We returned to the camp with worries

The mother writes this letter to share about the loss of her son.


අපි කරදර ගොඩක් සමඟ කඳවුරට ආපසු

ඇගේ පුතා අහිමි වීම ගැන මේ ලිපිය ලියන මවක්.


கவலையோடு முகாமுக்கு திரும்பினோம்

தனது மகனின் இழப்பைப் பற்றி பகிர்ந்து கொள்ள இந்த கடிதத்தை ஒரு தாய் எழுதுகிறார்.CMP/AMP/SAM/MAL/04
S.Letchumy
Malwatha -04
Ganapathypuram

To the Red Cross Society
I live in Ganapathypuram, I have 14 members in my family, 09 males and 05 females and my parents. My father worked at Ugana, later he died. My mother brought us up with so much difficulties.

My mother married me to a person from this village, Nallathamby. He went to labour work, fishing and paddy field work. We had 06 children,( 03 girls, 03 boys). We suffered a lot to educate our children.

There was a police post at the old Ceylon radio station in 1990. One day there was fight between LTTE and the police, gunshots were heard, all the people in the village ran for cover and people from the villages of Malwatha, Malliyativu, Pudur, Kanapathypuram took refuge in Karaitivu and Sammanthurai in schools, temples and relatives houses. The army rounded up all villagers and took males away, sometimes they released some.
One they rounded the camp on the 12th month in 1990, and took 55 – 60 persons in a bus including my son. Later they released him and sometimes later they again took him with his tied his hands. When I ran behind telling them that he was not a tiger, they threw stones at me and shut all the females in Veeramunai temple. The soldiers from the STF Camps in Kaluvanchikudi and Kaaraitivu shot us. The people from Red Cross Society came there, after that it was fine for a while. The army let us walk infront for fear of mines.

I went to the Karaitivu army camp and told them that he was not a tiger and told them to release him, they beat us, we ran away crying to refugee camp. There was no food and water, we went to the camp in the morning and came back in the evening. Still there was no news about the 55 people who were taken by the army. We don’t have any information about them up to now.

We kept moving from Veeramunai temple camp, and to Karaitivu School and after that to Thirukovil temple , we lived like this for 3 to 4 years. We came to our village, it was like a jungle. We cleaned it up and built a hut for us. We didn’t have anything to eat. We faced much difficulties, I went abroad for two years and built a house here.

I gave my elder child in marriage after I came from abroad. After that I sold string hoppers. My husband got sick and didn’t do any work and we had loans. So my daughter and my son-in-law went abroad. I looked after my children and sold string hoppers and with the income I educated my children and managed the expenses. My son-in-law returned home.

It was difficult to keep the girls at home safe. I am also getting old. My son-in-law told me that he would go back after my daughter comes at the end of the year. That was a comfort for me. I will be at peace when I hand over her children to her. My husband is also very bad in health. Loss of the son has affected us both. Now I can’t also do much work. Time goes on like this. This is the story of my family.


CMP/AMP/SAM/MAL/04-01

රතු කුරුස සංගමය වෙත,

කනපතිපුරම් ප‍්‍රදේශයේ පචිංචි මාගේ පවුලේ සාමාජිකයන් 14 දෙන යි. ගැහැණු 03 යි, පිරිමි 09 යි, අම්මයි, තාත්තයි. තාත්තා උහන ප‍්‍රදේශයේ වැඩ කළා. ඊට පස්සෙ තාත්තා මිය ගියා. අම්මා දුක් විඳලා අපිව හැදුවා.

මට 1970 වර්ෂයේ මෙම ප‍්‍රදේශයේ කෙනෙකු වන නල්ලතම්බි නමැති අයව අම්මා විවාහ කර දුන්නා. ඔහු කුලී වැඩට, මාළු අල්ලන්න, කුඹුරු වැඩට හැම වැඩකට ම යනවා. අපට දරුවො 06 දෙන යි (ගැහැණු 03 යි, පිරිමි 03 යි). හරි අමාරු යි. ළමයි ඉස්කෝලෙ යනවා. මේ විදියට ජීවත් වුණා. පරණ ගුවන් විදුලි සංස්ථාව, ඒකෙ පොලීසිය සිටියා. 1990 වර්ෂයේ දවසක් LTTE සංවිධානයයි පොලීසියයි අතර ගැටුමක් ඇති වුණා. වෙඩි ශබ්ද ඇහෙනවා. මිනිස්සු කලබල වෙලා මල්ලිගෙයිතිවු කුඹුරු මැදින් වැටිලා ඒ මේ අත දුවනවා. හැම පැත්තෙන් ම වෙඩි ශබ්ද ඇහෙන විට වලතාපිටිය, මල්වත්ත, මල්ලිගෙයිතිවු, පුදූර්, කනපතිපුරම් සෑම ගමකින් ම කාරෙයිතීවු හා සම්මන්තුරේ ප‍්‍රදේශයට දුවලා පාසල්වලයි, කෝවිල්වලයි, මිනිසුන්ගෙ ගෙවල්වලයි සරණාගතයො හැටියට සිටියා. වෙඩි ශබ්ද වැඩි වේ ගෙන යනවා. ඉන් පසු දිගට ම රවුන්ඩප් කරනවා. පිරිමි ටික අල්ලා ගන්නවා. සමහර වෙලාවට අත හරිනවා.

