.03.23

මගේ ජීවිත කතාව

මා මගේ පවුලේ මම එකළොස් වැනි දරුවා. පවුලේ මුළු සාමාජික සංඛ්‍යාව දහ හතර යි. ඉතා මත් දුප්පත් තත්ත්වයෙන් කන්න, අඳින්න නැතුව, ඉන්න නිවසක් නැතිව ජීවත් වුණා. ඉන් පසු අම්මයි, තාත්තයි මිය ගියා. කුඩා වියේ රැකවරණය කරන්න කෙනෙකු නොමැතිව, ඥාතීන් කියා කිසිවෙකු නැතිව අනාථයෙකු ලෙස ජීවත් වුණා. මෙසේ ජීවත් වෙමින් සිටිය දී, 1990 වර්ෂයේ ඇති වූ ජනවාර්ගික කලබල හේතුවෙන් අනාථ කඳවුරට ගිහින් සිටිය දී, එහි දී විවාහයක් කර ගෙන මාස 03 යි, මාළු අල්ලන්න ගිය ඔහුව අල්ලා ගත් නන්නාඳුනන පුද්ගලයන් බෙල්ල මිරිකා, පිරිමි ලිංගය (වෘෂභය) කපා දමා, ඇස්වලටත්, මුහුණටත් ඇසිඩ් ගසා, ගිනි තබා දස වධ දී තිබුණා. දින තුනකට පසු මිනිය මුහුදේ පාවෙනවා දුටු මාළු අල්ලන්න ගිය අය කඳවුරට ඇවිත් කීවා. අපි දවස් තුනක් ම හොයනවා. පොලීසියටත්, හමුදාවටත් පැමිණිලි කළා. පැමිණිලි කළාට පසු හමුදාවත් හොයන්න පටන් ගත්තා. එදා ම මිනිය මුහුදු වෙරළ අයිනේ කාරෙයිතීවු අසල ඇති සුසාන භූමි වෙරළ අයිනෙ රැඳිලා තිබුණා. සම්මන්තුරේ පොලීසිය, සම්මන්තුරේ රෝහලට රැගෙන ආවා. මරණ පරීක්ෂණ පවත්වන විට මිනිය කෑලි කෑලිවලට කපා, පොලිතීන් බෑග් එකට දාලා තමයි මගේ අතට දුන්නෙ. එය කාරෙයිතීවු අනාථ කඳවුරට රැගෙන ගියා. ඉන් පසු කාරෙයිතීවු සුසාන භූමියේ භූමදාන කළා.

01-02

මේ සඳහා වන්දි මුදලක් ලැබුණෙත් නැහැ. ඊට අදාළ ලියකියවිලි දුන්නත් වැඩක් වුණේ නැහැ. මරණය ලියාපදිංචි කිරීමේ දී සල්ලි දීලා සිය දිවි නසා ගැනීමක් කියා මරණ සහතිකය වෙනස් කරලා කුමන්ත‍්‍රණය කරලා තිබෙනවා. 1993 සම්මන්තුරේ පදිංචි කළා. ගෙවල් නැතිව පැල්පත්වල ජීවත් වුණා. බඩුමුට්ටු කිසිවක් තිබුණෙ නැහැ. දුක් කඳුළු මැද ජීවත් වුණා.

නොයෙකුත් දුක් කරදර මැද ජීවත් වුණා. මම තනිව ම ජීවත් වූ කාලයේ අපහාසාත්මක කථාවලට ලක්ව සිටියා. ඉන් පසු 2007 විවාහයක් කර ගත්තා. බඬේ දරුවෙකු පිළිසිඳ ගත් පසු එම ගැබ නැති කර ගන්න කීවා. මම ඒකට කැමති වුණේ නැහැ. මට හැම දා ම ගුටි බැට තමයි.

