CMP/AMP/SAM/VEM/01
Y. Mohideen Bawa
Veeramunai – 11
Sammanthurai
I was born and raised in Veeramunai. I was married in 1980 and went to live Ethalaikulam, Veeracholai. I ran my family with the labour work I did,
The problems started gradually in 1989, Kidnapping of muslim men, beatings and shooting. One day in 1989 a tamil man came running and shouting that LTTE was coming. We ran leaving everything behind to 5th colony in Veerathidal. We stayed at a school for one day and night. The Indian army took us to Sammanthurai school and we stayed there for three days.
We were asked to move from there as they wanted to start the school. After that we put up temporary shelters in sinnapalli and stayed there for six months. I had two children (one boy and a girl). We faced much difficulties. We went to see our house. There was only a jungle. We made huts in the land in 2005 with others in the land and stayed there. It was difficult and I went for labour work. I was paid Rs.400 per day. I didn’t receive any help and my mother told me to take the land in Veeramunai. On 2007 in August an N.G.O gave us 325000/= . I built a house in my mother’s land.
My son married and my daughter reached O/L . Now I can manage somehow. I prayed to
the Lord I don’t want my children to face the same difficulty I faced. This is my story and I end it now as I want to go to the mosque
(60) යා. මුෙහෙදීන් බාවා
වීරමුනෛ 11
සම්මාන්තුෙරෙ.
මම වීරමුනෛහි ඉපදී හැදී වැඩුවෙමි. 1980 දී විවාහවී වීරච්චෝලයි ඒත්තාලංකුලම්හි වාසය කරමි. එහි කුළී රැුකියාවක් කරගෙන ඒ රැුකියාවෙහි ලැබෙන ආදායමෙන් පවුල නඩත්තු කරන්නෙමි.
මේ කාලයේ 89 දී වට්ටෙහිදී සුළු සුළු ගැටලූ මතුවිය. වට්ටෙහි යන මුස්ලිම් අයට වෙඩි තැබුවා. වාහන පැහැර ගන්නවා. මිනිසුන්ට ගහනවා. මේ වගේ ප්රශ්න ඇතිවිය. 89 දී දිනය මට මතක නැහැ. හවස් වරුවක වේලාව 5 ට පමණ ඇති ඒ වෙලාවේ දෙමළ අයෙක් කෑගසමින් පැමිණියා. ඛගඔගඔගෑ යෙන් එනවා පණ බේරාගෙන දුවන්න යැයි කෑගසමින් කිව්වා. අපි හැමෝම බඩු මුට්ටු සේරම එලෙසම තබා 5 වැනි කොලනියෙන් වීරන්තිඩල්වලට පැන දිව ගියෙමු. දිව ගොස් එහෙ පාසලක නතර උනෙමු. එක දවාලක් එක රැුයක් එහෙ ගත කර ඉන්පසුව ඉන්දීය හමුදාවේ උදව්වත් සමඟ සම්මාන්තුෙරෙවලට පැමිණ පාසලක දින තුනක් ගත කළෙමු.
ඉන්පසුව පාසල පටන් ගන්නා බවට පවසා අපිට නැගිට යන ලෙසට කීවා. ඉන්පසුව පොඩි පාසලක කූඩාරම් තනා එහි මාස 6 ක් නැවතී සිටියෙමුු. මට ඒ වන විට දරුවන් දෙදෙනෙක් සිටියා. (පිරිමි 1. ගැහැණු 1* කූඩාරමේ ජීවත්වීම අපහසු වුනා. කොච්චර හිටියත් අපේ නිවසක ජීවත්වීම තරම් නැති නිසා. අතරමැද ගොස් අපේ නිවසත් ඉඩමත් බැලූවා. කැලයක් බවට පත්වී තිබුණා. ඊට පස්සේ වෙන අයගේ වලව්වක කූඩාරමක් තනා සුළු කාලයක් සිටියෙමු. (2005දී* ඉතා අමාරුයි කෑම වේල වෙනුවෙන් කූලී වැඩවලට ගියා. පරණ බිල්ඩිමක බිත්ති කැඞීමේ රැුකියාවට ගියෙමු. (ෙසෙක්පේප්පරාල* එක දිනකට රු. 400 ක් ලැබේ. මේ මුදලෙන් පවුලේ වේල පිරිමහ ගත්තෙමි. උදව්වක් ලැබුනෙත් නැත. ඉන්පසුව මගේ ම මවට අවවාද කරා වීරමුනෛහි තිබෙන වලව්ව මට ගන්න කියා. කවුරු හරි නිවාස ව්යාපෘතියක් කරන්න ආවොත් කියා මට පැවසුවා. ඊට පස්සේ කෙටි කාලයකින් පසුව මට එතරම් මතක නැහැ. 2007, 2008 දී පමණ භඨධ ආයතනයකින් රුපියල් 32,500 ක මුදලක් ලැබුණා. ඒ සල්ලිවලින් අම්මා දුන්න වලව්වේ නිවසක් තැනුවෙමි.