1990 වර්ෂයේ 12 වැනි මාසයේ දවසක් කඳවුර වැටලුවා. සාමාන්‍යයෙන් 55-60 දෙනෙක් විතර ඇති බස් එකට දා ගෙන ගියා. ඒ අයගෙන් මාගේ පුතෙකුත් සිටියා. ඊට පස්සෙ පුතාව අත හැරියා. අත හැරලා ආයෙත් ටික වෙලාවකින් පුතාව අල්ලලා, අත් දෙක

04-02

බැඳලා අර ගෙන ගියා. මම පිටුපස්සෙන් කෑ ගහ ගෙන දිව්වා. අනේ මගේ පුතා කොටියෙක් නෙවෙයි කියා ගෙන දිව්වා. මට ගල්වලින් ගැහුවා. වීරමුනෙයි කෝවිල ඇතුළෙ ගැහැණු ටික දාලා වහලා තැබුවා. කාරෙයිතිවු, කලවාංජිකුඩි STF එකත් එකතු වෙලා වෙඩි තිබ්බා. ඊට පස්සෙ රතු කුරුස සංගමයෙන් ආවා. ඊට පස්සෙ ටිකක් කමක් නැහැ. බිම් බෝම්බවලට බයේ අපිව ඉස්සරහින් යන්න කියලා ඔවුන් පිටුපස්සෙන් පයින් ආවා.

ඊට පස්සෙ කාරෙයිතිවු කඳවුරට ගිහිල්ලා මගේ පුතා කොටියෙක් නෙවෙයි මහත්තයෝ කියලා නැවතත් කීවා. ඒකට ඔවුන් පොල් මල්වලින් ගැහුවා. ඉකි ගහ ගෙන අඬ අඬා වේදනාවෙන් අනාථ කඳවුරට ආවා. උදේ එළි වෙන කොට ම කන්නෙ බොන්නෙ නැහැ. නින්දක් නැහැ. මේ විදියට දවස ගාණෙ ගියා. නමුත් අල්ලා ගත් 55 දෙනා ම නැහැ. ඔවුන්ට මොනවා කළා ද කියා අද වන තුරු දන්නෙ නැහැ.

ඊට පස්සෙ වීරමුනෙයි කෝවිල් අනාථ කඳවුර, ඊට පස්සෙ කාරෙයිතිවු ඉස්කෝලෙ, ඊට පස්සෙ තිරුක්කෝවිල්, තම්බිලූවිල් ප‍්‍රදේශයේ පාසලක මේ විදියට අවුරුදු 3-4 ගත වුණා. ඊට පස්සෙ අපේ ගමට ආවා. ගස්කොළන් වැවිලා කැලෑ ප‍්‍රදේශයක් ලෙස දක්නට තිබුණා. ඉඩම්වල මායිම් කිසිවක් පේන්න තිබුණෙ නැහැ. ඊට පස්සෙ ඔක්කෝම සුද්ධ කරලා පැල්පතක් හදා ගෙන සිටියා. නමුත් කෑම්බීම්වලට හරි අමාරු යි. මම රට යන්න කියලා අවුරුදු 02ක් ගිහිල්ලා ගෙයක් හදා ගත්තා.

අවුරුදු 02කින් ගමට ආපු නිසා එක දුවෙකු විවාහ කර

04-03

දුන්නා. ඊට පස්සෙත් ඉඳියාප්ප තම්බලා විකුණන්න පටන් ගත්තා. එයත් (ස්වාමි පුරුෂයා) වයසට ගිහිල්ලා. ලෙඩත් තියෙනවා. මොකක් වත් කරන්න බැහැ. මේ ගැන බලලා ණයත් තිබෙනවා. දුවයි බෑනයි රට ගියා. මම ළමයි ටිකත් බලා ගෙන ඉඳියාප්පත් තම්බලා විකුණා ගෙන ඒකෙන් ලැබෙන මුදලයි, දුව එවන මුදලයි තියා ගෙන ගෙදර වියදම්, ලෙඩදුක්, ළමයින්ගෙ ඉස්කෝලෙ වියදම් ඔක්කෝම බලා ගෙන ඉන්න කොට බෑනත් ආවා. මගේ හිතට ටිකක් නිදහස්.