ඉන් පසු ජීවිතය කලකිරුණා. ඒත් එක්ක ම ඔහු මාව අත හැර දාලා යන්න ගියා. මම මගේ සහෝදරිය සමග තමයි සිටියේ. සහෝදරියටත් ස්වාමි පුරුෂයා නැහැ.

මෙසේ සිටිය දී දරුවා ඉපදුණා. මම දරුවා දිහා වත් බැලූවේ නැහැ. W.D.F. ආයතනයට කෝල් කරලා මගේ තත්ත්වය ගැන කීවා. ඉන් පසු W.D.F. ආයතනය මගින් නඩු පැවරුවා.

නඩුව විභාග වෙමින් තිබිය දී ඔහු වෙනත් විවාහයක් කර ගෙන ඒ විවාහයටත් පිරිමි දරුවෙකු ඉන්නවා. මේ දරුවා ඔහුගේ නෙවෙයි කීවා. ඉන් පසු D.N.A. කරනු ලැබුවා.

01-03

ඉන් පසු මම දරුවාගේ මව කියාත්, ඔහු දරුවාගේ පියා කියාත් රිපෝට් එක ආවා. මේ ටිකට ඕනෑ තරම් නරක නාම අහ ගත්තා. සිය දිවි නසා ගන්නවා කියා සිතුණා. දරුවයි මමයි සිය දිවි නසා ගන්නවා කියා සිතුණා.

මේ අදහස නැති කළේ කාන්තා සංවර්ධන ආයතනය යි. ඔහු දරුවට රුපියල් ලක්ෂයක් ගෙව්වා. ඉන් පසු ඔහුගෙන් කිසි ම උදව්වක් මට ලැබුණෙ නැහැ.

දරුවා දෙක ශ්‍රේණියේ ඉගෙන ගන්නවා. මගේ දුක තව ම තුරන් වුණේ නැහැ. මගේ දුවගේ නම ජෙනේසිකා. මට වෙච්ච ඇබැද්දිය මගේ දරුවට ඇති වෙන්න හොඳ නැහැ කියලා මම හිතින් වේදනා විඳිනවා.

මෙයට - අත්සන.