පුතා කසාද බැන්දා. දුව ධරැුඛ ඉගෙන ගන්නවා. දැන් තත්ත්වය තරමක් හොඳයි. මම වින්ද දුක් කරදර මගේ දරුවන්ට ලැබෙන්න හොඳ නැහැ කියා දෙවියන්ට දුවාහ්(යාඥා* කරනවා. ඒ කොයි දෙවියන් වුනත් හරි. මෙපමණයි මගේ කතාව. මට පල්ලියට යන්න ඕනේ.
CMP/AMP/SAM/VEM/01
யா. முகைதீன் வாவா
வீரமுனை 11
சம்மாந்துறை
நான் வீரமுனையில் பிறந்து வளந்தேன். 80ம் ஆண்டு கலியாணம் முடிச்சி வீரச்சோலை ஏத்தாளைக் குளத்தில் இருக்கிறன். அங்க கூலித் தொழில் செய்து அதால கிடைக்கிற வருமானத்தில குடும்பத்தக் கொண்டு போறன்.
இந்த நேரம் 89ம் ஆண்டு வட்ட(டை)ப் பக்கம் சின்னச் சின்ன பிரச்சினைகள் வட்டக்குள்ள போற முஸ்லிம் ஆக்கள சுடுற கடந்து வாகனத்தை கடத்திற ஆக்களுக்கு அடிக்கிற இப்படி பிரச்சினை தொடங்கி. 89ம் ஆண்டு ஒரு நாள் எப்ப என்டு மறந்துபோயிற்று. பொழுது பட்டு ஒரு5 மணி இருக்கும். ஒரு தமிழ் ஆள் கத்திக் கொண்டு வேகமாக ஓடி வந்து எல்.ரி.ரி.ஈ வாறன். உயிரில தப்பி ஒடுங்க என்டுகத்திச் சொன்னாரு. நாங்கள் எல்லாச் சாமான்களையும் போட்ட போட்ட மாதிரி 5ம் குளனிப் பக்கம் வீரத்திடலுக்கு எல்லாரும் ஓடினோம். ஓடி அங்க இருந்த பள்ளியில (பாடசாலை) போய் இருந்தோம். ஒரு பகலும் இரவும் அதுக்குப் புறகு இந்திய இராணுவத்தோட சம்மாந்துறைக்கு வந்து சேந்து பாடசாலைல 3 நாள் இருந்தம்.
அதுக்குப் புறகு பள்ளி ஆரம்பிக்கப் போறாங்கள். எழும்புங்கோ எனச் சொல்ல அதுக்கு புறகு சின்னப்பள்ளியில கொட்டில் அமைச்சி அதில ஒரு6 மாதம் இருந்தம். எனக்கு அந்தநேரம் ரெண்டு புள்ளைகளாகப் போயிற்று (ஆண் 1,பெண் 1). கொட்டிலில இருக்கிற பெரிய கஸ்ரமாக போயிற்று. எனவேதான் இருந்தாலும் நம்மட குடிலில இரிக்கிற மாதிரி இல்ல. என்ன செய்ர இடையில போய் வீடு வளவப் பாத்தம். அங்க காடு எழும்பிப் போய் இருந்தது. அதுக்குப் புறகு வேற ஆக்களுடன்வளவுக்குள்ள குடில் வைச்சி கொஞ்ச நாள் (2005ல) இருந்தம். கடும் கஸ்ரம் சாப்பாட்டுக்குபுறகு கூலி வேலைக்கு போற மழை கட்டடித்தில் சுவர்உடைஞ்சி நேத்துக்குபோற (சைன் பேப்பரால) 1 நாளைக்கு400 இத வைச்சி குடும்பத்த பாத்து வந்தன. உதவி ஒன்டும் கிடைக்கயுமில்ல. அதுக்குப் புறகு உம்மா சென்னா வீர முனையில கிடக்குவளவுத் துண்ட நீ எடு ஆகும். என்னவும் வீட்டுத் திட்டம் என்டு நிறுவனம் வந்தாலும் என்டு சொன்னா அதுக்குப் புற சரி என்டுதந்தா கொஞ்ச நாள் போனதும் எனக்குஞாபகமில்லை. 2007.8 காலத்தில என்.ஜி.ஓ நிறுவனத்தால் 325000 காசி கிடைச்சிது அத உம்மா தந்த வளவுக்குள்ள வீடு கட்டினன்.
பொடியன் கலியாணம் முடிச்சிடுரான். புள்ள சாதாரண தரம் எடுக்கிற இப்ப ஓரளவுசமாளித்து வாறம். நான் பட்ட கஸ்ரம் என்ட புள்ளைகளுக்கு வரக்கூடாது. என்று கடவுளுக்கிட்ட துவாக் கேக்குறாள். எந்த கடவுளாக இருந்தாலும் சரி என்டு இவ்வளவு தான் என்ட கதை பள்ளிக்குபோக வேண்டும்.