දැන් ගැහැණු ළමයින් ආරක්ෂා කර ගන්නවා කියනෙක හරි අමාරු වැඩක්. අපිත් වයසට ගිහිල්ලා. ඒ ගොල්ලන්ගෙ තාත්තා (බෑනා) කීවා ඇය මේ අවුරුද්ද අවසානයේ එනවා කියලා. ආවට පස්සෙ තමයි මම යන්නෙ මීට පස්සෙ ඇයට යන්න දෙන්නෙ නැහැ කියලා කීවා. දුවත් ආවට පස්සෙ ළමයි ටික භාර දුන්න නම් ඊට පස්සෙ මැරුණත් කමක් නැහැ. මෙයාගෙ (ස්වාමි පුරුෂයාගේ) තත්ත්වයත් හොඳ නැහැ. මොනවා කරන්න ද දුව ගියාට පස්සෙ ඔක්කෝම නැති වෙලා ගියා. මටත් වැඩක්පලක් කර ගන්න බැහැ. දැනුත් ඉඳියාප්ප තම්බනවා. මේ විදියට කාලය ගෙවෙනවා. මේක යි මගේ පවුලේ කථාව.

CMP/AMP/SAM/MAL/04

சு. லெட்சுமி
மல்வத்தை 4
கணபதிபுரம்

செஞ்சிலுவை சங்கத்திற்கு

நான் கணபதிபுரத்தை சேர்ந்த நான் என்ட குடும்பத்தில எல்லாம் 14பேர் 3 பொம்புளை 9 ஆம்புளையும் அம்மா அப்பா. அப்பா உகனயில் வேலை செஞ்சவரு. அதுக்குப் பிறகு அப்பா செத்துப் போயிற்றாரு. அம்மா கஸ்டப்பட்டு எங்களை வளர்த்து வந்தார்.

எனக்கு1970இல் அம்மா இந்த ஊரைச் சேர்ந்த நல்ல நம்பி என்டவரை கலியாணம் முடிச்சி தந்தாங்கள். அவர் கூலிவேலை. மீன் பிடிக்கப் போற வயல் வேலை எல்லாத்துக்கும் போவாரு. எங்களுக்கு 6 பிள்ளைகள் (பெண் 3 - ஆண் 3) கடும்ப கஸ்ரம் இனி பிள்ளைகள். பள்ளிக்கு போற இப்படி வாழ்ந்து வந்தோம்.

பழைய ரேடியோ சிலோன் அதில பொலிஸ் இருந்த 1990ம் ஆண்டு ஒருநாள் எல்.ரி.ரி.ஈக்கும் பொலிஸுக்கும் மோதல் வெடிச்சத்தம் சனங்கள் எல்லாம் சிதறி அல்லோலபட்டு மல்லியத்தீவு வட்டைக்குள்ளால விழுந்து ஓடி எல்லாப் பக்கமும் வெடி எழும்ப வளந்தாப்பிட்டி மல்வத்தை மல்லியத்தீவு புதூர் கணபதிபுரம் எல்லா ஊரிலயும் இருந்து காரைதீவுக்கும் சம்மாற்துறைக்கும் ஓடி அகதியாக பள்ளிக் கூடம் கோயில் ஆக்களுடைய வீட்டிலயும் இருந்தோம். வெடிச்சத்தம் கூடிக் கொண்டு பேனது அதுக்குப் புறகு ஒரே ரவுண்டப் பண்ணுவார்கள். ஆம்புளகள எடுப்பானுகள் சில நேரத்தில விடுவானுகள்.

90ம் ஆண்டு 12ம் மாதம் ஒரு நாள் முகாமைச் சுற்றி வளைத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு 55-60 பேர் இருக்கும். பஸ்சில அப்படியே ஏத்திக் கொண்டு போனானுகள். அதுல என்ட மகனும் ஒன்டு அதுக்குப் புறகு அவன விட்டுடாங்கள். விட்டு கொஞ்ச நேரம் போக திரும்பவும் பிள்ளையைப் புடிச்சி கையைக் கட்டிக் கொண்டு போனானுகள். பின்னால கத்திக் கொண்டு ஓடினேன். ஐயா என்ட புள்ளை புலி இல்ல. எண்டு ஓடினேன். எனக்கு கல்லால எறிஞ்சானுகள். வீரமுனைக் கோயிலுக்குள்ள பொம்புளயல போட்டு அடைச்சி வச்சானுகள். காரைதீவு, களுவாஞ்சிகுடி எஸ்ரி.எப்உம் சேந்துசுட்டானுகள். அதுக்குப் புறகு செஞ்சிலுவைச் சங்கத்தினர்வந்தார்கள். அதுக்குப் புறகு பரவாயில்லை. கொஞ்சம் கண்ணி வெடிக்குப் பயத்தில எல்லாரையும் முன்னுக்குவிட்டு அவனுகள் பின்னால நடந்து வந்தானுகள்.