CMP/AMP/SAM/UTP/01

எம். தவமணி
எச். 24 உதயபுரம்
தமிழ் பிரிவு, 4
சம்மாந்துறை

எனது வாழ்க்கை வரலாறு

நான் எனது குடும்பத்தில் பதினொராவது பிள்ளை. மொத்தமாக பதினான்கு பேர் கொண்ட குடும்பத்தில் வாழ்ந்து வந்தேன். மிகவும் வறுமையான நிலையில் சாப்பிட உணவு இல்லாமல் உடுப்பு இல்லாமல் இருக்க வீடுஇல்லாமல் வாழ்ந்து வந்தேன். இதன் பின்ன அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டனர். அத்துடன் சிறு வயதில் பராமரிக்க ஆள் இன்றி உறவுகளும் இல்லை. அனாதையாக வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது 90ம் ஆண்டு பிரச்சினையில் வன்செயல் ஏற்பட்டதன் காரணமாக அகதி முகாமுக்கு போய் இருந்த வேளையில் வாழ்ந்து வந்த வேளையில் அங்கே திருமணம் ஒன்று முடித்து 3 மாதம் இல்லை. மீன் விக்கச் சென்றவரை பிடித்து இனம் தெரியாதவர்களால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் விதை வாயை வெட்டி பல சித்திரவதை செய்தனர். 3 நாளைக்குப் பின்னர் பொடி கடலில் மிதந்து வந்து கரையோரம் வந்தததை மீன்பிடிக்கம் மீனவர்கள் கண்டு முகாமுக்கு வந்து கூறினர். நாங்கள் மூன்றுநாளாக நாங்களும் தேடிக் கொண்டிருந்தோம். பொலிஸ்காரரிடம் இராணுவத்திடனும் முறைப்பாடு செய்தோம்.இராணுவத்திடம் முறையிட்ட பின் இராணுவம் தேட ஆரம்பித்தது. தேடிய அன்றே பொடி கடற்கரை ஓரத்தில் காரைதீவு பக்கத்தில் உள்ள சவக்காலை கடற்கரை ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்தது. சம்மாந்துரைப் பொலிசார் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு வந்தனர். பொடியை போஸ்ட்மாட்டம் செய்யும் போதுதுண்டு துண்டாக வெட்டி பொலித்தீன் பையில் போட்டு எனது கையில் தந்தார்கள். அதை காரைதீவு அகதி முகாமைக்கு கொண்டு சென்றோம். அதன் பின்னர் காரைதீவு சவக்காலையில் அடக்கம் செய்தனர். சொல்ல இதற்குரிய நட்ட ஈடும். எதுவும் கிடைககவில்லை. இதற்குரிய ஆதாரங்கள் கொடுத்தும் செல்லும்படியாக இல்லை. மரணப்பதிவில் காசு கொடுத்து தற்கொலை என்றுமரணப்பதிவை மாற்றி சதித்திட்டம் செய்தனர். 1993ம் ஆண்டு சம்மாந்துறைக்கு குடியமர்த்தப்பட்டோம். வீடுஇன்றி குடிசைகளில் வாழ்ந்து வந்தோம். ஒரு பொருட்களும் இல்லாமல் கண்ணீரும் கவலையோடும் வாழ்ந்துவந்தோம். கல கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வந்தோம். நான் தனிமையில் வாழ்ந்து வந்த வேளையில் கேவலமான பேச்சிகளுக்கு இடமாக்கப்ட்டேன். அதன் பின் 2007ம் ஆண்டு திருமணம் முடித்து வயிற்றில் பிள்ளை உண்டாகிய பின் பிள்ளையை கலைக்கும் படி சொன்னான். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் எனக்கு ஒரே அடியும் உதையும்தான்.

அதன் பிறகு வாழ்க்கைய வெறுத்துப் போய்விட்டது.அத்துடன் அவன் என்னை வீட்டுத் போய்விட்டான். நான் எனது சகோதரியுடன் தான் இருந்தேன். சகோதரிக்கும் கணவன் இல்லை.

இந்நிலையில் பிள்ளை பிறந்தது. பிள்ளையும் பார்க்கவில்லை. நான் டபிள்யு.டி.எப் என்ற நிறுவனத்தில் தொடர்பு கொண்டு எனது நிலையைக் கூறினேன். அதன் டபியு.டி.எப் ஊடாக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவன் வேறு திருமணம் முடித்துவிட்டு அதிலும் ஒருஆண் பிள்ளை உள்ளது. இந்தப் பிள்ளை அவனுடையது இல்ல என்று சொன்னான். அதன் பின்னர் டிஎன்ஏ செய்யப்பட்டது. அதன்பின்னர் தான் நான்தான் தாய் என்றும், அவன்தான் பிள்ளைக்கு அப்பா என்றும் றிப்போட் வ்நதது. இதில் எவ்வளவோ கெட்ட பெயர் கேட்டேன். தற்கொலை செய்வோமா என்றுநினைத்தேன். பிள்ளையும்நானும் செத்துப் போய்விடுவோம் என்று நினைத்தேன்.

இந்த எண்ணத்தை மாற்றியது பெண்கள் அபிவிருத்தி நிறுவனம். பிள்ளைக்கு ஒருஇலட்சம் காசி கட்டினான். அதன் பிறகுஅவனிடம் இந்த எந்த உதவிகளும் எனக்குகிடைக்கவில்லை.

பிள்ளை 2ம்தரத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். எனதுகஸ்டம் இன்றும் நீங்கவில்லை. எனது மகளின் பெயர் னோமிக்கா எனக்குஎற்பட்ட இந்த நிலை எனது பிள்ளைக்கும் வரக்கூடாது என்று நான் மனம் வருந்திக் கொண்டிருக்கிறேன்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License