அதுக்குப் புறகு காரைதீவு கேம்பிற்கு போய் எங்கட புள்ளை புலி இல்ல ஐயா என்டு திரும்பவும் சொன்னேன். அதுக்கு அவனுகள் பூக்கம் பாளையால அடிச்சானுகள். குற்றிக் குமுறிக்கொண்டு கவலையோட முகாமுக்கு வந்தோம். விடிஞ்சா சோறு தண்ணி இல்ல. கேம்புக்கு போற பொழுது பட்டுவாற நித்திரையும் இல்ல. இப்படியே நாளும் பொழுதும் போனதுதான் ஆனால் பிடிபட்ட 55 பேரும் இல்ல. அப்புடி என்ன செய்தானுகள் என்டுஇன்டைக்குவரையும் தெரியாது.

அதுக்குப் புறகு வீரமுனை கோயில் முகாம், காரைதீவு பள்ளிக்குடம் அதுக்குப் புறகு திருக்கோயில தம்பிலுவில ஒருபள்ளிக்கூடத்தில எல்லாமாக 3-4 வருசம் ஓடிப் போயிற்கு. அதுக்குப் புறகுஎங்கட ஊருக்கு வந்து சேர்ந்தோம். காடு எழும்பி பத்தையாகத் தான் எல்லாம் இருந்தது. வளவுகள் எல்லை என்னும் தெரியல. அதுக்குப் புறகு ஒரு மாதிரியாக துப்பரவாக்கி குடில் ஒன்டு வைச்சி இருந்தோம். ஆனால் சாப்பாட்டுக்குகடும் கஸ்ரம் என்ன செய்ற நான் வெளிநாடு போவம் என்டு 2 வருசம் போய் ஒரு வீடு ஒன்று கட்டினன்.

ரெண்டு வரிசத்தால ஊருக்கு வந்துதான் ஒரு மூத்த புள்ளைக்கு கலியாணம் முடிச்சி வைச்சன். அதுக்குப் புறகும் இடியப்பம் அவிச்சி விக்கத் தொடங்கினன். அவருக்கும் வயது போய்ற்றுது. வருத்தம் ஒன்டுக்கும் ஏலாது. இந்த நிலமையைப் பாத்து இனி கடனும்தான். மகளும் மருமகனும் வெளிநாடு போனாங்கள். நான் புள்ளைகள் எல்லாத்தையும் பாத்துக் கொண்டு இடியப்பத்தையும் அவிச்சி விற்றுத் கொண்டு அதால வாற காசையும் பிள்ளையும் அனுப்புறத்த வீட்டுச் செலவு வருத்தம் வாதை இனி புள்ளைகளுடன் பள்ளிச் செலவு இனி உடுப்புஎல்லாத்தையும் பார்த்துக் கொண்டு இரிக்கக்குள்ள மருமகனும் வந்துற்றாரு. ஒன்னும் மனதுக்கு நிம்மதி.

இப்ப பொம்புளப் புள்ளைகளே பாதுகாப்பா வைச்சிருக்கம். பெரிய கஸ்ரம் நம்மளும் வயது போன நேரம்அவங்கட அப்பா (மருமகன்)சொன்னாரு அவ இந்த வருச கடசில வருவா அவ வந்ததுக்கு புறகுதான் நான் போற இனி அவ போக்கா்றில என்டு சொன்னாறு. மனதுக்கு ஒன்னம் நிம்மதி மகளும் வந்துக்கு பிறகுபுள்ளகைள ஒப்படைச்சாத்தான் அதுக்குப் புறகுசெத்தாலும் பரவாயில்ல அவற்ற நிலையும் மோசமாக இருக்கு. என்ன செய்ற அது அந்தப் புள்ள போனத்தோட எல்லாம் போயிற்று. என்னாலையும் ஒன்டுக்கும் ஏலாது. இப்பயும் இடியப்பம் அவிக்கிற இப்படிப் போகுது காலம் இவ்வளவும்தான் என்ற குடும்பக் கதை.


A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License